Followers

Copyright

QRCode

Tuesday, July 28, 2009

தமிழ் சினிமாவில் நடந்த கொடுமைகள்...

குருவின்னு படத்துக்கு பேர் வச்சி இருப்பானுக கடைசி வரைக்கும் "காக்கா"வதான் காட்டிடு இருப்பானுக...

அழகிய தமிழ் மகன்னு பேர் வச்சிட்டு அவர கடைசி வர படத்துல காட்ட மாட்டானுக...

போக்கிரின்னு பேர் வச்சிட்டு கடசிவர ஒரு காமெடியன காட்டிட்டு இருப்பானுக....
செமி பைனல்ஸ்ல தோத்து போயிட்டு பைனல்ஸ்ல ஜெய்ச்சிருவனுக
"ஜேம்ஸ் பாண்ட்" படம் மாதிரி இருக்கும்னு விளம்பர படுத்திட்டு "சார்லீ சாப்லீன்" படம் மாதிரி காமெடி பண்ணிட்டு இருப்பானுக

இவங்க எடுத்த படத்த தெலுங்குகாரன் காப்பி அடிச்சி எடுத்த படத்த, கதையே தெரியாம திருப்பி இவனுகளே remake பண்ணுவானுக ..

பத்து நாள் கூட ஓடாத படத்துக்கு வெள்ளி விழா கொண்டாடுவானுக....


கடைசியா படம் எதுவும் ஓடலநா கொடிய புடிச்சி அரசியல்ல ஏறங்கிருவானுக...

மைக்கேல் ஜாக்சன் மரணத்தில் திடீர் திருப்பம்...பாப் இசை உலகத்தின் முடி சூடா மன்னன் மைக்கேல் ஜாக்சன் மரணத்திற்கான திடிக்கிடும் காரணம் தெரிய வந்துள்ளது... நேற்று போலீஸ் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்திய பொழுது ஒரு நண்பர் அந்த அதிர்ச்சிகரமான விசயத்தை வெளியிட்டார். மைக்கேல் ஜாக்சன் இறப்பதுற்கு முதல் நாள் இரவு அவரின் நண்பர் அவருக்கு நம்ம "தமிழ்நாட்டின் ஒபாமா" தலைவர் விஜய் நடித்த குருவி மற்றும் வில்லு படங்களின் DVD கொடுத்தாராம். அந்த படங்களை அவரும் விஜய் நடித்த படங்கள் என்று தெரியாமல் பார்த்துள்ளதாகவும் அதுவே அவரின் விதி முடிவதற்கு காரணமாய் ஆகி விட்டது என்றும் போலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்க மக்கள் பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ள(கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற மட்டும் பயன்படுத்தப்படும்) விஜய் படங்களை மைக்கேல் ஜாக்சன் அவர்களுக்கு கொடுத்து அவரை கொலை செய்ய திட்டமிட்ட குற்றத்திற்காக அவரின் நண்பரும் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் விஜய் அவர்கள் அமெரிக்க அரசின் தேடப்படும் பயங்கர தீவிரவாதி லிஸ்டில் சேர்க்க பட்டுள்ளதாகவும் விரைவில் அவர் arrest செய்யபடுவார் என்றும் அமெரிக்க புலனாய்வு தெரிவித்து உள்ளது. இந்த செய்தியை கேள்விப்பட்ட தமிழ் மக்கள் மிகவும் சந்தோசம் அடைந்துள்ளனர்.

Monday, July 27, 2009

ATM திருட்டிலிருந்து தப்பிக்க  
 
  1.bmp
2.bmp
3.bmp
4.bmp
5.bmp
6.bmp
7.bmp
 

  
VERY IMPORTANT AND INTERESTING

 

 

Read carefully

 

WHEN A THIEF FORCES YOU TO TAKE MONEY FROM THE ATM, DO NOT ARGUE OR RESIST,

YOU MIGHT NOT KNOW WHAT HE OR SHE MIGHT DO TO YOU.   WHAT YOU SHOULD DO IS TO

PUNCH YOUR PIN IN THE REVERSE, I..E IF YOUR PIN IS 1254, YOU PUNCH 4521.  
 
 
THE MOMENT YOU PUNCH IN THE REVERSE, THE MONEY WILL COME OUT BUT WILL BE

STUCK INTO THE MACHINE HALF WAY OUT AND IT WILL ALERT THE POLICE WITHOUT THE NOTICE OF THE THIEF.
EVERY ATM HAS IT; IT IS SPECIALLY MADE TO SIGNIFY DANGER AND HELP. NOT
EVERYONE IS AWARE OF THIS.
 
