Followers

Copyright

QRCode

Wednesday, July 27, 2011

மங்காத்தாடா - "மச்சி ஓபன் தி பாட்டில்”


இதோ வருது அதோ வருது என்று ரசிகர்களுக்கு தண்ணி காட்டி கொண்டிருந்த மாங்காத்தா பாடல்கள் அடுத்த மாதம் 10ம் தேதி வெளிவர இருக்கிறது ... ஏற்கனவே வெளிவந்த விளையாடு மாங்காத்தா பாடல் ஹிட் அடித்து விட்டதால் அஜீத் ரசிகர்கள் மத்தியில் இந்த ஆல்பத்திற்க்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை ....இதுவரை பல தேதிகளை சொல்லி பாடல்கள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்க வைத்து கடைசியில் ஏமாற்றியதை போல , இம்முறை நடக்காது காரணம் இது சோனி BMG கம்பெனியால் உறுதிசெய்யபட்ட தேதி , அவர்கள்தான் இதை அறிவித்து இருக்கிறார்கள் , எனவே இந்த முறை அஜீத் ரசிகர்கள் தாராளமாய் எதிர்பார்க்கலாம்  

ஏன் தாமதம்?

பாடல்கள் வெளியிடுவதில் தாமதம் ஆனவுடன் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பேசிய சம்பளம் தரபடவில்லை , அதனால் அவர் பாடல்களை கம்போசிங்க் செய்யாமல் இழுத்தடித்து கொண்டிருக்கிறார் என்று ஒரு வதந்தி பரவியது ,,, ஆனால் யுவன் இந்த படத்தின் பாடல்களை ஒரு மாதத்திற்க்கு முன்னரே முடித்து விட்டார் , மேலும் தான் நினைத்தபடியே பாடல்கள் நன்றாக வந்திருப்பதால் தான் வேண்டிக்கொண்டபடி திருப்பதி சென்று முடி காணிக்கை செலுத்தியிருக்கிறார்... எனவே அவர் இழுத்தடிக்கிறார் என்பது சுத்த பொய் .... இதன் உண்மையான காரணம் அவர் கம்போஸ் செய்திருந்த ட்யூன்களில் ஒன்றை மாற்றி தருமாறு படத்தின் இயக்குனரும் சோனி கம்பெனியும் கேட்டிருக்கிறார்கள்.... அதனால் அந்த ட்யூன்ஐ முழுவதும் ஆரம்பத்தில் இருந்து மாற்றி அமைத்திருக்கிறார் அவர் ...  படம் முழுவதும் முடிவடைந்த நிலையில் ஒரு பாடலை மாற்றுவது என்பது கொஞ்சம் இல்லை அதிகம் நேரம் விழுங்கும் வேலை என்பதால்தான் ஆடியோ ரிலீஸ் ஆவதில்  தாமதம் ஆகி விட்டதாம் ... இல்லை என்றால் பாடல்கள் இந்நேரம் வெளியாகி இருக்கும் ... நமக்கு எப்ப ரிலீஸ் ஆகுதுங்கறது முக்கியம் இல்லை , ஆனா எப்படி ரிலீஸ் ஆகுதுங்கிரதுதான் முக்கியம் , அதனால் அஜீத் ரசிகர்கள் ஆரம்பத்தில் வெங்கட் பிரபுவை அவரின் ஃபேஸ்புக்கில் காய்ச்சி எடுத்தாலும் , அதன் பின்னர் புரிந்து கொண்டு அமைதியாகி விட்டனர் ... 
பாடல்கள் எப்படி வந்திருக்காம்?

10ஆம் தேதி வெளிவர இருக்கும் ஆல்பத்தில் மொத்தம் 8 பாடல்கள் , அதில் ஒன்று ஏற்கனவே வெளியாகி அஜீத் ரசிகர்களிடம் மட்டுமில்லாமல் எல்லா இடங்களிலும்  பட்டயை கிளப்பி கொண்டிருக்கும் விளையாடு மாங்காத்தா பாடல் ... இந்த பாடலை தவிர்த்து படத்தில் இரண்டு மெலோடி பாடல்கள் உண்டு .... யுவன் படம் என்றால் ரீ மிக்ஸ் இல்லாமலா? யுவன் இந்த படத்தில் எடுத்து கையாண்டு இருக்கும் தன் தந்தையின் பாடல் 90களில் வந்து பட்டி  தொட்டி எல்லாம் ஹிட் அடித்த சொர்க்கமே என்றாலும் பாடல் .. இதில்தான் யுவனும் அவர் தந்தையும் முதன் முதலாக இணைந்து பாடி இருக்கிறார்களாம்....  இன்னொரு பாடல் வெங்கட் பிரபு படங்களில் வழக்கமாக வரும் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஜாலியாக பாடும் வெஸ்டர்ன் கலந்த குத்து பாடல் ... அந்த பாடலின் தொடக்க வரி மச்சி ஓபன் தி பாட்டில்படம் எப்பொழுது ரிலீஸ்?

பாடல்களை போல படம் வெளியாவதற்க்கு முன்னரும் பல வதந்திகள்... இதற்க்கு முழு பொறுப்பு வெங்கட் ஸார்தான்... படம் ஆரம்பிக்கும் பொழுது 2011 மே 1 படம் கண்டிப்பாக அஜீத் பிறந்தநாள் பரிசாக  வெளிவரும் என்று சொல்லியிருந்தார்... அவரால் மே 1 ஆம் தேதி பாடல்களை கூட வெளியிட முடியவில்லை... பின்னர் ஒவ்வொரு மாதமாக தள்ளி தள்ளி போயி ஒரு கட்டத்தில் யோவ் வெங்கட்டு ..  சொன்ன தேதியில படம் ரிலீஸ் ஆகாம போச்சுன்னு வச்சிக்கோ , நாங்க எல்லாம் மாங்காத்தாவ மறந்திட்டு பில்லா 2 பக்கம் போயிடுவோம் என்று அஜீத் ரசிகர்கள் எல்லாரும் வெங்கட் பிரபுவை மிரட்டும் நிலமை ஆகி விட்டது ....   இப்பொழுது இறுதியாக அடுத்த மாதம் (ஆகஸ்ட்) இறுதி வாரத்தில்  அல்லது செப்டெம்பர் 3 ஆம் தேதி படம் கண்டிப்பாக வெளிவரும் என்று வெங்கட் சொல்லியிருக்கிறார்


 இதற்கிடையில் தயாநிதி அழகிரி தயாரிப்பில் படம் வெளிவருவதால் , அம்மாவின் ஆட்சி நடக்கும் பொழுது அவர் படத்தை வெளியிடுவது ரிஸ்க் என்று பயந்து யாரும் படத்தை வாங்க முன்வரவில்லை என்று ஒரு வதந்தி பரவியது .... முன்பு கலைஞரின் காலையும் இப்பொழுது அம்மாவின் காலையும் நக்கி கொண்டு அலையும் ஒரு நாதாரி கும்பல்தான் இந்த வதந்தியை பரப்பி இருக்கிறது ... ஆனால் உண்மை அதுவல்ல ... படத்தின் வெளிமாநில உரிமையும் , வெளிநாட்டு உரிமையும் அதிக விலைக்கு போயிருக்கிறது .... இதனால் படத்தின் தமிழக உரிமையை வாங்க ஒரு பெரிய போட்டியே நடந்து கொண்டிருக்கிறதாம் .... தற்போதைய நிலவரப்படி ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் மிக அதிக விலை கொடுத்து படத்தை வாங்கி வெளியிட இருப்பதாக தெரிகிறது ... மேலும் படத்திற்க்கு சில நாதாரிகளால் எந்தவிதமான தொந்தரவும் வந்துவிடாமல் இருக்க தலயை ஒருமுறை அம்மாவை சந்தித்து விட்டு வந்து விடுமாறு பலரும் வற்புறுத்தி இருக்கிறார்கள் , ஆனால் என் சுயநலத்திர்க்காக முதல்வரை பார்க்க விரும்பவில்லை என்று ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டார் தமிழ் சினிமாவின் ஜெண்டில்மேன் ...


தயாரிப்பாளர் யார்? இயக்குனர் யார்? என்று பார்த்து பார்த்து  வாங்குவதற்க்கு இது சாதாரண  படம் கிடையாது.... தல படம்....  அதனால் படத்தை யாரும் வாங்க தயங்குகிறார்கள் என்பதை குழந்தைகூட நம்பாது ...மேலும் இந்த படம் oceans eleven படத்தின் தழுவல் என்றொரு வதந்தியும் பரவிவருகிறது ... அப்படி இருந்தால் சந்தோசமே ... அந்த படம் சென்ற வாரம்தான் பார்த்தேன் ... George Clooney கதாபாத்திரத்தில் அஜீத் வந்தால் செம கெத்தாக இருக்கும் ....இப்பொழுதுதான் ஆட்டையை போட்டு படம் எடுப்பது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டதே.... நாலு பேருக்கு நல்லதுனா தப்பு பண்றதுல தப்பே இல்லை...     


எது எப்படியோ ஆகஸ்ட் 10ல்   தல ரசிகர்கள் சொல்ல போகும் மந்திரம் மச்சி ஓபன் தி பாட்டில் ... படம் பட்டைய கிளப்புனா தினம் தினம் மச்சி ஓபன் தி பாட்டில்தான்


 (மேல இருக்கிற பாட்டீல்  எங்களுக்கு   , வயித்தெரிச்சல் பார்ட்டிகளுக்கு  டானிக் பாட்டில் தனி )Monday, July 25, 2011

உலக சினிமாக்களும் , உள்ளூர் எழுத்தாளனும்


நேற்று ஒரு பிரபல டீவியில் ஒரு பிரபல எழுத்தாளரின் பேட்டி  ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது .... என் கெட்ட நேரம் அதை என் மனைவியோடு சேர்ந்து பார்க்க வேண்டியதாகிவிட்டது .... அதில் அந்த பிரபலம் தன்னை ஒரு மிஸ்டர் கிளீன் என்பதை போல பேட்டி கொடுத்து கொண்டு இருந்தார் .... அவர் தளத்தில் சென்று படித்தால் தான் ஒரு பொம்பளை பொறுக்கி , தண்ணி வண்டி என்று தன்னை பற்றி மிக உயர்வாக எழுதி வைத்திருப்பார் ... கேட்டால் நான் எதர்க்கும் அஞ்சாதவன் , யாருக்கும் பயப்படாதவன் , என் வாழ்க்கை ஒரு சரோஜா தேவி புத்தகம் என்றெல்லாம் பெருமை பீத்தி கொள்வார்  ... ஆனால் நேற்று அந்த ஊடகத்தில் தன்னை தமிழகம் முழுவதும் நிறைய பேர் பார்ப்பார்கள் என்று நினைத்ததாலோ என்னவோ , அவர் மேற்கூறிய "பெருமைகளை" அதிகம் பீற்றிக்கொள்ளவில்லை .... தன்னை ஒரு "மிஸ்டர் கிளீன்" என்று காட்டி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே அதிகம் யோசித்து யோசித்து நிதானமாக பேசிக்கொண்டிருந்தார் ... அதை பார்த்த என் மனைவி எவ்வளவு நல்லவரா இருக்காரு யாருங்க இவரு என்று கேட்டாள்  .. நான் உடனே நெட்டில் தேடி இந்த படத்தை அவளுக்கு காட்டினேன் ...


அதை பார்த்து விட்டு , இனிமேல் பிளாக் எழுதிரேன் , கவிதை எழுதுறேன்ன்னு பேப்பரையும் பேனாவையும் எடுத்தீங்க கைய உடச்சி அடுப்புல சொருக்கிடுவேன் ஜாக்கிரதை என்று என்னை மிரட்டி விட்டு டீவி யில் தெரிந்த அந்த நல்லவரை காரி உமிழ்ந்து விட்டு சென்றுவிட்டாள் ...

இந்த மாதிரி ஆட்களால்தான்  பிளாக் எழுதுறவன்கூட வெளியில தன்னை ஒரு எழுத்தாளன் என்று பெருமையாய் சொல்லிக்கொள்ள முடிவதில்லை ...  

  

சென்ற வாரம் இரண்டு திரைபடங்கள் பார்க்க நேர்ந்தது ... இரண்டும் கொரிய திரைபடங்கள் .... இப்பொழுதெல்லாம் தியேட்டருக்கு சென்று அதிகம் படங்கள் பார்க்கமுடிவதில்லை ... நான் தியேட்டரில் சென்று கடைசியாக பார்த்த படம் எத்தன் .... அதனால்தான் கொஞ்சம் செலவு செய்து ஒரு எல்‌சி‌டி டீவி , ஒரு ஹோம் தியேட்டர் வாங்கி வீட்டிலேயே ஒரு மினி தியேட்டர் எஃபக்ட் உருவாக்கி வைத்திருக்கிறேன் ... அதில் தமிழ் படங்களை பார்ப்பதை விட ஆங்கில மற்றும் கொரிய படங்களை பார்க்கும் பொழுது அதன் எஃபக்ட் நன்றாக தெரிகிறது ,,, நாம் தொழில்நுட்ப ரீதியாக இன்னும் பின்தங்கிதான் இருக்கிறோம் என்று நினைக்கிறேன் ...  சரி மெயின் மேட்டருக்கு வருவோம் .. அந்த இரண்டு படங்கள் I  saw the devil மற்றும் someone special …


Mind blowing என்று சொல்லுவார்களே அதை அனுபவித்தேன் இந்த இரண்டு படங்களையும் பார்த்தபொழுது ...  I saw the devil , ஒருவகையான பழிவாங்கும் கதை , சைக்கோ படம் என்று கூட சொல்லலாம் .... நம்மூர் படங்களில் எல்லாம் ஒரு டயலாக் வரும் , நீ அவ்வளவு சாதாரணமா சாக கூடாதுடா... அணு அணுவா துடிதுடிச்சி சாவனும் , 1990 காலகட்டத்தில் பெரும்பாலும் எல்லா படங்களிலும் இந்த வசனம் வரும் ... இந்த வசனம் வரும்போதெல்லாம் அணு அணுவாக சாகடித்தல் என்றாள் என்ன? அது எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசையாக இருக்கும்  ஆனால் எந்த படத்திலும் அந்த அணு அணுவான சித்திரவதையை பார்க்க முடியவில்லை ... அந்த குறை I saw the devil பார்த்த பொழுது போய் விட்டது... 

கர்ப்பிணி காதலியை ரேப் செய்து அவளை துடிக்க துடிக்க துண்டு துண்டாக வெட்டி சாகடித்த ஒரு சைக்கோவை தன் காதலி எப்படி சாகும் பொது சித்திரவதையை அனுபவித்தாலோ அதே போல அவனும் வாழும் போதே அதே சித்திரவதை அனுபவிக்க வேண்டும் என்று காதலன் சபதம் செய்து   அவனை துரத்தி துரத்தி டார்ச்சர் செய்வதே படம் .... இதில் காதலன் ஒரு போலீஸ் , அந்த சைக்கோ அவனை விட கெட்டிக்கார கிரிமினல் என்று கதாபாத்திரங்கள் அமைந்தால்  சுவாரஸ்யத்திர்க்கு கேட்கவா வேண்டும் ... அதகளபடுத்தி இருக்கிறார்கள் ... 

குறிப்பாக வில்லன் ஒவ்வொரு இடத்திற்க்காய் சென்று ஏதாவது ஒரு பெண்ணை மிரட்டி அவளை அனுபவித்து கொண்டிருக்கும் போது  ஹீரோ இடையில் வந்து அவனை நையபுடைப்பது , உண்மையான பழி வாங்குதல் என்றாள் அது இதுதான் என்று சபாஷ் போட வைக்கிறது ... ஆனால் ஒருகட்டத்தில் வில்லன் எப்படி இவன் நாம் போகும் இடத்திற்கெல்லாம் வருகிறான் என்று சந்தேகபட்டு , விஷயத்தை கண்டுபிடித்து (அது என்ன விஷயம் என்பதை படத்தில் பாருங்க, அதை இங்கே சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் குறைந்து விடும்) அதை அழித்து ஹீரோவின் கண் பார்வையில் இருந்து  தப்பி விடுகிறான் ... அதன் பின்னர் என்ன நடக்கிறது ஹீரோ எப்படி வில்லனை பழி வாங்கினான் என்பதை படு விறுவிறுப்பாக சொல்லி இருப்பார்கள்...


