Followers

Copyright

QRCode

Monday, January 31, 2011

மச்சி படம் ஓட ஒரு ஐடியா சொல்லேன் : சந்தானம் ஸ்பெஷல்

எத்தன நாளைக்குதான் இவனுங்களை ஒட்டுறதுக்கு கவுண்டர  துணைக்கு கூப்பிட்டுகிட்டு இருக்கிறது .. அதான் ஒரு மாறுதலுக்கு இந்த தடவை நம்ம சந்தானம் நம்ம கதாநாயகர்களை கலாய்க்க போராறு ...
முதலில் நம்ம அடுத்த சூப்பர் ஸ்டார் , தொடர்ந்து படங்களில் அடிமேல் அடி வாங்கிக்கிட்டு இருக்கும் வி வருகிறார்...


வி : மச்சி , ஊருக்குள்ள யாருமே மதிக்க மாட்டேங்கிராணுகடா?

சந்தானம் : நான் அப்பவே சொன்னேன் படத்துல பொம்பளை வேஷம் போடாதடாண்ணு.. கேட்டயா? உன் மூஞ்ச சும்மா பாத்தாலே எவனும் மதிக்க மாட்டான்... இதுல பொம்பளை வேஷம் போட்டு வந்தா எவன் மதிப்பான்..

வி : அது இல்லடா மச்சி ... வீட்ட விட்டு என் பொண்டாட்டி தொரத்தி விட்டுடா? ஏதாவது ஒரு படம் ஹிட் கொடுத்தாத்தான் வீட்டுல சேத்துக்குவாளாம்? படம் ஹிட் ஆக ஏதாவது ஐடியா கொடென்...

சந்தானம் : சரி , பீர் வாங்கி கொடுத்திட்டு ஐடியா கேக்குற , உனக்காக இல்லைனாலும் இந்த பீருக்காகவாது ஐடியா தரேன்..

வி : சொல்லுடா நண்பா ..

சந்தானம் : படம் எதுவும் ஓட மாட்டேங்கிது .. ஒரு ஹிட் கொடுக்கணும் இதான உன் பிரச்சனை ... சரி நீ ஏன் டைரக்டர் பாலா படத்துல நடிக்க கூடாது? ஒரே படத்துல ஓஹோண்ணு வந்திரளாம்பா..

வி : போ  மச்சி .. அந்தாளு பப்ளிக்கா ஜட்டியோட நிக்க விட்டிடுவாறு... எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு மச்சி ...

சந்தானம் : ஆமா ஹீரோயின் கூட நீச்சல் குளத்துல குளிக்கிரமாதிரி சீன்ல எல்லாம் நீ இதுவரைக்கும் கோட் சூட் போட்டுதான் நடிச்சியோ ?

வி : அது எப்படி மச்சி? குளிக்கிற சீன்ல எல்லாம் ஜட்டியோடத்தான் நடிக்கணும் ...

சந்தானம் : அந்த வேலைக்கு மட்டும் ஜட்டியோட நில்லு..

வி : சீ .. அசிங்கமா பேசாத மச்சி

சந்தானம் : சரி வீடு , மணிரத்னம் படத்துல நடிக்கிறையா?

வி :  அந்தாளு இங்கிலீஷ் நெறையா பேச சொல்லுவாறு மச்சி ... நமக்கு அதெல்லாம் சரிபட்டு வராது .. நான் படிப்ப விட்டு பல வருஷம் ஆச்சி ...

சந்தானம் : அதுவும் வாஸ்தவம்தான் ... உனக்கு இங்கிலீஷ் வராது .. சரி நம்ம உலக நாயகன் மாதிரி பல கெட்டப் போட்டு நடிக்கிறையா? கண்டிப்பா படம் பிச்சிக்கிட்டு ஓடும்

வி : இல்ல மச்சி , கெட் அப் போடணும்னா நெறையா மேக் அப் போடனும் ... எல்லாம் கெமிக்கல் மச்சி .. ஸ்கின் அலர்ஜி .. நாம பண்ணுற தப்புக்கு நம்ம புள்ள குட்டிக எல்லாம் கஷ்டபடணுமா?

சந்தானம் : அதுவும் சரிதான் , அடுத்தவன் படத்துலதான் நடிக்க மாட்டேங்கிர , சரி நீயே டைரக்ட் பண்ணி நீயே நடியேன்

வி : போ மச்சி , எனக்கு நடிக்கவே தெரியாது இதுல டைரக்ஷன் வேரையா?

சந்தானம் : தெலுங்குள நமக்கு தெரிஞ்ச டைரக்டர் ஒருத்தர் இருக்காரு அவர்கீட்ட கொஞ்ச நாளைக்கு அசிஸ்டண்ட் டைரக்டர் வேலை பாத்து டைரக்ஷன் கத்துக்கோ ,,, ஒரு வருஷம் கழிச்சி நீயே டைரக்ட் பண்ணி நீயே நடி

வி : அசிஸ்டண்ட் டைரக்டர் வேலையா? நாய்  பொழப்பு மச்சி ...

சந்தானம் : இப்படி அட்டு படமா எடுத்து ப்ரொடியூசர் பொழப்ப கெடுக்குறதுக்கு நாய் பொழப்பு எவ்வளவோ பரவாயில்லை..

வி : வேற ஏதாவது நல்ல ஐடியா கொடு மச்சி

சந்தானம் : சரி கொஞ்ச நாளைக்கு சினிமால நடிக்கிறத விட்டுட்டு , மங்கை நங்கைண்ணு ஏதாவது சீரியல்ல நடிச்சி நடிப்ப கத்துக்கோ .. அப்பறம் சினிமாவில பட்டைய கெளப்பலாம்

வி : நான் சீரியல்ல நடிக்கணுமா? எனக்குன்னு ஒரு தகுதி இருக்கு மச்சி ...

சந்தானம் : ஓ.. உங்க தகுதிக்கு வேணும்னா ஹிந்தி சினிமாவுல ஹீரோ ஆகிடுறீங்களா?

வி : ஷாருக் கான் - அமீர் கான் , சல்மான்  அபிஷேக்  , ஹிரிதிக் சாய்ப் அலிகான் , ஹெவி காம்படிசன் மச்சி ...

சந்தானம் : நீ நடிக்க போனா எல்லாம் சூசைட் பண்ணிக்குவாணுக... சரி வீடு இந்த ஷகீலா , ஷர்மிளா இவங்களை வச்சி ஏதாவது பிட்டு படம் எடுத்து ஓட்டலாமே ..

வி : சீ சீ எய்ட்ஸ் வந்திருமொண்ணு பயமா இருக்கு மச்சி ..

சந்தானம் : சரி என்னை  மாதிரி காமெடி ரோல் ட்ரை பண்ணுரையா?

வி : நான் எப்படி மச்சான் உன் பொழப்ப கெடுப்பேன் ..

சந்தானம் : இப்பனாப்புல என்ன பண்ணிக்கிட்டு இருக்க ... நீ ஒவ்வொரு படமும் எடுத்து விடும் போது எங்களுக்குதாண்டா பக்குபக்குன்னு இருக்கு ... இதுல ஏதாவது பெரிய காமெடி பண்ணி எங்களை விட பெரிய காமெடியானா ஆயிடுவையொண்ணு?

