ஆழ்வார் , கிரீடம் , பில்லா, ஏகன், அசல் இது தல அஜித் நடித்து வெளிவந்த சமீபத்திய ஐந்து படங்கள்.... இதில் பில்லாவை தவிர்த்து பார்த்தால் அனைத்து படங்களும் வசூலில் சாதனை பண்ணி இருந்தாலும் எதுவும் பெரிய வெற்றியை பெற இயலவில்லை (ஆழ்வார்கூட பெரிய வசூலை கொடுத்தது ... காரணம் தலைக்கு இருக்கும் மாஸ் தொடக்க வசூல்)...
ஒரு சாதாரண சினிமா ரசிகன் இந்த ஐந்து படங்களில் ஒரு படமாவது திரை அரங்கிற்கு சென்று பார்த்திருப்பானா என்பது சந்தேகமே.... கண்டிப்பாக வரலாறுவிற்கு பின்னால் ஒரு கடைநிலை தமிழ் சினிமா ரசிகன் ரசிக்கும்படியான படம் தல இன்னும் தரவில்லை ... அவர்க்கு இருக்கும் பெரிய ரசிக பட்டாளத்தில் பெரும் பகுதி அவர்கள்தான் ....
தீனா என்ற ஒரே ஒரு மாஸ் ஹிட் கொடுததற்க்கே அவரின் ரசிகர் பலம் பல மடங்கு எகிறியது ....அதன் பின்னர் அவருக்கு அமைந்த மாஸ் ஹிட் வரலாறு .... தல ரசிகர்கள் அவரிடம் இருந்து எதிர்பார்க்கும் படங்கள் இவையே...ஒரு ரசிகனாக நான் தலையிடம் எதிர்பார்ப்பது ஒரு பெரிய கமர்சியல் ஹிட் .... நான் லட்சம் முறை தோற்றவன் என்பது தலையின் நிஜ வாழ்க்கை பஞ்ச் டயலாக் .... ஒவ்வொரு முறை தோற்கும் போது இதை சொல்லுவதை விட ஒரு பெரிய வெற்றியை கொடுத்து விட்டு தலை இதை சொன்னால் அவருக்கும் நமக்கும் பெரிய கெத்தாக இருக்கும்....
தலையின் முன்னாள் இப்பொழுது இருக்கும் பெரிய அச்சுருத்தல் கிராமபுரங்களில் அவரின் ரசிகர் பலம் குறைந்து கொண்டே வருவது... கடந்த மூன்று வருடங்களாய் அவர் பில்லா போன்று ஸ்டைலிஷான படங்களையே அதிக கவனத்தை செலுத்தி கொண்டு இருக்கிறார் ... ஒரு இயல்பான தமிழ்நாட்டு இளைஞனாய் அவர் எந்த படங்களிலும் தோன்றவில்லை .... கண்டிப்பாய் தல கடந்த மூன்று வருடமாய் அவர்களின் ரசனைக்கு தீனி போடவில்லை..... ஆனால் அவர்கள் இன்னமும் அஜித்தின் ரசிகன் என்ற நிலையில் இருந்து மாறாமல் இருப்பதற்கு காரணம் தலயின் மேல் உள்ள நம்பிக்கைதான்... ஆனால் அது இப்பொழுது கொஞ்சம் குறைந்து வருவது போல் ஒரு தோற்றம் உருவாக்கி வருகிறது...
தல நினைத்தால் எந்த ஒரு இயக்குனரின் படங்களிலும் நடிக்கலாம்.... பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் அவருக்கு கேட்கும் பணத்தை கொடுத்து அவரின் கால்ஷீட் வாங்க தயாராக உள்ளனர்... காரணம் அவரின் ரசிகர்கள்... அவர் ரசிகர்கள் அவரிடம் எதிபார்ப்பது அவர்களை சந்தொசபடுத்தும் படியான ஒரு மெகா கமர்சியல் ஹிட் ... மற்ற நடிகர்களின் ரசிகர்களை போல தல பஞ்ச் வசனம் பேசினால் மட்டுமே ரசிக்கும் ரசிகர்கள் கிடையாது இவர்கள்... தலயின் நடிப்பு திறமைக்கு தீனி போட வேண்டும் .... அனைத்து ரசிகர்களும் படத்தை பார்த்து பாராட்ட வேண்டும் .... அப்படி ஒரு படம்தான் அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு... "தல எத்தனையோ இயக்குனர்கள் உன்னை வைத்து படம் பண்ண காத்து கொண்டு இருக்கிறார்கள் ,,, அவர்களில் நல்ல கதை அம்சம் கொண்ட உன் நடிப்பு திறமைக்கு தீனி போட கூடிய நல்ல கதையை தெரிவு செய்து நடியுங்கள்... மாறினால் இன்னொரு தோல்வியை தாங்கும் பக்குவம் உங்களுக்கு வேண்டுமானால் இருக்கலாம் ஆனால் எங்களுக்கு கிடையாது"....
