Followers

Copyright

QRCode

Thursday, February 25, 2010

சச்சினின் சாதனையும் என் நிம்மதியான உறக்கமும்

எது தேச பற்று?




தேச பற்று என்பது என்ன என்பதில் எனக்கு எப்பொழுதும் ஒரு சரியான புரிதல் இல்லை.நாம் நம் தேசத்தின் மீது வைத்துள்ள ஒரு அன்பு பாசம் வெறி இதெல்லாம்தானே தேச பற்று... சரி அதை எப்படி வெளிக்காட்டுவது.

நாம் உருவாகபடுத்துவது போல் நம் பாரதம் ஒரு உயிருள்ள பெண்ணாக இருந்தால் , அவளுக்கு சேலையோ சுடிதாரோ வாங்கி கொடுத்து நம் அன்பை காட்டி விடலாம். ஆனால் அப்படி இல்லையே!! o.k எது நம் பாரதம்?

பல விதமான மக்களையும் , கலாசாரங்களையும், பண்பாடுகளையும் இணைத்து விஸ்தாரமாக எழும்பி நிற்கும் நம் பாரதத்தின்பால் நான் கொண்டுள்ள அன்பை நான் எப்படி வெளிகாட்டுவது . வெளியில் இருந்து ஒரு அச்சுறுத்தல் வரும் வேளையில் நம் நாட்டை காக்க தோள் கொடுக்க சீறி பாய்ந்து செல்ல வேண்டுமா நான் ராணுவ உடையில்?

இல்லை ஏழை பங்காளர்கள் என்று கூறி கொள்ளும் அரசியல் வியாதிகள் ஏழைகளின் கண்ணீர் துடைக்க அன்றாடம் நடத்தும் அரசியல் போராட்டங்களில் பிரியாணியோ, பிராந்தியோ வாங்கி கொள்ளாமல் தினமும் கலந்து கொள்ள வேண்டுமா ?

லஞ்சமே கொடுக்க மாட்டேன் என்று வைராக்கியமாய் வாழ்ந்து என் பிறப்பு சான்றிதழ்கூட இன்னும் கைக்கு வராமல் இறைப்பை தேடி இந்தியனாய் வாழ வேண்டுமா?

கல்வியை விலை கொடுத்து வாங்க மாட்டேன் என்று சொல்லிக்கொண்டு வேலை வாய்ப்பே வாங்கி தராத அரசு கல்லூரியில் படித்து விட்டு இன்னமும் வேலைக்காக வேலை வாய்ப்பு அலுவலகத்தை எதிர்நோக்கி ஏமாந்து கொண்டு இருக்க வேண்டுமா?

இந்தியாதான் எனக்கு இருக்க இடம் உண்ண உணவு படிப்பு எல்லாம் கொடுத்தது இந்தியாவில் படித்த படிப்பை நான் இந்தியாவில்தான் பயன்படுத்துவேன் என்று எனக்கு வந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பை உதறி தள்ளி விட்டு இப்பொழுது நான் போகும் காரின் சக்கரத்தை கூட வாங்க முடியாத சம்பளத்தில் இந்தியாவில் வேலை பார்த்து கொண்டு இருக்க வேண்டுமா?

நான் கட்டும் வருமான வரி நம் ஏழைகளின் துரயத்தை துடைக்கத்தான் பயன்பட போகின்றது என்று அப்பாவியாய் நம்பி என் வருமானத்திற்கு ஏற்ற சரியான வரியை கட்ட வேண்டுமா?

இல்லையேல் நம் நாட்டுக்குள்ளாகவே நடமாடும் ஊழல் பெருச்சாளிகளின் தோளை உறிக்க,நம் நாடு இப்படி அகண்ட பாதாளத்தில் விழுந்து கொண்டு இருப்பதற்கு பண வெறி பிடித்த இந்த அரசியல் வியாதிகள்தான் காரணம் என்ற உண்மையை மறந்து விடாமல் , தேர்தல் நடக்கும் போதெல்லாம் என் வோட்டு என்னும் சமூக ஆயுதத்தை அவர்கள் தரும் காசுக்கு விற்று விடாமல் அவர்களுக்கு எதிராய் பயன்படுத்தி இருக்க வேண்டுமா? இன்னும் எத்தனையோ வேண்டும்மாக்கள்!!!

ஐயையோ இதில் ஒன்றை கூட என் வாழ்கையில் நான் செய்யவில்லையே,, அப்ப நான் இந்தியன் இல்லையா? எனக்கு தேச பற்றே கிடையாதா?

ஒவ்வறு வருடமும் சுதந்திர தின விழாவை,, அன்று வெளியான புது படம் பார்த்து கொண்டாடுகிறேன், அது போதாதா நான் இந்தியன் என்று கூறி கொள்ள?

அட குடியரசு நாட்களில் எல்லாம் நெஞ்சில் தேசிய கொடியை குத்தி கொள்கிறேன் அதுவும் போதாத நான் தேச பற்று மிக்கவன் என்று கூற... காந்தி ஜெயந்தி அன்று தண்ணி அடிக்க மாட்டேன், அப்ப நான் தேசத்தின் மேல் மரியாதை கொண்டவன்தான?

இப்படி எப்படி எப்படியோ யோசித்து பார்த்தும் என் மனம் ஒத்துகொள்ள வில்லை எனக்கு தேச பற்று உண்டு என்று... அட என்னடா இது இன்னைக்கு நமக்கு தூக்கம் வராது போல இருக்கு என்று நான் கவலை பட்டு கொண்டு இருந்தேன்...

சரி தூக்கம்தான் வரவில்லை கொஞ்ச நேரம் டிவி பாப்போம் என்று தொலைகாட்சியை நோக்கினேன்... அதில் தேசிய கொடியை யாரோ வேகமாக ஆட்டி கொண்டு இருந்தார்கள்... என்ன வென்று பார்த்தால் சச்சின் நேற்று நடந்த ஆட்டத்தில் நூற்று ஐம்பது ஓட்டங்களை கடந்து இருந்தார்...


உடனே எனக்கு நெஞ்சில் ஒரு பெருமிதம் , ஆட்டத்தை தொடர்து பார்த்து கொண்டு இருந்தேன் , அவரின் ஒவ்வொரு அடியும் என்னை சந்தோஷத்தில் ஆழ்த்தி கொண்டு இருந்தது... அவர் நூற்று தொண்ணூற்று ஒன்பது ஓட்டங்களில் இருக்கும் பொழுது ஒரு படபடப்பு, உலகத்தில் எந்த நாட்டுகாரனும் செய்யாத ஒரு சாதனையை ஒரு இந்தியன் படைக்க போகின்றான். ஆண்டவா!! அவருக்கு துணையாய் இரு என்று மனம் அன்னிட்சையாய் கடவுளை வேண்டி கொண்டது...

அவர் இரு நூறு ஓட்டங்களை எட்டிய அந்த கணம் என் மனம் பெருமிதத்தில் பறந்து கொண்டு இருந்தது.... இந்த செய்தியை என் நண்பர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி கொண்டு இருந்தென். .. பின் இந்திய வெற்றி பெற்று சச்சின் ஆட்ட நாயகன் விருது வாங்கும் வரை ஒரு பரவச மன நிலையோடு பார்த்து கொண்டு இருந்தேன்...

ஆட்டம் முடிந்ததும் தலைப்பு செய்திகளில் நம் இந்திய முதல் குடிமகன்  சச்சினின் இந்த ஆட்டம் தேச பற்று உள்ள ஒவ்வொரு இந்தியனையும் பெருமிதத்தில் ஆழ்த்தி இருக்கும் என்று கூறி கொண்டு இருந்தார்.

அதை கேட்டவுடன் எனக்கு அன்று முழுவதும் என் மனதை குழப்பத்தில் சுற்ற வைத்து கொண்டு இருந்த நான் தேச பற்று உள்ள ஒரு இந்தியனா? என்ற கேள்வியின் விடை கிடைத்து விட்டது... சச்சினின் இந்த ஆட்டம் என்னையும் பெருமிதபடுத்தியது, எனவே குடியரசு தலைவர் கூறியது போல் நான் தேச பற்று மிக்க ஒரு இந்தியன்தான்....

எனக்கும் தேச பக்தி இருக்கு என்று அறிந்து கொண்ட சந்தோஷத்தில் என் குழப்பத்திற்கு விடை தேடி கொடுத்த சச்சினுக்கும் குடியரசு தலைவருக்கும் நன்றி சொல்லாமலே நிம்மதியாய் தூங்கி விட்டேன்...

