Followers

Copyright

QRCode

Wednesday, August 25, 2010

"மங்காத்தா டீசர்"- வெங்கட் பிரபுவின் வெற்றிதலையோட மங்காத்தா டிசெர் வெளி வந்து விட்டது...  எங்க ஊருல ஒரு திரை அரங்கில் நான் மகான் அல்ல படம் பார்பதற்கு சென்றிருந்தேன்... டிக்கெட் விலை அறுபது ரூபாய் என்று சொன்னார்கள் ... இடைவேளையின் போது தலையின் மங்காத்தா டீசெர் போடுவார்கள் என்பதனால் நான் அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து சென்றேன்.. படம் வந்து இரண்டாம் நாள் தான் எனவே ஓரளவிற்குதான் கூட்டம் இருந்தது... நான் படம் எப்ப போடுவார்கள் என்பதை விட இடைவேளை எப்பொழுது விடுவார்கள் என்றுதான் அதிக ஆர்வமாய் இருந்தேன், ஒருவழியாய் இடைவேளை வந்தது , இயற்கை உபாதையை கூட அடக்கிக்கொண்டு எங்கும் வெளியே சென்று விடாமல் இருக்கையிலேயே டீசெர் போடுவார்கள் என்ற எதிர்பார்த்து அமர்ந்திருந்தேன் .. படு பாவி பயலுக கடைசி வரை போடவே இல்லை , படத்தின் இரண்டாம் பாதியை ஆரம்பித்து விட்டார்கள்.... எனக்கு வந்த கோபத்திற்கு வெளியே எழுந்து சென்று விடலாம் என்று இருந்தேன் , ஆனால் சுசீந்திரன் விறு விறு திரைகதையின் மூலம் என்னை படத்தை பார்க்க  வைத்து விட்டார் .. பின்னர் அடுத்த நாள் இணையத்தில்தான் அதை பார்த்தேன்... என்ன சொல்ல தல அமர்களமாய் இருக்கிறார்... அந்த டீசரே ஒரு கதை சொல்லுமாறு எடுத்திருந்த விதம் சூப்பர் ... தல ரிலாக்சாக அமர்ந்து தன்னுடைய துப்பாக்கியை சரி செய்து கொண்டு இருப்பார், அவரை பின்னால் இருந்து பலர் துப்பாக்கி குண்டால் தாக்குவார்கள் , தல எதற்கும் அஞ்சாமல் தன வேலையை செய்து கொண்டு இருப்பார் , அவர்கள் முழுவதும் சுட்டு முடித்து டையர்ட் ஆனவுடன் தல திருப்பி தாக்குவார்... இதே போல ஒரு ட்ரீட்மென்ட் படத்தின் திரைக்கதையிலும் இருந்தால் நன்றாக இருக்கும் ... வெங்கட் எங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்... 


சென்ற வாரம் மூன்று திரைப்படங்கள் பார்க்க நேர்ந்தது ... வம்சம் , நான் மகான் அல்ல மற்றும் grown ups ... அதில் ஆச்சரியமான விஷயம் மூன்றும் நன்றாக இருந்ததுதான் .... வம்சம் சென்னை உதயம் திரை அரங்கில் பார்த்தேன் , 

அந்த திரை அரங்கிற்கு முதன் முதலாய் அன்றுதான் சென்றேன் நிறைய எதிர்பார்ப்புடன் , ஆனால் உள்ளே சென்ற எனக்கு சப்பென்று ஆகி விட்டது... எங்க அருப்புகோட்டையில் இருக்கும் திரை அரங்குகளே அதை விட நன்றாக இருக்கும் , உக்காரும் இருக்கைகள் மிகவும் சிறியதாய் இருந்தது ... மூன்று மணிநேரம் அதில் அமர்ந்து எப்படிதான் படம் பார்கிறார்களோ தெரியவில்லை 

.... ஆனால் படம் என்னை ஏமாற்றவில்லை , அதிலும் சுனைனா அடடா என்ன அழகு அந்த பொண்ணுக்கு , அதுவும் கிராமத்து மேக் அப்புல பாக்கும் போது சும்மா மனச அள்ளுது பொண்ணு .... இடைவேளை வரை ஹீரோ , கஞ்சா கருப்பு , சுனைனா அந்த "அசின்" என்று இவர்கள் செய்யும் காமெடிகள் கல கல ரகம்...  அதிலும் செல்போனை மரத்தில் கட்டி பேசுவதை சில மாதங்கள் முன்பு வரை எங்கள் கிராமத்திலேயே நான் பார்த்திருக்கிறேன் ...ஏன் நானே கூட சில சமயம் அப்படி பேசி இருக்கிறேன் ... இப்பொழுது எங்கள் கிராமத்தில் செல் டவர் வந்து விட்டதால் பெட்ரூமில் படுத்து கொண்டே பேசும் வசதி வந்து விட்டது. இரண்டாம் பாதிதான் கொஞ்சம் இழுவை .... ஆனால் படம் முழுக்க இயக்குனர் "அசின்", "செல்", "திருவிழா சாவு" , "இடி விழுந்தால் மக்கள் சொல்லும் மூட நம்பிக்கைகள்" என்று சின்ன சின்ன சுவாரஸ்யமான விசயங்களை சொல்லி இருக்கிறார் ... முழுக்க முழுக்க வம்சம் கிராமத்து மனிதர்களுக்கான படம் , நான் ரசித்தேன்... உங்களுக்கு கிராமத்து வாழ்க்கை பிடிக்கும் என்றால் தாராளமாய் செல்லலாம் வம்சத்தை பார்க்க...அடுத்த நாள் grown ups படம் inox திரை அரங்கில் பார்த்தேன் ... அதற்கு முன் city centre பற்றி சொல்லியே ஆக வேண்டும் ... சென்னை பணக்கார நகராய் மாறி கொண்டு இருக்கிறது என்பதை அழுத்தமாய் நமக்கு சொல்லும் இடம் அது என்று நினைக்கிறன் ... இப்பொழுதுதான் முதல் முறை அங்கு சென்றேன் ... ஒரு வெளிநாட்டு ஷாப்பிங் சென்டரில் இருப்பது போன்று இருந்தது...காதலியை கூட்டி கொண்டு சென்றால் நம் ஒரு மாத சம்பளமும் காலியாகி விடும் போல , எல்லாமே அவ்வளவு காஸ்ட்லி... ஒரு அரை லிட்டர் கோக் விலை அறுபது ரூபாய் என்கிறார்கள்...  ஆனால் கையில் கொஞ்சம் பணமும் கூட நமக்கு பிடித்த பிகரும் இருந்தால் நன்றாய் பொழுது போகிறது ... நான்கு மணி காட்சிக்குத்தான் டிக்கெட் கிடைத்தது , தியேட்டர் வாய்ப்பே இல்லை high class... தியேட்டரில் பாதி  ஜோடியாய்தான் இருந்தார்கள் ... படம் ரொம்ப ஜாலியான காமெடி படம் ... ரொம்ப சுவாரஸ்யம் இல்லை என்றாலும் போர் அடிக்காமல் சொல்லி இருக்கிறார்கள் ... அதிலும் ஹீரோயின் சல்மாஹைக் செம்ம கட்டை.. வயசு நாற்பதுக்கு மேலையாம்.... வாய்ப்பே இல்லை அவ்ளோ கட்டுகோப்பான உடல் அவருக்கு ... அதிரடியாய் நமக்கு சிரிப்பை வர வைக்கும் காட்சிகள் நிறைய உண்டு படத்தில் .... கையில் நிறைய காசும் செலவழிக்க நேரமும் இருந்தால் தாராளமாய் பார்க்கலாம் படத்தை ... ஒன்றரைமணி நேரம் சிரிப்புக்கு கியாரண்டி...இன்னும் ஆறு மாத காலம்தான் உள்ளது உலக கோப்பை கிரிக்கெட் ஆரம்பிக்க , நம்ம ஆளுக இருக்கிற நிலைமைய பாத்தா 2007 உலகோப்பை போட்டிகள் ஞாபகம் வருது .... இலங்கை இங்கிலாந்த் என்று  மற்ற அணிகள் எல்லாம் அசுர வேகம் காட்டி கொண்டு இருக்க நம்ம அணி இருக்க இருக்க கீழ போய்கிட்டு இருக்கு ... இதற்க்கு மிக முக்கிய காரணம் அணியில் நுழையும் புதுமுக வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை என்பதே... மற்ற அணியில் புதுசு புதுசாக வரும் வீரர்கள் நன்றாக விளையாடி கொண்டு இருக்கிறார்கள் ... மேலும் நம் அணியில் உலக தரம் வாய்ந்த வேக பந்து வீச்சாளர் யாரும் இல்லை , இருக்கும் ஒரு சிலரும் உடல் தகுதி இல்லாமல் அவதிபடுகிறார்கள்...  சச்சினும் கம்பீரும் மீண்டும் அணிக்கு திரும்பினால் பேட்டிங் வரிசை பலம்  கூடும் , ஆனால் பந்து வீச்சுதான் ரசிகர்களுக்கு கவலை அளிக்க கூடியதாய் உள்ளது .. இலங்கை வீரர்களும் நியூசிலான்ட்   வீரர்களும் நம் அணியை நூறு ரன்களுக்குள் கட்டுபடுத்திய அதே ஆட்டத்தில் நம் பந்து வீச்சாளர்கள் அவர்களுக்கு ரன்களை வாரி வழங்கியதை பார்க்கும் பொழுது எனக்கு கொஞ்சம் பயமாக உள்ளது மீண்டும் இப்படி நடந்து விடுமோ என்று... 

ஐயா தோனி ஏதாவது புதுசா  ஐடியா பண்ணி டீம்ம காப்பாத்துங்க ....   

Thursday, August 19, 2010

எந்திரன் - அட்டர் பிளாப் ஆக்டோபஸ் கணிப்பு

இப்ப எல்லாம் மக்கள் கிளி ஜோசியத்த நம்புறதே இல்லை ... எல்லாம் ஆக்டோபஸ் ஜோசியம்தான்... உலக மேட்டர் புட் பால் ரிசல்ட்டவே புட்டு புட்டு வச்சிருச்சி நம்ம உள்ளூர் மேட்டர் எல்லாம் எம்மாத்திரம் ... இன்னைக்கு நம்ம தமிழ் நாட்டுல பயங்கர எதிர்பார்புல இருக்குற ரெண்டு விஷயங்கள் , தமிழன் ஆஆ ன்னு வாய பொழந்து எதிர்பாத்துகிட்டு இருக்கிற மேட்டர் ரெண்டு இருக்கு ..


ஒண்ணு அடுத்த வருஷம் நடக்க போற தேர்தலுல ஜெய்ச்சி ஆட்சிய பிடிக்க போறது அய்யாவா ? இல்ல அம்மாவா?இன்னொன்னு ரொம்ப முக்கியமானது , ஜஸ்ட் நூத்தி அம்பது கோடி செலவுல தயாரிக்க பட்டு விரைவில் வெளிவர போற எந்திரன் படம் ரஜினிக்கு சந்திரமுகி மாதிரி சரித்திரம் படைக்குமா? இல்லை குசேலன் மாதிரி குப்புற கவுத்துமா? இந்த ரெண்டு மேட்டரையும் ஆக்டோபஸ் கூண்டுல வச்சி ஜோசியம் பார்த்து உள்ளார்கள் சம்பந்த பட்டவர்கள்.... மிக ரகசியமாக வைக்க பட்டிருந்த அந்த முடிவுகள் இப்பொழுது வெளியில் கசிந்துள்ளது .. இதோ உங்களுக்காக அந்த முடிவுகள் ...


முதலில் அடுத்து தமிழ்நாட்டை கொள்ளை அடிக்கும் வாய்ப்பை பெற  போவது அம்மாவா அய்யாவா என்ற கணிப்பில் அக்டோபஸ் யாருக்கும் சாதகமாக கணிக்காமல் கூண்டுக்குள் படுத்து தூங்கி விட்டதாம்... இந்த விஷயம் முதலில் அம்மாவுக்கு தெரிவிக்கப்பட்டதாம் , உடனே அவர் தூங்கும் அந்த அக்டோபஸ்ஸை தன குண்டர் படையை வைத்து கொலை வெறி தாக்குதல் நடத்தி அதன் தூக்கத்தை கலைத்து விட்டுள்ளார்... இந்த தாக்குதலில் பயந்து போன அக்டோபஸ் தூங்காமல் தண்ணீருக்குள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருந்திருக்கிறது.... விஷயம் நம்ம மதுரை அண்ணாச்சியின் காதுக்கு சென்றிருக்கிறது... உடனே அவர் ஒரு பெட்டி முழுவதும் அக்டோபசிர்க்கு மிகவும் பிடித்த அது விரும்பி சாப்பிடும் சின்ன சின்ன மீன்களின் உடலில்  உதயசூரியன் முத்திரை குத்தி  அனுப்பி வைத்துள்ளாராம்... அதை   சப்புகொட்டி சாப்பிட்ட அக்டோபஸ் நன்றி கடனாய் தொட்டிக்குள் வைக்கப்பட்டு இருந்த உதய சூரியன் சின்னம்  இருந்த பேட்டியின் மேல் அமர்ந்து ஐயாவை ஜெய்க்க வைத்திருக்கிறது.... கருத்து கணிப்பில் ஜெய்க்க அக்டோபசுக்கே பெட்டி நிறைய லஞ்சம் கொடுக்கபட்டிருக்கும் செய்தியை கேள்விப்பட்ட வுடன் தமிழ் மக்கள் தேர்தலில் ஜெய்க்க நமக்கு பெரிய அளவில்பணம் பட்டுவாடா செய்யப்படும் என்று சந்தோசத்தில் துள்ளி குதித்து கொண்டு இருக்கின்றனர்...


இந்த கருத்து கணிப்பு முடிந்த அடுத்த நாளே எந்திரன் கருத்து கணிப்பு நடத்த பட்டுள்ளது.... இதில் ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் எந்திரன் அடுத்த குசேலன் என்று கணித்துள்ளது அக்டோபஸ்.... ஆனால் இதை ரஜினி ரசிகர்கள் ஏற்று கொள்ள மறுக்கின்றனர் ... கருத்துகணிப்பில் வைக்கப்பட்ட எந்திரன் போஸ்டரில்  ஹிட் என்று எழுதி வைக்கபட்டிருந்த பெட்டியில் கலாநிதிமாறனின் படமும்  , பிளாப் என்று எழுதி வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் ரஜினியின் படமும் இருந்துள்ளது ... ரஜினியின் படத்தை பார்த்து அவரின் ஸ்டைலில் ஈர்க்கபட்டே அக்டோபஸ் அந்த பெட்டியின் மேல் சென்று அமர்ந்து விட்டது என்று ரஜினி ரசிகர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர், மேலும் எங்கள் தலைவருக்குத்தான் உலகிலேயே முதல் முறையாக ஒரு அக்டோபஸ் ரசிகனாகி உள்ளது , இதன் மூலம் தமிழ் என்று ஒரு மொழி உள்ளது , தமிழன் என்று ஒரு இனம் உள்ளது என்று அக்டோபஸ் மீன்கள் தெரிந்து கொள்ளும் ... எப்படி ஜப்பான்காரன் தமிழ் மொழிகற்க எங்கள் தலைவர் காரணமாக இருந்தாரோ அதே போல் இனி அக்டோபஸ் மீன்கள் தமிழ் மொழி கற்கவும் எங்கள் தலைவன் காரணமாக போகிறார் என்று அவர்கள் பெருமையுடன் கூறி உள்ளனர் ...

