Followers

Copyright

QRCode

Thursday, May 26, 2011

சகிக்க முடியாத தேசிய விருதுகள் ....



இந்த வருடத்திற்கான திரைப்பட துறைக்கான தேசிய விருதுகள் அறிவித்து பல நாட்கள் ஆகி விட்டது... வழக்கம் போல இந்த வருடமும் சரியான திறமைக்கு விருது வழங்காமல் அந்த விருதின் "பாரம்பரியத்தை" காப்பாற்றி இருக்கிறார்கள் நம் விருது  கமிட்டியாளர்கள்... நான் கிண்டலுக்கு சொல்லவில்லை நம் தேசிய விருதுகளின் தரம் எவ்வளவு கேவலமாக மாறி இருக்கிறது என்பதற்க்கு சிறந்த நடிகருக்கான விருதும் , சிறந்த நடனத்திர்க்காண விருதும் அவர்கள் யாருக்கு தந்திருக்கிறார்கள் என்பதே சாட்சி ...


ஆடுகளம் படத்திர்க்கு சிறந்த நடனத்திர்க்காண விருது ... அந்த படத்தில் அப்படி என்ன விருது கொடுக்கும் அளவுக்கு தகுதியான நடனத்தை  பார்த்தார்கள் என்று தெரியவில்லை .... கைலியை முகத்தில் பொத்தி கொண்டு டிக்கியையும் இடுப்பையும் ஆட்டுவதற்க்கு பேர் நடனமாம் , அதற்க்கு ஒரு விருது வேறா? பரத நாட்டியம் , கதகளி என்று பல பாரம்பரியமான , அழகியலான நடன வடிவங்களை உலகிற்க்கு தந்த இந்திய திருநாட்டில் இப்படி ஒரு நடனத்திர்க்கு விருது... கேட்கவே கேவலமாக இருக்கிறது .... சரி மக்கள் அந்த நடனத்தை பெரிவாரியாக ரசித்தார்கள் , மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று மக்களின் ரசனைக்கு மதிப்பளித்து அந்த விருதை கொடுத்திருப்பார்கள் என்று சொன்னால் , இதை விட மக்களால் அதிகம் ரசிக்கபட்ட முன்னாள் இடை அழகி சிம்ரன் ஆடிய ஆல்தோட்ட பூபதி மாதிரியான அறைவேக்காடு பாடல்கள் அனைத்திர்க்கும் அவர்கள் தேசிய விருது தந்திருக்க வேண்டுமே? .... என்னை பொறுத்தவரை அதற்க்கும் ஆடுகளத்திர்க்கும் எந்த வித்தியாசமும் இல்லை ... தனுஷ் டிக்கியை ஆட்டினால்  விருது , சிம்ரன் இடுப்பை ஆட்டினால்  அது ஆபாச பாடலா? மக்கள் ரசிப்பதற்கெல்லாம் விருது தரவேண்டும் என்றாள் வருடா வருடம் நீங்கள் சிறந்த நடிக்கைக்கான விருதை ஷகீலா ஆண்டிக்குதான்  தர வேண்டும் .... இந்த மாதிரியான இரண்டாம்தர நடனங்களுக்கு விருது தருவதை விடுத்து , நம் பாரம்பரிய நடனங்களை வெறும் பத்மஸ்ரீ பத்மவிபூசன் பட்டங்களுக்குள் அடைக்காமல் சினிமாவிலும் அந்த மாதிரியான கலைஞர்களை தேடிபிடித்து அங்கீகாரம் கொடுத்தால் அந்த கலைகள் சினிமாவிலும் உயிர்பெறுமே....


