Followers

Copyright

QRCode

Thursday, August 6, 2009

கௌண்டர் ஸ்பெஷல் (விஜய்)தன்னுடைய அடுத்த  படத்துக்காக விஜய் கதை கேட்டுகொண்டிருப்பதை கேள்விப்பட்டு நம்முடைய கோடம்பாக்கத்து மசாலா பேக்டரிகள் மசாலா அரைக்க அவரை தேடி செல்கின்றனர்.... கூடவே நம்ம அண்ணன் கவுண்டமணியும் இருக்காரு...
முதல் ஆளா  நம்ம அண்ணன் பேரரசு வராரு ....
பேரரசு: கவலைபடாதீங்க விஜய் உங்க படத்த உலகமே கொண்டாடுற மாதிரி எடுத்துருவோம்...

கவுண்டமணி: அடேயப்பா இவரு பெரிய ஸ்பீல்பெர்க்கு இவரு படம் எடுத்தா உலகமே கொண்டடபோது... நீ ஒரு மொள்ளமாரி, அவன் ஒரு முடிச்சவிக்கி... டேய் உன் ரேஞ் என்னவோ அதுக்கு எத்தமாரி மட்டும் பேசு...

பேரரசு: நீங்க அமெரிக்கால அணுகுண்டு தயாரிச்சிட்டு இருக்கீங்க...

கௌண்டர்: யாரு இவனா? ஏன்டா உனக்கு கோலிகுண்டாவது செய்ய தெரியுமா? அணுகுண்ட கண்ணால பாதுருக்கயா? அது என்னனாவது உனக்கு தெரியுமா? அதுளா என்ன மாதிரி scientist பண்ற வேலைடா ஜாங்கிரி தலையா.... இவனுக்கு தெரிஞ்ச ஒரே அணுகுண்டு சாப்ட பின்னாடி போடுவாங்களே அது மட்டுந்தான்....

பேரரசு: உங்களுக்கு ஒரே ஒரு தங்கச்சி அவள நீங்க ஈராக்குல கட்டி கொடுகிறீங்க.... அங்க இருக்குற தீவிரவாதிகலால உங்க தங்கட்சிக்கு பிரச்சன வருது.... உடனே நீங்க ஈராக்குக்கு பொய் அங்க இருக்குற டெர்ரரிஸ்ட்கள எல்லாம் பஞ்ச் டையலாக் பேசியே கொள்ளுறீங்க....

கௌண்டர்: ஏண்டா இவன் பஞ்ச் டையலாக் பேசி தமிழ்நட்டுகாரண கொன்னது பத்தாதுன்னு அமெரிக்காகாரனையும் கொல்ல போறீங்களா.... ஆண்டவா என்ன ஏன் இந்த கலுசட பயலுககூட எல்லாம் கூட்டு சேர வைக்கிற.... எங்க ஒரு டையலாக்எடுத்து வுடு பாப்போம்...

பேரரசு: டேய எச்சி துப்பி அணைக்க நான் தீக்குச்சி இல்லடா, எட்டி புடிக்க முடியாத எரிமல

கௌண்டர்: தம்பி கொஞ்சம் எழுதிரிசி திரும்பி நில்லு... (பேரரசு எழுதிரிசி நிக்க கௌண்டர் தன் ஸ்டைலில் அவரை எத்தி மிதிக்கிறார்) ( விஜையை பார்த்து)  இவனுககூடலம் சேந்த உன்ன உச்சி வெயில்ல பழநிமலை அடிவாரத்துல பிச்ச எடுக்க வுட்டுருவானுக,, இப்ப இருக்குற நெலமைல நீ போன அங்க இருக்குற பிச்சகாரன் கூட உன்ன சேத்துக்க மாட்டான்....

அடுத்து நம்ம தரணி கத சொல்ல வராரு

தரணி: விஜய் இந்த படம் வந்த பின்னாடி அடுத்த முதல்வர்னு சொல்லிக்கிட்டு இருக்குற உங்க ரசிகர்கள் எல்லாம் உங்கள அடுத்த பிரதமர்னு சொல்ல அரம்பிட்சிடுவாங்க... அப்டி ஒரு பவர்புல் கத இது....

கௌண்டர்: என்னது அடுத்த பிரதமரா? உலக மகா பில்ட்டப்புடா சாமீ....

தரணி: நம்ம நாட்டோட பிரதமர பின்லேடன் கடத்திட்டு போயிடுறான்.. அப்பா ஆப்கானிஷ்தானுக்கு கபடி விளையாட போயிருந்த நீங்க பின்லேடன அடிச்சி போட்டுடு நம்ம பிரதமர கூப்பிட்டு ஆப்கானிஷ்தானுல ரோட் ரோட அலையுறீங்க... ....

கௌண்டர்: ஐயய்யோ.... ஏண்டா பின்லேடன என்ன உங்க வீட்டுல பேப்பெர்போடுற பையன்னு நெனட்சியா.... அமெரிக்கால அணுகுண்டு போடுறவன்டாஆனானப்பட்ட அமெரிகாகரனே அவன ராக்கெட்டு விட்டு தேடியும் கெடைக்க மாட்டேன்றான்.... இந்த பேரிக்கா தலையன் கண்டுபுடிசிடுவானா? எழுந்திரிச்சி வந்தேன் ஏறி மிதிச்சிடுவேன்... ஓடி போய்டு ....(விஜயை பாத்து) இன்னொரு தடவ கத கேட்டு சொல்லுங்கன்னேனு இந்த மாதிரி பசங்கள கூப்டுடு வந்த தெரு நாய விட்டு கடிச்சி கொதறி புடுவேன்....

