Followers

Copyright

QRCode

Thursday, August 20, 2009

தல தலைதான்
இது நம்ம தல அஜித்தோட வரலாறு (எனக்கு தெரிஞ்சத) சொல்லுற பதிவு.... நீங்க நடிச்ச மொத படம் தெலுங்கு படமா போட்சு தல அதான் அத இதுவரைக்கும் பாக்க முடியல.... ஆனா தமிழ்ல உங்கள அறிமுக படுத்துன செல்வாவுக்கு நன்றி சொல்லியே அகனும் தல ,அமராவதில உங்கள இப்பவும் tvல பாக்கும் போது உங்க ஷார்மிங் என்ன ஆச்சர்ய பட வட்சிருக்கு தல, உங்க மொத படத்துலையே காதல காட்சிகளுல அருமையா நடிசிருப்பீங்க, அப்பறம் நீங்க நடிச்ச ரொம்ப படங்கள் (பவித்ரா , பாசமலர்கள் ...) பயங்கரமா ஊதிகிட்சு.... நீங்க அவ்ளோதான்னு அப்பவும் சிலர் சொன்னாங்க தல , நானும் அப்ப அத நம்பிட்டேன் ,,,சரி இவன் கத முடிஞ்சதுனு, ஆனா யாரும் கொஞ்சமும் எதிர்பார்க்காத நேரத்துல ஆசைல பட்டைய கேளப்புநீங்க தல, அப்பத்தான் உங்கள மேல எனக்கு கொஞ்சம் பிரியம் வந்தது தல , உங்கள பத்தி எது நியூஸ் வந்ததுனா ஆர்வமா கேக்குற அளவுக்கு, அடுத்து வந்த வான்மதி படத்த படம் வரதுக்கு முன்னாடியே, இந்த படத்த தியேட்டர்ல போய் பாக்கனும்னு முடிவு பண்ணி பாத்தேன் தல , அதுலயும் நீங்க ஏமாத்தல தல, அதுக்குள்ளே விஜய் அவரோட முன்னேற்றத்துக்கு உங்கள யூஸ் பண்ண அரம்பித்சாரு , அவரோட போட்டியாளரா உங்கள உருவகம் பண்ணி அவரோட ரசிகர்கள உங்க ரசிகர்களோட மோத விட்டு தன்ன வளத்துகிட்டு இருந்தாரு, அந்த கால கட்டத்துல நீங்க தந்த ரெண்டு படங்கள் கல்லூரி வாசல் , மைனர் மாப்பிள்ளை சூப்பெர் டூப்பேர் பிளாப், ஆனா அப்ப விஜய் பூவே உனக்காக படம் பயங்கரமான ஹிட், என்ன தல இப்டி ஆகிடுசெனு நாங்க எல்லாம் பீல் பண்ணிக்கிட்டு இருந்தப்ப மறுபடியும் ஒரு விஸ்வரூபம் எடுத்த தல காதல் கோட்டை மூலமா, அப்ப அந்த படத்துக்கு உனக்கு விருது தரலனாலும் பின்னாடி நீ வாங்குன பல விருதுகளுக்கு அதான் தல ஆரம்பம்...அப்பலாம் நாங்க விஜய் ரசிகர்கள பாத்தோம்னா சட்ட காலரா தூக்கி விட்டுடு பெருமையா நடப்போம் தல(இப்பவும்தான்).....ஆனா அதுக்கு பின்னாடி நீ வரிசையா கொடுத்த பிளாப் , அஞ்சி படம் நேசம், ராசி, உல்லாசம் , ரெட்டை சட வயசு ,பகைவன்னு ... அப்ப குமுதம்னு ஒரு பத்திரிகைல ஒரு கேள்வி பதில் வரும் தல ,அதுல ஒருத்தர் கேட்ட கேள்விக்கு பதில் இப்டி இருந்தது "அஜித்தா யாரு அது?" , அந்த நேரம் பாது விஜய்க்கு காதலுக்கு மரியாதை வந்து பயங்கரமான ஹிட்டு ,அவர் ரசிகர்களெல்லாம் எங்கள பழி வாங்க ஆரம்பிட்சிடனுக, அப்பத்தான் உனக்கு உன் நண்பன் சரண் கெடைச்சாரு ,
அவர் எங்களுக்கு தந்த பெரிய கிப்ட் "காதல் மன்னன்", அந்த படம் உங்க படத்துல உங்கள மட்டும் ரசிச்சு பாத்த மோத படம் தல.... அப்புறம் வந்த அவள் வருவாளாவும் எங்கள ஏமாத்தல தல, ஆனா பெரிய அளவுல அப்ப உனக்கு படம் வரல தல, மொதலுக்கு மோசம் இல்லாம ஓடுன படங்கள்தான் அப்ப வந்துச்சி தல , அப்ப விஜய்க்கு ஒரு படம் துள்ளாத மனமும் துள்ளும் வந்து பெரிய ஹிட் , அப்பவே எனக்கு தோனுச்சி தல உனக்கு ஒரு படம் கண்டிப்பா அமையும்ன்னு, ஆனா நாங்களே நெனச்சி பாக்காத அளவுக்கு ஒரு படம் பண்ணுன தல , மொத்த தமிழ்நாடும் உனக்குள்ள இவ்வளவு திறமை இருக்கான்னு ஆச்சர்யமா பாத்த படம் தல அது , "வாலி" அதுல டபுள் ஆக்சன்ல நீங்க பின்னி பெடல் எடுதுருப்பீங்க தல, நான் பாத்த தமிழ் படங்களையே டிரஸ், மேக்அப் ல எந்த வித்தியாசமும் இல்லாம முக பாவனைகள் , கண் அசைவுகளில் இரட்டை வேடங்களை வித்தியாச படுத்திய முதல் ஆள் நீங்கதான் தல.... ஆனா அப்பவும் சில பேரு உங்கள பத்தி தாறுமாறா சொல்லிக்கிட்டு இருந்தாங்க, உங்க முதுகுல ஆப்பரேஷன் பன்னுதுனால நீங்க நடக்க முடியாம படுத்த படுக்கையா இருக்குறதாவும் இனிமே நீங்க எழுதிருகவே முடியாது உங்க கத அவ்ளோதனு எழுதுனாங்க தல, மறுபடியும் உங்க நண்பர் சரண் அட்டகாசமா ஒரு அமர்க்களம் thanthaar உங்களுக்கு, ஒரு ஆக்ஷன் ஹிட் பிளஸ் ஒரு காதல் மனைவி அந்த படம் மூலமா உங்களுக்கு கெடச்சாங்க,, அந்த படத்துல வாசுவா வர உங்கள


