Followers

Copyright

QRCode

Monday, April 2, 2012

ஐ‌பி‌எல் சீஸன் 5




ஐ‌பி‌எல் போட்டிகள் கிரிக்கெட்டுக்கு சாபமா? வராமா? என்று தெரியவில்லை , ஆனால் கிரிக்கெட் அரசியலை பற்றி எதுவும் அறியாத , அதை  முழுமையாக நம்பிக்கொண்டிருக்கும் சாமானிய ரசிகனுக்கு  ஐ‌பி‌எல் கிடைக்காமல் கிடைத்த வரம்தான் , சச்சினில் தொடங்கி லேட்டஸ்ட் விராட் கோலி வரைக்கும் தங்களின் சூப்பர் ஸ்டார்கள் அனைவரும் கலந்து கட்டி அடிக்கபோக்கும் சிக்ஸெர்களை நினைத்து இப்பொழுதே ரசிகர்களுக்கு உற்சாகம் பீர் பாட்டிலாய் பொங்கி நிற்கிறது... அதான்  நானும்  இங்கே அதில் இருக்கும் அரசியலை மறந்து விட்டு இந்த வருடம் ஐ‌பி‌எல் எப்படி இருக்கும் என்று என்னுடைய பார்வையை  தருகிறேன்



என்னதான் விராட் கோலி சமீபமாக பட்டைய கிளப்பினாலும் எனக்கு எப்பவும் பெஸ்ட் சச்சின்தான், அதனால் ஐ‌பி‌எல்ளில் என்னை கவர்ந்த அணி என்றாள் அது மும்பைதான் , சந்திரமுகி ரஜினி மாதிரிதான் மும்பை டீம் சச்சின் , இவர் ஒருவர் போதும் அணி சுலபமாக அரை இறுதி வரை முன்னேற , இப்பொழுதுதான் அவர் நூறாவது சதம் என்னும் பெரிய சுமையை இறக்கி வைத்திருக்கிறார் என்பதால் இம்முறை ரொம்பவும் கூலான சச்சினை களத்தில் எதிர்பார்க்கலாம் , அவருடன் ரோஹித் சர்மா , கிப்ஸ் என்று "சுறா விஜய்" போல எப்பவேண்டுமானாலும் வெடிக்கும் எரிமலைகளும் இருப்பதால்(புரியாதவர்கள் சுறா படத்தில் இளையதளபதியை பற்றி கலெக்டர் பேசும் காட்சியை ஒருமுறை யுட்யூபில் தேடி பார்க்கும்படி கேட்டுக்கொள்ளபடுகிறார்கள் )இம்முறை(யும்) ஃபைனல் வரை முன்னேறிவிடும் என்று நம்பலாம் , மேலும் அணியில் மலிங்கா , ஜான்ஸோன் , ஹர்பஜன் என்று ஸ்டார் பௌலர்களும் இருப்பதால் மும்பை அணிதான்  இந்த சீசனில் சொல்லி அடிக்கும் குதிரையாக இருக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பு , ஆனால் ஐ‌பி‌எல் வரலாற்றை ஒருமுறை திரும்பி பார்த்தால் அது கற்றுக்கொடுக்கும் ஒரு விஷயம்  மும்பை அணி ஒரு ஐ‌பி‌எல் சௌத் ஆப்ரிக்கா என்பதுதான் , அவ்வளவு பெரிய அதிர்ஷ்டக்கட்டை அது , ஆனால் இம்முறை கிப்ஸ் மற்றும் T20 போட்டிகளில் அதிவேகமான சதம் அடித்த சாதனைக்கு சொந்தக்காரரான லெவி போன்ற சௌத் ஆப்ரிக்காகாரகளின் துணையோடு மும்பை சாதிக்கும் என்று நம்பலாம்...



மும்பை அணிக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த அணி பெங்களூரு, இரு முறை ஃபைனல் வரை முன்னேறி கோப்பை வாங்க முடியாமல் போன அணி இது ... ஆனால் இம்முறை அப்படி நடக்கவிடாமல் சாதிக்கும் வெறியோடு இறங்கியிருக்கிறது. ஐ‌பி‌எல் வரலாற்றில் எப்பொழுதும் அபாயகரமான பேட்ஸ்மேன் கெயில்தான், அவர்தான் இந்த அணியின் துருப்பு சீட்டு , சென்ற முறை ஒற்றை ஆளாக அணியை அரையிறுதி வரை இழுத்து வந்த அவரால் துரதிர்ஷ்ட வசமாக அணியை இறுதி போட்டிக்கு முன்னேற்ற முடியவில்லை , ஆனால் இம்முறை அவர் ஒற்றை ஆளாக போராட தேவையிருக்காது  , காரணம் அணியில் இணைந்த கையாக கைகொடுக்க கோலி இருக்கிறார் , சென்ற முறையும் கோலி இருந்தாரே என்ற  சந்தேகம் உங்களுக்கு வரலாம் , அது போன வருஷம் , இது இந்த வருஷம் , ஸார் ரேஞ்சே இப்ப வேற, சமீபத்தில் அந்நிய மண்ணில் இலங்கை பாக்கிஸ்தானுக்கு எதிராக அடுத்தடுத்து ஆடிய ருத்ரதாண்டவங்கள் அவரை கிரிக்கெட்டில் உச்சதிற்க்கு எடுத்து சென்றுவிட்டன, அந்த சூட்டோடு சூட்டாக ஐ‌பி‌எல்ளிலும் அவர் களமிறங்குவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறிகிடக்கிறது. அவர் பேட்டோடு களத்தில் இறங்கினாலே செஞ்சுரி அடிக்காமல் போக கூடாது என்று ஒவ்வொரு ரசிகனும் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டான் , 


இதற்க்கு முன்னாள் ரசிகர்களால் இந்த அளவுக்கு எதிர்பார்க்கபட்டவர் சச்சின் ஒருவர்தான் , ஆனால் இந்த எதிர்பார்ப்பே அவருக்கு பெரியாக சுமையாக ஆகிவிடக்கூடிய அபயாம் இருப்பதுதான் அணியின் இப்போதைய ஒரே கவலை, அந்த சுமையை அவர் எப்படி இறக்கிவைக்க போகிறார் என்பதில்தான் பெங்களூர் அணியின் தலையெழுத்தே இருக்கிறது.இந்த ஐ‌பி‌எல் போட்டியின் முடிவு பெரும்பாலும் பெங்களூரு அணியின் இந்த இரட்டையர்களின் கையில்தான் இருக்க போகிறது... ஒருவேளை இவர்கள் சொதப்பினாலும் அடுத்து அணியை சரிசெய்ய தில்ஷான் டிவில்லியர்ஸ் என்று அடுத்தகட்ட பேட்ஸ்மேன் இருப்பதால் பேட்டிங்கில் கவலை இல்லை. ஆனால் பெங்களூர் அணியின் மிகப்பெரிய பலவீனம் அதன் பௌலிங்தான், வெட்டோரி தவிர சொல்லிக்கொள்ளும்படியான பௌலர் யாரும் அணியில் இல்லை என்பது பெரிய குறைதான்.



இதுதவிர இரண்டு முறை சாம்பியனான சென்னை (ஆண்டவா இந்த தடவை எவனாவது இவனுங்களுக்கு ஆப்பு வச்சி லீக்கோட வெளிய அனுப்புனா புண்ணியமா போகும்) அணியும் பலமான அணியாகவே தெரிகிறது , ஆனால் இதுவரைக்கும் தோனிக்கு கூடவே இருந்து கோபுரத்தில் ஏற்றிய அதிர்ஷ்டம் சொல்லாமல் கொள்ளாமல் அவரிடம் இருந்து கழண்டுகொண்டதால் இம்முறை சென்னை செல்ஃப் எடுப்பது கஷ்டம்தான்.



சேவாக் , பிளின்டாப் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தாலும் , அகார்கரும் அந்த அணியில் இருப்பதால் டெல்லியையும் நம்ப முடியாது. பஞ்சாப் அணிக்கும் இதே நிலைதான் , கில்கிறிஸ்ட் , ஹஸி தவிர சொல்லும்படியான வீரர்கள் யாருமே கிடையாது. என்னதான் கம்பீர் , யூசுப் பதான் போன்ற அதிரடி வீரர்கள் இருந்தாலும் கொல்கட்டா மற்ற எல்லா விசயத்திலும் வீக்காக இருப்பதால் இம்முறையும் அவர்கள் தேறுவது  கடினம்தான் , இவர்கள் இருவரும் கைகொடுத்து பௌலெர்கள் கொஞ்சம் அசத்தினால் அணி அரையிறுதி வரை செல்லலாம் , ஆனால் கோப்பை வெல்லவேண்டுமானால் கொலைவெறி பாடல் உலகமெகா  ஹிட் ஆகியதை போல ஏதாவது அதிசயம் நடந்தால்தான் உண்டு...


தாதா இருக்கிறார் என்பதால் புனே ஜெயிக்க வேண்டும் என்று மனம் விரும்பினாலும் , ரஜினியே இருந்தாலும் காப்பாற்ற முடியாத பாபா , குசேலன் போலதான் இம்முறை புனே இருக்கிறது என்பதால் உப்புக்கு சப்பானியாக எண்ணிக்கைக்கு மட்டுமே பயன்படும் அணியாக இருக்கபோகிறது என்பதில் சந்தேகமே இல்லை.



பணம் கொழிக்கும் ஐ‌பி‌எல்இல் விளையாட போகிறோம் என்ற பயம் கொஞ்சம் கூட இல்லாமல் ஏதோ ரஞ்சி கோப்பைக்கு விளையாட ஆள் அனுப்புவது போல ஒரு அணியை தெரிவு செய்திருக்கும் டெக்கானும் , ஐ‌பி‌எல் என்பது இருபது ஓவர் போட்டி என்பதுகூட தெரியாமல் டெஸ்ட் போட்டிக்கு ஆள் எடுத்து வைத்திருக்கும் ராஜஸ்தானும் பெட்டிங்க் புண்ணியத்தில் ஏதோ ஒன்றிரெண்டு ஆட்டத்தில் ஜெயிக்கலாமே ஒழிய பெரும்பாலும் எதிரணி பேட்ஸ்மேனும் , பௌலெர்களும் புது புது  சாதனைகள் படைக்கத்தான் பயன்படுவார்கள்..