கருணை உள்ளமெல்லாம் உங்கள் நிஜ வாழ்கையில் கடைபிடித்து கொள்ளுங்கள் , சினிமா என்னும் உங்கள் தொழிலில் இனிமேலும் யார் மேலும் உள்ள கருணையின் காரணமாய் எங்களை காய வைத்து விடாதீர்கள் ... ராசு சுந்தரத்திற்கு எல்லாம் படம் பண்ணனுமா? பாருங்கள் அவருக்கு உதவ போய் நீங்கள் இக்கட்டான நிலைமையில் மாட்டி கொண்டீர்கள்... தயவு செய்து உங்கள் ரசிகர்களின் மேல் கருணை வையுங்கள்.... அவர்களின் விருப்பத்தை தெரிந்து கொண்டு அதற்க்கு ஏற்ற கதைகளை தேர்வு செய்து நடியுங்கள் தல ...
தமிழ் சினிமா ரசிகனின் நெஞ்சில் இடம் பெறுவது ரொம்ப கஷ்டம் எத்தனையோ பெரிய தலைகள் அதற்க்கு முயற்சி செய்து தோற்று போய் உள்ளனர் ... ரஜினி மட்டுமே அதில் பெரிய வெற்றியை கண்டவர்... அவர் இன்னமும் அதே நிலைமையில் இருக்க காரணம் ரசிகர்களின் நாடி பிடித்து அவர்களின் ரசனை அறிந்து அதற்க்கு ஏற்ற படங்களில் நடித்ததினால் .... இந்த தலைமுறையில் ரஜினிக்கு அடுத்து ஒரு பெரிய ரசிக பட்டாளம் அமைந்து உள்ளது உங்களுக்கு மட்டுமே .... ஒவ்வொரு ரசிகனும் உங்கள் மேல் எவ்வளவு பாசம் வைத்து உள்ளான் என்பதை பல முறை நான் பார்த்து உள்ளேன்.... அதற்க்கு காரணம் உங்களுக்குள் இருக்கும் நல்ல மனிதன்... எந்த விதமான குறுக்கு வழிகளும் பயன்படுத்தாமல் வெற்றியை ருசித்தவர் நீங்கள்... அந்த வெற்றியை தக்க வைத்து கொள்ள இதுதான் சரியான தருணம்....
நல்ல மனிதர்கள் எப்பொழுதும் வெற்றி பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும் , ரஜினி அதற்க்கு சிறந்த உதாரணம்... நீங்களும் பெரிய வெற்றிகளை பெற வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் ... அது உங்கள் கையில்தான் உள்ளது .....
13 comments:
நிறையா விஷயங்கள் யோசிக்கிற மாதிரி இருக்கு..
நல்ல பதிவு நண்பா..
//இந்த தலைமுறையில் ரஜினிக்கு அடுத்து ஒரு பெரிய ரசிக பட்டாளம் அமைந்து உள்ளது உங்களுக்கு மட்டுமே//
ரஜினிக்கு ரசிகைகளும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அந்த விதத்தில் ரஜினிக்கு அஜித் இணையாக முடியாது. ஏனென்றால் ரசிகைகளை தக்க வைப்பது சுலபம் அல்ல. முன்னாள் மாதவன் ரசிகைகள் எல்லாம் இப்போது சூர்யா ரசிகைகள். இதில் கவனம் செலுத்தினால் "தலை வலியை" நிரந்தரமாக காலி செய்து விடலாம்.
மற்றபடி என் எண்ணங்களை வெளிப்படுத்தும் பதிவு :)
Good post. me too have the same opinion. thanks a lot.
nice post... are u from virudhunagar???? even i am from virudhunagar..