இரண்டாவது சிறந்த நடிகருக்கான விருது தனுஸிர்க்காம் .... அழுக்கு கைலி , அரை மொட்டை தலை , நாளுநாள் தாடி வைத்து கொண்டு மதுரை வட்டார மொழியை பேசிவிட்டால் அவர் சிறந்த நடிகரா? இந்த கெட்டப் , மதுரை தமிழ் இதை தவிர மாப்பிளை தனுசிற்க்கும் ஆடுகளம் தனுஸிர்க்கும் நடிப்பில் வேறு எந்த வித்தியாசமும் எனக்கு சத்தியமாக தெரியவில்லை .... கோபம் , சோகம் , வேகம் , பாசம் , காமெடி இப்படி நவரசங்களுக்கும் ஒரே முகபாவனை , ஒரே மாடுலேசன் .... தனுஷ் இந்த படத்தில் ஏதாவது ஒரு காட்சியிலாவது  மிக நுட்பமான அந்த காட்சிக்கு தேவையான முக பாவத்தை , மாடுலேசனை வெளிபடுத்தி இருக்கிறாரா? படத்தின் கதாநாயகி எல்லா காட்சிகளிலும் ஒரே மாதிரி சிரிப்பதை போலத்தான் தனுசும் படம் முழுவதும் ஒரே மாதிரி நடித்திருந்தார் , அந்த ஒரே மாதிரி சில காட்சிகளில் சிறப்பாக இருந்திருந்தாலும் தேசிய விருது அளவுக்கு கண்டிப்பாக வொர்த் இல்லை  ....  எனக்கு இந்த முழு படத்திலேயும் தனுஷ் காட்டிய நடிப்பு திறமையை விட  , உனக்கு அவசியம் தெரியனுமா , என் மார்பை பிடித்து கசக்குனான் போதுமா?” என்று வெடித்து அழும் ஒரே காட்சியில் அங்காடி தெரு அஞ்சலி கண்களில் காட்டும் கோபம் , ஆற்றாமை , சோகம் ஆயிரம் மடங்கு அதிகமாகவே தேசிய விருதுக்கு தகுதியானது ... அஞ்சலிக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் ... 

பிதாமகன் விக்ரம் கண்டிப்பாக இந்த விருது பட்டியல் வெளி வந்த நாள் சுவற்றில் முட்டி முட்டி அழுதிருப்பார் .... அவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் ... இனிமேலாவது விருது வாங்கணும்னு உடம்ப வருத்தி கஷ்டபடாதீங்க பாஸ்,  அந்த விருது அந்த அளவுக்கு வொர்த் இல்லைனு அவணுகளே ஒத்துகிட்டாணுக , கைலியும் முண்டாபனியனும் கட்டிக்கிட்டு தூத்துக்குடி பாஷை பேசி நடிங்க , விருது கன்பர்ம்.. பாவம் நம் அறிவுஜீவி முன்னாள் இயக்குனர்களுக்கு இதுதான் சிறந்த நடிப்பாக தெரிகிறது....  


இந்த விருதில் இன்னொரு காமெடி சிறந்த திரைக்கதை விருது .. பேசாமல் இவர்கள் எந்திரனுக்கே சிறந்த திரைக்கதை விருது கொடுத்திருக்கலாம் ... அதற்க்கும் இதர்க்கும் பெரிய வித்தியாசமில்லை .... பாக்கியராஜ் அவர்களுக்கு ஏன் கடைசி வரை சிறந்த திரைகதைக்கு விருது கிடைக்கவில்லை என்று எனக்கு இப்பொழுதுதான் புரிகிறது ... பாக்கியராஜ் இவர்களை மன்னிப்பாராக....


விண்ணை தாண்டி வருவாயா ஏ.ஆர்.ரகுமான் , மைனா சுகுமார் , மதராசபட்டிணம் செல்வகுமார் இந்த மூவரின் பெயரும் விருது பட்டியலுக்கு பரிசலிக்கபடவே இல்லையாம்.... என்ன கொடுமை இது?  

30 comments:

ராஜகோபால் said...

//பிதாமகன் விக்ரம் கண்டிப்பாக இந்த விருது பட்டியல் வெளி வந்த நாள் சுவற்றில் முட்டி முட்டி அழுதிருப்பார் .... அவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் ... இனிமேலாவது விருது வாங்கணும்னு உடம்ப வருத்தி கஷ்டபடாதீங்க பாஸ், அந்த விருது அந்த அளவுக்கு வொர்த் இல்லைனு அவணுகளே ஒத்துகிட்டாணுக//


தேசியவிருது பொட்டி கடைல விக்கற முட்டாய் மாதிரி ஆக்கிட்டானுங்கலே...