இந்த படத்தின் மிக பெரிய பிளஸ் சைக்கோ வில்லனாக நடித்திருப்பவரின் அலட்டலான நடிப்பு ... இவரின் நடிப்பிற்காகவே மிஸ் பண்ணக்கூடாத படம் இது ... குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் ரத்தக்களரியாய் , வாயில் சிகரெட் புகைத்து கொண்டே ஸ்டைலாக நடந்து வந்து போலீஸிடம் சரணடைய வரும் காட்சி ஒரு சின்ன உதாரணம் ... எனக்கு தெரிந்து ரஜினியால்கூட அவ்வளவு ஸ்டைலாக அந்த காட்சியில் நடித்திருக்க முடியாது .... செம மாஸ்.... கூடிய விரைவில் அதிமேதாவி கவுதம்மேனன் இயக்கத்தில் இந்த படம் தமிழில் சிதைக்கபடலாம் ஸாரி எடுக்கபடலாம் .. ஆனால் அப்படி எடுத்தால் அந்த வில்லன் கதாபாத்திரத்தில் யார் நடிப்பது ... என்னிடம் கேட்டால் நான் சொல்லும் ஒரே ஒரு நடிகன் ரஜினி மட்டும்தான் .... அஜீத் கூட நெருங்கி வருவார் .. ஆனால் ரஜினிதான் அதை பெட்டராக செய்ய முடியும் ...

இரண்டாவது someone special , இது I saw the devil படத்திற்க்கு முற்றிலும் எதிரானது ...  a romantic comedy Korean film… நாயகன் ஒரு பேஸ் பால் வீரன் ... அவன் காதலி அவனை விட்டு ஏதோ சில காரணங்களுக்காய் பிரிந்து விடுகிறாள் ... இப்படிதான் படம் ஆரம்பிக்கிறது ....  அவனுக்கு கேன்சர் வேறு வந்து விடுகிறது , டாக்டர் இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே நீங்கள் உயிரோடு இருக்க முடியும் என்று சொல்கிறார் , அவனுக்கு சாவதற்குள் உண்மையான காதல் என்றாள் என்னவென்று அனுபவித்துவிட வேண்டும் என்று ஆசை .... அப்பொழுதுதான் அவனுக்கு ஒரு பெண்ணின் நட்பு கிடைக்கிறது ... அவள் யார்? அவள்மூலம் இவன் காதல் என்றாள் என்ன்வென்று தெரிந்து கொள்கிறானா? இன்னும் மூன்று மாதத்தில் இறக்க போகும் இவனை அவள் காதலிப்பாளா? இப்படி எல்லா கேள்விகளுக்கும் சிரிக்க சிரிக்க பதில் சொல்லியிருக்கிறார்கள்...  இடையில் சில காட்சிகளில் சிந்திக்கவும் வைத்திருப்பார்கள் ...

மிக மிக சோகமாக ஆரம்பிக்கும் படத்தை தடாலென்று இயக்குனர் காமெடி டிராக் பிடித்து கடைசி வரை சோகம் கலையாமலே படத்தை காமெடி டிராக்லேயே பயணப்பட வைத்திருப்பார்(?......) ஒரு காட்சியில் நாயகன் நாயகியிடம் உன் வீடு எங்கு இருக்கிறது என்று கேட்பான் ... நாயகி உன் வீட்டில் இருந்து சரியாக 32 அடியில் என் வீடு இருக்கிறது என்று சொல்லுவாள் ... அதெப்படி சரியாக 32 அடி என்று உனக்கு தெரியும் என்று அவன் கேட்கும் போது வரும் ஃபிளாஷ்பேக் காட்சி அருமை ... பின்னர் இதே 32 அடி லாஜிக்கை கதையின் மிக முக்கிய திருப்பத்திற்க்கு பயன்படுத்தி இருப்பார்கள் ...அதே போல நாயகன் நாயகியிடம் உனக்கு பேஸ்பாலில் பிடித்தது எது என்று கேட்க , அவள் பந்தை பிடித்து அதை ஆடியன்ஸ் இருக்குக் கேலரியில் தூக்கி வீசினால் பார்பதற்க்கு வேடிக்கையாக இருக்கும் என்று சொல்ல , நாயகன் தான் சாக போவதற்க்கு முன் தான் ஆடும் கடைசி ஆட்டத்தில் முக்கியமான கட்டதில் பந்தை  கேட்ச் பிடித்து பேட்ஸ்மேனை அவுட் ஆக்காமல் , அதை ஆடியன்ஸ் மீது தூக்கி எறிவது ரசனையான காட்சி ...

இதே போல இன்னும் பல சுவாரஷ்யாமான ரசனையான காட்சிகளை படம் முழுவதும் அமைத்திருப்பார் இயக்குனர் ... வீட்டுக்கு வரும் திருடனுக்கு காசு கொடுத்து அனுப்பி வைப்பது , பாங்க் கொள்ளை அடிக்க வருபவர்களை காதல் பண்ணுங்கடா , வாழ்க்கை நல்லா இருக்கும் என்று அட்வைஸ் செய்து திருத்துவது என்று நிறைய அட போட வைக்கும் காட்சிகள் படம் முழுவதும் .... பீல் குட் மூவி பார்க்க பிடிக்கும் என்றால் இந்த படத்தை தவற விடாதீர்கள் .....

  
எனக்கு ரத்தக்களரியான த்ரில்லர் படங்கள்தான் பிடிக்கும் என்று சொல்லுபவர்கள் I saw the devil படமும் , இல்லை எனக்கு ரொம்ப சாஃப்ட்டான பீல் குட் படங்கள்தான் பிடிக்கும் என்று சொல்லுபவர்கள் someone special படமும் தாராளமாய் பாருங்கள் ... என்னை போல இரண்டுமே பிடிக்கும் என்பவர்கள் இரண்டையும் பார்க்கலாம் ,

ஆனால் தயவு செய்து மாற்றி  பார்த்து விடாதீர்கள் , என்னை நீங்கள் அசிங்க அசிங்கமாக திட்ட வாய்ப்பு அதிகம்....  இரண்டு படங்களும் தங்களுடைய களத்தில் அந்த அளவு முத்திரை படித்த படங்கள் ....  

Monday, July 18, 2011

எனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்
 தெய்வ திருமகன் பட விமர்சனங்களை படிச்சி படிச்சி ரெண்டு மூணு நாளா காண்டாகி கெடக்கேன் .. விக்ரம் அப்டி நடிச்சிருக்கார் , விக்ரம் இப்டி நடிச்சிருக்கார்னு ஆளாளுக்கு அள்ளி வீட்டுக்கிட்டு இருக்கிறத பாக்கிறப்ப சிரிக்கிறதா அழுவுரதான்னு தெரியலை .... இதை எல்லாம் படிக்கிறப்ப எனக்கு சில விஷயங்கள் புரிபடவே மாட்டேங்கிது .... இப்படி அசாதாரமான கதாபாத்திரம் ஒன்றில் உடலை வருத்தி கஷ்டபட்டு நடிப்பவனை மட்டும்தான் சிறந்த நடிகன் என்று நம் சமூகம் ஏற்று கொள்ளுமா? உங்களை போல என்னை போல ஒரு சாதாரண கதாபாத்திரத்தில் தன் யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியவர்கள் எல்லாம் நடிகர்கள் கிடையாதா? இப்படி ஒரு கேள்வி என் மனதில் தோன்றியவுடன் அதற்க்கு விடையாக என் மனதில் எழுந்தவர் நவரச நாயகன் கார்த்திக் அவர்கள் ... இன்று கமலையோ வேறு சில நடிகர்களையோ சிலாகித்து பேசும் நாம், மறந்து போன ஒரு அற்புதம் அவர் ... அவரை பற்றி என்னுடைய பார்வையே இந்த பதிவு ...

