Followers

Copyright

QRCode

Thursday, August 19, 2010

எந்திரன் - அட்டர் பிளாப் ஆக்டோபஸ் கணிப்பு

இப்ப எல்லாம் மக்கள் கிளி ஜோசியத்த நம்புறதே இல்லை ... எல்லாம் ஆக்டோபஸ் ஜோசியம்தான்... உலக மேட்டர் புட் பால் ரிசல்ட்டவே புட்டு புட்டு வச்சிருச்சி நம்ம உள்ளூர் மேட்டர் எல்லாம் எம்மாத்திரம் ... இன்னைக்கு நம்ம தமிழ் நாட்டுல பயங்கர எதிர்பார்புல இருக்குற ரெண்டு விஷயங்கள் , தமிழன் ஆஆ ன்னு வாய பொழந்து எதிர்பாத்துகிட்டு இருக்கிற மேட்டர் ரெண்டு இருக்கு ..


ஒண்ணு அடுத்த வருஷம் நடக்க போற தேர்தலுல ஜெய்ச்சி ஆட்சிய பிடிக்க போறது அய்யாவா ? இல்ல அம்மாவா?இன்னொன்னு ரொம்ப முக்கியமானது , ஜஸ்ட் நூத்தி அம்பது கோடி செலவுல தயாரிக்க பட்டு விரைவில் வெளிவர போற எந்திரன் படம் ரஜினிக்கு சந்திரமுகி மாதிரி சரித்திரம் படைக்குமா? இல்லை குசேலன் மாதிரி குப்புற கவுத்துமா? இந்த ரெண்டு மேட்டரையும் ஆக்டோபஸ் கூண்டுல வச்சி ஜோசியம் பார்த்து உள்ளார்கள் சம்பந்த பட்டவர்கள்.... மிக ரகசியமாக வைக்க பட்டிருந்த அந்த முடிவுகள் இப்பொழுது வெளியில் கசிந்துள்ளது .. இதோ உங்களுக்காக அந்த முடிவுகள் ...


முதலில் அடுத்து தமிழ்நாட்டை கொள்ளை அடிக்கும் வாய்ப்பை பெற  போவது அம்மாவா அய்யாவா என்ற கணிப்பில் அக்டோபஸ் யாருக்கும் சாதகமாக கணிக்காமல் கூண்டுக்குள் படுத்து தூங்கி விட்டதாம்... இந்த விஷயம் முதலில் அம்மாவுக்கு தெரிவிக்கப்பட்டதாம் , உடனே அவர் தூங்கும் அந்த அக்டோபஸ்ஸை தன குண்டர் படையை வைத்து கொலை வெறி தாக்குதல் நடத்தி அதன் தூக்கத்தை கலைத்து விட்டுள்ளார்... இந்த தாக்குதலில் பயந்து போன அக்டோபஸ் தூங்காமல் தண்ணீருக்குள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருந்திருக்கிறது.... விஷயம் நம்ம மதுரை அண்ணாச்சியின் காதுக்கு சென்றிருக்கிறது... உடனே அவர் ஒரு பெட்டி முழுவதும் அக்டோபசிர்க்கு மிகவும் பிடித்த அது விரும்பி சாப்பிடும் சின்ன சின்ன மீன்களின் உடலில்  உதயசூரியன் முத்திரை குத்தி  அனுப்பி வைத்துள்ளாராம்... அதை   சப்புகொட்டி சாப்பிட்ட அக்டோபஸ் நன்றி கடனாய் தொட்டிக்குள் வைக்கப்பட்டு இருந்த உதய சூரியன் சின்னம்  இருந்த பேட்டியின் மேல் அமர்ந்து ஐயாவை ஜெய்க்க வைத்திருக்கிறது.... கருத்து கணிப்பில் ஜெய்க்க அக்டோபசுக்கே பெட்டி நிறைய லஞ்சம் கொடுக்கபட்டிருக்கும் செய்தியை கேள்விப்பட்ட வுடன் தமிழ் மக்கள் தேர்தலில் ஜெய்க்க நமக்கு பெரிய அளவில்பணம் பட்டுவாடா செய்யப்படும் என்று சந்தோசத்தில் துள்ளி குதித்து கொண்டு இருக்கின்றனர்...


