Followers

Copyright

QRCode

Saturday, March 27, 2010

குண்டு வக்கிரவன எல்லாம் விட்டிடுங்க....நம் நாட்டில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஒரு கனவு வாழ்கையில ஒருதடவையாது வெளிநாடு பயணம் போகணும் அப்படிங்கிறது... அதுவும் என்ன மாதிரி கிராமத்தில பிறந்து வளர்ந்த பசங்களுக்கு விமானத்த பாக்குறதே ஒரு கனவு மாதிரி பிரமிப்பா இருக்கும் ... வானத்துல சிறுசா ஒரு புள்ளியா சத்தம் கொடுத்துகிட்டே பறந்துகிட்டு இருக்குற ஒரு விமானத்த அது கண்ணுக்கு தெரியிற வர தரையில தொரத்திக்கிட்டே மூட்சிரைக்க எத்தன தடவ ஓடியிருப்போம்... நம்ம பாத்த அந்த விமானத்த பத்தி அத பாக்காம போன நண்பன்கிட்ட எப்படி எல்லாம் பிரமிப்பா அதோட பிரமாண்டமான சத்தத்தையும் வேகத்தையும் சொல்லிருப்போம்....


அந்த வயசுல எப்பாவாது மதுர பக்கம் பஸ்சுல போனா ஏர்போர்ட் தாண்டி போறப்ப அங்க நிக்கிற விமானத்த ரொம்ப நெருக்கமா பாத்துட்டா அன்னைக்கி இரவு முழுவதும் தூக்கமே வராது , அப்பாகிட்ட விமானத்த பத்தி நெறைய சந்தேகம் கேட்டுகிட்டே அவரோட தூக்கத்தையும் கெடுத்துகிட்டு இருந்திருப்போம்... எப்பப்பா என்ன விமானத்துல கூட்டி கிட்டு போவேன்னு ?கேட்டா , நீ பெரிய பையன் ஆகி நல்ல வேலைக்கி போய் நல்லா சம்பாதிச்சி என்னையும் அம்மாவையும் உன் தம்பியையும் கூட்டிடு போடான்னு அவர் சொல்லுறப்ப இதுக்காகவாது நல்லா படிச்சி நல்ல வேலைக்கி போகணும்னு மனசு ஆசைபடும் ....

இப்ப நல்லா (ஓரளவுக்காது ) படிச்சி ஒரு நல்ல வேலைக்கி வந்தாச்சி, நான் வேல பாக்குற இடத்துல ஒரு நாள் ஒரு சர்குலர் வந்தது , மே மாதம் ஒரு வாரம் சிங்கப்பூர் ட்ரிப் , விருபபட்டவங்க வரலாம் , எல்லா ஏற்பாடுகளும் நிர்வாகம் பாத்துக்கிடும் , பயண செலவு மட்டும் அவரவர் பார்த்து கொள்ள வேண்டும் என்று , நான் என் நீண்ட நாள் கனவு நிறைவேற போகும் சந்தோஷத்தில் உடனே வீட்டிற்கு போன் செய்து கேட்டேன் , என் அப்பாவும் அம்மாவும் அலுவலக பணிகள் இருக்கும் என்பதால் வர இயலாது நீயும் தம்பியும் போயிட்டு வாங்கடா என்று சொன்னார்கள் , என் தம்பியிடம் போன் செய்து கேட்டேன் அவன் மே மாதம் எனக்கு கம்பெனியில் ஒரு வாரம் விடுமுறை தருவார்கள் , நானும் வருகிறேன் என்று சொல்லி விட்டான் , நானும் இங்கு என் பெயரையும் என் தம்பி பெயரையும் கொடுத்து விட்டேன்.

பாஸ்போர்ட் இல்லாதவர்கள் மார்ச் மாத இறுதிக்குள் தந்து விட வேண்டும், விசா வாங்க எளிதாய் இருக்கும் என்று சொல்லி இருந்தார்கள் , என்னிடம் பாஸ்போர்ட் இல்லாத காரணத்தினால் ஜனவரி மாதம் எங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க சென்றேன் .

அங்கு நிறைய agentகள் என்னிடம் பேரம் பேசினார்கள் , ஒருவர் ரெண்டாயிரம் மட்டும் கொடுங்கள் பத்தே நாளில் தக்கல் இல்லாமல் சாதா விண்ணப்பத்தில் நான் பாஸ்போர்ட் எடுத்து தருகிறேன் என்று கூறினான், என்னுடன் என் நண்பன் ஒருவன் வந்து இருந்தான் அவனிடம் ஒரு முக்கியமான ஆவணம் இல்லை , எனவே அவன் அந்த ஏஜென்டிடம் விசாரித்தான் , கூட ஒரு ஆயிரம் செலவாகும் என்று பதில் வந்தது அவனும் சரி என்று கூறி விட்டான்...

இப்பொழுதெல்லாம் பாஸ்போர்ட் விண்ணபித்த நாற்பது நாட்களுக்குள் வந்து விடும் என்பதால் நான் நேரடியாக விண்ணபித்து கொள்ளலாம் என்று சொல்லி விட்டேன் , பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள ஒரு கடையில் ஆன்லைன் வசதி உள்ளது என்று அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவர் கூறினார் அந்த கடைக்கே சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொண்டு வந்து கொடுத்தேன் .

அந்த அலுவலகத்தில் பாஸ்போர்ட் விண்ணபிக்க வரும் நபர்களின் விண்ணபத்தையும் அவர்கள் கொண்டு வந்திருக்கும் ஆவணங்களையும் சரி பார்க்க ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டு இருந்தார் அவர் வேலையே தேவையான எல்லா ஆவணங்களும் உள்ளதா என்று சரி பார்ப்பது மட்டுமே... ஏதேனும் இல்லாமல் இருந்தால் அவரே சொல்லி விடுவார் நாம் அடுத்த நாள் வந்து நம் விண்ணபத்தை அந்த ஆவணத்துடன் கொடுத்து கொள்ளலாம்...

என்னுடைய விண்ணபதையும் சான்றிதல்களையும் சரிபார்த்த அலுவலர் அனைத்தும் சரியாக இருக்கிறது,, நாங்கள் இன்றே இந்த விண்ணப்பத்தை மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து விடுகிறோம் இன்னும் முப்பது நாட்களில் உங்களுக்கு பாஸ்போர்ட் வந்து விடும் என்று கூறினார் ... நானும் மிகுந்த சந்தோசத்துடன் வந்து விட்டேன் ...