இப்படி அக்டோபஸ் கணிப்பிற்க்கே பயப்படாத ரஜினி ரசிகர்கள் , வேறு ஒரு கணிப்பை நினைத்து பயந்து போய் உள்ளனர் ... அவர்களின் பயத்திற்கு காரணம் இளையதளபதி விஜய்... ரெமேக் ராஜா இயக்கிய படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் ... ஆனால் அவர் விஜய்யை வைத்து படம் எடுக்க முடிவு செய்த பின்னர் அவர் இயக்கத்தில் வெளி வந்த படம் தில்லாலங்கடி .... விஜய்யுடன் இணைந்ததால் அவரின் ராசி இவருக்கும் ஒட்டி கொள்ள  படம் அட்டர் பிளாப்.... இப்பொழுது சங்கர் விஜயை வைத்து படம் இயக்க போகிறார் என்று செய்து வந்து கொண்டு இருக்கிறது ... இதனால் எங்கே இந்த ராசி சங்கருக்கும் ஒட்டி கொண்டு , தில்லாலங்கடி போல எந்திரனும் உக்காந்து விடுமோ என்று பயப்படுகின்றனர் ரஜினி ரசிகர்கள் ... எனவே படம் வெளி வரும் வரை சங்கரை எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று மிரட்டி வைத்துள்ளனர் என்று சங்கர் வீட்டு காவல்காரன் என்னிடம் கூறினார் ....


இப்படி யாருக்கும் பயப்படாமல் ஜோசியம் பார்த்து கொண்டிருந்த ஆச்டோபுச்சுக்கு முடிவு  நம் இளைய தளபதியின் மூலம் கிடைத்துள்ளது..அக்டோபசின் கணிப்பை கேள்விப்பட்ட இளைய தளபதியின் தந்தை  தன பங்குக்கு  தன மகன் தமிழ் சினிமாவின் அடுத்த எம்ஜிஆர்ரா? இல்லை ரஜினியா? என்று அதை வைத்து ஒரு கருத்து கணிப்பு நடத்தியுள்ளார்... இந்த ரெண்டில் எதை தேர்வு செய்தாலும் அது தனக்கு அவமானம்தான் என்று முடிவு செய்த அக்டோபஸ்   தண்ணீர் தொட்டிக்குள்ளே மூச்சை அடக்கி தற்கொலை செய்து கொண்டு விட்டதாம்....

இப்பொழுது அந்த மீன் போயேஸ் கார்டனில் அம்மா பங்களாவில் இந்த கோலத்தில்  இருக்கிறதாம் 
 

Tuesday, August 17, 2010

ஒரு பிரபல பதிவரின் புலம்பல் (வாக்குமூலம்)

நேற்று நண்பர் பாலா அவர்கள் ஒரு தொடர் பதிவிற்கு என்னை அழைத்திருந்தார் .... அது என்னனா நிறைய கேள்விகளா இருக்கும்மாம் அதுக்கு நாம பதில் சொல்லணுமாம்... நானும் கேள்வியெல்லாம் பாத்தேன் எல்லாம் நம்மள மாட்டி விட்டு அடி வாங்க வைக்கிற கேள்விகளா இருந்தது ...... என்னையும் ஒரு பதிவரா மதிச்சி அந்த தொடருக்கு கூப்பிட்ட அவருக்கு நன்றி சொல்லியே ஆகணும் .... நான் பரிட்சையில பதில் எழுதுனாகூட நக்கல் கலந்து எழுதிதான் பழக்கம் .... இது பதிவுலகம் வேற இங்க நக்கலாத்தான் எழுதணும் ... அதனால நண்பர் பாலா கோவித்துகொள்ள மாட்டார் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன் ,...

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ஆரம்ப கால கட்டத்துல "புலியூரான் ராஜா" அப்படின்னு வச்சிருந்தேன்  ... ஒருதடவ நம்ம இளையதளபதியோட பாசக்கார அடியாள் பயபுள்ள ஒண்ணு அவர கிண்டல் பண்ணி நான் எழுதுன பதிவுல கௌண்டமணி பாணில ஒரு கேள்வி கேட்டுபுடுச்சி (அந்த கொ..... கேள்விதாங்கோ) அன்னைக்கு முடிவு பண்ணினேன் , நமக்கு  ஊர் பாசத்த விட தன்மானம்தான்  பெருசுன்னு  ... அன்னைல இருந்து வெறும் ராஜாவா மாறிட்டேன்...

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

அது நம்ம பாதி பெருதாங்கோ... எங்க அப்பா இவனுக்கு ராஜான்னு மட்டும் பேரு வச்சா பயபுள்ள பேருல இருக்கிற கெத்துல திமிரு பிடிச்சி ஆடிடும் ... இவன் கடைசி வரைக்கும் நம்ம சொல்றத கேட்டுகிட்டு நமக்கு அடிமையா பழமா இருக்கணும் அப்படிங்கிற ஆசையில கூட கனிய சேத்து ராஜாகனின்னு வச்சாரு... ஆனா பாருங்க அவர் நெனச்சதுக்கு நேர்மாறா நடந்திடுச்சி...ஆனா பதிவுல நம்ம முழு பேரையும் போட்டா நம்ம எதிரிகள் அண்ணேன் நீங்க பழமா? என்று நம் பேரை வைத்தே நம்மை வாரகூடும் என்பதால் அந்த வார்த்தையை நீக்கி விட்டு வெறும் ராஜாவாகி விட்டேன்...

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....

அது வேற ஒன்னும் இல்லைங்க ... நம்ம தானை தலைவர் தமிழ் இன காவலர் ஒரு எழுத்தாளரா இருந்துதான் இன்னைக்கு முதலமைச்சரா ஆனாராம்... எனக்கு சின்ன வயசுல ஜாதகம் பாத்தப்ப இது மாதிரி ஜாதகம் கோடியில ஒருத்தனுக்குதான் அமையும் ... இவன் குறைந்தபட்சம் ஒரு மாநிலத்துக்கு முதல் அமைச்சராவவது ஆவான் என்று என்னை உசுப்பேத்தி விட்டார்... முதலமைச்சரா ஆகணும்னா ஒண்ணு சினிமால பெரிய ஆளா வரணும் .. நம்ம அழகுக்கு அது கொஞ்சம் கஷ்டம்தான் .. அதனாலத்தான் இரண்டாவது வழியான எழுத்தாளனா ஆகிவிடுவது என்று முடிவு செய்து அதே ஜோசியகாரனிடம் நல்ல நேரம் கேட்டு ஒரு சுபயோக சுப தினத்தில் இந்த பதிவுலகத்தில் காலடி எடுத்து வைத்தேன்...(நான் மட்டும் முதல் அமைச்சராக வந்து விட்டால் என்னை வளர்த்த இந்த பதிவுலகத்திற்கு என்று தனியாக ஒரு அமைச்சரவை ஒன்று உருவாக்கி , இங்கு இருக்கும் சில பிரபல பதிவர்களுக்கு அதில் முக்கியமான பணம் விளையாடும் பதிவிகளையும் கொடுத்து கொஞ்ச நாளிலேயே ஏதேனும் ஊழல் கேசுல அவர்களை மாட்டி விட்டு உள்ள தள்ளி ஆயிசுக்கும் கலி தின்ன வச்சிடுவேன் .. பின்ன நம்ம வழிய பாலோவ் பண்ணி அவனுகளும் வளர்ந்து நமக்கு போட்டியா வந்திட்டானுகண்ணா)

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
நம்ம அண்ணன் இளைய தளபதி இருக்கும் பொது நமக்கு வேற என்ன வேணும்... அரசியலுல சம்பாதிக்கணும்னா தலைமைக்கு சொம்பு அடிக்கணும்.. சினிமால சம்பாதிக்கணும்னா ரசிகனுக்கு மொட்ட அடிக்கணும் .. இது மாதிரி பதிவுலகுல பிரபலம் ஆகணும்னா ஒரே வழி நம்ம இளைய தளபதிய நாரடிக்கணும் .... ஏன்னா தமிழ்நாட்டுல அவருக்கு அம்புட்டு மவுசு... நானும் இதத்தான் பாலோவ் பண்ணுனேன் இன்னைக்கு உங்கள் முன்னாள் ஒரு பிரபலமாக எழுதி கொண்டு இருக்கிறேன்.....இளைய தளபதியை நம்பினோர் கைவிடபடார்....

