Followers

Copyright

QRCode

Tuesday, August 30, 2011

கொஞ்சம் அரசியல் , கொஞ்சம் சினிமா




இன்றைய தேதியில் தமிழ் நாட்டு அரசியலில் ஹாட் டாபிக் தூக்கு தண்டனைதான் .... எனக்கு அவர்களை தூக்கில் போடணுமா வேண்டாமா என்று அரசுக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு அனுபவமோ அறிவோ கிடையாது , ஆனால் ஒரு விஷயம் மட்டும் எனக்கு இந்த தண்டனை விஷயத்தில் உறுத்தலாகவே இருக்கிறது , அது மனிதனை கொல்லும் உரிமை இன்னொரு மனிதனுக்கு இருக்கிறதா? என்பதே .... ஆண்டவனின் படைப்பில் எல்லா உயிர்களும் ஒன்றே , எல்லா மதங்களும் இந்த சித்தாந்தத்தையே அடிப்படையாக கொண்டவை , எந்த மதமும் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொல்லுவதை ஏற்றுக்கொள்வதில்லை , ஒருவன் யாராக இருந்தாலும் அவனை துன்புறுத்துவது என்பது கண்டிப்பாக பாவமான செயல்தான், அப்படி இருக்க ஒருவன் பாவம் செய்து விட்டான் என்பதற்காக அவனை கொல்லுவதும் ஒரு பாவம்தானே , அந்த பாவத்தை போக்க அவனை கொன்றவர்கள் என்ன செய்வார்கள்... சரி , இனிமேல் யாரும் இந்த மாதிரியான கொடுஞ்செயல்களை செய்ய அஞ்சுவார்கள் என்பதற்காக தூக்கு தண்டனையை நடமுறையில் வைத்திருக்கிறார்கள் என்றாள் , 150 வருடங்களாக நடைமுறையில் இருக்கும் இந்த சட்டத்தால் இன்று குற்றங்கள் குறைந்து ஒன்றும் இல்லாமல் போயிருந்திருக்க வேண்டுமே... மரண தண்டனை நடைமுறையில் இருக்கும் எல்லா நாடுகளிலும் குற்றங்கள் இன்னமும் தலைவிரித்தாடுகிறதே , மரணதண்டனையே இல்லாத ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் குற்றங்கள் பெரிய அளவில் நடப்பதில்லையே .... நீங்கள் குற்றம் குறையவேண்டும் என்பதற்காகத்தான் மரணதண்டனை கொடுக்கிறோம் என்று வாதிட்டீர்கள் என்றாள் , I am sorry , குற்றங்களை ஒரு போதும் தண்டனைகளால் குறைத்து விட முடியாது , குற்றங்கள் பல்கி பெருகி போய் இருக்கும் நம் பாரத நாடே இதற்க்கு ஒரு பெரிய சாட்சி.... நன்றாக  சிந்தித்து பாருங்கள் லட்சங்களில் சம்பாதிக்கும் உயர் நடுத்தர வர்க்கமோ , இல்லை ஆயிரம் ஆயிரமாய் சம்பாதிக்கும் நடுத்தர வர்கமோ பெரும்பாலும் குற்றங்களில் ஈடுபடுவதில்லை , அடுத்த வேளை கஞ்சிக்கு வழி இல்லாதவனும் , தன் வாழ்வை ஓட்ட நிரந்த வருமானம் இல்லாதவனுமே இன்று நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு காரணம் , அவர்களின் இந்த நிலைக்கு காரணம் இன்றைய அரசாங்கமே , முதலில் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துங்கள் , ஊழல் , லஞ்சம் என்று மேல்மட்டத்தில் நீங்கள் செய்யும் குற்றங்களை குறைத்து , நம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துங்கள் , பிறகு பாருங்கள் நீங்களே காசு கொடுத்து கொலை செய்யுங்கடா என்று சொன்னாலும் ஒருவனும் வரமாட்டான் ...



கீழே இருக்கும் இந்த மூன்று படங்களையும் பார்த்ததில் இருந்து எனக்கு மோஷன் நிக்காம போய்கிட்டு இருக்கு , இந்த பிளக்ஸ் , மற்றும் கட் அவுட்களை டிசைன் பண்ணுண அந்த பதினொரு பேர் கொண்ட குழு யாருன்னு தெரியவில்லை , டேய் உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட வெக்கமே கிடையாதாடா? ரோஷம் கெட்ட பன்னாடைகளா... உங்களையெல்லாம் நடுத்தெருவுள நிக்கவுட்டு மனுஷ கழிவாலயே அடிக்கணும்டா? இப்படியெல்லாம் அவனுங்களை திட்டணும்னு  ஆசையாத்தான் இருக்கு ஆனா நாளைக்கே நம்ம தமிழ்நாட்டின் அன்னா ஹசாரே  முதலைமச்சர் ஆகிட்டாருணா இதை காரணம் காட்டியே என்னை புடிச்சி தூக்குள போட்டிருவானுங்கன்னு பயமா இருக்கு... என்னமோ போங்கடா வடிவேலு இல்லாத குறையை நீங்கதாண்டா தீர்த்து வைக்கிறீங்க?





கொசுறு:
காந்திக்கு வந்த சோதனைய பாருங்க மக்களே ...



அப்பறம் மக்களே தீபாவளிக்கு முதல் நாள் சாயந்திர மனநிலையில் இன்று இருக்கிறேன்....  நாளைக்கு தலையோட மங்காத்தா படம் ரிலீஸ் ஆகுது .... படம் ரிலீஸ் ஆகுறவரைக்கும் எதுவும் எழுதக்கூடாதுன்னு விரதம் இருக்கேன், தல படம் ரிலீஸ் ஆக போவுதுன்னு சொன்னாலே மனசு ஒரு கொண்டாட்ட நிலைக்கு வந்தாலும் ஓரத்துல லேசா திக்கு திக்கு அடிச்சிக்கிட்டு கெடக்கு... எக்ஸாம் ரிசல்ட் பாக்க போற மாதிரி... அதனால நாளைக்கு முதல் ஆளா ரிசல்ட் பாத்திட்டு,  ரிசல்ட் என்ன ஆச்சுன்னு பதிவுல விலாவரியா சொல்லுறேன்...  தல ரசிகர்களே படத்தை மிஸ் பண்ணாம பாருங்க , அதுவும் end credit மிஸ் பண்ணிடாதீங்க , தல படத்தில் முதல் முறையா behind the scenes போட போறாங்க ... பாருங்க என்ஜாய் பண்ணுங்க ... 

Tuesday, August 23, 2011

இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் - போட்டோ கமெண்ட்























திராவிட் எங்க ஊருக்கு வந்தா இங்கிலாந்துக்கு பதிலடி கொடுப்போம்னு சொல்லி இருக்காரு , இதுக்கு கமென்ட் எல்லாம்  கிடையாது வெறும் படம்  மட்டும்தான் 



Wednesday, August 17, 2011

அன்னா ஹசாரேவும் அரசியல் நாடகங்களும் .....




ஊழலுக்கு எதிராக ஒரு மாபெரும் போராட்டம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது வடக்கில் ... ஊழல் என்ற அரக்கனை ஒழிக்க வேண்டும் என்ற ஒற்றை  புள்ளியில் இந்திய மக்கள் அனைவரும் கண்டிப்பாக அணிதிரள்வார்கள் , இது இன்றைய மோசமான நிலையில் நம் நாட்டுக்கு கண்டிப்பாக தேவையான ஒன்றுதான், ஆனால் அந்த புள்ளி கரும்புள்ளியாக அமைந்து விடக்கூடாதல்லவா? அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் பற்றி எனக்கு இருக்கும் சில சந்தேகங்கள் என்னை அவரை முழுமையாக ஆதரிக்கவிடாமல் தடுக்கின்றன....


அவரின் சில நடவடிக்கைகள் ஹசாரே ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறாரா இல்லை காங்கிரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறாரா என்று சந்தேகப்பட வைக்கின்றன? அவர் காங்கிரஸை மட்டும் குறிவைத்து தாக்குவது ஏன்? நம் நாட்டில் காங்கிரஸ் மட்டும்தான் ஊழல் செய்து கொண்டு இருக்கிறதா? ஏன் கர்நாடகாவில் மாற்றி மாற்றி ஊழல் புகாரில் சிக்கி சுப்ரீம் கோர்ட்டால் கண்டிக்கபட்ட ஒருவரை முதல்வர் பதவியில் இருந்து இறக்க ரொம்பவும்  யோசித்த ஒரு கட்சியை பற்றி அவர் வாயே திறப்பதில்லை, மாறாக அந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதை போல அவர் நடந்து கொள்வது ஏன்? நரேந்திர மோடியை ஊழல் இல்லாத அரசியல்வாதி என்று தன் வாயால் உளறிவிட்டு மீடியாக்கள் கண்டனம் தெரிவித்தவுடன் நான் சொல்லவந்ததே வேற என்று கைப்புள்ள வடிவேலு போல அசடு வழிந்தது ஏன்?


இவர் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்று உண்மையிலேயே நினைத்தால் காங்கிரசுக்கு ஊழலில் கொஞ்சமும் சளைக்காத BJP கட்சியின் ஆதரவை வேண்டாம் என்று தைரியமாக உதறிவிட்டு மக்களின் ஆதரவை மட்டுமே நம்பி இறங்கி இருக்கலாமே... BJP , ஆர்‌எஸ்‌எஸ் என்று யோக்கிய சிகாமணிகளின்  ஆதரவை அவர் ஏன் தேடி போகவேண்டும்... ஊழல் எதிர்ப்பு உணர்வுக்கு  அரசியல் சாயம் பூசி வேறு ஒரு கட்சியை ஆட்சியில் உக்காரவைக்க வேண்டும் என்பதுதான் அண்ணாவின் உள்நோக்கமாக இருக்குமோ என்ற சந்தேகம் இதனால் ஏற்படுகிறதே...

அதேபோல அவர் காங்கிரஸ் கட்சியையும் அதன் அமைச்சர்களையும் மட்டுமே ஊழல்வாதிகள் என்று எதிர்த்துக்கொண்டு இருக்கிறார் , ஆனால் அவர்களுக்கு பின்னால் இருந்து கொண்டு அவர்களை இயக்கும் இந்திய பணமுதலைகளை அவர் கண்டுகொள்வதே இல்லை... ஊழலின் ஆணிவேறே அவர்கள்தானே , அவர்களை ஏன் இவர் தன்னுடைய போராட்டங்களில் விமர்சிப்பதே இல்லை... அடுத்து பி‌ஜெ‌பி ஆட்சிக்கு வந்தால் இவர்களின் தயவு தேவைப்படும் என்பதால் அவர்களை பற்றி வாயே திறப்பதில்லையோ என்ற சந்தேகமும் இதனால் வலுக்கிறது...  



