Followers

Copyright

QRCode

Thursday, May 26, 2011

சகிக்க முடியாத தேசிய விருதுகள் ....



இந்த வருடத்திற்கான திரைப்பட துறைக்கான தேசிய விருதுகள் அறிவித்து பல நாட்கள் ஆகி விட்டது... வழக்கம் போல இந்த வருடமும் சரியான திறமைக்கு விருது வழங்காமல் அந்த விருதின் "பாரம்பரியத்தை" காப்பாற்றி இருக்கிறார்கள் நம் விருது  கமிட்டியாளர்கள்... நான் கிண்டலுக்கு சொல்லவில்லை நம் தேசிய விருதுகளின் தரம் எவ்வளவு கேவலமாக மாறி இருக்கிறது என்பதற்க்கு சிறந்த நடிகருக்கான விருதும் , சிறந்த நடனத்திர்க்காண விருதும் அவர்கள் யாருக்கு தந்திருக்கிறார்கள் என்பதே சாட்சி ...


ஆடுகளம் படத்திர்க்கு சிறந்த நடனத்திர்க்காண விருது ... அந்த படத்தில் அப்படி என்ன விருது கொடுக்கும் அளவுக்கு தகுதியான நடனத்தை  பார்த்தார்கள் என்று தெரியவில்லை .... கைலியை முகத்தில் பொத்தி கொண்டு டிக்கியையும் இடுப்பையும் ஆட்டுவதற்க்கு பேர் நடனமாம் , அதற்க்கு ஒரு விருது வேறா? பரத நாட்டியம் , கதகளி என்று பல பாரம்பரியமான , அழகியலான நடன வடிவங்களை உலகிற்க்கு தந்த இந்திய திருநாட்டில் இப்படி ஒரு நடனத்திர்க்கு விருது... கேட்கவே கேவலமாக இருக்கிறது .... சரி மக்கள் அந்த நடனத்தை பெரிவாரியாக ரசித்தார்கள் , மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று மக்களின் ரசனைக்கு மதிப்பளித்து அந்த விருதை கொடுத்திருப்பார்கள் என்று சொன்னால் , இதை விட மக்களால் அதிகம் ரசிக்கபட்ட முன்னாள் இடை அழகி சிம்ரன் ஆடிய ஆல்தோட்ட பூபதி மாதிரியான அறைவேக்காடு பாடல்கள் அனைத்திர்க்கும் அவர்கள் தேசிய விருது தந்திருக்க வேண்டுமே? .... என்னை பொறுத்தவரை அதற்க்கும் ஆடுகளத்திர்க்கும் எந்த வித்தியாசமும் இல்லை ... தனுஷ் டிக்கியை ஆட்டினால்  விருது , சிம்ரன் இடுப்பை ஆட்டினால்  அது ஆபாச பாடலா? மக்கள் ரசிப்பதற்கெல்லாம் விருது தரவேண்டும் என்றாள் வருடா வருடம் நீங்கள் சிறந்த நடிக்கைக்கான விருதை ஷகீலா ஆண்டிக்குதான்  தர வேண்டும் .... இந்த மாதிரியான இரண்டாம்தர நடனங்களுக்கு விருது தருவதை விடுத்து , நம் பாரம்பரிய நடனங்களை வெறும் பத்மஸ்ரீ பத்மவிபூசன் பட்டங்களுக்குள் அடைக்காமல் சினிமாவிலும் அந்த மாதிரியான கலைஞர்களை தேடிபிடித்து அங்கீகாரம் கொடுத்தால் அந்த கலைகள் சினிமாவிலும் உயிர்பெறுமே....


இரண்டாவது சிறந்த நடிகருக்கான விருது தனுஸிர்க்காம் .... அழுக்கு கைலி , அரை மொட்டை தலை , நாளுநாள் தாடி வைத்து கொண்டு மதுரை வட்டார மொழியை பேசிவிட்டால் அவர் சிறந்த நடிகரா? இந்த கெட்டப் , மதுரை தமிழ் இதை தவிர மாப்பிளை தனுசிற்க்கும் ஆடுகளம் தனுஸிர்க்கும் நடிப்பில் வேறு எந்த வித்தியாசமும் எனக்கு சத்தியமாக தெரியவில்லை .... கோபம் , சோகம் , வேகம் , பாசம் , காமெடி இப்படி நவரசங்களுக்கும் ஒரே முகபாவனை , ஒரே மாடுலேசன் .... தனுஷ் இந்த படத்தில் ஏதாவது ஒரு காட்சியிலாவது  மிக நுட்பமான அந்த காட்சிக்கு தேவையான முக பாவத்தை , மாடுலேசனை வெளிபடுத்தி இருக்கிறாரா? படத்தின் கதாநாயகி எல்லா காட்சிகளிலும் ஒரே மாதிரி சிரிப்பதை போலத்தான் தனுசும் படம் முழுவதும் ஒரே மாதிரி நடித்திருந்தார் , அந்த ஒரே மாதிரி சில காட்சிகளில் சிறப்பாக இருந்திருந்தாலும் தேசிய விருது அளவுக்கு கண்டிப்பாக வொர்த் இல்லை  ....  எனக்கு இந்த முழு படத்திலேயும் தனுஷ் காட்டிய நடிப்பு திறமையை விட  , உனக்கு அவசியம் தெரியனுமா , என் மார்பை பிடித்து கசக்குனான் போதுமா?” என்று வெடித்து அழும் ஒரே காட்சியில் அங்காடி தெரு அஞ்சலி கண்களில் காட்டும் கோபம் , ஆற்றாமை , சோகம் ஆயிரம் மடங்கு அதிகமாகவே தேசிய விருதுக்கு தகுதியானது ... அஞ்சலிக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் ... 

பிதாமகன் விக்ரம் கண்டிப்பாக இந்த விருது பட்டியல் வெளி வந்த நாள் சுவற்றில் முட்டி முட்டி அழுதிருப்பார் .... அவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் ... இனிமேலாவது விருது வாங்கணும்னு உடம்ப வருத்தி கஷ்டபடாதீங்க பாஸ்,  அந்த விருது அந்த அளவுக்கு வொர்த் இல்லைனு அவணுகளே ஒத்துகிட்டாணுக , கைலியும் முண்டாபனியனும் கட்டிக்கிட்டு தூத்துக்குடி பாஷை பேசி நடிங்க , விருது கன்பர்ம்.. பாவம் நம் அறிவுஜீவி முன்னாள் இயக்குனர்களுக்கு இதுதான் சிறந்த நடிப்பாக தெரிகிறது....  


