Followers

Copyright

QRCode

Wednesday, September 23, 2009

விஜய் ரசிகர்களை யாருக்கும் பிடிப்பதில்லை-காரணங்கள்

1.அவர்கள் விஜய்கெல்லாம் ரசிகர்களாய் இருப்பது...
2. தெருவுல ஒரு டப்பா உருளுற சத்தம் கேட்டாலும் கையையும் காலையும் இழுத்து இழுத்து ஆட்டிகிட்டு எப்டி என் தலைவன் மாதிரி ஆடுரனானு கூச்சமே இல்லாம கேக்குறது ....
3. தன்னோட லவ்வர் அஜித் ரசிகையா இருந்தாலும், விஜய் படத்துக்கு கூப்டுட்டு போய் அடி வாங்க்துறது....
4. முக்குக்கு முக்கு தமிழ்நாட்டின் ஒளியே இந்தியாவின் ஒபாமாவேன்னு போஸ்டர் ஓட்டுறது .. அதுகூட சேத்து இந்தியாவின் அலெக்ஸ்சாண்டறேன்னு அவன் அப்பனுக்கு போஸ்டர் அடிக்கிறது ....
5. 10 விஜய் ரசிகர்கள் சேந்துட்டா தனியா இருக்குற அஜீத் ரசிகன கலாய்கிறது, பதிலுக்கு அவன் கேக்குற ஒரே ஒரு கேள்வி , உங்க தலைவலி "நடிச்ச" படம் ஏதாது சொல்லுங்கடான்னு கேட்டா அப்பீட்டு ஆவுறது....
6. கில்லினா யார் அடிச்சாலும் பத்து அடி தூர பொய் விழுற ஒரு சின்ன கட்டைனுகூட தெரியாம நாங்க எல்லாம் கில்லிலனு அவனுகள அவங்களே அசிங்கபடுதுறது...
7. திறமையே இல்லாத அவனுக்கு சினிமால ரசிகனா இருந்ததே பெரிய தப்பு, பெருசா நாட்டுக்கு நல்லது பண்ண போற அவருக்கு கட்சி தொண்டன் மாதிரி வக்காலத்து வாங்கி பேசுற உங்கள பாத்தா கை சூப்புற பட்ச கொளந்தகூட தலைல அடிசிகிடும்...
8. வில்லு மாதிரி அட்டு படத்தையும் பாத்துட்டு வந்து அப்டி ஒன்னும் மோசம் இல்ல ஒரு தடவ பாக்கலாம்னு அள்ளி வுடுறது , பில்லா கிரீடம் அயன் வேல் வரலாறு மாதிரி படங்களையும் கேவலமா இருக்குன்னு கூசாம பிட்ட போடுறது ....
9. ஊட்டி குளுருல பிச்சகாரன் போட்டுக்கிட்டு திரியறது மாதிரி சட்டைக்கு மேல வேற கலர் சட்ட போட்டுக்கிட்டு அலையறது....

இன்னும் இன்னும் நெறைய இருக்கு ....மேல சொன்னது எல்லாம் மோசமானதுலையே முக்கியமான காரணங்கள்..... [நாங்க மதுரகாரங்கள்ள அதான் இந்த பன்ச் (அவனோடத விட ஒன்னும் மோசம் இல்லைல இது) ]

Tuesday, September 22, 2009

ithuvallavo vimarsanam


(THIS IS THE PAGE I MOST LIKE .AND I WANT TO SHARE IT ON MY BLOG.