விண்ணபித்த பத்து நாளில் போலீஸ் நிலையத்தில் இருந்து போன் வந்தது for police verification, அவர்கள் விசாரித்து விட்டு வங்க வேண்டியதை வாங்கி விட்டு , நாளைக்கே verification முடித்து அனுப்பி விடுகிறோம் என்று சொல்லி விட்டார்கள் , அடுத்த இரண்டாம் நாள் எனக்கு பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து SMS வந்தது police verification completed, passport under progress என்று , சரி எல்லாம் முடிந்து விட்டது இன்னும் ஒரு வாரத்தில் பாஸ்போர்ட் வந்து விடும் என்று நினைத்திருந்தேன்..

ஆனால் ஒரு மாதம் ஓடி விட்டது எனக்கு பாஸ்போர்ட் வரவில்லை, அப்பொழுதுதான் என்னுடைய விண்ணப்பத்தின் online status பார்த்தேன் அதில் நான் வேலை பார்க்கும் இடத்தில இருந்து சான்றிதழ் வாங்கி தரவில்லை என்று இருந்தது , என்னடா இது வம்பா போச்சி என்று அடுத்த நாளே நான் வேலை பார்க்கும் இடத்தில இருந்து சான்றிதழ் வாங்கி கொண்டு மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் சென்றேன் .

அங்கெ வெளியே வெயிலில் இரண்டு மணி நேரம் கியூவில் நின்று விட்டு பிறகுதான் உள்ளே போக முடிந்தது , தினமும் நூற்றுகணக்கான பேர் வெயிலில் ரெண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் வரிசையில் நிற்கும் இடத்தில ஒரு கூரை கூட இல்லை , நான் உள்ளே சென்ற வுடன் என்னை inquiry கௌண்டரில் வெயிட் பண்ண சொன்னார்கள் , அந்த கௌண்டரில்ஒரு மணி நேரமாக எந்த அலுவலரும் வர வில்லை

பின்னர் ஒருவர் வந்தார் அவரிடம் நான் நடந்ததை கூறி நான் வாங்கி வந்த சான்றிதழையும் காண்பித்தேன் , ஆனால் அவர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து இது சம்பந்தமாக உங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தோமே அதை எங்கே என்று கேட்டார், நான் எனக்கு எதுவும் கடிதம் வரவில்லையே என்று கூறினேன், உடனே அவர் என்னுடைய முகவரியை வாசித்து காட்டி சரி பார்த்து கொண்டார். பின் இந்த முகவரிக்கு மார்ச் நான்காம் தேதியே ஒரு கடிதம் அனுப்பி விட்டோம் அதை நீங்கள் கொண்டு வந்து காட்டினால்தான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என்று சொல்லி விட்டார்(நான் சென்று இருந்தது மார்ச் 16 ஆம் தேதி), நான் கையோடு எடுத்து போய் இருந்த என்னுடைய விண்ணப்பத்தின் online satusஐ காட்டினேன் , அவர் இதெல்லாம் செல்லாது அந்த கடிதம்தான் வேண்டும் என்று சொல்லி விட்டு அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டார்...

அவர்கள் அந்த கடிதத்தை நான்காம் தேதியே அனுப்பி இருந்தால் எனக்கு கண்டிப்பாய் இரண்டு நாட்களுக்குள் கிடைத்திருக்கும் , ஒருவேளை அவர்கள் முகவரி தப்பாய் அனுப்பி இருந்தால் அவர்களுக்கு கடிதம் ஒரு வாரத்திற்குள் திரும்பி வந்திருக்கும் , இரண்டுமே நடக்க விலை , அவர்கள் கண்டிப்பாய் கடிதம் அனுப்பி இருக்க மாட்டார்கள்...

மீண்டும் அந்த கடிதம் எனக்கு அனுப்பப்படுமா என்று நான் கேட்டேன் , அவர் ஒரு request கடிதம் எழுதி கொடுங்கள் அடுத்த மாதம் முதல் வாரம் நாங்கள் உங்களுக்கு கடிதம் அனுப்பி வைப்போம் என்று கூறினார்... அதற்குள் எனக்கு பாஸ்போர்ட் சமர்பிப்பதற்கான கால அவகாசம் முடிந்து விடும் வேறு வழியே இல்லையா என்று அவரிடம் கேட்டேன் அவர் இதுதான் ஒரே வழி என்று கூறி விட்டு சென்று விட்டார்... ஒரு கடிதத்தினால் என்னுடைய சிங்கப்பூர் பயணம் ரத்தான வருத்தத்தில் அவர் கேட்ட request கடிதத்தை எழுதி கொடுத்து விட்டு வந்து விட்டேன் ... என்னுடன் விண்ணபித்த அந்த நண்பனுக்கு சொல்லியதை போலவே ஒரு ஆவணம் இல்லாமலே பத்தே நாளில் பாஸ்போர்ட் வந்து விட்டது..

எனக்கு என்ன சந்தேகம் என்றால் நான் முதல் முறை பாஸ்போர்ட் விண்ணபித்த அலுவலகத்தில் என்னுடைய ஆவணங்களைஎல்லாம் சரி பார்த்த அந்த அலுவலர் முதலிலேயே சொல்லி இருந்தால் அன்றே என்னுடைய வேலை பார்பதற்கான அந்த சான்றிதழை கொடுத்து இருப்பேன் , பிரச்சனை இல்லாமலே பாஸ்போர்ட் கிடைத்திருக்கும் , அவர் தேவை இல்லை என்று நினைத்த ஒரு ஆவணத்தை மேலே உள்ள அதிகாரிகள் தேவை என்று சொல்லுகிறார்கள் ஏன் இந்த குழப்பம்? இதனால் பாதிக்கபடுவது மக்கள்தானே? ...

பாஸ்போர்ட் அலுவலக இணைய முகவரியில் நம்முடைய விண்ணப்பத்தின் தற்போதைய நிலைமையை தெரிந்து கொள்ளுவதற்கான வசதியை வைத்து இருக்கின்றனர் , ஆனால் அதை மட்டும் வைத்து நாம் எதுவும் செய்ய முடியாது ... அவர்கள் கைப்பட நமக்கு அனுப்பிய கடிதத்தை கொண்டு மட்டுமே நாம் அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் , அப்படி என்றால் அந்த வசதி எதற்கு? சரி அவர்கள் கடிதமாவது உடனே அனுப்ப வேண்டாமா?

