Followers

Copyright

QRCode

Wednesday, April 18, 2012

பில்லா 2 - ஐ‌பி‌எல் -உதயநிதி


முற்பகல் செய்யின்


இன்று திமுக எதிர்கால தலைவரும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் நாயகனுமாகிய உதயநிதி பத்திரிக்கைக்காரர்களை கூப்பிட்டு ஒப்பாரி வைத்திருக்கிறார் , அரசாங்கம் என்னுடைய படத்துக்கு வரிசலுகை தர ஒப்புக்கொள்ளவில்லை , வரிசலுகை பெருவதற்க்கு எல்லா தகுதியும் என்னுடைய படத்தில் இருக்கிறது , என்னுடைய அப்பாவின் மேல் இருக்கும் காழ்புணர்ச்சியால் என்னை பழிவாங்குகிறார்கள் என்றெல்லாம் புலம்பி தள்ளியிருக்கிறார்.. இதை பார்க்கும் போது தமிழ் படங்களில் ஊரையே அடித்து உலையில் போட்ட வில்லன் படத்தின் இறுதிக்காட்சியில் மரண அடிவாங்கும் போது இன்னும் அடிடா அவனை விடாதடா என்று விசிலடித்து கொண்டே ரசிப்போம் பாருங்கள் அதை போலத்தான் சந்தோஷமாக இருக்கிறது  மனசு ...என்னா ஆட்டம் போட்டீங்க மக்கா? உங்க படத்துக்கு வரிசலுகை கொடுக்காதது அடாவடி என்றாள் கோடிக்கணக்கில் பணம் போட்டு படம் எடுத்து ரிலீசுக்கு காத்திருக்கும்போது உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அதை ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்து அடிமாட்டு விலைக்கு வாங்கி நீங்கள் வெளியிட்டீர்களே அதற்க்கு பெயர் என்ன? ஊரில் இருக்கும் அத்துணை திரையரங்கிலும் உங்கள் குடும்ப படங்களை மட்டுமே ஓட வைத்து சிறு தயாரிப்பாளர்களையும் அவர்களின் படங்களையும் முடக்கி வைத்தீர்களே அதற்க்கு பேர் என்ன? உங்கள் குடும்பத்துக்கு வளைந்து கொடுக்காத பெரிய பெரிய நடிகர்களின் படங்களுக்கு   எப்படியெல்லாம் தொல்லை கொடுத்தீர்கள் , அப்பொழுதெல்லாம் தெரியவில்லையா நீங்கள் செய்வது அராஜகம் என்று , ஆனால் உங்கள் படத்துக்கு வரி சலுகை கொடுக்கமாட்டோம் என்று சொன்னவுடன் “ஐய்யோ கொல்றாங்களே , கொல்றாங்களே என்று உங்கள் தாத்தா கூச்சல் போட்டதை போல “ஐய்யோ பழிவாங்குராங்களே பழிவாங்குராங்களே என்று கூச்சல் போடுகிறீர்களே உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமே கிடையாதா?


தல நடந்தால் நடைக்கே அழகு


பில்லா 2 டிரைலர்(டீஸர்) பட்டைய கிளப்புது , தலையோட ஸ்டைல் ,ஒளிப்பதிவு , ஆக்ஷன் சீன்ஸ் , பின்னணி இசை என்று எல்லாவிதத்திலும் கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள் , அதிலும் தலையோட அந்த டிரேட் மார்க் நடை கலக்கல். அந்த காட்சிகளில் எல்லாம் அரங்கம் அதிரபோவது உறுதி. இப்பொழுதே படம் எப்பொழுது வெளிவரும் என்ற ஆவலை தூண்டிவிட்டிருக்கிறது இந்த டீஸர் , விஷ்ணுவரதன் கையிலிருந்து படம் சக்ரி கைக்கு மாறியபோது என் நம்பிக்கையும் தலைகீழாக மாறி போயிருந்தது  , ஆனால் இந்த டிரைலர் பார்த்தவுடன் அது தவறு என்று உணர்ந்து கொண்டேன் காரணம் பில்லா படத்தில் தல ஏற்கனவே பேசிய ஒரு வசனத்தை இதில் இவர் பேச வைத்திருக்கும் விதம் simply like a lion roaring … hats off chakri , படத்தை பார்த்துவிட்டு நான் எழுதபோகும் பதிவின்  கடைசியிலும்  இதே வார்த்தையை எழுத வைப்பீர்கள் என்ற நம்பிக்கையை இந்த டீசர் எனக்கு உருவாக்கிவிட்டது..., we are once again Impressed thala…  give us more…

ஐ‌பி‌எல் 2012

வழக்கம் போல இந்த முறையும் சென்னை ஆரம்பத்தில் அடி மேல் அடி வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் ரொம்ப சந்தோஷம் , ஆனால்  வழக்கம் போல இல்லாமல் இந்த அடி கடைசி வரைக்கும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல பெட்டிங்க் புக்கிகளை கேட்டுக்கொள்கிறேன்... இந்த ஐ‌பி‌எல்ளில் பெட்டிங்க் எந்த அளவுக்கு புகுந்து விளையாடுகிறது என்பதற்க்கு சென்னை பெங்களூர் ஆட்டம் ஒரு சிறந்த உதாரணம். ஆட்டத்தின் கடைசிக்கு முந்திய ஓவரில் கொஹ்லி பந்து வீசியதை பார்த்தால் சின்ன குழந்தைகூட இதை கண்டுபிடித்து விடும் , இவரு ஒரு ஃபுல் டாஸ்  பால் போடுவாராம் அவரு சிக்சர் அடிப்பாராம் , அடுத்து ஒரு ஷாட் பால் அதுவும் மெதுவா பேட்டுக்கே வருவது போல போடுவாராம் அவரு ஃபோர் அடிப்பாராம் இப்படியே அந்த ஓவர் முழுக்க ரெண்டு பெரும் போட்டு கொடுத்து போட்டு  கொடுத்து விளையாடுவாங்களாம் ,அட அட அட டேய் எங்களையெல்லாம் பாத்தா உங்களுக்கு லூசு மாதிரி தெரியுதாடா...

ஆனாலும் இந்த ஐ‌பி‌எல்லால் எனக்கு விளையும் ஒரே நன்மை அப்பப்ப இந்த மாதிரி போட்டோ கமெண்ட் போட்டு ஒரு பதிவு தேத்தலாம்...
     

Friday, April 13, 2012

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்தலையே சொல்லியாச்சி  இனி எங்களுக்கு சித்திரை ஒன்னுதாம்லே தமிழ் புத்தாண்டு 