பார்த்து முடித்த கையோடு அல்லது கண்ணோடு வேறு எந்த படமும், கணினியை நோக்கி என்னை செலுத்தியதில்லை. ஒரு சில படங்களே, ‘End Credit’ ஓடும்போதும் எழுந்திருக்க மனமில்லாம் உட்கார வைக்கும். The Chronicles of Bow அந்த வகை. இந்த வருடத்தில் நான் பார்த்த முதல் ‘Feel Good' படம்.இன்றுதான் இதை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே இரண்டு ப்ரிட்டிஷ் படங்களுக்கும், ஒரு ப்ரான்ஸ் படத்திற்கும் விமர்சனம் எழுதியிருப்பதால், ’The Chronicles of Bow’-ற்கும் இந்த ப்ளாகில் விதிவிலக்கு கொடுக்கலாம் என்று தோன்றியதால் இந்த பதிவு.இதுவொரு இசை-காமெடி படம். Pink Panther 2 பார்த்து வெறுத்து போயிருந்த நேரத்தில் ‘இன்னொரு காமெடி படமா’ என்று பயந்துகொண்டே பார்த்தேன். ஆனால் நாயகனின் அறிமுக காட்சியே ‘ஆஹா’வென நிமிர்ந்து உட்கார வைத்தது.
கடந்த வருடம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற ‘Get Smart'- என்ற காமெடி படத்தின் கதையும் இதுவேதான். ஆனால் The Chronicles of Bow-ன் தொழில் நுட்ப நேர்த்தியும், நடிகர்கள் தேர்வும், அவர்களின் பண்பட்ட நடிப்பும் ‘Get Smart’-ஐ விட பன்மடங்கு உயர்ந்தது. ஆனால் பரிதாபம்.... அமெரிக்காவில் ‘லிமிடட் ரிலீஸ்’ வெளியீட்டால் மிகக்குறைந்த திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்பட்டு, பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு இதனருமை தெரியாமலே போய்விட்டது. இது ஹாலிவுட் தயாரிப்பில்லாமல் ஆசிய தயாரிப்பானதும் இன்னொரு குறை. இன்னொரு பிரச்சனை. இதை ஆங்கிலத்தில் டப் செய்யாமல், அவர்கள் மொழியிலேயே வெளியிட்டது.
காலம் காலமாக நாம் பார்த்து சலித்த ஜேம்ஸ் பாண்ட் ரக கதையேதான். ஆனால் ட்ரீட்மெண்ட் வேறு. இண்டர்போல் போலீஸுக்கே தண்ணி காட்டி, ஆயுதம் கடத்தும் மிகப்பெரிய கும்பல் ஒன்றை கண்டறிந்து அழிக்க வேண்டிய வேலையை நாயகன் ‘ஜோசப் ச்சேண்டரா’க்கு(Joseph Chandraa) லோக்கல் போலீஸ் அளிக்கிறது. ஐரோப்பாவின் ஒரு பனிமலை நகரின் மூலையில் இருக்கும் சில பல அரைலூசு வில்லன்களை ஒருவழியாக துப்பறிந்து கண்டுபிடிக்கும் நாயகன், தன் காதலி டயானா-கூ-ரியனின் (Diana Ku Riyen) உதவியுடன், அவர்களின் கும்பலுக்குள் நுழைந்து... அத்தனை பேரையும் போட்டுத்தாக்குவதுதான் மொத்த கதையும்.ஏகப்பட்ட ஹை எண்ட் டெக்னிகல் சமாச்சாரங்கள், படம் நெடுகிலும். ஆனால் கொஞ்சம் ‘ஓவர் டோஸ்’ என நினைக்கத் தோன்றுகிறது. அதிகபட்சமாக ஐபாட்/ஐபோனை-யே அலர்ஜியுடன் பார்க்கும் சராசரி அமெரிக்கர்களுக்கு இதில் சொல்லப்படும் பெரும்ப்பாலான டெக்னிகல் வார்த்தைகள் உதறலையே கொடுத்திருக்க வாய்ப்புள்ளது.மிஷன் இம்பாஸிபிள் 3-ல், 'Rabbit Foot'-ஐ எடுக்க முயற்சிக்கும் டாம் க்ரூஸ், அதை எப்படி எடுப்ப்பார் என்பதை காட்டாமல், கட்டடத்தை உடைத்து வெளிவருவது போல காட்டி கடுப்பேற்றுவார்கள்.