இந்த விருதில் இன்னொரு காமெடி சிறந்த திரைக்கதை விருது .. பேசாமல் இவர்கள் எந்திரனுக்கே சிறந்த திரைக்கதை விருது கொடுத்திருக்கலாம் ... அதற்க்கும் இதர்க்கும் பெரிய வித்தியாசமில்லை .... பாக்கியராஜ் அவர்களுக்கு ஏன் கடைசி வரை சிறந்த திரைகதைக்கு விருது கிடைக்கவில்லை என்று எனக்கு இப்பொழுதுதான் புரிகிறது ... பாக்கியராஜ் இவர்களை மன்னிப்பாராக....


விண்ணை தாண்டி வருவாயா ஏ.ஆர்.ரகுமான் , மைனா சுகுமார் , மதராசபட்டிணம் செல்வகுமார் இந்த மூவரின் பெயரும் விருது பட்டியலுக்கு பரிசலிக்கபடவே இல்லையாம்.... என்ன கொடுமை இது?  

Tuesday, May 24, 2011

" பயப்படாதே கனிமொழி" - போட்டோ கமெண்ட்ஸ்

படங்களை  பெரிதாக பார்க்க அதன் மேல் கிளிக் செய்யவும் (உங்களுக்கெல்லாம் இது தெரியும் இருந்தாலும் போட்டோ கமெண்ட் பதிவு போட்டா இந்த வரியை முதலில் எழுத வேண்டும் என்பது பதிவுலகின் விதி )




















ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை 


நேற்று: 








இன்று 












நாளை 










கடைசியில் 












கொசுறு 








ரஜினியும் அவரை பிடிக்காதவர்களும் ஒரு தராசின் இரு தட்டை போல , எப்பொழுதெல்லாம் அவர்கள் கீழ்தரமாக போகிறார்களோ அப்பொழுதெல்லாம் அவர் இன்னும் உயர்ந்து நிற்பார் .... இந்த முறையும் அப்படிதான் நடக்கும் ... ஒரு மனிதன் உடல் நலம் இல்லாமல் சிகிச்சை எடுத்து வரும் பொது அவர் இறந்து விட்டார் என்று வதந்தியை கிளப்புகிறவர்களை பார்த்து ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன் ..


"எப்பா உங்களை எல்லாம் முறையாக ஈன்று எடுத்தார்களா? இல்லை காலையில கக்கூசுல இருக்கும் போது அவசரப்பட்டு அதோட சேத்து  வெளிய வந்த கேசுகளா நீங்க ?" 

Saturday, May 14, 2011

மக்கள் நாங்கள் முட்டாள்கள் இல்லை அரசியல்வியாதிகளே ......





நாம் எவ்வளவு அராஜகம் செய்தால் என்ன ,, காசு கொடுத்தால் இவர்கள் யோசிக்காமல் குத்துவார்கள் ....

மக்களுக்கு நல்லது செய்ய நம்மை தேர்ந்தெடுத்தால் நம் குடும்பத்திர்க்கு மட்டும் நல்லது செய்வோம் , எவன் என்ன செய்ய போகிறான் , காசை வீசி எறிந்தால் நம் காலில் விழ போகிறான் ....

நான்தான் தமிழகம் எனக்கு அடிவருடுபவனே தமிழன் , என்னை எதிர்த்தால் அவன் இல்லாமல் போவான் ... எலும்புக்கு வாலாட்டும் நாயை போல நான் போடும் பணத்திர்க்கு வாலாட்டும் இந்த மக்கள் இருக்கும் வரை நான்தான் தமிழக சர்வாதிகாரி

நாங்கள் காட்டுவதுதான் படம் , நாங்கள் போடுவதுதான் செய்தி , நாங்கள் எதை காட்டினாலும் அதை நம்புவான் இந்த தமிழன் ... நாங்கள் ஒருவனை குடிகாரன் என்று குதர்க்கமாக காட்டினால் அதை அப்படியே நம்பும் மூளை இல்லாதவனே தமிழன் ...

தமிழனை மயக்க நல்லது செய்ய தேவை இல்லை , சினிமா கவர்ச்சி போதும் , படித்த பட்டதாரிகளையோ இல்லை அனுபவமிக்க அரசியல்வாதிகளையோ பேச சொன்னால் இந்த தமிழன் கேட்க மாட்டான் , அவனுக்கு கவர்சிக்கு குஷ்பூவும் , கெட்ட  வார்த்தைக்கு வடிவேலுவும் போதும் , இவர்கள் பேச்சில் மயங்கி அந்த மயக்கம் தெளியாமலேயே ஓட்டை நமக்குதான் குத்துவான்..



இப்படி எங்களை ஏதோ புத்தியில்லாத நாய்களை போல எண்ணிதானே  எப்படி எல்லாம் ஓட்டு கேட்க கூடாதோ அப்படியெல்லாம் ஓட்டு கேட்டு வந்தீர்கள் ..

கேரளாவிற்க்கு அடுத்து அதிகம் படித்த மக்களை கொண்டு இருக்கும் தமிழனாகிய எங்களை எவ்வளவு கேவலமாக நினத்திருந்தால் குஷ்பூவையும் , வடிவேளையும் அனுப்பி எங்களை உங்களுக்கு ஓட்டு போட சொல்லியிருப்பீர்கள் ... அவர்களுக்கு கூடிய கூட்டத்தை பார்த்ததும் மக்கள் இன்னும் மாக்களாய்தான் இருக்கிறோம் என்று சந்தோசபட்டு வெற்றிகளிப்பில் மிதந்திருப்பீர்கள் ... இப்பொழுது தெரிந்திருக்கும் கூடிய கூட்டம் சும்மா பொழுதை போக்குவதற்க்குதான் என்று... பொழுதுபோக்கிற்க்கும் அரசியலுக்கும் வித்தியாசம் தெரியாதவன் இல்லை இந்த தமிழன் ...


நாங்கள் சாரை சாரையாய் அணிவகுத்து வந்து ஓட்டு போட்டதும் கொடுத்த காசுக்கு மேல கூவுராங்களே கொய்யாலே என்று உங்கள் மனம் குதூகளித்திர்க்கும் .. ஆனால் கூட்டமாய் வந்தது வாங்கிய காசுக்கு கூவ இல்லை , எங்களை புத்தியில்லாதவர்களாய் நினைத்திருக்கும் உங்களுக்கு பாடம் கற்பிக்கத்தான் என்று இப்பொழுது புரிந்திருக்கும் ...

எத்தனை நாளுக்குத்தான் குட்ட குட்ட குனிந்து கொண்டு இருப்போம் , இதோ நிமிர்ந்து விட்டோம் ... தமிழன் காசுக்காக சோரம் போகும் ஈன கூட்டம்  இல்லை என்று நிரூபித்து விட்டோம் ....

இந்த தேர்தல் தோத்தவர்களுக்கு மட்டும் இல்லை ஜெயித்தவர்களுக்கும் ஒரு பாடம்தான் ... நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்று தமிழன் கொடுத்த வெற்றி இல்லை இது , அவர்கள் ஜெயித்திட கூடாது என்பதற்காய் உங்களுக்கு நாங்கள் கொடுத்த வெற்றி ... நீங்களாவது தமிழனை ஏமாளி என்று எண்ணி முன்பு போலவே இஷ்டம் போல ஆடி ,பிற்காலத்தில் நீங்களும்  ஏமாறாமல் இருங்கள்...

நாங்கள் முழித்து கொண்டோம் ... நீங்களும் முழித்து கொள்ளுங்கள் ...

பணபலம் , மீடியா பலம் , ரௌடியிசம் , சினிமா கவர்ச்சி என்று எல்லாம் இருந்தும் ஏமாறாமல் தன்னை ஏமாற்றியவர்களை விரட்டி அடித்த தமிழனை பார்க்கும் போது  ஊழல் அற்ற நல்லாட்சி புரியும் அரசாங்கத்தை அவன் உருவாக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்ற நம்பிக்கை துளிர்க்கிறது ...

பணத்திர்க்கு விலை போகும் ஈன கூட்டம் இல்லை நாங்கள் என்று இந்த தேர்தலின் மூலம் உலகத்திர்க்கு உரக்க சொல்லி இருக்கும் தமிழனுக்கு ஒரு ராயல் சல்யூட்


  


Thursday, May 12, 2011

வாலிநோக்கம் - கடற்கரையும் , பனைமரத்து கள்ளும்


கடற்கரை பட்டினங்கள் என்றாலே நமக்கெல்லாம் சென்னை , நாகபட்டினம் , வேளாங்கண்ணி , கன்னியாகுமாரி , தூத்துக்குடி , திருசெந்தூர் , ராமேஸ்வரம் இப்படி பார்த்து பார்த்து சலித்து போன இடங்கள்தான் நினைவுக்கு வரும் ... இந்த இடங்களில் இருக்கும் கடற்கரைக்கு ஒருமுறை சென்றால் போதும் அடுத்து கடலில் குளிக்கும் ஆசையே காணாமல் போய் விடும் ... புண்ணியஸ்தலங்கள் அல்லது பொழுதுப்போக்கு இடங்கள் என்று கட்டம் கட்டபட்ட இந்த கடற்கரைகளில் எல்லாம் எப்பொழுதும் ஜனநெருக்கடி இருந்து கொண்டே இருக்கும் ... எல்லாம் செய்த பாவத்தை தொலைக்க , அல்லது செய்ய போகும் பாவத்திர்க்கு முன் ஜாமீன் கேட்டு வரும் கூட்டம் ... மக்கள் அதிகம் பேர் வந்து செல்வதானாலேயே அங்கு தண்ணீரும் மிக அசுத்தமான நிலையிலேயே இருக்கும் ... சென்னை மெரினா கடற்கரை இதற்க்கு நல்ல உதாரணம் ... ராமேஸ்வரம் , திருசெந்தூர் கடற்கரையும் மெரீனாவுக்கு சற்றும் சளைத்ததில்லை...

இரண்டு வாரங்களுக்கு முன்னாள் ராமேஸ்வரம் கடலுக்கு நானும் என் நண்பனும் சென்று வந்தோம் ...விருதுநகர் மாவட்ட மக்களுக்கு எளிதில் கண்ணில் தட்டுபடாத விஷயம் தண்ணீர்தான் ... நாங்கள் கம்மாயில் தண்ணீர் நிரம்பி பார்த்தே பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது .. அவ்வளவு பெரிய கடலை பார்த்தால் , அதில் அப்படியே மூழ்கி கரைந்து விடும் அளவுக்கு குளிக்கும் ஆசை பிறந்து விடும் .. ஆனால் அந்த கடலுக்கு அருகில் சென்றாலே ஏதோ ஒரு துர்நாற்றம் , மூக்கை பொத்தி கொண்டுதான் கடற்கரையிலேயே நடக்க முடிந்தது ... அங்கு இருக்கும் கூட்டத்தில் நடப்பது ஏதோ சென்னை அண்ணா சாலையில் டிராபிக்கில் நடப்பதை போல எரிச்சலாக இருந்தது ... கடைசியில் எங்களால் கடலில் குளிக்கவும் முடியவில்லை , கடற்கரை காற்றை அனுபவிக்கவும் முடியவில்லை... 


ஆனால்  அருப்புக்கோட்டைக்கு அருகிலேயே சுத்தமான , அதிகம் கூட்டம் இல்லாத , ஓரளவுக்கு பாதுகாப்பான கடற்கரைகள் அதிகம் வெளிச்சத்திர்க்கு வராமலேயே நிறைய இருக்கின்றன... அருப்புக்கோட்டையில் இருந்து சரியாக 82 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வாலிநோக்கம் மற்றும் மாரியூர் கடற்கரைகள்தான் அவை... 


தென்கிழக்கு தமிழகம் என்றாலே நம்மூர் அரசியல்வாதிகளுக்கு எப்பொழுதும் அலர்ஜிதான் ... எம்‌ஜி‌ஆர் காலத்தில் எப்படி இருந்ததோ இன்னமும் கொஞ்சம்கூட மாறாமல் அப்படியேதான் இருக்கிறது... அருப்புக்கோட்டையை தாண்டினால் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை ... சாலைகள் ஒழுங்காக இருக்காது , பேருந்து வசதிகளும் கிடையாது (மதுரையில் இருந்தும் அருப்புக்கோட்டையில் இருந்தும் எப்பொழுதாவதுதான் பேருந்துகள் அந்த ஊர்களுக்கு இயங்கும்) ,எனவே அந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றாள் கார் அல்லது டூ வீலர் தான் செல்ல முடியும் .... நடுவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றாள் கூட பத்து கிலோமீட்டருக்கு ஒருதடவைதான் ஏதாவது கடைகள் தென்படும் , பெட்ரோல் பங்க் என்று எதுவும் கிடையாது சாயல்குடி வரைக்கும் .... அந்த ஏரியாவில் நீங்கள் செல்லும் வண்டி எங்கையாவது மக்கர் செய்தால் அவ்வளவுதான் அதை சரி செய்ய அருப்புக்கோட்டையில் இருந்துதான் ஆட்கள் வரவேண்டும் ... அதிகபட்சம் பஞ்சர் பார்க்கும் வசதி மட்டுமே இருக்கிறது அந்த ஊர்களில் ... 

அந்த சுற்று வட்டாரத்தில் இருக்கும் எல்லா ஊர்களுக்கும் (கல்லூரணி , சாயல்குடி , பரளச்சி , பெருநாழி , வெம்பார் , கடலாடி, மாரியூர் , வாலிநோக்கம் ) சேர்த்து ஒரே ஒரு ஏ‌டி‌எம் மட்டுமே சாயல்குடியில் இருக்கிறது ... ஆனால் அதுவும் எப்பொழுதுமே மூடியேதான் இருக்கும் .. நாங்கள் அருப்புக்கோட்டையில் பணம் எடுக்காமல் அந்த ஏ‌டி‌எம்ஐ நம்பி வந்து விட்டோம் , கடைசியில் அது மூடி கிடக்க , ஏ‌டி‌எம்க்காக வீணாக அம்பது கிலோமீட்டர் சுற்றி முதுகுளத்தூர் செல்ல வேண்டி வந்தது ... இந்த அளவுக்குதான் அங்கு அடிப்படை வசதிகள் செய்யபட்டு இருக்கிறது ... ஆனால் நடுவில் தென்படும் சின்ன சின்ன ஊர்களில் கூட கண்டிப்பாக இருக்கும் ஒரு விஷயம் டாஸ்மாக் அதுவும் பார் வசதியுடன்... நம் அரசாங்கத்தை நினைத்தால் எனக்கு புல்லரிக்கிறது ....


சாயல்குடியை தாண்டி விட்டாலே மணல் பரப்பு ஆரம்பித்து விடும் ... சயல்குடியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் சாலையில் சரியாக இரண்டு கிலோமீட்டரில் ஒருபாதை பிரியும் வாலிநோக்கம் செல்ல ... அந்த சாலையில் இறங்கியதும் இரு பக்கமும் மணல் திட்டுகள் ஆரம்பித்து விடும் .. முழுக்க முழுக்க மணல் என்பதால் அங்கு வேறு எந்த மரமும் இருக்காது , எங்கு திரும்பினாலும் பனைமரங்கள்தான் ... 

அந்த பாதையில் முதலில் வரும் சிறுகிராமம்தான் மாரியூர் ... அந்த கிராமத்தை பார்த்தால் படகுகள் , வலைகள் , மீன் சந்தை என்று கடற்கரை கிராமத்திற்குரிய எந்த ஒரு அடையாளமும் கிடையாது ... நம் ஊரை போலவே ரொம்ப இயல்பான மக்களே இருக்கிறார்கள் ... கடல் சத்தம் இல்லாமல் அமைதியாகவே இருக்கிறது அந்த கிராமம் ... அந்த ஊரை தாண்டியதும் ஒரு சிவன் கோவில் ஒன்று வருகிறது , அதுதான் கோவில் மாரியூராம் , அங்குதான் கடற்கரை இருக்கிறது .... அந்த சிவன்கோவிளை ஒட்டி ஒரு பாதை பிரிகிறது கடற்கரைக்கு செல்ல ... அந்த பாதையில் ஒரு அறைகிலோமீட்டர் சென்றதும் கடலின் ஆராவாரம் கேட்க ஆரம்பிக்கும் ... மிக மிக சுத்தமான , ஆள் நடமாட்டம் குறைந்த ஆனால் அழகான கடற்கரை அது ... 


கடற்கரை மணலில் முழுவதும் சவுக்கு மரங்களும் , தென்னந்தோப்புகளும்தான் ... கடலில் சிறிது நேரம் கால் நனைத்து விட்டு , அந்த சவுக்கு தோப்புக்குள் கடந்து சென்றாள் , அதன் பிறகு ஒரு அடர்ந்த காட்டை போல எங்கும் பனைமரங்கள் தான் ... அந்த காட்டுக்குள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்படும் ஆட்கள் , பேண்ட் ஷர்ட் போட்டு இருக்கும் நம்மை பார்த்தால் மிரள்கிறார்கள் .. ஒருவர் எங்களை பார்த்ததும் திடு திடுவென ஒரு பனைமர தோப்புக்குள் ஓடினார் ... எங்களுக்கு கொஞ்சம் பயமாக இருந்தாலும் அவர் பின்னாடியே சென்று பார்த்தோம் , அங்கு ஒரு குடிசை முழுக்க முழுக்க பனை ஒழைகளை கொண்டே செய்து இருந்தார்கள் , அதன் அருகே சென்றவுடன் ஒரு வாட்டசாட்டமான ஆள் வந்து நீங்க யாரு தம்பி என்று விறைப்பாக இருப்பதை போல உடலை வைத்து கொண்டு கேட்டார் ... 

அந்த குடிசையை சுற்றும் முற்றும் பார்த்தபின்னர்தான் எங்களுக்கு புரிந்தது அது கள் விர்க்கும் இடம் என்று .. அவர்கள் எங்களை ஏதோ மப்டியில் ரெய்டுக்கு வந்த போலீஸ் என்று நினைத்து பயந்து விட்டார்கள் ... பிறகு அவரிடம் நாங்கள் எங்களை அறிமுகம் செய்து விட்டு , கள் இருக்கா என்று விசாரித்தோம்.. அவர் முன்ன மாதிரி இப்ப இல்ல தம்பி.. அரசாங்கம் ஊருக்கு ஊர் பிராந்தி விக்கிது , நாங்க அதவிட கொரஞ்ச காசுக்கு கள்ளு கொடுத்தா அவங்க வியாபாரம் பாதிக்கபடுதுன்னு எங்களை பிடிச்சி ஜெயிலுல போட்டுராங்க.... பயந்து பயந்துதான் தொழில் பண்ண முடியிது , இப்ப போயிட்டு மதியம் ரெண்டு மணிக்கு மேல வாங்க இந்த ஏரியாவுல எங்கையாவது கள்ளு கிடைக்கும் என்று சொல்லி விட்டு உள்ளே போய்விட்டார்... 

