Followers

Copyright

QRCode

Friday, October 28, 2011

வேலாயுதம் - ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கே


முதலில் பத்து வருடங்களுக்கு முன்னாள் வந்த ஒரு தெலுங்கு  படத்தை இப்பொழுது தமிழில் எடுத்து தமிழனின் ரசனையை கேவலபடுத்தியதர்க்காக இயக்குனருக்கு ரசிகர்கள் சார்பில் கண்டனங்கள் .... ஷங்கர் 1990 இல் இருந்து 2004 வரை கசக்கி பிழிந்து சாறு எடுத்த ஒரு கதையை, அவரே இனி இது உதவாது  என்று 8 வருடங்களுக்கு முன்னரே தூக்கி  குப்பையில் போட்ட கதையை மீண்டும் தோண்டி  எடுத்திருக்கிறார்கள் .... குப்பையை தோண்டினால் வைரமா வரபோகிறது குப்பைதான் வந்திருக்கிறது .... கேப்டன் முதல் சியான் வரை பலரும் செய்த மக்களை காப்பாற்றும் சூப்பர் ஹீரோ வேலையை கொஞ்சம் கூட அச்சு பிசகாமல் இந்த படத்தின் ஹீரோவும் செய்கிறார் ... ஆனால்மக்களை ரசிக்க வைக்க  எட்டு வருடங்களுக்கு முன்னரே அந்நியனில் இதே மக்களை காப்பாற்றும் சூப்பர் ஹீரோ கதைக்கு multiple personality என்று ஒரு புத்தம் புது ஊறுகாய் தேவைப்பட்டது ஷங்கருக்கு  .... ஆனால் இவர்கள் டி ஆர்  காலத்து தங்கச்சி சென்டிமென்ட்டை தூசி தட்டி ஊறுகாய் ஆக்கியிருக்கிறார்கள் ... பாஸ் இந்த ஊசி போன ஊறுகாயை எத்தனை நாளைக்குதான் நாங்க சாப்பிடுறது ...

இந்த படத்தின் ஆக பெரிய பலவீனம் என்னவென்றால் கதை திரைகதை காட்சியமைப்புகள் , பாடல்கள் , என்று எதிலுமே புதுசாக எதுவும்  கிடையாது எல்லாமுமே யூகிக்க கூடியது என்பதுதான்... முதல் பாதியில் ஹீரோவும் அவர் தங்கையும் காமெடி பண்ணுகிறோம் என்று சொல்லி மொக்கை போடுவார்கள்.. தியேட்டரில்  இருந்த ஹீரோவின்  ரசிகர்களை தவிர வேறு யாரும் சிரிக்கவில்லை ... அந்த காமெடிக்கு  சிரித்து கொண்டிருந்த ஒரு  ரசிகனை அவருடைய நண்பர்களே ஏதோ வேற்று கிரக வாசியை பார்ப்பது போல பார்த்தார்கள் ... முதல்  பாதியில் கொஞ்சமேனும் ரசிக்க வைத்த விஷயம் சந்தானம் வரும்   சில காட்சிகள்  ... அதை தவிர்த்து பெரியதாக ஒன்றும் இல்லை  ...

இரண்டாம் பாதிதான் படத்தின் மிக பெரிய மொக்கை ....வழக்கம் போல மக்களை காப்பாற்றுகிறேன்  என்று படம் பார்க்கும் நம்மை சாகடிக்கிறார் ஹீரோ....  கொஞ்சம்கூட சுவாரஸ்யமே இல்லாத காட்சியமைப்புகள் , லாஜிக்கே  இல்லாத திரைகதை , ஏற்கனவே ஷங்கர் படங்களில் கேட்டு கேட்டு புளித்துப்போன வசனங்கள் , மொக்கையான கிளைமாக்ஸ் என்று பொறுமையை அளவுக்கு மீறி சோதித்து அனுப்புகிறார்கள் ... இந்த படம் ஒரு பத்து வருடங்களுக்கு முன் வந்திருந்தால் ரசித்திருக்கலாம் .... இன்றைய காலகட்டத்தில் இதை போன்ற படங்கள் கண்டிப்பாக பார்பவர்களுக்கு கடுப்பைதான் வரவழைக்கும் ...  வேலாயுதமும் அதைதான் செய்கிறது  ....

ஜெனிலியா , ஹன்சிகா , சரண்யா மோகன் என்று எல்லாருமே வீணடிக்கபட்டிருக்கிறார்கள்  ... மொத்தத்தில் என்னை பொறுத்தவரை வேலாயுதம் மழுங்கி போன பழைய ஆயுதம்  ... 


(இந்த படத்தை பற்றி எழுதம் போது  ஏதோ கே டிவி யில் பார்த்த பழைய படத்தை பற்றி எழுதுவது போல ஒரு பீல் வருவதால் இதற்க்கு மேல் எதுவும் எழுத பிடிக்கவில்லை... இந்த படத்தையும் நல்லா இருக்கு என்று சொல்லும் இந்த பட ஹீரோவின்  ரசிகர்களை பார்க்கும் போது அவர்கள் எவ்வளவு காய்ந்து போய் இருக்கிறார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது ... இனிமேலாவது அவர்களின் ஆஸ்தான நடிகர் இதை உணர்ந்து நல்ல படங்கள் கொடுத்தால் அவருக்கும் அவர் ரசிகர்களுக்கும்  நல்லது ... இல்லை எனக்கு சினிமாவே  வேண்டாம் நான் முதலமைச்சர் ஆக போகிறேன் என்று அரசியலில் இறங்கி விட்டால்  தமிழ் சினிமாவுக்கே நல்லது)




Wednesday, October 26, 2011

ரா ஒன்



  .. 7 ஆம் அறிவு படம் மொக்கை என்று நேற்று இரவே தெரிந்துவிட்டபடியால்  வேறு வழியே  இல்லாமல் இந்த படம் பார்க்க நேர்ந்தது ... இந்த படம் பார்க்க இன்னொரு முக்கிய காரணம் இதற்க்கு முன் DVD யில் நான் பார்த்த ஷாருக்கானின் சில ஹிட் படங்கள் .... ஆனால் திரையில் நான் பார்க்கபோகும் முதல் ஷாருக்கான் படமே இவ்வளவு பெரிய மொக்கையாக இருக்கும் என்று நினைக்கவே இல்லை ...  படம் வருவதற்கு முன்னாள் இது எந்திரன் படத்தின் காப்பி என்று பரபரப்பாக பேசப்பட்டது... தானாக யோசித்து இப்படி ஒரு அட்டு படம் எடுத்ததற்கு பேசாமல் எந்திரனையே காப்பி அடித்திருக்கலாம் ...    ரஜினி ஒரு காட்சியில் வருகிறார் என்பதை தவிர எந்திரனுக்கும் இதற்கும் வேறு சம்பந்தம் கிடையாது... ஆனால் tron legacyயை கொஞ்சம் உல்ட்டா செய்து இந்த படம் எடுத்திருக்கிறார்கள்... 