Wednesday, February 24, 2010

தலைவருக்கு எதிராய் கூடும் கைபிள்ளை சங்கங்கள்


''நடிகர்கள் ரஜினி மற்றும் அஜீத்குமா‌ர்யின் படங்களை திரையிடுவதா, வேண்டாமா? என்பதை மார்ச் 3ஆ‌ம் தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்வோம்'' என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில், ''தமிழர்களை வைத்து சம்பாதித்த நடிகர் அஜீத்குமார், தமிழர்களுக்கு எதிராக பேசி வருகிறார். காவிரி நீர் பிரச்சனைக்காக நடைபெற்ற போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார். அவர் சோர்வாக இருந்தால், நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டியதுதானே...தொடர்ந்து ஏன் நடிக்க வேண்டும்?

அஜீத் தன் கருத்தை திரும்ப பெற வேண்டும். இந்த பிரச்சனை பற்றி விவாதிக்க மார்ச் 3ஆ‌ம் தேதி, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அஜீத் படத்தை திரையிடுவதா, வேண்டாமா? என்பதை அந்த கூட்டத்தில் முடிவு செய்வோம் எ‌ன்று பன்னீர்செல்வம் கூறியு‌ள்ளா‌ர்.


பாசத்தலைவனுக்கான பாராட்டு விழாவில் உண்மையற்ற பேச்சுப் பேசி திரையுலக ஒற்றுமையைக் குலைத்ததற்கு அஜித் வருத்தம் கேட்பது, அஜித் பேச்சுக்கு கைதட்டியதன் மூலம் நடிகர்களின் ஒற்றுமையைக் குலைத்த ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தது போன்ற விவகாரங்களை ஆராய்ந்து மேல்நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கூட இருக்கிறது.


பெப்ரவரி 27ம் தேதி நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடும் இந்தக் கூட்டத்தில் நடிகர்கள் சத்யராஜ், குயிலி, மும்தாஜ், சின்னிஜெயந்த், மயில்சாமி, எஸ்வி சேகர், பூச்சி முருகன் ஆகியோர் பங்கேற்று, ரஜினி-அஜீத் மீது என்ன மாதிரி மேல் நடவடிக்கை எடுப்பது என்று விவாதிப்பார்களாம்.


அதேபோல, ஜாகுவார் தங்கம் மீது கல்வீசித் தாக்கிய அஜித் (முடிவே பண்ணிட்டாங்க போல!) மற்றும் அவரது மேனேஜர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் விவாதிக்கப்படுமாம். இந்த விவகாரத்தில் நடிகர் சங்க உறுப்பினரான ஜாகுவார் தங்கம் புகார் கொடுத்திருப்பதால், இந்த விவகாரத்தை சாதாரணமாக விட்டுவிட முடியாது என நடிகர் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது....

இதுல மொத சங்கம் ரஜினி அஜித் மாதிரி நடிகர்களின் படங்கள் ஓடுற கெடைக்கிற காசுலதான் ஓடுது, இப்ப அவனுக அவுனுகளுக்கே வேட்டு வட்சிக்க பாக்குறானுக.... அடுத்து நடிகர் சங்கம் அது உண்மையிலேயே கைப்புள்ள சங்கம்தான், சங்கமே அபராததுலதான் ஓடிக்கிட்டு இருக்கு, அடுத்து அபராதம் கட்ட ரஜினியையும் அஜித்தையும் வம்புக்கு இழுக்க பாக்குறானுக. சங்கத்து  தலைவர்  சரத் குமார் , ஜக்குபாய் படம் ஏதோ பத்து நாள் ஒடுச்சினா அதுக்கு காரணம் ரஜினி கொடுத்த விளம்பரம்தான் , நாய் நக்கி திங்கிற வரைக்கும் நக்கி தின்னுட்டு நக்குனவன் கையவே கடிக்கும் , சரத்துக்கும் அதுக்கும் வித்தியாசமே இல்ல.

அப்புறம் அந்த கூட்டத்துல கலந்துக்க போறவரு நம்ம சத்திய ராசு, அவருக்கு தலைக்கு மேலதான் ஒன்னும் இல்லைனா தலைக்கு உள்ளேயும் ஒன்னும் கெடையாது, என்னமோ இவரு மேடை ஏறி பேசிட்டா காவேரி தண்ணி அணையை பொளந்துக்கிட்டு தமிழ்நாட்டுக்குள்ள வந்துரும் , இலங்கையில சண்டைய ராஜபக்சே நிப்பாட்டிருவாருன்னு நெனப்பு, இவரு யாரோட அல்லகைகிறது ஊருக்கே தெரியும், கூட்டத்துல கலந்துக்க போற இன்னும் ரெண்டு முக்கியமான ஆளுங்க குயிலியும் மும்தாஜும் , ரெண்டு பெரும் கலைத்தாய்க்கு சேவை பண்ணி களைச்சி போய் நாட்டுக்கு சேவை பண்ண வந்துட்டாங்க,

என்னப்பா  இன்னொரு முக்கியமான ஆள விட்டுடீங்க எங்கப்பா ஷகீலா சேட்சி அவங்களையும் கூட்டிட்டு பொய் நடத்த வேண்டியதுதான, அவங்கள படம் புடிக்கவாது உங்க கூட்டத்துக்கு ஆள் வருவாங்கள?

அடுத்து வருது ஒரு பெரிய காமெடி கூட்டமே சின்னிஜெயந்த், மயில்சாமி, எஸ்வி சேகர்ன்னு , இவனுங்கள வச்சி என்ன காமெடி டைம் நடத்த போறாரா நம்ம சரத்குமாரு...

என்ன என்னமோ பண்ணியும் ரஜினியும் அஜித்தும் அசஞ்சிகூட கொடுக்கல இவனுங்களுக்கு , அதான் அடுத்த அஸ்திவாரமா இந்த கைபிள்ள சங்கத்த கூட்டி காமெடி பண்ண போறாரு நம்ம பாச தலைவன்... உண்மையை சொன்ன அஜித்திற்கும் அதை தைரியமாய் பாராட்டிய ரஜினிக்கும் இப்பொழுது தேவை திரை துறையில் இருந்து ஆதரவுகள் , அவர்கள் இருவரும் தங்கள் சொந்த பிரட்சனைகளுக்காக வாய் திறக்க வில்லை, திரை துறையை சேர்ந்த அனைவருக்காக்கவும்தான் அவர்கள் பேசினார்கள்... மனசாட்சி உள்ள எவரும் அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும் , கட்ட பஞ்சாயத்துகளை தடுத்து நிறுத்த வேண்டும், இல்லை என்றால் நாளை என்ன வேண்டுமானாலும் திரை துறையில் நடக்கலாம் , உங்கள் மனைவிமார்களின் கற்பை கூட இந்த கட்ட பஞ்சாயத்து ஆட்கள் நிர்ணயம் செய்யும் காலம் கூட வரலாம் ,, இப்படியே நீங்கள் குட்ட குட்ட குனிந்து கொடுத்தால்...

தல தலைதான் பாகம் -2

பதிவுலகிற்கு நான் வந்து கிட்டதட்ட ஆறு மாதங்கள் ஆகிவிட்டது, வந்த புதுசுல எல்லாம் அஜீத்த பத்தியும் விஜயபத்தியும்தான் நெறைய எழுதிகிட்டு இருந்தேன், எல்லாம் என்னோட கடைய பிரபலபடுத்தனும்தான். இப்ப அதுல ஓரளவு வெற்றியும் கெடச்சிருக்கு. நான் எழுதுன எல்லா பதிவுகளுக்கும் அறநூறு ஹிட்ச்க்கு மேல வாரி வழங்கிய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் என்னோட நன்றி. அதுவும் ஒரு அஜித் ரசிகனா அவர பத்தி எழுதிய எல்லா பதிவுகளுமே தமிளிஷ் தளத்துல பிரபல பதிவுகளாய் நெறைய ஓட்டுகள பெற்று முண்ணனியில வந்துருக்கு, அதுல நெறைய ஓட்டுகளை தல ரசிகர்கள்தான் போட்டுருப்பாங்க,அவங்களுக்கு நன்றின்னு வெறும் மூணு எழுத்துல சொல்ல எனக்கு மனசு வரல, கண்டிப்பா அஜீத்த பத்தி எனக்கு தெரிஞ்ச நெறைய விசயங்கள தொடர்ந்து நான் எழுதுவேன், அதுக்கு உங்களோட ஆதரவ தொடர்ந்து கொடுப்பீங்கன்னு நம்புறேன்.