FORWARD THIS TO ALL YOUR FRIENDS AND THOSE YOU CARE

 


 

Thursday, July 23, 2009

விஜய் படங்கள் ஓடுவதற்கு சில யோசனைகள்


1. வடிவேலுவின் கால்ஷீட் மொத்தமா வாங்கி பாதி படம் வர அவர

வச்சே காமடி பண்ண வட்சிரலாம். படம் பாக்க வரவங்க பாதி

படத்தோட கெளம்பி போனாலும் முழு காசும் கொடுதுதன ஆகணும்.

(செகண்ட் ஹாப்ல வேணும்னா யாருமே இல்லாத தியேட்டர்ல பஞ்ச்

டைலாக் பேசி, படமே அந்த பஞ்ச் டயலாக்நாள்தான் ஹிட் ஆட்சினு

உங்க அப்பாவ வச்சி பேட்டி கொடுத்து பப்ளிசிட்டி பண்ணிக்கலாம்).


2. போக்கிரி படத்துல செல்ல பேரு ஆப்பிள் பாட்டுல கவர்ச்சியா

டான்ஸ் ஆடிகிட்டு இருக்குறப்ப நீங்க அப்பப்ப தேவையே இல்லாம

வந்து கேமரா முன்னாடி டான்ஸ் ஆடுற மாதிரி எல்லா கவர்ச்சி

நடிகைகளோட கால்ஷீட் வாங்கி படம் முழுசா குலுங்க வுட்டு

அப்பப்ப நீங்க வந்து பஞ்ச் டயலாக் பேசுங்க. படம் ஹிட் ஆன

வுடனே வழக்கம் போல உங்க ரசிகர்கள் உங்களால்தான் படம் ஹிட்

ஆட்சினு நம்பிடுவாங்க.


3. சில அரசியல்வாதிங்க ஒவ்வொரு தேர்தல் நடகுரப்பவும் இதுதான்

என்னோட கடைசி தேர்தல்னு சொல்லி மக்களை ஏமாத்தி ஓட்டு

வாங்குற மாதிரி நீங்களும் ஒவ்வொரு படத்துலயும் இதுதான்

என்னோட கடைசி படம்னு சொல்லி நடிங்க, உங்க ரசிகர்கள்

பரிதாபப்பட்டு பட்டு பாக்க வருவாங்க மத்தவங்களாம் சந்தோசமா

படம் பாக்க வருவாங்க படம் ஹிட் ஆகிடும்.4. ரசிகன் பார்ட் எடுத்து அதுல சிம்ரன நயன்தாராவோட அம்மாவா

நடிக்க வச்சி அவங்க முதுகுக்கு சோப்பு போடுங்க.5. ரஜினி கைல கால்ல

விழுந்து அவரோட

கால்ஷீட் வாங்கி உங்க

அப்பா டைரெக்ஷன்ல

ரஜினிக்கு தம்பியா நடிங்க,

அதுல நயன்தாராவோட

கபடி விளையாடுற மாதிரி ஒரு சீன் வையுங்க . படம் ஓடுறதுக்கு

ரஜினி கம் நயன்தாரா ரசிகர்கள் கியாரண்டி. (விஜயகாந்தத

கூப்ப்டுராதீங்க, அவர் முழு நேர அரசியல்வாதி ஆனா பின்னாடிதான்

அவர் படம் வராம மக்கள்லாம் நிம்மதியா இருக்காங்க , மறுபடியும்

அவர சினிமாகுள்ள கொண்டு வந்துராதீங்க).இதெல்லாம் பண்ணியும் உங்க படம் ஓடலநா, நல்ல டைரெக்டர்

கிட்ட நல்ல கதைய கேட்டு அவர் சொல்லுற மாதிரி நடிங்க

(கஷ்டம்தான் உங்களுக்கு நடிகிரதெல்லாம், முயற்ச்சி பண்ணுங்க

வந்தாலும் வரும்), நம்ம மக்கள் ஹிட் ஆக்கிடுவாங்க...

மக்கள் திருந்திடாங்க , நீங்களும் திருந்திடுங்க....

Friday, July 10, 2009

வேட்டைக்காரன் படத்தின் கதை

தமிழ் நாடே ரொம்ப ஆவலா எதிர் பாத்துடு இருக்குற நம்ம "தமிழகதின் ஒபாமா" , "இளைய தளபதி" விஜய் வேட்டைக்காரனின் கதை:
படத்தில் விஜய் ஒரு போலீஸ் அதிகாரியாய் ஆகும் ஆசையுடன் தான் நண்பன் நடத்தும் பரோட்டா கடையில் வேலை செய்கிறார். . விஜய்யின் அப்பாவும் ஒரு பரோட்டா மாஸ்டர் தான்.. குஜராத் மாநிலம் உடப்பாவில் பரோட்டா master வேலைகு ஆள் எடுப்பதாய் தன் நண்பனான இன்னொரு போலீஸ் அதிகாரி குமன் சொன்னதை கேள்விப்பட்டு தன் படையுடன் அங்கே செல்கிறார். ஆனால் குமன் அவர்களை ஏமாற்றி தான் அங்கே நடத்தும் மிலிடரி ஹோடேலில் பரோட்டா பிசையும் அடிமைகளாய் நடத்துகிறார்.