அதே போல இதிலும் சிங்கிள் லேயர் (அல்லது டபுள் லேயர்... படத்தில் சரியாக இதை சொல்லவில்லை. டைரக்டரின் கவனக்குறைபாடு?!) ஹை டெஃபனிஷன் ஸ்டோர்ஜ்களில் (இதை எப்படி தமிழ் படுத்தறதுன்னு தெரியலை) தங்களுடைய ரகசியங்களை பதிவு செய்து, அல்ட்ரா வயலெட்... இன்ஃப்ரா ரெட் கதிர்கள் என கடுமையான பாதுகாப்பில் வைத்திருக்கும் வில்லன்களிடமிருந்து ஜோசப், எப்படி அதை மீட்கிறார் என்பதை சரியாக சொல்லவில்லை. அதை மட்டும் தெளிவாக காட்டியிருந்தால் இதன் ‘ரீச்’ வேறாக இருந்திருக்கும். டைரக்ருக்கு இதிலும் சிறிய சறுக்கல். லாஜிக் ஓட்டை!இதற்கிடையில் யார் யாரை டபுள்/ட்ரிபிள் க்ராஸ் செய்கிறார்கள் என்பது இன்னும் சுத்தமாக விளங்கவில்லை. ஆனால் ஒரு லாஜிக்கை யோசிப்பதற்கு முன்னால், படு வேகமாக நகரும் திறமையான திரைக்கதையும், எடிட்டிங்கும், அடுத்த லாஜிக் மீறலுக்கு போய்விடுவதால்.. ஒரு கட்டத்தில் எல்லவற்றையும் மறந்து சிரிப்பதை மட்டுமே செய்ய ஆரம்பித்து விடுகிறோம்.படம் முழுக்க குறைந்த பட்சம் ஒரு 1000-2000 லாஜிக் மீறல்கள் இருந்தாலும், காமெடி படத்தில் யாருங்க லாஜிக் எல்லாம் பார்க்கறது.
இதோ.. மாம்மா மியா-வின் ABBA இசை குழுவினருக்கு சரியான போட்டி. ‘Even if you are angry' , 'Are you Crazy’ உட்பட, அனைத்து சவுண்ட் ட்ரேக்குகளும், அருமையான பாடல் வரிகளும்..... கேட்டால் மட்டுமே நான் சொல்வது ‘மிகையில்லை’ எனத்தெரியும். இசையமைப்பாளர் ‘டேவிஸ் ரீப் ரசாட்’ -ஐ (Davis Reep Rasaad) இனி உலகம் முழுக்க கவனிக்க வாய்ப்பு உள்ளது. வாழ்த்துகள்!!!இத்தனை ஃப்ளோரோசெண்ட் கலர்களில் இதற்குமுன் நான் பார்த்த ஒரே படம் ‘The Curse of the Golden Flower' மட்டுமே. விதவிதமான கலர் துணிகளை உடல் முழுக்க சுற்றியபடி அறிமுகமாகும்போதே... மனதில் ‘பஜக்'கும் நாயகன் ச்சேண்டரா, பின் படம் முழுவதும், அதுபோன்ற உடைகளில் வரும்போதெல்லாம் நமக்கு Super Fly தான் நியாபகத்துக்கு வரும், குறிப்பாக அந்த மஞ்சள் நிற சூட்... கலக்கல்..! (ராமராஜன் சார்... உஷார்... உங்களுக்கு போட்டியா நம்ம ஆசியாலயே ஆளுங்க வர ஆரம்பிச்சிட்டாங்க).இந்த படத்தில் உபயோகித்துள்ள தொழில் நுட்பங்களை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். 'ரே விவா இர்மன்’-ன் (Ray Viva Rman) ஒளிப்பதிவு அருமையாக தெரிந்தாலும் கன்னாபின்னாவென கத்தரி போட்ட எடிட்டரின் லூசுத்தனத்தால் கண்ணை கட்டுகிறது.நமக்கெல்லாம் க்ராபிக்ஸ் என்றாலே அது ஹாலிவுட் மட்டும்தான். இதோ... ஹாலிவுட்டிற்கு ஆப்பு வைத்திருக்கிறது, இந்த ஆசிய படம். அதிலும் முதல் சவுண்ட் ட்ரேக்கில் சில காட்சிகளே வரும் ‘வீராணம் ஏரி தண்ணி பைப்’பிற்கு கை-கால் வைத்தது போன்ற அந்த கேரக்டர், க்ராபிக்ஸா.. அல்லது நிஜமா என்று சொல்ல முடியவில்லை. அத்தனை நேர்த்தி. படம் முழுக்க இவர்களின் ஆட்சிதான். புகுந்து விளையாடியுள்ளார்கள்.