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

இல்லைங்க நமக்கு அமெரிக்கா அதிபர் ஒபமால இருந்து எங்க ஊரு கவுன்சிலர் மங்கம்மா வரைக்கும் அரசியல் டீலிங் இருக்கு ... அதனால நான் எது சொன்னாலும் அது உலக அரசியலில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணி விடும், உலக பொருளாதாரம் அதலபாதாளத்தில் வீழ்ந்து விடும் என்பதால் பப்ளிக்கா ஏதும் சொல்றதில்லை .. ஒரு தடவ மப்பு அதிகமாகி நம்ம கிளிண்டன் மோனிகாவ வச்சிக்கிட்டு இருந்த மேட்டர ஒளரிகொட்டிடேன்.... நம்ம எப்பவும் கண்காணிச்சிகிட்டு இருக்கிற FBI ஆளுக அத கேட்டுட்டாணுக... அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு உங்களுக்கே தெரியும் ... அதனால நான் எதையும் இங்க எழுதுறது இல்லை...
(நம்ம காதல் கதையை மட்டும் ஒரு தொடரா எழுதிகிட்டு வரேன்.....)


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

மூன்றாவது  கேள்விக்கான பதில்தான் இதுக்கும்... முதலமைச்சர் ஆவுரதுதான் என்னோட எய்மு...

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

என்னோட சொந்த பேருல இது ஒண்ணுதான் ஆனா பினாமி பேருல நெறைய இருக்கு ... உங்களுக்கு ஆனந்தி , ப்ரீத்தி , கண்மணி இது மாதிரி ஏதாவது பொண்ணுங்க பேருல பின்னூட்டம் வந்தால் ஜொள்ளு விடுறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சி விடுங்க .. ஏன்னா அந்த கமெண்ட் போட்டது நானா கூட இருக்கலாம்...(அப்புறம் நானும் நண்பர் பாலாவும் சேர்ந்து பதிவுலகில் ஒரு "ரமணா வேலை" பார்த்து கொண்டு இருக்கிறோம் , கூடிய விரைவில் பல பெருந்தலைகள் அதில் மாட்டும், பல அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் உங்களுக்கு கிடைக்கும்.. wai and see...)

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

அமிர்கான் அப்படின்னு ஒரு பதிவர் இருக்காராம் ... அவர் எழுதிற பதிவுக்கெல்லாம் ஆயிரம் கமெண்ட் குறையாம வருமாம்  ..நானும் போய் படிச்சி பாத்தேன் பயபுள்ள என்னதான் எழுதுதுன்னு ...சும்மா "hai buddies how are you? little bit busy... blog you later..." அப்படின்னு நாலு வார்த்தை எழுதுது.. அதுக்கு ஆயிர கணக்குல கமெண்ட் வருது ... நானும் நிறைய தடவை அவர் பதிவுக்கு பொய் கமெண்ட் போட்டுட்டு வரேன் , பயபுள்ள ஒரு தடவ கூட ஏன் ப்ளோக்குக்கு வந்து பின்னூட்டம் போட மாட்டேங்கிது ... அவர பாத்துதான் எனக்கு பொறாமை, கோபம் எல்லாமே....

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

வேற யாரு நம்ம இளையதளபதிதான்.. அடியாள் வச்சி என்ன அசிங்க அசிங்கமா திட்டி கமெண்ட் போட்டாரு...அப்பறம் நம்ம சுஜாதா ஒரு நாள் கனவுல வந்து அழிஞ்சிகிட்டு இருக்கிற தமிழ் எழுத்துலக காப்பாத்த வந்த ஹீரோ நீதான் அப்படின்னு பாராட்டிட்டு போனாரு... எனக்கு பெரும பீத்திகிறது பிடிக்காதுங்கிரதுனால வெளியில சொல்லல .... (இந்த மாதிரி புகழ்ச்சி பிடிக்காத முதல் அமைச்சர் உங்களுக்கு வேணும்னா என்ன சீக்கிரம் பிரபலமாக்கிருங்க)

இந்த ஒரு கேள்விக்காவது சீரியஸா பதில் சொல்லுறேன் ... என்னை முதன் முதல் பாராட்டிய நபர் நம்ம தல "யோகநாதன்" மற்றும் நண்பர் "பாலா"வும்தான் .. இன்று வரை அவர்கள் என்னை ஊக்கபடுத்தி கொண்டு இருக்கிறார்கள்...

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

ஹீ ஹீ என்ன பத்தி எனக்கே முழுசா தெரியாதுங்க... தெரிஞ்சிகிட்டு சொல்லுறேன்....


அப்புறம் நான் இந்த பதிவை தொடர அழைப்பது இதுவரை எழுதாத அனைவரையும்
(நானும் தேடி தேடி பாக்குறேன் எழுதாதத ஒரு பய சிக்கமாட்டேன்றான்...
எல்லாரும் எழுதிட்டாங்க.. நான்தான் கடைசி போல,,, அதான் ஒரு பில்ட் அப்புக்கு )


 

Saturday, August 14, 2010

பதிவுலகமும் பதிவர்களும்

இந்த பதிவுல எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இன்றைய பதிவுலகம் எப்படி இயங்குகிறது , பதிவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை பற்றி யாருக்கும் ஜால்ரா அடிக்காமல் எழுத போறேன் 

நன் இந்த பதிவுலகத்த பத்தி தெரிஞ்ச்சிகிட்டதே ஒரு பன்னிரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் .. எனக்கு பதிவு எழுதும் நண்பனோ , இல்லை அதை  படித்தி விட்டு கமெண்ட் போடும் நண்பனோ கிடையாது ... அதனால் இப்படி ஒரு மேட்டர் இருக்குதுன்னே எனக்கு பல வருசமா தெரியாம போச்சி ... நான் இத பத்தி தெரிஞ்சிகிட்டதே ரொம்ப தற்செயலான சம்பவம்தான்... எனக்கு ஒரு மெயில் வந்தது , தமிழில் டைப் செய்வது எப்படின்னு .. நம்ம கூகிள் transliteration அந்த மெயில் மூலமாத்தான் எனக்கு அறிமுகமே... நான் அத யூஸ் பண்ணி டைப் பண்ண முதல் வார்த்தையை இங்கே எழுத முடியாது , அது ரொம்ப பர்சனல் ... அடுத்து நான் டைப் பண்ணுன வார்த்தை "தல அஜித்" , அந்த வார்த்தைய அப்படியே நம்ம கூகிள் ஆண்டவர்கிட கொடுத்து தேட சொன்னேன் ... அவரும் நெறைய வழிகளை(அதாங்க லிங்க்)  காட்டினார் .. அதுல முதல் வழிதான் என்ன இந்த பதிவுளகத்திர்க்குள் அடி எடுத்து வைக்க காரணமான வழி... 

நான் ஆரமபத்துல பதிவுலகத்த பத்தி எதுவும் தெரியாமத்தான் வந்தேன் ... இங்க இருக்கிறவனெல்லாம் பெரிய பெரிய எளுத்தாளனுகன்னு உண்மையிலேயே நம்புனேன் ... ஆனா போக போகத்தான் தெரிஞ்சது இங்க பாதிக்கு மேல எல்லாம் டுபாக்கூர் எழுத்தாளர்கள் என்பதே .. 

முதல் வகையான பதிவர்கள் பிரபல பதிவர்கள் என்று தங்களை தாங்களே அடை மொழி இட்டு அழைத்து கொள்ளுபவர்கள் .... பிரபலம் அப்டிங்கிற  வார்த்தைக்கு இங்க வரைமுறையே கிடையாது ... இவனுங்க வேலை என்ன தெரியுமா தனக்குன்னு நாலு ஜால்ராக்களை உருவாக்கி கொள்ளுவது .... அந்த ஜால்ராக்கள் இவரு என்ன பதிவு போட்டாலும் கலக்கிடீங்க , எப்படி உங்களால மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடியுது , நான் படித்த சிறந்த பதிவு இதுதான் , நீங்க மட்டும் தமிழ் சினிமால இயக்குனரா ஆனீங்க ஒவ்வொரு படமும் சில்வர் சூப்பிளிதான் என்று இஸ்டத்துக்கு சொம்பு அடிப்பார்கள் ..... அந்த பிரபலமும் இவர்களின் சொம்பில் மயங்கி தொடர்ந்து மொக்கை பதிவுகளாய் எழுதி படிக்கிறவனை சாவடிப்பார்.... இவர்களுக்கு எல்லாம் சினிமாவில் ரஜினி போல பதிவுலகத்திற்கு நாமதான் சூப்பர்  ஸ்டார் என்று நினைப்பு ... ஆனால் இவர்களை பார்க்கும் பொழுது எனக்கு J.K.ரித்தீஷ்தான் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறார்... மேலும் இந்த பிரபலங்களுக்குள் அப்ப அப்ப நாற்காலி சண்டை வேறு நடக்கும் .. அதுதான் உச்சகட்ட காமெடியே... 

