Followers

Copyright

QRCode

Monday, December 19, 2011

இளைய தளபதிக்கு ஒரு கடிதம்
அன்புள்ள ,
  எதிர்கால தமிழக முதல்வரும் , அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்று , ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மிக கடினமான சோதனைகளை எல்லாம் வெற்றிகரமாக முடித்து முனைவர் படம் பெற்று அதை பெருமையாக தன் பெயருக்கு பின்னால்  எப்பொழுதும் போட்டு கொள்ளும் இளையதளபதி டாக்டர் ஜோசப் விஜய் அவர்களுக்கு,


உங்களை பற்றி ஏதாவது எழுதினால் உங்கள் அடி பொடிகள் ஏதோ நாங்கள் பொறாமையில் எழுதுவதாக பிதற்றுகிறார்கள். உங்கள் மேல் பொறாமை படும் அளவுக்கு நீங்கள் என்ன செய்து விட்டீர்கள் என்று எனக்கு இன்னமும் புரியவில்லை. நீங்கள் ஒரு சினிமா நடிகனாக மட்டும் தங்களை அடையாளபடுத்தி இருந்தால் உங்களை புறக்கணித்து விட்டு நாங்கள் எங்கள் வேலையை பார்த்து கொண்டிருப்போம். ஆனால் ஒரு சமூக ஆர்வலராக , எதிர்கால அரசியல்வாதியாக மாற  முயலும் உங்கள் நடவடிக்கைதான் உங்களை பற்றி இப்படியெல்லாம் எழுத தூண்டுகிறது.

எனக்கு உங்களின் சினிமாக்கள் பெரும்பாலும் பிடிக்காது (கில்லி , சிவகாசி மட்டும் விதிவிலக்கு) , ஆனால் இந்த பதிவு அதை பற்றியது இல்லை. உங்களின் மற்ற இரண்டு பரிமாணங்களான சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆகியவற்றை பற்றிதான் எழுதபோகிறேன். அஜீத் இந்த இரண்டு பரிமானங்களிலும் தன்னை வெளிபடுத்திக்கொள்வதில்லை என்பது எனக்கு சாதகமான விஷயம்தான் என்றாலும் அதற்காக மட்டும் இதை எழுதவில்லை , சினிமாவில் நடித்து விட்டு , தனக்கு பின்னால் ஒரு கூட்டம் கூடியவுடன் முதல்வர் கனவுடன் எந்தவிதமான தகுதியும் இல்லாமல் அரசியலில் இறங்க துடிக்கும் உங்களை போன்ற சமூகத்தை கெடுக்கும் கிருமிகளை பார்க்கும் போது சூடு சுரணையுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் எழும் ஆதங்கம் என்னுள்ளும் எழுந்ததே முக்கிய காரணம்.


நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய போராட்டம் வெடித்திருக்கிறது மற்ற போராட்டங்களை போல இது ஒரு அரசியல்வாதியின் தலமையிலோ , இல்லை கார்ப்பரேட் முதலாளிகளின் ஸ்போன்சர்ஷிப்பிலோ , ஜாதி தலைவரின் பெயரை கொண்டோ , உங்களை போன்ற சினிமா நடிகனின் சுயநலத்துக்காகவோ இந்த போராட்டம் நடைபெறவில்லை. மக்களே முன்னின்று இந்த போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள். நம்முடைய காலகட்டத்தில் இவ்வளவு மக்கள் ஒரு பிரச்சனைக்காக ஒன்று கூடி நாம் பார்திருக்க இயலாது.  நீங்கள் நாகபட்டினத்தில் உங்கள் சுயநலத்திர்க்காக கூட்டிய கூட்டத்தை விட அதிகமான கூட்டம் ஒவ்வொரு நாளும் தேனியில் கூடுகிறது. விஷயம் அதுவள்ள,இலங்கையில் தமிழன் மீது தாக்குதல் நடந்த போது உண்ணாவிரதமும் , மீனவன் சுடபடுவதற்க்கு கண்டன கூட்டமும் நடத்தி தமிழனின் மீது அக்கறை இருப்பதை போல காட்டி கொண்டீர்கள். அன்னா ஹசாரே மீடியாக்களின் துணையோடு ஊழல் எதிர்ப்பு போராட்டம் நடத்திய பொழுது ஒரு மணிநேரம் மட்டும்  அந்த மேடையில் அவரோடு அமர்ந்து உண்ணாவிரதம் இருந்து போட்டோவுக்கும் , வீடியோவுக்கும் போஸ் கொடுத்துவிட்டு வந்தீர்கள்  . உங்கள் பட வெளியீட்டு நாளிலும் , உங்கள் பிறந்த நாளிலும் ஏழைகளுக்கு தையல் மெசினும் . கறவை மாடும் இலவசமாக கொடுத்து அதை பேப்பரிலும் , டிவியிலும் விளம்பரபடுத்தி கொண்டு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க பார்தீர்கள். ஒன்று உங்கள் அரசியல் பிரவேசத்திர்க்கு ஏழை பங்காளன் என்ற விளம்பரம் , இன்னொன்று இதையே காரணம் காட்டி கள்ளக்கணக்கு எழுதி வருமான வரியில் கொஞ்சம் விலக்கு...   அப்பொழுதெல்லாம் மக்களின் நலனை விட மீடியாக்களில் உங்கள் பெயர் பரபரப்பாக அடிபடபட வேண்டும் , மக்கள் மத்தியில் ஒரு சமூக ஆர்வலராக உங்களை காட்டி கொள்ள வேண்டும் என்ற முனைப்பில்தான் நீங்கள் இதையெல்லாம் செய்தீர்கள் என்று ஒரு கூட்டம் சொல்லிக்கொண்டிருந்தது ... அதுதான் உண்மையும் கூட.

பக்கத்து நாட்டில் தமிழன் அடிபட்ட பொழுது , கூட்டத்தை கூட்டி நான் அடிச்சா தாங்க மாட்ட , உலக வரைபடத்திலிருந்து உன் நாட்டையே தூக்கிடுவேன் என்று சிங்களவனை பார்த்து வீராவேசமாக வசனம் பேசினீர்களே , இன்று சொந்த நாட்டிலேயே தமிழன் உரிமை பிரச்சனைக்காக போராடி கொண்டிருக்கிறானே , அவனுக்காக இறங்கி போராடாமல் , அமைதி காப்பது ஏன்? சிங்களவனை கண்டித்து நாகபட்டினத்தில் கூட்டம் கூட்டியதை போல , நமக்கு தண்ணீர் தர மறுக்கும் மலையாளியை கண்டித்து தேனியில் ஒரு கண்டன ஆர்பாட்டம் நடத்த வேண்டியதுதானே? அதில் மலையாளியை பார்த்து நான் அடிச்சா தாங்க மாட்ட , இந்திய வரைபடத்திலிருந்து உங்க மாநிலத்தையே தூக்கிடுவேன் என்று வாய் சவாடல் விட வேண்டியதுதானே.

கண்டிப்பாக முடியாது , காரணம் சிங்களவனை எதிர்ப்பதால் உங்களுக்கோ உங்கள் படத்துக்கோ எந்த பாதகமும் நேர்ந்துவிட போவதில்லை மாறாக இலங்கை தமிழர்களின் ஆதரவு உங்களுக்கும் , உங்கள் படத்துக்கும் அதிகமாகும் .  ஆனால் மலையாளியை பகைத்து கொண்டால் உங்கள் படத்தை கேரளாவில் வெளியிட தடை விதிப்பார்கள் , மேலும் தமிழ்நாட்டில் இருக்கும் மலையாளிகள் யாரும் உங்கள் படத்தை பார்க்கமாட்டார்கள். இப்படி இழப்பு உங்களுக்கு என்னும் பொழுது நீங்கள் எப்படி தமிழனுக்கு ஆதரவாக களம் இறங்குவீர்கள். கண்ணுக்கு தெரியாத ஊழல்வாதிகலையும் , உங்களை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாத சிங்களவனையும் எதிர்த்த உங்களால்  இப்பொழுது தமிழனுக்காக மலையாளியை எதிர்க்க முடியுமா? அது விளம்பரதுக்கு ஆசைப்பட்டு உயிரையே விட்ட கதையாகி விடும் என்று உங்களுக்கு தெரியாதா? உங்கள் படங்கள் கேரளாவில் அதிகபட்சம் மூன்று கோடி வசூலை கொடுக்குமா? தமிழனுக்காக அந்த மூன்று கோடியை புறந்தள்ளிவிட்டு இறங்கி போராட முடியுமா? அரசியலுக்கு வருவதற்க்கு முன்னரே ஒவ்வொரு விசயத்திலும் சுயநலமாக செயல்படும் நீங்கள் எப்படி அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்துவிட முடியும்? இப்படிபட்ட  உங்களை பற்றி நல்லாவிதமாக மட்டுமே எழுத வேண்டும் என்று நீங்களும் உங்கள் அடிபொடிகளும் எப்படி எதிர்பார்க்கலாம்?


கடைசியாக இன்று அரசியலில் இருந்து கொண்டு ஊழல் செய்து நாட்டை குட்டி சுவாராக்கி கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை விட தன்னுடைய சுயநலத்துக்காக தனக்கு பின்னால் இருக்கும் கூட்டத்தை பயன்படுத்தி எந்த  தகுதியும் இல்லாமல் பணம் சம்பாதிக்க மட்டுமே அரசியலில் இறங்க துடித்து கொண்டிருக்கும் உங்களை போன்றவர்கள் தான் மிகவும்  அபாயகரமானவர்கள்.  இவர்களை போன்றவர்களை நம்மால் எல்லாம் திருத்த முடியாது, இவர்களுக்கு  பின்னால் இருந்து கொண்டு , இவர்களின் சுயநலதிர்க்கு பலிகடா ஆகிக்கொண்டிருக்கும் இவர்களின் தொண்டர்கள் தான் இவர்களை புறக்கணிக்க வேண்டும். ஆனால் சினிமா மாயையில் மூழ்கி கிடக்கும் அவர்கள் இதையெல்லாம் சிந்திக்கவா போகிறார்கள்?

சினிமாவும் அரசியலும் அனைவருக்கும் பொதுவானவை, அதில் நுழைய எப்படி ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளதோ , அதை போல அதில் இருப்பவர்களையே விமர்சிக்கவும் அனைவருக்கும் உரிமை இருக்கிறது. நான் விஜயை பற்றி விமர்சிப்பதில் ஏதாவது தவறு இருந்தால் சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன். நான் அஜீத் ரசிகனாக இருப்பதால்தான் விஜயை விமர்சிகிறேன் என்று சொல்லுபவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன் , விஜய் அந்த அளவுக்கு வொர்த் இல்லை பாஸ்... 


Friday, December 16, 2011

2011 தமிழ் சினிமா ஆடுகளம் முதல் ஒஸ்தி வரை

 எனக்கும் சினிமாவுக்கும் எந்தவிதமான நேரடி தொடர்புகளும் கிடையாது , ஆனால் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு கணிசமான தொகையை சினிமாவும் சினிமா சார்ந்த பிற ஊடகங்களுக்கும் செலவு செய்யும் லட்சகணக்கான தமிழர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் சினிமாவை பற்றி விமர்சிக்கும் உரிமை எனக்கும் உண்டு என்பதால் இந்த வருடம் வெளிவந்த தமிழ் சினிமாக்களை பற்றிய என் பார்வையை இங்கு பதிவிடுகிறேன்.

