Followers

Copyright

QRCode

Wednesday, July 13, 2011

தல வரலாறு - பாகம் 2(தலையோட மாங்காத்தா படம் ரிலீஸ் ஆக போவுது ... நானும் தல பதிவுகள் எழுதி ரொம்ப நாள் ஆகிடுச்சி .... இப்படி ஒரு தல ரசிகன் இருக்கான் அப்படிங்கிரத பதிவுலகம் மறந்திரக்கூடாதுல ... அதான் இனிமேல் மாங்காத்தா படம் ரிலீஸ் ஆகுற  வரைக்கும் தல பதிவா போட்டு தாளிச்சிட வேண்டியதுதான்னு முடிவு பண்ணிட்டேன் .... எனக்குள்ள இருக்குற அஜீத் ரசிகனுக்கு தீனி போட இதவிட்டா சரியான ஸந்தர்பம் அமையாது... இந்த பதிவு நான் ஏற்கனவே எழுதி பாதியில கைவிட்ட ஒரு தொடர் பதிவு .. இதோட முந்தைய பாகங்களை நீங்கள் படிக்க ஆசைபட்டால் இதை கிளிக் செய்து படிங்க ...படிக்க ஆரம்பிக்கும் முன்னாள்  ஒரு விஷயம் இது ஒரு தீவிர அஜீத் ரசிகனால் மிக தீவிரமான முறையில் அஜீத் பற்றி எழுதப்படும் பதிவு , யாருக்காவது அஜீத் பற்றி எழுதினால் வயிறு மற்றும் இன்ன பிற சமாச்சாரங்கள் பற்றி எரியும் என்றால்  இப்பவே ஒரு செலுசிலின் வாங்கி வாயில போட்டு படிக்க ஆரம்பிங்க  ... )


பூவெல்லாம் உன் வாசம் படம் வந்து பாட்டு எல்லாம் அதிரி புதிரி ஹிட்... அந்த நேரத்துல தல மேல பயங்கர எதிர்பார்ப்பு இருந்தது அவர் ரசிகர்களிடையே ... அஜீத்தொட கேரியர் கிராஃப் டாப்புல இருந்த நேரம் அது .... தொட்டதெல்லாம் ஹிட்டு .... ஆனா பூவெல்லாம் உன் வாசம் படம் ஹிட்டா? இல்ல பிளப்பாண்ணு? இதுவரைக்கும் சரியா சொல்ல முடியல... சில பேர்  நல்லா இருக்குன்னு சொல்வான் சிலர் மொக்கைண்ணு சொல்வான் .. ஆனா கண்டிப்பா ரசிகர்களுக்கு அந்த படம் பாடலை தவிர்த்து ஏமாற்றம்தான் ... ஆனால் அந்த படத்துல அஜீத் ஜோதிகாவுக்கு இடையே தெரியும் அந்த கெமிஸ்ட்ரி எனக்கு ரொம்ப பிடிக்கும்.... காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் பாடல் அந்த வருடத்தின் உட்சகட்ட ஹிட் பாடல்.. ஆனால் எனக்கு திருமண மலர்கள் பாடல்தான் அந்த படத்தில் மிகவும் பிடித்த பாடல்.... ஜோதிகாவை சைட் அடிக்க வேண்டும் என்று இன்று நினைத்தாலும் உடனே நான் பார்க்கும் பாடல் இதுதான் .. அம்மணி  அம்புட்டு அழகா இருக்கும் அந்த பாட்டுல ....  அதே வருஷம் ரிலீஸ் ஆகி  பட்டைய கெளப்புன படம் விக்ரம் நடிச்ச தில் .... தலைக்கும் அந்த மாதிரி ஒரு படம் அமையணும்னு ரசிகர்களா எல்லாம் ஆசை பட்ட சமயம் அது .... தல சும்மா காதல் பண்ணிக்கிட்டு டூயட் பாடிக்கிட்டு இருந்தது போதும் , அந்த மாதிரி பண்ணத்தான் நெறைய பேர் இருக்காணுகளே , அடுத்து அஜித்த ஒரு மாஸ் ஹீரோவா பாக்கணும்னு ரசிகர்களெல்லாம் ஆசபட்டுகிட்டு இருந்த நேரம் ... அப்பதான் அதுக்கு ஏத்த மாதிரி அவர் ரசிகர்களுக்கு பெரிய சந்தோசத்தை கொடுக்கிற மாதிரி ஒரு நியூஸ் வந்தது ... அது சேது என்ற ஒரு மாஸ் பிளஸ் கிளாஸ் படம் கொடுத்த பாலாவின் அடுத்த படத்தில் தல நடிக்க போகிறார் என்பதுதான்  .. படத்தின் பெயர் நந்தா .... 