சாதாரண வசனங்களே பட்டையை கிளப்பும்பொழுது, காமெடி வசனங்களை யோசித்துப்பாருங்கள். நாயகன், நாயகி, வில்லன்கள்... கூடவே ஒரு காமெடியன். ஹீரோ வாயை திறக்கும் பொழுதெல்லாம்... அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்ததில், என் இரண்டு வயது மகள், என்னருகில் வர கூட பயந்தாள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவர்.. இருவர்... என்றால் கூட பரவாயில்லை. இப்படி ஒட்டுமொத்த டீமும் அரைலூசாகவே இருந்தால்... ஹா.. ஹா.. ஹா..! பின்னுகிறார்கள்.ஆனால் (படம் ஃப்ளாப் ஆனதால்) சிரிக்க முடியாத இருவர் இதன் தயாரிப்பாளரும், இயக்குனரும்தான். 2008-ஆம் ஆண்டு வெளியான ‘A Gun' என்ற அட்டகாசமான ஆக்‌ஷன் படம்.... இதே தயாரிப்பாளர் தயாரித்து வெளிவந்தது (இதுவும் ஆங்கில டப்பிங் ஆகாமல், அதே மொழியில் அமெரிக்காவில் ரிலீஸ் ஆகியது). சக்கை போடு போடும் என பயங்கர பில்டப் கொடுத்த படம், கல்லையும் மண்ணை கவ்வியதாம். அப்பொழுதும் தங்களது பரிட்சார்த்த முயற்சிகளை கைவிடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள் இந்த தயாரிப்பாளர்கள் (உலகத்தில் இதுபோல இன்னும் எத்தனை ‘கமல்ஹசன்களோ’).சொந்தமாக யோசிக்க தெரியாத, காப்பி-பேஸ்ட் இயக்குனர் என போன படத்தில் பெயரெடுத்தவராம் இதன் இயக்குனர் ‘ப்ரேப் உடேவாஸ் உன்ரோம்’ (Prab Udevas Unram). நல்லவேளை இனி அந்த பிரச்சனை வராது என நினைக்கிறேன். யாராவது வாய்ப்பு கொடுத்தால்தானே.. இயக்குவதற்கு! ‘A Gun'-ஐ இயக்கியது இவரின் சகோதரர் ‘ரஜுஸ் உன்ரோம்’ (Raajuus Unram). அவர்களின் தலைக்குள் ‘வேலை’ செய்வதற்கு எதுவுமில்லை என்கிற பொழுது, அவர்களை மட்டும் குறை சொல்லி என்ன பயன்?
ட்டோரண்டில் இருந்து டவுன்லோட் செய்து, பார்க்க ஆரம்பிக்கும் முன், அனாசின், ஆஸ்பிரின், டார்ட், முடிந்தால் ஒரு முழக்கயிறு அல்லது விஷம் கூட எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். படம் முடிந்த பின்(அது வரையிலும் தாக்குப்பிடித்தால் ) தேவைப்படலாம்.டேனியல் க்ரேய்க் இன்னும் உயிரோடு இருப்பது, அவர் இன்னும் இந்த படத்தை பார்க்காத ஒரே காரணத்தால் மட்டுமே என்பது என் தாழ்மையான கருத்து.இன்னும்...இன்னும்...இன்னும்... எழுதிக்கொண்டே போகலாம்... இந்த காவியத்தை பற்றி. ஆனால் எங்கே முடிப்பது என்பது மட்டுமே புரியாத புதிராய் உள்ளது. இந்தளவிற்கு என் மனதை பாதித்த வரலாற்று நிகழ்வு (The Chronicle), ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் வாங்கியபோது கூட இல்லை.The Chronicles of Bow - Don't we call this BULL SHIT in back home?????!!!!!!