ஆனா வயிறு எறிஞ்சி சொல்றேன்டா..  நீ சாத்தியமா ஹிட் கொடுக்க மாட்ட .. ஹிட் கொடுக்கவே மாட்ட ...  


( இங்கு வி என்று குறிப்பிடபட்டு இருக்கும் நடிகர் சத்தியமாக விக்ரம்தான் .. யாராவது விஜய் என்று படித்திருந்தாள் அதர்க்கு நான் பொறுப்பு கிடையாது)


அடுத்து நம்ம நாலடியார் அவர்கள்

நாலடியார் : (ஒன்பதாம்  அறிவு பட கேசட் வெளியீட்டு விழாவில்)இங்க  எல்லாரும் என்ன புழந்து பேசுரத கேட்கும் போது எனக்கு கூச்சமா இருக்கு .. நான்தான் அடுத்த கமல் அப்படின்னு சொல்லுற அளவுக்கு நான் என்ன பெருசா பண்ணிட்டேன் .. நான் என் கடமையைத்தான செஞ்சென்... தமிழ் சினிமாவ அடுத்த கட்டதுக்கு கொண்டு போறதுதான் அந்த கடமை .. அதத்தான நான் செஞ்சென் .. அதுக்கு எதுக்கு இந்த பாராட்டுண்ணு கேக்குறேன் ... இந்த தமிழ் மாநிலத்துல என்ன பிடிக்காதவங்க யாராவது இருக்காங்களா? அப்படி யாராவது இருந்தா இந்த மேடைக்கே வந்து எங்கிட்ட இருக்க குறையை சொல்லலாம்...

சந்தானம் : எக்ஸ்க்யூஸ் மி .. ஒன் மினிட் ...

நாலடியார் : யெஸ் .. சொல்லுங்க ..

சந்தானம் : நான் கொஞ்சம் பேசனும் ..

நாலடியார் : ஓ .. தாராளமா? சொல்லுங்க தம்பி உங்களுக்கு என்ன பிரச்சனை ..சந்தானம் : இந்த மேடையில் வீற்றிக்கும் பெரியோர்களே ... விழா நாயகன் நாலடியார் அவர்களே ... உனக்கு பாராட்டு பிடிக்காதுன்னா , அப்பறம் என்ன மயித்துக்கு அவங்க பாராட்டி பேசும் போது பல்ல காட்டிக்கிட்டு இருந்த ... என்ன மயிதுக்குன்னு கேக்குறேன் ...

சரி என் நண்பன் , தனுஷ் அவனோட ஆடுகளம் பட பாடல் வெளியீட்டு விழாவுக்கு உன்ன கூப்பிட்டா நீ என்ன சொல்லி இருக்கணும் ... என்ன சொல்லி இருக்கணும் ராசா? வர இஷ்டம் இல்லைனா ஜோதிகா திட்டுவா , என்னால வர முடியாதுண்ணு சொல்லி இருக்கணும் அப்படி மீறி வந்தா என்ன பேசி இருக்கணும் பாட்டெல்லாம் கேட்டேன் நல்லா இருக்கு படம் கண்டிப்பா ஹிட் ஆகும் அப்படின்னு பேசிட்டு போய்கிட்டே இருந்திருக்கணும் .. அத விட்டுட்டு நானும் தனுஷ் ரசிகன்தான் , இதை நினைத்து தனுஷ் ரசிகர்கள் எல்லாம் பெருமைபட்டுக்கலாம் அப்படின்னு ஏன் சொன்ன? நீ ரசிகனா இருந்தா அவணுக பெருமைபடுற அளவுக்கு நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? இல்ல அவ்வளவு பெரிய அப்பாடக்கராண்ணு  கேக்குறேன்... செருப்புக்கு அடியில ஹீல்ஸ் போட்டு நடந்தும் நாலு அடி மட்டும் இருக்குற உனக்கே இவ்வளவு அடப்பு இருந்ததுனா, செறுப்பே போடாமலே அஞ்சறை அடி இருக்குற இந்த தல தளபதிக்கு எவ்வளவு அடப்பு இருக்கும் ... ஏழு கழுத வயசாகிடுச்சி இன்னமும் மண்டைக்கு கலரிங் கொடுத்துகிட்டு ... ஒழுங்கா போய் என் நண்பங்கிட்ட மன்னிப்பு கேக்குற , இல்லைனா தேன எடுத்து மண்டையில அப்பி மண்டையில வெள்ளை அடிச்சி விட்டுடுவேன்...

(சந்தானம் நக்கல்ஸ் நல்லா இருந்தா பின்னூட்டதுல சொல்லுங்க ... அடுத்து யாரையாவது ஓட்டணும்னா கவுண்டருக்கு கொஞ்ச நாளைக்கு ரெஸ்ட் கொடுத்திட்டு சந்தானத்த யூஸ் பண்ணிக்கிறேன் ..)


Saturday, January 29, 2011

அன்றும் இன்றும் : காவலன் எனக்கு புடிச்சிருக்கு : சில முரண்பாடுகள்

 "தரை மேல் பிறக்க வைத்தாய்  
  எங்களை தண்ணீரில் பிழைக்க  வைத்தாய் "கவிஞர் வாலியின் வார்த்தைகள் தினம் தினம் நிஜமாகி கொண்டு இருக்கிறது இந்து மகா சமுத்திரத்தில் ... கையாலாகாத கடற்படை , அரசியல் வேசிதனம் செய்யும் மாநில கட்சிகள் , சிங்களவனுக்கு ஜால்ரா தட்டும் முதுகு வளைந்த மத்திய அரசு இப்படி எல்லாரும் சேர்ந்து தமிழ்  மீனவர்களை தினம் தினம் சாகடித்து கொண்டிருக்கிறார்கள் ..... சேரன் தேசிய கீதம் படத்தில் காட்டியதை போல இவர்களை எல்லாம் மாறுவேசத்தில் கடலில் மீன் பிடிக்க அனுப்ப வேண்டியதுதான் , சிங்கள படையின் கையில் மாட்டினால் என்னவாகும் என்று அவர்களுக்கு அப்பொழுதாவது புரியட்டும் .... தன்னோட மகனுக்கு அமைச்சர் பதவி வாங்கி தர தள்ளு வண்டியில உக்காந்துகிட்டே டெல்லி வரைக்கும் போயிட்டு வந்த நம் இன தமிழ் தலைவர் , இதற்க்கு வீட்டுல இருந்துகிட்டே பிரதமருக்கு தந்தி அடிச்சிக்கிட்டு இருக்காரு.... யாராவது அவருக்கு இமெயில் எப்படி அனுப்புறதுண்ணு சொல்லி கொடுங்கப்பா,  தந்தி அனுப்பக்கூட கொஞ்சம் கஷ்டபடணும் , வயசான காலத்துல உக்காந்த எடத்துல இருந்தே ஈசியா மெயில் அனுப்பட்டும் ...பாவம் நமக்காக உழச்சி உழச்சி முட்டி தேஞ்சி உக்காந்து இருக்காரு அவர எதுக்கு கஷ்டபடுத்திக்கிட்டு...