எத்தனையோ படிப்பறிவில்லா மக்கள் வெளிநாட்டில் கூலி வேலை பார்க்க பாஸ்போர்ட் எடுக்க விண்ணபித்து உள்ளனர், அவர்களுக்கு இந்த வசதி தெரிவதில்லை, அவர்களுக்கு கடிதம் அனுப்பினால் மட்டுமே நிலவரம் தெரிய வரும் , எத்தனையோ பேர் எவ்வளவு அவசரத்தில் இருப்பார்கள் இந்த பாஸ்போர்ட்க்காக? இப்படி மெத்தனமாக இருந்தால் அவர்களுக்கு எவ்வளவு பெரிய இழப்புகள் ஏற்படும்?

பாஸ்போர்ட் வழங்குவது என்பது பெரிய சிக்கலான காரியம் அதில் நாட்டின் பாதுகாப்பே அடங்கி உள்ளது என்று நீங்கள் கூறினால் உங்களுக்கு பதில் கூற எனக்கு ஒரு படத்தில் விவேக் பேசும் " இத மட்டும் கரக்டா சுடுங்கப்பா,, ஆனா வீரப்பன் வந்தால் மட்டும் விட்டிடுங்க"( அப்ப வீரப்பன் சாகவில்லை)" என்ற வசனம்தான் ஞாபகம் வருகிறது ,

"எங்களையெல்லாம் இப்படி அலைய விடுங்கப்பா , ஆனா குண்டு வைக்கிறவன மட்டும் கரக்டா விமானத்துல ஏத்திகோங்க"

(புடிச்சிருந்தா வோட்டு போடுங்க....பிடிச்சிருந்தாலும் பிடிக்கலைனாலும் கமெண்ட் போடுங்க)

Wednesday, March 24, 2010

வெறி தனமா பாராட்டுவோர் சங்கம் ....தீராட விளையாட்டு பிள்ளை வெற்றி விழா கொண்டாட்டம் அப்படின்னு இன்னும் ஒரு ரெண்டு மாசத்துல ஒரு நியூஸ் வந்துச்சினா நீங்க சிரிப்பீங்களா மாட்டீங்களா , அப்படி ஒரு காமெடி ஒன்னு இப்ப நடந்துகிட்டு இருக்கு ....


சென்ற வருடம் தீபாவளிக்கு வெளி வந்து வசூலில் சக்கை போடு போட்டு விஜயின் வேட்டைக்காரனையே மிஞ்சி விட்ட(மொக்கையில பாஸ்) ஆதவன் என்ற மொக்க படத்துக்கு வெள்ளி விழா கொண்டாடபோராங்கலாம்..


என்னடா இது போன வருசம்தான் மக்களா பாத்து ஓட வச்ச நெறைய படங்கள் இருக்கே, அதுக்கெல்லாம் விழா எடுக்காம நடிச்சவனும் எடுத்தவனும் காச போட்டு ஓட வைக்கிற இந்த மாதிரி படத்துக்கு ஏன் விழா எடுக்குரானுகன்னு யோசிச்சி பாத்தா இந்த படத்த எடுத்தவர் நம்ம உதயநிதி ஸ்டாலின் ,


அவர் யாரு? எந்த பரம்பர? மத்தவங்கள பாராட்டுனதுக்காக தனக்கு ஒரு பாராட்டு விழா வச்சி அதுல நமிதா தொடையையும் ஸ்ரேயா இடுப்பையும் நயன்தாரா கழுத்தையும் ரசிச்சி ரசிச்சி ஜொள்ளு விட்ட நம்ம தன்மான தமிழ் இன தலைவரின் பேரனல அவரு ...


இவ்வளவு காசு போட்டு ஒரு படம் எடுத்துருக்காரு மக்கள்தான் படத்த பாராட்டல அட்லீஸ்ட் நம்மள நாமளே பாராட்டிகுவோம்மே நம்ம தாத்தா மாதிரி ... இவருக்கு இதெல்லாம் புதுசா என்ன? ஏற்கனவே குருவின்னு ஒரு படம் .... அதுவா ஓடி இருந்தா பத்து நாள் கூட ஓடிருக்காது ,இவனுக காசு கொடுத்து ஓட்டியும் நாப்பது நாளுக்கு மேல இழுக்கல படம் , அப்படி பட்ட ஒரு பெரிய காவிய படைப்புக்கு இருநூறாவது நாள் விழா எடுத்து அதுல தன்ன எல்லாரும் புகழ்ந்து பேசுறத அவர் தாத்தா மாதிரியே கேட்டு பரவச நிலை அடைந்து கொண்டு இருந்தாரு ... அதுல நம்ம தளபதி அண்ணன் விஜய் அவர்களும் அவரின் பிரச்சார பீரங்கி சந்திர சேகர் அவர்களும் பண்ணிய காமெடி உலகறிந்தது ....

ஆனா ஒன்னு இவனுக இப்படி தனக்கு தானே பாராட்டு விழா எடுத்துகிட்டு இருக்கிறதுla நமக்கு ஒரு நன்மை உண்டு அப்பப்ப நடிகைகளின் அரைகுறை தரிசனம் நமக்கு கெடைக்கும் ....


இதுல எனக்கு ஒரு வருத்தம் என்னனா இதே பாராட்டு பரம்பரையில வந்தவருதான் கலாநிதி மாறன் அவரு மாசத்துக்கு ஒரு படம் ரீலீஸ் பண்ணிக்கிட்டு இருக்காரு ஆனா எதுவும் ஓடாது ... அவரு ஏன் அவர் எடுக்குற படங்களுக்கு விழா எடுக்க மாட்டேங்கிறாரு?


ஓடுற படங்களுக்குதான் பாராட்டு விழா எடுக்கணுமா என்ன? இது தமிழ் நாடுப்பா ... நீங்க என்ன சொன்னாலும் நம்புறதுக்கு ஆளு இருக்கு இங்க ... நீங்களும் உங்க படத்துக்கு எல்லாம் பாராட்டு விழா எடுத்தீங்கன்னா , நாங்க கண்ணுக்கு குளிர்ச்சியா மாச மாசம் ரெகார்ட் டான்ஸ் பாத்துகிடுவோம் ....