சரி ஊழலுக்கு எதிராக போராடும் இவர் என்ன யோக்கியனா என்று காங்கிரஸ் இவர் மீது ஒரு ஊழல் குற்றசாட்டை வைத்தது , "இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்"க்கு மகாராஷ்ட்ரா அரசு கொடுத்த பணத்தில் 10 லட்சம் ரூபாய் பணத்தை இவர்கள் கையாடல் செய்து இருக்கிறார்கள் என்று ஒரு அறிக்கை பல வருடங்களுக்கு முன்னாள் வெளிவந்தது .... அவர் இந்த புகாரை சட்டப்படி சந்தித்து தான் ஊழல்வாதி இல்லை என்று நிரூபித்து இருந்தால் இவர்மேல் நம்பிக்கை வந்திருக்கும் , ஆனால் இன்று காங்கிரஸ் அந்த அறிக்கையை தூசி தட்டி வெளியிட்டதும்  என் மேல் சேறு வாரி இறைக்கிறார்கள் , அவர்கள் இந்த அறிக்கையை திரும்ப பெரும் வரைக்கும் உண்ணாவிரதம் இருக்க போகிறேன் என்று ஸ்டண்ட் அடித்தார் இந்த இரண்டாவது இந்திய சுதந்திர போராட்டத்தின் தலைவர் இரண்டாம் மோகன்லால் காந்தி...
இவர் ஊழலுக்கு எதிராக போராடும் முன்னால் தன் மீது இருக்கும் இந்த ஊழல் கரையை துடைத்து விட்டல்லவா இறங்கி இருக்க வேண்டும்...

அதே போல லோக்பால் சட்டத்தின் வரம்புக்குள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கொண்டு வரப்படுவதை இவர் ஏன் கடுமையாக எதிர்க்கிறார்? ஏன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஊழலலே செய்வதில்லையா? சில சொற்ப எண்ணிக்கையில் இருக்கும் உண்மையிலேயே சேவை மனப்பான்மையோடு தொடக்கபட்ட தொண்டு நிறுவனங்களை தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் கருப்பு பணத்தை காப்பாற்ற பணமுதலைகளாலும் , அரசியல்வியாதிகளாலும் மறைமுகமாக நடத்தபடுபவைதானே, அங்கு மட்டும் ஊழல் இருக்காது என்று எப்படி கண்டிப்பாக சொல்ல முடியும்....


இவற்றை எல்லாம் பார்க்கும் பொழுது ஊழல் ஒழிந்து உலக நாடுகளின் மத்தியில் இந்தியா ஒளிர்ந்துவிடாதா என்ற நம் மக்களின் ஏக்கத்தை பயன்படுத்தி ஹசாரேவும் அவர் பின்னால் இருப்பவர்களும் நடத்தும் அரசியல் நாடகம் போல ஒரு சந்தேகம் வருவதை தவிர்க்க முடியவில்லை... ஆனால் ஹசாரேவின் இந்த போராட்டம் மூலம் விழைந்திருக்கும் ஒரே நன்மை , ஊழல் ஒழிய வேண்டும் , நாடு முன்னேற வேண்டும் என்ற வேட்கை நம் நாடு முழுவதும் மக்கள் மனதில் காட்டு தீயாய் பரவி கிடக்கிறது என்ற உண்மையை நம் அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் உருவாகி இருக்கிறது... அதற்காக மட்டும் ஹசாரேவுக்கு ஒரு இந்தியனாக நன்றி சொல்லியே ஆகவேண்டும்...

டிஸ்கி 1 : அண்ணா என்ற பெயருக்கும் காங்கிரசுக்கும் ஜென்ம பகை போல , அன்று  ஒரு அண்ணா தென்னிந்தியாவில் காங்கிரசுக்கு ஆப்பு வைத்தார் , இன்று வடக்கில் ஒரு அன்னா ஆப்பு வைக்க துடித்து கொண்டிருக்கிறார்...
டிஸ்கி 2 : இந்த பதிவில் நான் என்னுடைய சந்தேகங்களை மட்டுமே எழுதியிருக்கிறேன் , மேலும் நான் ஹசாரேவை சந்தேகபடுவதால் காங்கிரஸை ஆதரிப்பவன் என்று அர்த்தம் கிடையாது.. ஊழல் முற்றும் ஒழிய வேண்டும் என்று ஆசைப்படும் சாதாரண குடிமகன்களில் நானும் ஒருவன் ...  
  


