Followers

Copyright

QRCode

Monday, December 19, 2011

இளைய தளபதிக்கு ஒரு கடிதம்




அன்புள்ள ,
  எதிர்கால தமிழக முதல்வரும் , அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்று , ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மிக கடினமான சோதனைகளை எல்லாம் வெற்றிகரமாக முடித்து முனைவர் படம் பெற்று அதை பெருமையாக தன் பெயருக்கு பின்னால்  எப்பொழுதும் போட்டு கொள்ளும் இளையதளபதி டாக்டர் ஜோசப் விஜய் அவர்களுக்கு,


உங்களை பற்றி ஏதாவது எழுதினால் உங்கள் அடி பொடிகள் ஏதோ நாங்கள் பொறாமையில் எழுதுவதாக பிதற்றுகிறார்கள். உங்கள் மேல் பொறாமை படும் அளவுக்கு நீங்கள் என்ன செய்து விட்டீர்கள் என்று எனக்கு இன்னமும் புரியவில்லை. நீங்கள் ஒரு சினிமா நடிகனாக மட்டும் தங்களை அடையாளபடுத்தி இருந்தால் உங்களை புறக்கணித்து விட்டு நாங்கள் எங்கள் வேலையை பார்த்து கொண்டிருப்போம். ஆனால் ஒரு சமூக ஆர்வலராக , எதிர்கால அரசியல்வாதியாக மாற  முயலும் உங்கள் நடவடிக்கைதான் உங்களை பற்றி இப்படியெல்லாம் எழுத தூண்டுகிறது.

எனக்கு உங்களின் சினிமாக்கள் பெரும்பாலும் பிடிக்காது (கில்லி , சிவகாசி மட்டும் விதிவிலக்கு) , ஆனால் இந்த பதிவு அதை பற்றியது இல்லை. உங்களின் மற்ற இரண்டு பரிமாணங்களான சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆகியவற்றை பற்றிதான் எழுதபோகிறேன். அஜீத் இந்த இரண்டு பரிமானங்களிலும் தன்னை வெளிபடுத்திக்கொள்வதில்லை என்பது எனக்கு சாதகமான விஷயம்தான் என்றாலும் அதற்காக மட்டும் இதை எழுதவில்லை , சினிமாவில் நடித்து விட்டு , தனக்கு பின்னால் ஒரு கூட்டம் கூடியவுடன் முதல்வர் கனவுடன் எந்தவிதமான தகுதியும் இல்லாமல் அரசியலில் இறங்க துடிக்கும் உங்களை போன்ற சமூகத்தை கெடுக்கும் கிருமிகளை பார்க்கும் போது சூடு சுரணையுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் எழும் ஆதங்கம் என்னுள்ளும் எழுந்ததே முக்கிய காரணம்.


நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய போராட்டம் வெடித்திருக்கிறது மற்ற போராட்டங்களை போல இது ஒரு அரசியல்வாதியின் தலமையிலோ , இல்லை கார்ப்பரேட் முதலாளிகளின் ஸ்போன்சர்ஷிப்பிலோ , ஜாதி தலைவரின் பெயரை கொண்டோ , உங்களை போன்ற சினிமா நடிகனின் சுயநலத்துக்காகவோ இந்த போராட்டம் நடைபெறவில்லை. மக்களே முன்னின்று இந்த போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள். நம்முடைய காலகட்டத்தில் இவ்வளவு மக்கள் ஒரு பிரச்சனைக்காக ஒன்று கூடி நாம் பார்திருக்க இயலாது.  நீங்கள் நாகபட்டினத்தில் உங்கள் சுயநலத்திர்க்காக கூட்டிய கூட்டத்தை விட அதிகமான கூட்டம் ஒவ்வொரு நாளும் தேனியில் கூடுகிறது. விஷயம் அதுவள்ள,



இலங்கையில் தமிழன் மீது தாக்குதல் நடந்த போது உண்ணாவிரதமும் , மீனவன் சுடபடுவதற்க்கு கண்டன கூட்டமும் நடத்தி தமிழனின் மீது அக்கறை இருப்பதை போல காட்டி கொண்டீர்கள். அன்னா ஹசாரே மீடியாக்களின் துணையோடு ஊழல் எதிர்ப்பு போராட்டம் நடத்திய பொழுது ஒரு மணிநேரம் மட்டும்  அந்த மேடையில் அவரோடு அமர்ந்து உண்ணாவிரதம் இருந்து போட்டோவுக்கும் , வீடியோவுக்கும் போஸ் கொடுத்துவிட்டு வந்தீர்கள்  . உங்கள் பட வெளியீட்டு நாளிலும் , உங்கள் பிறந்த நாளிலும் ஏழைகளுக்கு தையல் மெசினும் . கறவை மாடும் இலவசமாக கொடுத்து அதை பேப்பரிலும் , டிவியிலும் விளம்பரபடுத்தி கொண்டு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க பார்தீர்கள். ஒன்று உங்கள் அரசியல் பிரவேசத்திர்க்கு ஏழை பங்காளன் என்ற விளம்பரம் , இன்னொன்று இதையே காரணம் காட்டி கள்ளக்கணக்கு எழுதி வருமான வரியில் கொஞ்சம் விலக்கு...   அப்பொழுதெல்லாம் மக்களின் நலனை விட மீடியாக்களில் உங்கள் பெயர் பரபரப்பாக அடிபடபட வேண்டும் , மக்கள் மத்தியில் ஒரு சமூக ஆர்வலராக உங்களை காட்டி கொள்ள வேண்டும் என்ற முனைப்பில்தான் நீங்கள் இதையெல்லாம் செய்தீர்கள் என்று ஒரு கூட்டம் சொல்லிக்கொண்டிருந்தது ... அதுதான் உண்மையும் கூட.