அப்படியே அதுல உங்க தாத்தாவையும் விழா நாயகனா உக்கார இடம் கொடுத்தா அவரும் கண்ணுக்கு குளிர்ச்சியா பாத்துகிடுவாரு.... உங்களுக்கும் அவர சந்தோஷ படுத்துன புண்ணியம் கெடைக்கும் ... பாவம் அவரு எந்த விழாவும் எடுக்காம ரெகார்ட் டான்ஸ் பாக்க முடியாமா ரொம்ப கஷ்டப்பட்டு போய் கடைசியில சியர் லீதேர்சொட இடுப்ப பாக்க சேப்பாக்கம் போக வேண்டிய நிலைமை அவருக்கு...

சீக்கிரம் உங்க அந்தபுற அழகிகளைஎல்லாம் ஒன்னு திரட்டி பாராட்டு விழா, இல்ல வெற்றி விழான்கிற பேருல ஒரு களியாட்டத போடுங்கப்பா ... நாங்களும் பாத்துகிடுவோம்ல ... எதோ உங்களுக்கு ஓட்டு போட்டதுக்கு எங்களுக்கு இந்த சந்தொசமாவது கெடைக்கும்ல....சரி இப்படி குருவி ஆதவனுக்கு எல்லாம் வெற்றி விழா கொண்டாடுறீங்களே நாளைக்கு உங்களுக்கு நெஜமாவே ஒரு படம் பெரிய ஹிட் ஆகி அதுக்கு நீங்க விழா எடுத்தால் மக்கள் அதை நம்புவாங்களா?

(புடிச்சிருந்தா வோட்டு போடுங்க....பிடிச்சிருந்தாலும் பிடிக்கலைனாலும் கமெண்ட் போடுங்க)

Monday, March 22, 2010

இட ஒதுக்கீடும்.... ஹைதராபாத் ரேணிகுண்டாவும்......

பெண்களுக்கு 33 % இட ஒதுக்கீடு தந்தாலும் தந்தாங்க, பொண்ணுங்க இம்ச தாங்க முடியல.... இப்பவே எல்லா இடத்துலயும் அவங்கதான்.. ஒரு பையனால நிம்மதியா பஸ்சுல போக முடியுமா சென்னையில? எல்லா சீட்டும் பிரீயாதான் இருக்கும் ஆனா இவனால ஒக்கார முடியாது... கேட்டா அது லேடீஸ் சீட்டாம்... சரி உக்காரதான் முடியல ஓரமா நின்னுகிட்டாது போவோம்னு நின்னா தம்பி லேடீஸ் சீட் பக்கத்துல நிக்காத கொஞ்சம் தள்ளி வா அப்பிடின்னு நடத்துனர் சத்தம் போடுவாரு... சரிப்பான்னு பஸ் நடுவுல நின்னா அடுத்த ஸ்டாப்புல காலேஜ் பொண்ணுங்க திமு திமுன்னு ஏறி வருவாங்க.. உடனே நம்ம பெண்கள் காப்பாளர் நடத்துனர் , தம்பி அதான் பொண்ணுங்க வருராங்கள கொஞ்சம் தள்ளி அவங்களுக்கு இடம் விட வேண்டியதுதான அப்படின்னு நமக்கு கடுப்ப கிளப்புவாரு... போயா அப்படின்னு நாம புட் போர்டு பக்கம் போய் நின்னோம்னா "சாவு கிராக்கி" மேல ஏறி வான்னு ஓட்டுனர் அண்ணாச்சி நமக்கு பாராட்டு பத்திரம் வாசிப்பாரு, அத கேட்டவுடனே பஸுல உக்காந்து வர்ற எவளாவது சிரிப்பாலுக , அப்ப நமக்கு வரும் பாருங்க ஒரு கோபம் கெட்ட வார்த்தையில நாலு திட்டு திட்டணும்னு தோணும் , திட்டுனா என்ன ஆகும்னு நெனச்சி பாத்தா நமக்கு கெட்ட வார்த்தைகளே மறந்து போற அளவுக்கு போலீசுகிட்ட அடி விழும்.... அவங்ககிட்ட சொல்லவா முடியும் டிரைவர் என்ன திட்டுனதுக்கும் , நான் அவள திட்டுனதுக்கும் காரணம் இந்த இட ஒதுக்கீடுதான்னு... (இப்ப பஸ்சுல மட்டும்தான் இந்த நிலைமை இனிமே எல்லா எடத்துலயும் இப்படி ஆயிடுமோ?)

               
IPl வியாபராம் நல்லா போய்கிட்டு இருக்கு மோடிக்கு.... இன்னும் புதுசா ரெண்டு அணிகள் உருவாக்கி இருக்காரு... விலைய பாத்தா ரெண்டுமே ஆயிரம் கோடி... எனக்கு இப்பதான் ஒரு விஷயம் புரியிது.... மொத IPl ல எல்லா அணிகளுமே 500 கோடிக்கும் கம்மியாதான் விலை போய் இருந்தது... இப்ப அதே மாதிரியான அணிகள் 1000 கோடி... அப்படினா 500 கோடிக்கு வாங்குனவனுக்கு இது வரைக்கும் குறைந்தபட்சம் 500 கோடி லாபம் கெடச்சிருக்கும்.... எல்லாம் யார் வீட்டு காசு .... நாம வீணா பொழுத போக்குற நேரம்தான் அவங்களுக்கு காசா மாறி கல்லாவ நெரப்புது.... முன்ன எல்லாம் ஒரு ஓவர் முடிஞ்ச பின்னாடிதான் விளம்பரம் போடுவானுக இப்ப என்னடான்னா 3 பந்துக்கு ஒருதடவ ஒரு விளம்பரம்... அதுவும் மைதானத்துல இருக்குற பெரிய டீவீயில ஓடுற விளம்பரத்த அப்படியே காட்டுறானுக ... எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க... எனக்கு இதுவரைக்கும் ஒரு கிரிக்கெட் வீரனை பார்க்கும் பொழுது நாட்டின் மானதிற்க்காக விளையாடும் ஒரு போர் வீரர்களை போலதான் தெரிந்தார்கள் ஆனால் IPL லில் அவர்களை பார்க்கும் பொழுது கிண்டி ரேசுல ஓடுற குதிரை மாதிரி ரொம்ப பாவமா தெரியிறாங்க 
என்னதான் நாம இப்படி வாய் கிழிய பேசுனாலும் போட்டிகளும் விறுவிருப்பாதான் போய்கிட்டு இருக்கு... எனக்கு முதல் ipl லில் இருந்தே டெக்கான் அணியை ரொம்ப பிடிக்கும் , காரணம் என் மனம் கவர்ந்த ரெண்டு பாட்ஸ்மென் கில்லி மற்றும் கிப்ஸ் அந்த அணியில் விளையாடுவது, டோனி இருக்கும் ஒரே காரணத்துக்காக சென்னை அணியை பிடிக்கவே செய்யாது ... டெக்கான் தொடர்ந்து மூன்று போட்டிகளில் வென்று முன்னணியில் உள்ளனர்.... வேறு எதுவும் அந்த அணியை பற்றி நான் சொல்ல பயமாக உள்ளது ... நம்ம ராசி அப்படி .... (எனக்கு "தெரிந்த" ஒரு பெண்ணின் விருப்பதிற்காக எனக்கு விஜய்யை பிடிக்கும் என்று நான் அவளிடம் (பொய்)சொன்ன நாளில் இருந்து இன்று வரை விஜய் ஒரு படம் கூட ஹிட் கொடுக்க முடியவில்லை)...