இரண்டாவது வகை பதிவர்கள் பிராப்ள பதிவர்கள் என்று மற்றவர்களால் அழைக்கபடுபவர்கள் ... கம்யூனிசம் , கடவுள் மறுப்பு என்று ஏதாவது ஒரு சித்தாந்தத்தை கையில் எடுத்து கொண்டு எதற்கெடுத்தாலும் சண்டை போடுபவர்கள் .... .. விவசாயம் அழிகிறது என்று பதிவில் கூப்பாடு போடுவார்கள் ஆனால் ஊரில் இருக்கும் தங்கள் விவசாய நிலத்தை விற்று விட்டுதான் ஒரு பன்னாட்டு நிறுவன முதலாளி விற்கும் விலையுயர்ந்த பைக் வாங்குவார்கள்.... முதலாளித்துவம் ஒழிக என்று தன முதலாளி கொடுத்த லேப்டாப்பில் டைப் அடித்து கொண்டு இருப்பார்கள்...  இவர்களின் பதிவுகளை நான் ஆரம்பத்தில் படிக்கும் பொழுது உண்மையிலேயே வியந்தேன் , எப்படி இவர்களால் மட்டும் எந்த ஒரு விசயத்தையும் மாற்று கண் கொண்டு பார்த்து எழுத முடிகிறது என்று  , ஆனால் ரொம்ப நாள் கழித்துதான் எனக்கு தெரிய வந்தது இவர்கள் தங்கள் இயக்கங்கள் நடத்தும் பத்திரிக்கையை தினமும் படித்து அதில் எழுதபட்டிருக்கும் கட்டுரைகளை அப்படியே காப்பி அடிக்கும் காப்பி பதிவர்கள் என்பது....

மூன்றாவது வகை பிரபலங்களுக்கு சொம்பு அடிக்கும் பதிவர்கள் ... இவர்கள் சினிமா , விளையாட்டு , இசை என்று  ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு பிரபலத்தை தங்கள் மானசீக குருவாக ஏற்று கொண்டவர்கள் .... அவர்களை பற்றி உயர்வாக எழுதியே காலத்தை ஓட்டுபவர்கள்... இவர்களின் தலைவனை பற்றி வேறு ஏதாவது ஒரு பதிவர் தவறாக எழுதி விட்டால் போதும் உடனே அவர்களை சொறி பிடித்த தெரு நாய் , சாக்கடையை குடிக்கும் பண்ணி என்று திட்டி ஒரு எதிர் பதிவு போடுவார்கள் ... எனக்கு தெரிந்து இதை போன்று எதிர் பதிவு எழுதுவதையே தன முழுநேர தொழிலாக வைத்திருக்கும் பதிவர்கள் நிறைய உண்டு இங்கே.... இந்த வகை பதிவர்கள் சீக்கிரமே பிரபல பதிவராக ஆக வாய்ப்பு அதிகம் ... ஏதேனும் ஒரு தலைவனை பற்றி எழுதும் இவர்களுக்கு அந்த தலைவனின் தொண்டர்கள் பலர் ஜால்ராக்களாக மாற வாய்ப்பு உண்டு .... 

 
நான்காவது வகை ஜொள்ளர் பதிவர்கள் ... இவர்களின் வேலையே பெண் பதிவர்கள் எழுதும் பதிவுகளை தேடி போய் படித்து பின்னூட்டத்தில் ஜொள் வடிப்பதே ....ஆனால் இவர்களின் திறமை நம்மை வியப்படைய செய்யும் , அன்றுதான் அந்த பெண்பதிவர் வலைபூவையே தொடங்கி தன முதல் பதிவை எழுதி இருப்பார் ... இவர்கள் எப்படிதான் கண்டு பிடிப்பார்களோ தெரியாது , பின்னூட்டத்தில் பலாபழத்தில்  மொய்க்கும் ஈ போல மொய்த்து விடுவார்கள் .... இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் அவர்களுக்கு டிப்ஸ் வழங்க ஆரம்பித்து விடுவார்கள் ... உங்க ப்ளாக் கலர் சரி இல்ல இந்த கலர் வையுங்க , டெம்பிளேட் கொஞ்சம் சரி இல்ல இந்த டெம்பிளேட் நல்லா இருக்கும் என்று கடலை போட ஆரம்பித்து விடுவார்கள் .... எனக்கு தெரிந்து ஆரம்பித்த முதல்நாளே இருபது followers பெற்ற பெண் பதிவர்கள் இருக்கிறார்கள் .... அந்த இருபது followers எல்லா பெண்பதிவர்களுக்கும் இருப்பார்கள் .... பின்னர் இப்படியே சொம்படித்து அடித்து அந்த பெண்பதிவரை தன்னுடைய follower ஆக ஆக்கி கொள்ளுவார்கள் ... அப்புறம் என்ன பின்னூட்டத்தில் ஒரே கருகல் வாசனைதான் ... நாம் அந்த பக்கம் போனால் நமக்கு மூச்சு முட்டும்...

ஐந்தாவது வகை நம்ம கௌண்டமணி பாணி பதிவர்கள் ... பதிவுலகை ரொம்ப சீரியஸாக எடுத்து கொண்டு அதில் தனக்கு பெண் தேடுவது , தன்னை பிரபலமாக காட்டி கொள்ளுவது என்பதை போன்று காமடிகள் எதுவும் பண்ணாமல் பதிவுலகையே காமெடி ஆக்குபவர்கள்... பதிவுலகில் எனக்கு மிகவும் பிடித்த நான் விரும்பி படிக்கும் பதிவர்கள் இவர்களே .... இவர்கள் எதையுமே சீரியஸாக எழுத மாட்டார்கள் ... இவர்கள் எழுதும் பதிவுகள் எல்லாமே சும்மா டிரைலர்தான் , மெயின் பிச்சர் பின்னூட்டத்தில்தான் காட்டுவார்கள் ... இவர்களின் பின்னூட்டங்களை படித்தால் மூச்சு திணற திணற சிரிக்கலாம்..... அதுவும் பிரபல பதிவர் யாரவது இவரின் பின்னூட்டங்களை படிக்க நேர்ந்தால் கண்டிப்பா உங்க பதிவுலகமும்  வேணாம் பொங்க சோறும் வேணாம் என்று வெறுத்து போய் பதிவுலகை விட்டே ஓடி போய் விடுவார்(வெக்கம், மானம் , ரோசம் உள்ளவராய் இருந்தால்)  ...    

இதை எல்லாம் தாண்டி உண்மையிலேயே தங்கள் எழுத்து  திறமையின் மூலம் தங்கள் பதிவுகளை பல வாசகர்களை படிக்க வைக்கும் திறமை வாய்ந்த பதிவர்களும் ஒரு சிலர் உண்டு நம் பதிவுலகில்.... இந்த ஒரு சிலர் மட்டுமே பதிவுலகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லுகிறவர்கள், இவர்களை போல இன்னும் பல பதிவர்கள் கிடைத்தால் நம் பதிவுலகத்திற்கு சிறப்பான எதிர்காலம் உண்டு.... 