எனக்கு ஒரு டவுட் ... ஒருவேளை நீரா ராடியா மேட்டர்ல சிபிஐ கனிய கைது பண்ணுனா அப்பவும் நம் தமிழ் இன தலைவர் சோனியாவுக்கு தந்தி அனுப்பிக்கிட்டுதான் இருப்பாரா? 


 
நேற்று  நண்பன் ஒருவன் வேலை கிடைத்ததுக்கு ட்ரீட் கொடுத்தான் .. அப்படியே படத்திர்க்கும் அழைத்து சென்றான் ... என்னுடன் இருந்த அனைவரும் கோரஷாக சொன்ன ஒரே ஒரு விஷயம்  "தயவு செய்து காவலன் மட்டும் வேண்டாம்"  ...அதனால் ஆடுகளம் படம் மதுரை மதி திரை அரங்கில் இரண்டாவது முறையாக பார்க்க நேர்ந்தது ...யாத்தே யாத்தே பாடலில் திரையரங்கமே அதிர்ந்தது ... அதுவும் தனுஷ் கைலியை தலையில் போர்த்து கொண்டு ஆடும் போது ஒட்டு மொத்த தியேட்டரும் விசில் அடிக்கிறது .. எனக்கு முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி பக்கத்தில் தன் கணவர் இருக்கிறார் என்பதை கூட மறந்து அந்த நடனம் வரும்போதெல்லாம் கத்தி கொண்டே இருந்தார் ... பாடல் கன்பர்ம் மாஸ் ஹிட் , அதைவிட பெரிய ஹிட் தனுஷின் நடனம் ... இரண்டாவது தடவை பார்த்தாலும் முதல் பாதி போரடிக்காமல் சென்றது ... காரணம் ஜி.வி.பிரகாஷ் ... அதுவும் அடுத்தடுத்து வரும் ஒத்த கண்ணால , யாத்தே யாத்தே பாடல்கள் படத்திர்க்கு பெரிய பிளஸ்... தனுஷ் ஆடும்போதெல்லாம் தியேட்டர் முழுவதும் விசில் சத்தம் .... தனுஸிர்க்கு ரசிகர் வட்டம் பெருகி கொண்டே போகிறது என்று தோன்றுகிறது .. .. ஆனால் இரண்டாம் பாதியில் நான் எவ்வளவோ முயற்சி செய்தும் தூங்காமல் இருக்க முடியவில்லை ... வெற்றிமாறன் இன்னும் விறுவிறுப்பாக யோசித்து இருக்கலாம் ... 


 
இருந்தாலும் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜையை தோற்கடித்து இருக்கிறார் தனுஷ் ... வாழ்த்துக்கள் தனுஷ் ...

முரண்பாடுகள் : 

கணக்கு பாடத்துல ஒரு கான்செப்ட் இருக்கும் நேர்மாறல் எதிர்மாறால் என்று ...இரண்டு விசயங்களுக்கு இடையே இருக்கும் தொடர்பை குறிக்க இது பயன்படும் ... ரெண்டுமே அதிகமாகிக்கிட்டே இருந்தா அது நேர்மாறல் , ஒண்ணு கூடி ஒண்ணு குறைந்தால் அது எதிர்மாறால் ... கணக்குல நேர்மாராலும் இருக்கு எதிர்மாராலும் இருக்கு ... 

அதே மாதிரி நம்ம வாழ்க்கையிலும் சில எதிர்மாறால் விசயங்கள் இருக்கு , 


இருபது  வருசத்துக்கு முன்னாடி , நாம எல்லாம் நம்ம தாத்தா பாட்டி கூட கூட்டு குடும்பமா வாழ்ந்துக்கிட்டு இருந்தோம் ... அப்ப ஒவ்வொரு குடும்பத்திலேயும் குறைந்தது இருபது பேராவது இருப்பாங்க... ஆன தாத்தா கட்டி வச்சிருந்த வீட்ட பாத்தா ரெண்டு மச்சி ரூம் , ஒரு அடுப்பாங்கடை , முன்னாடி ஒரு திண்ணை இவ்வளவுதான் இருக்கும்... இட நெருக்கடி அதிகமா இருந்தாலும் ஆட்கள் நெரஞ்சி வீடே திருவிழா மாதிரி எப்பவும் கலகலண்ணு இருக்கும்... அன்னைக்கு  வீடு சிறுசு , குடும்பம் பெருசு ... 

இப்ப ஒவ்வொரு குடும்பமும் தனிதனியா குடித்தனம் போயி , ஒவ்வொருத்தரும் ரெண்டு மாடி வச்சி , பத்து ரூம் , நாலு பாத்ரூம் , ரெண்டு  கிச்சன் இப்படி பெரிய வீடு கட்டி வாழ்ந்துக்கிட்டு இருக்கோம் .. ஆனா எந்த வீட்டிலேயேம் நாலு பேரை தாண்டி ஆட்கள் கிடையாது .. டிவி சத்தம் தவிர வேற எந்த சத்தமும் வீட்டுல கேக்காது ...   இன்னைக்கு வீடு பெருசு , குடும்பம் சிறுசு .... (அப்ப கலைஞர் குடும்பம்? அங்க மனச தவிர எல்லாமே பெருசு)


அன்னைக்கு யாரும் பள்ளி படிப்பை தாண்டுனது கிடையாது .. ஆனா எல்லாரும் நூறு வயசை தாண்டி ஆரோக்கியமா இருந்தாங்க ... அன்னைக்கு படிப்பு  கம்மி , அறிவு அதிகம் ...

 
இன்னைக்கு எல்லாரும் கையில ரெண்டு மூணு டிகிரியோட அலையிறோம் .. ஆனா அம்பத தாண்டவே தகதினித்தோம் போடுறோம் ... இன்னைக்கு படிப்பு  அதிகம் , அறிவு கம்மி 

(எங்கப்பா நிறையா படிடா .. நல்லா அறிவு வளரும்னு சொன்னாரு .. நானும் நிறைய படிச்சி ரெண்டு மூணு டிகிரி வாங்குனேன் .. அறிவு வளர்ந்ததா இல்லையாண்ணு தெரியல .. இருபத்தி அஞ்சு வயசுக்கு மேல எந்த உடல் உழைப்பும் இல்லாம தொப்பை நிறையா வளர்ந்துருச்சி..).
அன்னைக்கு எங்க தாத்தாவுக்கு செவ்வாய் கிரகத்துல தண்ணி இருக்கா இல்லையாண்ணு தெரியாது? ஆனா பக்கத்து வீட்டுல தினமும் அவன் வீட்டு குழாயில கார்பரேசன் தண்ணி பிடிக்கிற அளவுக்கு அவன்கூட பழக்கம் இருந்துச்சி ... அன்னைக்கு உலகம் பெருசு , ஆனா மனிதனுக்கு மனிதன் இடைவெளி சிறுசு ...