விஜய்: சரிங்கண்ணா அப்டினா நீங்களே நல்ல கதையா சொல்லுங்க...

கௌண்டர்: அப்டி கேளுடா... இதுக்குதான் ஊருக்கு ஒரு ஆல் இன் ஆள் அழகு ராஜா வேணும்கிறது.... நீ என்ன பண்ற செந்தில் நடிச்ச படத்தையெல்லாம் வங்கி பாக்குற... அடுத்த படத்துல இருந்து நீதான் எனக்கு செந்தில்... அவன் ஹீரோவா நடிக்க போனதுல இருந்து அடிக்க ஆள் இல்லாம எனக்கு ஒரே கஷ்டமா இருக்கு....
விஜய் : யார பாத்து என்ன சொல்லுற? தமிழ் நாட்டுல என்ன பாத்து காமெடியனா நடிக்க சொன்ன மொத ஆளு நீதான்...

கௌண்டர்: அது என்னடா எதுகேடுதாலும் ஒரு பஞ்ச் டையலாக்கு.... நீ நடிச்ச படத்த எல்லாம் பாதுருக்கயடா?

விஜய் : இல்லனா அந்த ரிஸ்கெல்லாம் எடுக்குறது கெடையாதுனா... நடிகிரதோட மட்டும்தாண்ணா,, அதையெல்லாம் பாக்குறது கெடையதுனா?

கௌண்டர்: என்னது நடிக்கிறயா?  நீ பண்றதெல்லாம் நடிகிரதுனா அப்ப நம்ம நடிகர் திலகம் பன்னுனதேல்லாம்....ஆம்மா உண்ட ரொம்ப நாளா ஒரு கேள்வி கேக்கனும்னு நெனசிருந்தான்.... புதிய கீதைனு ஒரு படம் நடிச்சையே அந்த படத்தோட கத என்னடா?

விஜய்: எண்னனா இப்டி கேக்குறீங்க.. ஊருக்கு நல்லது பண்ண நமக்கு நல்லது தானா நடக்கும் இதுதான்னா அந்த படத்தோட கத....

கௌண்டர் : அதுல என்னடா பைக் ஸ்டாண்ட் தட்டி விட்டு கீழ விழுகுற.. இந்தியாலேயே பைக் ஸ்டாண்ட் தட்டி விட்டு கீழ விழுந்த ஒரே ஹீரோ நீ மட்டுந்தாண்டா...

விஜய்: அதெல்லாம் வித்தியாசமா இருக்கட்டுமேனு வட்சதுன்னே...
கௌண்டர்: சரி விடு எதாவது ஒரு படதுலையது கெட் - அப் மாத்தி நடிசிருக்கயா

விஜய்: என்னன்னா இப்டி கேட்டுடீங்க... அந்த படத்துல ஆறு விரல் வச்சி நடிசிருப்பேனே பாக்கலையா நீங்க....

கௌண்டர்: ஒன்ன எல்லாம் காமெடியனா நடிக்க கூப்டதுல தப்பே இல்லடா...
அது சரி ஏன் எப்ப பாத்தாலும் உயரமான எடத்துல இருந் கீழ விழற மாதிரியே நடிக்கிற , சினிமாலயும் நீ மேல இருந்து கீழ விழுந்துகிட்டு இருக்கங்கிரத  சிம்பாலிக்கா காட்டுரயா?சரி சரி நீ உன் படத்துக்கு சுறான்னு பேரு வச்சதுல இருந்து கடல்ல இருக்குற சுறா மீனெல்லாம் தற்கொல பண்ணிகிடுசாமே ஏன் உனக்கு இந்த கொலைவெறி...


விஜய்: (கோபமாக) சாமிகிட்ட மட்டுந்தான் சாந்தமா பேசுவேன் உன்ன மாதிரி சாக்கடகிட்ட எல்லாம் இல்ல...

கௌண்டர்: உனகெல்லாம் கௌண்டமணி உத பத்தாதுடா வேற வேற பின்லேடன் படதாண்டா  வேணும்.... சீ இவனுக கூட  சேந்து  எனக்கும் பஞ்ச்  டயலாக் பத்திகிடுசே... இனிமே இவனுக கூட எல்லாம் சவகாசமே வச்சிக்க கூடாதுடா சாமி... 
ஷோவை அவசர அவசரமாக முடித்து கொண்டு பின்வாசல் வழியே ஓடுகிறார் கௌண்டர்

(கவுண்டர் ஸ்பெஷல்  அடுத்த சிறப்பு விருந்தினர் வேற யாரு நம்ம தலதான்)


3 comments:

தமிழன் தாயகத்திலிருந்து said...

சூப்பர் அப்பு, ஆதித்யா டீவி பார்த்தமாதிரி இருந்திச்சு

ttpian said...

ammaa!
thankamutiyala saami!

Jayadeva said...

// டேய எச்சி துப்பி அணைக்க நான் தீக்குச்சி இல்லடா, எட்டி புடிக்க முடியாத எரிமல // Super!

LinkWithin

Related Posts with Thumbnails