Followers

Copyright

QRCode

Tuesday, August 16, 2011

Rise of the apes – மனித குரங்குகளின் புரட்சி
நீண்ட நாட்களாகவே எந்த படத்தின் விமர்சனத்தையும் இந்த தளத்தில் எழுத தோன்றவில்லை , காரணம் வரிசையாக நான் பார்த்த படங்கள் எல்லாம் மொக்கையாகவே  இருந்ததுதான்  ... அதனால்  நேற்று எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்தான்  இந்த படம் பார்க்க சென்றேன் , வழக்கம் போல குரங்குகளை வைத்து ஏதாவது வித்தை காட்டி இருப்பார்கள் என்றுதான் நினைத்தேன்,.. ஆனால் படம் எனக்கு வேறு விதமான நிறைய அனுபவங்களை அள்ளி தந்தது ... இன்று நம்முடைய சுயநலத்திர்க்காக நாம் செய்யும் பல விஷயங்கள் பிற உயிரினங்களை எப்படியெல்லாம் காவு வாங்குகிறது , அவைகளுக்கும் நம்மை போல சிந்திக்கும் திறன் வந்துவிட்டால் நம் நிலமை என்னவாகும் என்பதை விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார்கள் ...

eco tourism என்றொரு வகையான சுற்றுலாவை பற்றி அறிந்திருக்கிறீர்களா? விலங்குகளை காட்டில் இருந்து பிடித்து வந்து zoo என்ற பெயரில் கூண்டில் அடைத்தோ  இல்லை reservoir என்ற பெயரில் குறுகிய எல்லைக்குள் அடைத்து வைத்து மனிதன் என்னும் மிருங்கங்களாகிய நாம் கூட்டம் கூட்டமாக சென்று அவைகளை பார்த்து சந்தோசபடுவதற்க்கு பெயர்தான் eco-tourism… நம் சந்தோஷத்தை மட்டுமே பார்க்கும் நாம் நமக்காக கூண்டில் அடைபட்டு கிடக்கும் அந்த மிருகங்களின் வலியை உணர்வதில்லை , இதே நிமைமைதான் ஆராய்ச்சி கூடங்களில் பரிசோதனைக்காக பிடித்து வரப்படும் மிருகங்களுக்கும் ...  இந்த விசயம்தாம் இந்த படத்தின் அடிநாதம்


Genesys என்னும் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளராய் வேலை செய்யும் விஞ்ஞானி ஒருவர்   நீண்ட நாட்கள் முயற்சி செய்து ஒரு மருந்தை கண்டுபிடிக்கிறார் , அதை பரிசோதனை செய்ய காட்டில்  இருந்து நிறைய மனித குரங்குகளை பிடித்து வருகிறார்கள்.. அந்த மருந்து செலுத்தபட்ட குரங்கு ஒன்று குட்டி ஒன்றை ஈனுகிறது... அந்த குட்டியை அந்த விஞ்ஞானியே தன்னுடைய வீட்டில் வளர்க்க வேண்டிய சூழ்நிலை வருகிறது , தாயின் உடலில் இருந்து அந்த மருந்து இந்த குட்டிக்கு வரவி இருப்பதால் குட்டி அபரிமிதமான அறிவுடன் சீசர் என்ற பெயரில் அந்த வீட்டில் வளர்கிறது .... வீட்டை விட்டு வெளியே சென்று சிறுவர்களுடன் விளையாட ஆசையுடன் இருந்தாலும் , வெளியே சென்றாள் யாராவ்து  தன்னை தவாரக புரிந்து கொண்டு தன்னிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்ள கிடைத்ததை வைத்து அடிப்பார்கள் என்பதால் வெளியே செல்ல பயப்படுகிறது , இதனால் வீடே உலகம் என்று வளர்கிறது , அந்த வீட்டில் இருக்கும் அனைவரின் மேல் தீராத பாசத்துடன் வளர்கிறது... 