இன்னைக்கு சூரிய குடும்பத்தையும் தாண்டி அங்கிட்டு என்ன இருக்குன்னு எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியும் , ஆனால் எங்க பக்கத்து வீட்டுல இருக்கிறவன் பேர் என்னன்னு எனக்கு இன்னமும் தெரியாது ...இன்னைக்கு உலகம் சிறுசு , ஆனா மனிதனுக்கு மனிதன் இடைவெளி பெருசு ...கடைசியில் நான் ஒரு உண்மையை ஒத்து கொள்ளபோகிறேன் ... எனக்கு காவலன் மிகவும் பிடித்திருந்தது .... முதலில் போஸ்டரை பார்த்த பொழுது இது கண்டிப்பாக எப்பொழுதும் போல சாதாரணமான சரக்காகத்தான் இருக்கும் என்று நினைத்தேன் ... அப்படி ஒன்றும் பெரிய ஈர்ப்பு அதன் போஸ்டர்களில் இல்லை .. ஆனால் காசு கொடுத்து அதை  அனுபவித்த பொழுதுதான் , அதில் இருக்கும் புதுமையை உணர்ந்தேன் ... நான் பொய்  சொல்லவில்லை உண்மையிலேயே காவலன் கொடுத்த காசுக்கு நல்ல சந்தோசத்தை தரும் .. ஆனால் என்ன இதை குடும்பமாக அனுபவிக்க முடியாது ..அப்புறம் எல்லாரும் திரும்ப திரும்ப கேட்டு நச்சரிக்க ஆரம்பித்து விடுவார்கள் .. நான் முதல் தடவை என் நண்பனை  கூட்டிக்கொண்டு சென்றேன் ... அவனுக்கு மிகவும் பிடித்து விட , இதுவரை ஐந்து முறைக்கும் மேல் காவலனுக்கு தண்ட செலவு செய்ய வேண்டியதாகி விட்டது .. அதனால் நீங்கள் மட்டும் தனியே செல்லுங்க... எத்துணை முறை வேண்டுமானாலும் ஆசை தீர சந்தோஷமாக அனுபவிக்கலாம் ... இதோ உங்களுக்காய் பிரத்யோகமாக நான் அனுபவித்த அந்த காவலனில் இருந்து ஒரு ஸ்டில் ...  

                                                                 ....
                                                                
                
                                                                 ....


                                                                 ....                                                                 ....


                                                                 ....

                                                              ............
(ஊருக்குள்ள இந்த காவலனோட பேரை கெடுக்க இன்னொரு காவலன் வந்திருக்காராம் ... அவரை மட்டும் ஓசியாக்கூட பாத்திராதீங்க .. அப்பறம் அந்த கொடுமையை  மறக்க இந்த காவலனை லார்ஜ் லார்ஜா உள்ள தள்ள வேண்டி இருக்கும் ஜாக்கிரதை)

Sunday, January 23, 2011

ராஜாவின் பார்வை : கொஞ்சம் அரசியல் நிறைய சினிமாநான் மகான் அல்ல!!


நேற்று கிறிஷ்ணகிரியில் ஒரு கல்லூரி பெண் கல்லூரி விட்டு வீட்டுக்கு நடந்து வரும் வழியில் யாரோ சில பொறுக்கிகளால் கற்பழிக்கபட்டு தலை நசுக்கபட்டு கொலை செய்யபட்டு ஆளரவமற்ற தென்னந்தொப்பில் வீசபட்டு இருக்கிறாள்... இந்த சம்பவத்தை கேள்விபட்டவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது நான் மகான் அல்ல படம் ... இந்த கொலையை செய்தவர்கள் நான் மகான் அல்ல படத்தை பார்த்துதான் இப்படி செய்துள்ளார்கள் என்று நான் சொல்லவரவில்லை ... இன்னும் யார் செய்துள்ளார்கள்  என்ன நடந்தது  என்று முழுவதும் தெரியவில்லை ... ஆனால் அப்படி நடந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது ... இந்த மாதிரியான யதார்த்தமாக எடுக்கிறேன் என்று எடுக்கப்படும் படங்கள் நமக்கு நல்ல பொழுதுபோக்கை கொடுத்தாலும் அதனால் சின்ன பிள்ளைகளும்  டீன் ஏஜ் வாலிபர்களும் கெட்டு போக நிறைய வாய்ப்பு இருக்கிறது.... அப்படி எடுக்கும் இயக்குனர்களையோ இல்லை அதில் நடிக்கும் நடிகர்களையோ நான் குறை சொல்லவில்லை ... அதை ரசிக்கும் நம்மை போன்றவர்களின் தவரே இது ... நான் இப்படி சொன்னாலும் நாளைக்கே டிவியில் சுப்ரமணியபுரம் படம் போட்டால் உக்கார்ந்து பார்க்கதான் செய்வேன் ... தவறு செய்கிறோம் என்று தெரிகிறது ஆனால் திருந்த முடியவில்லை ... பலருக்கு இருக்கும் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை போலவே ...


என்ன ம@#$@ருக்கு இந்த அரசாங்கம்?


பெட்ரோல் விலையை மறுபடியும் ஏற்றி விட்டார்கள்... லிட்டர் அறுபத்து நான்கு ரூபாய் ... கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பத்து ரூபாய் ஏறி இருக்கிறது விலை ... நான் முதன் முதலில் ஒரு பைக் வாங்கி (எங்க அப்பா வாங்கி கொடுத்தது பத்து வருடங்களுக்கு முன்னர் நான் கல்லூரியில் சேர்ந்த பொழுது) ஒட்டியபொழுது விலை முப்பத்தி இரண்டு ரூபாய்... இப்பொழுது இரண்டு மடங்கு ஆகி விட்டது ... மதுரையில் இருந்து காரில் சென்னைக்கு சென்று வர  வேண்டும் என்றாள் மொத்தமாக் மூவாயிரம் ரூபாய் பெட்ரோலுக்கு மட்டுமே அழ வேண்டும் .. அதுவாவது பரவா இல்லை ... புதியதாய் போட பட்டிருக்கும் நான்கு வழிசாலையில் அம்பது கிலோமீட்டருக்கு  ஒரு டோல் கேட் போட்டிருக்கிறார்கள் .. ஒவ்வொரு டோல் கேடிலும்  அறுபது ரூபாய் அழவேண்டி இருக்கிறது .. கேட்டால் இந்த சாலையே தனியார் நிறுவனம் போட்டதுதானாம் ... அதனால் குத்தகைக்கு எடுத்ததை போல அந்த சாலையை யாராவது பயன்படுத்தினால் அவர்களுக்கு காசு தர வேண்டுமாம் ... என் கேள்வி என்னவென்றால் அப்பறம் என்ன @#$@ருக்கு வண்டி வாங்கிரப்ப ரோட் டாக்ஸ் கட்ட சொல்லுறீங்க... இந்த ரோட்டக்கூட அரசாங்கம்  அதோட காசுல இருந்து போட முடியலைனா என்ன @#$@#ருக்கு எங்ககிட்ட இருந்து அந்த வரி இந்த வரி வருமான வரின்னு ஆயிரத்தெட்டு வரி வாங்குறீங்க...

நாலரை லட்சம் கோடிக்கு ஊழல் பண்ண மட்டும் வழி இருக்குள  இந்த ரோட்ட போட வழி இல்லையா? இப்படி எங்க காச ஆட்டைய போட்டு உங்க வருங்கால சந்ததிக்கு சுவிஸ் பேங்ல சேத்து வைக்கிற உங்களையெல்லாம் பாக்கும்போதுதான் தெய்வம் நின்று கொல்லும்கிற பழமொழி உண்மையா இருக்கணும்னு ஆசையா இருக்கு ... நீங்க அழியிரத நாங்க பாக்க முடியலைனாலும் எங்களின் அடுத்த ஏதாவது ஒரு தலமுறை மக்கள் கண்டிப்பாக பார்ப்பார்கள் ....