அப்பொழுது மணி பண்ணிரெண்டுதான் என்பதால் மீண்டும் ரெண்டு மணிக்கு மேல் இங்கு வரலாம் என்று வாலிநோக்கம் செல்ல முடிவு செய்தோம் ... வலிநோக்கம் மாரியூரில் இருந்து சரியாக பத்து மைல் தொலைவுதான் ... தமிழத்தின் பெரிய கப்பல் உடைக்கும் துறைமுகம் இங்குதான் இருக்கிறது ... அங்கு ஒரு பெரிய கப்பலை பாதி உடைத்து வைத்திருந்தார்கள் .. எந்த விட கெடுபிடியும் இல்லாமல் நம்மை சுற்றி பார்க்க அனுமதிக்கிறார்கள் ... பாதி உடைந்த கப்பலில் சுற்றி பார்க்கவே திகிலாக இருந்தது ... ஆனால் அந்த கப்பலின் ஒரு மூலையில் நான்கு பேர் அமர்ந்து சரக்கடித்து கொண்டு இருந்தார்கள் ... அந்த கப்பல் உடைக்கும் தளத்திர்க்கு மிக அருகிலேயே உப்பளம் இருக்கிறது ... தூத்துக்குடிக்கு அடுத்து உப்பு அதிகம் கிடைக்கும் இடம் வாலிநோக்கம்தான் என்று அந்த ஊர்காரர்கள் சொல்கிறார்கள் ...


அடுத்து வாலிநோக்கம் கடற்கரை ... பாம்பாய் படத்தில் உயிரெ பாட்டில் வரும் கடற்கரை எனக்கு மிகவும் பிடிக்கும் ... வேகமாக வரும் அலை பாறையில் மோதி மேலெலும்பி தெறித்து துளி துளியாக விழும் அழகை நான் இதுவரைக்கும் டீவியில் மட்டுமே பார்த்திருக்கிறேன் ... அந்த பாடல் எங்கு படமாக்கபட்டது என்று தெரியாது , ஆனால் அதே போன்று இங்கும் அலைகள் பத்து அடி உயரத்திர்க்கு மேல் எழுந்து வருகிறது... கடலை ஒட்டி முழுவதும் பாறைகள்தான் என்பதால் அலைகள் அதில் மோதி அவ்வளவு உயரத்திர்க்கு எழுகிறது . பாறை மேல் நின்று அந்த அலையில் குளிப்பதே தனி சுகம் ஆனால் அதில் ஆபத்து அதிகம், பாறையில் வழுக்கி கடலில் விழுந்தால் திரும்பி எழுந்திரிக்கவே முடியாது பின்லேடன் போல மீனுக்கு இரையாகிவிட வேண்டியதுதான் ... 


வாலிநோக்கத்தில் இருக்கும் இன்னொரு அதிசயம் கடற்கரையில் கிடைக்கும் சுவையான நிலத்தடி நீர் ... நம்ம ஊரில் எல்லாம் 100 அடி 200 அடி தோண்டினாலும் ஒரு சொட்டு தண்ணீர் சுரக்காது , ஆனால் அந்த கடற்கரையில் வெறும் பத்து அடி தோண்டினாலே நீர் சுரந்து கொண்டு வருகிறது , கடற்கரையில் நீர் சுரப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று நினைக்கலாம் , நீர் கிடைப்பதில் ஆச்சரியம் இல்லை , அது தேன் போல தித்திப்பதில்தான் ஆச்சரியமே... அதற்க்கு காரணம் இது நல்ல தண்ணீர் தீவுக்கு மிக அருகில் இருப்பதால் கூட இருக்கலாம் .. ஆமாம் நல்ல தண்ணீர் தீவுக்கு வாலிநோக்கத்தில் இருந்து பத்து நிமிட பயணத்தில் சென்று விடலாம் ... அது என்ன நல்ல தண்ணீர் தீவு என்று கேட்பவர்களுக்கு அந்த தீவில் எங்கு தோண்டினாலும் நல்ல தண்ணீர்தான் கிடைக்கும் அதான் அந்த பெயர் ... 

இங்கிருந்து அங்கு செல்லவேண்டுமானால் போட்டில்தான் செல்ல வேண்டும் ... அதற்க்கு வாடகை 1200 ரூபாய் கேட்பார்களாம்... மேலும் அங்கு செல்ல அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் மற்றும் பஞ்சாயத்து தலைவரின் அனுமதியும் வாங்கி இருக்க வேண்டுமாம்... காரணம் அந்த தீவில் நடக்கும் போதை மருந்து கடத்தல் தொழில் .. அதனால் இவ்வளவு கெடுபிடிகளாம்... சமீபத்தில் கூட , அங்கு சுற்றுலா சென்ற நான்கு பேர் மீது போலீஸ் என்று நினைத்து ஒரு கள்ள கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் ... அதை கேட்ட பிறகு, அங்கு போக வேண்டும் என்ற ஆசை சுத்தமாக போயி விட்டது...


சரியாக இரண்டு மணிக்கு மீண்டும் மாரியூர் கடற்கரைக்கு வந்து சேர்ந்தோம் ... அந்த கடற்கரையை சுற்றிலும் பனைமரங்கள்தான் .. அந்த ஊர் மக்களின் முக்கியமான தொழில் பனை ஏறுவதுதான்... ஒவ்வொரு பத்து பனைமரங்களுக்கு ஒரு குடும்பம் வீதம் கீழே குடிசை போட்டு வாழ்ந்து வருகிறார்கள் ... அந்த குடும்பத்தலைவன் மாலையில் பனைமரங்களில் ஏறி ஒரு மண் குவளையை அந்த பனைமரத்தின் குருத்துகளில் கட்டி விட்டு வருவார் .. அந்த குருத்துகளில் இருந்துதான் பனை நீர் சுரந்து சொட்டு சொட்டாக அந்த பானையில் விழும் ... ஒவ்வொரு மரத்தில் இருந்தும் அதிகபட்சம் ஒரு நாளைக்கு நூறு மில்லி பனை நீர் கிடைப்பதே கஷ்டம் .. அந்த பனைநீரைத்தான் கள்ளு என்று சொல்லுவார்கள் ... ஆனால் அந்த கள்ளை அப்படியே விற்க்க முடியாது காரணம் அது அரசாங்கத்தால் தடை செய்ய பட்டது ... 

இவர்கள் அந்த கள்ளோடு கொஞ்சம் நீரையும் சுண்ணாம்பையும் கலந்து பதணி தயாரித்து விர்ப்பார்கள் ... ஒரு நாளைக்கு நான்கு குடம் பதநீர் தயாரித்து விர்பார்க்கலாம் .. அது நம்மூர் பதணி போலவெல்லாம் இருக்காது .. சுத்தமான பதநீர் ... உங்களால் இரண்டு கப்புக்கு மேல் குடிக்க முடியாது .... சுண்ணாம்பு கலந்து இருந்தாலும் அது சுவையில் சுத்தமாக தெரியாது .. ஒரு கப் ஐந்து ரூபாய் ... மொத்தம் ஒரு பானையில் ஐம்பது கப் இருக்குமாம் .... ஆனால் பதநி விற்பனை அவ்வளவு சூடாக நடக்காதாம் ... ஒரு நாளைக்கு இருபது கப் விற்பதே பெரிய விஷயம் ... மக்கள் பதனியை விட கள்ளைதான் அதிகம் விரும்பி குடிப்பார்களாம் ... அதனால்தான் எவ்வளவு போலீஸ் கெடுபிடி இருந்தாலும் தினமும் எங்கையாவது மறைமுகமாக கள் விற்பனை ஜோராக நடக்கும் ... ஒரு கடையில் மட்டும் ஒவ்வொரு நாளும் நூறு கப்புகளுக்கு மேல் கள் விற்பனை நடக்குமாம் ... 


காரணம் கள் ஒரு கப் பத்து ரூபாய்தான் ... இரண்டு “கப்” கள் குடித்தாலே ஒரு குவாட்டர் அடித்த போதை கிடைக்கும் ... பிராந்தி விஸ்கியை போல அதிகம் நாற்றமும் அடிக்காது ...மேலும் உடம்பிர்க்கு கெடுதியும் இல்லை ... இதானலயே மக்கள் கள்ளைதான் அதிகம் விரும்புகிறார்கள் ... டாஸ்மாக்களில் வியாபாரம் குறைந்து விடுகிறது ... கள் இறக்க அரசாங்கம் தடை செய்ய மிக முக்கிய காரணமே இதுதான்... 

கள் விற்பனை செய்ய தைரியம் இல்லாதவர்கள் விற்றது போக மீதி இருக்கும் பதநீரில் இருந்து கருப்பட்டி காய்ச்சுகிறார்கள்... ஒரு பானை பதநீரில் இரண்டு கிலோ கருப்பட்டிதான் கிடைக்குமாம் ... அங்கு ஒரு கிலோ கருப்பட்டியின் விலை 60 இல் இருந்து 70 வரைக்கும்தான் ... அதே கருப்பட்டி நம்மூருக்கு வரும் போது கிலோ 120 ஆகிறது (வெல்லம் எடுக்கிறது ஒருத்தன் விரல் சூப்புறது வேறொருத்தன் )... இதே பதநீரை இன்னும் அதிகமாக சுண்ட காய்ச்சினால் பனங்கல்கண்டு கிடைக்கும் ... இதற்க்கு மருத்துவ குணங்கள் அதிகம் .. உங்களுக்கு சளியோ , இருமலோ , ஜலதோசமோ இருந்தால் இந்த சுத்தமான ஒரிஜினல் பனங்கல்கண்டு சாப்பிட்டால் இருமல் இருக்கும் இடம் தெரியாமல் ஓடி விடும் ... ஆனால் ஒரு குடம் பதநீரில் அரை கிலோ கல்கண்டுதான் கிடைக்கும் ... 

பதநி இறக்குபவர்களுக்கு எப்படி பார்த்தாலும் கள்ளில்தான் வருமானம் அதிகம் ... ஊர் ஊருக்கு டாஸ்மாக் திறந்து மக்களுக்கு ஊற்றி கொடுக்கும் அரசாங்கம் இவர்கள் வயிற்றில் மட்டும் அடிப்பது ஏனோ? 

நாங்கள் ஒரு வழியாக அழைந்து திரிந்து கள் விற்க்கும் இடத்தை கண்டு பிடித்து ஆளுக்கு இரண்டு கப் அடித்து விட்டு வந்தோம் ... சும்மா சொல்லக்கூடாது அவ்வளவு சுவையாக இருந்தது அந்த கள் ... அப்பொழுதுதான் பனை மரத்தில் இருந்து இறக்கினார்களாம் .... இருபது ரூபாயில் சொர்க்கத்தை பார்த்து விட்டு மீண்டும் கடற்கரைக்கு சென்றோம் .. அங்கு எங்களை தவிர யாருமே இல்லை ... ஆள் இல்லாத அந்த தனிமையும் , ஓ வென்று கூச்சல் இட்டுக்கொண்டு எங்கள் காலை தொடும் அலையும் , சுழன்று சுழன்று அடித்த உப்பு காற்றும் , எங்கள் உள்ளே இறங்கிய கள்ளும் சேர்ந்து எங்களை சிறு குழந்தைகளாகவே மாற்றி விட , யாரும் இல்லா அந்த கடற்கரையில் குழந்தைகளாகவே மாறி விட்டோம் (ஹி ஹி ,, shame shame bubby shame.) .. எவ்வளவு நேரம் கடலில் விளையாடி கொண்டு இருந்தோம் என்று தெரியவில்லை , இருட்டிய பின்னர்தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம் ... 


அரசாங்கம் கொஞ்சம் சிரத்தை எடுத்து பேருந்து வசதி , ஹோட்டல் வசதி , கொஞ்சம் பாதுகாப்பு என்று சில வசதிகளை செய்து கொடுத்தால் இந்த இடங்கள் எல்லாம் மிக சிறந்த சுற்றுலா தலங்களாக மாறும் வாய்ப்பு அதிகம் உண்டு ... இல்லை என்றாள் இந்த ஊர் மக்களாவது ஏதாவது கோவிலை கட்டி , அந்த சாமியும் சக்தி வாய்ந்த சாமியாக அமைந்து , இது புண்ணியஸ்தலமாக ஏற்று கொள்ளபட்டால் விரைவில் பிரபலமாகி விடும் .... மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சேர்வார்கள் , அவர்கள் அழுக்கை இந்த கடலில் ஏற்ற... 





Thursday, May 5, 2011

பயோடேட்டா – (கேப்டன் , கனிமொழி )





                                 விஜயகாந்த்



பெயர் : விஜயகாந்த் @ கருப்பு எம்‌ஜி‌ஆர்

புனைபெயர் : அமுல் பேபி (உபயம் : ரம்யா கிருஷ்ணன்)

வயது : எவ்வளவு குடித்தாலும் தாங்கும் வயது  

சமீபத்திய தொழில் : வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பது

நீண்டகால தொழில் : நாடு நாடாக சென்று  பாகிஸ்தான் தீவிரவாதிகளை போட்டு தள்ளுவது

சமீபத்திய நண்பர் : சரக்கடிக்க  ஊற்றி  கொடுத்தவர்  

சமீபத்திய எதிரி : கலைஞர் டிவி கேமராமென்

நீண்டகால அடிமைகள் : முன்பு படம் பார்க்கவும் , இன்று ஓட்டு போடவும் வரிசையில் நிற்க்கும்  ரசிக கண்மணிகள்

பிடித்த விஷயம் : கட்சிக்காரர்களை  அடிப்பது

பிடிக்காத விஷயம் : அதை டீவியில் போடுவது

நம்புவது : எம்‌ஜி‌ஆர் கட்சியை

நம்பாதது : அந்த கட்சியின் தலைவியை..