முகவரி ஷூட்டிங்கில் கொடைக்கானல் மலையில் தலயை தற்செயலாக சந்தித்த பாலா , அஜித்திடம் இந்த கதையை சொன்னதாகவும் தலையும் உங்களுடன் படம் பண்ண ஆசையாய் இருப்பதாக சொன்னதாக எல்லா பத்திரிக்கைகளிலும் செய்திகள் வந்தது ... அடுத்த வாரமே படத்தோட அதிகாரபூர்வமான அறிவிப்பு .. பாலாவின் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் நந்தா ... படத்தை தயாரிக்க போவது தில் படத்தை தயாரித்த லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் ... இதை எல்லாம் விடவும் மிக பெரிய விஷயம் இந்த படத்தில் அஜித்துடன் சேர்ந்து தமிழ் சினிமாவின் பிதாமகன்  சிவாஜி கணேசன்  அவர்களும் நடிக்க போகிறார் என்பதுதான் ...


 

ஆமாம் ராஜ்கிரண் கதாபாத்திரத்தில் முதலில் பாலா நடிக்க கேட்டது செவாளியே சிவாஜி கணேசன் அவர்களைத்தான் ... நான் தினதந்தியில் இந்த நியூஸ் படித்தது இன்னமும் நன்றாக ஞாபகம் இருக்கிறது .. அதை படித்த அந்த நாள் முழுவதும் பார்க்கும் அனைவரிடமும் இதை பற்றி சொல்லி கொண்டே இருந்ததும் அதைவிட அதிகமாக  ஞாபகம் இருக்கிறது ... குறிப்பாக விஜய் ரசிகன் யாராவது கண்ணில்பட்டால்  அவ்வளவுதான் இதை ஓவர் பில்ட் அப்புடன் சொல்லி அவர்கள் வயித்தெரிச்சலை பார்த்து சந்தோசபடுவதுதான் எனக்கு அப்போதைய பெரிய பொழுதுபோக்கே ...  


படபிடிப்பும்  ஆரம்பித்தது ராமேஸ்வரத்தில்... நானும் எங்கள் ஊரில் நான் உருவாக்கிய தல ரசிகர்களும் எப்படியாவது ராமேஸ்வரம் சென்று சூட்டிங் பார்த்து விட வேண்டும் என்று பெரிய திட்டமெல்லாம் போட்டு வைத்திருந்தோம் .. அப்பொழுது நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருந்தேன் ... என் நண்பர்கள் அனைவரும் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்... அனைவரும் மூன்று நாட்கள் விடுமுறை எடுத்து ராமேஸ்வரம் சென்று தங்கி சூட்டிங் பார்த்து ..தலையை சந்தித்து பேச வேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருந்தோம் ... ராமேஸ்வரம் எங்கள் ஊருக்கு மிக அருகில்தான் என்பதால் சென்று வருவதில் எங்களுக்கு பிரசனையே கிடையாது... காசு இல்லை என்றாள் நடந்தே சென்று வருவது என்று கூட முடிவு செய்து வைத்திருந்தோம்( அப்ப நாங்க ரொம்ப சின்ன பசங்க பாஸ்).... 


ஆனால் எங்கள் ஆசையில் பேரிடியாய் இறங்கியது ஒரு செய்தி .. படப்பிடிப்பில் பாலாவிர்க்கும் அஜித்திர்க்கும் சண்டை,படம் கைவிடப்பட்டது என்று, முதலில் இது வழக்கம் போல கிளப்பிவிடபடும் வதந்தி  என்றுதான் அஜித் ரசிகர்கள் அனைவரும் நம்பினார்கள்... ஆனால் அடுத்த வாரமே செய்தி கண்பார்ம் ஆனது .நந்தா படத்தில் இருந்து அஜித் விலகல் என்று .. மேலும் படத்தில் அஜித் இல்லை என்றதும் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் படத்தில் இருந்து விலகி கொண்டனர் ... சிவாஜி கணேசன் அவர்களும் உடல் நல குறைவினால் படத்தில் நடிக்க முடியாமல் போனது ...   நாங்கள் படமே கைவிடப்பட்டது என்றுதான் நினைத்திருந்தோம் ... 