நடிகர் கெட்டால்..
ராணுவத்துல இருந்து ஓய்வுபெறுபவர்கள் என்ன பண்ணுவாங்க.. ஏதாவது ஒரு அரசாங்க அல்லது தனியார் அலுவலகத்தில் காவலாளியா இருப்பாங்க. ஆசிரிய பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்கள் பக்கத்து வீட்டுல இருக்குற குழந்தைகளுக்கு கட்டணம் வாங்கியோ வாங்காமலோ வகுப்பெடுப்பங்க, மத்தவுங்க எதாவது பெட்டிக் கடை வச்சு உக்காருவாங்க. சிலர் ஊர்ஊரா சுத்தி கடவுளத்தேடிட்டு இருப்பாங்க, பலர் வீட்டுல இருக்குறவுங்க பிரச்சனைய தலைல போட்டு உருட்டிட்டு இருப்பாங்க, அந்த வரிசையில் நடிகர்கள் நல்லா சம்பதிச்ச பிறகு எப்போ நாம நடிச்சா நம்ம குடும்பமே உக்காந்து படம் பாக்க மாட்டங்கனு தெரிஞ்சவுடன் எடுக்கிற அடுத்த முடிவு எதாவது அரசியல் கட்சில சேருறதுதான். அவுங்க தகுதிக்கு ஏற்ப குவாட்டர்,பிரியாணி கட்சிப்பொது கூட்டங்களோ, எம்.எல்.ஏ,எம்.பி,மந்திரிப் பதவிகளோ கிடைக்கும். வாய்ஸ் இருக்குறவுங்க தனிக்கட்சி ஆரம்பிப்பாங்க. திரைத்துறையில வாரிசுகளை வளர்க்க முடியாதவர்கள் அரசியல்ல வாரிசுகளை வளர்க்க முயற்சி பண்ணுவாங்க. 'ஏதோ கெட்டா குட்டிசுவரு' சொல்லுறது போய் இப்போலாம் 'நடிகன் கெட்டால் அரசியல்'னு தான் சொல்லுறாங்க.எது எப்படியோ நமக்கும் வயசான, செயல்படாத பஞ்ச் டயலாக் மட்டும் பேசத்தெரிந்த தலைவர்கள் கிடைப்பாங்க. அவுங்க ஒத்திகை இல்லாத நடிப்ப பார்க்க ஒரு சந்தர்ப்பம் அமையுமென்றாலும், அது எவ்வளவு கொடுமையானதென்று தமிழக மக்களுக்கு நிறைய அனுபவம் இருக்கு. இப்படி போய்ட்டு இருந்த தமிழக அரசியல்ல கொஞ்ச நாளா ஒரு உண்மை கலந்த வதந்தி. விஜய் தனிக்கட்சி ஆரம்பிப்பார், இல்லை தேசிய கட்சியில் சேரப்போறார். கேட்க கொஞ்சம் அதிர்ச்சியாவும் எனக்கு கொஞ்சம் ஆர்வமாவும் இருந்தது. விஜயோட அரசியல் பிரவேசம் பற்றி நிறைய கருத்துகள் இருந்தது. பொதுவா அரசியலில் 'தாதா'க்களுக்கு அப்புறம் தாத்தாக்களுக்குத் தான் முதல் மரியாதை. நீங்க 'தாதா'வாவும் தாத்தாவாவும் இருந்தீங்கனா சீக்கிரமா ஏதாவது அரசியல் கட்சில சேருங்க. கூடவே திரைத்துறையில இருந்தீங்கனா தைரியமா அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம். இந்தியாவில் இளைஞர்களை அரசியலில் ஈடுபடுவதை அரசியல்வாதிகளோ, பொதுமக்களோ யாருமே விரும்புவதில்லை, விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்க போறாருனதும் நிறைய எதிர்கருத்துகள், திரைத்துறையில் அவர் சாதிக்க இன்னும் நிறைய இருக்குனும் இன்னும் சில நூறுகதாநாயகிகளுடன் தயிர்சாதம் ரெடி பண்ண வேண்டுமென கூக்குரல்கள். ஆதரவு தரப்பிலிருந்துதான் இந்த கருத்துகள்னு பார்த்தா எதிர்தரப்பிலும் அதே கருந்துகள் தான். இங்க என்ன கிழிச்சுட்டாருனு அங்க போய் கிழிக்கப்போறார்னு கேட்குறாங்க. சரி அப்போ இங்க இருந்து கிழிச்சுட்டே போறேனு அவரும் வடுமாங்கா ஊறல தேடி போய்ட்டார். சினிமா தப்பிச்சதுனு(காமெடி கீமெடி பண்ணலியே) சிலரும், அரசியலும் தப்பிச்சதுனு சிலரும் சொல்லுறாங்க, எது தப்பிச்சதுனு போகப்போக தெரியும்.எப்படியோ 60 வயசுல விஜய் அரசியல குதிப்பார்னு நம்பலாம். அதுவரை அவரோட அப்பா ஏதாவது கட்சில சேர்ந்து பயிற்சி எடுத்துக்கலாம். நமக்கு இன்னுமொரு தாத்தா தலைவர் தயாராகிறார்.

