Followers

Copyright

QRCode

Sunday, July 15, 2012

பில்லா 2- "one man show"

வழக்கமாக தல படங்கள் வெளியானால் சில்வண்டு நடிகரின் ரசிகர்கள்தான் வயித்தெரிச்சலில் ஏதாவது உளறுவார்கள் , சைக்கிளில் போகிறவன் காரில் போகிறவனை பார்த்து வயித்தெரிச்சலில் திட்டும் தமிழனின் பொது புத்தியை போன்றதுதான் இதுவும் ஆனால் இம்முறை சில அதிதீவிர ரஜினி ரசிகர்களும் (கவனிக்க "சில") காண்டாகி இருப்பதை இணையத்தில் காணமுடிகிறது.. பொதுவாக ரஜினி ரசிகர்கள் நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று வேறு நடிகன் யாராவது சொன்னால்தான் அவர்மேல் காண்டாவர்கள் , ஆனால் இம்முறை அப்படி எதுவும் இல்லாமலே அஜித் மீது காண்டாவதை பார்க்கும் பொது ஒரு அஜித் ரசிகனாக சந்தோசமாகவே இருக்கிறது , சென்ற தலைமுறையில் ஒரு படத்தை தனியாளாக சுமந்து வெற்றிபெற வைக்கும் திறமை ரஜினிக்கு மட்டுமே கைகூடியிருந்தது , இதோ இந்த பில்லா ௨ வின் மூலம் ரஜினிக்கு பிறகு அந்த வரிசையில் அட்டகாசமாக அமருகிறார் தல... இப்படி சொல்வதால் நான் அஜித்தை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லவரவில்லை , அடுத்தவரின் பட்டத்துக்கு ஆசைபடும் அல்லக்கைகள் கிடையாது நாங்கள் , தமிழ் சினிமா ராஜ்யத்தில் எங்கள் தலைக்கு என்றே ஒரு தனி சிம்மாசனம் தயாராகிவிட்டது அதில் கூடிய சீக்கிரம் எங்கள் தலையை அமர வைப்போம்...
படத்தில் தலையை பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால்  மரண மாஸ் , இதுவரைக்கும் தலையை இவ்வளவு மாஸாக நாங்கள் திரையில் பார்த்ததில்லை , என்னடா மங்காத்தாவுக்கும் இப்படிதானே சொன்னான் என்று என்னை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்கள் நினைக்கலாம் , அதுதான் தல .... பில்லா ௨ பார்த்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்.. மன்காத்தாவில் அஜித்தின் ஸ்டைலை உயர்த்தி காட்டிய சிகரெட் இதில் இல்லை , இருந்தும் அதை விட அதிக மாஸ் , அதிக ஸ்டைல் என்று தன் உடல் மொழியை மட்டுமே வைத்து பின்னியிருக்கிறார்... அஜித்தை "தலை"யாக காட்டாமல் பில்லாவாக முழுவதுமாக உருமாற்றிய விதத்தில் சக்கிரியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். இந்த விசயத்தில் சக்கிரிக்கு பெருமளவில் உதவியிருப்பவர் வசனம் எழுதிய ரா. முருகன்தான்... தல பேசும் ஒவ்வொரு வசனமும் நச்... படத்தை பல இடங்களில் தூக்கி நிறுத்தியிருப்பது இவரின் வசனங்கள்தான்... அடுத்து குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயங்கள் ஒளிப்பதிவும் , சண்டை காட்சிகளும்தான்.. பில்லாவின் ஒவ்வொரு காலகட்ட வாழ்க்கைக்கும் ஒவ்வொரு கலர் டோன் பயன்படுத்தியிருப்பது கேங்க்ஸ்டர் படத்துக்குரிய பீலிங்கை நமக்கு பக்காவாக உருவாக்கி தருகிறது... இந்த வருடம் சிறந்த ஒளிபதிவுக்கு என்று தரப்படும் விருதுகளில் இவர் பெயர் மிஸ் ஆனால் அது அந்த விருதுக்குத்தான் அசிங்கம் .... சிறந்த ஆக்சன் காட்சிகள் என்று பார்த்தால் படத்தின் மொத்த காட்சிகளையும் சொல்லலாம் , டிமிட்ரியாக வரும் வில்லனின் அறிமுக காட்சி ஒரு பானை சோற்றில் ஒரு சோறு பதம்.. படத்தின் அடுத்த பலம் யுவனின் பின்னணி இசை , அதவும் இடைவேளை முடிந்து அடுத்த ஒரு அரைமணி நேரத்துக்கு யுவனின் ராஜ்ஜியம்தான் ... ஏற்கனவே பில்லாவில் போட்ட அதே தீம்தான் , ஆனால் சோக காட்சிகளில் ஒரு மாதிரி ஒலிக்கிறது , சண்டை காட்சிகளில் ஒரு மாதிரி ஒலிக்கிறது ,அஜித்தை மாஸாக காட்டும் காட்சிகளில் வேறு மாதிரி ஒலிக்கிறது .... மேலே சொன்ன நான்கு விசயங்களும் இந்த பில்லா 2 பில்லா 2007 ஐ அனாசியமாக தூக்கி சாப்பிட்ட இடங்கள்... ஆனால் அந்த பில்லாவை ஒப்பிடும்போது இந்த பில்லா சறுக்கிய இடங்களும் உண்டு , அதில் முதலாவது ஹீரோயின் ... ஓமனக்குட்டி படத்துக்கு எந்தவகையிலும் உபயோகப்படவில்லை , அடுத்து இரண்டாம் பாதி,, அந்த பில்லாவின் இரண்டாம் பாதியில் இருந்த விறுவிறுப்பு இந்த படத்தில் கம்மியே , அதேபோல திரைக்கதையும் சில இடங்களில் தடுமாறியிருக்கிறது... ஆனால் இதையெல்லாம் மறக்கடித்திருப்பது தல+யுவன்+ராஜசேகர்+ சண்டை பயிற்சியாளர்களின் அசுரத்தனமான உழைப்பு.. இவர்களின் அத்துணை உழைப்பையும் ஒற்றையாளாக காப்பாற்றி இருக்கிறார் பில்லாவாகவே உருமாறி வாழ்ந்து காட்டியிருக்கும் தல.

ஒரு இயக்குனராக சக்ரி வெற்றி பெற்றிருந்தாலும் ஒரு திரைகதையாசிரியராக சறுக்கியிருக்கிறார் , முதல் பாதியில் இருந்த வேகமும் விறுவிறுப்பும் இரண்டாம் பத்தியில் கொஞ்சம் கம்மிதான் , அதை மட்டும் சரி பண்ணியிருந்தால் இந்த பில்லா தமிழ் சினிமா உலகில் ஒரு புதிய சரித்திரம் படைத்திருப்பான் அஜித்தின் ஆக்ரோசமான நடிப்பில் வாலி , வரலாறு , பில்லா , மங்காத்தா போன்று சரித்திரம் படைத்திருக்க வேண்டிய இந்த பில்லா 2 , திரைக்கதை ஆசிரியர்களின் கவனக்குறைவால் அமர்க்களம் , தீனா , சிட்டிசன், வில்லன் , அட்டகாசம் வரிசையில் அமரவேண்டியதாகி விட்டது...
டிஸ்கி: இந்த படத்தை விமர்ச்சிக்கும் சில்வண்டின் ரசிக கண்மணிகளே , இந்த படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் அஜித்தை மறந்து விட்டு அதற்க்கு பதிலாக உங்கள் அணிலை அந்த இடத்தில் கற்பனை செய்து பாருங்கள் , நீங்களே உங்கள் வாயை மட்டும் இல்லை சகலத்தையும் பொத்திக்கொண்டு ஓடிவிடுவீர்கள்

Tuesday, July 10, 2012

மேற்கு தொடர்ச்சி மலையும் சேட்டன்களின் சகுனி வேலையும்தமிழ்நாட்டில்  மேற்கு தொடர்ச்சி மலையை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது , இந்தியாவுக்கு குறிப்பாக தென்னிந்தியாவுக்கு கடவுள் கொடுத்த கொடை அது. தென்னிந்தியாவில் தமிழ்நாடு , கேரளா கர்நாடகா , கோவா , மகாராஸ்டிரா ஆகிய நான்கு மாநிலங்களை இணைக்கும் சுவர் இந்த மலைத்தொடர். தென்னிந்தியாவின் பல முக்கியமான சுற்றுலா மையங்கள் இந்த மலையில்தான் அமைந்துள்ளன.உலகளவில்  வெகு வேகமாக அழிந்து வரும் பல உயிரினங்கள் பறவைகள் வாழ்ந்துகொண்டிருக்கும் இடம் ,பல அறிய விலங்குகளின் சரணாலயங்கள் அமையபெற்றிருக்கும் இடம் , தென்னியாவின் ஒட்டு மொத்த ஜீவநதிகளும் உற்பத்தியாகும் இடம் , இதெற்கெல்லாம் மேலாக உலகளவில் வேறு எங்கும் காண கிடைக்காத பல அரியவகை மூலிகைகள் விளையும் காடுகள் அதிகம் உள்ள மலைத்தொடர் என்று இந்த மேற்கு தொடர்ச்சி மலைக்கு பல பெருமைகள் உண்டு...  இது எல்லாம் தெரிந்ததுதானே என்று நீங்கள் கேட்கலாம் அது அல்ல மேட்டர் , இப்படி பல சிறப்பு வாய்ந்த மேற்கு தொடர்ச்சி மலையை UNESCO உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவித்து உள்ளதாம் , இதை இந்திய அரசாங்கம் பெரிய அளவில் முயற்சி எடுத்து சாதித்துள்ளதாம் , இந்திய இயற்கை வள மேம்பாட்டு துறையினர் பெருமையாக ஊடகங்களில் பேட்டி  கொடுத்து கொண்டிருக்கிறார்கள் ,  மேலோட்டமாக பார்த்தால் இது பெருமைதானே என்று நினைக்கலாம் ஆனால் அதன் பின்னால் இருக்கும் சதி அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை , தமிழகத்தில் மிக வறண்ட பகுதிகள் என்று எடுத்து கொண்டால் அது தென்கிழக்கு மாவட்டங்களான விருதுநகர் , மதுரை , ராமநாதபுரம் , சிவகங்கை மாவட்டங்கள்தான் , நம் மாநிலத்தில் மற்ற பகுதிகளில் தென்மேற்கு மழை அஜித் பட ஒபெநிங் போல சுழற்றி அடிக்கும்  காலகட்டங்களில் இங்கு விஜய் பட ஒபெநிங் போல மழை மந்தமாக இருக்கும்  , பத்து வருடங்கள் இருபது வருடங்களுக்கு ஒருமுறைதான் தென்மேற்கு பருவ மழை முழுவதுமாக பெய்து இந்த மாவட்ட மக்களுக்கு கருணை காட்டும் , ஆனால் அதே காலகட்டங்களில் கேரளாவின் கடற்கரையோர பகுதிகளில் மழை வெழுத்து வாங்கும் , இப்படி இங்கே மழை பெய்யாமல் போவதற்கும் அங்கெ அபரிமிதமாக மழை பெய்வதற்கும் ஒரே காரணம் நடுவில் இருக்கும் இந்த மேற்கு தொடர்ச்சி மலைகள்தான்.


தென்மேற்கு பருவகாற்று வீசும் காலகட்டத்தில் அரபி கடலில் இருந்து உற்பத்தியாகும் மேகக்கூட்டங்கள் கிழக்கு நோக்கி அதாவது தமிழகத்தின் தென்கிழக்கு மாவட்டங்களை நோக்கி அந்த காற்றால் இழுத்து வரப்படும் , அந்த மேகக்கூட்டங்கள் அனைத்தும் மழையாக பொழிந்தால் இன்று ராமாநாதபுரம் மாவட்டம்தான் தமிழகத்திலேயே பசுமையான மாவட்டமாக இருந்திருக்கும் , ஆனால் நடுவில் இருக்கும் இந்த மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் அதற்க்கு எமனாக அமைந்து விட்டது , இந்த உயரமான மலைகள் இந்த காற்றையும் மேகங்களையும் தமிழகத்துக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்துகின்றன , பெரும்பாலான மேகங்கள் அந்த மலைகளுக்குள்ளேயே மழையாக பொழிந்து ஆறுகளாக உருவெடுத்து மீண்டும் கேரளா வழியாக அரபி கடலுக்கே சென்று கலந்து  விடுகிறது.. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஆறுகளில் பெரும்பாலான ஆறுகள் மேற்கு நோக்கி ஓடி அரபிக்கடலில்தான்  கலக்கும் , மிக சில ஆறுகளே (தாமிரபரணி , காவேரி , வைகை ) தமிழகத்தை நோக்கி விரியும் , (ஆனால் அவற்றிலும் நடுவில் அணையை கட்டி தமிழகத்துக்கு துரோகம் செய்கிறார்கள் ). இப்படி மேகங்களும் கிடைக்காமல் அவற்றால் தண்ணீரும் கிடைக்காமல் இயற்கையும் அரசாங்கமும் நம்மை வஞ்சித்து வருகிறார்கள் , இதனால் பாசனத்துக்கும் , குடிப்பதற்கும் மிக பெரிய தண்ணீர் தட்டுபாட்டை நோக்கி நம் தமிழகம் சென்று கொண்டிருக்கிறது , இந்த சமயத்தில்தான் தமிழகத்துக்குள் ஒரு புதிய கோரிக்கை பலதரப்பட்ட மக்கள் இயக்கங்களாலும் , மதிமுக போன்ற ஒருசில அரசியல் கட்சிகளாலும் நம் இந்திய அரசாங்கத்தை நோக்கி வீசப்பட்டது , அது மேற்கு தொடச்சி மலைத்தொடரை சில இடங்களில் செப்பனிட்டு அதாவது உயரத்தை குறைத்தோ  இல்லை கணவாய்கள் அமைத்தோ தென்மேற்கு பருவ காற்று தமிழகத்துக்குள் அதிகபடியாக நுழையும்படியான வசதியை செய்து தரவேண்டும் என்பதுதான்... அப்படி செய்தால் தமிழகத்தின் வறண்ட பகுதிகளை ஓரளவு பசுமையான பகுதிகளாக மாற்றலாம் , ஆனால் அதே சமயம் கேரளாவில் இப்பொழுது அபரிமிதமாக அதாவது தேவைக்கு அதிகமாகவே பெய்து வரும் மழை குறைந்து விடும்.


