Followers

Copyright

QRCode

Friday, June 3, 2011

அரசியல் அணிலும் , சமச்சீர் கல்வியும்
ஒரு காமெடி கும்பல் ஜெயலலிதாவின் வெற்றிக்கு நாங்கள் அணிலாக இருந்து உதவி இருக்கிறோம் என்று வெக்கம் இல்லாமல் பேட்டி கொடுத்திருக்கிறது ... எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு,  நீங்க எப்ப தைரியமா அம்மாவுக்கு ஆதரவு கொடுத்தீங்க பையன் ஸார்  , இதே தேர்தல் முடிவு மாறி வந்திருந்தா என்ன சொல்லி இருப்பீங்க , எங்க அப்பா என்கிட்ட அம்மாவுக்கு ஆதரவு தர சொல்லி எவ்வளவோ கெஞ்சினாறு  ஆனால் கலைஞரின் பொற்கால ஆட்சியை எதிர்த்து என்னால் பிராசாரம் செய்ய முடியாது என்று சொன்னேன் , நான் என்றுமே கலைஞர் மற்றும் அவர் குடும்பத்தினரின் நண்பன்தான் என்று சூடு சொரணையே இல்லாமல் பேட்டி கொடுத்திருப்பீங்க ... உண்மையில் நீங்கள் அணில் இல்லை , பச்சோந்தி .... 

இவ்வளவு காலமும் ஆட்சியில் இருப்பவர்களின் அடிவருடிகளாய் இருந்து கொண்டு நினைத்ததை சாதித்து கொண்டு , தேர்தல் சமயத்தில் பல்டி அடித்து இப்பொழுது அம்மாவுக்கு அடிவருட தயாராகி விட்டார்கள் இந்த வெட்கம் கெட்ட அப்பாவும் புள்ளையும் ... ஆனால் இவர்கள் நினைப்பது என்றும் நடக்காது , மக்களும் இவர்களை மதிக்கவில்லை , இவர்கள் அடிவருடிவிட ஆவலாய் இருக்கும் அம்மாவும் இவர்களை மதிக்கவில்லை ... சூப்பர் ஸ்டாரையே கண்டுகொள்ளாத அம்மா இந்த பிஸ்கோத்துகளையா கண்டுகொள்ள போகிறார் ...


இந்த பேட்டியில் பையன் நான் அரசியலுக்கு வந்து கண்டிப்பாக  என் ரசிகர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுப்பேன் என்று உளறி தள்ளி இருக்கிறார் ..மூலையில சும்மா இருக்கிற ஆப்புல தானா ஏறி உக்காருறது இதுதான் ... மக்களே அவருக்கும் அவர் ரசிகர்களுக்கும் நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்கத்தான் அவர் அரசியலுக்கு வர போறாராம் அத அவரே ஒத்துகிட்டாறு...  இந்த தேர்தலில் ஒரு அப்பா பையனுக்கு மாம்பழத்தில் நல்லா குத்தி சிறப்பான எதிர்காலத்தை  பரிசளித்ததை போல இவர்களும்  அரசியலுக்கு வந்தவுடனே இவர்களுக்கும் நல்லா குத்து குத்துன்னு குத்தி நல்ல வாழ்க்கையை அவர்களுக்கு அமைத்து கொடுங்கள் ...

இந்த காமெடி பீஸுகளுக்கு அம்மா சீக்கிரம் குச்சி மிட்டாயை வாயில் சொருகி வீட்டுக்கு அனுப்பி வைத்தால் நல்லா இருக்கும்..