இப்படி நம்ம காசை ஆட்டையபோட்டுகிட்டு இருக்குற இவனுக நமக்கு ஏதாவது நல்லது பண்ணி இருக்காணுகளா? காந்தி பரம்பரை என்ன ஆட்சுன்னே தெரியல... காமராஜர் கக்கண் அம்பேத்கார் இவங்க சொந்தக்காரங்க எங்க இருக்காங்கன்னே தெரியல? குறைந்தபட்சம் அண்ணாவோட பரம்பரைகூட காணாம போட்சி....(நேரு மட்டும் விவரமா அவரு பரம்பரையை வாழ வச்சிட்டாறு) இவங்க  பரம்பரையில யாராவது ஒருத்தன் தின்னாக்கூட இவங்க பண்ண நல்லதை நினைத்து  ஏதோ மனதை தேத்திக்கலாம் ... ஆனா நம்ம நாட்டுக்காக சின்ன துரும்பை கூட கிள்ளிபோடாத யார் யாரோ நம்ம காசை தின்னுகிட்டு இருக்காணுக.. அத நெனச்சாத்தான் கடுப்பா இருக்கு ...

நீங்க எங்களுக்கு நண்பனா விஜய்?


இன்று விஜய் டீவியில் காஃபி வித் அனு நிகழ்சியில் விஜய் கலந்து கொண்டு பேசினார் ... அதில் விஜையை மாஸ் வித் கிளாஸ் ஹீரோ என்று அறிமுகம் செய்தார்கள் .. அதை ஏற்றுக்கொள்ளுவதை போல அவரும் ஒரு புன்னைகை பூத்தார் .... அவர் மாஸ் என்றாள் அப்ப ரஜினி யார்? அவர் கிளாஸ் என்றாள்  கமலை எப்படி சொல்லுவது... ஏற்கனவே இப்படி அளவுக்கு மீறி தன்னை மீடியாவிலும்  சினிமாவிலும் எக்ஸ்போஸ் செய்ததால்தான் தனக்கு இருந்த மார்க்கெட்டை இழந்து இன்று இந்த நிலமைக்கு வந்திருக்கிறார் ... இன்னமும் திருந்தவில்லை போல ... அவருக்கு வேறு யாரும் வெடி வைக்க தேவை இல்லை .. அவர்கூட இருப்பவர்களும் அவர் ரசிகர்களுமே போதும் அந்த வேலையை கச்சிதமாக செய்து விடுவார்கள் ... அதில் ஒரு கேள்விக்கு அஜித் ரசிகர்களும் எனக்கு நண்பர்களே  என் ரசிகர்களை மதிப்பதை போல அவர்களையும் நான் எப்பொழுதும் மதிப்பேன் என்னும் பொருள்பட கூறினார்.... அவர் வேண்டுமானால் எங்களை நண்பன் என்று கூறலாம் ஏன் தலையே அவரை மன்னித்து நண்பனாக ஏற்று கொள்ளலாம் .. ஆனால் அஜித் ரசிகர்கள் நாங்கள் என்றும் அப்படி நினைக்கக்கூட மாட்டோம் ... ஒருவன் தோல்வி மேல் தோல்விகளை சந்தித்து அடிமட்டத்தில் இருக்கும் போது பேசும் பேச்சை விட  அவன் வெற்றியின் உச்சத்தில் இருக்கும் போது பேசும் பேச்சே அவனின் உண்மையான குணத்தை காட்டும் .. இன்று குருவி  வில்லு  வேட்டை  சுரா என்று அடி மேல் அடி வாங்கி நீங்கள் இப்படி பேசுகிறீர்கள்  ஆனால் கில்லி  திருப்பாச்சி என்று வெற்றி மேல் வெற்றியை குவித்து கொண்டு இருந்த போது நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்று எங்களுக்கு தெரியும் .. குறிப்பாக சச்சின் படத்தில் தொப்பை வைத்து நீங்கள் ஆடிய ஆட்டம் .... நாங்கள் அதை எல்லாம் கண்டிப்பாக மறக்க மாட்டோம் விஜய் ....

பொங்கல் ரேசில் முந்துறது யாரு ?


பொங்கலுக்கு வெளிவந்த அனைத்து படமும் பார்த்தாகி விட்டது .. நேற்றுதான் சிறுத்தையை ஓசியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது ... என்னை பொறுத்தவரை ஆடுகளம்  காவலன்  சிறுத்தை என்ற இந்த மும்முனை போட்டியில் சிறுத்தை பரவாயில்லை .... அக்மார்க் தெலுங்கு கரம் மசாலா ... அதிலும்  சந்தானம் காமெடி டாப்.... காட்டுபூச்சி ராக்கெட் ராஜா காம்பினேசனை ரசிக்கலாம் ...அதும் அந்த இடுப்பு மேட்டர் சூப்பரப்பு ... என்ன நான் முதல் பத்தியில்  சொல்லியதை போல வன்முறை நிறைந்த படம் இது ...

வசூலில் எந்த படமும் சொல்லிக்கொள்ளுவதை போல இல்லையாம் .... தூங்கா நகரம் வரும்போது எங்க ஊரில் ஆடுகளத்தை தூக்க போகிறார்கள் ... அந்த படத்தின் ஆயுள் இருபது நாட்கள்தான் ... காவலனின் வசூல் ஆடுகளத்தை விட சுமார்தானாம் ... விஜய் இப்ப எல்லாம் அடிக்கடி டிவிகளில் தோன்றி ரசிகர்களுக்கு நன்றி சொல்லுவதை பார்த்தால் முதலுக்கே மோசமாகி போய்விட்டது என்று நினைக்கிறேன் அதான் தன் ரசிகர்களை உசுப்பேற்றிவிட்டு அவர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்து முதலை தேத்தி விடலாம் என்று நினைக்கிறார் போல ... ஆனால் அவர் என்னதான் விளம்பரம் செய்தாலும் படம் தேறுவது  கஷ்டமே ... சிறுத்தை சிடிக்கள் தமிழ்நாடு முழுவதும் பரவிவிட்டது... அதனால் அதுவும் தப்பிபது கடினம்  .. ஆக மொத்தம் இந்த பொங்கலும் கோலிவுட்டுக்கு மரண அடிதான் ...

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் 

             

Friday, January 21, 2011

ராஜாவின் பார்வை : நிறைய கிரிக்கெட், கொஞ்சம் சினிமா


கிரிக்கெட் சினிமாஉலகக்கோப்பை போட்டிகள் தொடங்க இன்னும் ஒருமாதத்திர்க்கும் குறைவான நாட்களே இருக்கிறது .. எல்லா நாட்டு அணிகளும் தங்கள் அணி வீரர்களை அறிவிக்க ஆரம்பித்து விட்டார்கள்... இந்த மாதம் முழுவதும்  எல்லா முதல்நிலை அணிகளும் இன்னொரு முதல்நிலை அணியுடன் மோதிகொண்டு   இருக்கிறது, உலக கோப்பையின் முன்னோட்டமாக  தங்கள் அணியின் திறனை பரிசோதித்து பார்க்க நல்ல வாய்ப்பாக இதை அவர்கள் நினைக்கின்றனர் .. ( இந்தியா தென் ஆபிரிக்கா , இங்கிலாந்து ஆஸ்ட்ரேலியா , பாகிஸ்தான் நியூசிலாந்து என்று கிட்டத்தட்ட ஒரு pre world cup போட்டிகள் நடந்து கொண்டு இருக்கிறது)  ... இந்த போட்டிகளில் ஒவ்வொரு அணியும் எப்படி விளையாடி இருக்கிறது என்பதை கொண்டு நாம்  உலக கோப்பையில் என்ன நடக்கும் என்பதை  கிட்டத்தட்ட கணித்து விடலாம்...