எங்கே தமிழகத்தில் இந்த கோரிக்கை வலுபெற்று விடுமோ என்ற பயந்த கேரளா அரசு , மத்திய அரசின் மூலம் செய்திருக்கும் சகுனி வேலைதான் இந்த பாரம்பரிய சின்னம் என்னும் வறட்டு கவுரவம்.. இதன் மூலம் அந்த மலையை யாரும் தொந்தரவு செய்ய முடியாமல் செய்து  ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்திருக்கிறது கேரளா அரசு , பெருமைக்கு பெருமையும் ஆச்சு , நீர் வளத்தையும் காப்பாற்றியாகிவிட்டது , ஆனால் இதன் மூலம்  மறுபடியும் கேனையர்களாக்கபட்டிருப்பது  வழக்கம் போல தமிழகர்கள்தான்.. அணையை போட்டு தண்ணீரை தடுத்தவர்கள் இப்பொழுது காற்றையும் மேகத்தையும் கூட நிரந்தரமாக தடுத்து நிறுத்தும் சகுனி வேலையை சத்தம் இல்லாமல் செய்து விட்டார்கள் , இந்த விசயத்தின் பின்னால் இருக்கும் அரசியலை எழுதகூட இங்கே ஒரு ஊடகமும் இல்லை , மாறாக இது தமிழனக்கும் ஒரு பெருமைதான் என்று  நம்மை மூளை சலவை செய்யும் வேலையை கனகச்சிதமாக செய்து கொண்டிருக்கிறது நம் அரசு சார்ந்த மற்றும் அதற்க்கு சொம்படிக்கும் சில ஊடகங்கள்.

(எங்கள் ஊர் பகுதிகளில் ஒரு இருபது வருடங்களுக்கு  முன்னாள் இருந்த பசுமைகூட இப்பொழுது இல்லை , முன்பெல்லாம் வருடா வருடம் ஓரளவு மழை பெய்து கிணற்றில் முழுவதுமாக நீர் நிரம்பி இருக்கும் , கண்மாய்களில் நீர் நிரம்பி விவசாய பாசனத்துக்கு கைகொடுக்கும் , ஆனால் இன்று நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது , எங்கள் ஊர் கிணறுகளில் தண்ணீர் நிரம்பி பல வருடங்கள் ஆகிறது , கிணற்றில் நீச்சல் அடிப்பது என்பதெல்லாம் எங்களுக்கு வெறும் கனவாகவே மாறிவிட்டது , விவசாய நிலங்கள் எல்லாம் தரிசு நிலங்களாக மாறிவருகிறது , நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது , இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால் இன்னும் அம்பது வருடங்களில் தமிழகத்தின் தென்கிழக்கு பகுதிகள் வாழவே முடியாத பகுதிகளாக மாறினாலும் ஆச்சரியமில்லை... )
   

LinkWithin

Related Posts with Thumbnails