Followers

Copyright

QRCode

Tuesday, August 11, 2009

காதல் வந்ததும்

எனக்கு சில சமயங்களில் மனதுக்குள் எதோ ஒரு கவலை அமர்து கொண்டு துன்பபடுதினால் அதை துடைத்தெரிய பயன்படுவது இசையே. அதுவும் இசையை நல்ல பாடல் வரிகளோடு இணைத்து கேட்கும்போது மனதிற்கு இதமாய் இருக்கும். இப்படி பட்ட மனதை உருக்கி நம்மை முழுசாய் ஆட்கொள்ளும் இசை பெரும்பாலும் நம் தமிழ் உலகில் அய்யா ராசாவிடம் இருந்தோ அல்லது நம்ம ரஹுமாண்ட இருந்தோதான் வரும்.... ஆனால் அத்தி பூத்தாற்போல சில சமயங்களில் மற்ற இசை அமைபாளர்களிடமிருந்தும் வரும். அதில் முக்கியமானவர் நம்ம வித்தியாசாகர்.

காதல் வந்ததும் கன்னியின்
உள்ளம் காதலை
யாருக்கும் சொல்லுவதில்லை


என்று தொடகுங்கும் அந்த பாடல் அவரின் திறமைக்கு ஒரு சோறு....

தனக்கு விருப்பமான ஆணின் மீது தனக்கு காதல் வந்ததும் காதலி பாடும் அந்த பாடல் காதலின் அனுபவத்தை கேட்கின்ற நமக்கும் தந்து விட்டு போகும்...
இதோ அந்த பாடலின் முழு வரிகளும்.

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு..
சென்றால் வரமாட்டாய் அதுதானே பெரும்பாடு..
தன்னன்னானன...தன்னன்னானன..தன்னன்னானன...தன்னன்னானன..
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை..ஆ..ஆ..ஆ....

தூங்காத காற்றே துணை தேடி ஓடி
என்சார்பில் எந்தன் காதல் சொல்வாயா
நில்லாத காற்று சொல்லாது தோழி
நீயாக உந்தன் காதல் சொல்வாயா
உள்ளே எண்ணம் அரும்பானதா
உன்னால் இன்று ருதுவானவ
நானதை சோதிக்கும் நாள் வந்தது..
தன்னன்னானன...தன்னன்னானன..தன்னன்னானன...தன்னன்னானன..

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை

நீ வந்து போனால் என் தோட்டம் எங்கும்
உன் ஸ்வாச வாசம் வீசும் பூவெல்லாம்
நீ வந்து போனால் என் வீடு எங்கும்
உன் கொலுசின் ஓசை கேட்ட்கும் நாளெல்லாம்
கனா வந்தால் மெய் சொல்கிறாய்
கண்ணில் கண்டால் பொய் சொல்கிறாய்
போவென்னும் வார்த்தையால் வா எங்கிறாய்
தன்னன்னானன...தன்னன்னானன..
தன்னன்னானன...தன்னன்னானன..


"தூங்காத காற்றே துணை தேடி ஓடி
என்சார்பில் எந்தன் காதல் சொல்வாயா" இந்த வரிகளுக்கு நான் அர்த்தம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. வைரமுத்துவின் அழியா கவிதைகளில் இதுவும் ஒன்று. சும்மா சும்மா பாட்டுல ஆரம்பத்துல இருந்து கடைசி வர சின்ன புள்ள தனமா ரீ ஆக்சன் காட்டிடு கடைசில நான் நீ இல்லாடி செத்து போய்டுவேன்னு கேன தனமா படம் புடிக்காம காதலர்களின் உண்மையான சீண்டல்கள், வெட்கங்கள், முகபாவனைகளை அழகாய் படம் பிடித்திருப்பார் இயக்குனர் எழில். காதலர்களும் காதலிக்க ஆசைபடுகிரவர்களும் கண்டிப்பாய் கேக்க பாக்க வேண்டிய பாடல் இது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails