Followers

Copyright

QRCode

Tuesday, October 30, 2012

"த்தூபக்கி" I Am Weighting


(தல என்ற கதாபாத்திரத்தை தவிர இந்த பதிவில் வரும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் முழுக்க முழுக்க என் கற்பனையே ... யாரையாவது சுட்டி காட்டுவது போல உங்களுக்கு தெரிந்தால் அது உங்கள் கற்பனையே அன்றி உண்மையில்லை)பிட்சா படத்தில் ஒரு வசனம் வரும் "u will have your moment".. நேற்று எனக்குஅந்த மொமென்ட் வந்தே விட்டது ... கடந்த ஒரு வாரமாக எதை பார்க்கவே கூடாது என்று நினைத்து நினைத்து ஒதுங்கி சென்று கொண்டிருந்தேனோ அதை பார்த்தே ஆக வேண்டிய துர்பாக்கிய நிலைமை நேற்று வாய்த்து விட்டது ... yes நானும் அந்த கொடுமையை பார்த்து விட்டேன்... அதன் பெயர் "த்தூ,பக்கி" என்ற படத்தின் முன்னோட்டம் ... பொதுவாக அந்த டுபாக்கூர் நடிகனின் படங்கள் என்றால் அது வேறு ஏதோ ஒரு மொழி படத்தின் காப்பியாகவே இருக்கும் , ஆனால் இந்த படம் ஒரு படி மேலே சென்று படத்துக்காக அவர்கள் முதலில் வெளியிட்ட போஸ்டர் கூட காப்பியாகவே இருந்தது ... அதை சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் கிழித்து தொங்க விட்டு தோரணம் கட்டி திருவிழாவே கொண்டாடி விட்டார்கள்... இது எல்லாம் நமக்கு சகஜம்தானே .. இவனுங்க எப்பவுமே இப்படித்தான் அடிச்சிகிட்டே இருப்பாங்கே என்று டுபாக்கூரும் அவர் ரசிகர்களும் துடைத்து விட்டு போய்விட்டார்கள் ...

 அடுத்து படத்தின் பாடல் வெளியீடு , இந்த முறை டுபாக்கூருக்கு சிக்கிய அடிமையான முறுக்குதாஸ் விழா மேடையில் இந்த டுபாக்கூரை சூப்பர் ஸ்டார் என்று சொல்ல (அடுத்த நிமிசமே ஆளு பாத்ரூம் போயி வாயை நல்லா பினாயில் விட்டு கழுவியிருப்பார்) அப்போ நம்ம டுபாக்கூர் மூஞ்சியில காட்டுனார் பாருங்க ஒரு ரியாக்சன் அம்மாடி எங்க வீட்டுல ஒரு பாப்பா அதை டிவியில பாத்திட்டு நாலு நாளைக்கு காய்ச்சல் வந்து படுத்திருச்சி... ஆனால் பாவம் இவரின் அப்பா கவர் மேல் கவர் கொடுத்தான் அந்த கவருக்குள் பெரிய அளவில் பணம் கொடுத்தும்  ஒரு பயலும் முருக்குதாசின் உளறலை கண்டுகொள்ளவே இல்லை , மாறாக நம்ம டுபாக்கூர் அதே மேடையில் ஹீரோயினை பார்த்து லிட்டர் கணக்கில் ஜொள் ஊத்தியத்தை பக்கம் பக்கமாக எழுதியதையும் அதை படித்தவர்கள் அனைவரையும்  த்தூ ... பக்கி என்று இவரின் படத்தின் பெயரை உச்சரிக்க   வைத்து படத்துக்கு இலவசமாக விளம்பரம் செய்து தந்ததும் நாளைய வரலாறு ஏசும் ச்சீ சாரி பேசும் மகத்தான சாதனைகள் ...இதை அத்தனையும் பார்த்த பின்னர் எனக்கு இந்த படத்தின் பாடல்களை கேட்கும் அவல நிலைமை ஏற்பட்டு விடகூடாது என்று உறுதி எடுத்து இன்று வரை அதில் தப்பித்தும் வந்து கொண்டிருக்கிறேன் ... ஆனால் நேற்று அதை விட பெரிய ஆபத்தில் மாட்டி கொண்டுவிட்டேன் ..