பக்கத்து நாட்டில் தமிழன் அடிபட்ட பொழுது , கூட்டத்தை கூட்டி நான் அடிச்சா தாங்க மாட்ட , உலக வரைபடத்திலிருந்து உன் நாட்டையே தூக்கிடுவேன் என்று சிங்களவனை பார்த்து வீராவேசமாக வசனம் பேசினீர்களே , இன்று சொந்த நாட்டிலேயே தமிழன் உரிமை பிரச்சனைக்காக போராடி கொண்டிருக்கிறானே , அவனுக்காக இறங்கி போராடாமல் , அமைதி காப்பது ஏன்? சிங்களவனை கண்டித்து நாகபட்டினத்தில் கூட்டம் கூட்டியதை போல , நமக்கு தண்ணீர் தர மறுக்கும் மலையாளியை கண்டித்து தேனியில் ஒரு கண்டன ஆர்பாட்டம் நடத்த வேண்டியதுதானே? அதில் மலையாளியை பார்த்து நான் அடிச்சா தாங்க மாட்ட , இந்திய வரைபடத்திலிருந்து உங்க மாநிலத்தையே தூக்கிடுவேன் என்று வாய் சவாடல் விட வேண்டியதுதானே.

கண்டிப்பாக முடியாது , காரணம் சிங்களவனை எதிர்ப்பதால் உங்களுக்கோ உங்கள் படத்துக்கோ எந்த பாதகமும் நேர்ந்துவிட போவதில்லை மாறாக இலங்கை தமிழர்களின் ஆதரவு உங்களுக்கும் , உங்கள் படத்துக்கும் அதிகமாகும் .  ஆனால் மலையாளியை பகைத்து கொண்டால் உங்கள் படத்தை கேரளாவில் வெளியிட தடை விதிப்பார்கள் , மேலும் தமிழ்நாட்டில் இருக்கும் மலையாளிகள் யாரும் உங்கள் படத்தை பார்க்கமாட்டார்கள். இப்படி இழப்பு உங்களுக்கு என்னும் பொழுது நீங்கள் எப்படி தமிழனுக்கு ஆதரவாக களம் இறங்குவீர்கள். கண்ணுக்கு தெரியாத ஊழல்வாதிகலையும் , உங்களை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாத சிங்களவனையும் எதிர்த்த உங்களால்  இப்பொழுது தமிழனுக்காக மலையாளியை எதிர்க்க முடியுமா? அது விளம்பரதுக்கு ஆசைப்பட்டு உயிரையே விட்ட கதையாகி விடும் என்று உங்களுக்கு தெரியாதா? உங்கள் படங்கள் கேரளாவில் அதிகபட்சம் மூன்று கோடி வசூலை கொடுக்குமா? தமிழனுக்காக அந்த மூன்று கோடியை புறந்தள்ளிவிட்டு இறங்கி போராட முடியுமா? அரசியலுக்கு வருவதற்க்கு முன்னரே ஒவ்வொரு விசயத்திலும் சுயநலமாக செயல்படும் நீங்கள் எப்படி அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்துவிட முடியும்? இப்படிபட்ட  உங்களை பற்றி நல்லாவிதமாக மட்டுமே எழுத வேண்டும் என்று நீங்களும் உங்கள் அடிபொடிகளும் எப்படி எதிர்பார்க்கலாம்?


கடைசியாக இன்று அரசியலில் இருந்து கொண்டு ஊழல் செய்து நாட்டை குட்டி சுவாராக்கி கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை விட தன்னுடைய சுயநலத்துக்காக தனக்கு பின்னால் இருக்கும் கூட்டத்தை பயன்படுத்தி எந்த  தகுதியும் இல்லாமல் பணம் சம்பாதிக்க மட்டுமே அரசியலில் இறங்க துடித்து கொண்டிருக்கும் உங்களை போன்றவர்கள் தான் மிகவும்  அபாயகரமானவர்கள்.  இவர்களை போன்றவர்களை நம்மால் எல்லாம் திருத்த முடியாது, இவர்களுக்கு  பின்னால் இருந்து கொண்டு , இவர்களின் சுயநலதிர்க்கு பலிகடா ஆகிக்கொண்டிருக்கும் இவர்களின் தொண்டர்கள் தான் இவர்களை புறக்கணிக்க வேண்டும். ஆனால் சினிமா மாயையில் மூழ்கி கிடக்கும் அவர்கள் இதையெல்லாம் சிந்திக்கவா போகிறார்கள்?