தல தலதான் பார்ட்-1 படிக்க இங்க போங்க...



எல்லா மனுசனுக்கும் ஒரு turning point வாழ்கையில இருக்கும் , அது அவன நல்ல வழியிலயும் கொண்டு போகும் சில சமயம் அவன அழிவு பாதையிளையும் கொண்டு போய் விடும். அது மாதிரி உனக்கு ஒரு நல்ல வழிய அமைத்து கொடுத்த படம் தீனா அந்த வழியில உனக்கு ஒரு மைல்கல்லா அமைந்த படம் சிட்டிசன்.
ஆனா உன்கூட இருந்த சில ஜால்ரா கூட்டங்கள் உன்ன அழிவு பாதையில வழி நடத்த ஆரம்பித்தார்கள். அப்ப அவங்க உனக்கு காட்டிய வழி , சூப்பர் ஸ்டார் வழி... ஆக்சன் ஹீரோவா வெற்றி பெற்ற நீ அடுத்த இலக்கா தேர்ந்து எடுத்தது மாஸ் ஹீரோவா மாறனும்கிறது.

மாஸ் ஹீரோக்களுக்கு ரொம்ப தேவையான விஷயம் ரசிகர் படை, அது உங்கிட்ட நெறயவே இருந்தது , ஆனா அது ஒன்ன மட்டும் வச்சிகிட்டு மாஸ் ஹீரோவா ஆக முடியாதே! சாதாரண சினிமா ரசிகனும் ரசிக்கிற மாதிரியான ஒரு கதை , அதை சரியான விதத்துல ப்ரெசென்ட் பண்ணுற ஒரு திரைக்கதை, படத்த மக்கள்கிட எடுத்துகிட்டு போக publicity வித்தை தெரிந்த ஒரு தயாரிப்பாளர், இப்படி எல்லாமே வேணும். இந்த விசயங்களுள நீ சறுக்குன ஒரு படம்தான் ரெட்... படத்துக்கு உன்னோட கெட்-அப் அட்டகாசமா இருந்தது, அது உன்னோட ரசிகர்கள் மத்தியில ஒரு பெரிய எதிர்பார்ப்ப தூண்டி விட்டது.

 படம் வெளிவந்தது 2003 பொங்கல், கண்டிப்பா கிங் ஆப் ஒப்பெநிங் அப்டிங்கிற பட்டம் அந்த படத்தோட ஒப்பெநிங்க பாத்துதான் உனக்கு திரை உலகத்துல கெடச்சிருக்கும்.. அதும் மதுரையில அந்த படத்தோட வெளியீட்ட ஒரு திருவிழா மாதிரி உன்னோட ரசிகர்கள் கொண்டாடினாங்க... ஆனா மேல சொன்ன கதை, திரைக்கதை, publicity இந்த மூணு விசயங்களில சருக்குனதுனால படம் சாதாரண சினிமா ரசிகன்கிட்ட போய் சேரல...

அந்த படம் செய்த ஒரே ஒரு சாதனை, உனக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்காங்களா? அப்படின்னு எல்லாரையும் திகைக்க வைத்தது. படம் சரி இல்ல அப்படின்னு எல்லாரும் சொன்னாலும் , மதுரை அண்ணாமலை திரை அரங்குல நூறு நாட்கள் ஓடியது படம். அருப்புக்கோட்டை மகாராணி திரை அரங்கில் தோல்வி என்று சொல்லபட்ட அந்த படம் எழுபது நாட்கள் ஓடி வசூலை அள்ளி தந்தது.(அந்த ஊருல எழுபது நாட்களுக்கு மேல ஓடிய படங்கள் ரஜினியின் படையப்பா, சிவாஜி அப்புறம் விஜயின் கில்லி விக்ரமின் தூள் ஆனா இது எல்லாமே பெரிய ஹிட்).


ரெட் தோல்விக்கு பிறகு நீ நடித்து வெளி வந்த காதல் கதை ராஜா. முதலில் அந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்குவதாய் இருந்து பின்னர் தயாரிப்பாளர் மாறியதால் எழிலின் கைக்கு மாறியது படம். அதற்க்கு முந்தின வருடம்தான் எழில் இயக்கத்தில் நீ நடித்த பூவெல்லாம் உன் வாசம் படம் வந்திருந்தது. படத்தில் பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் பேசபட்டன மீண்டும் அவரின் இயக்கம் என்றவுடன் உன்னோட ரசிகர்கள் அனைவரும் அதனை போன்ற அடுத்த இசை விருந்துக்கு தயாராகி இருந்தனர்.

ஆனால் அவர்களின் ஆசைக்கு பேரிடியாய் வந்து இறங்கிய செய்தி, இந்த படத்தில் இசை அமைப்பாளர் வித்தியாசாகர் இல்லை S .A .ராஜ் குமார் என்று. இருந்தாலும் ஒரு நம்பிக்கையில் அந்த படத்தின் பாடலை எதிர்பார்த்து இருந்தனர் ரசிகர்கள், அவர்களின் எதிர்பார்ப்புக்கு பெரிய ஆப்பு வைத்தது அந்த படத்தின் பாடல்கள். ஒரு பாடல் கூட ஹிட் ஆகவில்லை , படமும் பெரிய தோல்வி. அதே அண்ணாமலை திரை அரங்கிலேயும், அருப்புக்கோட்டையிலும் வெறும் இருபது நாட்களில் படம் தூக்கபட்டது. நம்ம ரசிகர்கள் எல்லாம் பெரிய விரக்தியில இருந்தாங்க, அஜித் அவ்வளவுதான் அழிந்தான் அப்படின்னு மறுபடியும் எல்லாரும் சொல்லிக்கிட்டு இருந்தானுக.

ஆனா நாங்க அப்பவும் உங்க மேல நம்பிக்க வச்சிருந்தோம். எங்க நம்பிக்கைய இன்னும் அதிகபடுத்துற மாதிரி பத்திரிக்கையில ஒரு செய்தி வந்தது உன்னோட அடுத்த படம் சம்பந்தமா, அது உன்னோட அடுத்த படத்த இயக்க போவது கே.எஸ். ரவிக்குமார் அப்படிங்கிற நல்ல செய்தி.
(தொடரும்)

என்னுடைய போன பதிவிற்கு 20 ஓட்டுகள் போட்டு தமிளிஷில் பிரபலமடைய செய்த அனைவருக்கும் நன்றி. இதுவும் பிடிச்சி இருந்தா மறக்காம ஓட்டு போடுங்க.

Saturday, February 20, 2010

அஜித்தின் சக்தி பரிசோதிக்கபடுகிறதா?


அண்மையில் நடந்த விழாவில் அஜித் பேசிய பேச்சும் அதன் பின்னர் நடந்த விசயங்களும் அனைவரும் அறிந்ததே.... விழாவில் நடுநாயகமாய் அமர்ந்து தன்னை பற்றிதான் அனைவரும் பேசுவர் என்று காது குளிர கேட்டு கொண்டு இருந்த தலைவர் , அஜித் விழாவை தன் பக்கம் இழுத்து கொண்டதையும், ரஜினி , அமிதாப் என அனைவரும் அவரை பற்றி பேசியதையும் கண்டிப்பாய் ரசித்து இருக்க மாட்டார். உள்ளுக்குள் எரிந்து கொண்டு இருந்த அந்த எரிச்சல் அஜித் அவரிடம் சரணாகதி அடைந்ததும் கண்டிப்பாய் அணைந்திருக்கும். ஆனால் அஜித் அவரை சந்தித்து பேசிய பின்பும் அவருக்கு மிரட்டல்கள் , வழக்கு பதிவுகள் என்று தொடர்ந்து கொண்டு இருப்பதற்கு காரணம் புரியவில்லை. ஒருவேளை தமிழ்நாட்டில் அவருக்கு இருக்கும் செல்வாக்கை பரிசோதித்து பார்க்க முடிவு செய்து விட்டார்களா? இன்றைய திரை உலகில் இருக்கும் மிக பெரிய சக்திகள் ரஜினி, கமல் தான். அவர்களுக்கு பின்னால் திரை உலகை ஆளும் சக்தி கொண்டவர்கள் இருவர் மட்டுமே அது அஜித் மற்றும் விஜய். இதில் ரஜினியின் சக்தி உலகம் அறிந்ததே, அதனால்தான் முதல்வர் அவரை பகைத்து கொள்ள விரும்பாமல் தன் அருகிலேயே வைத்து கொண்டு இருக்கிறார். கமலை பொறுத்த வரை அவரால் யாருக்கும் எந்த பாதிப்பும் வர போவது இல்லை. அடுத்து விஜய். அவர் சமீபத்தில்தான் தான் யார் என்பதை அவரே உணர்ந்து அடங்கி போய் இருக்கிறார். எனவே அடுத்த குறி அஜித்தான்... அவர் இதுவரை எந்த அரசியல் பிரச்சனைகளிலும் சிக்காதவர், எனவே அவரை யாராலும் மதிப்பிட இயலவில்லை. எனவே சமயம் பார்த்து கொண்டு இருந்தவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாய் அமைந்து விட்டது, பயன்படுத்திகொண்டு இருக்கிறார்கள். பார்ப்போம் என்ன நடக்கும் என்று.... 