Katz said...

சரியான கருத்து.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மோசம் என்று சொல்ல முடியாது எந்த அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்கிறார்கள் என்று தெரிய வில்லை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தமிழ்மணத்தில் இணைத்து விட்டு ஓட்டும் போட்டாயிற்று...

"ராஜா" said...

//தேசியவிருது பொட்டி கடைல விக்கற முட்டாய் மாதிரி ஆக்கிட்டானுங்கலே...

தெரிவு செய்வதை கொஞ்சம் திருந்த செய்யலாம் , இல்லை என்றாள் இப்படிதான் ஆகும்

"ராஜா" said...

@ Katz

நன்றி

"ராஜா" said...

@ # கவிதை வீதி # சௌந்தர்

நன்றி நண்பரே ...

Anonymous said...

நியாயமான கருத்தாய் தான் தோணுது ...

SURESH BABU said...

உங்கள் வலைப்பக்க முகப்பை பார்த்தாலே தெரியுது நீங்க யாருடைய ஆள் என்று. ஆகவே நடுநிலையாக நின்று விமர்சித்து இருப்பீர்கள் என்பதை ஏற்க முடியாது.

Karthikeyan said...

//பாக்கியராஜ் அவர்களுக்கு ஏன் கடைசி வரை சிறந்த திரைகதைக்கு விருது கிடைக்கவில்லை என்று எனக்கு இப்பொழுதுதான் புரிகிறது //

இது மிகச்சரி. எனக்கும் இந்த ஆற்றாமை உண்டு. “இது நம்ம ஆளு” படத்தில் கொஞ்சம் பிசகி இருந்தாலும் பெரிய கலவரம் ஆகிவிடக்கூடிய கதை. அதை அழகாக தன் திரைக்கதையில் நகர்த்தி இருப்பார் பாக்யராஜ். திரைக்கதைக்கு ஒரு மேதை எனில் அது பாக்யராஜ்தான். அதற்கு இன்னும் முக்கிய காரணம் அவர் “கலை ஞானம்” என்னொரு நபரை பக்கத்தில் வைத்துக்கொண்டதுதான். (இவர்தான் ரஜினியை முதலில் பைரவி படத்தில் ஹீரோ ஆக்கியவர்)

Karthikeyan said...

//தனுஷ் டிக்கியை ஆட்டினால் விருது , சிம்ரன் இடுப்பை ஆட்டினால் அது ஆபாச பாடலா//

- நச் கமெண்ட் இது -

Anonymous said...

இதில் விக்ரம் தலை தலையாக அடித்துக் கொள்வாரோ இல்லையோ. நான் தலை தலையாக அடிச்சுக் கொண்டிருந்தது உண்மை. நெத்தி அடி பதிவு. தனுஷ் ஏதோ ஒரு படத்தில் அந்த மாதிரி (சுப்பராக என்பதற்கு இலங்கை வழக்கு) நடிச்சு பிச்சு உதறி இருக்கிறார் என்று பதிவர்கள் எல்லாம் சொன்னதை நம்பி சொட்ட சொட்ட கண் முழித்து அந்தப்படத்தைப் பார்த்துவிட்டு கொலைவெறியுடன் நான் திரிந்தது பற்றி யாருக்கும் தெரிய நியாயமில்லை. அதன் பிறகு திருட்டு - ஓசி-டீவிடி கிடைத்தாலும் தனுஷ் படங்களைப் பார்ப்பதில்லை. அவ்வ்வ்வ்வ்வ‌

goma said...

என் கருத்தும் இதுதான் ...எனக்கு எழுத நேரமில்லை ஆகவே உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்.
அடுத்த ஆண்டாவது தரமானவர்களுக்கு விருது தரப்பட்வேண்டும் என்று எதிர்பார்ப்போம்.

"ராஜா" said...

@ கந்தசாமி

நன்றி

"ராஜா" said...