இந்த முன்னோட்டம் முழுவதும் நம் டுபாக்கூர் கோட் சூட்  போட்டுக்கொண்டே சுற்றுகிறார் ... தல  தன் போன படத்தில்  கோட் சூட் போடுறத்துக்கும் ஒரு தகுதி வேணும் அது உங்கிட்ட இல்லை என்று வசனம் பேசியிருக்கலாம் , தீர்க்கதரிசி என்று தமிழ் சினிமாவே கொண்டாடியிருக்கும்... மங்காத்தாவில் தல பயன்படுத்திய உடைகளும்  பொருட்களும்  ஏலம் விடப்பட்ட பொழுது டுபாக்கூர்  மேக் அப்  போடாமல் கூட்டத்தோடு கூட்டமாக அந்த கருப்பு கோட்டையும் , கருப்பு கலர் கண்ணாடியையும் ஏலம் எடுத்த விஷயம் இந்த முன்னோட்டத்தை பார்த்த பிறகுதான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது ... அதே கோட் அதே கண்ணாடி (ஏம்பா அந்த கோட்டை கொஞ்சம் துவச்சி இஸ்தரி பண்ணியாவது போட்டிருக்கலாம்ல)  தல காதில் வைத்திருந்த புளுடூத் ஹெட் செட் வரைக்கும் அப்படியே எதையும் விட்டு வைக்காமல் டுபாக்கூர் இதில் பயன்படுத்தியிருக்கிறார் .. நல்ல வேலை அந்த சால்ட் அண்ட் பெப்பர் லுகில் வரவில்லை , தமிழ்நாடு பிழைத்தது... தல எப்ப பாத்தாலும் கோட் சூட் போட்டுகிட்டே திரிக்கிறார் என்று  கிண்டலாக பேசி திரிந்த டுபாக்கூரின் ரசிகர்கள் இந்த முன்னோட்டத்தை பார்த்து தங்கள் தலைவர் பூசிய கரியை முகத்தில் சுமந்து கொண்டு வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதாக பதிவுலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன ..

 இந்த முன்னோட்டத்தின் உயிர்நாடியே டுபாக்கூர் கடைசியாக பேசும் வசனம்தான் ... நாக்கை செங்குத்தாக சுழற்றி கொண்டே  வாயில் இருந்து ஒழுக பார்க்கும் எச்சிலை லாவகமாக வாயை மூடி தடுத்து கொண்டு  நான்கு நாட்களாக கக்கா போகாத கடுப்பை முகத்தில் தேக்கி கொண்டு “I am weighting “ என்று அவர் பேசும் வசனத்தை காண கண் கோடி வேண்டும் ... இதன் மூலம் தல நான்கு வருடங்களுக்கு முன்னாள் பேசிய I am back என்ற வசனத்தை கதற கதற கற்பழித்து பழி தீர்த்து கொண்டார் ... இந்த வசனத்தை டுபாக்கூர் பப்ளிக் பிளேசில் பேசி இருந்தால் இங்க பாக்கெல்லாம் துப்பக்கூடாது என்று யாரேனும் அவரை அசிங்கபடுத்த கூடும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டு யாரும் இல்லாமல் தனிமையில் ஒரு வீட்டுக்குள் அவரை பேச வைத்த முருக்குதாசின் ஏழாம் அறிவை ச்சி சாரி ஆறாம் அறிவை நாம் பாராட்டியே ஆகவேண்டும் ... 

மொத்தத்தில் இந்த முன்னோட்டத்தை பார்த்த பின்னர் இந்த படத்தை பார்த்து சிரித்து மகிழ “I am weighting” ….