ஆனால் அதர்க்கு நேர்மாறாக பாலா அஜித் இல்லை என்றாலும் இந்த படம் தொடரும் ... படத்தை எடுத்து காட்டுவேன் என்றெல்லாம் பேட்டி கொடுத்து கொண்டிருந்தார் ... சொல்லியதை போலவே சூர்யாவை வைத்து ஷூட்டிங்கை தொடந்து நடத்தவும் செய்தார்... எங்களுக்கு அதெல்லாம் பெரிய விஷயமாக படவில்லை ... நாங்கள் ஓவெராக பில்ட் அப் கொடுத்ததில் செம கடுப்பில் இருந்த விஜய் ரசிகர்கள் இந்த நியூஸ் வந்த பிறகு , யாருனே தெரியாத சூரியாவெல்லாம் உங்க தலைக்கு பதிலா நடிக்க போரானா? அப்புறம் என்னடா தல , மட்ட  மயிருன்னூட்டு? என்று பதிலுக்கு எங்களை பழி வாங்கி கொண்டு இருந்தனர் ...எங்களுக்கெல்லாம் பயங்கர கடுப்பு... தல இருந்த இடத்தில் வேறு ஒருத்தனை நினைத்து கூட பார்க்க முடியவில்லை .... தல உடனே ஒரு படத்தில் நடித்து அதை நந்தாவுடன் ரிலீஸ் செய்து படத்தை பெரிய ஹிட் ஆக்கி பாலாவிற்க்கு  நோஸ் கட் கொடுக்க வேண்டும் என்று தல ரசிகர்கள் எல்லாரும் நினைத்தோம் .. 


சரியாக அந்த நேரத்தில் தல தனது அடுத்த படத்தை பற்றிய செய்தியை வெளியிட்டார்... அது ரெட்... படத்தின் பூஜை விளம்பரம் பேப்பரில் வந்தது .. தல மொட்டை கெட்டப்பில், நெற்றியில் குங்குமம் வைத்து கொண்டு சிவப்பு கலர் சட்டையில் இருப்பார்... அதை பார்த்த என்னை போன்ற அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் பயங்கர கொண்டாட்டம் ... இந்த படம் கண்டிப்பாக நந்தாவிர்க்கு பதில் சொல்லும் என்று நம்பினோம் காரணம் நந்தாவிலும் தலைக்கு மொட்டை கெட்டப்புதான் என்று பாலா சொல்லி இருந்தார் (ஆனால் ஸ்டில் எதுவும் வரவில்லை அப்பொழுது ) ... இந்த கெட்டப் விஷயம் தல மறைமுகமாக இது நந்தாவிற்க்கு பதிலடி என்று சொல்லியதை போல நாங்கள் உணர்ந்தோம் ... 

அந்த விளம்பரம் பேப்பரில் வந்ததில் இருந்து தல ரசிகர்கள் பல பேர் ஊருக்குள் அதே கெட்டப்புடன் சுற்ற ஆரம்பித்து விட்டனர் ... படத்தின் கதை பற்றி அரசால் புரசலாக வந்த விசயங்களை வைத்து இந்த படம் தலைக்கு இன்னொரு தீனாவாக கண்டிப்பாக அமையும்  என்று நாங்கள் பயங்கர குஷியில் இருந்தோம் ... படமும் வந்தது ... 


எங்கள் ஊர் மகாராணி திரை  அரங்கில் முதல் நாள் முதல் காட்சி... கண்டிப்பாக ரஜினி படத்தை தவிர வேறு எந்த படத்திர்க்கும் அப்படி ஒரு ஓபெனிங்க் இருந்திருக்காது ... நான் இதுவரைக்கும் அப்படி ஒரு கூட்டம் எந்த திரை அரங்கிலும்  பார்த்ததில்லை ... எந்த நடிகனாலும் அப்படி ஒரு ஓபெனிங்க் இனிமேல் காட்டவே முடியாது ... அது தலையோட மாஸின் உச்சம்... அரங்கம் எல்லாம் தல ரசிகர்கள் ... இந்த படம் வந்த பின்னால்தான் தல king of opening என்று மாற்று கருத்தே இல்லாமல் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளபட்டார்... எங்கள் ஊரில் படையப்பாவிர்க்கு பின்னால் அறுபது  ரூபாவிற்க்கு டிக்கெட் விற்க்கபட்டது  ரெட் படத்திர்க்குதான்... நான் முன்பே சொல்லியதை போல தலையோட கேரியர் கிராஃப்  டாப்பில் இருந்த நேரம் அது .... அதை அப்படியே சரியாக கொண்டு போயி இருந்தால் போட்டிக்கு யாருமே இல்லாமல்(யாராலும் போட்டி போட்டு இருக்கவும் முடியாது )   யாராலும் தொட முடியாத உச்சத்தில் இருந்திருப்பார் ... இப்பொழுதும் என்னால் உறுதியாக சொல்ல முடியும் இனிமேல் வேறு எந்த நடிகனாலும் அந்த ஒபெனிங்க் காட்டவே முடியாது .... பக்கத்து திரை அரங்கில் பம்மல் k சம்பந்தம் படம் திரையிடப்பட்டு இருந்தது ... ரெட் படத்திர்க்கு வந்த கூட்டத்தை பார்த்து முதல் இரண்டு நாட்கள் பம்மல் k சம்பந்தம் படத்தை ஓட்டாமல் இரண்டு திரை அரங்கிலுமே ரெட் மட்டுமே ஓட்டினார்கள்.... ஒட்டு மொத்த தமிழ் திரையுலகையும்  தலயை நிமிர்ந்து பார்க்க வைத்த ஒபெனிங்க் அது .... மதுரை அண்ணாமலை திரை அரங்கில் முதல் நாள் மட்டும் ஏழு ஷோ ஓட்டபட்டது படம் ... (படம் அங்கு நூறு நாட்களை தாண்டி ஓடியது)... 

