விஜயகாந்த்
பெயர் : விஜயகாந்த் @ கருப்பு எம்ஜிஆர்
புனைபெயர் : அமுல் பேபி (உபயம் : ரம்யா கிருஷ்ணன்)
வயது : எவ்வளவு குடித்தாலும் தாங்கும் வயது
சமீபத்திய தொழில் : வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பது
நீண்டகால தொழில் : நாடு நாடாக சென்று பாகிஸ்தான் தீவிரவாதிகளை போட்டு தள்ளுவது
சமீபத்திய நண்பர் : சரக்கடிக்க ஊற்றி கொடுத்தவர்
சமீபத்திய எதிரி : கலைஞர் டிவி கேமராமென்
நீண்டகால அடிமைகள் : முன்பு படம் பார்க்கவும் , இன்று ஓட்டு போடவும் வரிசையில் நிற்க்கும் ரசிக கண்மணிகள்
பிடித்த விஷயம் : கட்சிக்காரர்களை அடிப்பது
பிடிக்காத விஷயம் : அதை டீவியில் போடுவது
நம்புவது : எம்ஜிஆர் கட்சியை
நம்பாதது : அந்த கட்சியின் தலைவியை..
சமீபத்திய சாதனை : கூட்டணியில் இருந்தும் அம்மா காலில் விழாதது
நீண்டகால சாதனை : நடிக்கவே தெரியாமல் 150 படங்களில் நடித்தது
சமீபத்திய எரிச்சல் : வடிவேலு
நீண்டகால எரிச்சல் : ரஜினிகாந்த்
மறந்து போனது : மக்களுடன் கூட்டணி
மறக்க முடியாதது : சுகன்யா தொப்புளில் விட்ட பம்பரம்
ஆக விரும்புவது : எம்.ஜி.ஆர்.ராக
ஆகி கொண்டு இருப்பது : வை.கோவாக
கனிமொழி
பெயர் : கனிமொழி
புனைபெயர் : ஸ்பெக்ட்ரம் ராணி
வயது : சிறைக்கு போகும் வயது அல்ல
சமீபத்திய தொழில் : குற்றபத்திரிக்கை வாசிப்பது
நீண்ட கால தொழில் : அப்பாவுக்காக தொலைபேசியில் பேரம் பேசுவது
சமீபத்திய நண்பர் : நீரா ராடியா
நீண்ட கால நண்பர் : சிறையில் இருக்கிறார்
சமீபத்திய எதிரி : சிபிஐ
நீண்டகால எதிரி : மதுரையில் இருக்கிறார்
நம்புவது : “அப்பா “ கருணாநிதியை
நம்பாதது : “கட்சி தலைவர் கருணாநிதியை
சமீபத்திய சாதனை : கலைஞர் வம்சத்தில் முதல் பெண் கைதி (ஆகப்போவது)
நீண்டகால சாதனை : கவிதையே எழுதாமல் கவிஞர் ஆகியது
போக விரும்புவது : கோட்டைக்கு முதல்வராக
போக போவது : திஹாருக்கு கைதியாக
மறந்து போனது : சென்னை சங்கமம்
மறக்க விரும்புவது : சிபிஐ தன் பெயரை
மறக்க முடியாதது : சிறையில் அவரின் முகம்
இந்திய கிரிக்கெட் அணி
பெயர் : இந்திய கிரிக்கெட் அணி
தற்போதைய பெயர் : உலக சாம்பியன்
தலைவர் : சரத் பவார்
உபதலைவர்கள் : ஐபிஎல் உரிமையாளர்கள்
தொழில் : நாட்டுக்காக மைதானத்தில் விளையாடுவது
பிடித்த தொழில் : வீட்டுக்காக விளம்பரங்களில் நடிப்பது
விரும்புவது : எப்பொழுதும் ஜெயிப்பது
வெறுப்பது : விரும்புவது எப்பொழுதாவதுதான் நடப்பது
நண்பர்கள் : ஜெயித்தாள் பல்லாக்கு தூக்கும் ரசிகர்கள்
எதிரிகள் : தோற்றால் பாடை கட்டும் அதே ரசிகர்கள்
பலம் : இன்னமும் அடித்து ஆடும் சச்சின்
பலவீனம் : அவர் ஓய்வு பெரும் நாள் மிக அருகில் இருப்பது
சமீபத்திய சாதனை : 23 வருடம் கழித்து உலககோப்பையை வென்றது
நீண்டகால சாதனை : உலகிலேயே பணக்கார அணி
18 comments:
முல் பேபி (உபயம் : ரம்யா கிருஷ்ணன்)//
இது புதுசா இருக்கே
லைஞர் வம்சத்தில் முதல் பெண் கைதி (ஆகப்போவது) //
சூப்பர்
விதையே எழுதாமல் கவிஞர் ஆகியது //
அப்படி போடு அருவாளை
சிறையில் அவரின் முகம் //
ராசா எங்கியோ போயிட்ட போ
// ராசா எங்கியோ போயிட்ட போ
ஹி ஹி .. நீங்க எந்த ராசாவா சொல்லுறீங்க ...
//நீண்டகால சாதனை : உலகிலேயே பணக்கார அணி
//
இதுல எவனும் அடிச்சுக்க முடியாது
//பலம் : இன்னமும் அடித்து ஆடும் சச்சின்
பலவீனம் : அவர் ஓய்வு பெரும் நாள் மிக அருகில் இருப்பது
//
பலம் நல்லாருக்கு பலவீனம் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு
//போக போவது : திஹாருக்கு கைதியாக //
ராமன் இருக்கும் இடம் தான சீதைக்கு அயோத்தி
//நம்புவது : “அப்பா “ கருணாநிதியை
நம்பாதது : “கட்சி தலைவர் கருணாநிதியை //
அண்ணன்மார்கள் எந்த பக்கம்
//சமீபத்திய சாதனை : கூட்டணியில் இருந்தும் அம்மா காலில் விழாதது//
மதில் மேல் பூனை எப்பொழுது வேண்டுமானாலும் விழலாம்
இந்த பதிவிற்காக தேர்ந்தெடுத்திருக்கும் படங்கள் இரண்டும் ரொம்ப அருமை.
//ராமன் இருக்கும் இடம் தான சீதைக்கு அயோத்தி// கலக்கல்... ஆனால் சீதையா??
//பிடித்த விஷயம் : கட்சிக்காரர்களை அடிப்பது
பிடிக்காத விஷயம் : அதை டீவியில் போடுவது //
அடிக்கற கைதான் அணைக்கும் அத தெரிஞ்சிகாத பசங்க
//கலக்கல்... ஆனால் சீதையா??
இது நக்கல்
// அண்ணன்மார்கள் எந்த பக்கம்
மூன்றில் ஒன்று ஒழிந்தால் அவர்களுக்கு நிம்மதிதானே
// மதில் மேல் பூனை எப்பொழுது வேண்டுமானாலும் விழலாம்
எனக்கென்னவோ இவர் அம்மா காலில் விழ மாட்டார் என்றே தோன்றுகிறது ..
சாதனை : கலைஞர் வம்சத்தில் முதல் பெண் கைதி (ஆகப்போவது)//
unga vaakku palikkuma? :-)
////////நீண்டகால தொழில் : நாடு நாடாக சென்று பாகிஸ்தான் தீவிரவாதிகளை போட்டு தள்ளுவது //////////
பாவம் கேப்டன்
சமீபத்திய எதிரி : கலைஞர் டிவி கேமராமென்
செம காமெடி போங்க...
Post a Comment