Monday, October 15, 2012

மாற்றான்

இப்பொழுது இணையத்தில் ஒரு விதமான அறிவாளி கும்பல் ஒன்று பல்கி பெருக ஆரம்பித்திருக்கிறது , அது என்னவென்றால் அஜித் விஜய் போன்ற நடிகர்கள் நடிக்கும் படங்களை (ஹீரோயிசம் காட்டும் படங்களாம் ) பார்ப்பவன் ரசிப்பவன் எல்லாம் படு முட்டாள்கள் போலவும் ஷங்கர் , ஆனந்த் , மிஸ்கின் போன்ற பெரிய பெரிய இயக்குனர்கள் (அவர்கள் பார்வையில் திறமையான இயக்குனர்கள் ஆனால் உண்மையில் வயதிலோ இல்லை உருவத்திலோ மட்டும் ) எடுக்கும் படங்களை மட்டும் ரசிப்பவர்கள் பெரிய அறிவாளிகள் போலவும் தாங்களாகவே கற்பனை செய்து கொண்டு எழுதும் காமெடி பீசுகள் அடங்கிய கும்பல் அது ... அதில் பெரும்பாலும் வெளிநாட்டில் பொட்டி தட்டும் மாமேதைகளும் , சில உள்நாட்டு பொட்டி தட்டும் சராசரி மேதைகளும் அடங்குவார்கள் .. இத்தகைய தனக்கு தானே  அறிவாளிகளின் முகத்தில் காரி உமிழ்ந்து செருப்பால் அடித்திருக்கிறார் K.V.ஆனந்த் ..திருக்குறளுக்கு அகர முதல போல  தமிழ் சினிமாவுக்கு பழிவாங்குதல் , இந்த படத்திலும் அதையேதான்  காட்டியிருக்கிறார்கள்  ஆனால் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் , ஒலிம்பிக் , ஊக்க மருந்து , பால் பவுடர் , அடுத்த தலைமுறை ஆபத்து என்று சுபாவின் கைவண்ணத்தில் கலந்து கட்டி அடிக்க முயரசித்திருக்கிரார்கள் ஆனால் அவர்கள் படத்தில் காட்டும் எனேர்ஜியான்  போலவே பார்பவர்களுக்கு பேராபத்தாக வந்திருக்கிறது படம்... முருகதாஸ் தன்னுடைய அறிவியல் வாத்தியாரை பழிவாங்க ஏழாம் அறிவு எடுத்ததை போல இந்த ஆனந்த்துக்கும் அவர் கெமிஸ்ட்ரி வாத்தியார் மேல என்ன கோபமோ? அவரை இந்த படத்தின் மூலம் நீயெல்லாம் கிளாஸ் எடுத்தா எனக்கு கெமிஸ்ட்ரி இப்படிதான் அரைகுறையா மண்டையில ஏறும் என்று கல்பாத்தியின்  காசில் ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்.. இனி ஆனந்த்துக்கு நான்தான் வாத்தியார் என்று அவரால் பெருமையாக சொல்லிக்கொள்ள முடியாது ..


இந்த படத்தில் சூரியா ரெட்டையாக நடித்திருக்கிறார் . இரண்டு வேடம் என்றால் ஒருவன் நல்லவனாகவும் இன்னொருவன் மோசமானவனாகவும் இருக்க வேண்டும் என்று  குடியிருந்த கோயிலில் வாத்தியார் சொல்லித்தந்த பாடத்தை இந்த படத்திலும் கடைபிடித்திருக்கிறார் , ஆனால் சூரியா  என்றால் வித்தியாசம் என்று ஒக்ஸ்போர்ட் அகராதியிலேயே அர்த்தம் இருப்பதால் அதையும் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக கதைக்கோ , திரைகதைக்கோ கொஞ்சம் கூட தேவையே இல்லாமல் ஒட்டி பிறந்த ரெட்டையாக நடித்திருக்கிறார் ... அதில் ஒன்றில்  ஆயுத எழுத்து சூரியா போலவும் , இன்னொன்றில்  அயன் சூரியா போலவும் உடல்மொழி காட்டி நடித்திருக்கிறார் , இந்த மொக்கை நடிப்புக்கு வாலி அளவுக்கு போக தேவையில்லை என்பதால் சாருலதா என்ற படத்தில் பிரியாமணி இதைவிட அபாரமாக இரண்டு வேடங்களை வித்தியாசபடுத்தியிருப்பார் என்பதோடு ஒப்பீட்டை முடித்து கொள்கிறேன்... சருலாதாவில் பிரியாமணி பறந்து பறந்து சண்டை போட இயக்குனர் வாய்ப்பளிக்கவில்லை என்பதால் சூரியா ரசிகர்கள் ( தனக்கு தானே  அறிவாளிகள் ) சண்டைகாட்சிகளில் சூரியா கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார் என்று சொல்லி தங்களை ஆறுதல்படுத்திகொள்ளலாம்...


காஜல் அகர்வால் இந்த படத்தில் குடும்ப குத்துவிளக்கா இல்லை அயிட்டமா? அழகாக இருக்கிறாரா இல்லை மொக்கையாக இருக்கிறாரா? என்று  எந்த பரிமாணத்திலும் அவரை புரிந்து கொள்ளவே முடியாத அளவுக்கு  அவர் பாத்திரத்தை செதுக்கியிருக்கிறார் இயக்குனர் ... ஒரு சூரியாவை காதலித்து விட்டு அவர் இறந்த உடனே கொஞ்சம் கூட காத்திருக்காமல் அடுத்த பாடலிலேயே இன்னொரு சூரியாவை காதலிக்க ஆரம்பிக்கிறார்.. இரண்டாம் பாதியில் sub title போடுவதால்  தயாரிப்பாளருக்கு ஆகும் வீண் செலவை குறைக்க மட்டுமே பயன்படுகிறார்... 