முன்ன எல்லாம் மாணவர்களுக்குள்ள சண்ட வந்ததுனா அது கண்டிப்பா சட்ட கல்லூரியாதான் இருக்கும். அதுக்கு காரணம் நம்ம அரசியல் வியாதிகள், சட்ட கல்லூரி மாணவர்களை குறி வைத்து அவர்களை தங்கள் அரசியல் பணிகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்து வந்ததுதான்... சட்ட கல்லூரி மாணவர்கள் என்றால் கண்டிப்பா ஏதாவது ஒரு அரசியல் கட்சி சார்ந்தவராகத்தான் இருப்பார்... ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு அரசியல் வியாதிகளின் உண்மை முகம் தெரிய ஆரம்பித்தவுடன் அந்த சண்டைகள் எல்லாம் குறைந்து விட்டன...

இப்பொழுது அரசியல் வியாதிகள் தங்கள் ஆதாயத்திற்கு பொறியியல் கல்லூரி மாணவர்களை பயன்படுத்த நினைகின்றனர்... அதுவும் நிகர் நிலை பல்கலைகழகங்கள் விசயத்தில் அவர்கள் மாணவர்களை நிறையவே தூண்டி விட்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர்... நான் கூற வந்த விஷயம் இது இல்லை..

நேற்று சன் செய்திகளில் பார்த்த ஒரு செய்தி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குள் நடந்த சண்டையில் நான்கு மாணவர்கள் சேர்ந்து ஒரு மாணவனை அடித்து துவைத்து உள்ளனர்.... அவன் உடம்பெல்லாம் காயங்களுடன் குருதிபுனல் கமலை போல முகமெல்லாம் வீங்கி அழுது கொண்டு இருந்தான் ... எல்லா பள்ளிகளிலும் சிறுவர்களுக்குள் சண்டை வரத்தான் செய்யும் , அது அவர்களுக்குள்ளாகவே பேசி தீர்த்து கொள்ளப்படும்... அல்லது மிஞ்சி மிஞ்சி போனால் அவர்களின் வகுப்பு ஆசிரியர் அல்லது தலைமை ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு செல்ல பட்டு ஒரு வாரமோ அல்லது இரண்டு வாரமோ suspend செய்யபட்டு பிரச்சனை முடிவுக்கு வந்து விடும் ..

ஆனால் இன்று பள்ளி மாணவர்களின் பிரச்சனை police station வந்து விட்டது அது மட்டும் இல்லாமல் ஊடகங்களிலும் அது முக்கிய செய்தியாக ஒளிபரப்பபடுகிறது... இந்த பிரச்சனையின் காரணமாக சில மாணவர்களின் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளதாம் ... எல்லாம் கலி காலம்... இன்னும் கொஞ்ச நாளுல LKG பெண்ணின் மீது திராவகம் ஊற்றிய LKG பையன் கைது!! தன் காதலை ஏற்க மறுத்ததால் பயங்கரம்னு!!! செய்து வாசிப்பாங்க நாமளும் அத கேட்டுகிட்டு டீவீயில துள்ளுவதோ இளமையோ , ரேனிகுண்டாவோ பாத்து கிட்டு இருப்போம் .. அதுக்கெல்லாம் இதுவும் ஒரு காரணம்னு யோசிக்க தெரியாமலேயே....

(புடிச்சிருந்தா வோட்டு போடுங்க....பிடிச்சிருந்தாலும் பிடிக்கலைனாலும் கமெண்ட் போடுங்க)

Monday, March 15, 2010

டாக்டர் விஜயின் அடுத்த படம்

டாக்டர் விஜயின் அடுத்த படம்.
இதில் அவர் ஒரு பைக் ரேஸர்.குருவி படத்தில் கார் ரேஸில் எப்படி ஆக்சிலேட்டர் கட் ஆனதும் அதன் வயரை பல்லால் பிடித்து இழுத்து முதல் பரிசு பெறுகிறாரோ , அதுமாதிரியான சாகச காட்சிகள் நிறைந்த படம்.ஒரு காட்சி மட்டும் சாம்பிளுக்காக.......

...

....

...

...

...

...

....

டாக்டர் விஜய் பைக் ரேஸில் கலந்துக்கொள்கிறார்...

...

....

...

...

...

...

...

...

....

...

வில்லனின் சதியால் பாதியில் பெட்ரோல் தீர்ந்துவிடுகிறது...

...

...

...

...

...

...

...

...

...

...

ஆனாலும் முதல் பரிசு வென்றுவிடுகிறார்..

...

...

...

...

....

...

...

...

....

.....

..

..

..

..

..

..

..

எப்படி?????

...

...

...

...

....

...

...

...

...

....

...

...

...

....

...

....

...

...

...

....

என்ன யூகிக்க முடியலயா? அப்ப இன்னும் கீழ போங்க.......

...

...

...

.....

....

...

...

...

...

....

...

....

...

...

....

...

...

...

...

....

...

...

...

...
 
(இது எனக்கு வந்த ஒரு இ-மெயில் .... பிடித்திருந்ததால் பதிவிடுகிறேன்.... )

Thursday, March 11, 2010

என்ன செய்ய போகிறார் தல?
ஆழ்வார் , கிரீடம் , பில்லா, ஏகன், அசல் இது தல அஜித் நடித்து வெளிவந்த சமீபத்திய ஐந்து படங்கள்.... இதில் பில்லாவை தவிர்த்து பார்த்தால் அனைத்து படங்களும் வசூலில் சாதனை பண்ணி இருந்தாலும் எதுவும் பெரிய வெற்றியை பெற இயலவில்லை (ஆழ்வார்கூட பெரிய வசூலை கொடுத்தது ... காரணம் தலைக்கு இருக்கும் மாஸ் தொடக்க வசூல்)...