  


Tuesday, August 16, 2011

Rise of the apes – மனித குரங்குகளின் புரட்சி




நீண்ட நாட்களாகவே எந்த படத்தின் விமர்சனத்தையும் இந்த தளத்தில் எழுத தோன்றவில்லை , காரணம் வரிசையாக நான் பார்த்த படங்கள் எல்லாம் மொக்கையாகவே  இருந்ததுதான்  ... அதனால்  நேற்று எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்தான்  இந்த படம் பார்க்க சென்றேன் , வழக்கம் போல குரங்குகளை வைத்து ஏதாவது வித்தை காட்டி இருப்பார்கள் என்றுதான் நினைத்தேன்,.. ஆனால் படம் எனக்கு வேறு விதமான நிறைய அனுபவங்களை அள்ளி தந்தது ... இன்று நம்முடைய சுயநலத்திர்க்காக நாம் செய்யும் பல விஷயங்கள் பிற உயிரினங்களை எப்படியெல்லாம் காவு வாங்குகிறது , அவைகளுக்கும் நம்மை போல சிந்திக்கும் திறன் வந்துவிட்டால் நம் நிலமை என்னவாகும் என்பதை விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார்கள் ...

eco tourism என்றொரு வகையான சுற்றுலாவை பற்றி அறிந்திருக்கிறீர்களா? விலங்குகளை காட்டில் இருந்து பிடித்து வந்து zoo என்ற பெயரில் கூண்டில் அடைத்தோ  இல்லை reservoir என்ற பெயரில் குறுகிய எல்லைக்குள் அடைத்து வைத்து மனிதன் என்னும் மிருங்கங்களாகிய நாம் கூட்டம் கூட்டமாக சென்று அவைகளை பார்த்து சந்தோசபடுவதற்க்கு பெயர்தான் eco-tourism… நம் சந்தோஷத்தை மட்டுமே பார்க்கும் நாம் நமக்காக கூண்டில் அடைபட்டு கிடக்கும் அந்த மிருகங்களின் வலியை உணர்வதில்லை , இதே நிமைமைதான் ஆராய்ச்சி கூடங்களில் பரிசோதனைக்காக பிடித்து வரப்படும் மிருகங்களுக்கும் ...  இந்த விசயம்தாம் இந்த படத்தின் அடிநாதம்


Genesys என்னும் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளராய் வேலை செய்யும் விஞ்ஞானி ஒருவர்   நீண்ட நாட்கள் முயற்சி செய்து ஒரு மருந்தை கண்டுபிடிக்கிறார் , அதை பரிசோதனை செய்ய காட்டில்  இருந்து நிறைய மனித குரங்குகளை பிடித்து வருகிறார்கள்.. அந்த மருந்து செலுத்தபட்ட குரங்கு ஒன்று குட்டி ஒன்றை ஈனுகிறது... அந்த குட்டியை அந்த விஞ்ஞானியே தன்னுடைய வீட்டில் வளர்க்க வேண்டிய சூழ்நிலை வருகிறது , தாயின் உடலில் இருந்து அந்த மருந்து இந்த குட்டிக்கு வரவி இருப்பதால் குட்டி அபரிமிதமான அறிவுடன் சீசர் என்ற பெயரில் அந்த வீட்டில் வளர்கிறது .... வீட்டை விட்டு வெளியே சென்று சிறுவர்களுடன் விளையாட ஆசையுடன் இருந்தாலும் , வெளியே சென்றாள் யாராவ்து  தன்னை தவாரக புரிந்து கொண்டு தன்னிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்ள கிடைத்ததை வைத்து அடிப்பார்கள் என்பதால் வெளியே செல்ல பயப்படுகிறது , இதனால் வீடே உலகம் என்று வளர்கிறது , அந்த வீட்டில் இருக்கும் அனைவரின் மேல் தீராத பாசத்துடன் வளர்கிறது... 

ஆனால் அந்த பாசமே அதற்க்கு வில்லனாக வந்து விடுகிறது , தன் எஜமானரை தாக்கிய பக்கத்து வீட்டுக்காரனின் கை விரலை கடித்து விட , போலீஸ் வந்து சீசறை பிடித்து கொண்டு போய் விலங்குகளுக்கான காப்பகத்தில் விட்டு விடுகிறார்கள் ... அங்கு சீசர் தன்னை போன்ற பல குரங்குகளுடன் பழக நேரிடுகிறது ... அங்கு இருக்கும் காவலாளிகள் எல்லா குரங்குகளையும் அடித்து துன்புறுத்துகிறார்கள் , சீசரும் அவர்களின் துன்புறுத்தலுக்கு தப்பவில்லை , முதலில் தான் எப்படியாவது இந்த ஜெயிலை விட்டு தப்பி வீட்டுக்கு சென்று விட வேண்டும் என்று நினைக்கும் சீசர் மெல்ல மெல்ல தன் இனம் இங்கு படும் கஷ்டங்களை உணர்ந்து கொள்கிறது ... ஒரு கட்டத்தில் சீசர் வீட்டுக்கு செல்லும் ஸந்தர்பம் அமைந்தும் வீட்டுக்கு செல்ல மறுக்கிறது ,  அவனின் மனதிர்க்குல் மெல்ல மெல்ல ஒரு போராளி பிறக்கிறான் , தன் இன விடுதலைக்காக திட்டம் தீட்டுகிறான் , அதில் வென்றானா? இல்லையா? என்பதே இந்த rise of the planet of the apஎஸ் படத்தின் கதை...