இந்த படம் ஒரு வகையில் tron legacy படம் போன்றதுதான் .. அதில் நிஜ உலகில் இருந்து டிஜிட்டல் உலகிற்குள் மனிதர்கள் செல்லுவார்கள்... இதில் டிஜிட்டல் உலகில் இருந்து வீடியோ கேம் கதாபாத்திரங்கள் நிஜ உலகிற்குள் நுழைகின்றன... ஷாருக்கான் ஒரு வீடியோ கேம் ப்ரோகிராமர்... அவர் எப்பொழுதும் வீடியோ கேமில் ஹீரோவுக்கே அதிக பவர் இருக்கும்படியாக வடிவமைப்பார் .. ஆனால் அவரின் மகள் ஒரு சண்டை பிரியை .. அவளுக்கு ஹீரோவை விட வில்லனையே அதிகம் பிடிக்கும் ... காரணம் ஹீரோவுக்கு சில rules and regulations  இருக்கும் , ஆனால் வில்லனுக்கு அது கிடையாது ... அவன்  எதற்கும் கட்டுப்பட தேவையில்லை , ரொம்ப கூலாக இருந்துகொண்டு தான் நினைத்ததை முடிக்க எது வேண்டுமானாலும் செய்ய வில்லனால் மட்டுமே முடியும் (சிம்பிளா நம்ம மங்காத்தா தல மாதிரி) , தன மகளின் ஆசைக்கு கட்டுப்பட்டு ஷாருக் அப்படி ஒரு வில்லன் கதாபத்திரத்தை artificial intelligence உதவியுடன் வடிவமைக்கிறார் ... கூடவே அவனை அழிக்க ஒரு ஹீரோ... வில்லன் ரா ஒன் ... ஹீரோ ஜி ஒன் ... ஒரு எதிர்பாராத சயமத்தில் ரா ஒன் நிஜ உலகிற்கு ஷாருக்கின் மகளை கொல்லும் திட்டத்தோடு  நுழைகிறது ... ஷாருக்கின் மகள் எப்படி ரா ஒன்னை ஜி ஒன் உதவியுடன் அழிக்கிறாள் என்பதே மீதி கதை ... 

படத்தின் ஒரே பலம் ஷாருக் மட்டுமே  ... நேர்மையான ப்ரோக்ராமர் மற்றும் ஜி ஒன் என்று ரெட்டை வேடம் , முதல் பாதி முழுவதும் படம் கொஞ்சம் கலகலப்பாக செல்ல ஒரே காரணம் ஷாருக் மட்டுமே... மைக்கல் ஜாக்சன் வேடம் போட்டு  அவர் போடும் கெட்ட ஆட்டம் கலக்கல் ... பகவத் கீதையில் இருந்து தன மகளுக்கு நேர்மையின் அவசியத்தை உணர்த்தும் காட்சிகளில் பக்குவம் தெரிகிறது ... ஆனால் அவர் கதாபாத்திரம் இடைவேளைக்கு கொஞ்சமே கொஞ்சம் முன்னாள் சாகடிக்கப்பட்டு விடுகிறது... அதிலிருந்து ஜி ஒன்னின் அட்டகாசம்... ஜி ஒன்னின் அறிமுகம் சும்மா ரஜினி அறிமுகம் போல உள்ளுக்குள்ள நமக்கு அதிருது ... ஆனால் சுவாரசியமில்லாத திரைகதை , ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் என்று இயக்குனர் சொதப்பியதால்  கொஞ்ச நேரத்திலேயே நமக்கு நமநமத்து போகிறது.... 


ரஜினி வரும்  காட்சி பற்றி சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை .. வழமையாக ஷாருக்கான் படங்களில் மற்ற நடிகர்கள் எப்படி பயன்படுத்தபடுவார்களோ அதேபோல இவரும் நக்கலடிக்கவே பயன்படுத்தப்பட்டு இருக்கிறார் ... ரஜினியை காட்டும் போது கரீனா கபூர் தலையில் முக்காடு போட்டு கன்னத்தில் போட்டு கொள்ளுவதை ரஜினியின் தீவிர ரசிகர்கள் எப்படி எடுத்துகொள்ளுவார்களோ தெரியாது... எனக்கு ரஜினியோடு சேர்த்து நம்மையும் நக்கலடிப்பதை போலவே தெரிகிறது...   அந்த காட்சியில் ரஜினியை பார்க்கும் போது கந்தசாமியில் கிருஷ்ணாவை பார்த்தது போலவே இருந்தது ... வயசும் நோயும் சேர்ந்து ரஜினியின் கம்பீரத்தை கொஞ்சம் ஆட்டம் காண வைத்துவிட்டனவோ?    

படத்தின் மிக பெரிய பலவீனம் லாஜிக் ஓட்டைகள் படம் முழுவதும் நிரம்பி கிடப்பதுதான் , குறிப்பாக வீடியோ கேம் கதாபாத்திரங்கள் எப்படி நிஜ உலகிற்குள் நுழைகின்றன , கேமில் simulation மூலம் இயங்கும் அவைகள் நிஜ உலகில் எவ்வாறு இயங்குகின்றன என்பதற்கான ஏற்றுக்கொள்ளும் படியான விளக்கம் எதுவும் படத்தில்  இல்லை , அதேபோல் இரண்டாம் பாதி முழுவதும் எளிதில் யூகித்து விட கூடிய காட்சியமைப்புகள்..  நிஜ உலகில் நடக்கிறதா இல்லை டிஜிட்டல் உலகில் நடக்கிறதா என்று புரிந்து கொள்ளமுடியாத கிளைமாக்ஸ்  என்று பல விஷயங்கள் என்னதான் கிராபிக்ஸ் மலைக்க வைத்தாலும் படத்தோடு நம்மை ஒன்றவிடாமல் செய்து விடுகின்றன... 

நான் இந்த படத்தை சென்னை கோயம்பேடு ரோகினி காம்ப்ளெக்ஸ்சில் பார்த்தேன் ... அதில் இன்று வெளியான மூன்று படங்களுமே திரையிடபட்டிருந்தன ... ரா ஒன் திரையிடப்பட்ட திரையரங்கில் காலையில் வேலாயுதம் ஸ்பெஷல் ஷோ திரையிடபட்டிருந்தது... நாங்கள் திரையரங்கிற்கு வெளியே நின்றுகொண்டிருந்த போது வேலாயுதம் கிளைமாக்ஸ் ஓடிகொண்டிருந்தது ... அப்பொழுது இருவர் தியேட்டரை விட்டு வெளியே வந்தார்கள்  .. ஆனால் தியேட்டர் ஊழியர்கள் அவர்களை வெளியே போகவிடாமல் வீட்டுக்கு போகணும் சார் என்று  அவர்கள் கெஞ்சியும்  கேட்காமல் அவர்களை மீண்டும் தியேட்டருக்குள் அனுப்பி கதவை மூடிவிட்டார்கள்... அதை பார்த்து கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் விஜயை பற்றி வரும் எஸ்எம்எஸ் எல்லாம் உண்மையாகத்தான் இருக்கும் போல என்று நக்கல் விட்டார் ... அதேபோல் இன்னொரு திரையரங்கில் 7 ஆம் அறிவு பார்த்து விட்டு வெளியே வந்த கும்பலில் ஒருவர் எங்களை நோக்கி யாராவது 7 ஆம் அறிவு படம் பார்க்க  நின்றுகொண்டு இருந்தால்  இப்படியே தப்பிச்சி ஓடிருங்க என்று எச்சரித்து விட்டு சென்றார் ... முதல் நாள் மௌத் டாக்கில் இருந்து ஒன்று மட்டும் உறுதியாகிவிட்டது ... 7 ஆம் அறிவோ இல்லை வேலாயுதமோ ஹிட் ஆக வாய்ப்பு இருக்கே  தவிர பெரிய அளவில் வசூலை குவிக்க முடியாது என்பதுதான் அது ... ஸோ இந்த வருடத்தின் ஒரே ப்ளாக்பஸ்டர் தலையோட மங்காத்தா மட்டும்தான் ... 2011  தமிழ் சினிமாவை பொறுத்தவரை தல வருஷம்... அதே போல ஒபெநிங்கை பொறுத்த வரை தலைதான் கிங் என்பதை ஆகஸ்ட் 31 மற்றும் இந்த தீபாவளிக்கு தியேட்டரில் கூடிய கூட்டங்கள் அழுத்தம் திருத்தமாக நிரூபித்துவிட்டன ... 5  நாளில் 27 கோடி இல்லை அதில் பாதி 14 கோடி கூட இந்த படங்களால் வசூலிக்க முடியாது என்பது இந்த ஒரே நாளில் தெரிந்துவிட்டது ...    

