Followers

Copyright

QRCode

Friday, August 21, 2009

விஜய் ரஜினியாக முடியுமா?



விஜய் ரசிகர்களுக்கும், வெறியர்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்...ரஜினி தளபதி என்பதால், இளைய தளபதி என்று பெயர் வைத்துக் கொண்டால் மட்டும் விஜய் சூப்பர் ஸ்டார் ஆகி விட முடியாது, ரஜினிக்கும் விஜய்க்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசங்கள் கீழே..
ரஜினி தன் ஸ்டைல், திறமையால் நடிக்க வந்தார்..
விஜய் அவரது அப்பாவின் மூலம் பின் வாசல் வழியாக வந்தவர்..
ரஜினியின் ஆரம்ப கால படங்களான அபூர்வ ராகங்கள், பைரவி, மூன்றுமுடுச்சுஉள்பட பல படங்களில் ரஜினியின் அபார நடிப்பை உலகறியும்..(இத்தனைக்கும்அப்பொழுது அவருக்கு சரியாக தமிழ் பேச வராது)..
விஜயின் ஆரம்ப கால படங்களான நாளைய தீர்ப்பு, விஸ்ணு, ரசிகன் போன்ற படங்களில் நாம் பார்த்தது மாமியாருக்கு சோப்பு போடும் மிட் நைட் மசாலாக்களை தான்.. (சங்கவியே சாட்சி)
ரஜினி பாலசந்தர், மகேந்திரன், பாரதி ராஜா போன்ற அபார இயக்குனர்களிடம் பாடம் கற்றவர்..
விஜய்க்கு பாடம் கற்பித்தவர் அவரது தந்தை, அது என்ன பாடம் என்பதை சொல்ல தேவையில்லை..
1980 களில் பில்லாவை தொடர்ந்து, முரட்டு காளை, போக்கிரி ராஜா , தனிகாட்டு ராஜா , நான் மஹான் அல்ல , புதுக்கவிதை , மூன்று முகம் , படிக்காதவன், தீ , வேலைக்காரன், தர்மத்தின் தலைவன், Mr. பரத் , மாவீரன் போன்ற ஹிட் களை கொடுத்துதான் அவர் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றார்..
பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, கில்லி தவிர வேறு எந்த ஹிட் படங்களையும் விஜய் கொடுக்கவில்லை.. மற்ற சில, ஹிட் ஆக்கப் பட்டனவே தவிர, உண்மையான ஹிட் அல்ல என்பது அப்படங்களை பார்த்தவர்களுக்கு தெரியும்..
ரஜினி அப்போதைய சூப்பர் ஸ்டார் ஆனா புரட்சித் தலைவரை காப்பி அடிக்கவில்லை, (அவர் வழி தனி வழி)
விஜய் முதலில் சங்கவி ரசிகர்களை குறி வைத்தார், பின் ரஜினி ரசிகர்களை இப்பொழுது புரட்சித் தலைவரை..
ரஜினியோ, ரஜினியின் ஆட்களோ மீடியாவை மிரட்டியதாகவும், அவர் சம்பந்தப்பட்ட கருத்துகளுக்கு மீடியா மன்னிப்பு கேட்டதாகவோ ஒரு செய்தியும் இல்லை.
ஆனால் குமுதம், விஜய் டிவி யின் லொள்ளு சபா, மாலை மலர், தின மணி போன்றவை விஜய் மற்றும் அவரது தந்தையாரால் மிரட்டப்பட்டது உலகறியும்..
ரஜினி அமைதியானவர்
விஜய் அப்படி நடிப்பவர்..
எப்பொழுதும் ஊர்க் 'குருவி' - 'கழுகு' ஆக முடியாது.. உண்மையாய்சொல்லுங்கள் நடனத்தை தவிர விஜய் நடிப்பிலும், J.K. ரித்திஸ் நடிப்பிலும்என்ன பெரிய வித்தியாசம்???

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails