Followers

Copyright

QRCode

Thursday, May 5, 2011

பயோடேட்டா – (கேப்டன் , கனிமொழி )





                                 விஜயகாந்த்



பெயர் : விஜயகாந்த் @ கருப்பு எம்‌ஜி‌ஆர்

புனைபெயர் : அமுல் பேபி (உபயம் : ரம்யா கிருஷ்ணன்)

வயது : எவ்வளவு குடித்தாலும் தாங்கும் வயது  

சமீபத்திய தொழில் : வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பது

நீண்டகால தொழில் : நாடு நாடாக சென்று  பாகிஸ்தான் தீவிரவாதிகளை போட்டு தள்ளுவது

சமீபத்திய நண்பர் : சரக்கடிக்க  ஊற்றி  கொடுத்தவர்  

சமீபத்திய எதிரி : கலைஞர் டிவி கேமராமென்

நீண்டகால அடிமைகள் : முன்பு படம் பார்க்கவும் , இன்று ஓட்டு போடவும் வரிசையில் நிற்க்கும்  ரசிக கண்மணிகள்

பிடித்த விஷயம் : கட்சிக்காரர்களை  அடிப்பது

பிடிக்காத விஷயம் : அதை டீவியில் போடுவது

நம்புவது : எம்‌ஜி‌ஆர் கட்சியை

நம்பாதது : அந்த கட்சியின் தலைவியை..

சமீபத்திய சாதனை  : கூட்டணியில் இருந்தும் அம்மா காலில் விழாதது

நீண்டகால சாதனை : நடிக்கவே தெரியாமல் 150 படங்களில் நடித்தது

சமீபத்திய எரிச்சல் :  வடிவேலு

நீண்டகால எரிச்சல் : ரஜினிகாந்த்

மறந்து போனது : மக்களுடன் கூட்டணி 

மறக்க முடியாதது : சுகன்யா தொப்புளில் விட்ட பம்பரம் 

ஆக விரும்புவது : எம்‌.ஜி‌.ஆர்.ராக

ஆகி கொண்டு இருப்பது : வை.கோவாக



                                     கனிமொழி



பெயர் : கனிமொழி

புனைபெயர் : ஸ்பெக்ட்ரம் ராணி

வயது : சிறைக்கு போகும் வயது அல்ல 

சமீபத்திய தொழில் : குற்றபத்திரிக்கை வாசிப்பது

நீண்ட கால தொழில் : அப்பாவுக்காக தொலைபேசியில் பேரம் பேசுவது

சமீபத்திய நண்பர் : நீரா ராடியா

நீண்ட கால நண்பர் : சிறையில் இருக்கிறார்

சமீபத்திய எதிரி : சி‌பி‌ஐ

நீண்டகால எதிரி : மதுரையில் இருக்கிறார்

நம்புவது : அப்பா கருணாநிதியை   

நம்பாதது : கட்சி தலைவர்  கருணாநிதியை

சமீபத்திய சாதனை : கலைஞர் வம்சத்தில் முதல் பெண் கைதி  (ஆகப்போவது)  

நீண்டகால சாதனை : கவிதையே எழுதாமல் கவிஞர் ஆகியது

போக விரும்புவது : கோட்டைக்கு முதல்வராக

போக போவது : திஹாருக்கு கைதியாக

 மறந்து போனது   : சென்னை சங்கமம்

மறக்க விரும்புவது  : சி‌பி‌ஐ தன் பெயரை

மறக்க முடியாதது   :  சிறையில் அவரின் முகம்




                          இந்திய கிரிக்கெட் அணி



பெயர் : இந்திய கிரிக்கெட் அணி

தற்போதைய பெயர் : உலக சாம்பியன்

தலைவர் : சரத் பவார்

உபதலைவர்கள் : ஐ‌பி‌எல் உரிமையாளர்கள்

தொழில் : நாட்டுக்காக மைதானத்தில் விளையாடுவது

பிடித்த தொழில் : வீட்டுக்காக விளம்பரங்களில் நடிப்பது

விரும்புவது : எப்பொழுதும் ஜெயிப்பது

வெறுப்பது  : விரும்புவது  எப்பொழுதாவதுதான் நடப்பது


நண்பர்கள் : ஜெயித்தாள் பல்லாக்கு தூக்கும் ரசிகர்கள்  

எதிரிகள் : தோற்றால் பாடை கட்டும் அதே ரசிகர்கள்

பலம் : இன்னமும் அடித்து ஆடும் சச்சின்  

பலவீனம் : அவர் ஓய்வு பெரும் நாள் மிக அருகில் இருப்பது

சமீபத்திய சாதனை : 23 வருடம் கழித்து உலககோப்பையை வென்றது

நீண்டகால சாதனை :  உலகிலேயே பணக்கார அணி

  



18 comments:

Anonymous said...

