Followers

Copyright

QRCode

Friday, December 16, 2011

2011 தமிழ் சினிமா ஆடுகளம் முதல் ஒஸ்தி வரை

 எனக்கும் சினிமாவுக்கும் எந்தவிதமான நேரடி தொடர்புகளும் கிடையாது , ஆனால் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு கணிசமான தொகையை சினிமாவும் சினிமா சார்ந்த பிற ஊடகங்களுக்கும் செலவு செய்யும் லட்சகணக்கான தமிழர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் சினிமாவை பற்றி விமர்சிக்கும் உரிமை எனக்கும் உண்டு என்பதால் இந்த வருடம் வெளிவந்த தமிழ் சினிமாக்களை பற்றிய என் பார்வையை இங்கு பதிவிடுகிறேன்.

இந்த வருடம் என்னை கவர்ந்த ஐந்து பாடல்கள் அதே வரிசையில்  (இது என்னுடைய ரசனை மட்டுமே)


 1. no money no money no honeyda - வானம்
    முன்பு நான் ரகுமானின் தீவிர ரசிகன். என் பதின்ம வயதுகளில் ரகுமானின் பாடல்களை தவிர வேறு எந்த இசையமைப்பாளரின் பாடல்களையும் கேட்காமலே இருந்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது யுவன் ரகுமானை ஓரங்கட்டிவிட்டார். காரணம் இந்த பாடலை போன்ற பல துள்ளிசை பாடல்களை வரிசையாக அவர் தந்துகொண்டிருப்பதே. தியானம் செய்தால் எனர்ஜி கூடும் , ரஜினி படம் பார்த்தால் எனர்ஜி கூடும் என்றெல்லாம் சொல்கிறார்கள். அதெல்லாம் உண்மையா இல்லையா என்று தெரியாது ஆனால் இந்த பாடலை கேட்டுபாருங்கள் கண்டிப்பாக உங்கள் எனர்ஜி அதிகாரிக்கும். ஆனால் பாடல் படமாக்கப்பட்ட விதம் கொஞ்சம் ஏமாற்றம்தான்.

 1. சர சர சாரகாத்து வாகை சூடா வா
    இந்த பாடலை முதலில் கேட்கும்போது எனக்கு பெரியதாக ஒரு ஈர்ப்பு இல்லை , ஆனால் முதன் முறை இந்த பாடலை விஷுவலாக பார்த்ததுமே பிடித்து விட்டது. இந்த பாடலை கேட்டதை விட பார்த்ததே அதிகம். தென் தமிழகத்தின் செம்மண் பிரதேசத்தை மழை பின்னணியில் இவ்வளவு குளுமையாக யாரும் படம் பிடித்ததில்லை.

 1. மங்காத்தா தீம் ம்யூசிக்
      
   பில்லாவுக்கு பிறகு ஒரு படத்திற்கு தீம் ம்யூசிக் மிக சரியாக பொருந்தி வந்திருப்பது மாங்காத்தாவுக்குதான்.. என்னை கேட்டால் பில்லா தீம் ம்யூசிக்கை விட இது ஒருபடி மேல். தீம் ம்யூசிக் அந்த படத்தின் ட்ரீட்மெண்ட்டிற்க்கு அப்படியே ஒத்துப்போக வேண்டும். அப்படி அமைந்துவிட்டால் படத்துக்கு அதுவே பெரிய பலமாக அமைந்துவிடும். மங்காத்தாவில் இது கச்சிதமாக அமைந்திருக்கிறது. படத்தோடு பார்க்கும் போது நம் நரம்பில் வயலின் வாசிப்பதை போல ஒரு கிளர்ச்சியை உருவாக்கியது இந்த தீம் ம்யூசிக். இதை ஹெட் போனில் கேட்டுக்கொண்டே ஃபோர் வேயில் பைக் ஓட்டினால் உங்களை அறியாமலே ஸ்பீடோமீட்டர் நூறை தாண்டும் அபாயம் இருப்பதால் பைக் ஓட்டும் போது இதை கேட்காமல் இருப்பது நலம்..


 1. வாடி வாடி கியூட் பொண்டாட்டி ஒஸ்தி
      சிம்பு எழுதி சிம்புவே பாடி இருக்கும் ஒரு பாடல் கேட்பதற்க்கு  நன்றாக வந்திருக்கிறது என்பது உண்மையிலேயே  மிக பெரிய அதிசயம்தான். புது கணவன் தன் மனைவியை எப்படியெல்லாம் பாசமாக கவனிப்பேன் என்று பாடுவதாக வரிகள் அமைந்திருக்கும் பாடல். புதுசாக திருமணம் ஆகியிருப்பதாலோ என்னவோ எனக்கு இந்த பாடல் மிகவும் பிடித்துவிட்டது.