THIS DEEPAVALI CLEARLY SHOWS THALA IS THE ONE AND ONLY EMPEROR OF OPENING  IN TAMIL CINEMA

Thursday, October 20, 2011

வாகை சூடா வா..




இது வாத்தியார்களுக்கான படம் ... இன்று நம் தலைமுறையில் நாமெல்லாம் அமெரிக்காவில் அமர்ந்து பொட்டி  தட்டி  கொண்டிருக்கிறோம் என்றாள் , ஒரு காலத்தில் நம் பாட்டனும் பூட்டனும் வாழ்ந்த குக்கிராமத்திற்க்கு தன் சொந்தங்களையும் , பந்தங்களையும் விட்டு விட்டு தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து வந்து பள்ளிக்கூடம் அமைத்து பாடம் சொல்லிக்கொடுத்த அந்த வாத்தியும் ஒரு முக்கிய காரணம்...  எந்திரனில் உச்சம் தொட ரஜினிக்கு அபூர்வ ராகங்கள் எவ்வளவு உதவியதோ  அந்த அளவிற்க்கு நம் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்க்கு  உதவியவர்கள்  அவர்கள்...  

பசி எடுக்கிற ஒருவனுக்கு மீனை பிச்சை போடுவதை விட அவனுக்கு மீன் பிடிக்க கற்று கொடு என்று ஜப்பானோ சீனாவோ ஏதோ ஒரு நாட்டு பழமொழி சொல்லுகிறதாம்... ஆண்டாண்டு காலமாய் அரசனிடமும் அடுத்து பண்ணைகளிடமும் கடைசியாய்  ஆங்கிலேயனிடமும் பிச்சை எடுத்து கொண்டிருந்த நமக்கு மீன் பிடிக்க கற்று கொடுத்த சூத்திரதாரிகள் அவர்கள். அவர்களின் பணி அவ்வளவு ஒன்றும் எளிமையானது அல்ல... சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பும் இந்த காலத்திலேயே நம் நாட்டில் படித்தவர்களின் எண்ணிக்கை 60 சதவீதம்தானாம்.. நிலாவில் பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்த அந்த காலத்தில் நம் நிலமை எப்படி இருந்திருக்கும்?... 1.76 லட்சம் கோடி ஊழல் செய்யும் அளவுக்கு பொருளாதார வசதி நிறைந்து கிடக்கும் இந்த காலத்திலேயே நம் நாட்டில் 4 கோடி குழந்தை தொழிலாளர்கள் இருக்கிறார்களாம்... அப்படி என்றாள் நாப்பது அம்பது வருடங்களுக்கு முன்னாள்?

ஊருக்கு ஒரு கோவில் அமைப்போம் என்ற வாசகத்தை காமராஜர் ஊருக்கு ஒரு பாடசாலை அமைப்போம் என்று மாற்றி அமைக்க ஆரம்பித்த 60களின் இறுதியில் நடக்கும் கதைதான் வாகைசூட வா.. ஆனால் இந்த கதையில் நம் ஒவ்வொருவரின் வரலாறும் பூடகமாக ஒழிந்திருக்கிறது... செங்கல் சூளையும் , அதில் இரவு பகலாக உழைக்கும் மக்களும் ,ஆண்டையின் ஆட்கள் லாவமாக அவர்களை ஏமாற்றுவதும் அது தெரியாமல் ஆண்டைக்கு அவர்கள் விசுவாசமாக இருப்பதும் என , தமிழனின் ஓட்டு மொத்த வரலாறும் இந்த குறியீடுகளில் லாவகமாக பொருந்தி போகிறது...

ஒரு சமூகத்திர்க்கு நல்லது செய்ய வந்த ஒருவன் பிற்காலத்தில் அந்த சமூகத்தின் அழிவிர்க்கு மறைமுகமாக காரணமாகிறான். அப்படி ஒரு கதாபாத்திரமாக வரும் பைத்தியம் பிடித்து அலையும் குருவிகாரன் எனக்கு காந்தியையும் , அண்ணாவையும் ஞாபகபடுத்தி சென்றான் ...அவர்களும் உயிரோடு இன்று இருந்தால் இப்படித்தான் பைத்தியம் பிடித்து அலைந்திருப்பார்கள்... பொருளாதாரத்தை முன்னேற்றுகிறோம் என்று காட்டையும் நாட்டையும் அழித்து நாம் கட்டி கொண்டிருக்கும் தொழிற்சாலைகளாலும்  , சுரங்கங்களாலும் , குருவிக்கு இடம் இல்லை என்று படத்தில் குருவிகாரன் பேசும் வசனங்கள்  மனிதனுக்கு இடம் இல்லை என்று உருமாறும் காலம் வெகுதொலைவில் இல்லை...

இப்படி நம் வாழ்வியலை அருமையாக திரையில் காண்பித்திருக்கும் அதே வேளையில் திரைபடங்களுக்கே உரிய கொண்டாட்டங்களும் திரையில் விரிகிறது.. சர சர சாரகாத்து பாடல் அந்த கொண்டாட்டங்களின் உச்சம்... தூண்டில் இழுபடுவதை வைத்தே மாட்டி இருப்பது எந்த மீன் என்று சரியாக சொல்லுவது , ரேடியோவை ஆஃப் செய்ய தெரியாமல் தண்ணீரில் முக்குவது , முதன் முதலில் எழுத கற்று கொள்ளும் ஒருவன் னாவை செங்களில் எழுதுவது , பின்னர் மழைவந்து அந்த செங்கல் மொத்தவும் கரைந்து விடுவது , நான் போறேன் , நீ இருக்கையா? , விதைக்கவே இல்லை நீ அறுக்குற, என்று குருவிகாரன் பேசும் வசனங்கள் இப்படி இயக்குனர் பல இடங்களில் அட போட வைக்கிறார்...

செங்களை எடுத்து செல்ல வரும் லாரிக்காரன் செங்களை லாரியில் ஏற்ற உதவிய சிறுவர்களுக்கு காசை குறைத்து கொடுத்து ஏமாற்ற, அவர்கள் காசை சரியாக எண்ணி எங்கள் உழைப்பிற்க்கு இது போதாது இன்னும் இரண்டு ரூபாய் கொடு என்று அவனிடம் கேட்டு வாங்குவதாய் படம் நிறைவடைகிறது... கல்வியின் அவசியத்தை இதைவிட வேறு எப்படி சொல்லிவிட முடியும்... ஆனால் நம் சமூகம் இன்னமும் இதை உணரவில்லை , இல்லையென்றால் படத்தின் இறுதியில் இது நாடு முழுவதும் இருக்கும் குழந்தை தொழிலாளர்களுக்கு சமர்ப்பணம் என்னும் வாசகம் போடும் அளவுக்கு  கேவலமான நிலமை நமக்கு நேர்ந்திருக்காது...

கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று மறைமுகமாக மக்களை ஏமாளியாக்கி காசு சம்பாதிக்காமல் (உதாரணம் எங்கேயும் எப்போதும்) , தான் சொல்லவந்த கருத்தை கொஞ்சம் கூட எதர்க்கும் வளைந்து கொடுக்காமல் இயல்பாக சொல்லியதார்க்காகவே சற்குணத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடலாம்...

களவாணியில் ருசியான கிராமத்து கறி விருந்து படைத்த சற்குணம் , இம்முறை படைத்திருப்பது சத்தான கேப்பை கூழ்... மார்க்கெட்டில் விலை போகாது என்றாலும் இன்றைய நிலமையில் நமக்கு தேவையான பதார்த்தம்தான் இது... 

Sunday, October 16, 2011

வேலாயுதம் வரட்டும் – மினி தொடர்கதை பாகம் 2


முதல் பாகம் படிக்க

சுரேசும் , அவன் நண்பன் ஜோஸெப்பும் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு விடுமுறையில் பொழுதுபோகாமல் சிம்ரனுக்காக தமிழ்மணி திரையரங்கில் வாலி படம் பார்க்க சென்றிருந்தனர்... அதுதான் அவர்கள் பார்க்கும் முதல் அஜீத் படம், அதில் வரும் அஜித்தின் வில்லத்தனம் எப்படியோ சுரேசுக்கு பிடித்துவிட , அதுவரை தளபதியின் கோட்டையாக இருந்த ஊரில் முதல் அஜீத் ரசிகன் ஜனனம் ஆனான்... வாலி படத்தை அவன் சார்ந்த எல்லாரையும் பார்க்க வைத்து அவர்களையும் அஜீத் ரசிகனாக உருமாற்றினான்.. ஏற்கனவே சுசி மற்றும் அவன் கூட்டத்தினர் மேல் கடுப்பில் இருந்த இவர்கள் , சுரேஷ் அவர்கள் கூட்டத்தில் இருந்து வந்தால் போதும் என்ற நினைப்பில் தங்களை அஜீத் ரசிகர் படையில் இணைத்து கொண்டனர்...



வில்லன் படமும் பகவதியும் ஒன்றாக வெளிவந்தபோதுதான் இவர்களுக்குள் முதல் மோதல் வெடித்தது , இரு திரைபடங்களும் அருகருகே இருக்கும் திரையரங்குகளில் வெளிவந்தது, வில்லன் படத்துக்கு பெரிய அளவில் கூட்டம் திரண்டு  நிற்க,  ஷாஜகான்  தமிழன் போன்ற படங்களின் தாக்கத்தால் பகவதிக்கு சொல்லிக்கொள்ளும் கூட்டம் இல்லை... இதை பார்த்த சுரேஷ் கோஷ்டியில் ஒருவன் , என்னடா உங்க தளபதிக்கு கூட்டமே இல்லையா, பேசாம எங்க தலைக்கு அல்லக்கையா ஒரு படத்துல நடிக்க சொல்லு உங்காளுக்கும் கூட்டம் கூடும் என்று நக்கல் பண்ண அன்று இரவு ஊருக்குள் மினி கலவரமே உருவானது... தன் தலைவனை அசிங்கபடுத்தி விட்டார்களே என்ற துக்கத்தில்  அன்று தூக்கத்தை தொலைத்த சுசியால்  அடுத்த வருடம் தீபாவளிக்கு ஆஞ்சநேயா வந்து மூன்றே நாட்களில் கூட்டம் குறைந்து விட  என்னங்கடா உங்க ஆளு படத்துக்கு கூட்டமே இல்லையாமே , பேசாம  எங்க தளபதிக்கு உங்க தலயை ஜோடியா நடிக்க சொல்லுங்க , கூட்டம் கூடும் என்று பதிலுக்கு அவர்களை நக்கல் அடித்த பின்னர்தான் நிம்மதியாக தூங்கமுடிந்தது...இப்படி அஜீத் படம் ஓடினால் அவர்கள் இவர்களை அசிங்கபடுத்துவதும் , விஜய் படம் ஓடினால் இவர்கள் அவர்களை அசிங்கபடுத்துவதுமாக தங்களை அறியாமல் ஒருவருக்கொருவர் வெறியேற்றிக்கொண்டு அலைந்தனர்...      



மங்காத்தா படம் வெளிவந்த நாள், அஜித்தின் அம்பதாவது படம் என்பதால் சுரேஷ் கோஷ்டி பயங்கர உற்சாகத்துடன் படம் பார்க்க வந்திருந்தனர்... தங்கள் தலைவனின் அம்பதாவது படம் ஊத்திய வருத்தத்தில் இவனின் படமும் ஓடிவிடக்கூடாது என்ற ஆவலோடு சுசி கோஷ்டியினரும் அதே திரையரங்கிற்குள் நுழைந்தனர்... படம் ஆரம்பித்து தல போலீஸ் உடையில் தொப்பையோடு நடந்து வந்தார்... யே இங்க பாருடா சிரிப்பு போலீஸ என்று சுசி கோஷ்டியில் ஒருவன் நக்கல் அடிக்க , சுரேஷ் கோஷ்டியினருக்கு கோபம் தலைக்கெறியது , உடனே அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று தோன்றினாலும் , அசல் ,ஏகன் கொடுத்த அனுபவத்தால் அமைதியானார்கள்... ஆனாலும் இடைவேளை முடிந்து மச்சி ஓபன் தி பாட்டில் பாடல் முடிந்ததும்  படம் உறுதியாக ஹிட் என்று தெரிந்தவுடன் அதற்க்கு மேல் அமைதி காக்க முடியாமல் சுரேஷ் கோஷ்டியில் ஒருவன் எழுந்து   டேய் அம்பதாவது படம்னா இப்படி இருக்கணும்டா... உங்க தளபதியை எங்க தல ***தை பிடிச்சி ***ப சொல்லுங்கடா என்று கத்த , இதை கேட்டவுடன் ஒருவிதமான பரவச நிலையில் தியேட்டர் முழுவதும் இருந்த ஆயிரக்கணக்கான தல ரசிகர்களும் சேர்ந்து கத்த , சுசி கோஷ்டியினர்க்கு பெரிய அவமானமாகிவிட்டது...   


(தொடரும்)

"வேலாயுதம் வரட்டும்" – எக்ஸ்பிரஸ் தொடர்கதை


(இது என்னுடைய 200 ஆவது பதிவு ... என்னுடைய வலைப்பூவில் கதைகள் எழுத வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள்  ஆசை... அதை இந்த 200 ஆவது பதிவில் நிறைவேற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் எழுதிய கதை இது .. ஆனால் எழுத ஆரம்பித்தவுடன் கதை இழுத்து கொண்டே போக இதை ஒரு மினி தொடர்கதையாக மாற்றி விடலாம் என்று முடிவு செய்தேன் ...  நான் இதற்க்கு முன்னர்  கதைகள் எழுதியதில்லை , இதுதான் என் கன்னி முயற்சி... எனவே  இது  எவ்வளவு மொக்கையாக  இருந்தாலும்  கொஞ்சம் பொறுத்துக்கொள்ளவும்..  )



ஊரே தேர்தல் ஜூரத்தில் இருந்தது , இந்த முறை யார் ஊராட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெருவார்கள் என்பதுதான் இப்போதைக்கு அந்த ஊரில் எல்லாருக்கும் இருக்கும் ஒரே எதிர்பார்ப்பு.. வழக்கம் போல இம்முறையும் சத்தியனுக்கும் , பாலமுருகனுக்குமே போட்டி.. தற்போதைய தலைவர்  சத்தியன் இம்முறையும் வெற்றி பெற்று விட்டால் அடுத்த முறை இது தலித் தொகுதி ஆகிவிடும் . போட்டியே இல்லாமல் அடுத்த முறையும் அவரே வந்து விடலாம். எனவே  ஏதாவது களவாணிதனம்  செய்தாவது வென்று விட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டது அவர் கோஷ்டி... பல ஜாதிக்காரர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு ஊரை தொடர்ந்து மூன்று முறை ஒரே சாதிக்காரன் ஆளுவதா? விடக்கூடாது , இம்முறை அவனை தோற்கடித்து நம் சாதிபலத்தை காட்டியே ஆகவேண்டும் என்ற முனைப்புடன் எதிர்க்கோஷ்டியும் சூறாவளியாய் சுழன்று கொண்டிருந்தது...

சமத்துவபுரத்துக்கு சிறந்த உதாரணம் அந்த ஊர்... தெற்குபுறம் தலித்துகளும் , நடுவில் தேவர்களும் , அவர்களை அடுத்து பிள்ளைகளும் , கடைசியாக வடக்கில் நாடார்களும் சரி சமமாக வாழும் ஊர் அது... நடு நடுவே நாயக்கர்களும் , செட்டிமார்களும் கணிசமான தொகையில் இருக்கிறார்கள்... அரசியல் கூட்டணியை போல ஊரில் எப்போதும் ஒரு ஜாதி கூட்டணி இருக்கும் ..  ஆனால் அரசியவாதிகளை போல இல்லாமல் இது நிரந்தர கூட்டணி ...காலம்காலமாய்  ஊரில் இருக்கும் நாடார் பள்ளிக்கூடத்தில் தலித் மாணவர்களும் , பிள்ளைமார் பள்ளிக்கூடத்தில் தேவர் ஜாதி மாணவர்களும் மட்டுமே  படிப்பார்கள்... 60களின் ஆரம்பத்தில் காமராஜருக்கும் , தேவருக்கும் அரசியலில் நடந்த மோதலே இங்கு இந்த ஜாதி கூட்டணி உருவாக காரணம் ... பிள்ளைகளின் படிப்பிலேயே இப்படி என்றாள் ஆட்சி என்றாள் விட்டுவிடுவார்களா? சத்தியனுக்கு அவர் ஜாதி ஓட்டும் , நாடார் ஓட்டும் அப்படியே கிடைத்து விடும் , பாலமுருகனுக்கோ தேவர் ஓட்டும் , பிள்ளை ஓட்டும் கிடைத்து விடும்... இருவருமே சரிசமமாக இருப்பதினால் எப்பொழுதும் தேர்தல் களம்  சூடாகவே இருக்கும்... 1200 தலப்பாகட்டு இருக்கும் ஊரில் சென்ற முறைகூட சத்தியனால் வெறும் ஆறு ஓட்டு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற முடிந்தது... அதனால் ஒவ்வொரு ஓட்டும் நமக்கு முக்கியம் மச்சி என்ற கொள்கையோடு இம்முறை இரண்டு கோஷ்டிகளும் ஓட்டு வேட்டையில் தீவிரமாக இறங்கி இருந்தன...


சுசி அந்த ஊருக்கு அருகில் இருக்கும் ஒரு காட்டன் மில்லில் வேலை பார்க்கும் இளைஞன்... 8 ஆம் வகுப்பு படிக்கும்போதே கூட படிக்கும் பெண்ணை ஒருதலையாக காதல் செய்து படிப்பில் கவனம் செலுத்தாமல் கப் வாங்கி , இதுக்கு மேல தாங்காது என்று அவன் அப்பாவால் மில் வேலைக்கு சேர்த்துவிட பட்டவன்... அவன் தீவிரமாக காதல் செய்து கொண்டிருந்த சமயத்தில் , இளையதளபதி விஜய் காதலுக்கு மரியாதை தந்ததால் , அவர் பால் ஈர்க்கபட்டு அவரின் தீவிர ரசிகனானவன்... அவனுக்கு படிப்புதான் ஏறவில்லையே தவிர மற்ற விஷயங்களில் பையன் படுகெட்டி ... அந்த ஊரில் இருக்கும் கிரிக்கெட் அணியில் அவன்தான் அதிரடி பேட்ஸ்மேன், தவிர கிணத்தில் நீச்சல் அடிப்பதில் ஆள் கில்லி... எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீருக்குள் மூச்சை அடக்கி கிடப்பான்... கபடியில் அவனை அமுக்கி பிடிக்க சுற்றுவட்டாரத்தில் ஆளே கிடையாது... இப்படி அவனுக்குள் இருக்கும் பல திறமைகளால் அவனுக்கு ஊரில் ஒரு ரசிகர் கூட்டமே உருவாகி இருந்தது... தலைவன் எவ்வழியோ , தொண்டனும் அவ்வழியே என்பது போல் அவர்கள் அனைவருமே விஜயின் ரசிகர்களாக இவனால் உருமாற்றபட்டார்கள்...


அப்படி உருமாற்றபட்டவர்களில் ஒருவன் சுரேஷ்... இவன் சுசிக்கு  அப்படியே நேர் எதிர், கபடி கிரிக்கெட் என்று எல்லா போட்டிகளிலும்  உப்புக்குசப்பாணியாகவே இருப்பான்... ஆனால் படிப்பில் பயங்கர கெட்டி , பத்தாம் வகுப்பு தேர்வில் 2000 ஆம் ஆண்டில் அவன் எடுத்த 454 மதிப்பெண்களை இதுவரை அந்த ஊரில் யாராலும் முறியடிக்க முடியவில்லை... எனவே அவன் சார்ந்த ஜாதி பசங்களுக்கு அவன் ஒருவிதத்தில் கவுரவ சின்னம்...அவனுக்கு பங்காளி பசங்களும் அதிகம், இவர்கள் அனைவருக்கும் இவன்தான் தலைவன்.. ஆனால் சுரேஷோ சுசியை தன் தலைவனாக ஏற்று கொண்டு விஜயின் தீவிர ரசிகனாக ஊருக்குள் உலவிகொண்டிருந்தான் அவன் நண்பன் ஜோஸெப்புடன்  வாலி என்னும் படம் பார்க்கும் வரை...


                                                    (தொடரும்)

Monday, October 10, 2011

சினிக்கூத்து 10-10-2011





ரா-ஒன்னில் ரஜினி ... இதுதான் இப்போதைக்கு தமிழ் சினிமா உலகில் ஹாட் டாபிக்... ஷாருக்கான் ரஜினியை தேடி போய் இந்த படத்தில் நடிக்க அழைத்ததால் ரஜினி நடித்து கொடுத்திருக்கிறார்... ஆனால் இது சம்பந்தமாய் பதிவுகளில் ரஜினி ரசிகர்கள் அடிக்கும் கூத்துக்களுக்கு அளவே இல்லை... ஏதோ ரா ஒன் படம் ஒரு குப்பை படம் போலவும் , ஷாருக் நடித்திருப்பதால் அது ஓடவே ஓடாதும் என்றும் இப்பொழுது ரஜினி ஒரு காட்சியில் நடித்து விட்டதால் , இந்தியா முழுவதும்  அந்த படம் வசூலை வாரி குவித்து விடும் என்றும் வழக்கம் போல  றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்துவிட்டார்கள்... ரஜினி நடித்திருப்பது படத்திற்க்கு கூடுதல் மதிப்புதான் இல்லை என்று சொல்லவில்லை , ஆனால் அது மட்டுமே படத்தை மிக பெரிய வெற்றி அடையசெய்து விடும் என்று சொல்லுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது... படம் வந்து பெரிய ஹிட் ஆகிவிட்டால் இவர்கள் ரஜினியால்தான் ஓடியது என்று சொல்லுவார்கள் , மீறி ஓடாவிட்டால் குசேலன் கதைதான்... இந்திய சினிமாவின் ஒரே உச்ச நட்சத்திரம் ரஜினிதான்  , ஆனால் அதற்காக அவர் நடித்தால் மட்டுமே எந்த படமும் ஓடும் , இல்லை என்றாள் ஓடாது என்று சொல்லுவதெல்லாம் முடியல சாமீ .. கண்ண கட்டுது ....  முன்னொரு காலத்தில் ரஜினிக்கு பலமாக இருந்த அவர் ரசிகர்கள் ஏனோ இப்பொழுது அவருக்கு பலவீனமாக மாறிவிட்டார்கள்.... ஆனால் ஒன்று உறுதி ரா-ஒன் மூலம் ஷாருக் தென்னிந்தியாவிலும் , ரஜினி வட இந்தியாவிலும் தங்கள் மார்க்கெட்டை இன்னும் கொஞ்சம் உயர்த்தி கொள்ளுவார்கள்... இது இருவருக்குமே தங்கள் அடுத்தடுத்த ப்ராஜக்ட்டில் பணம் சம்பாதிக்க உதவும்...

 ----------------------------------------------------------------------


7 ஆம் அறிவு படம் வெளி வந்ததும்  700 வருஷ பாரம்பரியம் மட்டுமே இருக்கும் அமெரிக்காகாரன் முன்னேறிய அளவுக்கு பல்லாயிரக்கணக்கான வருட பாரம்பரியம் கொண்ட தமிழன் முன்னேற முடியாமல் போன காரணம் தமிழனுக்கு புரியும்... படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் நான் தமிழன் என்னும் கர்வம் பிறக்கும் இப்படி ஏதோ ஏய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானி லெவலுக்கு மேலே பேசி இருப்பவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்...

எனக்கு என்னமோ அவனுங்க அவதார் எடுத்துட்டே அமைதியா இருக்கும்போது நாம  7 ஆம் அறிவுக்கே இப்படி ஓவரா பேசுறதுதான் தமிழன் முன்னேறாம இருக்க காரணம்னு தோணுது  ... அது சரி இதே படத்தை தெலுங்குளையும் , ஹிந்திளையும் ரீமேக் பண்ணும் போது என்ன வசனம் பேசுவீங்க?

----------------------------------------------------------------------------------------------------------------------------------

தீபாவளிக்கு வேலாயுதம் ரிலீஸ் ஆகுதாம் , விஜய் படம் ரிலீஸ் ஆகுதுனாலே கண்டிப்பா அந்த சமயம் அவரை கேலி செய்து பல எஸ்‌எம்‌எஸ்ள் உலாவரும் , வேலாயுதத்தை சும்மா விட்டுவிடுவார்களா? இதோ எனக்கு வந்த சில அணில் புகழ் பரப்பும் எஸ்‌எம்‌எஸ்கள்...  

வெண்ணிலா கபடிக் குழு பரோட்டா காமெடி ரீ-மேக்.

சின்ன டாகுடர் விஜய் : அப்பா  போதும் 50 படம் ஃபிளாப் கொடுத்தாச்சு..

எஸ்‌ஏ‌சி  : டேய் நல்லா எண்ணிப் பாருடா 49 தான்டா ஃபிளாப் கொடுத்திருக்கே..

சின்ன டாகுடர் விஜய் : நடிச்ச எனக்குத் தெரியாதா 50 படம் ஃபிளாப்னு?

எஸ்‌ஏ‌சி: டேய் படம் பார்த்த எனக்குத் தெரியாதா 49 படம் ஃபிளாப்னு?

சின்ன டாகுடர் விஜய் : முடியாது...முடியாது... நீங்க கள்ள ஆட்டம் ஆடறீங்க.. எல்லா டைரக்டர்களையும் கூப்பிடுங்க.. நான் மறுபடியும் நடிக்கிறேன்..

எஸ்‌ஏ‌சி : மறுபடியுமா????????????????????????????


 **************************************************************************************


தளபதி: அண்ணே ஒரு காப்பி எவ்வளவு?

கவுண்டர் : ஒரு காப்பி 7 ரூபாய்..

தளபதி : பக்கத்து கடைக்காரன் ஒரு காப்பி 50 பைசாதான்னு எழுதி ஒட்டியிருக்கான் , நீ 7 ரூபாய் சொல்லுற , யார ஏமாத்த பாக்குற...

கவுண்டர் : டேய் காரசட்டி மண்டையா .. அந்த பீஸ் போன ரெண்டு கண்ணையும் நல்லா தொறந்து வச்சி படிச்சி பாரு ... அது ஜெராக்ஸ் காப்பி , இது ஃபில்டர் காப்பி .. நடிக்கவும் தெரியல , படிக்கவும் தெரியல ...


கவுண்டமணி : சரி அதவிடு உன் வேலாயுதம் படத்தோட கதைய சொல்றா....

விஜய் : அண்ணா எனக்கு ஒரு தங்கச்சினா அத சமுக விரோதிகள் கொன்னுடரங்கனா அதுக்காக அவங்களை பழி வாங்கறேன்னா...

கவுண்டமணி : டே தீக்குச்சி தலையா உன் திருப்பாச்சி கதை என்னடா....

விஜய் : அண்ணா அதுலயும் எனக்கு ஒரு தங்கச்சினா அத சமுக விரோதிகள் கொன்னுட கூடாதுன்னு அவங்களை பழி வாங்கறேன்னா...

கவுண்டமணி : இதுல என்னடா வித்தியாசம்....

விஜய் : சட்டை கலரை மாற்றி இருக்கேன்னா...

கவுண்டமணி : தெரியுண்டா உன்ன பத்தி...ஆமா இந்த சுறா படத்தோட கதையை சொல்றா...

விஜய் : மீனவ மக்களுக்காக வில்லனை எதிர்த்து போரடுரன்னா...

கவுண்டமணி : டேய் டாக்கால்டி மண்டையா... உன் குருவி படத்தோட கதை என்னடா....

விஜய் : கடப்பால அடிமையாய் இருக்கிற மக்களுக்காக வில்லனை எதிர்த்து போரடுரன்னா...

கவுண்டமணி : இதுல என்னடா வித்தியாசம்....

விஜய் : ??????

கவுண்டமணி : டே டப்பா தலையா உன் வில்லு படத்தோட கதை என்னடா....

விஜய் : என்னோட அப்பாவ தீவிரவாதிகள் கொன்னுடரங்கனா அதுக்காக அவங்களை பழி வாங்கறேன்னா...

கவுண்டமணி : டே அப்ப ஆதி படத்தோட கதை என்னடா....