ஆனால் அந்த பாசமே அதற்க்கு வில்லனாக வந்து விடுகிறது , தன் எஜமானரை தாக்கிய பக்கத்து வீட்டுக்காரனின் கை விரலை கடித்து விட , போலீஸ் வந்து சீசறை பிடித்து கொண்டு போய் விலங்குகளுக்கான காப்பகத்தில் விட்டு விடுகிறார்கள் ... அங்கு சீசர் தன்னை போன்ற பல குரங்குகளுடன் பழக நேரிடுகிறது ... அங்கு இருக்கும் காவலாளிகள் எல்லா குரங்குகளையும் அடித்து துன்புறுத்துகிறார்கள் , சீசரும் அவர்களின் துன்புறுத்தலுக்கு தப்பவில்லை , முதலில் தான் எப்படியாவது இந்த ஜெயிலை விட்டு தப்பி வீட்டுக்கு சென்று விட வேண்டும் என்று நினைக்கும் சீசர் மெல்ல மெல்ல தன் இனம் இங்கு படும் கஷ்டங்களை உணர்ந்து கொள்கிறது ... ஒரு கட்டத்தில் சீசர் வீட்டுக்கு செல்லும் ஸந்தர்பம் அமைந்தும் வீட்டுக்கு செல்ல மறுக்கிறது ,  அவனின் மனதிர்க்குல் மெல்ல மெல்ல ஒரு போராளி பிறக்கிறான் , தன் இன விடுதலைக்காக திட்டம் தீட்டுகிறான் , அதில் வென்றானா? இல்லையா? என்பதே இந்த rise of the planet of the apஎஸ் படத்தின் கதை...


 (அம்மணிதான் படத்தோட ஹீரோயின்)

                                            

எங்கெல்லாம் ஒரு இனம் ஒடுக்கபடுகிறதோ அங்கெல்லாம் ஒரு போராளி பிறப்பான்... இது இயற்கையின் நியதிதான்.. இந்த படமும் இதைதான் சொல்கிறது.. ஆனால் இங்கு  அந்த போராளி குரங்குகளாய் இருப்பதுதான் ரசிக்கும்படியான விஷயம்... சீசராக வரும் அந்த குரங்குக்காய் முகபாவனைகள் கொடுத்தவர் யார் என்று தெரியவில்லை , மனிதர் கலக்கி இருக்கிறார் , விஞ்ஞானியின் வீட்டில் இருக்கும் பொது குழந்தைதானமாகவும் , குறும்பாகவும்  ஜெயிலுக்கு வந்தவுடன் சோகமாகவும் , பின்னர் மெல்ல மெல்ல கோபத்தையும் முகத்தில் அப்பட்டமாக வெளிபடுத்தி இருக்கிறார்... அனிமட்ரிக்ஸ் தொழில்நுட்பம் அவர் முகபாவனையை அப்படியே அந்த குரங்கிற்க்கு கொண்டு வந்து விட்டது ... இந்த தொழில்நுட்பத்தை சீக்கிரம் தமிழுக்கு கொண்டு வாங்க சாமீக்களா... இளையதளபதி அழுகிறது மாதிரியான கொடுமையான காட்சிகளை  இனிவரும் சந்ததிகளாவது  அனுபவிக்காமல்  இருப்பார்கள் ... 

சிறுகுழந்தையாக இருக்கும் பொது சீசர் செய்யும் சேட்டைகள் அட்டகாசம்..அதே போல போராளியாக மாறின பின்னர் அது செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும் ஆர்பாட்டம்... விஞ்ஞானியின் வீட்டில் இருந்து மருந்தை கொண்டு வந்து எல்லா குரங்குக்கும் கொடுப்பது , தன்னை தண்ணீரை பீய்ச்சி அடித்து கொடுமைபடுத்தியவனை அதேபோல தண்ணீரை  பீய்ச்சி அடித்து சாவடிப்பது , அதிரடியாய் zooவுக்குள் புகுந்து அங்கிருக்கும் குரங்குகளை வெளியேற்றுவது என்று எல்லாமும் ரணகளம்...   