 1. காதல் என் காதல் மயக்கம் என்ன
        தனுஷ் & செல்வராகவனின் கரகர கட்டை குரல் , படத்தில் இந்த பாடலின் மொக்கையான placement என்று சில சொதப்பல்கள் இருந்தாலும் , வழக்கமான செல்வராகவனின் காதல் தோல்விபாடல்களில் இருக்கும் திமிர் கலந்த சோகமே இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது.


 இந்த வருடம் நான் அதிக முறை பார்த்த படம் தலையோட மங்காத்தாதான்... கண்டிப்பாக பத்து முறைக்கும் மேல் பார்த்திருப்பேன். பத்து தடவையும் தலைக்காக மட்டுமே..

இந்த வருடம் வந்த படங்களில் எனக்கு பிடித்த மூன்று  படங்கள்

 1. மங்காத்தா
           

     இந்த வருடத்தின் மிக பெரிய வெற்றிபடம், அதிக வசூலை குவித்ததும் இந்த படம்தான். ரஜினி தவிர வேறு எந்த நடிகனாலும் நினைத்து பார்க்க முடியாத கதாபாத்திரம் விநாயக் மாதவன். அர்ஜூனின் மனைவியை கடத்தி அவரை வைத்தே வைபவ்வை போட்டுதள்ளும் சீனில் கடைசியாக போனில் ஸ்டைலாக loveya என்று சொல்லுவாரே .. சவாலாகாவே கேட்கிறேன் வேறு எந்த நடிகனுக்கு (ரஜினி தவிர) அந்த ஸ்டைல் வரும்? மதுரையை தாண்டிய தென் தமிழகம் தலயோட வசூல் கோட்டை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்த படம் இது. ரஜினிக்கு பிறகு 200 சதவிகித ஒபெனிங்க் காட்டும் ஒரே ஹீரோ தலதான் . சந்தேகம் இருப்பவர்கள் மதுரை , விருதுநகர் , ராமநாதபுரம் , திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் ஏதாவது ஒரு திரையரங்கில் பில்லா 2 ஒபெனிங்க் ஷோ பார்த்து தெளிந்து கொள்ளலாம். Thala we impressed.. give us more… 1. வாகை சூட வா
           தமிழில் இது போன்ற படங்கள் வருவது மிகவும் அபூர்வம். வேலாயுதம் , ஏழாம் அறிவு போன்ற மொக்கைகளை விளம்பரத்தை நம்பி பார்க்கும் நாம் , கல்வியின் அவசியத்தை சொன்ன இந்த படத்தை பார்க்காமல் விட்டதால்  இனிமேல் இது போன்ற படங்களை எடுக்கும் தைரியம்  யாருக்கும் வராது என்பது வருத்தமான விஷயமே. 1. ஆரண்யகாண்டம்
               படத்தின் ஆரம்பத்தில் ஒரு கிழவன் 25 வயது பெண்ணை புணர்ந்து கொண்டிருப்பான், ஒரு கட்டத்தில் அவனால் இயங்கமுடியாமல் போக வெறுப்பில் அவளை அடித்துவிடுவான். உன்னால முடியலைனா என்னைய ஏன் அடிக்கிற என்று அவள் அழும்  அந்த காட்சியில் அட வித்தியாசமா இருக்கே என்று ஆர்வமாய் பார்க்க ஆரம்பித்தேன். இறுதி வரை ஆர்வமும் குறையவில்லை திரையில் வித்தியாசமான காட்சியமைப்புகளும் குறையவில்லை. சில காட்சிகளில் படம் கொஞ்சம் போர் அடித்தாலும் படம் பார்க்கும் போது நமக்கு கிடைக்கும் புது புது அனுபவங்களுக்காக பொறுத்து கொள்ளலாம்.