இந்த வருடம் என்னை கவர்ந்த ஐந்து பாடல்கள் அதே வரிசையில்  (இது என்னுடைய ரசனை மட்டுமே)


 1. no money no money no honeyda - வானம்
    முன்பு நான் ரகுமானின் தீவிர ரசிகன். என் பதின்ம வயதுகளில் ரகுமானின் பாடல்களை தவிர வேறு எந்த இசையமைப்பாளரின் பாடல்களையும் கேட்காமலே இருந்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது யுவன் ரகுமானை ஓரங்கட்டிவிட்டார். காரணம் இந்த பாடலை போன்ற பல துள்ளிசை பாடல்களை வரிசையாக அவர் தந்துகொண்டிருப்பதே. தியானம் செய்தால் எனர்ஜி கூடும் , ரஜினி படம் பார்த்தால் எனர்ஜி கூடும் என்றெல்லாம் சொல்கிறார்கள். அதெல்லாம் உண்மையா இல்லையா என்று தெரியாது ஆனால் இந்த பாடலை கேட்டுபாருங்கள் கண்டிப்பாக உங்கள் எனர்ஜி அதிகாரிக்கும். ஆனால் பாடல் படமாக்கப்பட்ட விதம் கொஞ்சம் ஏமாற்றம்தான்.

 1. சர சர சாரகாத்து வாகை சூடா வா
    இந்த பாடலை முதலில் கேட்கும்போது எனக்கு பெரியதாக ஒரு ஈர்ப்பு இல்லை , ஆனால் முதன் முறை இந்த பாடலை விஷுவலாக பார்த்ததுமே பிடித்து விட்டது. இந்த பாடலை கேட்டதை விட பார்த்ததே அதிகம். தென் தமிழகத்தின் செம்மண் பிரதேசத்தை மழை பின்னணியில் இவ்வளவு குளுமையாக யாரும் படம் பிடித்ததில்லை.

 1. மங்காத்தா தீம் ம்யூசிக்
      
   பில்லாவுக்கு பிறகு ஒரு படத்திற்கு தீம் ம்யூசிக் மிக சரியாக பொருந்தி வந்திருப்பது மாங்காத்தாவுக்குதான்.. என்னை கேட்டால் பில்லா தீம் ம்யூசிக்கை விட இது ஒருபடி மேல். தீம் ம்யூசிக் அந்த படத்தின் ட்ரீட்மெண்ட்டிற்க்கு அப்படியே ஒத்துப்போக வேண்டும். அப்படி அமைந்துவிட்டால் படத்துக்கு அதுவே பெரிய பலமாக அமைந்துவிடும். மங்காத்தாவில் இது கச்சிதமாக அமைந்திருக்கிறது. படத்தோடு பார்க்கும் போது நம் நரம்பில் வயலின் வாசிப்பதை போல ஒரு கிளர்ச்சியை உருவாக்கியது இந்த தீம் ம்யூசிக். இதை ஹெட் போனில் கேட்டுக்கொண்டே ஃபோர் வேயில் பைக் ஓட்டினால் உங்களை அறியாமலே ஸ்பீடோமீட்டர் நூறை தாண்டும் அபாயம் இருப்பதால் பைக் ஓட்டும் போது இதை கேட்காமல் இருப்பது நலம்..


 1. வாடி வாடி கியூட் பொண்டாட்டி ஒஸ்தி
      சிம்பு எழுதி சிம்புவே பாடி இருக்கும் ஒரு பாடல் கேட்பதற்க்கு  நன்றாக வந்திருக்கிறது என்பது உண்மையிலேயே  மிக பெரிய அதிசயம்தான். புது கணவன் தன் மனைவியை எப்படியெல்லாம் பாசமாக கவனிப்பேன் என்று பாடுவதாக வரிகள் அமைந்திருக்கும் பாடல். புதுசாக திருமணம் ஆகியிருப்பதாலோ என்னவோ எனக்கு இந்த பாடல் மிகவும் பிடித்துவிட்டது.

 1. காதல் என் காதல் மயக்கம் என்ன
        தனுஷ் & செல்வராகவனின் கரகர கட்டை குரல் , படத்தில் இந்த பாடலின் மொக்கையான placement என்று சில சொதப்பல்கள் இருந்தாலும் , வழக்கமான செல்வராகவனின் காதல் தோல்விபாடல்களில் இருக்கும் திமிர் கலந்த சோகமே இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது.


 இந்த வருடம் நான் அதிக முறை பார்த்த படம் தலையோட மங்காத்தாதான்... கண்டிப்பாக பத்து முறைக்கும் மேல் பார்த்திருப்பேன். பத்து தடவையும் தலைக்காக மட்டுமே..

இந்த வருடம் வந்த படங்களில் எனக்கு பிடித்த மூன்று  படங்கள்

 1. மங்காத்தா
           

     இந்த வருடத்தின் மிக பெரிய வெற்றிபடம், அதிக வசூலை குவித்ததும் இந்த படம்தான். ரஜினி தவிர வேறு எந்த நடிகனாலும் நினைத்து பார்க்க முடியாத கதாபாத்திரம் விநாயக் மாதவன். அர்ஜூனின் மனைவியை கடத்தி அவரை வைத்தே வைபவ்வை போட்டுதள்ளும் சீனில் கடைசியாக போனில் ஸ்டைலாக loveya என்று சொல்லுவாரே .. சவாலாகாவே கேட்கிறேன் வேறு எந்த நடிகனுக்கு (ரஜினி தவிர) அந்த ஸ்டைல் வரும்? மதுரையை தாண்டிய தென் தமிழகம் தலயோட வசூல் கோட்டை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்த படம் இது. ரஜினிக்கு பிறகு 200 சதவிகித ஒபெனிங்க் காட்டும் ஒரே ஹீரோ தலதான் . சந்தேகம் இருப்பவர்கள் மதுரை , விருதுநகர் , ராமநாதபுரம் , திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் ஏதாவது ஒரு திரையரங்கில் பில்லா 2 ஒபெனிங்க் ஷோ பார்த்து தெளிந்து கொள்ளலாம். Thala we impressed.. give us more… 1. வாகை சூட வா
           தமிழில் இது போன்ற படங்கள் வருவது மிகவும் அபூர்வம். வேலாயுதம் , ஏழாம் அறிவு போன்ற மொக்கைகளை விளம்பரத்தை நம்பி பார்க்கும் நாம் , கல்வியின் அவசியத்தை சொன்ன இந்த படத்தை பார்க்காமல் விட்டதால்  இனிமேல் இது போன்ற படங்களை எடுக்கும் தைரியம்  யாருக்கும் வராது என்பது வருத்தமான விஷயமே. 1. ஆரண்யகாண்டம்
               படத்தின் ஆரம்பத்தில் ஒரு கிழவன் 25 வயது பெண்ணை புணர்ந்து கொண்டிருப்பான், ஒரு கட்டத்தில் அவனால் இயங்கமுடியாமல் போக வெறுப்பில் அவளை அடித்துவிடுவான். உன்னால முடியலைனா என்னைய ஏன் அடிக்கிற என்று அவள் அழும்  அந்த காட்சியில் அட வித்தியாசமா இருக்கே என்று ஆர்வமாய் பார்க்க ஆரம்பித்தேன். இறுதி வரை ஆர்வமும் குறையவில்லை திரையில் வித்தியாசமான காட்சியமைப்புகளும் குறையவில்லை. சில காட்சிகளில் படம் கொஞ்சம் போர் அடித்தாலும் படம் பார்க்கும் போது நமக்கு கிடைக்கும் புது புது அனுபவங்களுக்காக பொறுத்து கொள்ளலாம்.

 1. காஞ்சனா
               நல்ல பொழுதுப்போக்கு கதையில் திரைக்கதையும் , காமெடியும் கைகொடுத்தால் பெரிய ஹீரோக்கள் மட்டும் இல்லை நான் நடிச்சாகூட மக்கள் குடும்பத்தோட வந்து ரசிப்பார்கள் என்று லாரன்ஸ் நிரூபித்த படம். நீண்ட நாளுக்கு பிறகு கோவைசரளா காமெடியில் கலக்கிய படம், தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு பேய் படத்தை குடும்பம் குடும்பமாக சென்று பார்த்த படம் என்று இந்த படத்தை பற்றி நிறைய கூறலாம். எல்லாவற்றிக்கும் மகுடம் வைத்தார் போன்ற ஒரு விஷயம் மதுரையிலும் , திருச்சியிலும் இந்த வருடம் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் இதுதான்.
 இதை தவிர்த்து முத்துக்கு முத்தாக , எங்கேயும் எப்போதும் போராளி , மயக்கம் என்ன போன்ற படங்கள் கொடுத்த காசுக்கு குறைவில்லாமல் ரசிக்க வைத்த படங்கள்.

இந்த வருடம் தியேட்டரில் கதற கதற மூன்று மணிநேரம் அடிவாங்கிய படங்கள்,

 1. நடுநிசி நாய்கள் – தமிழ் சினிமாவின் முதல் திகில் படம் இதுதான் என்று இந்த படத்தின் இயக்குனர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் . ஆனால் படத்தை பார்த்தால் அவர் தமிழின் முதல் செக்ஸ் படம் எடுக்க முயற்சி செய்தது  போலதான் இருந்தது.
 1. மாப்பிள்ளை இந்த படத்தை பாத்துட்டுதான்  ரஜினி ஊருக்குள்ள எவ்வளவோ நல்ல மாப்பிளைங்க இருக்கும்போது இவனை ஏன் நாம மாப்பிளையா செலக்ட் பண்ணுனோம்னு   பீல் பண்ணி பீல் பண்ணி உடம்புக்கு முடியாம போயி ஆஸ்பத்திரியில படுத்துகிட்டாறு போல... என்னா மொக்கைடா சாமி... தமிழ் சினிமாவின் ஆக சிறந்த பத்து மொக்கைகளை லிஸ்ட் எடுத்தால் அதில் இந்த படம் போட்டியே இல்லாமல் இடம் பிடிக்கும்.
 1. ரௌத்திரம் சென்னைக்கு போனா பீச்ச பாத்தமா , அண்ணா சமாதி எம்‌ஜி‌ஆர் சமாதிய சுத்தி பாத்தோமா , ஏதாவது ஏ‌சி பாருக்கு போயி தண்ணியடிச்சமான்னு இல்லாம காசி தியேட்டருக்கு போயி இந்த படத்த பாத்தது என் தப்புதான். ஆனால் நான் பண்ணுண தப்புலையும் ஒரு நல்லது நடந்திருக்கு , இந்த படம் பாத்த எஃபக்ட்லதான்  ஜீவாவோட அடுத்த படம் வந்தான் வென்றான் போஸ்டர  கூட பாக்காம தப்பிச்சிட்டேன்.
4. எங்கேயும் காதல் ராஜகுமாரனுக்கு ஒரு விண்ணுக்கும் மண்ணுக்கும்னா , பிரபு தேவாவுக்கு இந்த எங்கேயும் காதல். ஹாரிஸ் ஜெயராஜுக்கு எந்த படத்துக்கு எப்படி பாட்டு போடணும்னு தெரியல  , ரெண்டு மூணு நல்ல ட்யூன இந்த படத்துல போட்டு வேஸ்ட் பண்ணிட்டார் . அவரை நம்பி இந்த படத்தை பார்க்க வந்தவர்கள் விட்ட சாபமெல்லாம் அவரைதான் சேரும். பாஸ் நல்ல படத்துக்கு காப்பி அடிச்சி நல்ல பாட்டா போடுங்க , இந்த மாதிரி மொக்கை படத்துக்கு ஆதவன் , ஏழாம் அறிவு மாதிரி உங்க ஸ்டைல் பாட்ட போட்டு கும்மிடுங்க...


ஆளாளுக்கு விருது கொடுக்குராணுக , இதோ நானும் என் பங்குக்கு இவனுகளுக்கெல்லாம் விருது கொடுக்க போறேன்1.     நாம் தமிழர் விருது திருக்குறளையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக தமிழரின் பெருமையை தூக்கி நிறுத்திய உதயநிதி ஸ்டாலின் , முருகதாஸ் , சூரியா மூவருக்கும்

2.  நாம் இளிச்சவாயர்கள் விருது முருகதாஸை நம்பி முதல் நாளே படத்தை தியேட்டரில் சென்று பார்த்து நொந்த அனைவருக்கும் .