நம்ம எல்லாருக்கும் அடுத்த வருஷம் நடக்க போற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியோட முழு அட்டவணையும் தெரியும், அடுத்த மாசம் நடக்க போற IPL போட்டியோட டிக்கெட் எங்க கெடைக்கும் எந்த எந்த போட்டி எங்க நடக்க போகிறது, எந்த டீவீயில அத ஒளிபரப்ப போறாங்ககிறதும் தெரியும். ஆனா இன்னொரு முக்கியமான விளையாட்டு போட்டு நம்ம நாட்டுல நடக்க போவுது , அது என்னாங்கிறது பாதி பேருக்கு தெரியாது... அது ஹாக்கி உலக கோப்பை போட்டி. அதுவும் நம்ம நாட்டுலதான் நடக்க போவுது... நம்ம வழக்கம் போல மறந்திடுவோம்... நம்ம மீடியா மக்களும் அந்த செய்திகளை ஏதோ கடனுக்கு போடுற மாதிரி ஒரு ஓரமா போட்டுக்கிட்டு இருக்காங்க, ஏன்னா அதுனால அவங்களுக்கு எந்த வருமானமும் கிடையாதே, ஹாக்கி உலக கோப்பை போட்டி மூலம் கிடைக்கிற மொத்த வருமானம் , கிரிக்கெட் மைதானத்தில கிடைக்கிற காண்டீன் வருமானத்த விட கம்மியாதான் இருக்கும். இத்தனைக்கும் ஹாக்கி நம்ம தேசிய விளையாட்டு, விளையாட்டுல கூட திறமைய விட பணமும் விளம்பரமும்தான் முன்னால நின்று கொண்டு இருக்கிறது.


 
இன்று நம்ம நாட்டுல கிரிக்கெட் பணம் கொழிக்கிற விளையாட்டா இருக்குன்னா அதுக்கு காரணம் விளம்பரங்கள் மட்டும் இல்ல, நம்ம நாட்டுல இருக்கிற பல திறமையான வீரர்களும்தான் என்ற உண்மையை கண்டிப்பாய் ஒத்துகொள்ளத்தான் வேண்டும். நம்ம கிரிக்கெட் அணியோட திறமைக்கு பல உதாரணங்கள சொல்லலாம், இப்ப உலகத்துல இருக்கிற எல்லா நாட்டு கிரிக்கெட் அணிகளிலும் நம்ம அணிதான் டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன். அது மட்டும் இல்ல உலகத்துல இருக்குற எல்லா வீரர்களிலும் நம்ம அணி வீரர் சேவாக்தான் இப்போதைய நம்பர் ஒன் வீரர். சர்வதேச அளவில் நம்முடைய நாட்டுக்கு பெரிய கௌரவத்தை பெற்று கொடுத்து இருக்கும் நம் அணி வீரர்களை கண்டிப்பாய் பாராட்டத்தான் வேண்டும்.

 கிரிக்கெட்ட பத்தி பேசிட்டு சச்சின்ன பத்தி சொல்லாம இருக்க முடியுமா? சில  வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் பெரிய ஹிட்டான தேச பக்தி பாடல் ஆல்பம் மைல்சுர். அதன் முதல் வெர்சனில் சச்சின் கிடையாது. இப்பொழுது அதன் இயக்குனர்கள் அதன் மறு வெளியீட்டை இயக்கி கொண்டு இருக்கிறார்கள், அதில் சச்சின் நடிக்க  உள்ளார். கண்டிப்பாய் பார்க்க வேண்டும்.

Friday, February 19, 2010

அசல் அஜித்தும் போலி அரசியலும் ....


அசல் அஜித்தும் போலி அரசியலும்

தலைமகனுக்கு திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவில் தல அஜித் பேசிய பேச்சுதான் இப்ப தமிழ்நாட்டு அரசியல்ல ஹாட் டாபிக். அதில் அவர் பேசிய பேச்சுக்கு பல இடங்களில் இருந்து பாராட்டுகளும் பல இடங்களில் இருந்து திட்டுகளும் வந்து கொண்டே இருக்கின்றன. அப்படி என்ன அவர் பேசினார்? பொதுவா பாராட்டு விழாவுக்கு போய் மைக்க புடிக்கிறவங்க எல்லாம் யார பாராட்டுரோமோ அவர பத்தி தெரியுமோ தெரியாதோ நல்ல விதமா நாலு வார்த்த பேசிட்டு வந்துருவாங்க.. அதும் அவர் அரசியல்வாதியா இருந்தா கேட்கவே வேணாம் எங்கள் தெய்வமே , எங்கள் தலைவனேனெல்லாம் புகழ்ந்து தீத்துடுவாங்க . ஆனா உண்மையிலேயே பாத்தோம்னா அவங்க யாருக்குமே அங்க வந்து பேசுறதுக்கு இஷ்டம் இருந்திருக்காது. சில பல அரசியல் காரணங்களாலும் இல்லை தங்களுக்கு பின்னாடி எந்த பாதிப்பும் வந்து விட கூடாது என்றும் ஒப்புக்கு வந்து பேசிட்டு போய்டுவாங்க. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது என்று பொது மேடையிலே ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே தைரியமாய் சொன்ன ரஜினிகூட இப்பொழுது எல்லா பாராட்டு விழாவிற்கும் வேறு வழி இல்லாமல் வந்து விடுகிறார். அவருக்கு கடந்த காலத்தில் கிடைத்த சில கசப்பான அனுபவங்களே அவரை கட்டி போட்டு வைத்திருக்கிறது. ஏனென்றால் சினிமா எப்பொழுதும் அரசியல்வாதிகளின் கைபொம்மைதான். அரசியலை சினிமா ஆண்டதெல்லாம் புரட்சி தலைவரின் காலத்தோடு முடிந்து விட்டது. அன்றைய நிகழ்ச்சியும் அப்படிதான் ஒப்புக்கு சப்பாணியாய் போய்கொண்டு இருந்தது , 

அஜித் மைக் பிடிக்கும் வரை. அவர் மேடை நாகரீகத்தின் காரணமாய் தலைமகனை பற்றி கொஞ்சம் புகழ்ந்து பேசி விட்டு தன சரவெடியை ஆரம்பித்தார் . யாருமே சொல்லுவதற்கு தயங்கிய அல்லது பயந்த ஒரு விஷத்தை தைரியமாய் கூறினார். எங்களில் பலருக்கு இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விருப்பமில்லை , எங்களை மிரட்டித்தான் இங்கே வர செய்கின்றனர் , நீங்கதான் இத தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் மனதில் பட்ட விசயத்தை போட்டு உடைத்தார். அவர் கூறியதை ஆமோதிக்கும் வகையில் ரஜினியும் உடனே எழுந்து நின்று கைதட்டி தன் ஆதரவை தெரிவித்தார், பூனைக்கு தான் கட்ட வேண்டிய மணியை அஜித் கட்டிவிட்டதை அவர் உடனே பாராட்டினார். ரஜினிக்கு தெரியும் தான் இந்த பூனைக்கு மணி கட்டினால் பூனை யானை ஆகிவிடும் பின் அதை கட்டி மேய்பதற்க்கு பல மன்னிப்புகளை அள்ளி வழங்க வேண்டும் என்று. இப்பொழுது அந்த யானையை அஜித் கட்டி மேய்த்து கொண்டு இருக்கிறார். 