அதெல்லாம் இருக்கட்டும். உங்க தல எப்ப பார்த்தாலும் எழவு வீட்டுக்கு போனவன் மாதிரியே முகத்தை வைத்துக்கொண்டு வருவது......பேஷன் பரடில் நடக்கிரவனாட்டம் கூலிங் கிளாசை போட்டுக்கொண்டு இங்கிட்டும் அங்கிட்டும் நடப்பது......பாடல் காட்சிகளில் நம்மை ( கேமராவை) பார்த்துக்கொண்டே பாடுவது.., காதல் காட்சியாக இருந்தாலும் அம்மா செத்து போனாலும் ஒரே மாதிரி மட்டைக்குரலில் வசனம் பேசுவது......இப்படியே போட்டு நம்மை சித்ரவதை செய்தால் தல அங்க இருப்பார்....நாமெல்லாம் முண்டங்கலாகத்தான் திரிவோம்.... அவர்ட்ட சொல்லி ஏதாவது பண்ணுங்கசாமி
கிழவியைத் தொடச்சொல்லக்கூட போட்டோக்குத்தான் போசு கொடுக்கிறார் தல...
முதல்ல தமிழா நல்லா பேசச்சொல்லுங்க...அசத்தபோவது யாருல தலயோட தலையைத்தான் உருட்றாங்க!
// ராசு சுந்தரத்திற்கு எல்லாம் படம் பண்ணனுமா? பாருங்கள் அவருக்கு உதவ போய் நீங்கள் இக்கட்டான நிலைமையில் மாட்டி கொண்டீர்கள்.. //
ennathuuuu raajyu suntharathukku uthava ponaaraa ?? evanchonnaan ?? aegan movie sharukh nadichu mega hit aana main hoon nah ode remake engrathaale thaan thala othukkittaar nadikke mathapadi raju suntharathukku help pane venum nuellaam ille.. :p
@ Shaen
தல ராசு சுந்தரத்திற்கு படம் பண்ணுவது என்பது அஜித் ஆசை படம் நடித்துகொண்டு இருக்கும்போதே முடிவான ஒன்று , இதை ராசு சுந்தரமே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் .... ராசு சுந்தரம்,, பில்லா படம் எடுத்து கொண்டு இருக்கும் பொது அஜித்திடம் தன ஆசையை கூறிய வுடனே அஜித் ஒத்து கொண்டு விட்டார் கதை கேக்காமலே ... அதன் விளைவுதான் ஏகன் ... தான் கொடுத்த வாக்குறுதியை மீறாமல் அஜித் ராசு சுந்தரத்திற்கு படம் செய்து கொடுத்தார் ,, நீங்கள் சொல்லிய அந்த படத்தின் கதைதான் சரண் அட்டகாசம் படத்திற்கு அஜித்திடம் சொன்ன கதை , அந்த கதை பிடித்திருந்தால் அப்பொழுதே அது உருவாக்கி இருக்கும்....
@ சூனிய விகடன்
//அதெல்லாம் இருக்கட்டும். உங்க தல எப்ப பார்த்தாலும் எழவு வீட்டுக்கு போனவன் மாதிரியே முகத்தை வைத்துக்கொண்டு வருவது......பேஷன் பரடில் நடக்கிரவனாட்டம் கூலிங் கிளாசை போட்டுக்கொண்டு இங்கிட்டும் அங்கிட்டும் நடப்பது..
உங்களுக்காளன பதில் என்னுடைய பதிவிலேயே இருக்கு .... அவர் இது வரைக்கும் பண்ணுன கதாபாத்திரங்கள் அனைத்துமே மெச்சூரான பாத்திரங்கள் .... அந்தமாதிரியான கதாப்பாதிரங்களில் காமெடி பண்ணிக்கொண்டு இருக்க முடியாதே .... ஜாலியான கதாபாத்திரங்களில் தல நடிக்க வேண்டும் என்ற என்னுடைய ஆசையை நான் சொல்லி இருக்கிறேனே இந்த பதிவில் ,
//ஒரே மாதிரி மட்டைக்குரலில் வசனம் பேசுவது......