ஒரு சாதாரண சினிமா ரசிகன் இந்த ஐந்து படங்களில் ஒரு படமாவது திரை அரங்கிற்கு சென்று பார்த்திருப்பானா என்பது சந்தேகமே.... கண்டிப்பாக வரலாறுவிற்கு பின்னால் ஒரு கடைநிலை தமிழ் சினிமா ரசிகன் ரசிக்கும்படியான படம் தல இன்னும் தரவில்லை ... அவர்க்கு இருக்கும் பெரிய ரசிக பட்டாளத்தில் பெரும் பகுதி அவர்கள்தான் ....

 தீனா என்ற ஒரே ஒரு மாஸ் ஹிட் கொடுததற்க்கே அவரின் ரசிகர் பலம் பல மடங்கு எகிறியது ....அதன் பின்னர் அவருக்கு அமைந்த மாஸ் ஹிட் வரலாறு .... தல ரசிகர்கள் அவரிடம் இருந்து எதிர்பார்க்கும் படங்கள் இவையே...ஒரு ரசிகனாக நான் தலையிடம் எதிர்பார்ப்பது ஒரு பெரிய கமர்சியல் ஹிட் .... நான் லட்சம் முறை தோற்றவன் என்பது தலையின் நிஜ வாழ்க்கை பஞ்ச் டயலாக் .... ஒவ்வொரு முறை தோற்கும் போது இதை சொல்லுவதை விட ஒரு பெரிய வெற்றியை கொடுத்து விட்டு தலை இதை சொன்னால் அவருக்கும் நமக்கும் பெரிய கெத்தாக இருக்கும்.... 

தலையின் முன்னாள் இப்பொழுது இருக்கும் பெரிய அச்சுருத்தல் கிராமபுரங்களில் அவரின் ரசிகர் பலம் குறைந்து கொண்டே வருவது... கடந்த மூன்று வருடங்களாய் அவர் பில்லா போன்று ஸ்டைலிஷான படங்களையே அதிக கவனத்தை செலுத்தி கொண்டு இருக்கிறார் ... ஒரு இயல்பான தமிழ்நாட்டு இளைஞனாய் அவர் எந்த படங்களிலும் தோன்றவில்லை .... கண்டிப்பாய் தல கடந்த மூன்று வருடமாய் அவர்களின் ரசனைக்கு தீனி போடவில்லை..... ஆனால் அவர்கள் இன்னமும் அஜித்தின் ரசிகன் என்ற நிலையில் இருந்து மாறாமல் இருப்பதற்கு காரணம் தலயின் மேல் உள்ள நம்பிக்கைதான்... ஆனால் அது இப்பொழுது கொஞ்சம் குறைந்து வருவது போல் ஒரு தோற்றம் உருவாக்கி வருகிறது... 

தல நினைத்தால் எந்த ஒரு இயக்குனரின் படங்களிலும் நடிக்கலாம்.... பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் அவருக்கு கேட்கும் பணத்தை கொடுத்து அவரின் கால்ஷீட் வாங்க தயாராக உள்ளனர்... காரணம் அவரின் ரசிகர்கள்... அவர் ரசிகர்கள் அவரிடம் எதிபார்ப்பது அவர்களை சந்தொசபடுத்தும் படியான ஒரு மெகா கமர்சியல் ஹிட் ... மற்ற நடிகர்களின் ரசிகர்களை போல தல பஞ்ச் வசனம் பேசினால் மட்டுமே ரசிக்கும் ரசிகர்கள் கிடையாது இவர்கள்... தலயின் நடிப்பு திறமைக்கு தீனி போட வேண்டும் .... அனைத்து ரசிகர்களும் படத்தை பார்த்து பாராட்ட வேண்டும் .... அப்படி ஒரு படம்தான் அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு... "தல எத்தனையோ இயக்குனர்கள் உன்னை வைத்து படம் பண்ண காத்து கொண்டு இருக்கிறார்கள் ,,, அவர்களில் நல்ல கதை அம்சம் கொண்ட உன் நடிப்பு திறமைக்கு தீனி போட கூடிய நல்ல கதையை தெரிவு செய்து நடியுங்கள்... மாறினால் இன்னொரு தோல்வியை தாங்கும் பக்குவம் உங்களுக்கு வேண்டுமானால் இருக்கலாம் ஆனால் எங்களுக்கு கிடையாது".... கருணை உள்ளமெல்லாம் உங்கள் நிஜ வாழ்கையில் கடைபிடித்து கொள்ளுங்கள் , சினிமா என்னும் உங்கள் தொழிலில் இனிமேலும் யார் மேலும் உள்ள கருணையின் காரணமாய் எங்களை காய வைத்து விடாதீர்கள் ... ராசு சுந்தரத்திற்கு எல்லாம் படம் பண்ணனுமா? பாருங்கள் அவருக்கு உதவ போய் நீங்கள் இக்கட்டான நிலைமையில் மாட்டி கொண்டீர்கள்... தயவு செய்து உங்கள் ரசிகர்களின் மேல் கருணை வையுங்கள்.... அவர்களின் விருப்பத்தை தெரிந்து கொண்டு அதற்க்கு ஏற்ற கதைகளை தேர்வு செய்து நடியுங்கள் தல ... தமிழ் சினிமா ரசிகனின் நெஞ்சில் இடம் பெறுவது ரொம்ப கஷ்டம் எத்தனையோ பெரிய தலைகள் அதற்க்கு முயற்சி செய்து தோற்று போய் உள்ளனர் ... ரஜினி மட்டுமே அதில் பெரிய வெற்றியை கண்டவர்... அவர் இன்னமும் அதே நிலைமையில் இருக்க காரணம் ரசிகர்களின் நாடி பிடித்து அவர்களின் ரசனை அறிந்து அதற்க்கு ஏற்ற படங்களில் நடித்ததினால் .... இந்த தலைமுறையில் ரஜினிக்கு அடுத்து ஒரு பெரிய ரசிக பட்டாளம் அமைந்து உள்ளது உங்களுக்கு மட்டுமே .... ஒவ்வொரு ரசிகனும் உங்கள் மேல் எவ்வளவு பாசம் வைத்து உள்ளான் என்பதை பல முறை நான் பார்த்து உள்ளேன்.... அதற்க்கு காரணம் உங்களுக்குள் இருக்கும் நல்ல மனிதன்... எந்த விதமான குறுக்கு வழிகளும் பயன்படுத்தாமல் வெற்றியை ருசித்தவர் நீங்கள்... அந்த வெற்றியை தக்க வைத்து கொள்ள இதுதான் சரியான தருணம்.... 