இங்கே விஜய்யின் அம்மா இனிமேல் அவரின் அழுக்கு ஜட்டியை துவைக்க தேவை இல்லை என்று நினைத்து விஜயிடம் அவர் அப்பா தான் செய்த பரோட்டாவை தின்று ஜீரணம் ஆகாமல் வீட்டை விட்டு ஓடி விட்டார் என்று பொய் சொல்லுகிறார். இந்நிலையில் விஜய்க்கு சரவணபவன் ஹோட்டேளில் இருந்து அவரின் தந்தை அந்த ஹோடேலில் இட்லி சாப்டுவிட்டு காசு தராமல் சென்றதால் அவரின் மகன் விஜய் உடனே இட்லிகாண காசை தர வேண்டும் இல்லைஎன்றால் அவரின் வீட்டில் உள்ள இட்லி மாவு அரைக்கும் க்ரிண்டேரை ஜப்தி செய்து விடுவோம் என்று கடிதம் வருகிறது. விஜய்யின் குடும்பமே அந்த கிரைண்டேரில் மாவு அரிது விற்று அதில் வரும் வருமானத்தில்தான் வாழ்கின்றனர். எனவே எப்டியது அந்த இட்லிகாண காசை திருப்பி தர வேண்டுமே என்று அப்பாவின் டைரி புரட்டுகிறார் அப்போது கிண்டியில் உள்ள ஒரு தள்ளுவண்டிகாரன் தன் அப்பாவுக்கு 10 புரோட்டாவுக்கு காசு தர வேண்டும் என்பதை அறிந்து அங்கே செல்ல வேளச்சேரியில் இருக்கும் தன் வீட்டு மாடியில் இருந்து தாவி குதித்து கிண்டி மேம்பாலத்தை பிடித்து லேண்ட் ஆவுராறு. இவரு இப்டி லேண்ட் அவுரத பாக்குற திரிஷாவுக்கு விஜய் மேல லவ் வந்துருது.விஜய் அந்த தள்ளுவண்டிகாரன்கிட்ட டைரிய காட்டி காசு கேக்குறாரு... ஆனா அவன் திர்ஷாவ சைட் அடிச்சிகிட்டே அந்த டைரிய கிளிச்சி போடுறான். எப்டியாது அவன்ட அந்த காச வாங்கனும்னு விஜய் அவனோட கடைல இருந்த பழைய கிழிஞ்ச ஜட்டிய தூக்கிட்டு பஸ் ஏறி வீட்டுக்கு வராரு. அதே பஸ்ல திரிஷாவும் அவரோட வராங்க. அந்த ஜட்டியோட நாத்தம் தாங்காம விஜய் அத த்ரிஷா பேக்ல போட்டுராறு.அந்த ஜட்டி வேற யரோடதும் இல்ல அவங்க அப்பாவ கடத்துன குமனோடது. அந்த கட அவனோட பினாமி கடை. குமன் கடைக்கு வந்து ஜட்டிய தேடுறாரு அப்பதான் கடகாரன் விஜய் வந்துடு போனத சொல்லுரான். அங்க ஒரு பிளாஷ்பேக். உடப்பவுல குமன் ஒருநாள் பாத்ரூம்ல குளிக்கும் போது அவன் ஜட்டி கிளிஞ்சிறது, உடனே அவன் விஜய் அப்பா போட்டுருந்த ஜட்டிய உருவி போட்டுகிறான், அப்ப அவரு கோபமா சொல்லுராரு என் மவன் வருவாண்டா, என் ஜட்டிய உன்கிட்ட இருந்து எடுத்துட்டு போவண்டா, அப்ப பாரு நீ போட்டுக்க ஜட்டி இல்லாம அலைவனு..... உடனே குமன் விஜய்ய தேடி வேளச்சேரி போறாரு..
climax படிக்க கீழ இருக்குற பத்தியselectபண்ணுங்க
இதுக்கு மேலயும் இந்த கதைய படிக்கணுமா? இப்டி ஒரு படம் எடுத்தா இந்த sceneவந்ததும் எழுந்து ஓடிற மாட்டேங்க? அப்டி நெனச்சி இந்த பதிவ க்ளோஸ் பண்ணிடு போய் உருப்படியா எதாவது வேலைய பாருங்க சார்....

LinkWithin

Related Posts with Thumbnails