வரலாறு படத்தில் அவருடைய அம்மா இறந்தவுடன் அஜித் பேசும் காட்சியை ஒரு முறை பாருங்கள் , அதன் பிறகு நீங்கள் இப்படி பேச மாட்டீர்கள்
//ஆழ்வார் , கிரீடம் , பில்லா, ஏகன், அசல் இது தல அஜித் நடித்து வெளிவந்த சமீபத்திய ஐந்து படங்கள்.... இதில் பில்லாவை தவிர்த்து பார்த்தால் அனைத்து படங்களும் வசூலில் சாதனை பண்ணி இருந்தாலும் எதுவும் பெரிய வெற்றியை பெற இயலவில்லை (ஆழ்வார்கூட பெரிய வசூலை கொடுத்தது ... காரணம் தலைக்கு இருக்கும் மாஸ் தொடக்க வசூல்)...//
இதைச் சொன்னால், நம்மல பைத்தியக்காரனுங்கனு சொல்வாங்க... வரலாறு மற்றும் பில்லாவை யாரும் 'Blockbuster' என்று கடைசி வரை சொல்லவே இல்லை. 'Super Hit' என்று தான் சொன்னார்கள். அது போல கிரீடம், ஏகன் மற்றும் அசல் 'Average/Above Average' தான். ஆனால், 'Flop' என்று சொல்கிறார்கள்/சொல்வார்கள்.
உங்கள் அனைத்து கருத்துக்களுடன் ஒத்துப் போகிறேன். என்னைப் பொருத்தவரை, நல்ல இயக்குனர்களை தேர்வு செய்தாலே, பாதி சுமை குறைந்த மாதிரி. அடுத்த படத்தில் அனைத்தும் மாரும் என்ற நம்பிக்கையில்... :)
//உங்க தல எப்ப பார்த்தாலும் எழவு வீட்டுக்கு போனவன் மாதிரியே முகத்தை வைத்துக்கொண்டு வருவது......//
சார், டோன் கேரக்டரில் நடிக்கும்போது, 'காமிடியணாக' முகத்தை வைப்பது எந்த விதத்தில் நியாயம். பில்லாவில், இரண்டாம் கேரக்டர் ஒரு ஜோவியலான கேரக்டர் தான். அதே மாதிரி, ஏகனில் கல்லூரி காட்சிகளிலும் ஜோவியல் தான்... இதெல்லாம் உங்களுக்கு ஏன் தெரியவில்லை... ;P
//பேஷன் பரடில் நடக்கிரவனாட்டம் கூலிங் கிளாசை போட்டுக்கொண்டு இங்கிட்டும் அங்கிட்டும் நடப்பது......//
என்ன பன்னுவது, இந்த தலைமுறை நடிகர்களில் யார் கூலிங் கிளாஸ் போட்டு நடந்தாலும், இவருக்குள்ள அந்த 'screen presence' வருவதில்லை. ;P
//பாடல் காட்சிகளில் நம்மை ( கேமராவை) பார்த்துக்கொண்டே பாடுவது.., //
ஆமாம், தமிழ் சினிமா வரலாற்றிலே, இதை வேரு யாரும் செய்ததில்லை. :( ;P
//காதல் காட்சியாக இருந்தாலும் அம்மா செத்து போனாலும் ஒரே மாதிரி மட்டைக்குரலில் வசனம் பேசுவது.//
குரல் என்பது ஒரே மாதிரியாகத் தானே இருக்கும். இதில் என்ன குழப்பம்???
//கிழவியைத் தொடச்சொல்லக்கூட போட்டோக்குத்தான் போசு கொடுக்கிறார் தல...//
அன்று, பல போட்டோக்கள் எடுக்கப் பட்டன. அவர் காமிராவை பார்க்காத போட்டோ உட்பட... ;P
//இதைச் சொன்னால், நம்மல பைத்தியக்காரனுங்கனு சொல்வாங்க... வரலாறு மற்றும் பில்லாவை யாரும் 'Blockbuster' என்று கடைசி வரை சொல்லவே இல்லை. 'Super Hit' என்று தான் சொன்னார்கள். அது போல கிரீடம், ஏகன் மற்றும் அசல் 'Average/Above Average' தான். ஆனால், 'Flop' என்று சொல்கிறார்கள்/சொல்வார்கள்.
என்ன பண்ணுறது அவங்க வயித்தெரிச்சல இப்படித்தான் ஏதாவது சொல்லி தீத்துப்பாங்க..... நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ....
//ஆமாம், தமிழ் சினிமா வரலாற்றிலே, இதை வேரு யாரும் செய்ததில்லை. :( ;P
repeattuuuu...
//என்னைப் பொருத்தவரை, நல்ல இயக்குனர்களை தேர்வு செய்தாலே, பாதி சுமை குறைந்த மாதிரி
ஆமாம் நண்பரே ... அதுதான் நான் கூற வந்ததும்
தல இனி அதை கவனமாய் செய்வார் என்று நம்புவோம்
Post a Comment