         (பாவம் இந்த புள்ளைக்காகவாவது பஞ்சாப்பை ஜெயிக்க வையுங்க மக்கா )

ஆனால் நேர்மையாக விளையாடினாலே கிரிக்கெட்டில் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை யாராலும் சொல்லமுடியாது என்ற நிலையில் , பெட்டிங் புகுந்து விளையாடும் ஐ‌பி‌எல் போட்டிகளில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். எப்படி நடந்தது ஏன் நடந்தது போன்ற ஆராய்ச்சிகளை எல்லாம் விட்டு விட்டு போட்டியை மட்டும் ரசித்தால்  கண்டிப்பாக விரு விரு மங்காத்தாவாக இந்த ஐ‌பி‌எல் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை... 

9 comments:

Jayadev Das said...

\\ஐ‌பி‌எல் போட்டிகள் கிரிக்கெட்டுக்கு சாபமா? வராமா? என்று தெரியவில்லை\\ கிரிக்கெட் இந்தியாவுக்குச் சாபம், IPL கிரிக்கெட்டுக்கு சாபம்.

Jayadev Das said...

ப்ரீதி ஜிந்தா படம் ரொம்ப பொருத்தம், IPL பார்க்கிறவங்க நிலைமைய இந்தப் படம் கரெக்டா சொல்லுது!! அதிலும் கடைசிப் படம் இன்னும் பொருத்தம், கிரிக்கெட்டைப் பார்க்கும் இளிச்சவாயன் போட்டிருக்கும் துணியை உருவாமல் விடமாட்டோம்னு சொல்ற மாதிரியே இருக்கு. "எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... சொந்த நாட்டிலே.... நம் நாட்டிலே....."

Jayadev Das said...

\\பெட்டிங் புகுந்து விளையாடும் ஐ‌பி‌எல் போட்டிகளில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.\\ இதெல்லாம் தெரிஞ்சும் அந்தக் கருமாந்திரத்தைப் பார்த்து நேரத்தை வீணடிக்கலாமா ராசா........

Jayadev Das said...

கிரிக்கெட் பாருங்க ராசாக்களே, ஆனா அந்த பொறம்போக்குகள் புரமோட் செய்யும் அயிட்டம் எதையும் வாங்கி ஏமாறாதீர்கள்.. அம்புட்டுதேன்....

Prem S said...

//இதுவரைக்கும் தோனிக்கு கூடவே இருந்து கோபுரத்தில் ஏற்றிய அதிர்ஷ்டம் சொல்லாமல் கொள்ளாமல் அவரிடம் இருந்து கழண்டுகொண்டதால் இம்முறை சென்னை செல்ஃப் எடுப்பது கஷ்டம்தான்.//ஹா ஹா உண்மை உண்மை அனால ipl இல் அவருக்கு அதிக அதிர்ஷ்டம் உண்டு பார்க்கலாம்

Karthikeyan said...

//ஐ‌பி‌எல் போட்டிகள் கிரிக்கெட்டுக்கு சாபமா? வராமா? என்று தெரியவில்லை// கண்டிப்பாக சாபம்தான் ராஜா. எனக்கு ரம்மி ஆடப்பிடிக்கும் ஆனால் வெட்டுச்சீட்டு (மங்காத்தா) பிடிக்காது.

"ராஜா" said...

jeyadev das


IPL எனக்கு பிடிக்காதுதான் , ஆனால் அதில் விளையாடும் சில வீரர்களை அவர்களின் திறமைக்காக பிடிக்கும் , அவர்கள் விளம்பரத்தில் வருகிறார்கள் என்பதற்காக அதை காசு கொடுத்து வாங்கும் முட்டாள் நான் இல்லை , அந்த விளம்பரத்தை அவர்களுக்காக பார்த்து ரசிக்கும் ரசிகன் மட்டுமே , அஜித் sunrise விளம்பரத்தில் வந்தபோது அந்த விளம்பரத்தை தேடி தேடி பார்த்து ரசித்தேன் , எனக்கு பிடித்த 3 ரோசெஸ் டீயை ருசித்துக்கொண்டே.

"ராஜா" said...

PREM.S

எனக்கென்னவோ இந்த தடவை லக் அவருக்கு எதிராக திரும்பும் என்றுதான் தோன்றுகிறது

"ராஜா" said...

Karthikeyan

எனக்கும் அப்படிதான் தோன்றும் , ஆனால் சில வீரர்கள் விளையாடும்போது அதையெல்லாம் மறந்துவிட்டு ரசிக்க ஆரம்பித்து விடுவேன் , சினிமா பொய்தான் என்று தெரிந்தும் விறுவிறுப்புக்காக அதை ரசிப்பது இல்லையா அதை போலத்தான்

LinkWithin

Related Posts with Thumbnails