சினிமாவும் அரசியலும் அனைவருக்கும் பொதுவானவை, அதில் நுழைய எப்படி ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளதோ , அதை போல அதில் இருப்பவர்களையே விமர்சிக்கவும் அனைவருக்கும் உரிமை இருக்கிறது. நான் விஜயை பற்றி விமர்சிப்பதில் ஏதாவது தவறு இருந்தால் சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன். நான் அஜீத் ரசிகனாக இருப்பதால்தான் விஜயை விமர்சிகிறேன் என்று சொல்லுபவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன் , விஜய் அந்த அளவுக்கு வொர்த் இல்லை பாஸ்... 






51 comments:

http://knrtimes.blogspot.com/ said...

சகோ. ராஜா அவர்களே.... இந்த கடிதம் விஜய்க்கு மட்டும் அல்ல. ஓட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் தான் .பாரதிராஜா,சேரன்,அமீர் எங்கே????

Unknown said...

அவர்கள் காசுக்காக மட்டும்தான் பிழைப்பு நடத்துகிறார்கள், அது தெரியாம இந்த ரசிகர்களும் வீணா போகிறார்கள்....தமிழர்களாகிய நாம்தான் இறங்கி போராடனும்.........................இந்த சினிமாகார நாதாரி பயபுள்ளை எல்லாம் தேவையே இல்லை..............நம்மக்கு வயித்துவலி என்றால் நாம் தான் மருத்துவம் செய்ய வேண்டும்.................வேண்டும் என்றால் ஒன்று செய்யலாம் சினிமாக்காரனுக்கு ஏன் இவ்வளவு சம்பளம் என்று அதற்கென்று தனியாக ஒரு போராட்டம், எந்த கட்சியின் துணையுமின்றி மக்களால் மட்டுமே நடக்க வேண்டும்................அப்பத்தான் அவர்களை வழிக்கு கொண்டு வர முடியும்............

K.s.s.Rajh said...

பலவிடயங்களை சுட்டிக்காட்டி இருக்கிறீங்க நல்ல பகிர்வு

"ராஜா" said...

//சகோ. ராஜா அவர்களே.... இந்த கடிதம் விஜய்க்கு மட்டும் அல்ல. ஓட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் தான் .பாரதிராஜா,சேரன்,அமீர் எங்கே????

உண்மைதான் நண்பரே ... எல்லா விசயத்திலும் தமிழனுக்காக போராடுகிறேன் என்று சொல்லிவிட்டு , இப்பொழுது அமைதியாக இருக்கும் எல்லா சினிமாக்காரனுக்கும் இது பொருந்தும். நேற்று பின்னூட்டத்தில் ஒரு விஜய் ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத்தான் இந்த பதிவில் விஜயை மட்டும் சொல்லவேண்டியதாகிவிட்டது.

"ராஜா" said...

//அவர்கள் காசுக்காக மட்டும்தான் பிழைப்பு நடத்துகிறார்கள், அது தெரியாம இந்த ரசிகர்களும் வீணா போகிறார்கள்....தமிழர்களாகிய நாம்தான் இறங்கி போராடனும்.........................இந்த சினிமாகார நாதாரி பயபுள்ளை எல்லாம் தேவையே இல்லை..............நம்மக்கு வயித்துவலி என்றால் நாம் தான் மருத்துவம் செய்ய வேண்டும்.................வேண்டும் என்றால் ஒன்று செய்யலாம் சினிமாக்காரனுக்கு ஏன் இவ்வளவு சம்பளம் என்று அதற்கென்று தனியாக ஒரு போராட்டம், எந்த கட்சியின் துணையுமின்றி மக்களால் மட்டுமே நடக்க வேண்டும்................அப்பத்தான் அவர்களை வழிக்கு கொண்டு வர முடியும்............



அவர்கள் சம்பளம் வாங்குவதுகூட பரவாயில்லை நண்பரே , ஆனால் அதை வைத்து கொண்டு அடுத்து அரசியலுக்கு வந்து ஆட்டையை போட வேண்டும் எண்டு அவர்களுக்கு வரும் ஆசைதான் கடுப்பை கிளப்புகிறது

"ராஜா" said...

//பலவிடயங்களை சுட்டிக்காட்டி இருக்கிறீங்க நல்ல பகிர்வு

நன்றி நண்பரே

Unknown said...

மாப்ள நச் பதிவு!

"ராஜா" said...

//மாப்ள நச் பதிவு!

நன்றி மாப்ஸ் ...

Anonymous said...

padhivu arumai thamizhagaththil kooththadigalin pinne sellum muttaal makkalum mattrum oru sila tholaikkatchigalukkum mandaikku ettinaal sari

Jayadev Das said...