மறக்க முடியாது தல, கோபம், ஏமாற்றம், காதல், பாசம் , துரோகம் இப்டி எல்லாத்தையும் உங்க கண்ணே காட்டும் , அந்த படத்துக்கு பின்னாடி நான் பெருமையா சொல்லிகிட்டேன் நான் உன்னோட ரசிகன்னு,
அந்த படத்துக்கு பின்னாடி உன் காட்டுல சரியான மழை, தொட்டதெல்லாம் ஹிட் . முகவரி , நீ வருவாய் என, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் இப்டி எல்லாமே சூப்பர் ஹிட். அதுலயும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்துல "சந்தன தென்றலை " பாட்டு இன்னைக்கி வரைக்கும் என்னோட ஏன் உங்க ரசிகர்கள் எல்லாரோட favorite பாட்டுனா அதுதான் . இப்டி நாங்க எல்லாம் பயங்கர குஷியா இருந்தப்பதான் தல அடுத்த சரவெடியா வந்தது "தீனா", அந்த படத்த மொத நாள் மொத ஷோ பாத்த அனுபவம் இன்னமும் என் மனசுல அப்டியே இருக்கு தல சீனுக்கு சீன் அதிரடிதான், அதுவும் அந்த தீம் மியூசிக் "தினக்கு தினக்கு தின தீனா" அன்னைக்குதான் தல எங்களுக்கு உண்மைலேயே தீபாவளி கொண்டாட்டம்... அடுத்து வந்த சிடிசன் நீ போட்டு வந்த வித விதமான கெட்அப் காகவே நாங்க எல்லாம் பல தடவ பாத்தோம். ஆனா என்னதான் நீ கஷ்டப்பட்டு நடிச்சாலும் எங்களுக்குள்ள ஒரு சின்ன குறை இருந்துச்சி தல, விஜய் படத்துல எல்லாம் பாட்டு நல்லா இருக்கும் உன்னோட படங்களுல பாட்டுக்கு அவ்ளோ முக்கியத்துவம் இருக்காதுன்னு..அப்பத்தான் நம்ம எழில் அண்ணனும் வித்யாசாகரும் சேந்து நமக்கு ஒரு சூப்பர் ஹிட் ஆல்பம் கொடுத்தாங்க தல , "பூவெல்லாம் உன் வாசம்", அதுல்ல வர காதல் வந்ததும் , திருமண மலர்கள் பாட்டெல்லாம் சன் மியூசிக்ல வராத நாளே இல்ல தல, அப்ப எல்லாம் சன் மியூசிக்ல உன் பாட்ட போடவே மாட்டானுக, இந்த படம் வந்துதான் அந்த டிரென்ட்ட மாத்தி வுட்டுச்சி..... இதுக்கு அப்புறம்தான் தல நமக்கு பயங்கர சோதனை காலம் ஆரம்பம் ஆச்சி....

(தொடரும் )

2 comments:

Anonymous said...

Neenga Nallavara Kettavara ???


Neenga Ajith Rasihara or Vijay Rasihara ???

Anonymous said...

//mugavari,kandukondaen kandu kondaen//

hit manasatchi iruka ilaya????

LinkWithin

Related Posts with Thumbnails