@ Karthikeyan

கலைஞானம் பற்றி நான் அதிகம் கேள்விபட்டதில்லை ... ராசுகுட்டி பாத்திருக்கீங்களா ... அதன் முதல் காட்சியிலேயே படத்தை பற்றி நமக்கு புரியவைத்திருப்பார்... he really deserve for awards ... but unfortunately awards are not deserve for him ... வேற எப்படி சொல்ல?

"ராஜா" said...

@ SURESH

தனுஷை பார்த்தேல்லாம் நாங்கள் பொறாமைபடும் அளவுக்கு அவர் இன்னும் அந்த அளவுக்கு அப்பாடக்கர் ஆகவில்லை நண்பா ..

"ராஜா" said...

@ angusamy

//தேர்வு குழுவில பாலு மகேந்த்ரா இருந்தாருன்னு எங்கயோ படிச்சதா ஞாபகம்அதான் கிடைச்சிருக்கு

அப்படியா சேதி... அப்படினா அவனவன் அவனுக்கு யார புடிச்சி இருக்கோ அவனுக்கு விருது கொடுக்கலாமா ? அப்ப பேர் மட்டும் எதுக்கு தேசிய விருதுன்னு வச்சிருக்காணுக...

"ராஜா" said...

@ அனாமிகா துவாரகன்

சேம் பிளட் ...

"ராஜா" said...

@ goma

//அடுத்த ஆண்டாவது தரமானவர்களுக்கு விருது தரப்பட்வேண்டும் என்று எதிர்பார்ப்போம்.

இது நடக்கும்னு எனக்கு நம்பிக்கை இல்லை ... அடுத்த வருடம் பாலசந்தரோ , இல்லை பாரதி ராஜாவோ உக்காந்துகிட்டு அவரோட வழிதோன்றல்களுக்கு கொடுப்பாங்க ...

Karthikeyan said...

மக்களோட Feedback பாக்கும்போது கிட்டத்தட்ட எல்லாரும் வெறில தான் இருக்காங்க போல.

இது நம்ம ஆளு படத்தில பாக்யராஜ் கூட ஒரு ஐயர் காமெடி பண்ணிக்கிட்டு இருப்பார் தெரியுமா? அவர் தான் கலை ஞானம். நிறைய பேருக்கு இவரை பற்றி தெரிவதில்லை. நல்ல திரைக்கதை என சிலாகிக்கப்பட்ட உதிரிப்பூக்கள், ஆறு புஷ்பங்கள் மாதிரி நிறைய கதைகள் இவரோடதுதான். ஆனால் பேர் என்னவோ இயக்குனர்களுக்கு போய்விட்டது. நடிகை மாதவி உள்ளிட்ட நிறைய பேரை அறிமுகமும் செய்துள்ளார். பாக்யராஜின் அனைத்து கதைகளிலும் இவரது பங்களிப்பு அதிகம் (தூறல் நின்னு போச்சு, ஒரு கை ஓசை, சின்ன வீடு, பாமா ருக்மணி, அந்த 7 நாட்கள் எல்லாம் இவர் கதைதான்). சமீபத்தில் ரஜினி இவருக்கு சத்தமில்லாமல் நிறைய பொருளுதவி செய்துள்ளார். சூப்பர் ஸ்டார் சூப்பர்தான்.

Karthikeyan said...

கதைகள் வேண்டுமானால் கலை ஞானமாக இருக்கலாம். ஆனால் திரைக்கதை வசனம் எல்லாம் பாக்யராஜின் ஞானம்தான்.

"ராஜா" said...

அந்த 7 நாட்கள் படம் இவரோட கதையா? திரைக்கதை யாரோடது .... தமிழ் சினிமாவில் வந்த மிக சிறந்த திரைகதைகளில் எனக்கு தெரிந்து இந்த படமும் ஒன்று ... பாக்கியராஜின் மாஸ்டர் பீஸ் படம் அது ..

ஆதவா said...