Monday, April 2, 2012

ஐ‌பி‌எல் சீஸன் 5
ஐ‌பி‌எல் போட்டிகள் கிரிக்கெட்டுக்கு சாபமா? வராமா? என்று தெரியவில்லை , ஆனால் கிரிக்கெட் அரசியலை பற்றி எதுவும் அறியாத , அதை  முழுமையாக நம்பிக்கொண்டிருக்கும் சாமானிய ரசிகனுக்கு  ஐ‌பி‌எல் கிடைக்காமல் கிடைத்த வரம்தான் , சச்சினில் தொடங்கி லேட்டஸ்ட் விராட் கோலி வரைக்கும் தங்களின் சூப்பர் ஸ்டார்கள் அனைவரும் கலந்து கட்டி அடிக்கபோக்கும் சிக்ஸெர்களை நினைத்து இப்பொழுதே ரசிகர்களுக்கு உற்சாகம் பீர் பாட்டிலாய் பொங்கி நிற்கிறது... அதான்  நானும்  இங்கே அதில் இருக்கும் அரசியலை மறந்து விட்டு இந்த வருடம் ஐ‌பி‌எல் எப்படி இருக்கும் என்று என்னுடைய பார்வையை  தருகிறேன்என்னதான் விராட் கோலி சமீபமாக பட்டைய கிளப்பினாலும் எனக்கு எப்பவும் பெஸ்ட் சச்சின்தான், அதனால் ஐ‌பி‌எல்ளில் என்னை கவர்ந்த அணி என்றாள் அது மும்பைதான் , சந்திரமுகி ரஜினி மாதிரிதான் மும்பை டீம் சச்சின் , இவர் ஒருவர் போதும் அணி சுலபமாக அரை இறுதி வரை முன்னேற , இப்பொழுதுதான் அவர் நூறாவது சதம் என்னும் பெரிய சுமையை இறக்கி வைத்திருக்கிறார் என்பதால் இம்முறை ரொம்பவும் கூலான சச்சினை களத்தில் எதிர்பார்க்கலாம் , அவருடன் ரோஹித் சர்மா , கிப்ஸ் என்று "சுறா விஜய்" போல எப்பவேண்டுமானாலும் வெடிக்கும் எரிமலைகளும் இருப்பதால்(புரியாதவர்கள் சுறா படத்தில் இளையதளபதியை பற்றி கலெக்டர் பேசும் காட்சியை ஒருமுறை யுட்யூபில் தேடி பார்க்கும்படி கேட்டுக்கொள்ளபடுகிறார்கள் )இம்முறை(யும்) ஃபைனல் வரை முன்னேறிவிடும் என்று நம்பலாம் , மேலும் அணியில் மலிங்கா , ஜான்ஸோன் , ஹர்பஜன் என்று ஸ்டார் பௌலர்களும் இருப்பதால் மும்பை அணிதான்  இந்த சீசனில் சொல்லி அடிக்கும் குதிரையாக இருக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பு , ஆனால் ஐ‌பி‌எல் வரலாற்றை ஒருமுறை திரும்பி பார்த்தால் அது கற்றுக்கொடுக்கும் ஒரு விஷயம்  மும்பை அணி ஒரு ஐ‌பி‌எல் சௌத் ஆப்ரிக்கா என்பதுதான் , அவ்வளவு பெரிய அதிர்ஷ்டக்கட்டை அது , ஆனால் இம்முறை கிப்ஸ் மற்றும் T20 போட்டிகளில் அதிவேகமான சதம் அடித்த சாதனைக்கு சொந்தக்காரரான லெவி போன்ற சௌத் ஆப்ரிக்காகாரகளின் துணையோடு மும்பை சாதிக்கும் என்று நம்பலாம்...மும்பை அணிக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த அணி பெங்களூரு, இரு முறை ஃபைனல் வரை முன்னேறி கோப்பை வாங்க முடியாமல் போன அணி இது ... ஆனால் இம்முறை அப்படி நடக்கவிடாமல் சாதிக்கும் வெறியோடு இறங்கியிருக்கிறது. ஐ‌பி‌எல் வரலாற்றில் எப்பொழுதும் அபாயகரமான பேட்ஸ்மேன் கெயில்தான், அவர்தான் இந்த அணியின் துருப்பு சீட்டு , சென்ற முறை ஒற்றை ஆளாக அணியை அரையிறுதி வரை இழுத்து வந்த அவரால் துரதிர்ஷ்ட வசமாக அணியை இறுதி போட்டிக்கு முன்னேற்ற முடியவில்லை , ஆனால் இம்முறை அவர் ஒற்றை ஆளாக போராட தேவையிருக்காது  , காரணம் அணியில் இணைந்த கையாக கைகொடுக்க கோலி இருக்கிறார் , சென்ற முறையும் கோலி இருந்தாரே என்ற  சந்தேகம் உங்களுக்கு வரலாம் , அது போன வருஷம் , இது இந்த வருஷம் , ஸார் ரேஞ்சே இப்ப வேற, சமீபத்தில் அந்நிய மண்ணில் இலங்கை பாக்கிஸ்தானுக்கு எதிராக அடுத்தடுத்து ஆடிய ருத்ரதாண்டவங்கள் அவரை கிரிக்கெட்டில் உச்சதிற்க்கு எடுத்து சென்றுவிட்டன, அந்த சூட்டோடு சூட்டாக ஐ‌பி‌எல்ளிலும் அவர் களமிறங்குவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறிகிடக்கிறது. அவர் பேட்டோடு களத்தில் இறங்கினாலே செஞ்சுரி அடிக்காமல் போக கூடாது என்று ஒவ்வொரு ரசிகனும் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டான் , 