-------------------------------------------------------------------------

இன்றைய அரசியலின் ஹாட் டாபிக் சமச்சீர் கல்வி திட்டம்தான்... உண்மையில் சமசீர் கல்வி என்பது எங்களை போன்ற கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான்... பாடங்களில் இரண்டு வகை உண்டு .. ஒன்று நம் சொந்த புத்தியினால் மட்டுமே படிக்க முடிந்த,  புரிந்து கொள்ள முடிந்த பாடங்கள் ... கணிதம் இதற்க்கு நல்ல உதாரணம்... எவ்வளவுதான் காசு செலவு பண்ணி படித்தாலும் மண்டையில் மசாலா இல்லை என்றாள் இத்தகைய பாடங்களில் தேறுவது கடினம்தான்... கார்பரேசனில் படித்தாலும் சரி மெட்ரிகுலேசனில் படித்தாலும் சரி மூளை இல்லை என்றாள் ஒன்றும் சாதிக்க முடியாது ... வருடா வருடம் கணிதத்தில் மட்டும் அதிகம் பேர் செண்டம் அடிக்க காரணம் இது கடவுளாலேயே படைக்கபட்ட சமச்சீர் பாடம் ...


இரண்டாவது வகை தொடர்ச்சியான பிராக்டீஸ் மூலம் மட்டுமே கற்று கொள்ள முடிந்த பாடங்கள்... ஆங்கிலம் போன்ற வேற்று மொழி பாடங்கள் இதற்க்கு நல்ல உதாரணம் ... இந்த பாடங்களில் மட்டும்தான் எங்களை போன்ற கிராமப்புற மாணவர்கள் மிகவும் பின்தங்கி போவார்கள் .. நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட மற்ற பாடங்களில் எல்லாம் 90 சதவீதத்திர்க்கும் மேல் எடுத்து விட்டு ஆங்கில பாடத்தில் வெறும் 60 , 70 என்று எடுத்திருப்பார்கள் ... காரணம் அந்த பாடத்தில் அவர்களுக்கு கொடுக்கபடும் குறைவான பயிற்ச்சி ... ஆனால் மெட்ரிக்குலேசன் முறையில் அவர்களின் பாடதிட்டமே ஆங்கிலத்தில் அதிக பயிற்சி அளிக்கும்படியாகத்தான் அமைக்கப்பட்டு இருக்கும் ... 

என்னுடன் கல்லூரியில் படித்த மெட்ரிக்குலேசன் மாணவர்கள் பெரும்பாலானோர் சராசரிக்கும் குறைவான புத்தி கூர்மை உடையவர்களாகவே இருப்பார்கள் , ஆனால் அவர்களின் ஆங்கில புலமை நன்றாக இருக்கும் ... அதைவைத்து அவர்கள் எளிதாக நல்ல வேலைக்கு சென்று விடுவார்கள் .,, ஆனால் எங்களை போன்ற ஸ்டேட் போர்டு  மாணவர்கள் நல்ல திறமை இருந்தும் ஆங்கிலத்தில் திண்டாடி நல்ல வாய்ப்பை எல்லாம் கோட்டை விடுவோம் ... இதற்க்கு என்னுடய நண்பர்கள் வட்டதிலேயே எவ்வளவோ உதாரணங்களை சொல்ல முடியும்... இப்படி பாடதிட்டங்களிலும் , பயிற்சி முறைகளிலும் இருக்கும் ஏற்ற தாழ்வுகள் கடைசியில் எங்கள் வாழ்க்கையவே மாற்றி விட்டன ... அதனால்தான் சொல்கிறேன் சமசீர் கல்வி முறை எங்களை போன்ற கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ...


ஆனால் இந்த அருமையான திட்டத்திலும் அரசியல் கலந்து விட்டதுதான் தமிழ்நாட்டை பிடித்த சாபம் ... திரை கூத்தாடிகளின் ஜால்ராவை கேட்டு கேட்டு புளித்து போன முன்னாள் முதல்வர் , , எப்படி இன்று இந்தியாவே காந்திக்கு , பகத் சிங்கிற்க்கு மரியாதை கொடுத்து கொண்டிருக்கிறதோ அது போல வரும்கால தமிழகம் முழுவதும் தனக்கு ஜால்ரா அடிக்க வேண்டும் என்று நினைத்து இந்த அருமையான திட்டத்தையே  கெடுத்து விட்டார் ... காமராஜர் கக்கன் போன்ற "கறைபடிந்த" ஊழல்வாதிகளின் பிடியில் இருந்து இந்த தமிழ்நாட்டையே  கருணாநிதி என்னும் "உத்தமபுத்திரந்தான்" காப்பாற்றினார் என்று வரலாற்றை திரித்து மாணவர்களுக்கு அறிவு அமுதோடு கொஞ்சம் நஞ்சையும் சேர்த்து ஊட்டும் வகையில் தன் அடிவருடிகளை வைத்து பாடங்களை அமைத்து இருக்கிறார் ... இலவச திட்டங்கள் மூலம் நான்தான் இனி தமிழக நிரந்தர முதலவர் என்று எண்ணி இந்த காரியத்தை துணிந்து செய்து விட்டார் .. ஆனால் அவர் ஒன்று நினைக்க மக்கள் ஒன்று செய்து விட்டார்கள் ...