\\முனைவர் படம் பெற்று அதை பெருமையாக தன் பெயருக்கு பின்னால் எப்பொழுதும் போட்டு கொள்ளும் இளையதளபதி டாக்டர் ஜோசப் விஜய் அவர்களுக்கு.\\ ஜோசப் விஜய் நடித்த ஆரம்ப காலப் படங்கள் சரியாக ஓடவில்லை. இதுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்த அவர் அப்பா சந்திரசேகர், ஒரு வேலை செய்தார். கொழுக் மொளுக் என்றிருக்கும் பொம்பிளைகளைப் பிடித்துக் கொண்டு வந்து அரைகுறை ஆடைகளுடன் ஜோசப்புடன் குத்தாட்டம் போட விட்டார். [ங்கொய்யால நிஜத்துல அப்பனா இருந்தாலும், மகனைப் பிழைக்க வைக்க மாமா வேலையையும் இந்தாளு பார்ப்பாரு போல.] படங்கள் பிய்த்துக் கொண்டு ஓட ஆரம்பித்தன. இக்கட்டான சூழ்நிலையில் தங்களது மாராப்பை அவிழ்த்துப் போட்டு அதில் ஒளிந்துகொள்ள ஜோசப்புக்கு வசதி பண்ணிக் கொடுத்து காப்பாற்றி விட்ட அந்த புண்ணியவதிகளுக்கு ஒரு நர்ஸ் பட்டம் கூட கொடுக்க வில்லையே என்பதை நினைக்கும் போது ரொம்ப வருத்தமாக இருக்கிறது.

"ராஜா" said...

அனானியாக வந்து என்னை திட்டாமல் கமெண்ட் போட்டது நீங்கள்தான் ... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

"ராஜா" said...

//தங்களது மாராப்பை அவிழ்த்துப் போட்டு அதில் ஒளிந்துகொள்ள ஜோசப்புக்கு வசதி பண்ணிக் கொடுத்து காப்பாற்றி விட்ட அந்த புண்ணியவதிகளுக்கு ஒரு நர்ஸ் பட்டம் கூட கொடுக்க வில்லையே என்பதை நினைக்கும் போது ரொம்ப வருத்தமாக இருக்கிறது.


நெங்கள் பகடியாக சொல்லியிருந்தாலும் உங்கள் கமெண்டில் இருக்கும் உண்மையை கண்டிப்பாக மறுக்க முடியாது .. ஸ்வாதி , சங்கவி , ஜோதி மீனா , யுவராணி என்று இவர்கள் யாரும் இல்லையென்றால் இளையதளபதி இரண்டு மூன்று படங்களோடு காணாமல் போயிருந்திருப்பார்...

Jayadev Das said...

ஜோசப்போட அப்பன் ரொம்ப யோக்கியன். ஒருத்தன் கதை சொல்ல வந்திருக்கான். நல்லாயிருக்கேன்னு சொன்ன அந்தாளு, ஆயிரம் ஐநூறுன்னு ஏதோ பணத்தை கொடுத்திருக்கான். ஐயா எனக்கு பணமெல்லாம் வேண்டாம், படத்தில் கதை என்னுடையது என்று பெயர் போட்டால் போதும் என்று சொல்லியிருக்கார். யோசித்த சந்திரசேகர், சரி அப்புறமா வா..ன்னு சொல்லியிருக்கார். கொஞ்ச நாள் எந்த சத்தமும் இல்லை, அப்புறம் பாத்தா, அதே கதையை தன்னுடைய பெண்டாட்டி பெயரில் படமா எடுத்து போட்டுடாரு இந்த நாணயஸ்தன். ஊழலை ஒழிக்கிறது, அரசியல் வாதிகளின் அட்டூழியங்களை படமா எடுகிரதேல்லாம் சினிமாவோட சரி, நிஜத்துல இவரும் அதே ரகம்தான், மகன் முதலமைச்சரா ஆனா எம்புட்டை முழுங்குவானுன்களோ தெரியவில்லை. இப்போ சம்பாதிச்சதெல்லாம் போதாதா...?? அஞ்சு கோடி, பத்து கோடி பத்தாது, ஆயிரம் கோடி பத்தாயிரம் கோடின்னு வேணுமா.....?? ங்கொய்யால மனுஷனுக்கு ஆசைக்கும் ஒரு அளவு வேண்டாமா...????

Jayadev Das said...

ஒருத்தன் நம்மை ஏமாற்றுகிறான் என்றால், தவறு எமாளியாகப் பிறந்த நம் மீதுதானே தவிர ஏமாற்றுபவன் மீதல்ல. கேரளத்தில் பெரிய பெரிய நடிகர்கள் இருந்தாலும், ஒரு எம்.எல்.ஏ. சீட்டுக்கு கூட போட்டியிடுவதில்லை, ஏனெனில் டெபாசிட் கூட மிஞ்சாது. நாம் மட்டும் ஏன் காவிரி, இலங்கைத் தமிழர் பிரச்சினை, முல்லைப் பெரியாறு போன்றவற்றிற்கெல்லாம் ஏதாவது நடிகனிடம் தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கிறோம்? அடுத்த முதலமைச்சர் என்றால், நன்றாக குத்தாட்டம் போடத்தெரிந்தவன் என்ற நிலை இங்கே எப்படி வந்தது? தவறு குலுக்கு நடிகைகளுடம் ஆட்டம் போடத் தெரிந்துவிட்டால் முதலமைச்சராகலாம் என்று நினைக்கும் கூத்தாடி மீதல்ல நம் சிந்தனையில் தான். மாற வேண்டியது நாம் தான்.

"ராஜா" said...

