1. வடிவேலுவின் கால்ஷீட் மொத்தமா வாங்கி பாதி படம் வர அவர
வச்சே காமடி பண்ண வட்சிரலாம். படம் பாக்க வரவங்க பாதி
படத்தோட கெளம்பி போனாலும் முழு காசும் கொடுதுதன ஆகணும்.
(செகண்ட் ஹாப்ல வேணும்னா யாருமே இல்லாத தியேட்டர்ல பஞ்ச்
டைலாக் பேசி, படமே அந்த பஞ்ச் டயலாக்நாள்தான் ஹிட் ஆட்சினு
உங்க அப்பாவ வச்சி பேட்டி கொடுத்து பப்ளிசிட்டி பண்ணிக்கலாம்).
2. போக்கிரி படத்துல செல்ல பேரு ஆப்பிள் பாட்டுல கவர்ச்சியா
டான்ஸ் ஆடிகிட்டு இருக்குறப்ப நீங்க அப்பப்ப தேவையே இல்லாம
வந்து கேமரா முன்னாடி டான்ஸ் ஆடுற மாதிரி எல்லா கவர்ச்சி
நடிகைகளோட கால்ஷீட் வாங்கி படம் முழுசா குலுங்க வுட்டு
அப்பப்ப நீங்க வந்து பஞ்ச் டயலாக் பேசுங்க. படம் ஹிட் ஆன
வுடனே வழக்கம் போல உங்க ரசிகர்கள் உங்களால்தான் படம் ஹிட்
ஆட்சினு நம்பிடுவாங்க.
3. சில அரசியல்வாதிங்க ஒவ்வொரு தேர்தல் நடகுரப்பவும் இதுதான்
என்னோட கடைசி தேர்தல்னு சொல்லி மக்களை ஏமாத்தி ஓட்டு
வாங்குற மாதிரி நீங்களும் ஒவ்வொரு படத்துலயும் இதுதான்
என்னோட கடைசி படம்னு சொல்லி நடிங்க, உங்க ரசிகர்கள்
பரிதாபப்பட்டு பட்டு பாக்க வருவாங்க மத்தவங்களாம் சந்தோசமா
படம் பாக்க வருவாங்க படம் ஹிட் ஆகிடும்.
4. ரசிகன் பார்ட் எடுத்து அதுல சிம்ரன நயன்தாராவோட அம்மாவா
நடிக்க வச்சி அவங்க முதுகுக்கு சோப்பு போடுங்க.
5. ரஜினி கைல கால்ல
விழுந்து அவரோட
கால்ஷீட் வாங்கி உங்க
அப்பா டைரெக்ஷன்ல
ரஜினிக்கு தம்பியா நடிங்க,
அதுல நயன்தாராவோட
கபடி விளையாடுற மாதிரி ஒரு சீன் வையுங்க . படம் ஓடுறதுக்கு
ரஜினி கம் நயன்தாரா ரசிகர்கள் கியாரண்டி. (விஜயகாந்தத
கூப்ப்டுராதீங்க, அவர் முழு நேர அரசியல்வாதி ஆனா பின்னாடிதான்
அவர் படம் வராம மக்கள்லாம் நிம்மதியா இருக்காங்க , மறுபடியும்
அவர சினிமாகுள்ள கொண்டு வந்துராதீங்க).
இதெல்லாம் பண்ணியும் உங்க படம் ஓடலநா, நல்ல டைரெக்டர்
கிட்ட நல்ல கதைய கேட்டு அவர் சொல்லுற மாதிரி நடிங்க
(கஷ்டம்தான் உங்களுக்கு நடிகிரதெல்லாம், முயற்ச்சி பண்ணுங்க
வந்தாலும் வரும்), நம்ம மக்கள் ஹிட் ஆக்கிடுவாங்க...
மக்கள் திருந்திடாங்க , நீங்களும் திருந்திடுங்க....
No comments:
Post a Comment