அவர் இவ்வாறு பேசியதை வழக்கம் போல அவருடைய எதிர்பாளர்கள் திரித்து கூற ஆரம்பித்து விட்டார்கள். அதில் அவர்கள் சொன்ன முதல் குற்றசாட்டு, இவ்வாறு நடக்கும் எல்லா விழாக்களும் எதோ ஒரு சமுதாய பிரச்சனைகளுக்காக நடைபெறுபவைதானே ? இதில் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொன்னால் அவருக்கு அந்த மக்கள் பிரச்சனைகளை பற்றி கவலை இல்லை என்றுதானே அர்த்தம் ? தன்னுடைய படம் ஓடுவதற்கு மட்டும் மக்களின் தேவை வேண்டுமாம் இவருக்கு, அதே மக்களுக்கு ஏதாவது பிரட்சனை என்றால் வந்து கலந்துகொள்ள மாட்டாராம் , இது எவ்வளவு பெரிய சுயநலம் என்பதுதான். அப்படி கூறுகின்றவர்கள் ஒரு விசயத்தை கவனிக்க வில்லை , தனக்கு சமுதாய பிரச்சனைகள் தேவை இல்லை என்று அவர் கூறவில்லை ,அந்த பிரச்சனைகளை தீர்பதாய் சொல்லி கொண்டு நடக்கும் சிலரின் சுயநலத்திற்காக மட்டுமே பயன் படுகின்ற கூட்டங்களை மட்டுமே அவர் தேவை இல்லை என்றார்.. காவேரி பிரச்சனையின் மூலமாய் யாருக்கு லாபம் கிடைத்தது? தஞ்சைக்கு அந்த காவேரி கிடைத்து விட்டதா என்ன? அதன் மூலம் சிலர் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி விட்டனர்.அவர்களுக்கு மட்டுமே அந்த பிரச்சனை , அதை ஒட்டி நடந்த கண்டன கூட்டங்கள் மூலமாய் லாபம். மக்களுக்கு கிடைத்தது வழக்கம் போல நாமம்... சரி திரை துறையினர் வந்து கண்டனம் தெரிவித்தால் எல்லா பிரச்ஷனைகளும் தீர்ந்து விடுமா? மக்கள் பிரச்சனைகளை விடுங்கள் அவர்கள் பிரச்ச்சனைகலாவது தீர்ந்ததா? திருட்டு vcd யை ஒழிக்க அவர்கள் எத்தனை முறை ஊர்வலங்கள், கண்டன கூட்டங்கள் நடத்தினார்கள், ஒழிந்ததா? சரி இவர்கள் கலைஞரை மட்டும்தான் பாராட்டி பேசுவார்களா ? நாளைக்கு அம்மா ஆட்சிக்கு வந்தால் இந்த மொத்த கூட்டமும் அம்மாவின் துதி பாட போய் விடும், இப்ப அய்யாவ புகந்து பேசுனவங்க அப்புறம் கூசாம அம்மாவ புகழ்ந்து பேசுவாங்க, முதுகெலும்பு இல்லாத கூட்டத்துக்கு வேண்டுமானால் அது சரி பட்டு வரும் , அனால் மற்றவர்களுக்கு? மத்தவங்க மிரட்டலுக்கு பயந்து இல்லை வளைந்து கொடுத்து இப்ப அய்யாவுக்கும் நாளைக்கு அம்மாவுக்கும் மாத்தி மாத்தி ஒத்து ஊதுனாநீங்க ஒத்துக்குவீங்களா அஜித் நல்லவருன்னு? 

ஆனால் அஜித்தின் இந்த அதிரடி பேச்சு அவருக்கு பலவிதங்களில் தொல்லைகளை கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. கலைஞர் டிவி யில் ஒளிபரப்பபடபோகும் அந்த விழாவில் அவருடைய பெயர் சொல்லபடவே இல்லை, இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் தலைமகன் அவர் மேல் எவ்வளவு கோபத்தில் இருப்பார் என்று, முன்பு வாய்கொழுப்பு நடிகர் என்று திரைதுரையினரால் கூறப்பட்டு வந்த அஜித், இப்பொழுது அரசியால் வட்டாரத்திலும் அந்த பெயரை சம்பாதித்து கொண்டுள்ளார்.அவர் கூறிய அனைத்தும் உண்மைதான் என்றாலும் இவ்வாறு உண்மையை கூறுபவர்களுக்கு நம் சமூகம் அளிக்கும் பட்டம் பிழைக்க தெரியாதவன் என்பதுதான் .... 

அஜித் ஒரு பிழைக்க தெரியாத மனிதர்தான் , அதனால்தான் விளம்பரத்தினால் மட்டுமே வெற்றிகளை குவித்து கொண்டு இருக்கும் சினிமா உலகில் அவருக்கு விளம்பரங்களே கிடைப்பதில்லை, எங்களுக்கு ஜால்ரா தட்டு உன்னை பெரிய மனிதன் ஆக்குகிறோம் என்று பலர் வரும் பொழுது அவர்களை உபயோகிக்க தெரியாமல் வீணடித்து விட்டார். கலைஞர் டிவி அவரை இருட்டடிப்பு செய்து தன் வேலையை காட்டி விட்டது.கலைஞர் சினிமா தொழிலில் உள்ள அவரின் சில அடிமைகளை வைத்து அஜித்தை திட்டியும் , அவர் மேல் புகார் கொடுக்க வைத்தும் பழி வாங்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் நேற்று மாலை அஜித் கலைஞரை நேரில் சென்று சந்தித்து பேசிய பின் எல்லாமும் மாறி விட்டது, கலைஞர் டிவி தன் விளம்பரத்தில் அஜித் பெயரை சேர்த்து கொண்டது , அவர் மேல் கொடுக்க பட்ட புகார்கள் எல்லாம் திரும்ப பெறப்படும். கலைஞர் வழக்கம் போல் செய்யும் அரசியல் சாணக்கியத்தனத்தை இந்த விசயத்திலும் வெற்றிகரமாய் நடத்தி காட்டி விட்டார். அஜித் நேர்மையானவர் என்பது மக்களுக்கு தெரிந்து விட்டது, இனிமேல் அவர் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தாலே போதும், நிம்மதியாய் இருக்கலாம்.இல்லை என்றால் ரஜினி போல அவரும் கலைஞரின் கைப்பாவையாய் மாற வேண்டி வரும்.... அப்படி நடந்தால் அவருக்கு இருக்கும் மிஸ்டர் கிளீன் என்ற இமேஜ் பறந்து விடும்

அவர் மேல் வீசப்படும் இன்னொரு குற்றசாட்டு அவர் தமிழன் இல்லை என்பதுதான், அது உண்மைதான் தமிழனை ஏமாற்ற தெரியாதவன் எப்படி தமிழனாய் இருக்க முடியும்?

Wednesday, February 17, 2010

அசல் அஜித்திற்கு வெற்றியா?

ஒரு வழியாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்கபட்ட அசல் படம் வந்து இரண்டு வாரங்கள் ஆகி விட்டது. அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற வெறி (ஏகன் அந்த அளவிற்கு அவர்களை காய போட்டு விட்டது), விஜய் ரசிகர்களுக்கோ படம் வெற்றி பெற்றுவிட கூடாது என்ற பயம் (குருவி, வில்லு, வேட்டை என்று விஜய் தொடர் தோல்விகளை கொடுக்கும் பொது அஜித் வெற்றி பெற்றுவிட கூடாதே) . இதில் யார் நினைத்தது நடந்தது?