அம்மா வந்தவுடன் இந்த காரணத்தை காட்டி , சமசீர் கல்வி முறையை தள்ளி வைத்து விட்டார் என்று கலைஞர் அறிக்கை விடுகிறார் ... இதனால் 200 கோடி செலவு செய்து அச்சடித்த புஸ்தகங்கள் வீணாகி விட்டன என்று எல்லாரும் புலம்பி கொண்டு இருக்கிறாராகள் .. காசு வீணாகிறது என்றுதான் புலம்புகிறார்களே தவிர யாருமே மானவர்களின் நலன் மேல் அக்கறை உள்ளதை போல பேசவில்லை .... கலைஞர் கொண்டு வந்த திட்டம் என்பதற்காக அம்மா இதை தள்ளி வைத்தால் அது மிக பெரிய அயோக்கியதனம்ஆனால் ஆளும் கட்சியோ இதை ஒத்துக்கொள்ளாமல் , சமசீர் கல்வி என்று சொல்லிக்கொண்டு இவர்கள் அமைத்து இருக்கும் பாடதிட்டங்கள் எல்லாமும் மிகவும் கீழ்மட்டமாகவே உள்ளன ... பள்ளத்தில் இருப்பவர்களையே மேலே கொண்டு வருவதற்க்கு பதில் , இவர்கள் மேலே இருப்பவர்களையே பள்ளத்தில் தள்ளும் செயலை செய்து இருக்கிறார்கள் .... நாங்கள் இப்பொழுது மீண்டும் ஒரு முறை இந்த பாடத்திட்டங்களை  ஆராய்ந்து கொண்டு இருக்கிறோம் , அதனால்தான் இப்போதைக்கு இதை தள்ளி வைக்கிறோம் என்று காரணம் சொல்லுகிறார்கள் ....

எது எப்படியோ மாணவர்கள் மேல் உண்மையிலேயே இவர்களுக்கு அக்கறை இருந்தால் இவர்கள் சில காரியங்களை செய்ய வேண்டும்

  1. இந்த பாடத்திட்டம் உண்மையிலேயே மோசமாக வடிவமைக்க பட்டு  இருந்தால் , அதற்கான காரணங்களை ஒரு விரிவான அறிக்கையாக தயாரித்து மக்களுக்கு வெளிபடுத்தி, நீதிமன்றத்தின் மூலம் சம்பந்தபட்டவர்களுக்கு (அதாவது அதை வடிவமைத்தவர்கள் , அதற்க்கு துணையாக இருந்தவர்கள்) தண்டனை வாங்கி தரவேண்டும் ... இதை வெறும் 200 கோடியாக பார்க்காமல் அதனால் விளையபோகும் பின்விழைவுகளை கருத்தில் கொண்டு அந்த தண்டனை அமையவேண்டும்

  1. எந்த கட்சி சார்பும் இல்லாத பேராசிரியர்களை கொண்டு உலக தரத்தில் புதியதாக பாடதிட்டம் வடிவமைக்க வேண்டும் .... அதை எவ்வித பாகுபாடும் இல்லாமல் தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் ...
  2. ஒருவேளை இந்த பாடதிட்டதில் கலைஞர் ஜால்ட்ராவை தவிர மற்ற அனைத்தும் உண்மையிலேயே நல்ல முறையில் வடிவமைக்கபட்டிருந்தால் இந்த அரசு அந்த ஜால்ட்ரா பக்கங்களை மட்டும் பாடதிட்டதில் இருந்து நீக்கி விட்டு இந்த கல்வி முறையை உடனே கொண்டு வரவேண்டும் சாப்பாட்டில் இருக்கும் கல்லை எடுத்து ஓரமாக ஒதுக்குவதை போல ... பரீட்சைக்கு இதில் இருந்து கேள்வி கேட்க மாட்டார்கள் என்று சொல்லிவிட்டால் ஒருவனும் அதை சீண்ட மாட்டான் ...