3. சிறந்தசங்கூதுபவர்” விருது வேலுஊஊஊஊஊ வேல்ல்ல்ல்ல்ல்லாயுதம் என்று தன் பெயரிலேயே சங்கு ஊதி  காட்டிய இளைய தளபதிக்கு.  

4.        சிறந்த ஜெராக்ஸ் மெஷின் விருது விஜய்ங்கிற பேருக்கும் இந்த விருதுக்கும் என்ன சம்பந்தம்னு தெரியவில்லை. வழக்கமாக இளைய தளபதி விஜய் வாங்கும் இந்த விருதை இந்த முறை I am sam படத்தை ஜெராக்ஸ் எடுத்த இயக்குனர் விஜய் வாங்குகிறார்.

5.        சிறந்த டிரைவர் விருது ரயிலையே டிஸ்க் பிரேக் போட்டு நிறுத்திய இளையதளபதி டாக்டர் விஜய் அவர்கள் 
  

கடைசியாக ஒரு தல ரசிகனாக அவருக்கு அவரின் ரசிகர்கள் சார்பாக என்னுடைய வாழ்த்து இதோ 


இயக்கத்தை கலைத்தாலும் எங்கள் இதயத்தில் நிலையாய் நிற்பவரே.. உண்மைதான் தலைவா...   எங்கள் இதயத்தில் என்றென்றும் நீதான்... 

அனைவருக்கும் அட்வான்ஸ்  கிருஸ்துமஸ் மற்றும் புது வருட வாழ்துக்கள்.

Friday, December 9, 2011

வீரு - பவர் ஃபுல்லு
சினிமாவுக்கு தல அல்டிமேட் ஸ்டாரு
கிரிக்கெட்டுக்கு தல அல்டர்னேட் இல்லாத நீதான் வீரு...

இருநூறை தாண்டியும் ஹவுஸ்புல்லா ஓடுனா அது 
சூப்பர்ஸ்டார்தான் பாரு  
இருநூறை தாண்டியும் அசராம ஆடுனா  அது 
சூப்பர்மேன் நீதான் வீரு...


நேத்து ரிலீஸ் ஆச்சு ஒஸ்தி ... அதுதான் உலகமகா நாஸ்தி ...
நேத்து நீ போட்ட குஸ்தி... அதுதான் கிரிக்கெட்டுக்கே ஒஸ்தி...

உன்னோட குருதான் சச்சின்னு
நீ அவரையே மிஞ்சின சிஷ்யனு...

குங்க்ஃபூனா அதுக்கு போதி தருமரு...
கிரிக்கெட்டுனா அதுக்கு இனி நீதான் தலைவரு...

அதிரடி பேட்டிங்க்ல நீதான் தல கிங்கு ..
மத்தவனெல்லாம் ஊறிபோன
மெரினா பீச்சு சங்கு...

கடைசி மூணு மேச்ல நீ போட்ட டக்குள , உன் ரசிகன் என் நெஞ்சு ஆக்கிபோச்சு டொக்கு... நேத்துதான் புரிஞ்சது உன் டி‌என்‌ஏவ தூண்டிவிட இவ்வளவு நாளா உன்னை ஊரவச்சிருக்கானுக... போதிதருமர்கிட்ட மாட்டுன டோங்க் லி கணக்கா  நீ அவனுங்களை தொவச்சி தொங்கவிட்டுட தல... யப்பா  ஆராய்ச்சியாளர்களே அந்த குங்க்ஃபூ மாஸ்டரதான் கோட்டவிட்டுட்டீங்க , இந்த கிரிக்கெட் மாஸ்டரையாவது கப்புன்னு பிடிச்சிக்கோங்கப்பா... இனிமே இன்னொரு சேவாக்கை கடவுளாலையே படைக்க முடியாது ... என்ன இன்னும் இருநூறு வருசத்துக்கு அப்புறம் முருகதாசின் கொள்ளுபேரன் ஷேவாக்கின் டி‌என்‌ஏவை ஹீரோவுக்கு தூண்டிவிட்டு ஆஸ்ட்ரேலியாவிலிருந்து வரும் வில்லனை பேட்டாலயே அடிச்சி கொல்றது மாதிரி படம் எடுக்காமல் இருக்கணும்...   


                  (பேட் மட்டும் இல்ல.. நானும் ஹீரோதாம்பா ) 

தல சேவாக் இன்னும் படைக்க வேண்டிய சாதனைகள் ஏராளம்... வெஸ்ட் இண்டீஸை தொங்க விட்டதை போல , இந்த இலங்கையையும் , ஆஸ்ட்ரேலியாவையும் ஒருமுறை உரித்து தொங்க விட்டால் என்னை போன்ற கோடானுகோடி கிரிக்கெட் ரசிகனின் ஆத்மா இறப்பதற்க்கு முன்னரே சாந்தி அடையும்...   

டெஸ்ட்ல ஷேவாக்கின் அதிகபட்சம் 319 .. இதுதான் சர்வதேச அரங்கில் ஒரு இந்திய வீரரின் அதிகபட்ச ஸ்கோர் ...

ஒன்டேல ஷேவாக்கின் அதிகபட்சம் 219.. இதுதான் சர்வதேச ஆட்டங்களில் உலக அளவில் ஒரு கிரிக்கெட் வீரரின் அதிகபட்ச ஸ்கோர் ...

உச்சத்தில் உச்சம் தொடுவது என்பது இதுதானோ?    