இந்த படத்தை பார்த்தவர்களுக்கு ஒரு விஷயம் கண்டிப்பாய் புரியும் அது என்னவென்றால் இது அஜித் முழுக்க முழுக்க அவருடைய ரசிகர்களுக்காக எடுத்த படம் என்பது. பில்லா படம் வந்த பிறகு அவருடைய ரசிகர்கள் அவரிடம் எதிர்பார்ப்பது ஸ்டைலிஷான படமே. போன sunday இமயம் டீ.வீ யில் சரணின் நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி காண்பித்தார்கள், அதில் சரண் ஒரு விசயத்தை தெளிவாய் கூறினார், இந்த படத்தை ஆரம்பிக்கும் போது சரணிடம் ஒரு சின்ன தயக்கம் இருந்ததாம் , கதை ரொம்ப சாதாரணமான பழிவாங்கள் கதைதானே என்று, ஆனால் அஜித் அவரிடம் நீங்கள் இந்த படத்தை ரொம்ப ரிச்சா காட்டுங்க என்னுடைய ரசிகர்கள் கண்டிப்பாய் பார்ப்பார்கள் என்று ரொம்ப நம்பிக்கையாய் கூறினாராம். இதிலிருந்தே தெரிகிறது அவர் யாரை நம்பி இந்த படத்தை எடுத்தார் என்று. சரி அஜித் ஏன் தன்னுடைய ரசிகர்களுக்காக மட்டும் படம் எடுக்க வேண்டும், ஏன் எல்லோரும் பார்த்து ரசிக்கும்படியான ஒரு ஜனரஞ்சகமான படம் எடுக்க வேண்டியதுதானே? அவரால் அப்படி படம் எடுக்க முடியாதா? முடியும் வரலாறு , கிரீடம் எல்லாம் அப்படி பட்ட படங்கள்தானே. ஏன் அசல் தன ரசிகர்களுக்கான படம் என்று முடிவு செய்தார். எல்லாம் ஒரு ஆசைதான், முதலில் ஒரு சாக்லேட்பாயாக நடித்து கொண்டு இருந்தவர் அப்படியே நடித்து கொண்டு இருந்தால் காணமல் போய் விடுவோம் என்று எண்ணி ஆக்சன் ஹீரோவாக ஆசைப்பட்டு சில படங்களில் நடித்தார். முதலில்(உல்லாசம் ) அவருக்கு தோல்வி கிடைத்தாலும், சில முயற்சிகளுக்கு பின் அவருக்கு பெரிய வெற்றிகள் கிடைத்தன (அமர்க்களம்  , தீனா), ஆனால் அதன் பின்னால் அவரால் காதலை மையமாக கொண்ட   படங்களில் வெற்றியை தர முடியவில்லை. பூவெல்லாம் உன் வாசம் , ராஜா போன்ற படங்கள் பெரிய அளவில் பேச படவில்லை, இதில் பூவெல்லாம் உன் வாசம் பாடல்கள் நன்றாக இருந்தும் தோல்வியை சந்தித்த படம். காரணம் அவர் ரசிகர்கள் படத்தை முதல் நாளே பார்த்து விட்டு அவர்களுக்கு திருப்தி அளிக்காத காரணத்தினால் செய்த எதிர்மறை விமர்சனங்கள். ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை படம் குப்பை போல என்று நினைத்து மற்றவர்களும் படத்தை கண்டுகொள்ளவில்லை. பின்னர் அவர் நடித்த வில்லன், அட்டகாசம் போன்ற படங்கள் அவர் ரசிகர்களை பெரிய அளவில் ரசிக்க வைத்ததினால் படமும் வெற்றி பெற்றது. அதே சமயம் ரசிகர்களுக்காக அவர்  நடித்த ஆஞ்சநேயா, ஜனா போன்றவை மிக பெரிய தோல்விகளை தந்தது. அந்த படங்களை பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாக தெரியும் , அந்த படங்களிலும் அவர் ரசிகர்கள் ரசிக்கும் படியான காட்சிகள் இல்லை (சண்டை காட்சிகளை தவிர).சரி அப்படி என்றால் அவர் ரசிகர்கள் எதை விரும்புகிறார்கள்? அவரே குழம்பி போய் இருந்த சமயத்தில் சரண் அதற்க்கு விடை கொடுத்தார் அட்டகாசம் மூலமாய். காட்சிக்கு காட்சி தல வசனங்கள், அதிரடியான பாடல்கள், தல புகழ் பாடும் ஒரு துதி பாடல் , அந்த படம் முதல் பத்து நாட்களிலேயே பெரிய வசூலை அள்ளி தந்தது. second release செய்யும் திரை அரங்குளளிலும் பெரிய ஒப்பெநிங்கை கொடுத்தது படம்.

ஆனால் அவர் இதுதான் தன் பாதை என்று அப்பொழுதும் முடிவு செய்யவில்லை. அதன் பின்னர் அவர் நடித்த படம் 'ஜி', ஹீரோயசமே இல்லாத அமைதியான படம்.பாடல்களும் நன்றாக இருந்தன , படத்தில் அஜித் தோற்பதாய் காட்டி இருப்பார் இயக்குனர் லிங்குசாமி. படம் வித்தியாசமான படங்களை ரசிக்கும் ரசிகனுக்கு பிடித்து இருந்தாலும் , தல ரசிகர்கள் ரசிக்கவில்லை. லிங்குசாமியிடம் சண்டையெல்லாம் போட்டனர் அவர்கள். படம் பெரிய தோல்வி. அதன் பின்னர்தான் அவரின் போக்கு மாறியது, இனி தன்னுடைய ரசிகர்கள் கேட்கும் படங்களையே தருவது என்று முடிவு செய்தார். வரிசையாய் வந்தன பரமசிவன், திருப்பதி, ஆழ்வார் என்று.வரலாறு படம் ரொம்ப நாட்களுக்கு முன்னரே எடுக்க ஆரம்பித்த படம் எனவே அது இந்த வரிசையில் சேராது. இதில் பரமசிவன் மற்றும் திருப்பதி அவர் ரசிகர்களுக்கு பிடித்து இருந்ததினால் ஓரளவு வெற்றி பெற்றன. ஆழ்வார் அவர் ரசிகர்களாலே தோற்கடிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் எடுத்த கிரீடம் அவரின் வித்தியாசமான படங்களில் ஒன்று, அதுவும் அவர் ரசிகர்களுக்கு பிடிக்காத காரணத்தினால் தோல்வியை தழுவியது. சென்னை பாக்ஸ் ஆபீசில் முதல் வாரத்தில் கிரீடம் வசூலித்தது முப்பத்தி இரண்டு லட்சங்கள் மட்டுமே. ஆனால் அதன் பின்னால் வந்த பில்லா அவரின் ரசிகர்களின் அதிபயங்கர எதிர்பார்ப்பின் காரணமாய் எழுபத்தி எட்டு லட்சங்களை  அள்ளி குவித்தது . இதுதான் அஜித் ரசிகர்களின் பின்னால் செல்ல காரணம். ஆக்சன் ஹீரோவாக வெற்றி பெற்றுவிட்ட அஜித் மாஸ் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையில் தன்னுடைய அடுத்த அடியை எடுத்து வைக்க ஆசைப்பட்டு விட்டார். அதற்க்கு அவர் தெரிவு செய்தது ரஜினியின் வழியை. ரஜினியின் படங்களை பார்த்தால் அவரின் படங்களில் கதையே இருக்காது , அவர் மட்டும்தான் இருப்பார் அருணாசலம், பாட்சா  , முத்து போன்ற படங்களில் ரஜினி தவிர வேறு யாராவது நடித்து இருந்தால் என்னவாகி இருந்திருக்கும் அந்த படம்?

 படம் ஓடியது ரஜினிக்காக மட்டும்தான், இதுதான் ஒரு மாஸ் ஹீரோவின் அளவுகோல்....அப்படி தனக்காக மட்டுமே ஓட வேண்டும் என்று எண்ணி அஜித் ஒரு காலத்தில் எடுத்த படம் ரெட், ஆனால் படம் பப்படம் ஆனது. ரஜினியின் படங்களை சாதாரண ரசிகனும் ரசிக்க காரணம் அதில் வரும் அவர் சார்ந்த காமெடி காட்சிகள், ஆனால் அஜித்திற்கு அது சுத்தமாய் வருவதில்லை, பிறகு எப்படி பிற ரசிகர்களை தன்னுடைய படத்தை ரசிக்க வைப்பது என்று யோசித்து கொண்டு இருந்தவருக்கு விடை கொடுத்தது பில்லா. அதனுடைய high tech presentation படத்தை எல்லோரையும் ரசிக்க வைத்தது. அட்டகாசத்தையும் பில்லாவையும் ஒரே திரையில் ஓட்டி பார்த்த பொழுது கிடைத்தது அவருக்கு மாஸ் ஹீரோவுக்கான பார்முலா. ரசிகர்களுக்காக அட்டகாசம் build ups,  மற்றவர்களுக்கு பில்லா presentation அந்த பார்முலாவில் எடுக்க பட்டதுதான் அசல் ..