சிலசமயங்களில் விருதும் விருது பெறுபவர்களும் சந்தேகத்திர்குரியவர்களாகிவிடுவார்கள். மூன்றாம்பிறையில் கமலைக் காட்டிலும் ஸ்ரீதேவி நன்கு நடித்திருப்பார், ஆனால் விருது கமலுக்கு... பிதாமகனில் விக்ரமைக் காட்டிலும் சூர்யா நன்கு நடித்திருப்பார்... இந்தமாதிரி சில சர்ச்சைகள் நிறைய உண்டு. இந்த அரசிய ஆஸ்கர் வரையிலும் நிகழ்ந்திருக்கிறது! இன்றூவரையிலும் உலக ரசிகர்களின் டாப் டென் பட்டியலில் முதலிடத்திலிருக்கும் ஷாஷாங் ரிடெம்ப்ஷன் ஒரு விருதுகூட பெறவில்லை போன்ற நிகழ்வுகளும் நடந்தேயிருக்கிறது.

சரி தனுஷ் மேட்டருக்கு வருவோம். உங்களுக்கு விருது வழங்கப்பட்டது தவறானதாகத் தெரிகிறதா, அல்லது பெறப்பட்டவ தவறான ஆள் எனத் தெரிகிறதா? ஆடுகளம் படத்தை வெறும் படமாகவே பார்த்திருக்கிறீர்கள் என்று மட்டும் தெரிகிறது. அதற்குப் பின்னைய உழைப்பு, சமீபத்தில் வேறெந்த படங்களிலும் கிடையாது. தனுஷின் நடிப்பு மற்ற படங்களைக் காட்டிலும் மிக வித்தியாசமாகவே இருந்தது. குறிப்பாக மதுரை வட்டத்திற்கேற்ப மொழி, உடல்வாகு, (மதுரைக்காரர்களைக் கேட்டுப்பாருங்களேன், ஓரிடத்தில் சுண்டு விரலை சற்றே மடக்கியவாறு நீட்டுவார்.. அப்போது முகத்தில் தெரியும் எக்ஸ்பிரஷன்ஸ் அசல் மதுரைவாசியைக் காண்பித்தது) போன்றவற்றை மாற்றியமைத்து நடித்திருந்தது விருதுக்குத் தகுதியான ஒன்று!! நீங்கள் ஆடுகளத்தில் தனுஷை மட்டுமே பார்த்திருப்பீர்கள், எனக்கு கருப்பு மட்டும்தான் தெரிந்தான்!! சோ, வித்தியாசம் அதுதான்.

நடனத்திற்கான விருதுக்குத் தகுதியானதா என்று ஆராய, அதன் போட்டி திரைப்படங்களைக் கண்டிருக்கவேண்டும். நடனம் என்றாலே, பரதம், குச்சிப்புடி, கதக்களி மட்டுமேயல்ல, நவீன வாழ்விலும் இன்னும் மிச்சமிருக்கும் அடித்தட்டு மக்களின் ரசனையும், நீண்டகால விழுமியங்களைத் தாங்கி நிற்கும் குத்தாட்டமும் விருதுக்கான தகுதிகள் பெறுகின்றன. யதார்த்த வாழ்வில் யாரும் ஒரு விஷயத்திற்காக/வெற்றிக்காக “பரத நாட்டியம்’ ஆடுவதில்லை... நீங்களோ நானோ, குத்தாட்டம் போடுவதுதான் யதார்த்தம்!!

மூன்றாவதாக திரைக்கதை மற்றூம் இயக்கம்..
ஆடுகளம் என்பது வெறும் விளையாட்டுத் திடல் அல்ல.. அது ஒரு குறியீடு. இரு துருவங்களின் வன்மம் நிறைந்த மோதல். அதை சேவல் வழியே காட்டியிருப்பார்.. கவிஞர் ஜெயபாலனின் ஒவ்வொரு செய்கைகளும் மிக நுணுக்கமாக இறங்கும், அதேசமயம், அவர்மீதான தனுஷின் மதிப்பு ஏறும்.. இது படத்தில் எத்தனைபேர் புரிந்து கொண்டிருப்பார்கள்?? மெல்ல மெல்ல விஷம் போல கருப்பு எனும் தன்னுடன் இருந்த மனிதன் மீதான கோபமும், வன்மமும் அவ்வளவு அழகாக வேறெந்த படத்திலும் காண்பிக்கவில்லை நண்பரே.. இயக்கமும் திரைக்கதையும் ஓகே...