Wednesday, December 7, 2011

டர்டி பிக்சர் - தோற்கடிக்கபட்ட பெண்களின் கதை

பிரபல பதிவர் ஒருவர் திறந்த மார்பையும் , வெளிறிய இடைகளையும் பார்பதற்காக ஆசையாசையாக வந்த ஆண்களை சிலுக்கு செருப்பால் அடித்திருக்கிறாள் என்று இந்த படத்தை பற்றி எழுதியிருந்தார்... உண்மைதான் செருப்பில் கொஞ்சம் சாணியையும் கரைத்து அடித்திருக்கிறார்கள்... நானும் வித்யா பாலனை உரித்துக்காட்டியிருப்பார்கள் என்ற ஆசையில்தான் படம் பார்க்க சென்றிருந்தேன்... அதனால் எனக்கும் அந்த செருப்படி பலமாக விழுந்தது... நான் வசிக்கும் தெருவில் பரமு என்ற பெயரில் ஒரு அக்கா இருந்தாள்... பெண்ணாக பிறந்திருந்தாலும் ஆண்களுக்கான அத்துணை பழக்க வழக்கங்களும் அவளுக்கும் உண்டு... பீடி குடிப்பாள் , தண்ணி அடித்து விட்டு தெருவில் சலம்புவாள்... எங்கள் ஊருக்கே கஞ்சா சப்ளை அவள்தான்... கிட்டதட்ட  எங்கள் தெருவில் ஒரு பொம்பளை ரவுடியாகத்தான் அவள் வலம் வந்தாள்...  ஆனால் எந்த ஆணையும் தன்னை நெருங்க விட மாட்டாள். அவளுக்கு ஆண்கள் என்றாலே ஏதோ ஒருவித இளக்காரம் ...  அருகில் இருக்கும் ஒரு மில்லில் கூலி வேலை செய்து வந்தாள் ... தன்னுடைய உடல் பசிக்கு அந்த மில்லில் வேலை செய்யும் அப்பாவி சிறுவர்களை பயன்படுத்தி கொள்வாள்... அந்த  சிறுவர்களிடம் மட்டும் அவள் மிகவும் பாசமாக இருப்பாள்... அவள் வீட்டுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் செல்லும் உரிமை அவர்களுக்கு மட்டுமே உண்டு ... அவள் சம்பாதிக்கும் பணத்தையும் பெரும்பாலும் இவர்களுக்கே செலவளிப்பாள்... சமூகம் பெண்களுக்கு  என்று விதித்திருந்த எந்த கட்டுப்பாட்டுக்ககுள்லும் சிக்காமல்  வாழ்ந்து வந்தாள் ... விதி அவள் வாழ்க்கையில் காதல் ரூபத்தில் விளையாடியது... அதே தெருவை சேர்ந்த ஒருவனுடன் அவளுக்கு எப்படியோ ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு ,  அவனுடன் ஊரை விட்டே ஓடிவிட்டாள்..  


அவள் உடல் வனைப்பை போலவே அவளை  பற்றிய எங்களின் நினைவுகளும் கொஞ்சம் கொஞ்சமாக காலத்தில் கரைந்து விட்டிருந்தது  நீண்ட நாட்களுக்கு பின்னர் கையில் ஒரு குழந்தையோடு அவள் ஊருக்கு வரும் வரை , இந்த முறை அவளிடம் நிறைய மாற்றங்கள் அவளிடம் இருந்த ஆண்மைதனம் முற்றிலும் அழிந்துவிட்டிருந்தது , சண்டை சேவலாயாய் திமிறியிருந்த அவள் உடல் , நனைந்த கோழியாய் ஓடிங்கிவிட்டிருந்தது. பிறகுதான் தெரிந்தது கையில் ஒரு குழந்தையை கொடுத்துவிட்டு அவன் ஓடிவிட குழந்தையையும் தன்னையும் காப்பாற்றி கொள்ள வேறு வழியில்லாமல் தன் உடலை அடமானம் வைத்து பிழைத்து கொண்டிருக்கிறாள் என்று... முன்பு அவளை கண்டாலே பயந்து ஓடிய எங்கள் தெரு ஆண்களில் பலர் அவள் ஊரில் தங்கியிருந்த அந்த ஒரு வாரத்தில் அவளை ஆசைதீர அனுபவித்தார்கள்...  ஒருவாரத்தில் அவள் சொல்லாமல் கொள்ளாமல் ஊரை காலி செய்து ஓடிவிட்டாள். எங்கள் தெரு பெண்கள்தான் ஐந்தாயிரமோ , பத்தாயிரமோ கொடுத்து அவளை விரட்டிவிட்டனர் என்று பிறகு கேள்விபட்டேன்...


கரைகளை உடைத்து பாயும் காட்டாற்றின் பயணம் போலத்தான் இப்படிபட்டவர்களின் வாழ்க்கையும்... விதிகளை மீறும் ஆண்கள் என்றாலும் சரி பெண்கள் என்றாலும் சரி அவர்கள் வாழ்க்கை முழுமையடைய இந்த சமூகம் விடுவதில்லை... இந்த படத்திலும் அப்படிபட்ட பெண்களின் வாழ்க்கையைதான் செல்லுலாய்டில் பதிவு செய்திருக்கிறார்கள். சினிமா என்றாலே வியாபாரம் என்று ஆகிவிட்ட இந்த காலகட்டத்தில் அந்த பெண்ணை ஒரு நடிகையாக காட்டினால் மட்டுமே வெகுஜன மக்களுக்கு ஒரு சிறந்த எண்டர்டெயின்மெண்டாக அது அமையும்... ஒரே கல்லில் இரண்டு மாங்காய் குறிபார்த்து இரண்டையும்  கச்சிதமாக அடித்திருக்கிறார்கள்.  இந்த படத்தில் ஒரு வசனம் வரும் நீ ஒருத்தி இல்லாட்டி ஒரு பெண்ணால இப்படியும் வாழ முடியும் என்று தெரியாமல் போயிருந்திருக்கும் என்று.. அந்த வசனம் 80களின் சினிமா ரசிகனுக்கு சிலுக்கையும் , என்னை போன்றவர்களுக்கு பரமுவையும் , இன்னும் வேறு சிலரையும் ஞாபகபடுத்தி செல்லும் என்பதால் இதை சில்க் சிமிதாவின் கதை என்று சொல்லுவதை விட சமூகத்தால் தோற்கடிக்கபட்ட பெண்களின் கதை என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும்...