நல்ல மனிதர்கள் எப்பொழுதும் வெற்றி பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும் , ரஜினி அதற்க்கு சிறந்த உதாரணம்... நீங்களும் பெரிய வெற்றிகளை பெற வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் ... அது உங்கள் கையில்தான் உள்ளது ..... 

Friday, March 5, 2010

வேட்ட ஆரம்பம் ஆயிடுச்சிடா?

இதோ தமிழ்நாட்டை பதம் பாக்க போகும் அடுத்த பஞ்ச் தயாராகி விட்டது ...சாமாதானமா போக நான் புறா இல்லடா .... சுத்தி சுத்தி அடிக்கிற __________


இது எந்த படம்? யார் பேச போறாங்க? ...............போங்க பாஸ் இது நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனுமா?


அடுத்த வேட்ட ஆரம்பம் ஆகிடுச்சி...... அது உங்கள தாக்க வேகமா வந்துகிட்டு இருக்கு எல்லாரும் ஓடுங்க... நிக்காம ஓடுங்க..........

Wednesday, March 3, 2010

ப்ரியமுடன் ப்ரியா --- Autograph 1

அது ஒரு மாலை மயங்கும் நேரம் , ஆனா எனக்கு அது டாஸ்மாக்கில் மயங்கி கிடந்த நேரம். மூடியில இத்துனூண்டு பீர ஊத்தி நானூறு மீட்டருக்கு அப்பால வச்சாலே அந்த வாசனையில மப்பு  மண்டைக்கி ஏறி என்னால உன்ன மறக்க முடியல " ப்ரியா"ன்னு எங்க அப்பா செல்லுக்கு SMS அனுப்புற அப்புராணி பய நான் , இன்னைக்கி யாருமே துணைக்கு இல்லாம ஒரு ஹாப்பும் ரெண்டு  புல் பீரும்  அடிச்சா?

டாஸ்மாக் படிக்கட்டு பழனி மல படிக்கட்டு மாதிரி மலைப்பா தெரிய அப்டியே மயங்கி விழுந்துட்டேன்...இதுக்கெல்லாம் காரணம் அந்த நாசமா போன காதல் .... அழகா பொறந்து தொலைச்ச அந்த  ப்ரியா.... .
ப்ரியா நான் காதலிச்ச முதல் பெண் , ஆனா அவ என்ன காதலிக்கல. ஏன்னா நான் அவள காதலிச்ச விசயத்த அவகிட்ட சொல்லாமலே மறச்சி வச்சி இருந்தேன்.... 

ப்ரியானா பயம் ...எல்லாருக்கும் பயம், செருப்பால அடிப்பாங்கிற பயம். செருப்பு பிய்யிற வரைக்கும் அடிப்பா , மாசத்துக்கு எப்படியும் நாலு செருப்பு மாத்துவா . எங்க ஊரு செருப்பு கட பாயே அவ பிறந்த நாளுக்கு "எங்க குடும்பத்த வாழ வைக்கிற தெய்வமே" ன்னு போஸ்டர் அடிச்சி ஒட்டுவாரு , அந்த அளவுக்கு எங்களால அவருக்கு பிசினஸ். அவகிட்ட பேசுறதுக்கே எல்லாரும் பயப்படுவாணுக....

ஆனா அவள பாத்த மொத நாளே அந்த பாழா போன காதல் எனக்குள்ள வந்து தொலச்சிடுச்சே... எப்படி என்னோட காதல அவகிட்ட சொல்லுறதுன்னு எனக்கு புரியாம பைத்தியம் பிடிச்சி  அலைஞ்சிக்கிட்டு இருந்தேன் . அப்பத்தான் கடவுள் கணக்கு வாத்தியார் ரூபத்துல வந்தாரு.

நான் பொண்ணுகள கணக்கு பண்ணி கணக்கு பண்ணி கணக்குல பெரிய புலியாகிட்டேன்.  ப்ரியாவுக்கு அழக அதிகமா படைச்ச ஆண்டவன் அறிவ சுத்தமா வலிச்சி எடுத்துட்டான். காலாண்டுல கணக்குல பல்ப் வாங்கிட்டா, கணக்கு வாத்தி அவளுக்கு நெறைய கேள்விகள கொடுத்து , இத எல்லாம் சால்வ் பண்ணிட்டு வந்தாதான் உன்ன அடுத்த பரிட்ச எழுத விடுவோம் இல்லைன்னா அடுத்த வருசமும் நீ இங்கதான் இருக்கணும்னு அவ சால்வ் பண்ண மாட்டாங்கிற தைரியத்துல அவள அடுத்த வருசமும் சைட் அடிக்கலாம்னு ஜொள்ளு விட்டுகிட்டே சொல்லி இருக்காரு. அவளுக்கு அப்ப கடவுளா தெரிஞ்சது நான் மட்டும்தான்....

எனக்கு அது, ஆண்ட்ரோஜன் அப்பத்தான் அது வேலைய காட்ட ஆரம்பிச்ச கால கட்டம் , அதுவரைக்கும் பாத்து பயந்துகிட்டு இருந்த பள்ளிகூடத்து மிஸ்கள எல்லாம் இப்ப பாத்தா பயத்துக்கு பதிலா வேற ஏதோ தோணுது.... எதிர் வீட்டு ஆண்டி இடுப்புல கொழந்தைய தூக்கி வச்சிருந்தா ஓடி பொய் அந்த கொழந்தைய தொட்டு கொஞ்சி தூக்கி திரும்பவும் அந்த ஆண்டிகிட்டயே கொடுத்து கொழந்தைக்கு கொடுக்குற முத்தத்துல பாதிய ஆண்டிக்கும் கொடுக்குற வயசு... ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டாரா ஒத்த காலுல நின்னுகிட்டு இருந்த மனசுல , ஷகீலா அரகுற டிரஸ்சோட(சில சமயம் டிரஸ்ஸே இல்லாம ) படுக்க ஆரம்பிச்ச நேரம் .... கூட்டமே இல்லாத பஸ்ஸ விட்டுட்டு கூட்டமா இருக்குற பஸ்சுக்காக காத்துகிட்டு இருந்த மனசு... இப்படி டெண்டுல்கர் அடிக்கிற பந்து மாதிரி எல்லா திசையிலும் பறந்துகிட்டு இருந்த என் மனச இஷாந்த் ஷர்மா வீசுற பந்து மாதிரி ஒரே இடத்துல விழ வச்சவ அவதான்........ "ப்ரியா"...