சமீபத்திய சாதனை  : கூட்டணியில் இருந்தும் அம்மா காலில் விழாதது

நீண்டகால சாதனை : நடிக்கவே தெரியாமல் 150 படங்களில் நடித்தது

சமீபத்திய எரிச்சல் :  வடிவேலு

நீண்டகால எரிச்சல் : ரஜினிகாந்த்

மறந்து போனது : மக்களுடன் கூட்டணி 

மறக்க முடியாதது : சுகன்யா தொப்புளில் விட்ட பம்பரம் 

ஆக விரும்புவது : எம்‌.ஜி‌.ஆர்.ராக

ஆகி கொண்டு இருப்பது : வை.கோவாக



                                     கனிமொழி



பெயர் : கனிமொழி

புனைபெயர் : ஸ்பெக்ட்ரம் ராணி

வயது : சிறைக்கு போகும் வயது அல்ல 

சமீபத்திய தொழில் : குற்றபத்திரிக்கை வாசிப்பது

நீண்ட கால தொழில் : அப்பாவுக்காக தொலைபேசியில் பேரம் பேசுவது

சமீபத்திய நண்பர் : நீரா ராடியா

நீண்ட கால நண்பர் : சிறையில் இருக்கிறார்

சமீபத்திய எதிரி : சி‌பி‌ஐ

நீண்டகால எதிரி : மதுரையில் இருக்கிறார்

நம்புவது : அப்பா கருணாநிதியை   

நம்பாதது : கட்சி தலைவர்  கருணாநிதியை

சமீபத்திய சாதனை : கலைஞர் வம்சத்தில் முதல் பெண் கைதி  (ஆகப்போவது)  

நீண்டகால சாதனை : கவிதையே எழுதாமல் கவிஞர் ஆகியது

போக விரும்புவது : கோட்டைக்கு முதல்வராக

போக போவது : திஹாருக்கு கைதியாக

 மறந்து போனது   : சென்னை சங்கமம்

மறக்க விரும்புவது  : சி‌பி‌ஐ தன் பெயரை

மறக்க முடியாதது   :  சிறையில் அவரின் முகம்




                          இந்திய கிரிக்கெட் அணி



பெயர் : இந்திய கிரிக்கெட் அணி

தற்போதைய பெயர் : உலக சாம்பியன்

தலைவர் : சரத் பவார்

உபதலைவர்கள் : ஐ‌பி‌எல் உரிமையாளர்கள்

தொழில் : நாட்டுக்காக மைதானத்தில் விளையாடுவது

பிடித்த தொழில் : வீட்டுக்காக விளம்பரங்களில் நடிப்பது

விரும்புவது : எப்பொழுதும் ஜெயிப்பது

வெறுப்பது  : விரும்புவது  எப்பொழுதாவதுதான் நடப்பது


நண்பர்கள் : ஜெயித்தாள் பல்லாக்கு தூக்கும் ரசிகர்கள்  

எதிரிகள் : தோற்றால் பாடை கட்டும் அதே ரசிகர்கள்

பலம் : இன்னமும் அடித்து ஆடும் சச்சின்  

பலவீனம் : அவர் ஓய்வு பெரும் நாள் மிக அருகில் இருப்பது

சமீபத்திய சாதனை : 23 வருடம் கழித்து உலககோப்பையை வென்றது

நீண்டகால சாதனை :  உலகிலேயே பணக்கார அணி

  



Wednesday, May 4, 2011

வானம் – என் பார்வையில்


விண்ணை தாண்டி வருவாயா என்ற மொக்கை படத்திர்க்கு பிறகு சிம்பு நடித்து வெளிவரும் படம் ... ஹீரோவாக இருந்து நம்ம பேரரசு , சுரேஷ் கிரிஷ்ணா போன்றவர்களால் காமெடியானாக depromote செய்யபட்ட பரத்தும் நடித்திருக்கிறார் ... அனுஷ்கா வேற விபசாரியா நடிச்சிருக்காங்க, தெலுங்குல சூப்பர் டூப்பர் ஹிட் ஆன வேதம் படத்தோட ரீமேக் இப்படி முதல் இரண்டு மைனஸ்களோடும் அடுத்த இரண்டு பிளஸ்களோடும் வெளிவந்திருக்கும் படம் வானம்...


ஆயுத எழுத்து படம் போலவே இதிலும் ஐந்து வெவ்வேறு கதைகள் கடைசியில் ஒரு இடத்தில் வந்து சந்திக்கிறது ... சென்னையில் ஒரு சேரியில் வாழும் சிம்பு பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில்  ஒரு பணக்கார வீட்டு பெண்ணை பல பொய்களை சொல்லி ஏமாற்றி காதலிக்கிறார் , அந்த பெண்ணின் அம்மாவிடம் திருமணம் பற்றி பேச அந்த பெண் அவரை ஒரு ஹோட்டலில் நடக்கும் நியூ இயர் பார்ட்டிக்கு வர சொல்கிறார் , ஆனால் அந்த பார்ட்டிக்கு நுழைவு கட்டணமே நாப்பதாயிரம் ரூபாய்... சிம்பு அந்த பணதிர்க்காக அழைவது ஒரு கதை ...

இன்னொரு கதையில் தன் மகனின் பணதிர்க்காக சரண்யா மோகனும் அவர் அப்பாவும் கிட்னியை விற்று நாற்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்க சென்னை வருகிறார்கள் ...

பரத் தன் வாழ்கையின் லட்சியமாக நினைக்கும்  லைவ் ஸ்டேஜ் ஷோவில் கிதார் வாசிக்க தன் ட்ரூப் நண்பர்களோடு சென்னை வரும் வழியில் நடக்கும் சில விஷயங்கள் என்று ஒரு கதை ...


இன்னொருத்தியின் கம்பெனியில் விபசாரியாக பணிபுரியும் அனுஷ்கா சென்னை வந்து தானே சொந்தமாக கம்பெனி ஆரம்பிக்க படும் கஷ்டங்கள் என்று ஒரு கதை ...

  தன் மனைவியின் டெலிவரிக்காகவும் , தன் தம்பியை தேடியும் சென்னை வரும் பிரகாஷ்ராஜின் தனி கதை ஒன்று..இப்படி ஐந்து கதைகள் இருந்தும்  சரண்யா மோகன் வரும் கதையை தவிர மற்ற கதைகளில் ஒரு முழுமையோ ஈர்ப்போ இல்லாமல் போனதுதான் படத்தின் பெரிய மைனஸ் ...

சிம்புவிர்க்கு இந்த கதாபாத்திரத்தில் எப்படி நடிப்பது என்றே தெரியவில்லை ... அதற்க்கு காரணம் அந்த கதாபாத்திரத்தை அரைகுறையாக வடிவமைத்திருக்கும் இயக்குனர் ... அவர் நல்லவரா? கெட்டவரா? என்று கதை எழுதிய அவருக்கும் தெரியவில்லை , நடித்த சிம்புவிர்க்கும் தெரியவில்லை , படம் பார்க்கும் நமக்கும் கடைசி வரை தெரியவில்லை ... மேலும் பணக்கார பெண்கள் எல்லாருமே லூசாகத்தான் இருப்பார்கள் என்ற தமிழ் சினிமாவின் அரைவேக்காட்டுதனம் இந்த படத்திலும் உண்டு...


சரண்யா தன் கிட்னியை நாற்பதாயிரம் ரூபாய்க்கு பேரம் பேசி முடிக்கும் அடுத்த காட்சியிலேயே நியூ இயர் பார்ட்டிக்கு சிம்புவுக்கு நாற்பதாயிரம் தேவைபடுவதாய் காட்டும் போதே கடைசியில் என்ன நடக்க போகிறது என்பது இருபது வருடமாய் தமிழ் படங்கள் பார்த்து கொண்டிருக்கும் என்னால் கண்டுபிடிக்க முடியாதா  என்ன? அதனால் அந்த இரண்டு கதைகளிலும் சுவாரஷ்யாமே இல்லாமல் போயி விட்டது... ஆனால் வட்டி பணதிர்க்காக  கிட்னியை விற்க்கும் சரண்யாவை பார்க்கும் போது எனக்கு பகீர் என்றது ... இவர் காட்சி வரும்போதெல்லாம் பின்னனியில் உதயசூரியன் சின்னத்தை காட்டி கொண்டே இருக்கிறார்கள் ...     

சரண்யாவின் மாமாவாக வரும் அந்த தாத்தா யார் என்று தெரியவில்லை , ஏழைகளின் வலியை அப்படியே வெளிபடுத்துகிறார் ... இடைதரகராக வருபவன் முதலில் அந்த பெரியவரிடம் பாதி காசை ஆட்டைய போட்டிருந்தாலும் கடைசியில் மேலும் மூன்றாயிரத்தை கேட்டு வாங்கும் காட்சியில் தியேட்டரில் இருக்கும் அனைவரும் இது படம் என்பதையும் மறந்து அவனை மனதிர்க்குல் காரி உமிழ்திருப்பார்கள் ...  அதற்க்கு காரணம் அந்த பெரியவரின் நடிப்பு ....

அதே போல பிரகாஷ்ராஜ் , சூழ்நிழைகளாலும் ஒரு போலீஸ் அதிகாரியாளும் தீவிரவாதியாக தவறாக சிறையில் அடிபடும் கதாபாத்திரம் ... பல இடங்களில் ஓவர் ஆக்டிங் சில இடங்களில் நச் நடிப்பு... கமலின் காற்று இவரிடமும் அடிக்க ஆரம்பித்திருக்கிறது என்று எண்ணுகிறேன்... கடைசியில் அந்த போலீஸ் அதிகாரியை முதுகில் சுமந்து உயிரை காப்பாற்றி அவருக்கு நன்னயம் செய்து விடுகிறார்... இந்த கருத்தை சொல்வதற்க்கு பிரகாஷ்ராஜ் , சோனியா அகர்வால் , ஒரு போலீஸ் அதிகாரி வேடம் , ஒரு தீவிரவாதி கதாபாத்திரம் என்று தயாரிப்பாளருக்கு பெரிய செலவு வைத்திருக்கிறார் இயக்குனர் .. போங்கையா இதைதான் வள்ளுவன் உங்களை விட அழகாய் இரண்டே வரிகளில் ஒரு ஓலை சுவடி செலவில் சொல்லிவிட்டானே...


அனுஷ்கா பாத்திரம் எதற்க்கு என்றே தெரியவில்லை? அவருக்கு ஒரு அக்கா(அண்ணன்)  வேறு இந்த படத்தில்... வேசித்தனம் பண்ணும் அவர் கடைசியில் ஒரு சாவை பார்த்து திருந்தி விடுகிறாராம்... இப்படிபட்ட நம்பமுடியாத மனமாற்றங்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் மட்டுமே சாத்தியம்... பட விளம்பரங்களில் அரைகுறையாய் சூடேற்றும் வகையில் போஸ் கொடுத்து இளைங்கர்களை படத்திர்க்கு வர வைத்ததை தவிர வேறு ஒன்றும் இவர் படத்தில் பெரியதாய் செய்யவில்லை...


 படத்தின் ஒரே ஆறுதல் யுவனின் பாடல்கலும் அதற்க்கு சிம்புவின் நடனமும்தான்... ஆனால் எவண்டி உன்னை பெத்தான் கையில கெடச்சான் செத்தான் போன்ற வரிகள் தேவையா யுவன்? "நோ மணி நோ மணி நோ ஹனி நோ ஹனிடா" பாடல் செம்ம டப்பாங்குத்து....


பரத் என்ன சொல்ல? நீங்க இந்த படத்திர்க்கு தேவையா என்பதை படம் பார்த்த பொழுது நீங்களே நினைத்திருப்பீர்கள்... தேவையே இல்லாத கதாபாத்திரம் , அதற்க்கு இரண்டு பாடல்கள் , ஒரு சண்டை வேறு  .... இது இயக்குனர் தவறா? இல்லை வேறொருவரின் உள்குத்தா தெரியவில்லை?

தீவிரவாதிகள் என்றாலே அவர்கள் முஸ்லிம்களாய்த்தான் இருக்க வேண்டுமா? வேறு யாருமே தீவிரவாதம் செய்ததில்லையா? இன்னும் எததனை காலத்திற்க்குதான் இப்படியே காட்டுவீர்கள்?பார்த்து பார்த்து போர் அடித்து விட்டது.. வித்தியாசமா யோசிங்கப்பா?

வானம் மப்பும் மந்தாரமுமாய் கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்திருக்க வேண்டியது , ஆனால் அக்னி நட்சத்திரமாய் சுடுகிறது...

LinkWithin

Related Posts with Thumbnails