Followers

Copyright

QRCode

Wednesday, August 25, 2010

"மங்காத்தா டீசர்"- வெங்கட் பிரபுவின் வெற்றி



தலையோட மங்காத்தா டிசெர் வெளி வந்து விட்டது...  எங்க ஊருல ஒரு திரை அரங்கில் நான் மகான் அல்ல படம் பார்பதற்கு சென்றிருந்தேன்... டிக்கெட் விலை அறுபது ரூபாய் என்று சொன்னார்கள் ... இடைவேளையின் போது தலையின் மங்காத்தா டீசெர் போடுவார்கள் என்பதனால் நான் அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து சென்றேன்.. படம் வந்து இரண்டாம் நாள் தான் எனவே ஓரளவிற்குதான் கூட்டம் இருந்தது... நான் படம் எப்ப போடுவார்கள் என்பதை விட இடைவேளை எப்பொழுது விடுவார்கள் என்றுதான் அதிக ஆர்வமாய் இருந்தேன், ஒருவழியாய் இடைவேளை வந்தது , இயற்கை உபாதையை கூட அடக்கிக்கொண்டு எங்கும் வெளியே சென்று விடாமல் இருக்கையிலேயே டீசெர் போடுவார்கள் என்ற எதிர்பார்த்து அமர்ந்திருந்தேன் .. படு பாவி பயலுக கடைசி வரை போடவே இல்லை , படத்தின் இரண்டாம் பாதியை ஆரம்பித்து விட்டார்கள்.... எனக்கு வந்த கோபத்திற்கு வெளியே எழுந்து சென்று விடலாம் என்று இருந்தேன் , ஆனால் சுசீந்திரன் விறு விறு திரைகதையின் மூலம் என்னை படத்தை பார்க்க  வைத்து விட்டார் .. பின்னர் அடுத்த நாள் இணையத்தில்தான் அதை பார்த்தேன்... என்ன சொல்ல தல அமர்களமாய் இருக்கிறார்... அந்த டீசரே ஒரு கதை சொல்லுமாறு எடுத்திருந்த விதம் சூப்பர் ... தல ரிலாக்சாக அமர்ந்து தன்னுடைய துப்பாக்கியை சரி செய்து கொண்டு இருப்பார், அவரை பின்னால் இருந்து பலர் துப்பாக்கி குண்டால் தாக்குவார்கள் , தல எதற்கும் அஞ்சாமல் தன வேலையை செய்து கொண்டு இருப்பார் , அவர்கள் முழுவதும் சுட்டு முடித்து டையர்ட் ஆனவுடன் தல திருப்பி தாக்குவார்... இதே போல ஒரு ட்ரீட்மென்ட் படத்தின் திரைக்கதையிலும் இருந்தால் நன்றாக இருக்கும் ... வெங்கட் எங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்... 


சென்ற வாரம் மூன்று திரைப்படங்கள் பார்க்க நேர்ந்தது ... வம்சம் , நான் மகான் அல்ல மற்றும் grown ups ... அதில் ஆச்சரியமான விஷயம் மூன்றும் நன்றாக இருந்ததுதான் .... வம்சம் சென்னை உதயம் திரை அரங்கில் பார்த்தேன் , 

அந்த திரை அரங்கிற்கு முதன் முதலாய் அன்றுதான் சென்றேன் நிறைய எதிர்பார்ப்புடன் , ஆனால் உள்ளே சென்ற எனக்கு சப்பென்று ஆகி விட்டது... எங்க அருப்புகோட்டையில் இருக்கும் திரை அரங்குகளே அதை விட நன்றாக இருக்கும் , உக்காரும் இருக்கைகள் மிகவும் சிறியதாய் இருந்தது ... மூன்று மணிநேரம் அதில் அமர்ந்து எப்படிதான் படம் பார்கிறார்களோ தெரியவில்லை 

.... ஆனால் படம் என்னை ஏமாற்றவில்லை , அதிலும் சுனைனா அடடா என்ன அழகு அந்த பொண்ணுக்கு , அதுவும் கிராமத்து மேக் அப்புல பாக்கும் போது சும்மா மனச அள்ளுது பொண்ணு .... இடைவேளை வரை ஹீரோ , கஞ்சா கருப்பு , சுனைனா அந்த "அசின்" என்று இவர்கள் செய்யும் காமெடிகள் கல கல ரகம்...  அதிலும் செல்போனை மரத்தில் கட்டி பேசுவதை சில மாதங்கள் முன்பு வரை எங்கள் கிராமத்திலேயே நான் பார்த்திருக்கிறேன் ...ஏன் நானே கூட சில சமயம் அப்படி பேசி இருக்கிறேன் ... இப்பொழுது எங்கள் கிராமத்தில் செல் டவர் வந்து விட்டதால் பெட்ரூமில் படுத்து கொண்டே பேசும் வசதி வந்து விட்டது. இரண்டாம் பாதிதான் கொஞ்சம் இழுவை .... ஆனால் படம் முழுக்க இயக்குனர் "அசின்", "செல்", "திருவிழா சாவு" , "இடி விழுந்தால் மக்கள் சொல்லும் மூட நம்பிக்கைகள்" என்று சின்ன சின்ன சுவாரஸ்யமான விசயங்களை சொல்லி இருக்கிறார் ... முழுக்க முழுக்க வம்சம் கிராமத்து மனிதர்களுக்கான படம் , நான் ரசித்தேன்... உங்களுக்கு கிராமத்து வாழ்க்கை பிடிக்கும் என்றால் தாராளமாய் செல்லலாம் வம்சத்தை பார்க்க...