(தொடர்ந்து வருவா)

Monday, March 1, 2010

விண்ணை தாண்டி வருவாயா? - திரையில் ஒரு தாஜ்மஹால்
டிஸ்கி 1:  காதல் , கவிதை , பெண்களை பற்றிய வர்ணனை என்றாலே  ஆள விட்டா போதும்டா சாமி என்று ஓடுறவரா நீங்க? கண்டிப்பா இந்த படத்த பாக்காதீங்க
பைக்குள உங்க லவ்வர உக்கார வச்சி ஊரை சுத்திகாட்ட உங்களுக்கு ரொம்ப புடிக்கும்மா ? சினிமா தியேட்டேர் ஜோடி ஜோடியா உக்காந்து ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கிற காதல் ஜோடிகள பாத்து உங்களுக்கு ஏக்கம் வருமா ? பீச்சில பார்க்குல ஒண்ணா சுத்திகிட்டு இருக்கிற பையனையும் பொண்ணையும் பாத்தா ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு பீலிங்க்ஸ் விடுற பார்ட்டியா நீங்க ? சீக்கிரம் போங்க பாஸ் நம்ம படம் இது உடனே போய் பாருங்க படத்த....

கௌதம் மேனன் இயக்கத்துல சிம்பு நடிச்சிருக்கிற இந்த படத்துல சிம்புவுக்கு ஜோடியா நம்ம த்ரிஷா நடிச்சிருக்காங்க இல்ல இல்ல வாழ்ந்து இருக்காங்க... கண்டிப்பா த்ரிஷாவுக்கு இது life time படம்... கதையெல்லாம் படத்துல கெடையாது படம் முழுவதும் காதல் காதல் காதல் மட்டும்...
த்ரிஷாவ தேடி சிம்பு கேரளா போற சீன்ல அவர சர்ச்சில சிம்பு பாத்தவுடனே சிம்புவோட சேந்து நாமளும் சந்தோசத்துல துள்ளி குதிக்கிறோம் .... அப்படி உங்களுக்கு சந்தோசம் வரலையா? பாஸ் உங்களுக்கு வயசாயிடுச்சி.... சிம்புவும் த்ரிஷாவும் ட்ரைன்ல ஒண்ணா சென்னை வர்ற சீன்... சிம்புவோட காதல ஏத்துக்கவும் முடியாம அத ஒதுக்கி தள்ளவும் முடியாம சிம்பு கொடுக்கிற முத்தங்களை எல்லாம் சந்தோசமா ஏத்துகிட்டு கடைசியில அவர பாத்து மொறைக்கிற த்ரிஷா அப்படியே இந்த காலத்து பொண்ணுங்களோட மன நிலைய பிரதிபலிசிருக்காங்க.... நின்னு போன கல்யாண வீட்டுல நைட் சிம்புவும் த்ரிஷாவும் பேசுற சீன் ஒரு கவிதை .... வாரணம் ஆயிரம் படத்துல காதல செயற்கையா சொல்லி மண்ணை கவ்வுன கௌதம் இந்த படத்துல அத யதார்த்தமா காட்டி பாக்குற நம்மையும் அத அனுபவிக்க வச்சிருக்காரு ...

சிம்பு இந்த படத்துல ரொம்ப அமைதியா வராரு... ஆனா நமக்கு சிம்புனாலே ஞாபகத்துக்கு வர்றது அவரோட ஓவரான பில்ட் அப்கள்தான்.. அமைதியான பையனா சிம்பு நம்ம மனசுல ஓட்ட மாட்டேங்கிறாரு... அவருக்கு பதிலா வேற யாரையாவது போட்டு இருக்கலாம்...

த்ரிஷா ஒவ்வொரு காட்சிளையும் ரொம்ப அழகா வராங்க.... அதும் ட்ரெயின் சீன்ல அவங்களோட முக பாவனைகள் அட்டகாசம். சிம்புவோட இருக்கனும்கிரதுக்காக ஆபீசெளையும் வீட்டுலயும் பொய் சொல்லிட்டு அவரோட படத்துக்கு போற சீன்ல அவங்க முகத்துல ஒரு பயத்தையும் படபடப்பையும் அதோட சேத்து காதலையும் காட்டிஇருப்பாங்க... கிரேட் டெலிவரி.... கடைசில எனக்கு என்ன வேணும்னு எனக்கு தெரியாதுடான்னு சிம்புகிட அவங்க சொல்லும்போது ஒரு maturity இல்லாத குழப்பமான மனநிலையில இருக்கிற பொண்ண நம்ம கண்ணு முன்னாடி கொண்டு வந்து காட்டி இருப்பாங்க....

படத்துல முக்கியமான ரெண்டு விஷயங்கள் இசை , ஒளிப்பதிவு ... ரெண்டையும் பத்தி சொல்ல தேவை இல்ல ... இசை சில இடங்களில் நம்மை துள்ளி குதிக்க வைக்கிறது சில இடங்களில் நம்மை மௌனமாய் அழ வைக்கிறது .... ஒளிப்பதிவு நம்மை படத்தோடு ஒன்ற வைத்து விடுகிறது.....

நீங்க காதல் செய்து முடித்தவரா? உங்களுக்கு உங்கள் பழைய நினைவுகளை மீட்டு தரும் ... நீங்கள் காதல் செய்து கொண்டு இருப்பவரா? உங்களை கண்டிப்பாய் அழ வைத்து விடும்.... நீங்கள் காதல் செய்ய ஆசை படுபவரா? உங்களை கண்டிப்பாய் ஏங்க வைத்து விடும்...
நீங்கள் காதல் என்றாலே பயந்து ஒடுபவரா? உங்களுக்கு கண்டிப்பாய் தலைவலியை கொடுத்து விடும்.....

காதலுக்கு மரியாதை கொடுத்து அதற்க்கு தமிழ் சினிமா கட்டிய கோட்டையில் இந்த படம் ஒரு வைர கல்லாய் மின்னும்

LinkWithin

Related Posts with Thumbnails