இந்த கருத்து கணிப்பு முடிந்த அடுத்த நாளே எந்திரன் கருத்து கணிப்பு நடத்த பட்டுள்ளது.... இதில் ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் எந்திரன் அடுத்த குசேலன் என்று கணித்துள்ளது அக்டோபஸ்.... ஆனால் இதை ரஜினி ரசிகர்கள் ஏற்று கொள்ள மறுக்கின்றனர் ... கருத்துகணிப்பில் வைக்கப்பட்ட எந்திரன் போஸ்டரில்  ஹிட் என்று எழுதி வைக்கபட்டிருந்த பெட்டியில் கலாநிதிமாறனின் படமும்  , பிளாப் என்று எழுதி வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் ரஜினியின் படமும் இருந்துள்ளது ... ரஜினியின் படத்தை பார்த்து அவரின் ஸ்டைலில் ஈர்க்கபட்டே அக்டோபஸ் அந்த பெட்டியின் மேல் சென்று அமர்ந்து விட்டது என்று ரஜினி ரசிகர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர், மேலும் எங்கள் தலைவருக்குத்தான் உலகிலேயே முதல் முறையாக ஒரு அக்டோபஸ் ரசிகனாகி உள்ளது , இதன் மூலம் தமிழ் என்று ஒரு மொழி உள்ளது , தமிழன் என்று ஒரு இனம் உள்ளது என்று அக்டோபஸ் மீன்கள் தெரிந்து கொள்ளும் ... எப்படி ஜப்பான்காரன் தமிழ் மொழிகற்க எங்கள் தலைவர் காரணமாக இருந்தாரோ அதே போல் இனி அக்டோபஸ் மீன்கள் தமிழ் மொழி கற்கவும் எங்கள் தலைவன் காரணமாக போகிறார் என்று அவர்கள் பெருமையுடன் கூறி உள்ளனர் ...

இப்படி அக்டோபஸ் கணிப்பிற்க்கே பயப்படாத ரஜினி ரசிகர்கள் , வேறு ஒரு கணிப்பை நினைத்து பயந்து போய் உள்ளனர் ... அவர்களின் பயத்திற்கு காரணம் இளையதளபதி விஜய்... ரெமேக் ராஜா இயக்கிய படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் ... ஆனால் அவர் விஜய்யை வைத்து படம் எடுக்க முடிவு செய்த பின்னர் அவர் இயக்கத்தில் வெளி வந்த படம் தில்லாலங்கடி .... விஜய்யுடன் இணைந்ததால் அவரின் ராசி இவருக்கும் ஒட்டி கொள்ள  படம் அட்டர் பிளாப்.... இப்பொழுது சங்கர் விஜயை வைத்து படம் இயக்க போகிறார் என்று செய்து வந்து கொண்டு இருக்கிறது ... இதனால் எங்கே இந்த ராசி சங்கருக்கும் ஒட்டி கொண்டு , தில்லாலங்கடி போல எந்திரனும் உக்காந்து விடுமோ என்று பயப்படுகின்றனர் ரஜினி ரசிகர்கள் ... எனவே படம் வெளி வரும் வரை சங்கரை எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று மிரட்டி வைத்துள்ளனர் என்று சங்கர் வீட்டு காவல்காரன் என்னிடம் கூறினார் ....


இப்படி யாருக்கும் பயப்படாமல் ஜோசியம் பார்த்து கொண்டிருந்த ஆச்டோபுச்சுக்கு முடிவு  நம் இளைய தளபதியின் மூலம் கிடைத்துள்ளது..அக்டோபசின் கணிப்பை கேள்விப்பட்ட இளைய தளபதியின் தந்தை  தன பங்குக்கு  தன மகன் தமிழ் சினிமாவின் அடுத்த எம்ஜிஆர்ரா? இல்லை ரஜினியா? என்று அதை வைத்து ஒரு கருத்து கணிப்பு நடத்தியுள்ளார்... இந்த ரெண்டில் எதை தேர்வு செய்தாலும் அது தனக்கு அவமானம்தான் என்று முடிவு செய்த அக்டோபஸ்   தண்ணீர் தொட்டிக்குள்ளே மூச்சை அடக்கி தற்கொலை செய்து கொண்டு விட்டதாம்....

இப்பொழுது அந்த மீன் போயேஸ் கார்டனில் அம்மா பங்களாவில் இந்த கோலத்தில்  இருக்கிறதாம் 
 

6 comments:

ரமேஷ் said...

செம கற்பனை..நல்லா இருக்குங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் என்ன தெகிரியம்யா உனக்கு, எங்க கொண்டு வந்து எதக் கோர்க்குற? எங்க டாக்குடர்ரு தம்பி விஜய்ய கொண்டு வந்து நேக்கா கோர்த்து வுட்டுட்டியே? (ஆமா அந்தப் பன்னாட வெளங்குர மாதிரியா படம் எடுக்குறான்?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆஹா...யோவ்..நீய்யி..அந்த டாக்குடர்ரு தம்பி ரசிகனா..? தெரியாம வாய விட்டுட்டேனே..ஓக்கே...சமாளிக்கிறேன்!

தனுசுராசி said...

நல்ல கற்பனை, படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.

"ராஜா" said...

நன்றி ரமேஷ்

// ஆஹா...யோவ்..நீய்யி..அந்த டாக்குடர்ரு தம்பி ரசிகனா..?

பண்ணி சார் பண்ணி சார் இதுக்கு நீங்க என்ன முச்சந்தியில நிக்க வச்சி சாணி தண்ணி ஊத்தி விளக்கமாத்தால அடிச்சிருக்கலாம்....

@ தனுசுராசி
நன்றி தல .... அடிக்கடி வாங்க ....

sweet said...

un thalai maathiri aalunga nadichu irundha padam odaathu

ENDHIRAN HIT ippo enna solra?

Vayeru erinchu saagureengala

Jelusil anuppi vaikkattuma?

LinkWithin

Related Posts with Thumbnails