அடுத்த நாள் grown ups படம் inox திரை அரங்கில் பார்த்தேன் ... அதற்கு முன் city centre பற்றி சொல்லியே ஆக வேண்டும் ... சென்னை பணக்கார நகராய் மாறி கொண்டு இருக்கிறது என்பதை அழுத்தமாய் நமக்கு சொல்லும் இடம் அது என்று நினைக்கிறன் ... இப்பொழுதுதான் முதல் முறை அங்கு சென்றேன் ... ஒரு வெளிநாட்டு ஷாப்பிங் சென்டரில் இருப்பது போன்று இருந்தது...காதலியை கூட்டி கொண்டு சென்றால் நம் ஒரு மாத சம்பளமும் காலியாகி விடும் போல , எல்லாமே அவ்வளவு காஸ்ட்லி... ஒரு அரை லிட்டர் கோக் விலை அறுபது ரூபாய் என்கிறார்கள்...  ஆனால் கையில் கொஞ்சம் பணமும் கூட நமக்கு பிடித்த பிகரும் இருந்தால் நன்றாய் பொழுது போகிறது ... நான்கு மணி காட்சிக்குத்தான் டிக்கெட் கிடைத்தது , தியேட்டர் வாய்ப்பே இல்லை high class... 



தியேட்டரில் பாதி  ஜோடியாய்தான் இருந்தார்கள் ... படம் ரொம்ப ஜாலியான காமெடி படம் ... ரொம்ப சுவாரஸ்யம் இல்லை என்றாலும் போர் அடிக்காமல் சொல்லி இருக்கிறார்கள் ... அதிலும் ஹீரோயின் சல்மாஹைக் செம்ம கட்டை.. வயசு நாற்பதுக்கு மேலையாம்.... வாய்ப்பே இல்லை அவ்ளோ கட்டுகோப்பான உடல் அவருக்கு ... அதிரடியாய் நமக்கு சிரிப்பை வர வைக்கும் காட்சிகள் நிறைய உண்டு படத்தில் .... கையில் நிறைய காசும் செலவழிக்க நேரமும் இருந்தால் தாராளமாய் பார்க்கலாம் படத்தை ... ஒன்றரைமணி நேரம் சிரிப்புக்கு கியாரண்டி...



இன்னும் ஆறு மாத காலம்தான் உள்ளது உலக கோப்பை கிரிக்கெட் ஆரம்பிக்க , நம்ம ஆளுக இருக்கிற நிலைமைய பாத்தா 2007 உலகோப்பை போட்டிகள் ஞாபகம் வருது .... இலங்கை இங்கிலாந்த் என்று  மற்ற அணிகள் எல்லாம் அசுர வேகம் காட்டி கொண்டு இருக்க நம்ம அணி இருக்க இருக்க கீழ போய்கிட்டு இருக்கு ... இதற்க்கு மிக முக்கிய காரணம் அணியில் நுழையும் புதுமுக வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை என்பதே... மற்ற அணியில் புதுசு புதுசாக வரும் வீரர்கள் நன்றாக விளையாடி கொண்டு இருக்கிறார்கள் ... மேலும் நம் அணியில் உலக தரம் வாய்ந்த வேக பந்து வீச்சாளர் யாரும் இல்லை , இருக்கும் ஒரு சிலரும் உடல் தகுதி இல்லாமல் அவதிபடுகிறார்கள்...  சச்சினும் கம்பீரும் மீண்டும் அணிக்கு திரும்பினால் பேட்டிங் வரிசை பலம்  கூடும் , ஆனால் பந்து வீச்சுதான் ரசிகர்களுக்கு கவலை அளிக்க கூடியதாய் உள்ளது .. இலங்கை வீரர்களும் நியூசிலான்ட்   வீரர்களும் நம் அணியை நூறு ரன்களுக்குள் கட்டுபடுத்திய அதே ஆட்டத்தில் நம் பந்து வீச்சாளர்கள் அவர்களுக்கு ரன்களை வாரி வழங்கியதை பார்க்கும் பொழுது எனக்கு கொஞ்சம் பயமாக உள்ளது மீண்டும் இப்படி நடந்து விடுமோ என்று... 

ஐயா தோனி ஏதாவது புதுசா  ஐடியா பண்ணி டீம்ம காப்பாத்துங்க ....   

1 comment:

Yoganathan.N said...

மங்காத்தா டீசர் பற்றி நானும் எழுத வேண்டும் என்றீருந்தேன். நீங்கள் முந்திக் கொண்டீர்கள். :P
ஆல்பர்ட் தியேட்டரில், மங்காத்தா டீசர் கொண்டாத்ததை நீங்கள் பார்க்க வேண்டும்... திருவிழா கோலம்... :)

வம்சம் படம் பார்க்க ஆவலாய் இருக்கிறேன்.

LinkWithin

Related Posts with Thumbnails