 1. காஞ்சனா
               நல்ல பொழுதுப்போக்கு கதையில் திரைக்கதையும் , காமெடியும் கைகொடுத்தால் பெரிய ஹீரோக்கள் மட்டும் இல்லை நான் நடிச்சாகூட மக்கள் குடும்பத்தோட வந்து ரசிப்பார்கள் என்று லாரன்ஸ் நிரூபித்த படம். நீண்ட நாளுக்கு பிறகு கோவைசரளா காமெடியில் கலக்கிய படம், தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு பேய் படத்தை குடும்பம் குடும்பமாக சென்று பார்த்த படம் என்று இந்த படத்தை பற்றி நிறைய கூறலாம். எல்லாவற்றிக்கும் மகுடம் வைத்தார் போன்ற ஒரு விஷயம் மதுரையிலும் , திருச்சியிலும் இந்த வருடம் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் இதுதான்.
 இதை தவிர்த்து முத்துக்கு முத்தாக , எங்கேயும் எப்போதும் போராளி , மயக்கம் என்ன போன்ற படங்கள் கொடுத்த காசுக்கு குறைவில்லாமல் ரசிக்க வைத்த படங்கள்.

இந்த வருடம் தியேட்டரில் கதற கதற மூன்று மணிநேரம் அடிவாங்கிய படங்கள்,

 1. நடுநிசி நாய்கள் – தமிழ் சினிமாவின் முதல் திகில் படம் இதுதான் என்று இந்த படத்தின் இயக்குனர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் . ஆனால் படத்தை பார்த்தால் அவர் தமிழின் முதல் செக்ஸ் படம் எடுக்க முயற்சி செய்தது  போலதான் இருந்தது.
 1. மாப்பிள்ளை இந்த படத்தை பாத்துட்டுதான்  ரஜினி ஊருக்குள்ள எவ்வளவோ நல்ல மாப்பிளைங்க இருக்கும்போது இவனை ஏன் நாம மாப்பிளையா செலக்ட் பண்ணுனோம்னு   பீல் பண்ணி பீல் பண்ணி உடம்புக்கு முடியாம போயி ஆஸ்பத்திரியில படுத்துகிட்டாறு போல... என்னா மொக்கைடா சாமி... தமிழ் சினிமாவின் ஆக சிறந்த பத்து மொக்கைகளை லிஸ்ட் எடுத்தால் அதில் இந்த படம் போட்டியே இல்லாமல் இடம் பிடிக்கும்.
 1. ரௌத்திரம் சென்னைக்கு போனா பீச்ச பாத்தமா , அண்ணா சமாதி எம்‌ஜி‌ஆர் சமாதிய சுத்தி பாத்தோமா , ஏதாவது ஏ‌சி பாருக்கு போயி தண்ணியடிச்சமான்னு இல்லாம காசி தியேட்டருக்கு போயி இந்த படத்த பாத்தது என் தப்புதான். ஆனால் நான் பண்ணுண தப்புலையும் ஒரு நல்லது நடந்திருக்கு , இந்த படம் பாத்த எஃபக்ட்லதான்  ஜீவாவோட அடுத்த படம் வந்தான் வென்றான் போஸ்டர  கூட பாக்காம தப்பிச்சிட்டேன்.
4. எங்கேயும் காதல் ராஜகுமாரனுக்கு ஒரு விண்ணுக்கும் மண்ணுக்கும்னா , பிரபு தேவாவுக்கு இந்த எங்கேயும் காதல். ஹாரிஸ் ஜெயராஜுக்கு எந்த படத்துக்கு எப்படி பாட்டு போடணும்னு தெரியல  , ரெண்டு மூணு நல்ல ட்யூன இந்த படத்துல போட்டு வேஸ்ட் பண்ணிட்டார் . அவரை நம்பி இந்த படத்தை பார்க்க வந்தவர்கள் விட்ட சாபமெல்லாம் அவரைதான் சேரும். பாஸ் நல்ல படத்துக்கு காப்பி அடிச்சி நல்ல பாட்டா போடுங்க , இந்த மாதிரி மொக்கை படத்துக்கு ஆதவன் , ஏழாம் அறிவு மாதிரி உங்க ஸ்டைல் பாட்ட போட்டு கும்மிடுங்க...


ஆளாளுக்கு விருது கொடுக்குராணுக , இதோ நானும் என் பங்குக்கு இவனுகளுக்கெல்லாம் விருது கொடுக்க போறேன்1.     நாம் தமிழர் விருது திருக்குறளையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக தமிழரின் பெருமையை தூக்கி நிறுத்திய உதயநிதி ஸ்டாலின் , முருகதாஸ் , சூரியா மூவருக்கும்

2.  நாம் இளிச்சவாயர்கள் விருது முருகதாஸை நம்பி முதல் நாளே படத்தை தியேட்டரில் சென்று பார்த்து நொந்த அனைவருக்கும் .

3. சிறந்தசங்கூதுபவர்” விருது வேலுஊஊஊஊஊ வேல்ல்ல்ல்ல்ல்லாயுதம் என்று தன் பெயரிலேயே சங்கு ஊதி  காட்டிய இளைய தளபதிக்கு.  