அரசியல்வாதிகளே இன்றைய மாணவர்கள்தான் எதிர்கால இந்தியா ... இது அவர்களின் பிரட்சனை... எந்த  விதமான அரசியல் காழ்புணர்ச்சியோ , பழிவாங்கும் எண்ணமோ இல்லாமல் அவர்களுக்கு நல்லது செய்யுங்கள் ... உங்கள் காழ்புணர்ச்சியை காட்ட வேறு எத்தனையோ களங்கள் உள்ளன .. அங்கு உங்கள் சண்டையை வைத்து கொள்ளுங்கள்,, இவர்களை விட்டு விடுங்கள் ...  


சமசீர் கல்வி திட்டம் போல் அடுத்து சமசீர் மதுபான திட்டம் வருமா?

6 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

அரசியல் மாற்றங்களில் எல்லாம் மாறுகிறது..
ஏழை மக்களைத்தவிதை...


தமிழக அரசியல் ஏன் இவ்வளவு தரம் தாழ்ந்துச் செல்கிறது என்று தெரியவில்லை...

இவர்களது நோக்கம் திமுக ஆட்சியில் கொண்டுவந்த எதையும் ஏற்றகூடாது என்பதே..

அற்புறம் கல்வியாவது சமச்சீராவது...

கந்தசாமி. said...

அணில் - விஜய்


கல்வியிலும் அரசியல் கலப்பது மிக வேதனையானது தான்..

நல்ல பதிவு பாஸ்...

Karthikeyan said...

சமச்சீர் கல்விக்கான பதிவு நன்றாக இருந்தது. சொல்லப்போனால் சரியாக இருந்தது. நானும் தமிழ் மீடியத்தில் படித்து வந்தவன்தான். பொறியியல் கல்லூரிகள் அதிகம் இல்லாத காலத்தில் வேறு வழியின்றி பாலிடெக்னிக் சேர்ந்தேன். என்னுடம் படிக்க வந்த மெட்ரிக் மாணவர்களை விட என்னால் அதிகமாக யோசிக்க முடிந்தது. ஆனால் வெளிப்படுத்த முடியவில்லை. உங்கள் கூற்று முற்றிலும் சரியானதே...

அப்புறம் டாக்டரு மேட்டரை எல்லாம் ஏன் இந்த பதிவோடு போடுறீங்க ராஜா? சின்னப்புள்ளத்தனமா பேசிக்கிட்டு இருக்கிற டாக்டர் ஐயா அரசியல்ல பெரிய ஆளா வரட்டும்.. எல்லாறும் தலைய பிச்சிக்கிட்டு இருக்கலாம். பேசத்தெரியாதவன் எல்லாம் பேச்சாளரா ஆவதும் அரசியல் தெரியாதவன் எல்லாம் அரசியல்வாதின்னு சொல்லி பினாத்திக்கிட்டு இருக்குறதும் நமது துரதிர்ஷ்டம்..

சமுத்ரா said...

good one

சங்கர் said...

http://www.youtube.com/watch?v=IuqQ0djeA90

http://www.youtube.com/watch?v=1QlmlXJtj9Q

சக்தி மசாலா தனி ரகம்.. விளையாடு மங்காத்தா..

உலக சினிமா ரசிகன் said...

ஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க.....மயிறானுங்க என்ற தலைப்பில் நானும் எனது கருத்தை சொல்லி உள்ளேன்.
மேலும் விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள் நண்பர்களே!

LinkWithin

Related Posts with Thumbnails