 (அம்மணிதான் படத்தோட ஹீரோயின்)

                                            

எங்கெல்லாம் ஒரு இனம் ஒடுக்கபடுகிறதோ அங்கெல்லாம் ஒரு போராளி பிறப்பான்... இது இயற்கையின் நியதிதான்.. இந்த படமும் இதைதான் சொல்கிறது.. ஆனால் இங்கு  அந்த போராளி குரங்குகளாய் இருப்பதுதான் ரசிக்கும்படியான விஷயம்... சீசராக வரும் அந்த குரங்குக்காய் முகபாவனைகள் கொடுத்தவர் யார் என்று தெரியவில்லை , மனிதர் கலக்கி இருக்கிறார் , விஞ்ஞானியின் வீட்டில் இருக்கும் பொது குழந்தைதானமாகவும் , குறும்பாகவும்  ஜெயிலுக்கு வந்தவுடன் சோகமாகவும் , பின்னர் மெல்ல மெல்ல கோபத்தையும் முகத்தில் அப்பட்டமாக வெளிபடுத்தி இருக்கிறார்... அனிமட்ரிக்ஸ் தொழில்நுட்பம் அவர் முகபாவனையை அப்படியே அந்த குரங்கிற்க்கு கொண்டு வந்து விட்டது ... இந்த தொழில்நுட்பத்தை சீக்கிரம் தமிழுக்கு கொண்டு வாங்க சாமீக்களா... இளையதளபதி அழுகிறது மாதிரியான கொடுமையான காட்சிகளை  இனிவரும் சந்ததிகளாவது  அனுபவிக்காமல்  இருப்பார்கள் ... 

சிறுகுழந்தையாக இருக்கும் பொது சீசர் செய்யும் சேட்டைகள் அட்டகாசம்..அதே போல போராளியாக மாறின பின்னர் அது செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும் ஆர்பாட்டம்... விஞ்ஞானியின் வீட்டில் இருந்து மருந்தை கொண்டு வந்து எல்லா குரங்குக்கும் கொடுப்பது , தன்னை தண்ணீரை பீய்ச்சி அடித்து கொடுமைபடுத்தியவனை அதேபோல தண்ணீரை  பீய்ச்சி அடித்து சாவடிப்பது , அதிரடியாய் zooவுக்குள் புகுந்து அங்கிருக்கும் குரங்குகளை வெளியேற்றுவது என்று எல்லாமும் ரணகளம்...   

இந்த படத்தில் என்னை கவர்ந்த இன்னொரு விஷயம் , குரங்குகளுக்குள் இருக்கும் மனிதத்தையும் , மனிதர்களுக்குள் இருக்கும் மிருகத்தையும் அப்பட்டமாக காட்டியதுதான் .... ஆராய்ச்சி தோற்று விட்டது என்று தெரிந்தவுடன் எல்லா மிருகங்களையும் கொன்று போடுகிறான் மனிதன் , அதேபோல் நகரத்தில் இருக்கும் அத்துணை குரங்குகளும் தப்பி யாருக்கும் கெடுதல் செய்யாமல் தங்கள் காட்டை நோக்கி போய் கொண்டு இருக்கும் போது , அவைகளை நவீன ஆயுதங்களை கொண்டு கொன்று குவிக்கிறான் , ஆனால் அந்த குரங்குகள் கடைசி வரை எந்த மனிதனையும் தாமாகவே காயபடுத்துவதில்லை... ஒரு காட்சியில் ஒரு குரங்கு உடைந்து கிடக்கும் காருக்குள் இருக்கும் போலீஸ்காரனை அடித்து கொல்ல போகும்போது இன்னொரு குரங்கு வந்து அதை தடுக்கிறது ... இப்படி போராளிதுவத்தின் அடிப்படை குலையாமல் படம் பிடித்திருக்கிறார்கள்...   



சீஸர்தான் இப்போதைக்கு இந்த படம் பார்த்த எல்லாருக்கும் சூப்பர் ஸ்டார் ... அதுவரை சைகை மொழியால் மட்டுமே பேசும் சீசர் முதன் முதலாய் நோ என்று கத்தும் காட்சியில் தியேட்டரே ஆர்பரிக்கிறது.... அதே போல கடைசி காட்சியில் இதுதான் என் வீடு என்று சீசர் பேசும் வசனம் நச்...

மொத்தத்தில் ஒரு பக்கா ரஜினி படம் பார்த்த எஃபக்ட் கொடுக்கிறது இந்த படம் ... இப்படி ஒரு ஃபீல் ஒரு ஆங்கில படம் பார்க்கும் பொழுது வருவது ரஜினியின் வெற்றியா? இல்லை அந்த படத்தின் வெற்றியா?...  எதற்க்கு எது அளவுகோல்?  என்று எனக்கு தெரியவில்லை..


டிஸ்கி : கூகிளில் rise of the planets of apes  என்று தேடினால் இந்த படம் ஏன் வருகிறது என்றும் எனக்கு தெரியவில்லை...