மற்றபடி பாக்கியராஜுக்கு விருதுகிடைக்காதது குறித்து பலவாறாக யோசித்ததுண்டு... பாரதிராஜாவும் இளையராஜாவும் பல விருதுகள் பெற்றிருக்கவேண்டும்!!

ஆடுகளம் திரும்ப ஒருமுறை பாருங்கள், நவீனகால யதார்த்த வாழ்வில் இது தவிர்க்க முடியாத ஒரு உலகத் திரைப்படம் என்பதை ஒருவேளை நீங்கள் உணரலாம்!!

Karthikeyan said...

MAIN STORY - கலை ஞானம்
திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாம் பாக்யராஜ்தான். இவர் கதைகளை இயக்குனருக்கு கொடுத்து அதற்கு மட்டும் பணம் வாங்கிக்கொள்வார். இவர் மாதிரி நிறைய பேர் திரையுலகில் இருந்தனர். சிங்கமுத்து வடிவேலுக்கு காமெடி ட்ராக் போட்ட மாதிரி கவுண்டருக்கும் ஒருத்தர் இருந்தார். விவேக்கிற்கு செல் முருகன். ஒரிஜினலாக காமெடி ட்ராக் போட்டது கலைவாணர் மட்டும்தான். நாகேஷ் இயக்குனர் சொல்வதை நடிப்பார். அவ்வளவுதான். சந்திரபாபு, டனால் தங்கவேலு, ஜனகராஜ் ஆகியோர் இயக்குனர் சொல்வதை அவர்கள் பாணியில் மாற்றிக்கொண்டவர்கள். ஆனால் சுருளிராஜன் தனியாக காமெடி ட்ராக் போட்டவர். 40 வயதிலேயே குடியால் இவர் இறந்து போனதால் அடுத்த தலைமுறைக்கு இவர் தெரியாமலேயே போய்விட்டார். நம் துரதிர்ஷ்டம் இவர் நடித்த படங்கள் எல்லாம் ராஜ் டிவியில் இருக்கிறது. நாம் அந்த சேனலை பார்ப்பது இல்லையே! மாந்தோப்பு கிளியே படம் சுருளியின் மாஸ்டர் பீஸ்....

Karthikeyan said...

ராஜா... கட்டாங்குடியில் திருவிழாவாமே!! அங்கு பானை விளிம்பில் கத்தி தலைகீழாக நின்றதாக இன்று பேப்பரில் படித்தேன். ஆச்சரியம்தான்.

ஆதவா said...

எனது ரிப்ளை ஸ்பாமில் சேர்ந்துவிட்டது என நினைக்கிறேன்...

sdr said...

தமிழனுக்கு தமிழனே எதிரினு இதில இருந்தே தெரியுது........................

"ராஜா" said...

//ராஜா... கட்டாங்குடியில் திருவிழாவாமே!! அங்கு பானை விளிம்பில் கத்தி தலைகீழாக நின்றதாக இன்று பேப்பரில் படித்தேன். ஆச்சரியம்தான்.

yes sir, but i can't attend the festival...

"ராஜா" said...

//தமிழனுக்கு தமிழனே எதிரினு இதில இருந்தே தெரியுது........................


tank you for our understanding...

Durgeshwaran said...

தேசிய விருதுன்னா என்ன சும்மாவா?? பெரிய ஜாம்பவான்கள் வாங்குன அவார்ட இவனுகளுக்கு குடுத்தா அது சரி இல்ல... ரொம்ப ஹோம் வொர்க் பண்ணி வருசக்கணக்குல உருவாகி அவார்ட் வாங்குன காதல் கோட்டை, பிதாமகன், நான் கடவுள் படங்கள் எல்லாம் இதுக்கு நிகரா????? ரொம்ப கொடுமடா சாமி இது!!!

LinkWithin

Related Posts with Thumbnails