முதலில் இந்தியா தென் ஆஃப்ரிகா ஆட்டம் .... இந்த டூர் ஆரம்பத்தில் இந்தியா மரண அடி வாங்கினாலும் , பின்னர் விஸ்வரூபம் எடுத்து தென் ஆஃப்ரிகா அணியினரை கதிகலங்க வைத்து கொண்டு இருக்கிறது .... உலக கோப்பையை பொறுத்த வரை ஒரு அணியின் சமீபத்திய டெஸ்ட் வெற்றிகள்  பெரிய இம்பாக்ட் உருவாக்க போவதில்லை .. அந்த அணியின் தற்போதைய ஒருநாள் ஆட்டதிறனே அந்த அணியின் உலக கோப்பை வாய்ப்பை முடிவு செய்யும் ... இதில் இந்த இரண்டு அணிகளை கவனித்து பார்த்தால் இந்திய அணியின் கையே சற்று ஓங்கி இருக்கிறது... முதல் ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்து இருந்தாலும் , அடுத்த இரண்டு ஆட்டங்களில் திரில் வெற்றியை ருசித்து இருக்கிறது ...முதல் ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசம் இரண்டாம் ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசம்  என்று வெற்றி வித்தியாசங்கள் மிக குறைவாகவே இருப்பதால் இரண்டு அணிகளும் சம பலம் கொண்ட அணிகளாக உங்களுக்கு தெரியலாம் , ஆனால் இரண்டு அணிகளையும் வேறுபடுத்துவது போட்டி நடக்கும் இடம் மற்றும் அதில் ஆடும் அணி வீரர்கள் ...

நாங்க ஏன் நம்பர் 1 :போட்டி நடப்பது தென் ஆஃப்ரிகா , அங்கு இருக்கும் ஆடுகளங்கள் இப்பொழுது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்படி அமைக்க பட்டு உள்ளன ... முதல் ஒருநாள் போட்டியில் ஸ்டேயின் மற்றும் திஸோட்சோப் வீசிய பந்துகள் எகிறிய எகிறில் இருந்தே அதை அறிந்து கொள்ளலாம்... அதில் இந்தியா படு தோல்வி அடைந்தது .. ஆனால் அடுத்த இரண்டு ஆட்டங்களில் மைதானம் சுழல்  பந்து வீச்சிர்க்கு ஸலாம் போட ஆரம்பித்தது... ஹர்பஜனின் சுழலை சமாளிக்க முடியாமல் தென் ஆஃப்ரிகா சறுக்கியது ... இதுதான் உலககோப்பையில் இரு அணிகளுக்கும் இருக்க போகும் பெரிய வித்தியாசமே.. சொந்த மைதானத்திலேயே இந்திய வீரர்களின் ஸ்பின் பௌலிங்கை சமாளிக்க தினரும் அவர்கள் ஸிபின்னுக்கு சாதகமாக அமைக்கப்பட்டு இருக்கும் இந்திய பிட்ச்களில் ஜொலிப்பது கஷ்டமே ... இந்திய அணியினருக்கு அவர்கள் தென் ஆஃப்ரிகா மைதானங்களில்  பந்து வீச்சில்  கலக்கியது  ஆறுதலான விஷயம் .. குறிப்பாக ஜாகீர் கான் பந்து வீச்சில் ஃபார்ம்முக்கு திரும்பி இருப்பது தோனிக்கு பெரிய நிம்மதியை கொடுத்திருக்கும்...


அடுத்து இன்னொரு முக்கியமான விஷயம் , இந்த தொடரில் தென் ஆஃப்ரிகா தன்னுடய முழு பலத்தையும் காட்டி விளையாடி இருக்கிறது , ஆனால் இந்திய அணியில் முன்னணி துடுப்பாட்டக்காரர்கள் பாதி பேர் விளையாடவில்லை .. குறிப்பாக  சேவாக் , கம்பீர் , டெண்டுல்கர் என்று அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் யாரும் களமிறங்கவில்லை ... குறிப்பாக சொல்ல வேண்டும் என்றாள் தென் ஆஃப்ரிகாவின் முதல் நிலை அணியை இந்தியாவின் இரண்டாம் நிலை அணி திணறடித்து கொண்டு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும் ... இப்பொழுது தெரிந்திர்க்கும் அவர்களுக்கு ஏன் இந்திய அணி நம்பர் ஒன் என்று சொல்லப்படுகிறது என்று ...ஓவர் பேச்சு உடம்புக்கு ஆகாது தம்பி :

இந்தியாவை போல இந்த மாதம் ஆட்டத்தில் கலக்கி கொண்டு இருக்கும் இன்னொரு அணி இங்கிலாந்து ... ஆஸ்ட்ரேலியா மண்ணிலேயே பேட்டிங் பௌலிங் ஃபீல்டிங் என்று எல்லா துறையிலும் அவர்களை விட பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது ... ஆனால் அவர்களால் இந்திய அணியை ஜெயிக்க முடியுமா? அப்படி ஒரு போட்டியில் யார் ஜெயிப்பார்கள்? இதுதான் இன்று கிரிக்கெட் உலகில் மில்லியன் டாலர் கேள்வி... இதற்க்கு ஒரு அதிமேதாவி இப்பொழுது இருக்கும் இங்கிலாந்து அணி ஒரு வாரம் முழுவதும் விளையாண்டாலும் அந்த ஏழு ஆட்டங்களிலும் இந்தியாவை ஜெயிக்கும் பலம் வாய்ந்தது என்று திருவாய் மலர்ந்து இருக்கிறது .. 2003 உலக கோப்பையில் இதே போல ஒரு ஆதி மேதாவியின் வாய்  சச்சின் ஒன்றும் பெரிய பேட்ஸ்மென் கிடையாது அவரை தன்னால் எந்த ஆட்டத்திலும் அவுட் ஆக்க முடியும் என்று திருவாய் மலர்ந்து சச்சின் அடித்த அடியில் வாயில் புண்ணோடு ஊர் போயி சேர்ந்தது .. அவர்கள்  இதே போல நிறைய பேச வேண்டும் என்பதே என் ஆசை ... கண்டிப்பாக பேசிய பேச்சுக்கு ஏற்றவாறு அடி கிடைக்கும் ...