  
தமிழ் சினிமாவுக்கு இருக்கும் பெரிய சாபமே நடிக்க தெரியாத நடிகர்களின் கையில் எப்பொழுதும் அது மாட்டி கொண்டு அல்லாடுவதே .... நடிப்பு என்பது என்னை பொருத்தவரைக்கும் நான் நடிக்கிறேன் என்பதை பார்பவர்களுக்கு புரியவைக்க வேண்டி கஷ்டபட்டு நடிப்பதோ , இல்லை வித  விதமான கெட்டப்புகளில் ஸ்கிரீனில் வந்து ஒவ்வொரு கெட்டப்புக்கும் வித்தியாசமான குரலில் பேசி நடிப்பதோ , இல்லை தன்னை முற்றிலும் மாற்றி கொண்டு நடை உடை பேச்சு தோற்றம் என்று அனைத்தையும் தழைகீழாய் மாற்றி தேசிய விருதை குறிவைப்பதோ இல்லை ....  இயல்பாய் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் வாழ்ந்து காட்டுவதே ... அப்படி இயல்பான நடிப்பை வெளிபடுத்தும் திறமை வாய்ந்த நடிகர்கள் தமிழ் சினிமாவில் மிக மிக குறைவு ... எனக்கு தெரிந்து பிளாக் அண்ட் ஒயிட்  காலத்தில் நாடக தன்மை சிறிதும் இல்லாமல் இயல்பாய் நடித்த ஒரே நடிகன் பாலையா மட்டுமே ... ஒரு சில எம்ஜிஆர் படங்களை தவிர்த்து பார்த்தால் நாகேஷ் அவர்களையும் அந்த லிஸ்டில் சேர்த்து கொள்ளலாம் .... அதன் பின்னால் அந்த லிஸ்டில் பெரிய தேக்கம் இருந்து வந்தது நீண்ட நாட்களுக்கு... இரண்டு நடிகர்கள் நுழையும் வரை  .. ஒருவர் ரகுவரன் , இன்னொருவர் கார்த்திக் ....

சினிமாவில் நுழைய மிக எளிதான வழி நடிகரின் மகனாக இருப்பதே ... கார்த்திக் அவர்களும் சினிமாவில் அப்படிதான் நுழைந்தார் , அவர் தந்தை முத்துராமன் மூலமாய் ... முதல் படமே மிக பெரிய வெற்றி பெற்ற அலைகள் ஓய்வதில்லை... தான் முதல் படத்திலேயே யார் இந்த பையன் என்று அனைவரையும் கவனிக்க வைத்திருப்பார் ... அதுவும் அம்மா சென்டிமெண்ட் , காதல் காட்சிகள் , வில்லனிடம் அவமானப்படும் காட்சிகள் என்று எல்லா வகையான காட்சிகளிலும் ஒரு தேர்ந்த நடிகனின் நடிப்பு இருக்கும் ... இன்றும் அந்த படத்தை எப்பொழுதாவது பார்க்க நேர்ந்தால் எனக்கு இது  ஆச்சர்யமாக தெரியும்.... எனக்கு பதினாறு வயதினிலே கமலை விட (கவனிக்க கமல் ஒரு சிறந்த நடிகன் இல்லை என்று நான் சொல்லவில்லை) அலைகள் ஓய்வதில்லை கார்த்திக் சிறந்த நடிகனாக தெரிய காரணம் அந்த இயல்பான நடிப்பே ...அதன் பின்னர் அவருக்கு சில வருடங்களுக்கு சொல்லி கொள்ளும்படியான படம் இல்லை ... அவருக்கு அடுத்து பெரிய பிரேக் கொடுத்த படம் நினைவெல்லாம் நித்யா... அந்த படங்களின் பாடல்கள் எல்லாமும் பெரிய ஹிட் குறிப்பாக பணி விழும் மலர்வணம் என்ற பாடல் இப்பொழுது கேட்டாலும் சொக்க வைக்கும் பாடல் ... இந்த படத்தின் மூலமாய் கார்த்திக் காதல் இளவரசனாக புது பரிமாணம் பெற்றார் ... 85-90 காலகட்டங்களில் அவர் நடித்த பெரும்பாலான படங்கள் காதல் படங்களே .. கோபுர வாசலிலே , மௌன ராகம் போன்ற படங்கள் அவருக்கு பெரிய பேரை பெற்று கொடுத்தன ... இந்த படங்களை பார்க்கும் பொழுது எனக்கு கார்த்திக் கண்ணுக்கு தெரிவதில்லை , காதல் வயபட்ட இளைஞன் ஒருவனே  தெரிவான் ... ஒரே ஒரு காட்சி கோபுர வாசலிலே படத்தில் பானுபிரியா கார்திக்குக்கு கேசட் அனுப்பி வைப்பார் ... அதை கார்த்திக் போட்டு கேட்கும் காட்சியில் அவர் காட்டும் முகபாவங்கள் no chance அது  அவரால் மட்டுமே முடியும் .... பரபரப்பு ,சந்தோஷம் , குழப்பம் , அமைதி  என்று பல உணர்ச்சிகளை ஒரு சேர வெளிபடுத்தி இருப்பார் இயல்பாய் ...மௌனராகம் படத்தில் அவர் இருபது நிமிடங்கள் மட்டுமே வருவார் .. ஆனால் படம் பார்த்து முடிக்கும் பொழுது நம் மனசு முழுவதும் அவர்தான் இருப்பார் ... சச்சின் என்று ஒரு படம் , விஜய் நடித்திருப்பார் .... அந்த படத்திர்க்கு ஆனந்த விகடன் விமர்சனம் இவ்வாறு எழுதி இருந்தார்கள் ... மௌன ராகம் கார்த்திக் போல நடிக்க விஜய் முயற்சி செய்திருக்கிறார்.... திரையில் அதை பார்க்கும் பொழுது விஜய் இனிமேல் இப்படி முயற்சி செய்யாமல் இருப்பது நல்லது என்று தோன்றுகிறது என்று .... எனக்கும் சச்சின் படம் பார்க்கும் பொழுது கார்த்திக் ஞாபகம்தான் வந்தது ... அந்த மாதிரியான வேடங்களில் வெளுத்து கட்டுவார் கார்த்திக் .... அவரின் குறும்பான நடிப்பு வேறு யாருக்கும் கண்டிப்பாக கிடையாது .... விஜய் பல முறை அப்படி நடிக்க  முயன்று தோற்று  இருக்கிறார்... காரணம் மற்றவர்கள் குரும்பை வலிந்து முகத்தில் வெளிபடுத்துவார்கள் ,, ஆனால் கார்த்திக் முகத்தில் இயல்பாகவே அது வெளிப்படும்....


அடுத்து தமிழ் சினிமா கிராமத்து கதைகள் பக்கம் தன் பார்வையை திருப்பியது .... நிறைய படங்கள் கிராமத்து கதையில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்று எல்லாரும் கிராமத்து கதையாக எடுத்து கொண்டிருந்த நேரம். கார்த்திக் நடித்து வெளிவந்த கிராமத்து படம்தான் கிழக்கு வாசல் .... எனக்கு தெரிந்து கிராமத்து கதையில் ஹீரோ பேண்ட் போட்டு நடித்த முதல் படம் இதுதான் என்று நினைக்கிறேன் ... கிராமத்து கதாநாயகன் என்றாலே வேட்டி அல்லது பட்டாபட்டி , இரண்டில் ஒன்றைதான் ஹீரோ கட்டி இருப்பார் .... அப்படி நடித்தால்தான் ரசிகன் மனதில் அந்த ஹீரோ கிராமத்தானாக எளிதில் பதிவான் ... அப்படி இல்லாமல் பேண்ட் போட்டு நடித்தும் ஒரு கிராமத்து அப்பாவியாக பார்க்கும் ரசிகனின் மனதில் பதிவது என்பது அந்த காலகட்டத்தை பொறுத்த வரை கொஞ்சம் கஷ்டமான காரியம் ... ஆனால் கார்த்திக் அவரின் இயல்பான நடிப்பினால் அதை வெற்றிகரமாக செய்திருப்பார் ... அதன் பிறகு அவர் நடித்த பொண்ணுமணி , நாடோடி தென்றல் , பெரிய வீட்டு பண்ணைக்காரன் என்று நிறைய படங்களில் கிராமத்து இளைங்கனாக நடித்திருப்பார் குறையே சொல்ல முடியாதபடி ...