//ஒருத்தன் நம்மை ஏமாற்றுகிறான் என்றால், தவறு எமாளியாகப் பிறந்த நம் மீதுதானே தவிர ஏமாற்றுபவன் மீதல்ல. கேரளத்தில் பெரிய பெரிய நடிகர்கள் இருந்தாலும், ஒரு எம்.எல்.ஏ. சீட்டுக்கு கூட போட்டியிடுவதில்லை, ஏனெனில் டெபாசிட் கூட மிஞ்சாது. நாம் மட்டும் ஏன் காவிரி, இலங்கைத் தமிழர் பிரச்சினை, முல்லைப் பெரியாறு போன்றவற்றிற்கெல்லாம் ஏதாவது நடிகனிடம் தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கிறோம்? அடுத்த முதலமைச்சர் என்றால், நன்றாக குத்தாட்டம் போடத்தெரிந்தவன் என்ற நிலை இங்கே எப்படி வந்தது? தவறு குலுக்கு நடிகைகளுடம் ஆட்டம் போடத் தெரிந்துவிட்டால் முதலமைச்சராகலாம் என்று நினைக்கும் கூத்தாடி மீதல்ல நம் சிந்தனையில் தான். மாற வேண்டியது நாம் தான்.

இதுதான் நான் சொல்லவந்ததும் நண்பரே... நாம் திருந்தாவிட்டால் இந்த நிலை மாறவே மாறாது.. ஒரு நடிகனை , விளையாட்டு வீரனை ரசிப்பதற்க்கும் அவன் நம்மை ஏமாற்றுகிறான் என்று தெரிந்தும் ஏமாறுவதற்க்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. மற்ற மாநிலங்களில் முதல் வகை ரசிகர்கள் அதிகம் என்றாள் , நம் மாநிலத்தில் இரண்டாம் வகைதான் அதிகம் இருக்கிறார்கள்.

"ராஜா" said...

ஒரு அனானி வந்து காலையில் தின்ற கண்ட கண்ட கருமாந்திரங்களையெல்லாம் இங்கு வந்து வாந்தியாக எடித்திருந்தது ...
டேய் அனானி நாயே ... நீ யாரை வழிகாட்டியாக எடுத்து கொள்கிறாயோ அவர்களின் புத்திதான(எல்லா பெண்ணையும் புணருதல்) உனக்கும் இருக்கும்.... நான் உன் லெவலுக்கு இறங்கி கமெண்ட் போட விருப்பமில்லை , முடிந்தால் பெயருடன் வந்து கமெண்ட் போடு...

DD said...

Dear Writer,
I agree with your view on Vijay, except Mullai Periyar issue. I see it is good that Cinema people are staying away from this issue. Though it is a crucial issue, but it is very much solvable. Infact we have a solution available in front of us which technically is feasible, but certain hindrances are in place... I hope things will be alright when by-elections are over in Kerala. And more-over words of Cinema people will never help solve the issue, rather make a big wound due to their popularity among people of both the sates. It holds true with past and present (Kaveri), and in future (Mullai Periyar) also. Yes, I would like to see Vijay as a responsible actor and not a politician. If serving country is his interest, he should not use Cinema as a short cut. He should take excerpts from great people like Periyar, Gandhi, Anna (to some extent) who put their heart and soul purely from a social interest, and not any readily available popularity. 'Short cut' is the basis of corruption. Using Cinema as a medium to capture power is also one way of corruption... which our beloved ex-CM MGR followed, and our CM-aspirant (useless, below-standard and senseless) Vijayakanth is doing now... using popularity gained through Cinema is no different from giving Rs.5000 and asking for vote, which DMK and ADMK have mastered.... May god save my Tamil Nadu... And, I would request everyone to not take up enmity against our brothers of Kerala as a route to win the current situation.. A scar left now will never be wounded... We both are brotherly states, and we can't afford to have another estranged relationship (Karnataka)... Hope the mullai periyar issue gets resolved in an amicable way, SOON.

DD said...

I am sure many Malayalis must have read this post on actor Vijay. I request Malayalis also to stay away from giving bitter words on Tamil Nadu, Tamilians and Tamil. We should solve the issue, and not grow it. Esp. in the age of Internet, any provocative comment (from either side) will just worsen the situation which is very bad for both states which are intertwined and heavily dependent on each other - economically, geographically and culturally.

evano oruvan said...

என்னாங்கடா.. அரசியல பத்தி பேசுனா, வெளம்பரத்துக்கு பண்ணுறானு சொல்லுரிங்க, பேசாம இருந்தா. என் பேசாம இருக்கானு கேக்குறிங்க. சப்பா.....


விஜய் அந்த அளவுக்கு வொர்த் இல்லை பாஸ்... // அப்போ எதுக்கு இவ்ளோ பெரிய வாசகம் எழுதி இருக்கிங்க அஜித் பேன்??

evano oruvan said...

I am sure many Malayalis must have read this post on actor Vijay. I request Malayalis also to stay away from giving bitter words on Tamil Nadu, Tamilians and Tamil. We should solve the issue, and not grow it. Esp. in the age of Internet, any provocative comment (from either side) will just worsen the situation which is very bad for both states which are intertwined and heavily dependent on each other - economically, geographically and culturally.// ajith.um malayali than, avara tamil nada vittu verattunka lol

"ராஜா" said...