கவுத்திராதீங்கப்பு :


இந்திய அணிக்கு இந்த உலக கோப்பை ஒரு பெரிய வாய்ப்பு ... 2003 உலக கோப்பையில் அணி எந்த ஃபார்மில் இருந்ததோ அதைவிட அருமையான ஃபார்மில் இப்பொழுது இருக்கிறது ... 2003 இல் நமக்கு வில்லனாக இருந்த ஆஸ்ட்ரேலியா இப்பொழுது பலமிழந்து ஒரு காமெடி பீஸாக காட்சி தருகிறது .. சமீப காலங்களில் மற்ற எல்லா அணியினரையும் நாம் மண்ணை கவ்வ வைத்திருக்கிறோம் (வெஸ்ட் இண்டீஸ் , பாகிஸ்தான் தவிர...  அவர்களுடன் நீண்ட காலமாக விளையாடவே இல்லை ஆனால் அவர்களும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பார்மில் இல்லை) எனவே இது நமக்கு நல்ல வாய்ப்பு ... 2007 போல  திடீரென்று எல்லாரும் பார்ம் இழந்து கவுத்திராதீங்கப்பு...


இந்தியாவை தவிர்த்து பார்த்தால் இந்த உலக கோப்பையை வாங்கும் தகுதியுடன் தற்போது இருக்கும் அணிகள் இங்கிலாந்து மற்றும் தென் ஆஃப்ரிகா ... ஆனால் இந்த இரண்டு அணிகளுமே ஸ்பின்னில் ஒழுங்காக விளையாட தெரியாத அணிகள் .. இந்திய மைதானங்களில் அவர்களால் இந்தியாவை வெல்ல இயலுமா என்று தெரியவில்லை .. ஆனால் ஆஸ்ட்ரேலியாவையும் ஒதுக்கி வைக்க முடியாது .. எப்பொழுது வேண்டுமானாலும் முழு திறனுடன் மீண்டு வரும் அணி அது ... இதை தவிர்த்து இந்திய ஆடுகளங்களில் இந்தியாவை வெல்லும் திறன் படைத்தவை என்று பார்த்தால் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்ரீலங்காவை கூறலாம் ... ஆனால் இரண்டும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சமீபத்தில் விளையாடவில்லை ... ஆனால் எது வேண்டுமானாலும் நடக்கும் கிரிக்கெட்டில் .. திடீரென்று பங்களாதேஷ் கூட கோப்பையை வெல்லலாம்... (1983 ஞாபகம் வருகிறது .. அன்று இந்திய அணி அப்படிதானே இருந்தது )  அதானே அந்த விளையாட்டின் சுவாரஷ்யமே ....  


சினிமா :

மாங்காத்தா பட ஸ்டில்ஸ்களில் தல நரைத்த முடியுடன் காட்சி தருகிறார் .. பார்க்க படம்


சில ரசிகர்கள் இதை ரசித்தாலும் சில ரசிகர்களுக்கு இது பிடிக்கவில்லை ...என்னை கேட்டால் படம் வெளிவரும் வரை இதை பற்றி எதுவும் பேச வேண்டாம் என்றுதான் சொல்லுவேன் ... தல ஒரு விஷயம் செய்தால் அது சினிமாவில் ஒரு ஃபேஷன் போல எல்லாராலும் பின்பற்றபடுகிறது... இன்று போல பெரிய பெரிய நடிகர்கள் தொடங்கி நண்டு  சுண்டு நடிகனெல்லாம் படத்தில் கோட்டு சூட்டு போட்டு நடிப்பது அதையே காட்டுகிறது ... யாருக்கு தெரியும் நாளைக்கு இதுவும் ஒரு பெரிய ஃபேஷன் ஆகலாம்... தல பவர் அப்படி ... என்ன ஓவரா பேசுறேண்ணு நினைக்கிறீங்களா? அப்ப இந்த மேட்டர படியுங்கள்யார் வசூல் சக்கரவர்த்தி?
எங்க படத்த குடும்பம் குடும்பமா வந்து பாக்குறாங்க... சின்ன கொழந்தைங்க எல்லாருக்கும் பிடிச்ச நடிகர் எங்காளுதான்... எங்காலு டான்ஸ் ஒண்ணு போதும் படம் ஓட .. எங்க பாட்டு எப்பவுமே சூப்பர் ஹிட்டுதான்... நாங்கதான் வசூல் சக்கரவர்த்திகள் ... என் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ்தான் ம்யூசிக் போடனும் ... பெரிய இயக்குனர்கள் படத்துல மட்டும்தான் நடிப்பேன் ... நொடிக்கு நூறு முறை விளம்பரங்கள் தரனும் ...இப்படி என்னணவோ சொல்லிகிட்டு இருந்தவணுக நடிச்ச எந்த படமும் இந்த லிஸ்டில் கிடையாது ...

குடும்ப ஆடியன்ஸ் அவ்வளவாக கிடையாது .. கொழந்தைகள் ரசிக்கும்படி இன்னமும் படம் கொடுக்கவில்லை ... நடனம் சுத்தமாக தெரியாது ... பாட்டு நல்லா இருந்தாலும் ஊடகங்கள் புறக்கணித்து விடும்... படங்களுக்கு எந்த விளம்பரமும் கிடையாது ... இப்படி எந்த விஷயமும் இல்லாமல் ரசிகர்கள் பலம் ஒன்றை மட்டுமே  நம்பி இருக்கும் ஒருவரின்  படங்கள் இரண்டு இந்த லிஸ்டில் இடம் பிடித்து உள்ளன ..

காரணம் சிம்ப்ளி ஒரே வார்த்தை அது தல ... இதில் வரலாறு பெரிய ஆச்சரியம் நொடிக்கு நூறு முறை விளம்பரம் போடப்படும் படங்கள் வசூலிக்க முடியாத தொகையை குறைந்த பட்சம் பேப்பரில்கூட விளம்பரம் கொடுக்கபடாத ஒரு படம் வசூலித்திருக்கிறது ... இந்த படத்திர்க்கு நூறாவது நாள் விளம்பரம் தூத்துக்குடி ரசிகர்களால் தினத்தந்தி பேப்பரில் போடபட்டது ... தூத்துக்குடியிலும் நாகர்கோவிலிலும் படம் நூறு நாட்கள் ஓடி இருந்தது ... இப்படி தயாரிப்பாளர் மொத்தமாய் கைகழுவிய படம் .. ஆனால் வசூல் சாதனை ... தரமான விசயங்களுக்கு விளம்பரம் தேவை இல்லை என்று அழுத்தமாக சொல்லி இருக்கிறது வரலாறு... வசூல் சக்கரவர்தி என்று தங்களுக்கு தாங்களே முடிசூட்டி கொண்டவர்கள் இதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்?


இன்னொன்று பில்லா .. நான்தான் எப்பவும் kinf of opening என்று அஜித் அழுத்தமாய் தன் போட்டியாளர்களுக்கு உணர்த்திய படம் .. அருப்புக்கோட்டை தமிழ்மணி திரை அரங்கில் இதற்க்கு அமைந்த ஒபேணிங்க் மாஸ் இதுவரை வேறு எந்த படத்திர்க்கும் நான் கண்டதில்லை ... டிக்கெட் கிடைத்து உள்ள போன கூட்டத்தை விட டிக்கெட் கிடைக்காமல் வெளியேறிய கூட்டம் அதிகம் ... ஒரு மணிநேரத்திர்க்கு தியேட்டர் அமைந்திருந்த விருதுநகர் அருப்புக்கோட்டை சாலையில் பேருந்துகள் செல்ல முடியவில்லை ... தல இதை போன்ற தான் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் படங்களாய் தெரிவு செய்து நடிக்க வேண்டும் என்பதே ஒரு ரசிகனாய் என்னுடய ஆசை... 