Wednesday, August 10, 2011

மங்காத்தா - "ஆட்டம் சூடு பிடிக்கிதுங்கோ"





அமர்க்களம் படத்தில் ரகுவரன் சார்லியை அடித்து போட்டு விட்டு ஸ்ரீநிவாசா தியேட்டருக்குள் வேகமாக வருவார் அதை பார்த்த அஜீத் வேகமாக ஓடி வந்து கிரில் கேட்டை மூடி ரகுவரனை நோக்கி கோபமாக ஒரு லுக் விடுவார் .. அந்த நிமிடத்தில்தான் எனக்குள் இருக்கும் அஜீத் ரசிகன் ஜனனம் ஆனான் , அதன் பின்னர் தீனாவில் அருவாள் , கத்தி என்று ஒவ்வொன்றாக  எடுத்து லைலாவிடம் கொடுக்கும் காட்சி , சிட்டிசனில் போலீஸ்காரர்களை பார்த்து  சிரித்து கொண்டே சிட்டிசன் என்று சொல்லும் காட்சி இவை எல்லாம் என்னை அவரின் வெறித்தனமான ரசிகனாக மாற்றி விட்டன... அப்பொழுதெல்லாம் ஒவ்வொரு அஜீத் படம் வரும்போதும் செம கொண்டாட்டம்தான் , அதுவும் அஜீத் படத்தின் பாடல்களை முதல் நாளே கேட்கா விட்டால் பைத்தியமே பிடித்து விடும் , தல பாட்டை முதல் முறை கேட்டு பாடலும் நன்றாக இருந்து விட்டால் ஒரே நாளில் நூறு முறை கேட்பேன் , பூவெல்லாம் உன் வாசம் பாடலை வித்யாசாகரை விடவும்  அதிக முறை கேட்டவன் நானாகத்தான் இருப்பேன் ... 

அதே போல தல படங்களின் டிரைலர் முதல் முறை பார்க்கும் போதெல்லாம் அப்படியே உடம்பு சிலிர்க்கும் , முன்பெல்லாம் இணைய உபயோகம் இந்த அளவுக்கு கிடையாது , எனவே டிரைலர் பார்க்க வேண்டும் என்றாள் டி‌வி ஒன்றுதான் வழி ... தல படத்தின் டிரைலர் போடுகிறார்கள் என்றாள் சோறு தண்ணி குடிக்காமல் டி‌வி முன்னாள் உக்கார்ந்து விடுவேன் .... எப்படா விளம்பர இடைவேளை விடுவார்கள் , தல டிரைலர் பாக்கணும் என்று விளம்பர இடைவேளைக்காக காத்து கிடப்பேன் ... டிரைலர் டிவியில் வந்த வுடன் முதல் முறையாக அதை பார்க்கும் போது  உச்சி மண்டை முதல் உள்ளங்கால் வரை ஜிவ்வென்று ரத்தம் ஸ்பீடா ஏறும் பாருங்க , ஃபாரீன் சரக்கு ஃபுல் பாட்டீல் அடிச்சாலோ இல்லை நம்ம லவ்வர் கிறக்கமா வந்து நமக்கு லிப் டூ லிப் கிஸ் அடிச்சாலோகூட  அந்த அனுபவம் கிடைக்காது ... அந்த பரவசமான அனுபவங்கள் எவ்வளவு கோடி கொடுத்தாலும் கிடைக்காது , தலையால் மட்டுமே எங்களுக்கு அந்த அனுபவத்தை தர முடியும்.. ஆனால் ஏனோ கடந்த சில வருடங்களாக தல எங்களை ஏமாற்றி கொண்டிருந்தார் ... இதோ நீண்ட நாட்களுக்கு பின்னர் அப்படி ஒரு பரவசத்தை உணர்ந்தேன் இன்று மாங்காத்தா டிரைலர் பார்த்த பொழுது ....

என்ன சொல்றது  தலதான் மாஸ் என்பதை அழுத்தமாக சொல்லுகிறது இந்த டிரைலர் ... எப்பவும் தலைக்கிட்ட ஒரு ஸ்டைல் இருக்கும் , அது இந்த டிரைலரில் அதிரி புதிரியா வெளிவந்திருக்கு.... அந்த போலீஸ் கெட்டப் போட்டுகிட்டு தல நடந்து வர்ற சீன் சின்ன சாம்பிள்.... எத்தனை நாளைக்குத்தான் நான் நல்லவனாவே நடிக்கிறது என்று அவர் பேசும் வசனம் டிரைலருக்கு அருமையாக பொருந்தி வந்திருக்கிறது ... அதே மாதிரி டிரைலரில் என்னை பரவசபடுத்திய இன்னொரு விஷயம் கேமரா , படத்துல கலர் ட்யூன் பக்காவா  இருக்கு , இது அப்படியே படத்திலையும் இருந்தா கண்டிப்பா அது ஒரு பெரிய பிளஸ்தான்.... அப்பறம் யுவனோட மியூசிக் பத்தி சொல்லலேனா  மாங்காத்தா பத்தி எழுதுறதுல அர்த்தமே இல்ல, இந்த படத்துக்கு அஜீத் ஒரு பில்லர் என்றால்  யுவன் இன்னொரு பில்லர் ... டிரைலரில் வரும் பி‌ஜி‌எம் சும்மா சூடேத்துது (பாடல்களையும் கேட்டுவிட்டேன் , அதை பற்றிய என்னுடைய பார்வையை  தனியாக நாளை ஒரு பதிவாக  எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன் ... ) அப்பறம் அர்ஜூன் , விநாயக் உன் கேம் முடிஞ்சிருச்சி என்று அவர் வசனம் பேசும்போது இருக்கும் வேகம் படத்திலும் இருந்தால் அட்டகாசமாக இருக்கும் ...  டிரைலர் catchyயாக இருப்பதற்க்கு முக்கிய காரணம் வேகமான எடிட்டிங்தான்... இதே வேகம் படத்திலையும் இருக்கணும் சாமீ....