இந்த படத்தில் என்னை கவர்ந்த இன்னொரு விஷயம் , குரங்குகளுக்குள் இருக்கும் மனிதத்தையும் , மனிதர்களுக்குள் இருக்கும் மிருகத்தையும் அப்பட்டமாக காட்டியதுதான் .... ஆராய்ச்சி தோற்று விட்டது என்று தெரிந்தவுடன் எல்லா மிருகங்களையும் கொன்று போடுகிறான் மனிதன் , அதேபோல் நகரத்தில் இருக்கும் அத்துணை குரங்குகளும் தப்பி யாருக்கும் கெடுதல் செய்யாமல் தங்கள் காட்டை நோக்கி போய் கொண்டு இருக்கும் போது , அவைகளை நவீன ஆயுதங்களை கொண்டு கொன்று குவிக்கிறான் , ஆனால் அந்த குரங்குகள் கடைசி வரை எந்த மனிதனையும் தாமாகவே காயபடுத்துவதில்லை... ஒரு காட்சியில் ஒரு குரங்கு உடைந்து கிடக்கும் காருக்குள் இருக்கும் போலீஸ்காரனை அடித்து கொல்ல போகும்போது இன்னொரு குரங்கு வந்து அதை தடுக்கிறது ... இப்படி போராளிதுவத்தின் அடிப்படை குலையாமல் படம் பிடித்திருக்கிறார்கள்...   சீஸர்தான் இப்போதைக்கு இந்த படம் பார்த்த எல்லாருக்கும் சூப்பர் ஸ்டார் ... அதுவரை சைகை மொழியால் மட்டுமே பேசும் சீசர் முதன் முதலாய் நோ என்று கத்தும் காட்சியில் தியேட்டரே ஆர்பரிக்கிறது.... அதே போல கடைசி காட்சியில் இதுதான் என் வீடு என்று சீசர் பேசும் வசனம் நச்...

மொத்தத்தில் ஒரு பக்கா ரஜினி படம் பார்த்த எஃபக்ட் கொடுக்கிறது இந்த படம் ... இப்படி ஒரு ஃபீல் ஒரு ஆங்கில படம் பார்க்கும் பொழுது வருவது ரஜினியின் வெற்றியா? இல்லை அந்த படத்தின் வெற்றியா?...  எதற்க்கு எது அளவுகோல்?  என்று எனக்கு தெரியவில்லை..


டிஸ்கி : கூகிளில் rise of the planets of apes  என்று தேடினால் இந்த படம் ஏன் வருகிறது என்றும் எனக்கு தெரியவில்லை...


8 comments:

அஞ்சா சிங்கம் said...

டிச்க்கிகாகவே உங்களுக்கு கள்ள ஒட்டு போடலாம் ..............
அந்த அம்மணி யாருன்னு தெரியுதா?
சலம் டாக் படத்தின் கதாநாயகி இந்திய முகம் .......................

சார்வாகன் said...

அருமை சகோ,
படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்திய விமர்சனம்.வாழ்த்துகள்.
நன்றி

மைந்தன் சிவா said...

ஹிஹி ஒலக பட விமர்சனம் !

TAMIL said...

http://www.putlocker.com/file/437AAAF12BED6B23#

Priya said...

நல்ல பதிவு.
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

தமிழினி said...

உங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்

www.tamil10.com

நன்றி

sarav said...

i reading your blog for the first time. Nice flow . Ape Ceasar aga nadithavar andi serkis .. ivar Lord of the rings padathila Gollum /smeagol enapadum manithan aga irundu ring power thaangamal mirugamaga mariya kathapathirathil vanthavar

keep blogging

sivalingamtamilsource said...

நானும் படம் பார்த்தேன். படம் சூப்பர். ஒரு சிறு குச்சியை உடைத்து, அதை நான்காக உடைத்து ஒன்றுபட்டால் நாம் எல்லோரும் தப்பிக்கலாம் என்று சிம்பாலிக்காக அந்த சிம்பன்ஸி கூறும் இடம் மிக அருமை

LinkWithin

Related Posts with Thumbnails