Wednesday, September 9, 2009

நான் ரசித்தவை (பாத்தா உங்களுக்கும் புடிக்கும்)

மௌன ராகம்

திருமண்த்திற்க்கு முன் காதல். காதலன் இறந்துவிட்டாலும் மறக்க முடியவில்லை. கணவனின் அன்பை முடிவில் புரிந்து சுபம். இந்தப்படத்தில் 20 நிமிடம் வரும் கார்த்திக் 25 ஆண்டுகள் கழித்தும் ஞாபகத்தில் இருக்கிறார் . புனேயில் உள்ள பிலிம்இன்ஸ்டிட்யூட்ன் ரோல் ஆப் ஹானரில் சிறந்த துணை கதாபாத்திர நடிப்புக்காக கார்த்திக் பெயர் இப்பாத்திரத்துக்காக இடம்பெற்றுள்ளது. இதற்க்குமுன் பகல்நிலவு, இதயகோவில் ஆகிய படங்களை இயக்கி இருந்தாலும் இப்படமே மணிரத்னத்திற்கு பெரும் பெயர் பெற்றுத் தந்தது. இளையராஜாவின் பிண்ணனி இசையை வார்த்தையில் வர்ணிக்க முடியாது. நிலாவே வா, மன்றம் வந்த தென்றலுக்கு போன்ற எவர்கிரீன் சோலோ சாங்ஸ் இடம் பெற்ற படம். கிளாஸ் பெண்களின் பிம்பமாக ரேவதி மக்கள் மனதில் பதிந்த படம்.


வாலி 


ஏன் என்று நான் சொல்ல வேண்டுமா? அஜித் & அஜித் ரெண்டு அஜித் மட்டும்தான் ... எஸ்.ஜே.சூர்யாவின்  முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் ... விறுவிறுப்பான திரைகதையில் நம்மை மிரட்டி இருப்பார்...


குஷி


ஜோதிகாவுக்கு நட்சத்திர அந்துஸ்து வழங்கிய படம். மும்தாஜ்க்கு கவர்ச்சிப் பாதையை உறுதிப்படுத்திய படம். என்றென்றும் காதல், நெஞ்சினிலே, மின்சார கண்ணா, கண்ணுக்குள் நிலவு என வீழ்ச்சியை நோக்கி போய் கொண்டிருந்த விஜய்யை நிமிர்த்திய படம்.சூர்யாவின் குறும்பான வசனம்,இயக்கம், ஜீவாவின் ஒளிப்பதிவு, வெளி நாட்டு பாடல்களை சுட்டு தேவா அமைத்த துள்ளலான இசை என இளைமைத்துடிப்போடு வந்த படம்நாயகன்,நாயகி சந்திக்கிறார்கள். தவறான புரிதல்கள் பின்னர் அதை உணர்ந்து நேசிக்கத் தொடங்குகையில், நாயகியின் ஈகோ குறுக்கே வருகிறது. தங்களின் நண்பர்களான காதல் ஜோடியை சேர்த்துவைக்க முயலுகையிலும் சண்டை. இறுதியில் இணைகிறார்கள்.படத்தின் கதையை முதலில் சொல்லி ஆரம்பிக்கும் படம் இது. பின்னர் தெலுங்கில் பவன் கல்யாண், பூமிகா நடிக்க வெற்றி பெற்றது. இந்தியில் கரீனா கபூர் நாயகி. ஆனால் படம் வெற்றி பெறவில்லை.