கார்திக்கிடம் இருக்கும் இன்னொரு பெரிய திறமை , அவரின் இயல்பான நகைசுவைதான் .... இது எல்லா கதாநாயகர்களுக்கும் அமைந்துவிடாது .... எனக்கு தெரிந்து நகைசுவையில் கலக்கிய கதாநாயகர்கள் என்று பார்த்தால் கமல், ரஜினி தவிர்த்து கார்திக்கும் ஒருவர் ... கவுண்டமணி கூட நடிக்கும் பொழுது மட்டும் சத்தியராஜ் மிண்ணுவார் .. ஆனால் கார்த்திக் யாருடன் நடிக்கும் பொழுதும் காமெடியில் கலக்குவார் ... அந்த வகையில் கார்த்திக் தன் முழு திறமையையும் வெளிபடுத்தி நடித்த படம் உள்ளத்தை அள்ளித்தா ... அவரின் குறும்புதனமும் , நகைசுவையும் படம் முழுவதும் வெளிபட்டிருக்கும் .... அதே வருடத்தில் இதற்க்கு முற்றிலும் வித்தியாசமாக ஒரு படம் நடித்திருப்பார் .. அது கோகுலத்தில் சீதை .... அந்த ரிஷி கதாபாத்திரம் அவரை தவிர வேறு யாராலும் கண்டிப்பாக இவ்வளவு யதார்த்தமாக செய்து இருக்க முடியாது ... இப்படி ஒரே வருடத்தில் இரண்டு ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு கதாபாத்திரங்களை அதிலும் இவரை தவிர வேறு யாராலும் அந்த கதாபாத்திரங்களை இவ்வளவு சிறப்பாக செய்ய முடியாது என்று அனைவரும் பாராட்டும் வகையில் நடிக்க இவரை விட்டால் தமிழ் சினிமாவில் வேறு ஆளே கிடையாது ....  நவராசநாயகன் என்று தனக்கு தானே படம் கொடுத்து கொண்டாலும் , அந்த பட்டத்திர்க்கு முற்றிலும் தகுதியானவர் அவர் ...ஆரண்யகாண்டத்தில் ஒரு விஷயம் சொல்லி இருப்பார்கள் ... கமல் பிடிக்கும் என்று சொல்லும் பெண்கள் எல்லாம் எளிதில் மடங்கி விடுவார்கள் என்று ..... ஆனால் உண்மையில் அப்படிபட்ட பெண்களுக்கு கமலை விட கார்திக்கைதான் மிகவும் பிடிக்கும் ... காரணம் கமலுக்குள் இருக்கும் இயல்பான திமிர் கார்திக்கிடம் கிடையாது ... அவர்தான் தமிழ் சினிமாவின் ஒரிஜினல் சாக்லேட் பாய் ...நிஜ கார்த்திக்குக்கு  வயசாகி இருக்கலாம் , ஆனால் மௌன ராகம் , கோபுர வாசலிலே கார்த்திக் போட்டியே இல்லாமல் இன்னமும் செல்லுலாய்டில் இளைமையோடுதான் இருக்கிறார் ...  இன்றும் அந்த படங்களை பார்க்கும் போது நம்மூர் பெண்களால்  கார்திக்கின் மேல் காதல்வயபடாமல் இருக்க முடியாது ....

குறிப்பிட்ட ஜாதி ஓட்டை நம்பி அரசியலில் இறங்கி அவமானபட்டது , குடிக்கு அடிமையானது , இன்னும் சில சொந்த பிரச்சனைகள்  என்று சில விஷயங்களில் அவர் சறுக்கி இருந்தாலும் , இந்த 75 வருட தமிழ் சினிமாவின் வரலாறு கார்த்திக் இல்லாமல் முழுமை பெறாது என்னும் வகையில் நடிப்பில் தன் முத்திரையைபதிக்க செய்தது அவர் செய்த மாபெரும் சாதனை ...

(தமிழ் சினிமாவில் எனக்கு பிடித்த நடிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதால் இந்த பதிவை அப்பப்ப தொடரலாம் என்று நினைத்திருக்கிறேன்)Saturday, July 16, 2011

“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி


இப்ப எல்லாம் பேப்பர் படிச்சாலே பயங்கர காமெடியா இருக்கு .. அதுக்கு காரணம் நம்ம தலைவர்கள் , சில முக்கிய  பிரமுகர்கள் கொடுக்கிற பேட்டிகள்தான் .... அதான் நானும் என் பங்குக்கு சில டுபாக்கூர்களை பேட்டி  எடுத்து  என் பிளாக்ல போட்டு இருக்கேன் ... படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க ....

முதலில் நம்ம சோனியாவின் தவ புதல்வர் , ஓட்டுக்கு மண் சுமந்த 
ராகுல் பூந்தி

எங்கள் உளவுதுறைக்கு கருப்பு பணத்தை யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பதிலும் , கூட்டணி கட்சிகளுக்கு சி‌பி‌ஐ மூலம் குழிபறிப்பதற்க்கும்  , எதிர்கட்சி எம்‌பிகளை விலைபேசுவதற்க்கும் , ராஜபக்சேவிர்க்கு அடிவருடுவதற்க்கும் , எனக்கும் என் அம்மாவுக்கும் , என் குடும்பத்திர்க்கும் பாதுகாப்பு அளிப்பதற்க்கும்  மட்டுமே நேரம் இருப்பதால் , எங்களால் குண்டு வெடிப்பு போன்ற சதிவேலைகளை முன்னரே கண்டுபிடிக்க முடியாது ... எனவே மக்களே தங்களுக்குள் உளவுதுறைகளை அமைத்து கொண்டு முடிந்தால் இந்த சதிவேலைகளை கண்டுபிடியுங்கள் .. இல்லையென்றால் அமைதியாக செத்து மடியுங்கள் .... இந்தியாவின் மொத்த வருவாயில் 99 % வைத்திருக்கும் அரசியல்வாதிகளும் , தொழிலதிபர்களும்தான் எங்களுக்கு முக்கியம் .... மீதி 1% பணத்தை மட்டும் வைத்திருக்கும் உங்களுக்காகவெல்லாம் உளவுத்துறை வேலை செய்யாது ... நீங்க உளவுத்துறை அளவுக்கெல்லாம் வொர்த் கிடையாது ...    


பன்மோகன் சங்கு:

கசாப்பின் பிறந்தநாளில் பட்டாசு வெடித்து கொண்டாட பாகிஸ்தான் முடிவு செய்து , கடைசியில் பட்டாசு கிடைக்காமல் வெடிகுண்டு வெடித்து கொண்டாடி இருக்கிறது என்று உளவுத்துறையிலிருந்து தகவல் வந்திருக்கிறது .... எனவே இனிமேல் கசாப்பிருக்கு பிரியாணி செலவோடு சேர்த்து அவர் பிறந்த நாளுக்கு பட்டாசு வெடிக்கும் செலவையும் இந்திய அரசே ஏற்று கொள்ளும் ...

மேலும் ஜெயிலில் இருக்கும் மற்ற பாக்கிஸ்தானி தியாகிகளின்   பிறந்தநாளையும் அவர்கள் குண்டு வெடித்து கொண்டாட கூடும் என்பதால் , மும்பை மக்கள் எதர்க்கும் தயாரா இருக்கும் படி கேட்டு கொள்ளபடுகிறார்கள் .... உங்கள்  துக்கத்தில் பங்கேற்க்க நானும் அன்னை சோனியாவும் இருக்கிறோம் ....    நீங்கள் இப்படி வீரபாகுவை போல  அடி மேல் அடி வாங்கி அவர்களாகவே பாவபட்டு  உங்களை விடுவதை தவிர வேறு எதுவும் இதற்காக இந்த அரசாங்கத்தால் செய்ய முடியாது ....