ஆனால் இது அஜித் நினைத்த மாஸ் ஹீரோ இமேஜ் அவருக்கு தந்ததா என்றால் , குரங்கு பிடித்த கதைதான்... காரணம் எல்லாம் இருந்தும் உப்பு இல்லாமல் பொய் விட்ட 5 star hotel ரெசிப்பி மாதிரி , அஜித் , அவரின் ஸ்டைல், பாவனா, கண்ணுக்கு இதமான ஒளிப்பதிவு, விறுவிறுப்பான முதல் பாதி என்று எல்லாம் இருந்தும் இருக்க வேண்டிய கதை இல்லாமல் போனது பொதுவான ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே தந்து விட்டது..ஆனால் இந்த படத்தின் மூலமாய் அவருக்கு கிடைத்த பலன் அவரின் ரசிகர்களின் எண்ணிக்கை சற்று பெருகி இருக்கும் , (ஒருவன் ஒரு நடிகனின் ரசிகனாய் ஆவது எப்போது என்றால் அவனுக்கு பிடித்த படம் மற்றவர்களால் கிண்டல் செய்யப்படும் பொழுது, அவன் அதற்க்கு சப்போர்ட் செய்து பேசினால் மற்றவர்களால் அவன் ரசிகன் என்று முத்திரை குத்தப்பட்டு விடுவான். பின்னர் அவனே தன்னையும் அறியாமல் ரசிகன் ஆகி விடுவான். விஜய்க்கும் அஜித்திற்கும் அதிக படியான ரசிகர்கள் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். அந்த வகையில் சிலருக்கு பிடித்தும் சிலருக்கு பிடிக்காமலும் போய் விட்ட இந்த அசல் அவருக்கு இன்னும் கொஞ்சம் ரசிகர்களை உருவாக்கி கொடுக்கும் என்று நம்பலாம்.)
ஆனாலும் இது அஜித் எடுத்து வைத்திருக்கும் முதல் அடி , சற்று சறுக்கி இருந்தாலும் இன்னும் கவனமாய் முயற்சி செய்தால் அவர் நினைத்த உயரத்தை அடைந்து விடலாம்.
மொத்தத்தில் அசல் அஜித் ரசிகர்களுக்கு வெற்றி, ஆனால் அவருக்கு தோல்வி. 


என்னுடைய போன பதிவிற்கு பதிமூன்று ஓட்டுகள் போட்டு தமிளிஷில் பிரபலமடைய செய்த அனைவருக்கும் நன்றி. இதுவும் பிடிச்சி இருந்தா மறக்காம ஓட்டு போடுங்க.

Monday, February 15, 2010

தலையா? தளபதியா? யார் king of opening? ஒரு ஆராய்ச்சி....

இன்னைக்கு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு  இருக்குற மிக பெரிய சந்தேகம்,  பிரச்சனை, எதிர்பார்ப்பு என்னவா இருக்கும்? கண்டிப்பா எந்த படிப்பு படிச்சா வேலை கெடைக்கும்? எந்த படிப்பு படிச்சா "பல்பு" கெடைக்கும் ?அப்டிங்கிறதெல்லாம் கெடையாது, தல தளபதி இவங்க ரெண்டு பேருல யாரு கிங் அப்  ஒப்பெநிங்,  யாருக்கு நெறைய ரசிகர் பட்டாளம் இருக்கு அப்டிங்கிறதுதான் அவர்களின் "தல"யாய பிரச்சனை. நம்பாதவங்க இங்க போய் படிங்க.... படிச்சாச்சா ... நானும் படிச்சேன் என்னடா எல்லாரும் இப்படி சண்ட போட்டுக்கிட்டு இருக்காங்க இதுக்கு ஒரு முடிவே கெடையாதான்னு நான் வடிவேலு மாதிரி அங்க உக்காந்து யோசிச்சிகிட்டு இருக்கும் போது கண பொழுதில் ஒரு யோசனை தோன்றியது. அந்த பதிவுல பின்னூட்ட மிட்ட நண்பர் ஒரு விசயத்த சொல்லி இருந்தாரு , அது என்னனா அவரு வேட்டைகாரனை பற்றி போட்ட பதிவிற்கு 400 ஹிட்ஸ் கெடச்சதாம் , அசல் பற்றி போட்ட பதிவிற்கு வெறும் 200 ஹிட்ஸ்தான் கெடச்சதாம். அதனால தளபதிக்குதான் ரசிகர் பட்டாளம் நெறைய இருக்குன்னு ஒரு conclusion கொடுத்து இருந்தாரு. இங்கதான் நம்ம ஆராய்ச்சி மூளை டக்குன்னு முழிச்சி வெட்டியா யோசிக்க ஆரம்பிச்சது. இந்த dataவ வச்சி நம்ம ஏன் ஒரு ஆராய்ச்சி பண்ணி ஒரு முடிவ கண்டுபிடிக்க கூடாதுன்னு கண்ணா பின்னான்னு யோசிக்க ஆரம்பிச்சிடுச்சி .... இந்த ஆராய்சிக்காக நான் நெறைய literature study
பண்ண வேண்டி இருந்தது... அப்படி பண்ணுனதுல நான் தெரிஞ்சிகிட்ட விசயங்கள்

1. பதிவுலகை பத்தி நல்லா தெரிஞ்சவங்களுக்கு  ஒரு விஷயம் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்  அதுஎன்னான்னா  யாருமே  வேட்டைகாரனையும்        அசலையும்  நல்ல  விதமாவே எழுதல..
2. விஜய்யை பற்றி தர குறைவாய் எழுதும் பதிவுகளை விஜய் ரசிகர்கள் ஒரு முறைதான் படிக்கின்றனர். அதும் பாதி படிச்சிட்டு அனானியா கெட்ட வார்த்த பின்னூட்டம் இட்டு விட்டு போய் விடுகின்றனர். ஆனால் அதே பதிவை அஜித் ரசிகர்கள் பல முறை படித்து வயிறு வலிக்க சிரித்து மகிழுகிறார்கள்.. வேட்டைக்காரன் பற்றிய பதிவை ஒவ்வொரு அஜித் ரசிகனும் அதிகபட்சம் நான்கு முறையும் குறைந்த பட்சம் இரண்டு முறையும் படிகின்றார்கள். எனவே நம்முடைய ஆராய்ச்சிக்கு இவ்விரண்டின் சராசரியாய் மூன்று முறை என்று வைத்து கொள்வோம்.
இப்பொழுது அந்த பதிவை படித்த மொத்த விஜய் ரசிகர்கள் 'x' என்றும் அஜித் ரசிகர்கள் 'y' என்றும் வைத்து கொள்வோம் , நான் மேல சொன்ன விசயங்களை வைத்து கீழே உள்ள சமன்பாட்டை உருவாக்கி கொள்ளலாம்.
               x+3y=400              ------------- (1)
இதே மாதிரி அஜித்தை பற்றிய பதிவுகளை அஜித் ரசிகன் ஒரு முறை மட்டும் படித்து விட்டு கெட்ட வார்த்தை பின்னூட்டத்தை அன்பளிப்பாய் கொடுத்து விட்டு சென்று விடுவான்.ஆனால் விஜய் ரசிகன் ஒரு அற்ப சந்தோஷத்திற்காக அதை சராசரியாய் மூன்று முறை படித்து அஜித்தை திட்டி  அவன் பங்கிற்கு ஒரு பின்னூட்டம் இட்டு விட்டு செல்வான். இந்த விசயங்களை கொண்டு கீழே உள்ள சமன்பாட்டை உருவாக்கி கொள்ளலாம்
               3x+y=200              ----------------(2)௦௦
இப்ப இந்த ரெண்டு சமன்பாட்டையும் solve பண்ணுனோம்னா, x  மற்றும் , y யோட மதிப்பு நமக்கு கிடைத்து விடும்... 
x+3y=400----> equation I
3x+y=200 ---> equation II

first multiply I by 3

-> 3x+9y=1200

multiply II by minus one

-> -3x-y=-200
add this two equations

-> 3x+9y-3x-y=1200-200

-> 8y=1000

-> y= 125
substitute y=125 in equation I

-> x+(3*125)=400

-> x+375=400

-> x=400-375

-> x=25
நம்ம ஆராய்சியில x -> விஜய் ரசிகர்களையும் y -> அஜித் ரசிகர்களையும் குறிக்கும்....
எனவே அந்த பதிவை படித்த மொத்த விஜய் ரசிகர்கள் வெறும் 25 பேர் மட்டுமே.. அதை படித்த அஜித் ரசிகர்கள் மொத்தம் 125  பேர். எனவே என்னுடைய ஆராய்ச்சியின் முடிவில்  நான் தெரிந்து கொண்டது அஜித்துக்கே  ரசிகர்கள் அதிகம் .ஒரு விஜய் ரசிகன் இருந்தால் ஐந்து அஜித் ரசிகர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். 

அப்படி என்றால் அஜித் படங்கள் விஜய் படத்தை விட ஐந்து மடங்கு ஓட வேண்டுமே என்று நீங்க சந்தேகமா கேக்கலாம். நான் என்னுடைய ஆராய்ச்சிக்கு!!!??? எடுத்து கொண்ட input data  வலைபதிவு வாசகர்கள் மட்டுமே . அவர்கள் பெரும்பாலும் இருபத்து ஐந்து வயதிற்கு மேற்பட்ட ஆண்கள்தான் , அந்த வட்டத்திற்குள் மட்டுமே இந்த முடிவு. விஜய்க்கு பெண்கள் மற்றும் குழந்தைகளின்ஆதரவு அதிகமாய் இருக்கலாம்? அந்த ஆதரவை கொண்டு இந்த வித்தியாசத்தை அவர்  tally செய்துகொண்டு இருக்கிறார். ஆனால் ரஜினி படம் வரும்பொழுது இந்த மொத்த ஆதரவும் ரஜினிக்கு சென்று விடுவதால் ரஜினி படத்தோடு வரும் விஜய் படங்கள் மண்ணை கவ்வுகின்றன.