இயக்குனர் ??? வழக்கமாக கேப்டன் , இளையதளபதி போன்றவர்கள் செய்து கொண்டிருந்தத அதே மக்களை அழிக்க நினைக்கும் தீவிரவாதிகளை , ரௌடிகளை ஹீரோ துவம்சம் பண்ணும் கதைதான் ... அதில் அவர்கள் அதீத பில்ட் அப்புடன் பஞ்ச் வசனங்கள் பேசி கொண்டு செய்ததை நம் ஹீரோ பஞ்ச் எதுவும் பேசாமல் அமைதியாக செய்தால் போதும் , அதோடு கொஞ்சூண்டு அறிவியலை கலந்து விட்டால் ரசிகர்கள் திருப்திபட்டு விடுவார்கள் என்று நினைத்து விட்டார் போலும் ... இரண்டாம் பாதியில் திரையரங்கில் இருக்கும் ஒவ்வொரு ரசிகனும் கொலைவெறியோடு எப்படா படத்தை முடிப்பீங்க நான் வீட்டுக்கு போய் நிம்மதியா தூங்கனும்டா என்று கதறி கொண்டிருக்கிறான்...  முதல் பாதியில் எனேர்ஜியான் குடித்த குழந்தை போல சுறுசுறுப்பாக இருக்கும் ரசிகனை இரண்டாம் பாதியில் பால்டாயில் குடித்த பஞ்சாயத்து போல படுக்கையில் கிடத்தி விடுகிறார் ...

 ஹாரிஸ் புண்ணியத்தில் தலைவலியும்  , வெளியே பெய்த மழை மற்றும் திரையரங்க ஏ சி புண்ணியத்தில் காய்ச்சலும்  , ஒடுக்கமான சீட்டில் பொழுதே போகாமல் இரண்டு மணி நேரமாக நெளிந்து கொண்டே இருப்பதால் மூட்டு வலியும்  நமக்கு மாறி மாறி வருகிறது ... இது போதாதென்று கடைசியாக கிளைமாக்ஸில் இயக்குனர் இனிமே என் படத்தை பாக்க வருவியா என்று நம்மை துடைப்பகட்டையால் அடித்து துவைக்கிறார்  ...  அப்பாடா இதோட  நம்மளை விட்டுடுவாங்கடா என்று பெருமூச்சு விட போகும் போதே அடுத்த தண்டனையாக சூரியா நம்மை எலியை விட்டு கடிக்க வைக்கிறார் ... இப்படி ஒவ்வொரு தண்டனையாக அவர்கள்  நமக்கு கொடுத்து  கடைசியாக போனால் போகிறது என்று பெரிய மனது வைத்து சுபம் போடும் வேளையில் குற்றுயிரும் குலையுருமாக கிடக்கும் ரசிகனை தூக்கி செல்ல ஒவ்வொரு திரையரங்கின் வெளியிலும் கருணை உள்ளம் கொண்ட அம்மாவின் 108 ஆம்புலன்ஸ் ஒன்றை நிறுத்தி வைத்தால் இந்த படத்தை எடுத்து சேர்த்து கொண்ட பாவத்தை கல்பாத்தி கொஞ்சம் குறைத்து கொள்ளலாம்... 

இந்த படத்தில் எனக்கு பிடித்திருந்த ஒரே ஒரு நல்ல விஷயம் பாடல் காட்சிகளில் கண்ணை கவரும் ஒளிவண்ணம் ... கேமராமேன் வேறு ஒருவர்தான் என்றாலும் இதில் கண்டிப்பாக ஆனந்தின் பங்கு இருந்திருக்கும் என்று நினைக்கிறேன் ... அவ்வளவு அழகு ... ஆனந்த் தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை விட  சிறந்த ஒளிபதிவாளர் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் ... இயக்குனராக ஆனந்த் இந்த படத்தில் என்னை அட போட வைத்த ஒரே ஒரு காட்சி ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற விளையாட்டு வீரர்களின் இன்றைய நிலையை காட்டும் அந்த காட்சிதான்... ஆனால் அந்த காட்சியை பார்த்த பொழுது கனா கண்டேன் , அயன் , கோ எடுத்த ஆனந்த்தான் என் ஞாபகத்துக்கு வந்தார் .. அதீதமான புகழும் ஒரு வகையில் இவர்கள் காட்டும் எனர்ஜியான் போலத்தானோ?  

( ஏதோ ஒரு ராமராஜன் படத்திற்கு குமுதம் அதன் விமர்ச்சனத்தில் எதுவும் எழுதாமல் ரெண்டு சாரிடான் மாத்திரையை மட்டும் போட்டு தலைவலி என்று எழுதியிருந்தார்கள் ... குமுதம் உண்மையிலேயே நடுநிலையான பத்திரிக்கையாக இருந்தால் இந்த படத்துக்கு நான்கு சாரிடான் மாத்திரியை விமர்சனமாக போட வேண்டும் )

   

LinkWithin

Related Posts with Thumbnails