முல் பேபி (உபயம் : ரம்யா கிருஷ்ணன்)//
இது புதுசா இருக்கே

Anonymous said...

லைஞர் வம்சத்தில் முதல் பெண் கைதி (ஆகப்போவது) //
சூப்பர்

Anonymous said...

விதையே எழுதாமல் கவிஞர் ஆகியது //
அப்படி போடு அருவாளை

Anonymous said...

சிறையில் அவரின் முகம் //
ராசா எங்கியோ போயிட்ட போ

"ராஜா" said...

// ராசா எங்கியோ போயிட்ட போ

ஹி ஹி .. நீங்க எந்த ராசாவா சொல்லுறீங்க ...

ராஜகோபால் said...

//நீண்டகால சாதனை : உலகிலேயே பணக்கார அணி
//

இதுல எவனும் அடிச்சுக்க முடியாது

ராஜகோபால் said...

//பலம் : இன்னமும் அடித்து ஆடும் சச்சின்
பலவீனம் : அவர் ஓய்வு பெரும் நாள் மிக அருகில் இருப்பது
//

பலம் நல்லாருக்கு பலவீனம் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு

ராஜகோபால் said...

//போக போவது : திஹாருக்கு கைதியாக //

ராமன் இருக்கும் இடம் தான சீதைக்கு அயோத்தி

ராஜகோபால் said...

//நம்புவது : “அப்பா “ கருணாநிதியை

நம்பாதது : “கட்சி தலைவர் கருணாநிதியை //

அண்ணன்மார்கள் எந்த பக்கம்

ராஜகோபால் said...

//சமீபத்திய சாதனை : கூட்டணியில் இருந்தும் அம்மா காலில் விழாதது//

மதில் மேல் பூனை எப்பொழுது வேண்டுமானாலும் விழலாம்

Karthikeyan said...

இந்த பதிவிற்காக தேர்ந்தெடுத்திருக்கும் படங்கள் இரண்டும் ரொம்ப அருமை.

//ராமன் இருக்கும் இடம் தான சீதைக்கு அயோத்தி// கலக்கல்... ஆனால் சீதையா??

ராஜகோபால் said...

//பிடித்த விஷயம் : கட்சிக்காரர்களை அடிப்பது

பிடிக்காத விஷயம் : அதை டீவியில் போடுவது //

அடிக்கற கைதான் அணைக்கும் அத தெரிஞ்சிகாத பசங்க

"ராஜா" said...

//கலக்கல்... ஆனால் சீதையா??

இது நக்கல்

"ராஜா" said...

// அண்ணன்மார்கள் எந்த பக்கம்

மூன்றில் ஒன்று ஒழிந்தால் அவர்களுக்கு நிம்மதிதானே

"ராஜா" said...

// மதில் மேல் பூனை எப்பொழுது வேண்டுமானாலும் விழலாம்

எனக்கென்னவோ இவர் அம்மா காலில் விழ மாட்டார் என்றே தோன்றுகிறது ..

"உழவன்" "Uzhavan" said...

சாதனை : கலைஞர் வம்சத்தில் முதல் பெண் கைதி (ஆகப்போவது)//

unga vaakku palikkuma? :-)

பனித்துளி சங்கர் said...

////////நீண்டகால தொழில் : நாடு நாடாக சென்று பாகிஸ்தான் தீவிரவாதிகளை போட்டு தள்ளுவது //////////


பாவம் கேப்டன்

NKS.ஹாஜா மைதீன் said...

சமீபத்திய எதிரி : கலைஞர் டிவி கேமராமென்


செம காமெடி போங்க...

LinkWithin

Related Posts with Thumbnails