கலாநிதிமாறனின் தினகரன் செய்திகள் :

சென்ற ஆட்சியில் எங்கள் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட திரைபடங்கள் அனைத்தும் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது அனைவருக்கும் தெரியும் ... ஆடுகளம் படத்திர்க்கு கிடைத்த விருதுகளை அடுக்கி வைக்க சன் அலுவலகத்திலும் , தனுஷ் பங்களாவிலும்  , வெற்றிமாறன் வீட்டிலும் சேர்த்து வைத்து பார்த்தால் கூட இடமில்லை  மேலும் எங்களின்  கடைசி வெளியீடான எங்கேயும் காதல் திரைபடத்தின் வசூல் அவதாரின் வசூலை அசால்டாக முறியடித்து உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறது ... எங்கே நாங்கள் தொடர்ந்து படங்களை வெளியிட்டு கொண்டிருந்தால் harry potter , lord of the rings மற்றும்  இன்ன பிற வெளிவர இருக்கும் ஹாலிவுட் படங்களின் வசூல் பாதிக்கப்படும் என்று அஞ்சி ஹாலிவுட் இயக்குனர்கள் பலரும் அஞ்சுகின்றனர் .. மேலும் இந்த வருடம் நாங்கள் ஆடுகளம் படத்தை ஆங்கில சப்டைட்டில் போட்டு ஆஸ்கார் கமிட்டிக்கு அனுப்பி வைத்தால் ஒரு விருதுகூட ஹாலிவுட் படங்களுக்கு கிடைக்காது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும் ...  இதானால்தான் அவர்கள் அனைவரும் கூட்டு சதி செய்து , ஆங்கிலோ இந்தியனாகிய ஜெயலலிதா அம்மையாரின் துணையோடு (அவர் ஒரு ஆங்கிலோ இந்தியன் என்பதற்க்கு எங்களிடம் நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன ... தேவைபட்டால் அதை சன் நியூஸ்ஸில் காட்டுவோம்) எங்களின் ஒரே ஒரு தோல்வி படமான எந்திரன் படத்தால் பாதிக்கபட்ட திரை அரங்கு உரிமையாளர்களை எங்களுக்கு எதிராக திசை திருப்பி விடுகிறார்கள் ... இது குறித்து சில மக்களிடம் கருத்து கேட்ட பொழுது

ஆனந்தி , (சன் அலுவலக ஸ்வீப்பர்)  

இது ரொம்ப பெரிய அநியாயம் ஸார் .... எந்திரன் படத்தால நட்டம்னு சொல்லி காசு கேக்கிறவன , சுறா , வேட்டைக்காரன் , மாப்பிள்ளை , எங்கேயும் காதல் இப்படி சூப்பர் டூப்பர் படங்கலால சம்பாதிச்சதுல பங்கு தர சொல்லுங்க பாப்போம் ... ஆட்சியா ஸார் நடக்குது இப்ப .... புளுத்து போன அரிசி சாப்பிடாம எவனுக்கும் வாந்தி பேதி ஆகமாட்டேங்கிது , எவன் வீட்டு கக்கூசும் நாற மாட்டேங்கிது .. எங்க பொழப்பும் ஓட மாட்டேங்கிது ...

பாண்டி , கூவம்
ஸார் கொசுக்கடியால வீட்டுல நிம்மதியா தூங்க முடியாம , ஒரு குவாட்டர் அடிச்சி ஏதாவது ஒரு தியேட்டருக்கு போயி ஃபேன் காத்துல நல்லா தூங்கி எந்திரிச்சி நிம்மதியா பொழப்ப ஒட்டிக்கிட்டு இருப்பேன் ஸார் , அதுவும் நம்ம சன் பிக்சர்ஸ் படம் வந்தா எங்களுக்கெல்லாம் செம கொண்டாட்டம் ஸார் ... தியேட்டர்ல எவனும் இருக்க மாட்டான் ... படமும் மொக்கையாத்தான் இருக்கும் , ஆனாலும் தியேட்டர விட்டு தூக்க மாட்டாணுவ ... நான் பாட்டுக்க துண்ட விரிச்சி போட்டு மூணு மணி நேரம் ஜாலியா தூங்கி எந்திருச்சிட்டு வருவேன் ஸார் ... இந்த ஆட்சி வந்த பின்னாடி அதுக்கும் வழி இல்லாம போச்சு ....


நித்தி , ரஞ்சி பிரஸ் மீட் :


நித்தி 

அந்த வீடியோவில் இருப்பது நானும் ரஞ்சிதாவும்தான் .... உங்களால என்ன புடுங்க முடியுமோ புடிங்கிக்கொங்க .... மேலும் இதுவரைக்கும் என்னுடய ஆசிரமத்திர்க்கு பெண்களும் வயதானவர்களுமே வந்து கொண்டிருந்தனர் ... ஆனால் இந்த வீடியோ வெளிவந்த பிறகு கல்லூரி மாணவர்களும்  என்னுடைய ஆசிரமத்திர்க்கு படையெடுக்க ஆரம்பித்து விட்டனர் ... கால் பண்ணு , ரஞ்சி வருவா என்ற ஒரு இருபத்தினாலு மணி நேர சேவை மையம் ஒன்றை என் ஆசிரமத்தில் உருவாக்கி இந்த இளைய சமுதாயத்திர்க்கு என்னால் ஆன உதவியை செய்து கொண்டு இருக்க இதன் மூலம் கடவுள் அருள் புரிந்துள்ளான் ... இதற்கெல்லாம் காரணம் சன் டீவியும் , நக்கீரனும்தான்... அவர்களுக்கு நான் என்றென்றும் கடமைபட்டுள்ளேன் ... அதன் பிரதிஉபகாரமாக அவர்கள் id card போட்டு கொண்டு யாராவது அந்த சேவை மையத்திர்க்கு வந்தால்  அவர்களுக்கு ரஞ்சி ஃப்ரீ...

ரஞ்சி :


நான் ஒரு பொண்ணு ஸார் . எனக்கும் வெக்கம் , மானம் எல்லாம் இருக்குது ஸார் ... நான் முன்னாடி எல்லாம் இப்படி பண்ணும் பொது ரொம்ப வெக்கமா இருக்கும் ஸார் ... தினம் தினம் பயங்கர கூச்சமா இருக்கும் ... ஊருக்கு பயந்துகிட்டு ஒளிஞ்சி ஒளிஞ்சி இருக்க வேண்டியதா போச்சு ... ஆனா அந்த வீடியோ சன் டீவியில வந்த பிறகு எனக்கு வெக்கம் , கூச்சம் எல்லாம் போச்சி ஸார் ... முழுக்க நனைந்த பின்னாடி முக்காடு எதுக்குன்னு இப்பலாம் நித்தி கூட இருக்கிறப்ப கூச்சபடுறதே இல்லை ... இப்ப எல்லாம் ரெண்டு பெரும் சந்தோஷமா பொழுதை கழிக்கிறோம் ஸார் ... 
அதுக்கு காரணம் சன் டிவியும் ,
நக்கீரனும்தான் , அவங்க என்னை நித்தி மூலம் கூட காண்டாக்ட் பண்ண தேவை இல்லை , என்னை நேரடியாகவே தொடர்பு கொள்ளலாம் ....  

டிஸ்கி : மேலே இருக்கும் பேட்டிகள் அனைத்தும் கற்பனையா? இல்லை இதுதான் உண்மையா? என்று எனக்கு சத்தியமாக தெரியாது ... என்னை பொறுத்தவரை இது ஒரு கற்பனை ... அவர்களை பொறுத்தவரை இது உண்மையாக கூட இருக்கலாம்..


ஆனா ஒண்ணு மக்களே நாம எல்லாம் இப்படியே முட்டாபயலுகளாகவே இருந்தோம்னா இன்னும் கொஞ்ச காலத்துல இவனுங்க இப்படி உண்மையிலேயே பெட்டி கொடுத்தாலும் கொடுப்பானுக.... 