கொசுறு:

வேலாயுதம் பற்றிய என்னுடைய பதிவில்,  முதல் பாதியில் விஜயும் அவர் தங்கையும் சேர்ந்து போடும்  மொக்கைகளை என்னால் காமெடி என்று ஏற்று கொள்ள முடியவில்லை என்று எழுதியிருந்தேன் , ஆனால் சிலர் என்னை பின்னூட்டத்தில் மானாவாரியாக  திட்டியிருந்தார்கள் , இப்பவும் சொல்கிறேன் அந்த மொக்கைகளை என்னால் காமெடி என்று சத்தியமாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை , வேண்டுமென்றால் காமெடி என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள உங்களுக்கு போராளி படத்தின் முதல் பாதியை பரிந்துரைக்கிறேன், சந்தானம் இல்லாமலே படம் பார்க்கும் எல்லாரையும் இடைவிடாமல் சிரிக்க வைத்திருக்கிறார் சமுத்திரகனி... வேலாயுதமே ஹிட் என்கிறார்கள் , அப்படி பார்த்தால் போராளி சூப்பர் ஹிட்தான்...

Monday, December 5, 2011

ராஜாவின் பார்வை - நிறைய சினிமா கொஞ்சம் அரசியல்


கடந்த இரண்டு வாரங்களாக கொஞ்சம் அதிகப்படியாக ஆணிகள் புடுங்க வேண்டியிருந்ததாலும்  அதில் சில ஆணிகளை மீண்டும் புடிங்கிய இடத்திலேயே அறைய வேண்டியது வந்ததாலும் பதிவுலகம் பக்கம் அதிகம் தலைக்காட்ட முடியவில்லை, அதனால் கடந்த இரு வாரங்களில் நான் தவற விட்ட சில பதிவுலக தருணங்களின்/விசயங்களின் தொகுப்பே இந்த பதிவு...

மயக்கம் என்ன?இதுவரை விளிம்பு நிலை மனிதர்களின் கொண்டாட்டமான வாழ்க்கையை பாலா போன்ற சில இயக்குனர்கள் திரையில் விழித்திருந்தாலும் முதல் முறையாக செல்வாதான் மேல்தட்டு மனிதர்களின் விளிம்பு நிலை வாழ்க்கையை இந்த படத்தில் காட்டியிருக்கிறார்... செல்வராகவனின் சிறந்த படைப்பு என்று இதை சொல்லமுடியாவிட்டாலும் இதுவரை அவர் தந்த படங்களில் சிறந்த படம் என்று தைரியமாக கூறுவேன் .. இப்படி சொல்ல காரணம் வருங்காலங்களில் செல்வா இதைவிட சிறந்த படங்களை தருவார் என்ற என்னுடைய நம்பிக்கைதான் ... தமிழ் சினிமாக்களில் யதார்த்த படைப்புகள் என்று சொல்லபட்ட பல படங்கள் உண்மையில் இயல்பை விட்டு வெகுதூரம் விலகியே இருந்திருக்கின்றன... ஆனால் நான் கண்ட தமிழ் சினிமாக்களில்  பல காட்சிகளில் யதார்த்ததின் அருகே நம்மை கூட்டி சென்ற படம் இதுதான்... ஏதோ நாமே கார்த்திக் ஸ்வாமிநாதனின்  வாழ்க்கையை அவன்  பின்னாலயே சென்று படம் பிடித்ததை போன்ற ஒரு கதையோட்டமே படத்தின் பெரிய பலம் , ஆனால் வணிகரீதியாக படத்திற்கு அதுவே மிகப்பெரிய பலவீனமும் கூட... ஆடுகளம் படத்திற்கு தான் விருது வாங்கிய பாவத்தை மயக்கம் என்ன மூலம் சரிகட்டியிருக்கிறார் தனுஷ்... படம் முடிந்து வீட்டிற்க்கு செல்லும் கேப்பில் ஒரு தம் அடித்து விட்டு செல்லும் நோய் எனக்கு பல வருடங்களாக  உண்டு, ஆனால் இந்த படம் முடிந்ததும் என் மனைவிக்கு பிடிக்காத புகையை ருசிக்க என் மனம் இடம்கொடுக்கவில்லை... எந்த ஒரு படமும் அதிகபட்சம் இரண்டு மணிநேரம்தான் நம் மனதில் ஒரு பாதிப்பை உண்டு பண்ணும்... அந்த இரண்டு மணிநேரத்தில் அது நம்மை எப்படி யோசிக்கவைக்கிறது என்பதில்தான் இயக்குனரின் வெற்றி இருக்கிறது... அந்த வகையில் செல்வா ரிச்சா பாத்திரத்தை திறமையாக கையாண்டு வெற்றி கண்டிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்... மயக்கம் என்ன கண்டிப்பாக திருமணம் ஆன/ஆக போகிற எல்லா பெண்களும் பார்த்தே தீர வேண்டிய படம்...Y this kolaveri?

தமிழ்நாட்டில் மட்டும் இல்லை , இந்தியா முழுவதும் , உலகம் முழுவதும் ஏன் செவ்வாய் கிரகத்தில்கூட இந்த பாடல் பயங்கர ஹிட்டாம்... மைக்கேல் ஜாக்சன் கூட சொர்க்கத்தில் பாசதலைவனுக்கு பாராட்டு விழாவில்  இந்த பாடலுக்குதான் ஆட்டம் போட்டு கொண்டிருக்கிறாராம்...  