யற்கை

தான் காதல் செய்யும் பெண் வேறு ஒருவனை விரும்புகிறாள் என தெரிந்தும் அவளையே காதலிக்கும்  ஹீரோ. உயிருடன் இருக்கானா இல்லை இறந்து விட்டானா என தெரியாமல் தன் காதலனை தேடும் நாயகி என வித்தியாசமான ஒரு கதை. நாயகனின் காதலை இறுதியில் ஜெய்க்க வைத்து நம் ஆவலை தூண்டி எதிர்பாராத ஒரு முடிவை தரும் படம்.

தாரே ஜாமீன் பார்
அம்மாவின் அன்பு, அண்ணனின் பாசம், அப்பாவின் ஆதரவு என எல்லாவற்றையும் விட்டு விட்டு படிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காய் Boarding Schoolஇல் சேர்ந்து படிக்கும் சிறுவன். அவனுக்கும் ஒரு வித்தியாசமான ஒரு நோய். அந்த நோயின் காரணமாய் எழுத படிக்க இயலாத நிலைமையில் அனைவரிடமும் திட்டு வாங்குகிறான் , வகுப்பு அறைகளை விட்டு வெளியே அனுப்ப படுகிறான். அதனால் தாழ்வு மனப்பான்மையில் வாடுகிறான்.அவனின் நோயை  புரிந்து கொண்டு அவனிடம் இருக்கும் ஓவிய திறமையை கொண்டே அவனின் தாழ்வு மனப்பான்மையை போக்கும் ஆசிரியர். அற்புதமான படைப்பு அந்த சிறுவனை பார்க்கும் போது நம் பள்ளியில் நாம் பார்த்து பரிதாபப்பட்ட சில படிக்க இயலாத நண்பர்களை நினைவு படுத்தி விட்டு நம் மனதை துயரப்படுத்தும்... கடைசியில் அந்த சிறுவன் அணைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் முன்னால் மேடையிலே கௌரவபடுத்தப்படும் போது கண்களில் ஒரு துளி கண்ணீர் சிந்தாதவன் சத்தியமாய் கல் நெஞ்சகாரன்


தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:
1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை
காப்பாற்றுகிறது.


2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது.. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த
பயம் ஏற்படும்.


3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக
வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக
வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.


4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு
விளையாட மிகவும் பயன்படும். மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது
குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.


பாடலாசிரியர்
வைரமுத்து கூட,


நீ காற்று நான் மரம்…
என்ன சொன்னாலும்
தலையாட்டுவேன்


என்று எழுதிய பாடலில்
கீழ்க்கண்டவாறு சில
வரிகளை
சேர்த்திருந்தால்
நன்றாக
இருந்திருக்கும்.


நீ பந்தி
நான் தொந்தி
என்ன போட்டாலும்
உள்வாங்கிக்கொள்வேன்.


அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின் அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும்.


தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர். தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
தொந்தி வளர்த்தேன்.
தொகுதி வளர்த்தேனே.


என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு..


தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை
வடிவத்தில் இருக்கிறது? என்ற வினா பலரது மனதில் எழும்.


தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.


இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது.
இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது. இதை மனிதனுக்கு
உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின்
தொந்தியை உருண்டை வடிவத்தில் படைத்துள்ளது.


ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான்.
இதனை உணர்த்துவதற்காகவே தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி
தேய்ந்து வளருகிறது.


இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,


போற்றி வளர்ப்போம்!
கண்டதையும் போட்டு
வளர்ப்போம்!!

"தொந்தி கொண்டு வாழ்வாரே வாழ்வர்
மற்றேல்லோர் பந்திக்கு பின்செல்வர் "


ஜெய் தொந்தி!

LinkWithin

Related Posts with Thumbnails