Wednesday, July 13, 2011

தல வரலாறு - பாகம் 2(தலையோட மாங்காத்தா படம் ரிலீஸ் ஆக போவுது ... நானும் தல பதிவுகள் எழுதி ரொம்ப நாள் ஆகிடுச்சி .... இப்படி ஒரு தல ரசிகன் இருக்கான் அப்படிங்கிரத பதிவுலகம் மறந்திரக்கூடாதுல ... அதான் இனிமேல் மாங்காத்தா படம் ரிலீஸ் ஆகுற  வரைக்கும் தல பதிவா போட்டு தாளிச்சிட வேண்டியதுதான்னு முடிவு பண்ணிட்டேன் .... எனக்குள்ள இருக்குற அஜீத் ரசிகனுக்கு தீனி போட இதவிட்டா சரியான ஸந்தர்பம் அமையாது... இந்த பதிவு நான் ஏற்கனவே எழுதி பாதியில கைவிட்ட ஒரு தொடர் பதிவு .. இதோட முந்தைய பாகங்களை நீங்கள் படிக்க ஆசைபட்டால் இதை கிளிக் செய்து படிங்க ...படிக்க ஆரம்பிக்கும் முன்னாள்  ஒரு விஷயம் இது ஒரு தீவிர அஜீத் ரசிகனால் மிக தீவிரமான முறையில் அஜீத் பற்றி எழுதப்படும் பதிவு , யாருக்காவது அஜீத் பற்றி எழுதினால் வயிறு மற்றும் இன்ன பிற சமாச்சாரங்கள் பற்றி எரியும் என்றால்  இப்பவே ஒரு செலுசிலின் வாங்கி வாயில போட்டு படிக்க ஆரம்பிங்க  ... )


பூவெல்லாம் உன் வாசம் படம் வந்து பாட்டு எல்லாம் அதிரி புதிரி ஹிட்... அந்த நேரத்துல தல மேல பயங்கர எதிர்பார்ப்பு இருந்தது அவர் ரசிகர்களிடையே ... அஜீத்தொட கேரியர் கிராஃப் டாப்புல இருந்த நேரம் அது .... தொட்டதெல்லாம் ஹிட்டு .... ஆனா பூவெல்லாம் உன் வாசம் படம் ஹிட்டா? இல்ல பிளப்பாண்ணு? இதுவரைக்கும் சரியா சொல்ல முடியல... சில பேர்  நல்லா இருக்குன்னு சொல்வான் சிலர் மொக்கைண்ணு சொல்வான் .. ஆனா கண்டிப்பா ரசிகர்களுக்கு அந்த படம் பாடலை தவிர்த்து ஏமாற்றம்தான் ... ஆனால் அந்த படத்துல அஜீத் ஜோதிகாவுக்கு இடையே தெரியும் அந்த கெமிஸ்ட்ரி எனக்கு ரொம்ப பிடிக்கும்.... காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் பாடல் அந்த வருடத்தின் உட்சகட்ட ஹிட் பாடல்.. ஆனால் எனக்கு திருமண மலர்கள் பாடல்தான் அந்த படத்தில் மிகவும் பிடித்த பாடல்.... ஜோதிகாவை சைட் அடிக்க வேண்டும் என்று இன்று நினைத்தாலும் உடனே நான் பார்க்கும் பாடல் இதுதான் .. அம்மணி  அம்புட்டு அழகா இருக்கும் அந்த பாட்டுல ....  அதே வருஷம் ரிலீஸ் ஆகி  பட்டைய கெளப்புன படம் விக்ரம் நடிச்ச தில் .... தலைக்கும் அந்த மாதிரி ஒரு படம் அமையணும்னு ரசிகர்களா எல்லாம் ஆசை பட்ட சமயம் அது .... தல சும்மா காதல் பண்ணிக்கிட்டு டூயட் பாடிக்கிட்டு இருந்தது போதும் , அந்த மாதிரி பண்ணத்தான் நெறைய பேர் இருக்காணுகளே , அடுத்து அஜித்த ஒரு மாஸ் ஹீரோவா பாக்கணும்னு ரசிகர்களெல்லாம் ஆசபட்டுகிட்டு இருந்த நேரம் ... அப்பதான் அதுக்கு ஏத்த மாதிரி அவர் ரசிகர்களுக்கு பெரிய சந்தோசத்தை கொடுக்கிற மாதிரி ஒரு நியூஸ் வந்தது ... அது சேது என்ற ஒரு மாஸ் பிளஸ் கிளாஸ் படம் கொடுத்த பாலாவின் அடுத்த படத்தில் தல நடிக்க போகிறார் என்பதுதான்  .. படத்தின் பெயர் நந்தா .... 


முகவரி ஷூட்டிங்கில் கொடைக்கானல் மலையில் தலயை தற்செயலாக சந்தித்த பாலா , அஜித்திடம் இந்த கதையை சொன்னதாகவும் தலையும் உங்களுடன் படம் பண்ண ஆசையாய் இருப்பதாக சொன்னதாக எல்லா பத்திரிக்கைகளிலும் செய்திகள் வந்தது ... அடுத்த வாரமே படத்தோட அதிகாரபூர்வமான அறிவிப்பு .. பாலாவின் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் நந்தா ... படத்தை தயாரிக்க போவது தில் படத்தை தயாரித்த லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் ... இதை எல்லாம் விடவும் மிக பெரிய விஷயம் இந்த படத்தில் அஜித்துடன் சேர்ந்து தமிழ் சினிமாவின் பிதாமகன்  சிவாஜி கணேசன்  அவர்களும் நடிக்க போகிறார் என்பதுதான் ...


 

ஆமாம் ராஜ்கிரண் கதாபாத்திரத்தில் முதலில் பாலா நடிக்க கேட்டது செவாளியே சிவாஜி கணேசன் அவர்களைத்தான் ... நான் தினதந்தியில் இந்த நியூஸ் படித்தது இன்னமும் நன்றாக ஞாபகம் இருக்கிறது .. அதை படித்த அந்த நாள் முழுவதும் பார்க்கும் அனைவரிடமும் இதை பற்றி சொல்லி கொண்டே இருந்ததும் அதைவிட அதிகமாக  ஞாபகம் இருக்கிறது ... குறிப்பாக விஜய் ரசிகன் யாராவது கண்ணில்பட்டால்  அவ்வளவுதான் இதை ஓவர் பில்ட் அப்புடன் சொல்லி அவர்கள் வயித்தெரிச்சலை பார்த்து சந்தோசபடுவதுதான் எனக்கு அப்போதைய பெரிய பொழுதுபோக்கே ...  


படபிடிப்பும்  ஆரம்பித்தது ராமேஸ்வரத்தில்... நானும் எங்கள் ஊரில் நான் உருவாக்கிய தல ரசிகர்களும் எப்படியாவது ராமேஸ்வரம் சென்று சூட்டிங் பார்த்து விட வேண்டும் என்று பெரிய திட்டமெல்லாம் போட்டு வைத்திருந்தோம் .. அப்பொழுது நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருந்தேன் ... என் நண்பர்கள் அனைவரும் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்... அனைவரும் மூன்று நாட்கள் விடுமுறை எடுத்து ராமேஸ்வரம் சென்று தங்கி சூட்டிங் பார்த்து ..தலையை சந்தித்து பேச வேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருந்தோம் ... ராமேஸ்வரம் எங்கள் ஊருக்கு மிக அருகில்தான் என்பதால் சென்று வருவதில் எங்களுக்கு பிரசனையே கிடையாது... காசு இல்லை என்றாள் நடந்தே சென்று வருவது என்று கூட முடிவு செய்து வைத்திருந்தோம்( அப்ப நாங்க ரொம்ப சின்ன பசங்க பாஸ்).... 