வாங்க எவனோ ஒருவன் ... உங்களுக்கு ஆரம்பத்துல இருந்து சொல்லணும் போல ... நான் மட்டும் இல்லை இங்கு கமெண்ட் போட்டிருக்கும் எல்லாருமே விஜய் மட்டும் இல்லை வேறு எந்த நடிக்கணுமே தமிழனை காப்பதுறேன்னு சொம்பு தூக்கிக்கொண்டு வர தேவையில்லை என்றே solliyirukkirom.

விஜய் ஒரு சுயநலக்காரர் என்பதை சொல்லவே அப்ப எல்லாம் வாய்கிழிய பேசுன இப்ப ஏன் பேசவில்லை என்று கேட்டிருந்தேன் ...

சப்பா எத்தனை பேருக்குதான் சொல்லுறது ... ஒரு அஜித் ரசிகன் பார்த்து பொறாமை படும் அளவுக்கு விஜய் வொர்த் இல்லை என்றுதான் சொல்லியிர்க்கிறேன் ... ஆனால் சினிமாவில் நடித்துவிட்டு சி எம் கனவு காணும் எவனையும் ஓட ஓட விரட்ட எல்லா தமிழனுக்கும் உரிமை உண்டு























hulu, pandora, limewire

"ராஜா" said...

அஜித் மலையாளி என்று துரத்திவிட்டு விசையை சி எம் ஆக்கிவிடுவோம் என்று சொல்லுகிறீர்களோ? இந்த பதிவில் நான் அஜித் அவர்களை இழுக்கவே இல்லையே .. விஜயின் அரசியல் நடவடிக்கைகள் சரியா தவறா என்றே கேட்டிருந்தேன் .. மனசாட்சியோடு சொல்லுங்கள் அவருக்கும் அவர் அப்பனுக்கும் அரசியலுக்கு வரும் தகுதி இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?





















ares, pandora, limewire

"ராஜா" said...

உங்களை போன்ற அவரது ரசிகர்கள் கண்மூடித்தனமாக அவரை ஆதரிப்பதால்தானே அவரும் அவர் அப்பனும் அரசியலில் நுழைந்து ஆட்சியை பிடிக்கும் ஆசையோடு அலைகிறார்கள். இதை உங்களால் உணர்ந்து கொள்ளவே முடியவில்லையா?

Anonymous said...

super post nanba..
To "evano oruvan" Ajith is not malayali now he is asking his daughter to call him as "appa" not dad.. and Ajith is not influencing his fans for his own growth in politics.. aagave evano oruvane vai vidadhe by Aayirathil Oruvan..

Vikram Joshi said...

ommala sunniya mooditu poonga da thevidiya pasangala


kadithan ezhuthura moonchiapaaru

SURESHKRISHNA said...

vijay worth illana....
aparam enna ma.......u nayea vijay ku ivalo periya letter...
itha polapilama eluthuna nienga thaan boss worth ilaa...

sathya said...

இப்ப இருக்குற அரசியல்வாதிக்கு என்ன தகுதி இருக்குது. மக்கள் யராவது புதுசா வரணும் னு எதிர்பார்க்காராங்க!! உங்க ரஜினி வரமாட்டார் னு தெரியுது.. புதுசா நீங்க வந்தா கூட நான் ஸபோர்ட் பண்ணுவேன்... இப்ப இருக்குற குப்பைகளுக்கு என்ன தகுதி இருக்குது!!!!!

binn said...

I wasted my 15 mins by reading this worthless stupid post...

ha ha we cleraly understood that you are ajith fan..LOL

kk said...

people...please understand whether it is written by a vijay fan or ajith fan, it does not matter. Whatever matters is the content written here. So just think about it. Its so true and we as responsible citizens should understand what will be the consequences if these actors are allowed to capture power. They give such kind of speeches only for the sake of publicity. "ulla urichi paartha verum vengayam thaan intha nadiganunga ellam".
Let us see the films, enjoy them and if they contain any social message lets follow it but dont follow the actor who said that message. Because they will say good and do good only in films and not in real life(exceptions are there but they are very rare cases).
As someone already correctly said that our state people blindly follow the actors as if they are gods. This should change for our state's and society's well being.
Thats all. Please forgive me if I have hurt anyone by my post.

GOUTHAM said...

excellent bro.. Nalla criticism. ellarum keka ninaikira kelviya supera ketrukinga.
keep up the work..

Unknown said...

Hello
Mr.Raja
Wat u achieved up to now..before writing others just think of ur self..least he done some help to other...wat u done? u said i m not jealous about vijay but from your words clearly understand u r jealous..if ur not tolerate his growth just go and die..dont write about others

Anonymous said...

raja avargalae mullaiperiyar prachanai arasiyalum,cinemavayum ullae kondu varaatheerkal ithu tamilnadu makkalin vaalvathara pirachanaai.

*ungalu vijayai pidikkavittal avarin padathai pattri vimarsanam seiyungal.avar seiyum uthavigalai vimarsikka ungalu thaguthi illai.