 

Wednesday, August 11, 2010

ஓசியில் படம் பார்ப்பது எப்படி - ஒரு அலசல்

இன்னைக்கு பலபேர் திரை அரங்குகளில் சென்று படம் பக்க முடியாமல் போவதிற்கு மிக பெரிய காரணாமாக இருப்பது அங்கு விற்கப்படும்  டிக்கெட்டுகளின் அனாவசியமான விலைதான் .... ஒரு காலத்தில் இருபது முப்பது ரூபாய்களுக்கு விற்று கொண்டு இருந்த டிக்கெட் இப்பொழுது இருநூறு முன்னூறுக்கு குறைந்து கிடைப்பதில்லை ... திரை அரங்கு உரிமையாளர்களை சொல்லி குற்றமில்லை , வாங்குபவர்கள் இருக்கும் வரை அவர்கள் விற்று கொண்டுதான் இருப்பார்கள் ....  
இப்படி அந்த டிக்கெட்டோட டிமான்ட் கூட காரணம் அந்த  நடிகர்களோட ரசிக கண்மணிகள் ... அவனுக எவ்வளவு விலை கொடுத்தாவது என்னோட தலைவன் படத்த பாப்பேன் அப்படின்னு சொல்லுரதுனாலத்தான் சினிமாவை ரசிக்க செல்லும் ரசிகனும் தேவை இல்லாமல் அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கு ...

இந்த காரணத்துக்காகவே இந்த ஆடு புடிக்கிற வேலைய நான் ஸ்டார்ட் பண்ணுனேன் ..... நான் பெரிய நடிகர்களோட  படங்களை எல்லாம் முதல் நாளே பார்த்து விடுவேன் , அதுவும் பைசா செலவே இல்லாமல் ...  நம்ம ரசிக கண்மணிகள் இருக்கும்போது நாம் ஏன் காசு கொடுத்து படம் பாக்கணும் ....

ஒவ்வொரு நடிகர்களோட  ஆட்டையும்  ஒவ்வொரு மாதிரி டீல் பண்ணனும் ... முதல ரஜினி .... இவரு ரசிகர்கள் கொஞ்சம் இல்லை நிறையவே sensitive... இவங்களை பிடிக்கணும்னா கொஞ்சம் சூடேத்தி விடனும் இவர்களை ... என்னோட நண்பர்கள் வட்டத்தில் ஒரு ஆடு உண்டு இந்த வகையில் ... ஒவ்வொரு ரஜினி படம் வெளி வரும் போதும் நான் அவனை உசுப்பேத்தி விடுவேன் .. என்னடா உங்க ஆளுக்கு முன்னாடி மாதிரி மாஸ் இல்லை போல , படத்துக்கு கூட்டம் வராது போலயே... உங்க ஆளு குரல் முன்னாடி மாதிரி இல்லையே... வில்லன்கிட்ட கத்தி சவால் விட்டா ஏதோ அவன்கிட்ட கெஞ்சுற மாதிரி தெரியுதே .... என்று ஏகத்துக்கும் ஏத்தி விடுவேன் ... பயபுள்ள படம் வர்ற வரைக்கும் தூங்காது ... படம் ரிலீஸ் ஆகிற அன்னைக்கி சரியா வந்திடுவான் .. டேய் ரொம்ப ஓவரா பேசுற வாடா இன்னைக்கி படத்துக்கு என் தலைவனோட மாஸ் என்னனு காட்டுறேன் அப்படிம்பான்... மச்சி காசு இல்லையேடா நான் வேற நாள் பாத்துகிறேண்டா  என்று ஜகா வாங்கினால் டேய் பயபடாத நான் கூட்டுட்டு போறேன் நீ வந்து தலைவர் மாச மட்டும் பாத்து சொல்லு என்று வசமாக நம் வலைக்குள் விழுவான் ... நாமளும் போய் படம் நல்ல இருந்தா மச்சி தலைவர் கலக்கிட்டாருடா அப்படின்னு அவன ஏத்தி விட்டு அன்னைக்கு நைட் அவன நிம்மதியா தூங்க வைக்கலாம் ... இல்லைனா மறுபடியும் ஏடாகூடமா பேசி அவன் தூக்கத்த நிரந்தரமா போக்கிடலாம்.... பின்ன அவரோட அடுத்த படம் வர இன்னும் ரெண்டு மூணு வருஷம் ஆகும் பயபுள்ள அது வர நிம்மதியா தூங்காது ....

அடுத்து நம்ம தலயோட ஆடுகள் .... இவங்கள  டீல் பண்ணுறது கொஞ்சம் கஷ்டம் .. ஏன்னா தல இவனுகள அப்படி ட்ரைன் பண்ணி வச்சிருக்காரு... டேய் உங்க படம் ஓடாது போல இருக்கே .. பாட்டு எல்லாம் பயங்கர மொக்கையா இருக்கு அப்படின்னு உசுப்பேத்தி விட்டா இவனுக சண்டைக்கே வர மாட்டானுக ... அப்படியாடா சரி விடு தல அடுத்த படத்துல கலக்கிடுவாறு என்று சொல்லி விட்டு தன வேலையை பாக்க போய் விடுவான் ... ஏன்னா இவனுக நூறு முறை வென்றவர்கள் இல்லை லட்சம் முறை தோற்றவர்கள்(பல வருசமா இந்த ஒத்த டையலாக்க வச்சே ஒப்பேத்துவாணுக) ... இவனுக நம்மள  காசு போட்டு படத்துக்கு கூட்டிட்டு போகணும்னா ஒரே வழி , பிடிக்கிறதோ பிடிக்கலையோ தலைக்கு ஜால்ரா அடிக்கணும் ... டேய் உங்க தலை உண்மையிலேயே வித்தியாசமனவர்தாண்டா , நிஜ வாழ்கையில நடிக்க தெரியாதவர்டா, டபுள் ஆக்சன்ல தல பட்டைய கேளப்புவாருடான்னு அள்ளி விட்டா போதும் பயபுள்ள உச்சி குளிர்ந்து விடும் ... அடுத்து தல படம் எப்ப வந்தாலும் மறக்காம நம்மள கூப்டுட்டு போய்டும்... என்ன படம் மொக்கையா இருந்தாலும் நாம விடாம படம் முடியிற வரைக்கும் ஜால்ரா அடிச்சிகிட்டே இருக்கணும் ... இல்லை என்றால் வீட்டுக்கு நடந்தேதான் செல்ல வேண்டி வரும் .. இப்படி ஜால்ரா அடிக்க பயந்துதான் நெறைய பேரு தல படத்துக்கு முதல் நாள் போறதில்லை , தியேட்டர் புல்லா ரசிகர்கள் மற்றும் வெறியர்கள் மட்டுமே இருப்பார்கள் , அதனால படம் எவ்வளவு மொக்கையா இருந்தாலும் நெகடிவ் கமெண்ட் தியேட்டரில் வருவதில்லை இவர் படங்களுக்கு இளைய தளபதியின் ஆடுகள் ... இவற்றை நாம்  பிடிக்க தேவை இல்லை , அதுதான் நம்மை பிடிக்கும் ஒவ்வொரு விஜய் படம் ரிலீஸ் ஆகும் பொழுதும் காலையில் உங்கள் தொலைபேசிக்கு ஒரு கால் வரும் அதை நீங்கள் எடுக்க வில்லை என்றால் அன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும் இல்லை என்றால் அன்று நீங்கள் ஒரு மூன்று மணி நேர எமகண்டத்தை கடந்து வர வேண்டி இருக்கும்.... எனக்கும் கால் வரும் நான் எவ்வளவோ சமாளித்து பார்ப்பேன் , முடியாது கடைசியில் விஜயின் குஷி கில்லி போன்ற படங்கள் என் ஞாபகத்தில் வந்து இந்த படம் ஒரு வேளை அது மாதிரி இருக்கலாமே என்று தப்பு கணக்கு போட்டு அவர்கள் வீசும் வலையில் மாட்டி கொள்ளுவேன்.... ஓசியில் பார்த்தாலுமே சில நேரங்களில் நீங்கள் நரக வேதனை அனுபவிக்க வேண்டி வரும்.... இவர்களிடம் இருக்கும் ஒரே ஒரு நல்ல பழக்கம் மற்ற இரண்டு ஆடுகளை போல கோபப்படமாட்டார்கள் திரை அரங்கிற்குள் எவ்வளவு ஓட்டினாலும் தாங்கி கொள்ளுவார்கள்  
  