இதற்க்கு முன்னாள் ரசிகர்களால் இந்த அளவுக்கு எதிர்பார்க்கபட்டவர் சச்சின் ஒருவர்தான் , ஆனால் இந்த எதிர்பார்ப்பே அவருக்கு பெரியாக சுமையாக ஆகிவிடக்கூடிய அபயாம் இருப்பதுதான் அணியின் இப்போதைய ஒரே கவலை, அந்த சுமையை அவர் எப்படி இறக்கிவைக்க போகிறார் என்பதில்தான் பெங்களூர் அணியின் தலையெழுத்தே இருக்கிறது.இந்த ஐ‌பி‌எல் போட்டியின் முடிவு பெரும்பாலும் பெங்களூரு அணியின் இந்த இரட்டையர்களின் கையில்தான் இருக்க போகிறது... ஒருவேளை இவர்கள் சொதப்பினாலும் அடுத்து அணியை சரிசெய்ய தில்ஷான் டிவில்லியர்ஸ் என்று அடுத்தகட்ட பேட்ஸ்மேன் இருப்பதால் பேட்டிங்கில் கவலை இல்லை. ஆனால் பெங்களூர் அணியின் மிகப்பெரிய பலவீனம் அதன் பௌலிங்தான், வெட்டோரி தவிர சொல்லிக்கொள்ளும்படியான பௌலர் யாரும் அணியில் இல்லை என்பது பெரிய குறைதான்.இதுதவிர இரண்டு முறை சாம்பியனான சென்னை (ஆண்டவா இந்த தடவை எவனாவது இவனுங்களுக்கு ஆப்பு வச்சி லீக்கோட வெளிய அனுப்புனா புண்ணியமா போகும்) அணியும் பலமான அணியாகவே தெரிகிறது , ஆனால் இதுவரைக்கும் தோனிக்கு கூடவே இருந்து கோபுரத்தில் ஏற்றிய அதிர்ஷ்டம் சொல்லாமல் கொள்ளாமல் அவரிடம் இருந்து கழண்டுகொண்டதால் இம்முறை சென்னை செல்ஃப் எடுப்பது கஷ்டம்தான்.சேவாக் , பிளின்டாப் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தாலும் , அகார்கரும் அந்த அணியில் இருப்பதால் டெல்லியையும் நம்ப முடியாது. பஞ்சாப் அணிக்கும் இதே நிலைதான் , கில்கிறிஸ்ட் , ஹஸி தவிர சொல்லும்படியான வீரர்கள் யாருமே கிடையாது. என்னதான் கம்பீர் , யூசுப் பதான் போன்ற அதிரடி வீரர்கள் இருந்தாலும் கொல்கட்டா மற்ற எல்லா விசயத்திலும் வீக்காக இருப்பதால் இம்முறையும் அவர்கள் தேறுவது  கடினம்தான் , இவர்கள் இருவரும் கைகொடுத்து பௌலெர்கள் கொஞ்சம் அசத்தினால் அணி அரையிறுதி வரை செல்லலாம் , ஆனால் கோப்பை வெல்லவேண்டுமானால் கொலைவெறி பாடல் உலகமெகா  ஹிட் ஆகியதை போல ஏதாவது அதிசயம் நடந்தால்தான் உண்டு...


தாதா இருக்கிறார் என்பதால் புனே ஜெயிக்க வேண்டும் என்று மனம் விரும்பினாலும் , ரஜினியே இருந்தாலும் காப்பாற்ற முடியாத பாபா , குசேலன் போலதான் இம்முறை புனே இருக்கிறது என்பதால் உப்புக்கு சப்பானியாக எண்ணிக்கைக்கு மட்டுமே பயன்படும் அணியாக இருக்கபோகிறது என்பதில் சந்தேகமே இல்லை.பணம் கொழிக்கும் ஐ‌பி‌எல்இல் விளையாட போகிறோம் என்ற பயம் கொஞ்சம் கூட இல்லாமல் ஏதோ ரஞ்சி கோப்பைக்கு விளையாட ஆள் அனுப்புவது போல ஒரு அணியை தெரிவு செய்திருக்கும் டெக்கானும் , ஐ‌பி‌எல் என்பது இருபது ஓவர் போட்டி என்பதுகூட தெரியாமல் டெஸ்ட் போட்டிக்கு ஆள் எடுத்து வைத்திருக்கும் ராஜஸ்தானும் பெட்டிங்க் புண்ணியத்தில் ஏதோ ஒன்றிரெண்டு ஆட்டத்தில் ஜெயிக்கலாமே ஒழிய பெரும்பாலும் எதிரணி பேட்ஸ்மேனும் , பௌலெர்களும் புது புது  சாதனைகள் படைக்கத்தான் பயன்படுவார்கள்..

         (பாவம் இந்த புள்ளைக்காகவாவது பஞ்சாப்பை ஜெயிக்க வையுங்க மக்கா )

ஆனால் நேர்மையாக விளையாடினாலே கிரிக்கெட்டில் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை யாராலும் சொல்லமுடியாது என்ற நிலையில் , பெட்டிங் புகுந்து விளையாடும் ஐ‌பி‌எல் போட்டிகளில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். எப்படி நடந்தது ஏன் நடந்தது போன்ற ஆராய்ச்சிகளை எல்லாம் விட்டு விட்டு போட்டியை மட்டும் ரசித்தால்  கண்டிப்பாக விரு விரு மங்காத்தாவாக இந்த ஐ‌பி‌எல் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை... 

LinkWithin

Related Posts with Thumbnails