இந்த கூட்டத்தை பாத்தவுடன் எனக்கு பயங்கர குஷி ... களவாணி படத்தில் ஒரு வசனம் வருமே சும்மாவே ஆடுவோம் , இதுல காலுல சலங்கைய கட்டி விட்டா கேக்கவா வேணும்... அவ்வளவு அஜீத் ரசிகர்களை பார்த்த பொழுது  எனக்குள் ஒரு அடக்க முடியாத ஆர்வம் + கர்வம்  .... அந்த கர்வம்  அந்த  கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரின்  முகத்திலும் தெரிந்தது .... (இப்பொழுதும் அஜீத் படம் வெளிவந்தால் முதல் நாள் தியேட்டர் சென்று பாருங்கள் , எங்களை போன்ற தல ரசிகர்களின்  முகத்தில் எப்பொழுதும் அந்த கர்வம் ஒரு ஓரமாகமாவது அமர்ந்திருக்கும்(படத்தின் ரிசல்ட் எப்படி இருந்தாலும் சரி )... ஏனென்றால் நாங்கள் அஜித்தின் ரசிகர்கள் ) அந்த குஷியோடு குஷியாக அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி உள்ளே நுழைந்தோம் ... படமும் ஆரம்பித்தது ...     

(ஏமாற்றிய ரெட் , ஏற்றம் தந்த K . S . ரவிகுமார் அடுத்த பாகத்தில்)

10 comments:

நா.மணிவண்ணன் said...

Super...... thala is always king of opening

பாலா said...

என்னதான் சொன்னாலும் தல படத்திற்கான ஓபனிங் யாருக்கும் வராது...

தங்கம்பழனி said...

என்ன எழதறோம்ன்னு முக்கியமில்லீங்க.. எப்படி எழுறோம்னுறது தான் முக்கியம். நீங்க எழுதிய விதம்.. அருமை.. !

தங்கம்பழனி said...

இந்தப் பதிவைப் படித்து தங்களின் மேலான கருத்துக்களை இடவும்.. முடிந்தால் இன்ட்லி ஓட்டுப்பட்டையில் கிளிக் ஓட்டுப் போடவும்..

இணைப்பு; http://thangampalani.blogspot.com/2011/07/life-style-articlestory-of-peng-shuilin.html

Enathu Ennangal said...

அட எப்படா தல பதிவ போடுவிங்கனு எதிர்பார்த்தேன்...போட்டுடிங்க...நன்றி..நானும் தல ரசிகன்தான்...

அவன் அவன் காவலன், வேட்டைக்காரன் படமெல்லாம் ஹிட்டுன்கிறான்...நீங்க என்னாடான
பூவெல்லாம் உன் வாசம் ரசிகர்களுக்கு அந்த படம் பாடலை தவிர்த்து ஏமாற்றம்தானு சொல்றிங்க....
உங்க நேர்மை எனக்கு பிடிச்சி இருக்கு...
ஆனா அந்த படம் நல்ல குடும்ப சென்டிமென்ட் கொண்ட படம்னு நிறைய பேர் சொல்றாங்க ....

நன்றியுடன்
பிரகாஷ்

"ராஜா" said...

@ manivannan

openingna athu thalathan.

"ராஜா" said...

@ bala

unmaithan thala, maththavanellam action hero avurathuku munnadiye mass hero aanavar thala

"ராஜா" said...

@ thamgampazhani

kandippa karuththu solluren

"ராஜா" said...

@ enathu ennangal

nandri nanbare. Ungalai pondra thala rasikarkalin aatharavuthan nan thodarnthu ezhutha karaname. Poovellam un vasam super hit padamthan. Aanaal naama thalaikitta neraiya ethirparpame. Maththavanuka pola rendu paattukke thirupthi aaka maattom. Maththavan nadichchi intha alavukku vasool aaki iruntha athu blockbuster. Thalaikku antha vasool ellam avragethan.

Thala nadichcha ella padamum vasool reethiyaa super hit than including alwar.

Karthikeyan said...

poovellam un vasam - nalla padam than nanba. konjam slow movie.. avvlothan.

intha pathivil ungal eluthu nadai arumai. kalakkunga thala.

LinkWithin

Related Posts with Thumbnails