Sunday, January 16, 2011

காவலன்- கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?


கண்ணா லட்டு திங்க ஆசையா? கண்ணா ரெண்டாவது லட்டு திங்க ஆசையா? இந்த விளம்பரம் பாத்திருக்கீங்களா? இதுதான் காவலன் படத்தின் ஒன் லைன் ... நம்ம டாக்குடர் அவர்கள் எப்படி போனில் பேசி இரண்டு பிகர்களை லவட்டுகிறார் என்பதே இந்த காவலன் என்னும் அற்புத காவியத்தின் கதை ...


தம்பிக்கு எந்த ஊரு என்று ஆரபிக்கும் கதை ஏகன் ரூட்டில் பயணித்து திடீரென்று காலமெல்லாம் காதல் வாழ்க என்று திசை மாறி ஆங்காங்கே பத்ரி  பூவெல்லாம் உன் வாசம் என்று கலந்து கட்டி கடைசியில் அஞ்சறைக்குள்ள வண்டியாக முடிந்திருக்கிறது இந்த காவலன் ...

விஜய் பஞ்ச் வசனம்  ஓவர் பில்ட் ஆஃப் என்று எதுவும் பண்ணவில்லை .. இதற்காக அவர்கள் ரசிகர்கள் வருத்தபட்டார்களோ இல்லையோ  நல்ல எஞ்சாய்மெண்ட் மிஸ் ஆன வருத்தம் எனக்கு நிறைய ... முதல் பாதியில் எனக்கு நிறைய காட்சிகளில் ஏகன் படம் ஞாபகம் வந்தது ... குறிப்பாக அந்த பேஸ்கட் பால் கிரவுண்ட் சண்டை ... இதே போன்ற ஒரு சிட்சுவேஷனில் தான் அந்த படத்திலும் அதே லொகேஷனில் அதே லைட்டிங்கில் ஒரு சண்டை வரும் ... வில்லுவில் அஜித்தின் மெகா ஹிட் பில்லாவை இமிடேட் பண்ணுனார் சரி   இதில் அஜித்தின் சராசரி படத்தைக்கூட இமிடேட் பண்ணவேண்டுமா? அஜித் என்ன செய்தாலும் அதே போல் தானும் செய்து பார்த்து விட வேண்டும் என்ற விஜய்யின் ஆசைக்கு காரணம் என்னவோ?

அசின் அழுது கொண்டே இருக்கிறார் ... மேக் அப் கரைந்து கண்ணீரோடு சேர்ந்து ஓடுகிறது  அதனால் சில இடங்களில் அசிங்கமாக தெரிகிறார் ... விஜய் மேல் என் எதர்க்கு என்று தெரியாமலே காதல் கொள்கிறார் .. அதை சொல்வதர்க்கு எத்தனையோ வாய்ப்புகள் வந்தும் சொல்லாமல் போகிறார் ... அதர்க்கு காரணம் கிளைமேக்ஸ் பார்க்கும்போதுதான் எனக்கு தெரிந்தது .. இப்படி ஒரு மகா உன்னதமான  கற்பனைக்கு எட்டாத கிளைமேக்ஸ் வைக்க வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திர்க்காக இயக்குனர் அசினை தன் காதலை சொல்லவே விடவில்லை .என்று .. வாழ்க அவர் கற்பனை வளம்... ஸார் இப்படியே வித்தியாசமாக யோசித்து பல உன்னத திரைக்காவியங்களை படைக்க என்னுடய மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

ராஜ்கிரண் அசினுக்கு அப்பாவா இல்லை மாமாவா தெரியவில்லை ... எந்த அப்பனும் தன் மகளுடன் (மகள்களுடன்) அதே வயசு பையனை  (படத்தில் விஜையை அப்படிதான் காட்டுகிறார்கள்) தங்க வைக்க மாட்டார்கள் .. இவர் அனுமதிக்கிறார் .. அதனால்தான் எனக்கு இந்த சந்தேகம் ....
விஜையும் நோகாமல் முதல் லட்டாக அசினின் சித்தி பெண்ணையும்  இரண்டாவது லட்டாக அசினையும்  ஆட்டையை போடுகிறார்... இப்படி ஏதாவது ஒரு பாடிகாட் வேலை இருந்தால் யாராவது என்னை அணுகவும் ... சம்பளம் தேவை இல்லை சாப்பாடு மட்டும் போட்டா போதும் ....

படம் முழுவதும் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் .. அதே எல்லாம் நான் இங்கே எழுதிக்கொண்டு இருந்தால் எனக்கு நேரம் பத்தாது ... மிக பெரிய ஓட்டை தினமும் நேரில் கேட்கும் ஒரு பெண்ணின் குரலை போனில் கண்டுபிடிக்க முடியாமல் போவது ... அசின் முதலில் தன் தோழியிடம் குரல் மாற்றி பேசி காட்டுகிறார் .. அவளும் சூப்பர்டி கண்டே பிடிக்க முடியாதுடி என்று சொல்கிறாள் ... உடனே நாமும் நம்பிவிட வேண்டுமாம் ... அதன் பின் அசின் எந்த காட்சியிலும் குரலை மாற்றி பேசியதை போல காட்டவில்லை .... அட போங்கையா ...

படத்தின் பெரிய ஆறுதல் நீ படிச்சி யூனிவர்சிட்டி ரேங்க் வாங்குனாத்தான் நான் உங்கிட்ட பேசுவேன் என்று அசின் விஜய் யிடம் சொன்னவுடன்  நான் பயந்ததை போல விஜய் யூனிவர்சிட்டி ரேங்க் வாங்கி அதை மேடையில் கண்ணீருடன் தன் காதலிக்கு சமர்பிப்பதை போல காட்டி நம் நெஞ்சை கழுவாமல் இருந்தது   .. நல்ல வேலைடா சாமீ ...

 பாடல்கள் ரொம்ப சுமார் .. அதை எடுத்த விதம் அதைவிட சுமார் ... சண்டைக்காட்சிகள் தேவையே இல்லை .. முதல் பாதியில் ஒவ்வொரு பாட்டு முடிந்தவுடனும் ஒரு சண்டை வருகிறது ... இந்த ஸ்டைலை தெலுங்குக்காரன் கைவிட்டே நாப்பது வருஷம் ஆகிவிட்டது .... மலையாள சித்திக் இப்பொழுதுதான் செய்துபார்க்கிறார் ...

 முதல்பாதியில் ஓரளவிர்க்கு நன்றாக போகும் படம் இரண்டாம் பாதியில் அசின் விஜையின் ஃபோன் கடலையை மட்டுமே கடைசி வரை காட்டி நம்மை நூறு முறை கொட்டாவி விட வைக்கிறது ... சில காட்சிகளை சீரியலை ரசிக்கும் பெண்கள் ரசிப்பார்கள் என்று நினைக்கிறேன் ....

காவலன் உங்களுக்கு சீரியல் பார்க்கும் பழக்கம் இருந்தால் ஒரு முறை இந்த சீரியலை பார்க்கலாம் ...

  


LinkWithin

Related Posts with Thumbnails