ஆனால் எங்கள் ஆசையில் பேரிடியாய் இறங்கியது ஒரு செய்தி .. படப்பிடிப்பில் பாலாவிர்க்கும் அஜித்திர்க்கும் சண்டை,படம் கைவிடப்பட்டது என்று, முதலில் இது வழக்கம் போல கிளப்பிவிடபடும் வதந்தி  என்றுதான் அஜித் ரசிகர்கள் அனைவரும் நம்பினார்கள்... ஆனால் அடுத்த வாரமே செய்தி கண்பார்ம் ஆனது .நந்தா படத்தில் இருந்து அஜித் விலகல் என்று .. மேலும் படத்தில் அஜித் இல்லை என்றதும் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் படத்தில் இருந்து விலகி கொண்டனர் ... சிவாஜி கணேசன் அவர்களும் உடல் நல குறைவினால் படத்தில் நடிக்க முடியாமல் போனது ...   நாங்கள் படமே கைவிடப்பட்டது என்றுதான் நினைத்திருந்தோம் ... 


ஆனால் அதர்க்கு நேர்மாறாக பாலா அஜித் இல்லை என்றாலும் இந்த படம் தொடரும் ... படத்தை எடுத்து காட்டுவேன் என்றெல்லாம் பேட்டி கொடுத்து கொண்டிருந்தார் ... சொல்லியதை போலவே சூர்யாவை வைத்து ஷூட்டிங்கை தொடந்து நடத்தவும் செய்தார்... எங்களுக்கு அதெல்லாம் பெரிய விஷயமாக படவில்லை ... நாங்கள் ஓவெராக பில்ட் அப் கொடுத்ததில் செம கடுப்பில் இருந்த விஜய் ரசிகர்கள் இந்த நியூஸ் வந்த பிறகு , யாருனே தெரியாத சூரியாவெல்லாம் உங்க தலைக்கு பதிலா நடிக்க போரானா? அப்புறம் என்னடா தல , மட்ட  மயிருன்னூட்டு? என்று பதிலுக்கு எங்களை பழி வாங்கி கொண்டு இருந்தனர் ...எங்களுக்கெல்லாம் பயங்கர கடுப்பு... தல இருந்த இடத்தில் வேறு ஒருத்தனை நினைத்து கூட பார்க்க முடியவில்லை .... தல உடனே ஒரு படத்தில் நடித்து அதை நந்தாவுடன் ரிலீஸ் செய்து படத்தை பெரிய ஹிட் ஆக்கி பாலாவிற்க்கு  நோஸ் கட் கொடுக்க வேண்டும் என்று தல ரசிகர்கள் எல்லாரும் நினைத்தோம் .. 


சரியாக அந்த நேரத்தில் தல தனது அடுத்த படத்தை பற்றிய செய்தியை வெளியிட்டார்... அது ரெட்... படத்தின் பூஜை விளம்பரம் பேப்பரில் வந்தது .. தல மொட்டை கெட்டப்பில், நெற்றியில் குங்குமம் வைத்து கொண்டு சிவப்பு கலர் சட்டையில் இருப்பார்... அதை பார்த்த என்னை போன்ற அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் பயங்கர கொண்டாட்டம் ... இந்த படம் கண்டிப்பாக நந்தாவிர்க்கு பதில் சொல்லும் என்று நம்பினோம் காரணம் நந்தாவிலும் தலைக்கு மொட்டை கெட்டப்புதான் என்று பாலா சொல்லி இருந்தார் (ஆனால் ஸ்டில் எதுவும் வரவில்லை அப்பொழுது ) ... இந்த கெட்டப் விஷயம் தல மறைமுகமாக இது நந்தாவிற்க்கு பதிலடி என்று சொல்லியதை போல நாங்கள் உணர்ந்தோம் ... 

அந்த விளம்பரம் பேப்பரில் வந்ததில் இருந்து தல ரசிகர்கள் பல பேர் ஊருக்குள் அதே கெட்டப்புடன் சுற்ற ஆரம்பித்து விட்டனர் ... படத்தின் கதை பற்றி அரசால் புரசலாக வந்த விசயங்களை வைத்து இந்த படம் தலைக்கு இன்னொரு தீனாவாக கண்டிப்பாக அமையும்  என்று நாங்கள் பயங்கர குஷியில் இருந்தோம் ... படமும் வந்தது ... 


எங்கள் ஊர் மகாராணி திரை  அரங்கில் முதல் நாள் முதல் காட்சி... கண்டிப்பாக ரஜினி படத்தை தவிர வேறு எந்த படத்திர்க்கும் அப்படி ஒரு ஓபெனிங்க் இருந்திருக்காது ... நான் இதுவரைக்கும் அப்படி ஒரு கூட்டம் எந்த திரை அரங்கிலும்  பார்த்ததில்லை ... எந்த நடிகனாலும் அப்படி ஒரு ஓபெனிங்க் இனிமேல் காட்டவே முடியாது ... அது தலையோட மாஸின் உச்சம்... அரங்கம் எல்லாம் தல ரசிகர்கள் ... இந்த படம் வந்த பின்னால்தான் தல king of opening என்று மாற்று கருத்தே இல்லாமல் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளபட்டார்... எங்கள் ஊரில் படையப்பாவிர்க்கு பின்னால் அறுபது  ரூபாவிற்க்கு டிக்கெட் விற்க்கபட்டது  ரெட் படத்திர்க்குதான்... நான் முன்பே சொல்லியதை போல தலையோட கேரியர் கிராஃப்  டாப்பில் இருந்த நேரம் அது .... அதை அப்படியே சரியாக கொண்டு போயி இருந்தால் போட்டிக்கு யாருமே இல்லாமல்(யாராலும் போட்டி போட்டு இருக்கவும் முடியாது )   யாராலும் தொட முடியாத உச்சத்தில் இருந்திருப்பார் ... இப்பொழுதும் என்னால் உறுதியாக சொல்ல முடியும் இனிமேல் வேறு எந்த நடிகனாலும் அந்த ஒபெனிங்க் காட்டவே முடியாது .... பக்கத்து திரை அரங்கில் பம்மல் k சம்பந்தம் படம் திரையிடப்பட்டு இருந்தது ... ரெட் படத்திர்க்கு வந்த கூட்டத்தை பார்த்து முதல் இரண்டு நாட்கள் பம்மல் k சம்பந்தம் படத்தை ஓட்டாமல் இரண்டு திரை அரங்கிலுமே ரெட் மட்டுமே ஓட்டினார்கள்.... ஒட்டு மொத்த தமிழ் திரையுலகையும்  தலயை நிமிர்ந்து பார்க்க வைத்த ஒபெனிங்க் அது .... மதுரை அண்ணாமலை திரை அரங்கில் முதல் நாள் மட்டும் ஏழு ஷோ ஓட்டபட்டது படம் ... (படம் அங்கு நூறு நாட்களை தாண்டி ஓடியது)... 

இந்த கூட்டத்தை பாத்தவுடன் எனக்கு பயங்கர குஷி ... களவாணி படத்தில் ஒரு வசனம் வருமே சும்மாவே ஆடுவோம் , இதுல காலுல சலங்கைய கட்டி விட்டா கேக்கவா வேணும்... அவ்வளவு அஜீத் ரசிகர்களை பார்த்த பொழுது  எனக்குள் ஒரு அடக்க முடியாத ஆர்வம் + கர்வம்  .... அந்த கர்வம்  அந்த  கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரின்  முகத்திலும் தெரிந்தது .... (இப்பொழுதும் அஜீத் படம் வெளிவந்தால் முதல் நாள் தியேட்டர் சென்று பாருங்கள் , எங்களை போன்ற தல ரசிகர்களின்  முகத்தில் எப்பொழுதும் அந்த கர்வம் ஒரு ஓரமாகமாவது அமர்ந்திருக்கும்(படத்தின் ரிசல்ட் எப்படி இருந்தாலும் சரி )... ஏனென்றால் நாங்கள் அஜித்தின் ரசிகர்கள் ) அந்த குஷியோடு குஷியாக அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி உள்ளே நுழைந்தோம் ... படமும் ஆரம்பித்தது ...     

(ஏமாற்றிய ரெட் , ஏற்றம் தந்த K . S . ரவிகுமார் அடுத்த பாகத்தில்)

LinkWithin

Related Posts with Thumbnails