மௌன ராகம்
திருமண்த்திற்க்கு முன் காதல். காதலன் இறந்துவிட்டாலும் மறக்க முடியவில்லை. கணவனின் அன்பை முடிவில் புரிந்து சுபம். இந்தப்படத்தில் 20 நிமிடம் வரும் கார்த்திக் 25 ஆண்டுகள் கழித்தும் ஞாபகத்தில் இருக்கிறார் . புனேயில் உள்ள பிலிம்இன்ஸ்டிட்யூட்ன் ரோல் ஆப் ஹானரில் சிறந்த துணை கதாபாத்திர நடிப்புக்காக கார்த்திக் பெயர் இப்பாத்திரத்துக்காக இடம்பெற்றுள்ளது. இதற்க்குமுன் பகல்நிலவு, இதயகோவில் ஆகிய படங்களை இயக்கி இருந்தாலும் இப்படமே மணிரத்னத்திற்கு பெரும் பெயர் பெற்றுத் தந்தது. இளையராஜாவின் பிண்ணனி இசையை வார்த்தையில் வர்ணிக்க முடியாது. நிலாவே வா, மன்றம் வந்த தென்றலுக்கு போன்ற எவர்கிரீன் சோலோ சாங்ஸ் இடம் பெற்ற படம். கிளாஸ் பெண்களின் பிம்பமாக ரேவதி மக்கள் மனதில் பதிந்த படம்.
வாலி
ஏன் என்று நான் சொல்ல வேண்டுமா? அஜித் & அஜித் ரெண்டு அஜித் மட்டும்தான் ... எஸ்.ஜே.சூர்யாவின் முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் ... விறுவிறுப்பான திரைகதையில் நம்மை மிரட்டி இருப்பார்...
குஷி
ஜோதிகாவுக்கு நட்சத்திர அந்துஸ்து வழங்கிய படம். மும்தாஜ்க்கு கவர்ச்சிப் பாதையை உறுதிப்படுத்திய படம். என்றென்றும் காதல், நெஞ்சினிலே, மின்சார கண்ணா, கண்ணுக்குள் நிலவு என வீழ்ச்சியை நோக்கி போய் கொண்டிருந்த விஜய்யை நிமிர்த்திய படம்.சூர்யாவின் குறும்பான வசனம்,இயக்கம், ஜீவாவின் ஒளிப்பதிவு, வெளி நாட்டு பாடல்களை சுட்டு தேவா அமைத்த துள்ளலான இசை என இளைமைத்துடிப்போடு வந்த படம்நாயகன்,நாயகி சந்திக்கிறார்கள். தவறான புரிதல்கள் பின்னர் அதை உணர்ந்து நேசிக்கத் தொடங்குகையில், நாயகியின் ஈகோ குறுக்கே வருகிறது. தங்களின் நண்பர்களான காதல் ஜோடியை சேர்த்துவைக்க முயலுகையிலும் சண்டை. இறுதியில் இணைகிறார்கள்.படத்தின் கதையை முதலில் சொல்லி ஆரம்பிக்கும் படம் இது. பின்னர் தெலுங்கில் பவன் கல்யாண், பூமிகா நடிக்க வெற்றி பெற்றது. இந்தியில் கரீனா கபூர் நாயகி. ஆனால் படம் வெற்றி பெறவில்லை.
இயற்கை
தான் காதல் செய்யும் பெண் வேறு ஒருவனை விரும்புகிறாள் என தெரிந்தும் அவளையே காதலிக்கும் ஹீரோ. உயிருடன் இருக்கானா இல்லை இறந்து விட்டானா என தெரியாமல் தன் காதலனை தேடும் நாயகி என வித்தியாசமான ஒரு கதை. நாயகனின் காதலை இறுதியில் ஜெய்க்க வைத்து நம் ஆவலை தூண்டி எதிர்பாராத ஒரு முடிவை தரும் படம்.
தாரே ஜாமீன் பார்
அம்மாவின் அன்பு, அண்ணனின் பாசம், அப்பாவின் ஆதரவு என எல்லாவற்றையும் விட்டு விட்டு படிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காய் Boarding Schoolஇல் சேர்ந்து படிக்கும் சிறுவன். அவனுக்கும் ஒரு வித்தியாசமான ஒரு நோய். அந்த நோயின் காரணமாய் எழுத படிக்க இயலாத நிலைமையில் அனைவரிடமும் திட்டு வாங்குகிறான் , வகுப்பு அறைகளை விட்டு வெளியே அனுப்ப படுகிறான். அதனால் தாழ்வு மனப்பான்மையில் வாடுகிறான்.அவனின் நோயை புரிந்து கொண்டு அவனிடம் இருக்கும் ஓவிய திறமையை கொண்டே அவனின் தாழ்வு மனப்பான்மையை போக்கும் ஆசிரியர். அற்புதமான படைப்பு அந்த சிறுவனை பார்க்கும் போது நம் பள்ளியில் நாம் பார்த்து பரிதாபப்பட்ட சில படிக்க இயலாத நண்பர்களை நினைவு படுத்தி விட்டு நம் மனதை துயரப்படுத்தும்... கடைசியில் அந்த சிறுவன் அணைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் முன்னால் மேடையிலே கௌரவபடுத்தப்படும் போது கண்களில் ஒரு துளி கண்ணீர் சிந்தாதவன் சத்தியமாய் கல் நெஞ்சகாரன்
No comments:
Post a Comment