** ungallal mudinthaal uyarthungall illaiyennel thalthividartheergal.
TAMILAN uyarthiyae vaalthavaan

karthick said...

yen bossu neenga sonna points ellam ok thanuga..ana atha eppadi ella paya pullaigalum oruthanaye(vijay) ilukureenga..unga kannuku vera yaarum theriya maatangalo..avlo periya tamil vathi nee na recent ah oru video you tube la ula varuthu suriya avar thambi karthi pathi..agaram nu vachukittu samuga sevai seirom nu solranga avanga pesurathai video la pathutu pesunaga.. atha ellam pakaa mateenga pola...naan yaaroda rasiganum kidayathu...neenga pesurathu thappu...oruthanai mattum solrathu athoda thappu...vijay pidikathu na ipadi ellam kilambuveengala.......

Sarwan said...

I had read the document which u shared about Vijay, and i would not accept all.Be practical boss, come out with good reasons which is suitable in current situations. You know something he is social worker who interested in politics and want to become to a good politician in the future but think about the one who is a Current CM and X-CM and also think what they had did on this current issue about Mullai Periyaru DAM. Moreover nobody understood about this issue at all. It is not problem related to sharing water from the DAM, it is somethink very crucial among the politics between two Government. So my request is first go and check the details about this issue and then start comment on others. I wont written this as a Vijay FAN ok as a person who know more about this issue i worte this comment.

vijaykar said...

BOss.. ennana sonnalum namma makkal tiruntha mantanga.. Try ur best

Jesurajaa said...

Hello boss,

எல்லாரும் ஒரு விசயத்தை மறந்துட்டீங்களே.... விஜயின் மௌனத்திற்கு இன்னொரு முக்கியமான காரணம் இருக்கு தலைவா.....

எல்லாரும் "Jos Alukkas" விளம்பரத்த பாத்திருப்பீங்கன்னு நெனைக்கிறேன்... அது யாரோட கடை-னு தெரியுமா.......

ஆம்... அது கேரளாகாரங்க கடையேதான்.... விஜய் எதாவது கேரளாவுக்கு எதிரா பேசுனா, விளம்பரத்துல இருந்து வர்ற வருமானம் போய்டுமே.... அத யார் குடுப்பா... வர்ற வருமானத்த எதுக்கு விடனும் பாஸ்....

அது மட்டும் இல்ல... "Kalyan Jewellers", "Joy Alukkas" ... இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்...
அவன் அவன் பிரச்சனை அவனவனுக்கு....

Tamilan15789 said...

நீ மட்டும் என் கைல கிடைச்சாய் மவனே கைமா தான் நீ அஜித் ரசிகனா இருந்திட்டுப்போ ஆனால் விஜயையப்பற்றி பேச எந்தவித உரிமையும் உமக்கு இல்லை.
அஜித் எனா செய்தார் என்று நான் சொல்லவோ?
அவர் ஒருவனுக்கு மருத்துவ செலவுக்கு (விஜயகாந்த் குடுக்காதவனுக்கு) செக் குடுத்திட்டு இதை பத்திரிகைக்கு சொல்லவேண்டாம் என்டிட்டு அவரே சொல்லி அடுத்தநாள் பத்திரிக்கை இன்டர்நெட் என்று எல்லாத்திலையும் பிரசுரித்தவர் தானே
எங்களுக்கும் எல்லாம் தெரியும் பட் நாங்கள் வெளிப்படுத்தமாட்டம்.

"ராஜா" said...

@ gowtham
நன்றி

@ ஜோன்

உங்க தளபதி என்ன சாதித்திவிட்டார் என்று அவர்மேல் எனக்கு பொறாமை என்று சொல்கிறீர்கள் ... தயவுசெய்து என்னுடைய இந்த சந்தேகத்தை போக்க நல்ல பதிலாக யோசித்து சொல்லவும்

@ கெவின்

//அவர் செய்யும் உதவிகள் ...

அப்படியா? எப்ப? எங்க? யாருக்கு? சொல்லவேயில்லை ...

@ கார்த்திக்

உங்க கேள்வியிலேயே பதில் இருக்கு ... கார்த்தி மற்றும் வேறு சிலர் (ஆர்யா) இவர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்து சி எம் கனவு காண்பவர்கள் இல்லையே ? நாளைக்கே அவர்களுக்கும் இப்படிப்பட்ட ஆசைகள் முளைத்தால் நான் மட்டும் இல்லை பதிவுலகமே கிழித்து தொங்கவிடும் .. இப்பொழுது உங்க தளபதியை நாரடிப்பதை போல ....

@ சர்வான்

முல்லை பெரியாறு சம்பந்தமாக நான் நாளைக்கு ஒரு வீடியோ என் பதிவில் வெளியிடுகிறேன் .. முடிந்தால் பார்த்து கமெண்ட் போடுங்கள் ...

@ விஜய்கர் , ஜேசுராஜ்

நன்றி நண்பர்களே ...

@ பார்த்திபன்

யோவ் .. உன்னை மாதிரி ஆளுங்களை திருத்தவே முடியாதுன்னு கடைசி பத்தியில சொல்லியுருக்கிரேனே அது உண்மைதான்னு உன் கமெண்ட் நிரூபித்து விட்டது... அஜித் நான் இவ்வளவு உதவி பண்ணியிருக்கேன் எனக்கும் எங்க அப்பனுக்கும் கட்சி ஆரம்பிச்சவுடனே ஒட்டு போடுங்கன்னு ஒட்டு பொறுக்குனாரா இதை வைத்து?... என்னது கைமா பண்ணிடுவியா? பாத்து சூதானமா பேசு இல்லை சூ .... அறுத்திடுவோம்...

sri said...
This comment has been removed by a blog administrator.
Karthikeyan said...

எல்லோரும் கும்மியடித்து விட்டீர்கள். டாக்டர் எக்கேடோ கெட்டுப்போகட்டும். நமக்கு இந்த பிரச்சனை (பெரியாறு பிரச்சனையை சொன்னேன்) சுமூகமாக தீர்க்கப்படனும்னு வேண்டிக்குவோம்.

Divya said...

Thala always mass dhan. Adhukkaga vijay pathi ivvalo mosama pesanumnu illaye. i'm also ajith fan. So andha rightsla dhan brother solren. Mathavangala pathi naama comment panna venam. Avangavangala pathi avangalukke theriyum.

Yoganathan.N said...

To all Dr's visuladichaan kunjus who posted comments in this topic:

First of all, who are you people to ask or 'advise' Mr.Raja what to write and what not to write. This is his own blog and he has all the rights in the whole wide world to write what he wish.
Nesides, he posted a 'sensible' post. Of course, you guys can never understand the points he's trying to convey, Dr Fans aachE... If your hero is really a 'saint' as you guys claim, why is he keeping mum on this issue. He did organise lot's of rallies in the past and even gone to an extent to openly support and voice out his stand. What happened now? Is your hero suffering from Amnesia? It's true, actors can't solve a damn thing on these kind of issues. It just irks common men when people like your hero miuses his cinema image (?) for his own benefits.
இதை கேட்டால், அஜித் மலயாளி, ரஜினி கன்னடிகா என்று வழக்கம் போல ஏதேதோ பேசி வாதத்தை திசை திருப்ப வேண்டியது...
Only Dr and his Fans Possible :salute:

RESO said...

The present leaders of various parties in Tamilnadu are from cinema, they done nothing other than power cut, increasing unemployment, increasing cost of vegetables, milk, bus tickets, etc. they are all not interested on welfare of us(tamilians). They made all our daily basic needs very costly.

They live for themselves, we live for ourselves. They are also fellow human beings. We are not so perfect to blame or criticize any other human. They are talented in acting, and they demanding crores for their talent and market. They only act like a freedom fighter in a film, not live a life as a freedom fighter. Don't waste your time behind any of the cinema actors who act like beggar or politician or superhero just for money. They can act in a way that they make you to believe that they are great leaders. Enjoy their movies but don't be foolish to give your future in the hands of any mass heroes like rajni, kamal, ajith, vijay, surya.......

be a big fan for your favourite maasive hero, but don't fight for them.

your life is yours friends, live for you..............

"ராஜா" said...
This comment has been removed by the author.
"ராஜா" said...
This comment has been removed by the author.
கலையன்பன் said...

தாக்கு தாக்கு தாக்கு

parthi said...

dey kirukku,,,,velaya paru da,,,,try to get hits by your own,,,ajith-kku sombu thokatha,,,

Durgeshwaran said...

சகோதரரே இது அஜித் ரசிகர்களுக்கான ஒரு தளமா என்ன ?.. அப்படி நீங்கள் நல்லது சொல்ல நினைத்திருந்தால் " அஜீத் தன்னை வெளிபடுத்திக்கொள்வதில்லை" என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தி நல்லவர், வல்லவர், திறமை சாலி, தமிழகத்திலேயே எல்லா தகுதியும் உள்ள ஒரே ஒருவர் அஜித் அவர்களை ஏன் சுட்டி காட்ட வேண்டும்.. சினிமா காரன் தான் அனைவருக்கும் ஊறுகாயா ????.. இந்த பதிவு என்னை கவரவில்லை நண்பரே!!!!

"ராஜா" said...

@Durgeshwaran

வாங்க நண்பா . நான் அப்படி சொல்ல காரணம் நான் விசையை பற்றி என்ன எழுதினாலும் உங்க ஆளு அஜித்தும் அப்படித்தானே என்று சிலர் சண்டைக்கு வருவார்கள் .. அவர்களுக்கு முதலிலேயே பதில் கொடுக்கத்தான் அந்த வரியை இணைத்தேன் .. மற்றபடி அதுக்கு நீங்கள் இப்படியெல்லாம் புது அர்த்தம் கொடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை

"ராஜா" said...

//சகோதரரே இது அஜித் ரசிகர்களுக்கான ஒரு தளமா என்ன ?..

இது ஒரு அஜித் ரசிகனின் தளம் . ஆனால் அஜித் மட்டுமே இங்கு பிரதானம் கிடையாது

Wtm said...

எல்லாம் சரிதான், ஆனால் இளையதளபதி Dr.ஜோசப் விஜய் RC.Christian பறையன் தானே

LinkWithin

Related Posts with Thumbnails