விஜய் : என்னோட குடும்பத்தையே சமுக விரோதிகள் கொன்னுடரங்கனா அதுக்காக அவங்களை பழி வாங்கறேன்னா...

கவுண்டமணி : இதுல என்னடா வித்தியாசம்....

விஜய் : ஆதில தலைல வெத்தல எச்சி துப்பி இருப்பானுங்கனா...

கவுண்டமணி : டே அத ஓன் மூஞ்சில துப்பி இருக்கனும் டா....ஆமா நீ எல்லா படத்தலையும் பிச்சகாரனா இருந்துகிட்டு பணக்கார பொண்ண லவ் பண்ற 

விஜய் : அண்ணா எந்த படத்தனா சொல்லுரிங்க? சிவகாசியா திருமலையா இல்ல வில்லுவானா

கவுண்டமணி : ஏன்டா ஒன்னலாம் யாருடா நடிக்க கூப்பிட்டா ஓடி போயிரு 


(நம்ம பிளாக்ல நம்ம வாசகர்  ஒருவர் முதல் முறையா என்னையும் ஒரு பிரபல பதிவருன்னு மதிச்சி அவர் பின்னூட்டத்தை ஒரு பதிவா போட சொன்னாரு ... அவர் எனதுஎண்ணங்கள்  என்னும் பெயரில் பின்னூட்டம் இடும் நண்பர் ... அவர் எழுதிய பின்னூட்டம்தான் மேலே இருக்கும் ஜோக் ..எனவே இதை படித்து யாராவது கோபபட்டால்  அவரிடம் சென்று  சண்டையிடவும்...)

 **************************************************************************************

இதெல்லாம் பரவாயில்லை பேஸ்புக்ல விஜய் ரசிகர்கள்னு சொல்லிக்கிட்டு ஒரு கும்பல் இருக்கு, அவனுங்க பண்ணுற இம்ஸைக்கு அளவே இல்லை...  அவனுங்க பேஸ்புக்ல இருந்து எனக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தாணுக..  

"Hi Raja,

Vinoth invited you to VELAYUTHAM FIRST DAY FIRST SHOW- DEEWALI MASS 

RELEASE.VELAYUTHAM FIRST DAY FIRST SHOW- DEEWALI MASS RELEASEWednesday, October 26 at

 6:00amLocation: ANY THEATRE ACROSS THE WORLDAre you attending? Yes - No - MaybeRemove from My 

EventsThanks,The Facebook Team...."


 இந்த மெயில படிக்கிறப்ப எனக்கு எமன் எதிர நின்னு பாசக்கயிர வீசுர மாதிரியே இருந்தது... அண்ணே வினோத் , சாவுரதுன்னா தனியா போய் சாக வேண்டியதுதான , அது ஏண் துணைக்கு என்னையும் கூப்பிடுறீங்க? உங்க அளவுக்கு எனக்கு மனதைரியம் கிடையாதுன்னே  ... மக்களே இந்த மரண அழைப்பிதழ் உங்களுக்கும் வரலாம் ... பாத்து சூதானமா இருந்துக்கோங்க ... 

Saturday, October 1, 2011

பதிவுலகமும் சில அரசியலும் ...



ஸார் நான் புதுசா ஒரு வலைப்பூ ஆரம்பிக்க போறேன் , நீங்க ரெண்டு வருஷமா எழுதிக்கிட்டு இருக்கீங்கன்னு கேள்விபட்டேன் , அதான் நம்ம பதிவையும் நாலு பேரை எப்படி படிக்க வைக்கலாம்னு ஐடியா கேக்கலாம்னு வந்திருக்கேன் ஸார்

அப்படியா தம்பி ரொம்ப சந்தோஷம் , ஆமா  வலைப்பூ ஆரம்பிக்கணும்னு  ஆசை உனக்கு எப்படி  வந்தது

அண்ணே , நமக்கு ஓட்டை வாயின்னே , எங்க நட்பு வட்டத்தில் எந்த மேட்டர் நடந்தாலும் தெரியிதோ இல்லையோ சம்பந்தமே இல்லாம ஆஜராகி பஞ்சாயத்து பண்ணுவேன் , நான் பஞ்சாயத்து பண்ணுனா அந்த பிரச்சனை சரியாகுதோ இல்லையோ, கண்டிப்பா அவனுக்களுக்குள்ள வேறொரு பெரிய பிரச்சனை உருவாகிரும்... இப்படித்தான் நம்ம பசங்க ரெண்டு பேரு ஜட்டிக்காக சண்ட போட்டுகிட்டு இருந்தாணுக , நான் நடுவுல புகுந்து ஜட்டி சண்டைய ஜாதி சண்டையாக்கி விட  , இன்னைக்கு அவனுங்க ரெண்டு பேர் குடும்பமும் அருவாளை தூக்கிக்கிட்டு அலையுது....

தம்பி இந்த திறமை ஒண்ணு போதும் நீ பெரிய ஆளா வருவ.. சரி வலைப்பூ தொடங்கி அதுல என்ன எழுத போற?

அண்ணே நிறைய விஷயம் எழுதுவேண்ணே ... இந்த மும்பையில குண்டு வெடிக்குதுல அதை பத்தி நிறைய எழுதுவேன்.. தீவிரவாதிகளை கிழி கிழின்னு கிழிப்பேண்ணே

தம்பி அப்படி எழுதுனா நீ பிரபலம் ஆக முடியாது ... உனக்கு ப்ராப்ளம்தான் ஆகும்... நீ முஸ்லிம் தீவிரவாதிகளை பற்றி எழுதினால் ஒரு கும்பல் அயோத்தியில பாபர் மசூதியை இடிச்சப்ப நீ ஏன் அதை பத்தி எழுதவில்லைன்னு கேப்பானுக

அண்ணே அது எப்படிண்ணே , அப்பதான் என்கிட்ட வலைபூவே இல்லையே , எப்படி நான் எழுதமுடியும்

அப்ப இல்லைனா என்ன , இப்ப இருக்குல்ல ஏன் எழுதலைன்னு சண்டைக்கு  வருவாணுக , அதுமட்டும் இல்லை உன்னை காவி பயங்கரவாதின்னு முத்திரை குத்தி உனக்கே தெரியாமல் உன்னை ஆர்‌எஸ்‌எஸ்சேத்திடுவாணுக

ஐயையோ... அப்படினா நான் ஏதாவது ஒரு ஹிந்து போலி சாமியாரை பத்தி எழுதி நான் ஆர்‌எஸ்‌எஸ் இல்லைன்னு நிரூபிச்சிட்டு போறேன்,”

அப்படியா? அப்ப இன்னொரு குரூப்,,  ஏன் நம்ம நாட்டுல ஹிந்து சாமியார் மட்டுந்தான் தப்பு பண்ணுராணுகலா? கிறிஸ்டின் பாதிரியார்கள் எல்லாம் ரொம்ப ஒழுக்கமா? அவனுங்களை பத்தி ஏன் எழுதமாட்டேன்கிற? நீ ஒரு கிருஸ்தவ போதகனா? அப்படின்னு கன்னாபின்னானு கேள்வி கேட்டு உன்னை கலங்கடிப்பாணுக

ஐயையோ... விடுங்க நான் மதங்கள் சம்பந்தமாவே எழுதவில்லை , அரசியல் கட்டுரை எழுதி பிரபலம் ஆகிடுறேன்

என்ன எழுதுவ?