நான் மேலே சொன்னா ஆடுகள் அவர்களின் ரசிகர்களை மனதில் வைத்து சொல்லவில்லை , நான் சொன்ன ஆடுகள் அவர்களை கடவுளாக பாவிக்கும் வெறியர்கள்... எனவே அந்த நடிகர்களின் ரசிகர்கள் யாராவது இதை படித்தால் கோபம் கொள்ள வேண்டாம் என்மேல்.
நீங்கள் அதை போன்ற வெறியர்கள்தான் என்றால்....

 common start music

இம்புட்டு வியாக்கியானம் பேசுறே நீயும் ஒரு நடிகனுக்கு ஜால்ரா அடிக்கிரவந்தானன்னு கேக்குறீங்களா? பாஸ் தம்  அடிச்சா உடம்புக்கு கெடுதல்ன்னு தெரிஞ்சும் தம் அடிக்கிறதில்லையா... அது மாதிரிதான் இதுவும் 

Tuesday, August 10, 2010

ரஜினி சகாப்தமா? சறுக்கலா?ரஜினி இந்த ஒற்றை சொல்லுக்கு இருக்கும் பவர் தமிழகம் அறிந்தது .... எதையும் துணிந்து செய்யும் போர்குணம்  கொண்டவர்... எதிரி மன்னிக்கவும் தோற்க பிறந்தவன் யாராக இருந்தாலும் தைரியமாய் எதிர்த்து நிர்ப்பார்.... அவரின் படங்கள் ஒவ்வொரு முறையும் படைக்கும் சரித்திரங்கள் ஆயிரம்... இந்தியாவின் இருக்கும் இருந்த சொற்ப சூப்பர் ஸ்டார்களில் இவர் முதன்மையானவர்.... இவருடன் சேர்ந்து தங்கள் கலை பயணத்தை ஆரம்பித்த எத்தனையோ நடிகர்கள் இன்று திரை உலகை மட்டும் இல்லை இந்த மண்ணுலகையே விட்டு போய் விட்டார்கள்... ஆனால் அவர் இன்னமும் தமிழ்நாட்டின் உச்ச நச்சத்திரம்.... படம் வெளியானால் கோடிகள் குவியும் திரை அரங்கில் , சில நேரம் கொடிகள் கூட நிறம் மாறும் அரசியல் உலகில் ....   

இவருக்கு இருக்கும் பெரிய பலமே இவரின் ரசிக படைதான்.... சினிமா என்றால் என்னவென்று தெரிய ஆரம்பிக்கும் பருவத்திலேயே பலர் இவரின் ரசிகன் ஆகி விடுவார்கள் .. காரணம் ரொம்ப சிம்பிள் , தமிழ் சினிமாவில் இவர்தான் சிங்கம் , சிறு வயதில் பலருக்கு அறிமுகபடுத்தபடும் படங்கள் இவர் படங்களாகவே இருக்கும் ... இவரின் பாட்ஷா படம் பார்க்கும் எந்த சிறுவனும் இவரின் ரசிகர் படையில் இணையாமல் இருக்க முடியாது... நானும் அப்படித்தான் இவரின் ரசிகன் ஆனேன்... ஆறாவது படிக்கும் போதே பல முறை அந்த படத்தை திரை அரங்கில் பார்க்க வீட்டில் காசை திருடி அப்பாவிடம் அடிவாங்கி  , பள்ளிக்கு மட்டம் போட்டு ஆசிரியரிடம் அடி வாங்கி பல கிலோமீட்டர் தூரம் நடந்தும் ஓடியும் இப்படி பல கஷ்டங்களை தாண்டி போவோம்.. ஆனால் எல்லாம் அவர் நான் ஒருதடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி என்று வசனம் பேசும் பொழுது மறந்து விடும் ... அடித்து சொல்லலாம் இந்தியாவின் தலை சிறந்த entertainer ரஜினிதான் இன்று வரை ....

நடிகன் என்றாலே எப்பொழுதும் இளைமையாக தெரிய வேண்டும் அப்பொழுதுதான் மக்கள் அவனை விரும்புவார்கள் என்ற மாய தோற்றத்தை சினிமாவில் உடைத்தெறிந்தவர் அவர்தான் .... தான் சூப்பர் ஸ்டாராக வளர்ந்து கொண்டு இருந்த கால கட்டத்திலேயே தன வழுக்கை தலையை மறைக்காமல் , நரை முடியை டை அடிக்காமல் பொது இடங்களில் பவனி வந்தவர்... பெண்கள் மற்றும் கஞ்சா இல்லாமல் என்னால் ஒரு இரவைகூட கடத்த முடியாது என்று வெளிப்படையாய் தன்னை பற்றி கூறியவர் அவர்... இப்படி ஒரு பொறுக்கியாக இருந்தவர் பின்னாளில் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகமாகி தன்னை ஒழுங்குபடுத்தி கொண்டார்.... இன்று தமிழ்நாட்டில் யோகாசனம் பற்றி அனைவரும் அறிந்து கொண்டு இருப்பதன் மிக பெரிய காரணம் ரஜினிதான்... அவரின் ஆன்மீக ஈடுபாடு மக்கள் மத்தியில் ஆன்மீகத்தை பற்றிய ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது... காரணம் அவரின் மாஸ் .. சிலர்தான் என்ன பண்ணினாலும் மக்கள் மத்தியில் பிரபலமாகவே எப்பொழுதும் இருப்பார்கள் ... இன்று நம் தமிழகத்தில் அதற்க்கு வாழும் உதாரணம் ரஜினிதான் ... 

இது ரஜினியை பற்றி அவரின் ரசிகனாக நான் யோசித்த பொழுது எனக்கு தோன்றியவை .. ஆனால் இன்னொரு வகையில் ஒரு சாதாரணமான ரசிகனாக இல்லை தமிழ் நாட்டின் ஒரு கடைநிலை குடிமகனாக அவரை பற்றி சொல்ல வேண்டுமானால் ரஜினி ஒரு முரண்பாட்டு மூட்டை என்றுதான் சொல்ல வேண்டும் .... தான் காசு சம்பாத்திக்க தன ரசிகனின் உணர்ச்சிகளை பயன்படுத்தி கொண்டவர் அவர் என்று சொன்னால் அவரின் ரசிகனை தவிர எல்லாரும் கண்டிப்பாய் ஒத்து கொள்ளுவார்கள் ... பாட்ஷாவிற்கு பின்னர் அவர் படங்களில் எப்பொழுதும் ஒரு அரசியல் நெடி இருந்துகொண்டே இருக்கும் ....அது அவர் ரசிகனை உசுப்பேத்தி விட்டு பல முறை தன படங்களை பார்க்க வைக்க மற்றும் தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கு ஒரு hype உருவாக்க மட்டுமே அவர் பயன்படுத்துகிறார் , தன்னுடைய ரசிகன் நம்புவதை போல தலைவர் அரசியலுக்கு வருவார் , தமிழகத்தில் நல்ல ஆட்சி நடத்துவார் , நாமெல்லாம் சந்தோசமாக வாழலாம் என்பதற்காக இல்லை என்று கொஞ்சம் காலம் கழித்தே பலருக்கு புரிந்தது ... இவர் படத்தில் மட்டுமே அப்படி வசனம் பேசி கொண்டு இருந்திருந்தால் இன்னமும் பலருக்கு புரிந்திருக்காது ... ஆனால் நிஜ வாழ்கையில் அவர் அடித்த பல பல்டிகள் உலகம் அறிந்தவை .... அவைதான் அவருக்கு பல வழிகளில் மக்களிடம் ஒரு சறுக்கலை உண்டு பண்ணின...