கண்டிப்பா இந்த டிரைலர் படத்தின் மேல் எனக்குள் இருந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகபடுத்தி விட்டது... கதையும் திரைக்கதையும் இதே போல் ஸ்பீடா இருந்தா படம் எங்களுக்கு இன்னொரு தீனாதான்.... அப்படி ஒரு தலயை திரும்ப திரையில் தரிசிக்க இன்னும் எத்தனை நாள் காத்திருக்கணுமோ? வெங்கட் ஸார் படம் ரிலீஸ் ஆகபோகிற தேதிய சீக்கிரம் சொல்லுங்க


All the best to thala and mankaatha team …. We are eagerly waiting for the film…   

டிரைலர் பார்க்கும் போது படம் ocean 11 படத்தோட தழுவலாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளதை போல தெரிகிறது... 

Monday, August 8, 2011

தல தளபதி ஸ்பெஷல்





                மனதை கனக்க வைத்த கிளைமாக்ஸ்


இந்த தலைப்பில்  இப்ப பதிவுலகத்தில் நிறைய பதிவுகள் தொடர்ந்து வந்துகிட்டு இருக்கு ... அது ஒரு தொடர்பதிவாம் , யார்வேணும்னாலும் தொடரலாமாம் ... வழக்கம் போல யாருமே என்னை எழுத அழைக்கவில்லை என்றாலும் என்னை நானே ஒரு கட்டாயத்தில் பேரில் (அது என்னவென்பதை பதிவின் கடைசியில் சொல்கிறேன்) அழைத்து கொண்டு தொடரில் இணைகிறேன் ....

மனதை கனக்க வைத்த கிளைமாக்ஸ் என்பதற்க்கு  எனக்கு சரியாக அர்த்தம் புரியவில்லை , இருந்தாலும் என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய  வரையில் ஏதோ புரிந்து கொண்டு எழுதி இருக்கிறேன் , ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும் குறிப்பாக இளையதளபதியின் ரசிககண்மணிகள் பதிவை படித்து விட்டு பொங்க வேண்டாம் என்று கேட்டுகொல்லபடுகிறார்கள்...

டவுசர் போட்டுக்கொண்டு சுற்றிய காலகட்டங்களில் பல விக்ரமன் படங்களை பார்த்து கண்கலங்கி இருக்கிறேன் ... பூவே உனக்காக , வானத்தை போல , உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்று அது ஒரு பெரிய லிஸ்ட் ...இந்த படங்களை எல்லாம் அப்பொழுதே  தியேட்டரில் சென்று பார்த்து அழும் வாய்ப்பு என் இரண்டு சித்திகளின் மூலம் கிடைத்தது , அந்த வயதில் அந்த படங்கள் எல்லாம் நெஞ்சில் ஒரு பாரத்தை ஏற்றி வைத்ததை போல உணர்வை கொடுத்த படங்கள் ... ஆனால் இப்பொழுது அந்த படங்களை பார்க்கும் பொழுது ஹீரோ பேசும் மொக்கை சென்டிமெண்ட் வசனங்களை கேட்டால் சிரித்து சிரித்து வயிறு வலிதான் வருகிறது ... அதனால் இந்த படங்களை எல்லாம் இந்த லிஸ்டில் இருந்து reject செய்ய வேண்டிய கட்டாயம் ...

அடுத்து கல்லூரி சென்ற பின்னர் , சில  அதிமேதாவி நண்பர்கள் மூலம் குணா , அன்பே சிவம் போன்ற உலக படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது ... அந்த படங்களின் கிளைமாக்ஸ்  அப்பொழுது என் மனதை கசக்கி பிழிந்து அடித்து துவைத்து சாறு  பிழிந்திருந்தாலும் ,  இப்பொழுது அவை எல்லாம் ஏதோ ஒரு வேற்று மொழி படங்களின் உல்டா என்று தெரிந்த பின்னர் அந்த படங்களை பற்றியும் எழுத விருப்பம் இல்லை ....

வேறு எந்த படத்தை பற்றிதான் எழுதுவது ... என் மனதை கனக்க  வைக்கும் அளவுக்கு சொந்தமாக யோசித்து படம் எடுக்கும் திறமைசாலி இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் கிடையாதா ? அதில் என் மனதை பிழியும் அளவுக்கு நடிக்க தெரிந்த பிறவி கலைஞன் யாரும் நம் மண்ணில் பிறக்கவில்லையா? என்று மல்லாக்க படுத்து விட்டத்தை வெறித்து பார்த்து கொண்டு யோசித்தபொழுதுதான் சரேலென்று ஒரு கணம் அந்த படம் என் மனதில் மின்னி தோன்றி மறைந்தது ... எப்படி மறந்தேன் அந்த காவியத்தை , அதிலும் அந்த கிளைமாக்ஸ் காட்சியை , மறக்க கூடிய கிளைமாக்ஸா அது ... இதோ கல்நெஞ்சக்காரன் என்று என்னை சுற்றி இருக்கும்  எல்லோராலும் வசைபாடபடும்  என் நெஞ்சயே வலிக்க வைத்த ஸாரி கனக்க வைத்த அந்த கிளைமாக்ஸ்  இளையதளபதி நடித்த பவர் ஃபுல் வில்லு” பட கிளைமாக்ஸ்... 