ஆனால் எங்க ஊர் பக்கம் யாருக்கும் இதைப்பற்றி தெரியவே இல்லை... ஏதோ தினதந்திக்காரன் ஒரு பெட்டி செய்தி போட்டதால் அதை  படித்த சிலருக்கு மட்டும் இப்படி ஒரு பாடல் வந்திருக்கிறது என்று தெரியும்... ஆனால் அவர்களும் இந்த பாடலை கேட்டது இல்லையாம்... பிறகு எப்படி அதை ஹிட் பாடல் என்று அறிவித்தார்கள் என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை, சரி எதையும் கேட்காமல் ஒரு முடிவுக்கு வரக்கூடாதே என்று யூ ட்யூப்பில் அந்த பாடலை கேட்டேன் சாரி கண்டேன்... முதல் முறை கேட்டபொழுது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவே இல்லை , சரி தனுஷ் எழுதிய பாடல் அவரை மாதிரி பாக்க  பாக்கதான்  நமக்கு பிடிக்கும் போல என்று எண்ணி குறைந்தது பத்து தடவையாவது பார்த்திருப்பேன் , தனுஷ் மாதிரியே எத்தனை தடவை பார்த்தாலும் பிடிக்கவே இல்லை... கண்டிப்பாக அந்த பாடல் கொஞ்சம் கூட வொர்த் கிடையாது பாஸ்.. பிறகு எப்படி பிரபலமடைந்தது ... ரொம்ப சிம்பிள் பாஸ் , விளம்பரம் ...

முன்பெல்லாம் தென் தமிழகத்தை மட்டும் எடுத்து கொண்டால் மதுரையில் ரஜினி படங்கள் நான்கு திரையரங்கிலும் , கமல் , அஜீத் விஜய் படங்கள் மூன்று திரையரங்கிலும் மற்ற நடிகர்களின் படங்கள் இரண்டு திரையரங்கிலும் எடுக்கபடும்... படம் நன்றாக இருந்தால் மட்டுமே அடுத்தடுத்து மக்கள் பார்க்க வருவார்கள் வசூலை அள்ளமுடியும் .. ஆனால் சன் நெட்வொர்க் எப்பொழுது சினிமா வியாபாரத்தில் இறங்கியதோ அன்றில் இருந்து எந்த திரைப்படம் என்றாலும் அதிக அரங்குகளில் இறக்கபடுகின்றன... அவர்கள் டிவியில் நொடிக்கொரு முறை விளம்பரம் ஒளிபரப்பி ஜனங்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி அனைவரையும் முதல் இரண்டு நாட்களிலேயே படத்தை பார்க்க வைத்து ஓரளவு வசூலை தேத்தி விடுகின்றனர்... எந்திரனில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சந்தைபடுத்தும் முறை ரா ஒன்னில் உச்சத்தை தொட்டது... இப்படி அதிக திரையரங்குகளில் படத்தை போட்டு அதிகபடியான விளம்பரங்கள் மூலம் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிராவிட்டால் ரா ஒன் என்னும் மொக்கை படத்தால் 180 கோடி வசூலித்திருக்க முடியாது... ஷாருக்கின் முந்தைய பெரிய பிளாக் பஸ்டர் படங்களே 2 வருடங்கள் தொடர்ந்து ஓடினாலும் இவ்வளவு வசூலித்திருக்க வாய்ப்பில்லை... இந்த வியாபார முறை எவ்வளவு பெரிய ஹிட் என்பதை ரா ஒன் மூலம் புரிந்துகொள்ளலாம்... இப்பொழுது எல்லா ஹீரோக்களும்  இதே வியாபார முறையை பின்பற்ற ஆரம்பித்து விட்டனர்... அதன் நீட்சிதான் இந்த y this kolaveri பாடலும் அது பிரபலமாக்கபட்ட விதமும்... இதற்க்கு முன்னர் பட்டிதொட்டிகளில் எல்லாம் பட்டைய கிளப்பிய ஜெமினியின் போடு , காதலில் விழுந்தேன் நாக்கு முக்கா போல இந்த பாடல் தானாக ஹிட் ஆகவில்லை , படத்தை பற்றிய எதிர்பார்ப்பை உருவாக்கவே ஹிட் ஆக்கபட்டிருக்கிறது என்று எண்ணுகிறேன்... படம் வெளிவரும் பொது இந்த பாடல் படத்தின் பிரதான விளம்பரமாக சந்தைபடுத்தபடும்.. நாமும் வழக்கம் போல பாடலை மனதில் வைத்து படத்திற்கு சென்று , பின்னர் புலம்ப வேண்டியதுதான்...    இம்சை அரசன் படத்தில் ஒரு வசனம் வரும் விளம்பரபடுத்தினால் நம் மக்கள் மாட்டு மூத்திரத்தை கூட இளநீர் என்று நம்பி வாங்கி குடிப்பார்கள் என்று... 7 ஆம் அறிவுக்கு போடப்படும் சில விளம்பரங்களையும் , இந்த y this kolaiveriயையும் பார்க்கும் போது  அப்படிதான் தோணுகிறது?

கனிமொழிஈஈ....  


ஐய்யா சாமீகளா? அக்கா ஜாமீன்லதான் வந்திருக்கு அதுக்கே இப்படியா? நாளைக்கே அக்கா வழக்குல இருந்து விடுதலை ஆகிடுச்சினா இவனுங்க எப்படியெல்லாம் பேனர் வப்பாங்கன்னு நெனச்சாலே கண்ணகட்டுது....    

மகாகவி

கொஞ்ச நாளா இவரு ஏதோ சூனியம் வச்சது மாதிரிதான் பேசிக்கிட்டு இருக்காரு... அவரோட புஸ்தக வெளியீடு நடக்க போற  தேதி நெருங்க நெருங்க அவருக்கு வச்ச சூனியமும் நல்லா உக்கிரமா வேலைய காட்டுது போல... இல்லைனா சிம்புவை மகாகவி பாரதிக்கு இணையா எழுதுவாரா? இங்க போயி படிங்க மக்களே அந்தகாமெடிய... இவரு சின்ன வயசுல நினைத்த வரிகளை சிம்பு இப்ப பாடியதால் சிம்பு மகாகவியாம்... என்ன சொல்ல வராருன்னு புரியுதா மக்களே.. அவரு சின்ன வயசுலையே மகாகவி ஆகிட்டாராம்... பாரதிக்கு நேர்ந்த அசிங்கம்.... 

LinkWithin

Related Posts with Thumbnails