அவர் முதலில் ஜெயலலிதாவை எதிர்த்தார் ... காரணம் தமிழ் நாட்டில் வன்முறை அதிகரித்து விட்டது மக்கள் பயமில்லாமல் வாழ முடியவில்லை என்பதே ... ஆனால் அவர் பண்ணிய மிக பெரிய முட்டாள்தனம் அவரை எதிர்த்து தானே இறங்காமல் கருணாநிதியை வளர்த்து விட்டது ... இவர் வந்தால் நாடு சுபிட்சம் அடைந்து விடும் தேனாறும் பாலாரும் ஓடும் என்று நினைத்தாரோ என்னவோ? இவரை நோக்கி கையை காட்டினார் ... ரசிகர் எல்லாம் ஓட்டு மழை பொழிய திமுக காசு கொடுக்காமலே, கள்ள ஓட்டு போடாமலேயே முதல் முறை தமிழகத்தில் அசுர வெற்றி பெற்றது...
அடக்கம் பண்ண வேண்டிய திமுகாவையும் அதன் தலைவரையும் பிழைக்க வைத்தார் அன்று ஆனால் இன்று இவரே அவர்களின் அடிமையை போல இருக்க வேண்டியாதாய் போய் விட்டது... ஏன் இன்றைக்கு தமிழகம் அமைதி பூங்காவை போலதான் உள்ளதா? வன்முறை இல்லையா? ஊழல் இல்லையா? அன்றை விட இன்று எல்லாம் அதிகமாகவே உள்ளது... அன்று மக்கள் நலனில் அதிக அக்கறை உள்ளது போல அறிக்கை விட்டவர் இன்றும் விட வேண்டியதுதானே? கண்டிப்பாய் மாட்டார் காரணம் அதுதான் ரஜினி.... கருணாநிதி மற்றும் அவர் குடும்பத்தின் தயவு இல்லாமல் இன்று தமிழ்நாட்டில் எந்த பிரபலத்தாலும் வாழ முடியாது .. அப்படி ஒரு நிலைமை இன்று உருவாக்கி விட்டது... அவர்களோடு இயைந்து போனால் நிறைய லாபம் வரும் ... சண்டை போட்டால் என்னவாகும் என்பது உலகம் அறிந்ததே ... அந்த வலைக்குள் இன்று ரஜினியும் மாட்டி கொண்டு விட்டார் ... அவரின் மனசாச்சிக்கு நன்றாக தெரியும் இன்று நடப்பது மக்கள் விரோத ஆட்சி அதன் தலைவர் கருணாநிதி என்பது ... ஆனால் ஜெயலலிதாவை எதிர்த்ததை போல இன்று இவரை எதிர்க்க மாட்டார் ... தன் ரசிகன் என்பவன் தனக்கு காசு சம்பாதிக்க பயன்படும் ஒரு கருவி என்பதை போலத்தான் அவர் எப்பொழுதும் எண்ணி கொண்டு இருந்திருக்கிறார்.. என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தவன் தமிழன் , என் உடல் பொருள் ஆவியை அவனுக்கே கொடுப்பேன் என்று படத்தில் மட்டுமே பாடுவார் .. காரணம் அதை கேட்டால் ரசிகன் ரத்தம் சூடேறும் ... தன் படம் ஓடும் அவ்வளவே .. ஏன் அதையே ஏதுனும் மேடையில் இதுநாள் வரை எப்பொழுதாவது சொல்லி இருக்கிறாரா? ஒரே ஒரு மேடையில் தமிழனுக்காக கோபமாக பேசினார் பின்னர் உன் படம் ஓடாது , காசு கிடைக்காது என்றவுடன் நான் சொன்னது தவறுதான் என்று மன்னிப்பு கேட்டார் , அவர் கேட்டது மன்னிப்பு  இல்லை ஒவ்வொரு தமிழனுக்கும் கிடைத்த சாட்டை அடி...  

கேட்டால் அரசியல் ஒரு சாக்கடை அது எனக்கும் என் ரசிகனுக்கும் வேண்டாம் என்கிறார் ... ஏன் அது சினிமாவில் வசனம் பேசி ரசிகனை உசுப்பி விடும் பொது தெரியவில்லையா? எல்லா நடிகனும் இன்று இதைத்தானே பண்ணுகிறான்... ஆனால் ரஜினி செய்தால் மட்டும் ஏன் தவறு சொல்லுகிறீர்கள் என்றும் சிலர் கூறுவர்.. காரணம் அவர்தானே இப்படி எல்லாம் வசனம் பேசி சம்பாதித்தவர்... மற்றவர்கள் பேசினால் ஏதோ காமெடி பீசு காமெடி பண்ணுது என்று ஒதுக்கி விடும் தமிழன் இவரின் பேச்சை மட்டும்தானே உண்மை என்று நம்பி விசில் அடித்து மகிழ்ந்தான்...  ஆனால் அவனுக்கு கடைசியில் கிடைத்தது ஏமாற்றமே... 

ரசிகன் நம்பினது வரை அரசியல் பேசி காலம் கழித்தவர் , அவன் இனிமேல் வசனம் பேசினால் நம்மை நம்பமாட்டான் என்று தெரிந்ததும் நான் பேசுனது படத்துல ... அதை உண்மைன்னு நம்பினது உங்க தப்பு என்று பல்டி அடித்தார் ... நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் ரசிகன் இதை உண்மை என்று எடுத்து கொள்ளமாட்டான் என்று நம்பியா  அவர் இந்த வசனங்களை எல்லாம் பேசினார் ... இப்படி முழு பூசணிகாயை சோற்றில் மறைக்கும் வேலை இது ... 


சன் டிவியின் எந்திரன் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி பார்த்தவர்களுக்கு ஒன்று தெளிவாய்  புரிந்திருக்கும் .. அந்த நிகழ்ச்சியின் கதாநாயகன் ரஜினி இல்லை கலாநிதி மாறன் என்பது... ஒரு காலம் இருந்தது ரஜினி ஒரு மேடையில் இருந்தால் அது அவர் சம்பந்தம் இல்லாத நிகழ்ச்சி என்றாலும் அவர்தான் மைய நாயகனாக இருப்பார்.. இன்று அவரின் பட வெளியீட்டு விழா... அவர் ஒரு டம்மியை போல இரண்டாம் இடத்தில் ... காரணம் வேறு யாரும் இல்லை அவரேதான் .... கலாநிதி மாறன் குழுமம் தமிழ் சினிமாவுக்கும் தமிழக மக்களுக்கும் எவ்வளவு பெரிய  அச்சுறுத்தல் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும் .... இன்று மக்களை மூளை இல்லாமல் மழுங்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு வேலை பார்க்கும் கூட்டம் அவர்கள் ... தன்னுடைய படம் ஓட வேண்டும் என்றால் சண்டீவியின் ஆதரவு வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அவர்களுடன் இணைந்து வேலை பார்கிறார்.... நாளை ஜெயாடீவியின் ஆதரவு வேண்டும் என்றால் அவர்கள் பேனரில் படம் நடிப்பார்... தன் படம் ஓடினால் சரி ..  ரசிகனை எப்படி சமாளிக்க வேண்டும் என்று  அவருக்கு தெரியும் .... ராகவேந்திரா மண்டபத்தில் ஒரு மீட்டிங் போதும் வழக்கம் போல பொறுமையா இருங்க கூடிய சீக்கிரம் நல்ல செய்தி வரும் என்று ஒரு வார்த்தை பேசி விட்டு போனால் போதும்... அவன் அடங்கி விடுவான்.... இதுதான் நான் புரிந்து கொண்ட ரஜினி ....

அவரை மக்களை காக்க வந்த கடவுளாக பேசும் ரசிகர்களுக்கு மட்டுமே நான் மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் , மற்றபடி நான் அவரின் ஷ்டைளுக்கும் அவரின் படங்களுக்கும் மட்டுமே ரசிகன் என்று சொல்லும் நபரா நீங்க? பாஸ் எந்திரன் படம் எப்ப ரிலீஸ் ஆக போகுதாம்?... மொத ஷோவே போய் பாக்கணும் பாஸ்.. எத்தனை வருஷம் ஆச்சி அவர் ஸ்டைல பாத்து.... ரியல் வாழ்க்கையில் அவரின் பல நடவடிக்கைகள் பிடிக்கவில்லை என்றாலும் திரையில் அவரை பாத்து ரசிக்கும் பல கோடி தமிழனில் நானும் ஒருவன்... அதுதானே அவருக்கும் வேணும்.


LinkWithin

Related Posts with Thumbnails