இப்ப புரிஞ்சதா... அஜித்தா விஜயான்னு   இனிமே சண்ட போட்டுக்கிட்டு இருக்காம போய் புள்ள குட்டிகள படிக்க வைங்கப்பா ......................................... 

Thursday, February 11, 2010

கடவுளும் ஒரு நாள் கட்டாயம் வருவார்..




என்னை ஊர் கிறுக்கன் என்றது...

நீ நடந்து

விட்டு சென்ற

உன் பாதசுவடுகளுக்கு

குடை பிடிதேனாம்....

அவர்களுக்கு எங்கே தெரியும்

உன் பாதம் பட்டால்

மண்ணும் உயிர் பெரும் என்று...

உன் விழி பட்டு

உயிர் பெற்ற

என் இதயத்திற்கு தானே

அது தெரியும்......



காற்றில் ஆடும்

உன் கலைந்த

முடியில்

ஊசல்ஆடியது என் இதயம்....

நீ அழகாய் அதை

உன் கையால்

உன்னோடு இழுத்து

கொண்ட போது

முடியோடு சேர்ந்து

உன்னோடு வந்து விட்டது

என் இதயமும் ........




நீ சோம்பல் முறித்தால்

சோம்பல் குறைகிறதோ

இல்லையோ...

உன் அழகு கூடுகிறது...


கேளுங்கள் தரப்படும்

என்ற கடவுளிடம்

என்ன கேட்டு

வங்கி கொண்டாய்

இவ்வளவு அழகை....


நீ வாரம்

தவறாமல் செல்லும்

ஆலயத்திற்கு

நானும் வாரம் தவறாமல்

வருகிறேன்...

உன்னை பார்க்க அல்ல...

கடவுளை பார்க்கும் ஆசையோடு....

நீ கண்மூடி ஜெபிக்கும்

அழகை பார்க்க

கடவுளும் ஒரு நாள்

கட்டாயம் வருவார்....




உலகில் உள்ள சில புனிதமான உணர்வுகளில் காதலும் ஒன்று.... எவராலும் மாற்ற முடியாத பல விசயங்களை நொடியில் மாற்றி போடும் சக்தி அதற்க்கு உண்டு. எதோ ஒருவகையில் பண்டமாற்று முறையை போல் மாறி விட்ட பல உறவுகளுக்கு நடுவே எதையும் எதிர்பார்க்காமல் எல்லாமும் தரும் உறவு அது. மனதோடு மனது உரசினால் வரும் தீ அது. காம தீயை அடக்கும் குளிர்ச்சியும் அதே,  அவள் தரும் உதட்டு முத்தம் என்றுமே காம தீயை உருவாக்குவதில்லை , அது காதல் தீயவே மேலும் கொழுந்து விட்டு எரிய செய்யும் நம் மனதிற்குள். காதல் செய்தால் பசி உறக்கம் மறக்குமோ இல்லையோ கண்டிப்பாய் அது வரை நம்முள் கொழுந்து விட்டு எரியும் காமம் கண்டிப்பாய் மறந்து விடும், பெண்களை அவர் உணர்வுகளை மதிக்கும் குணம் நம்முள் வந்து விடும். பெண்கள் மனம் ஒரு புரியாத புதிர், அதை புரிந்து கொள்ள ஒரே வழி காதல்.... ஆண்கள் மனம் சீறி பாயும் காட்டாறு, அதை ஒழுங்கு படுத்தும் ஒரே வழி காதல்.... 
காதல் செய்யும் காதலர்களுக்கெல்லாம் காதல் செய்யும் எல்லா நாளுமே காதலர் தினம்தான் என்றாலும் , காதல் மட்டுமே செய்யும் இந்த சிறப்பு காதலர் தினத்தில் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் ... 



Monday, February 8, 2010

அசல் - எனக்கு புடிச்சிருக்கு

அசல் படம் ஒருவழியா வெளிவந்து விட்டது... படத்தோட ரிசல்ட் படம் ஹிட்... இந்த படம் பிடிக்காத விஜய் ரசிகர்கள்(அஜீத்த பிடிக்காதவங்க) கண்டிப்பா அஜித்தோட  அடுத்த படம் வரும் போது அசல் நல்ல இருந்துச்சு , அந்த படம் அளவுக்கு இந்த படம் இல்ல   என்று அசல் நல்ல படம் என்ற உண்மைய ஒத்து கொள்வார்கள்(இப்பதான் ஏகன் ஒரு தடவ பாக்கலாம்னு ஒத்துகிறாங்க). 

ஒரு அஜித் ரசிகனாய் எனக்கு இந்த படத்தில் பிடித்த விசயங்கள் நெறைய சொல்லலாம்

தலையோட stylishஆனா தோற்றம் ...,பில்லா மாதிரியான கேமெரா...சண்டை காட்சிகள்....அப்பா அஜித்தோட அமைதியான நடிப்பு ....வசனமே பேசாம ஹீரோஇசம் பண்ற தல ...சமீரா ரெட்டி & பாவனா glamour....இடைவேளைக்கு முன்னாடி வர்ற வில்லன் ஷெட்டி ... யூகிசெதுவோட சின்ன சின்ன டைமிங்  காமெடிகள்...டொட்ட டிங் பாட்டு...படத்த ரொம்ப இழுக்காம டக்குன்னு முடிச்சது .... பல இடங்களில் வரும் "தல" வசனம் .... second halfல தலைய காட்டுறதுக்கு முன்னாடி புகைய காட்டுற சீன இது எல்லாம் சேந்து என்ன படத்த மூணு தடவ பாக்க வட்சிருசி... மூணு தடவையும் நான் படத்த என்ஜாய் பண்ணுனேன்.... ஒவ்வொரு தடவையும் படத்த பார்த்து முடிக்கும்  பொழுது படத்த அடுத்து எப்ப பாக்கலாம் என்றுதான் நினைக்க தோன்றியது ... கண்டிப்பா எனக்குள் இருந்த ரசிகனுக்கு தீனி போட்ட தலைக்கு நான் நன்றி சொல்லியே ஆகணும் ...

இருந்தாலும் படத்தில் நிறைய குறைகளும் இருக்கத்தான் செய்தன ... முதல் குறை கதை ரொம்ப பழசு... வில்லன்களை இன்னும் கொஞ்சம்  யூஸ்  பண்ணி இருக்கலாம்.... இரண்டாம் பாதி  வேற மாதிரி எடுத்திருக்கலாம்... பாட்டு இன்னும் நல்லா இருந்திருக்கலாம்.... கடத்திட்டு போய் blockmail பண்ற மாதிரியான மொக்கையான climax... அதும் தல கட்ட அவுத்துக்கிட்டு வந்து சண்ட போடுறது மனோகரா காலத்து சீன... ஆனா இது எல்லாத்தையும் தாண்டி படத்துல ரசிக்க நிறைய இருக்கு அஜித் ரசிகர்களுக்கும் , சினிமா ரசிகர்களுக்கும் (சில படங்களை பார்க்கும் போது நமக்கு கடுப்பாய் இருக்கும் அது மாதிரி இந்த படத்தின் எந்த காட்சியிலும் உணர மாட்டீர்கள் )  ... ஆனா உங்களுக்கு அஜீத்த பிடிக்கவே செய்யாதுனா தயவுசெஞ்சி இந்த படத்துக்கு போய்டாதீங்க கண்டிப்பா உங்களுக்கு பிடிக்காது... 

கடைசியா  ஒரு ரசிகனா எனக்கு இது போதாது தல ,இது vegitable பிரியாணிதான்  .... நான் இன்னும் நெறைய எதிர்பாக்குறேன்... உங்க அடுத்த படம் நல்ல காரமான சிக்கென் பிரியாணியா கொடுங்க.... 

பி. கு:எந்த ஒரு மீடியா துணையும் இல்லாமல் பெரிய opening கெடைக்குதுனா அது தலைக்கு மட்டும்தான் .... அதுக்கு அசலே சாட்சி  

LinkWithin

Related Posts with Thumbnails