4.        சிறந்த ஜெராக்ஸ் மெஷின் விருது விஜய்ங்கிற பேருக்கும் இந்த விருதுக்கும் என்ன சம்பந்தம்னு தெரியவில்லை. வழக்கமாக இளைய தளபதி விஜய் வாங்கும் இந்த விருதை இந்த முறை I am sam படத்தை ஜெராக்ஸ் எடுத்த இயக்குனர் விஜய் வாங்குகிறார்.

5.        சிறந்த டிரைவர் விருது ரயிலையே டிஸ்க் பிரேக் போட்டு நிறுத்திய இளையதளபதி டாக்டர் விஜய் அவர்கள் 
  

கடைசியாக ஒரு தல ரசிகனாக அவருக்கு அவரின் ரசிகர்கள் சார்பாக என்னுடைய வாழ்த்து இதோ 


இயக்கத்தை கலைத்தாலும் எங்கள் இதயத்தில் நிலையாய் நிற்பவரே.. உண்மைதான் தலைவா...   எங்கள் இதயத்தில் என்றென்றும் நீதான்... 

அனைவருக்கும் அட்வான்ஸ்  கிருஸ்துமஸ் மற்றும் புது வருட வாழ்துக்கள்.

18 comments:

முத்தரசன் said...

osthi pathi ethuvume solla vittathu ok... but thalaipula ethu osthi varai nu potinga... ellam oru virambarama?

"ராஜா" said...

பாஸ் ஒஸ்தியில இருந்து ஒரு பாடல் சொல்லியிருப்பனே பார்க்கவில்லையா? முழுவதும் படித்து விட்டு கமெண்ட் போடுங்கள் நண்பா...

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
மயிலன் said...

தங்கள் இரசனையை வெளிப்படுத்த தங்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது...ஒரு கலைஞனின் இரசிகர் மற்றவரின் இரசிகர்களைக் காயபடுத்தி விமர்சிப்பது அழகல்ல..மன்னிக்கவும்..சில நெருடல்களைத் தவிர்த்து பார்த்தால் இது இந்த ஆண்டிற்கான கிட்டத்தட்ட சரியான தரவரிசை தான்..

"ராஜா" said...

நன்றி மயிலன்...

அனானி நீங்கள் உபயோகபடுத்திய வார்த்தைகளில் இருந்தே நீங்கள் யாருடைய ரசிகர் என்று புரிகிறது ... மன்னிக்கவும் உங்கள் கமெண்ட் வெளியிட தகுதியானது இந்த தளம் கிடையாது ...

cooking games, pandora, limewire

Jayadev Das said...

\\சம்பாதிக்கும் பணத்தில் ஒரு கணிசமான தொகையை சினிமாவும் சினிமா சார்ந்த பிற ஊடகங்களுக்கும் செலவு செய்யும் லட்சகணக்கான தமிழர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் சினிமாவை பற்றி விமர்சிக்கும் உரிமை எனக்கும் உண்டு.\\ ரொம்ப எச்சரிக்கையா ஆரம்பிச்சிருக்கீங்க!! "எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்த படத்த அம்பதோ நூறோ குடுத்துட்டு பார்த்திட்டு, நல்லாயில்ல சொல்ல நீ யாரு"-ன்னு உங்களை ரொம்ப கடுப்பேத்தியிருக்கானுங்க போலிருக்கே!!

Jayadev Das said...

\\சங்கூதி காட்டிய இளைய தளபதிக்கு. \\ "இதை சங்கு ஊதிக் காட்டிய இளைய தளபதிக்கு" என்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். ஹா...ஹா..ஹா...

Jayadev Das said...

\\“சிறந்த ஜெராக்ஸ் மெஷின்” விருது – விஜய்ங்கிற பேருக்கும் இந்த விருதுக்கும் என்ன சம்பந்தம்னு தெரியவில்லை. வழக்கமாக இளைய தளபதி விஜய் வாங்கும் இந்த விருதை இந்த முறை I am sam படத்தை ஜெராக்ஸ் எடுத்த இயக்குனர் விஜய் வாங்குகிறார்.\\ மத்தவங்க ஆங்கிலப் படங்களை ஜெராக்ஸ் எடுத்தா நம்ம ஜோசப் விஜய் தன்னுடைய முந்தய படங்களையே திருபத் திரும்ப ஜெராக்ஸ் எடுப்பாரு!!

"ராஜா" said...

//ரொம்ப எச்சரிக்கையா ஆரம்பிச்சிருக்கீங்க!! "எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்த படத்த அம்பதோ நூறோ குடுத்துட்டு பார்த்திட்டு, நல்லாயில்ல சொல்ல நீ யாரு"-ன்னு உங்களை ரொம்ப கடுப்பேத்தியிருக்கானுங்க போலிருக்கே!!

ஆமா பாஸ்


//\\சங்கூதி காட்டிய இளைய தளபதிக்கு. \\ "இதை சங்கு ஊதிக் காட்டிய இளைய தளபதிக்கு" என்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். ஹா...ஹா..ஹா...


எனக்கே இப்பத்தான் தெரியிது .. மாத்திருவோம்


//மத்தவங்க ஆங்கிலப் படங்களை ஜெராக்ஸ் எடுத்தா நம்ம ஜோசப் விஜய் தன்னுடைய முந்தய படங்களையே திருபத் திரும்ப ஜெராக்ஸ் எடுப்பாரு!!

அதையும் பாத்துட்டு ஹிட்டு ஹிட்டுன்னு குடிக்கிற கைப்புள்ளைக இருக்குற வரைக்கும் அவர் தைரியமா ஜெராக்ஸ் எடுக்கலாம்

imaan said...

dea loosu nee yaru rasigan enbathu yeanku nalla purieuth un alu mattum summavaa rajini padathai remake odaa vaikrean oru padmavthu sonthaa padama odutha paru

Jayadev Das said...

சிவாஜி -எம்ஜிஆர், ரஜினி-கமல், ஜோசப் விஜய்-அஜித், தனுஷ்-சிம்பு இவங்க யாரும் சொந்த வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் எதிரிகள் அல்ல. நம்மை மகிழ்விக்க ஆடிப் பாடி, நம் பணத்தில் சுகபோகத்தை அனுபவிக்கும் இந்தக் கூத்தாடிகளுக்காக நாம் ஒருத்தருகொருத்தர் பகைமை பாராட்டி அடித்துக் கொள்ளத்தான் வேண்டுமா?

kevin said...

nee aseeth rasiganaa avana parrathi eluthi tholaa da thalapathy illuka unnaku enna thaguthi iruku rs100 koduthu padam paarthaal poduveeya
olunga post pannu

"ராஜா" said...

Kelvin thalapathiya ootta oxfordla phd mudichchittu varanuma?athu sari ajith rasikarkal mattuntha vijaya ootturoma yenna oore oottuhu boss. Ungaalai paththi thaniya oru post ezhutha vendamnu nenachchirunthen. But nlaikku ezhuthuren oru post about one and only !r.vijay

"ராஜா" said...

Jeyadev das

unmaithan. Aanal naan ajithai rasipatharkkum vijaiyai kindal seivatharkkum entha sambanthamum illai. Admk enpathal dmk vai vimarchipathu veru, dmk vai athan thavarukalukkaka vimarchipathu veru. Athaipolathan enakku yeno vijay suththamaka pidikkavillai. Athanal mattume vimarchikiren. Nan ajith rasikanaka illaavittalum kindal seithiruppen. Nan vijayai patri ezhuthiyathil yethavathu thavaru irunthal sollungal thiruththukiren.

Anonymous said...

Dei oththa nee entha ooruda? Thairiyam iruntha ooraiyum phone numberaiyum koduda?

Jayadev Das said...

\\Nan vijayai patri ezhuthiyathil yethavathu thavaru irunthal sollungal thiruththukiren. \\எனக்கு விஜய் படங்கள் பிடிக்கும், அதே மாதிரி உங்களைப் போன்ற பதிவர்களின் எழுத்துக்களையும் ரசித்து படிப்பதும் உண்டு. அதே சமயம், அனானியாக முக்காடு போட்டுக் கொண்டு வந்து, உங்களை முகவரியையும், போன் நம்பரையும் 'நாகரீகமான' வார்த்தைகளில் கேட்பவர்களை நாகரீகம் தவறாது சமாளிக்கவும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்க்கு பதிவர் எப்பூடி ... என்ன செய்கிறார் என்று பாருங்கள், உங்களுக்கு அந்த பாணி ஒரு ஐடியாவைக் கொடுக்கலாம், வாழ்த்துக்கள்!!

sri said...
This comment has been removed by a blog administrator.
"ராஜா" said...

Sri un thalapathiyoda puththithana unakkum irukkum. Pathil solla mudiyavillai endral asingama thitturathula unnaiyum, tharuthalaiyayum, avanga appanaiyum minja aale kidaiyathu

LinkWithin

Related Posts with Thumbnails