கலைஞர் பத்தியும் அவர் குடும்ப உறுப்பினர்கள் பண்ணிய ஊழல்கள் , அக்கிரமங்கள் பத்தி எழுதுவேன் ... நான் மதுரை காரன்னேன்... இது சம்பந்தமா நெறையா தெரியும் .. நேர்லயே பாத்திருக்கேன் , அனுபவிச்சிருக்கேன்  

தம்பி இப்படி எழுதுனாலும் உன்னை பார்ப்பனன்னு முத்திரை குத்த ஒரு கூட்டம் ரெடியா இருக்கும், திராவிட தலைவனின் மேல் சேற்றை வாரி இரைக்கும் இந்த பதிவு பார்ப்பன இந்து மதவெறியர்களின் பாசிச பதிவு என்பது போன்ற தலைப்புகளில்  உனக்கு எதிர்பதிவுகள் வந்து குவியும் ... மந்திரம் ஓதாம மணி ஆட்டாம உன்னை ஐய்யர் ஆக்கிடுவாணுக..



   
அது சரி , ஆணியே புடுங்க வேணாம் , கலைஞர பத்தி மட்டும் இல்லை யாரை பத்தியும் தப்பா எழுதவில்லை   .. வேணும்னா அம்மாவை பத்தி நல்லாவிதமா நாலு வார்த்தை எழுதி பிரபலம் ஆகிட்டு போறேன்

தம்பி வேற வினையே வேண்டாம் ... உன்னை தேடி உன் வீட்டுக்கே வந்து பூணூல் மாட்டி விட்டுட்டு போயிடுவாணுக


அரசியலே வேணாம்ணே... நான் கிரிக்கெட் பத்தி பதிவு எழுதி பிரபலம் ஆகிடுறேன்

அப்பவும் சும்மா இருக்கமாட்டாணுக , நாட்டுல சாதி சண்டையில பல பேரு செத்துக்கிட்டு இருக்கான், ஊழல் பெருகி போகி நாடே நாசமா போய்கிட்டு இருக்கு, அதை பத்தியெல்லாம் பேசாம இப்படி கிரிக்கெட் பத்தி எழுதிகிட்டு இருக்கையே , நம்ம நாடு முன்னேறாம இருக்கிறதுக்கு காரணமே உன்னை மாதிரி ஆளுங்கதான் அப்படின்னு ஒரு கும்பல் உன்னை சுத்தி கும்மி அடிக்கும்    

அப்படின்னா அன்னா ஹஜாரே பத்தி எழுதி என் நாட்டு பற்றை நிரூபிச்சிட்டு போறேன்

தம்பி நீ இன்னும் வளரனும் ... ஹஜாரேவ  ஆதரிச்சி பதிவு எழுதினால் உன்னை போலி நாட்டுபற்று விளம்பரதாரர்கள் கும்பலில் ஒருவனா சித்தரிப்பானுக .. இல்லை அன்னாவை பத்தி குறை சொல்லி எழுதினால் வயசான காலத்துல அவரே சாப்பிடாமல் நம்ம நாட்டுக்காக உண்ணாவிரதம் இருக்காரு , அவரை பத்தி தப்பா எழுதுரையே , நீ பாக்கிஸ்தான் ஐ‌எஸ்‌ஐ உளவாளியாத்தான் இருக்கணும்னு கேப்டன் மாதிரி வசனம் பேசுவாணுக

எதுவுமே வேணாம்ணே , சினிமா பதிவுகளா எழுதி காலத்தை ஒட்டிடுறேன்

சினிமா பத்தி என்ன எழுதுவ தம்பி

நானும் கொஞ்சம் உலக படமெல்லாம் பாத்திருக்கேன் , அதை வைத்து தமிழ் படங்கள் எந்தெந்த படங்கள் எல்லாம் காப்பி அடிச்சி எடுக்கபட்டதுங்கிரத ஆதாரத்தோடு எழுதுவேன்

தம்பி அப்படி எழுதுனா தமிழ் கலைஞர்களை கேவலபடுத்தி எழுதிறயே நீயெல்லாம் தமிழனான்னு சண்டைக்கு  வருவாணுக... இன்னும் சில பேர் உன் முப்பாட்டன் கேரளாக்காரன் , நீ  ஒரு மலையாளி... அதான் தமிழ் சினிமாவை பத்தி தப்பா பேசுரன்னு உன் பூர்வீகத்தை பத்தி உனக்கே தெரியாத விசயங்களை எல்லாம் எடுத்தி விடுவாணுக

சரி விடுங்க மொக்கை படங்களா எடுக்கிற விஜய் மாதிரி நடிகர்களை கிண்டல் பண்ணி எழுதுறேன்

நீ விஜய் இல்லை அஜீத் பத்தி  கிண்டல் பண்ணுனா , அவர்கள்  ரசிகன் எவனாவது ஏன் ரஜினிகூட இப்படிதான் நடிக்கிறாறு அவரை ஏன் கிண்டல் பண்ண மாட்டேங்கிரன்னு கேப்பான், அதுக்காக நீ ரஜினியை கிண்டல் பண்ணி எழுதுனா ரஜினியை பத்தி எழுதி ஹிட்ஸ் வாங்க இப்படி அலையுரையே நீ ஏன் எம்‌ஜி‌ஆர் பத்தி கிண்டல் பண்ண மாட்டேன்கிற... இன்னொரு தடவை ரஜினி பத்தி தப்பா பேசுன வீட்டுக்கு ஆட்டோ வரும்  அப்படினு ரஜினியின் தொண்டர்கள் யாராவது வந்து மிரட்டிபோவான் "

அண்ணே அப்படினா தமிழ் சினிமா பத்தி ஏதாவது பதிவு எழுதணும்னா தியாகராஜ பாகவதர் காலத்துல இருந்து இப்ப வரைக்கும் அதோட வரலாற்றை முழுசா சொல்லிட்டுதான் எழுதணுமா?”

அப்படிதான் நிறைய பேர் எதிர்பார்ப்பாணுக

சரிண்ணே அப்படினா நான் எனக்கு புடிச்ச நடிகரை பத்தி நல்லாவிதமா எழுதி பொழச்சிக்றேன்னே

தம்பி அதுலையும் பெரிய சிக்கல் இருக்கு , இப்ப நீ அஜீத் ரசிகனா இருந்து மங்காத்தா பிடிக்கிதுன்னு எழுதிட்டு , நாளைக்கே வேறு ஒரு படத்துல ஏதாவது ஒரு குறை சொன்னேன்னு வச்சிக்கோ,  நீ அஜீத் ரசிகன் அதான் மத்த படங்கள் ஓடிற கூடாதுன்னு  குறை சொல்லுற , ஹீரோயிசத்தை ரசிக்கிற உனக்கு இந்த மாதிரி கலை படைப்புகளை குறை சொல்லும் தகுதி கிடையாதுன்னு உன்னை ஒதுக்கி வச்சிடுவாணுக
    
  அண்ணே இப்படி எல்லாத்துக்கும் நின்னா குத்தம் நடந்தா குத்தம்னு சொன்னா நாம என்னத்ததான் எழுதுறது?”

தம்பி அது தெரியாமத்தான் நானும் அல்லாடிக்கிட்டு இருக்கேன்.. பேசாம நம்ம பதிவை படிக்கிற இவங்ககிட்டயே கேட்டிடுவோம்

             நாங்க என்னதான் எழுத?”


     


LinkWithin

Related Posts with Thumbnails