தாடியை நன்கு சிரைத்து விட்டு மீசையை ஒட்ட வெட்டி விட்டு நம் தளபதியை கம்பீரமான ராணுவீரனாக ராணுவ உடையில் காட்டிய பொழுது எனக்கு முதல் அட்டாக் இதயத்தில்  ... என் நெஞ்சம் கனக்க ஆரம்பித்தது அப்பொழுதுதான் ... நல்ல வேளை இடைவேளையில் வாங்கி வைத்திருந்த தண்ணீர் பாட்டிலில் கொஞ்சம் தண்ணீர் இருந்ததால் அதை குடித்து என்னை ஆசுவாசபடுத்தி கொண்டேன் ...  பின்னால் இதைவிட கொடுமைகளை எல்லாம் திரையில் காட்ட போகிறார்கள் என்பதை அறியாமல் தொடர்ந்து படம் பார்த்து கொண்டிருந்தேன் ... ராணுவ தளவாடங்களை எதிரி நாட்டுக்கு கடத்தி விற்கும் வில்லன்களோடு  "மேஜர் தளபதி" மரத்திர்க்கு மரம் தாவி தாவி சண்டை போட்டு கடைசியில் ஜெய் ஹிந்த்(நேதாஜிக்கு வந்த சோதனை) சொல்லிக்கொண்டே சாகும் பொழுது இங்கு எனக்கு மூளையில்  சாவு மணி கேட்டது...எழுந்து ஓடிவிடலாம் என்று பார்த்தால் தியேட்டரில் கதவை மூடி விட்டார்கள். வேறு வழி இல்லாமல்  இதை எல்லாம் தாங்கி கொண்டு உக்காந்திருந்தால்  கடைசியில் வில்லன்கள் எல்லாம் மகன் தளபதியை அடித்து துவைத்து  குழி தோண்டி புதைத்து விட , அப்பாடா "தொல்லை தீர்ந்தது படம் முடிந்தது" என்று நான் சந்தோஷமாக ஸீட்டை விட்டு எழுந்திருக்க நினைக்கையில் , தியேட்டர் முழுவதும் ஸர் புர் என்று புயல் வீசும் சத்தம் , இது என்னடா புது சோதனை என்று நிமிர்ந்து உக்கார எத்தனிக்கையில் நியூட்டனில் புவி ஈர்ப்பு விசையை எல்லாம் பொய்யாக்கி விட்டு தளபதியை புதைத்திருந்த குழியில் டன் கணக்கில் இருக்கும் மண் எல்லாம் அந்த சின்ன சூறாவழியில் குழியை விட்டு மேழெலும்ப தளபதி சட்டையில் கொஞ்சம் கூட அழுக்கு ஒட்டாமல் குழியில் இருந்து எழுந்து வந்தார் ... 


இதை பார்த்த எனக்கு நெஞ்சில் வலது பக்கம் இடது பக்கம் என்று எல்லாபக்கமும் யாரோ ஈட்டியால் குத்தியதை போல கனத்தது ... இதற்க்கு மேல் இங்கு உக்கார்ந்திருந்தால் நம்மை குழியில் தள்ளி விடுவார்கள் என்று பயந்து , தியேட்டர் வாட்ச்மேன் காலில் விழுந்து கதவை திறக்க சொல்லி ஓடினேன் ஓடினேன் எங்கள் ஊரின்  எல்லையை நோக்கி ஓடினேன் ... அங்குதான் நெஞ்சு வலிக்கு சிகிச்சை தரும் மருத்துவமனை இருக்கிறது , அங்கு போனவுடன் டாக்டரிடம் ஸார் வில்லு படம் பார்த்தேன் என்று சொல்லி வாய் மூடவில்லை   அவர் இதுக்கு மேல நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம் , நீங்க ரொம்ப ரொம்ப அபாயகரமான நிலமையில இருக்கீங்க என்று என்னை உடனடியாக ஐ‌சி‌யுவில் படுக்க வைத்து விட்டார் ... பிறகுதான் தெரிந்தது அந்த ஐ‌சி‌யுவில் இருக்கும் எல்லாருமே வில்லு கிளைமாக்ஸ் பார்த்து விட்டு நெஞ்சு வலி வந்து அங்கு படுத்து கிடக்கிறார்கள் என்று ... 

இதை போல படம் பார்க்க வந்த எல்லார் நெஞ்சையும் கனக்க வைத்து அவர்களை ஐ‌சி‌யுவில் படுக்க வைத்த இந்த காவியத்தை பற்றி யாருமே இந்த தொடர் பதிவில் எழுதவில்லை என்பதால்தான் வேறு வழி இல்லாமல் யாருமே கூப்பிடாமல் இந்த தொடர்பதிவை தொடர வேண்டிய கட்டாயம் எனக்கு நேர்ந்தது .. உங்களுக்கும் இதை போன்ற நெஞ்சை கனக்க வைத்த படங்கள் இருந்தால் தாராளமாய் இதை தொடரலாம் ....   


கொசுறு :











அசராம அடிக்கிறதுண்ணா இதுதானா?


காப்பி நம்பர் 1



                              காப்பி நம்பர் 2 




அசந்தா அடிக்கிறது மத்தவன் பாலிசி , அசராம அடிக்கிறது இளையதளபதி பாலிசி 

LinkWithin

Related Posts with Thumbnails