என்னத்த சொல்ல பாதி அந்நியன் மீதி சிவாஜி, வேற ஒண்ணுமே இல்ல சொல்லிக்க, விக்ரம் நல்ல நடிக்கிறார் ஆனா இந்த படத்துக்கு அது தேவையே இல்ல, ஸ்ரேயா பாவம் படு வேஸ்ட், இடுப்ப ஆட்டி நல்ல டான்ஸ் ஆடுறாங்க, அப்பஅப்ப வந்து விக்கிரம மெரட்டுராங்க , காதிலிக்கிற மாதிரி நடிகிறாங்க கடசில உண்மைலேயே காதலிகிறாங்க, வில்லனா ரெண்டு பேரு செம காமெடி பீசா இருக்காங்க, வடிவேலு காமெடி கை கொடுக்கல, இருந்தாலும் திரைல அவர பாத்தா மக்கள் சிரிக்றாங்க , இடைவேளை வரை பொறுமையா பாக்கலாம், அப்பறம் வரும் பாருங்க அந்த ஜெர்மனி சீன் , வடிவேலு பாணியில சொல்லனும்னா முடியல, அதுல சுசி கணேசன் வேற ஏதோ CBI officerஆ வராரு , அவரு ஏன் வராரு அப்டிங்கிறது அவருக்கு மட்டுந்தான் தெரியும் நமக்கு புரியவே இல்ல, அதும் விக்ரம் ஸ்ரேயாவோட அப்பாவோட பேங்க் அக்கௌன்ட்ட ஹேக் பண்ற சீன் செம காமெடி , நம்ம ஜிமெயில் அக்கௌன்ட் துக்கு கூட அத விட செக்யூரிட்டி அதிகமா இருக்கும் அவரு மூனே மூணு கேள்வில 45,000கோடிய அசால்ட அடிச்சிட்டு போய்டுவாரு, படத்துல ஒரே ஒரு ஆறுதல் பாடல்கள் மட்டுந்தான், தேவி ஸ்ரீ பிரசாத் பின்னிருக்காரு, ஆனா சில பாடல்கள் எடுத்த விதம் ரொம்ப சுமார். excuse me பாட்டு நான் ரொம்ப ஏமாந்து போனேன்.படத்தோட கிளைமாக்ஸ் இந்திய சினிமாக்கு ரொம்ப ரொம்ப புதுசு அப்டின்னு எதிர்பார்த்து போனா அதே அந்நியன் கிளைமாக்ஸ் .படத்தோட எடிட்டிங், கேமரா எல்லாமே சுமார்தான், அதும் அந்த ஜெர்மனி சீகுவன்சில ரொம்ப மோசம். சுசி கணேசன் என்ன நெனச்சி இந்த படத்த எடுத்தாருன்னு தெரில, தாணு நீங்க ரொம்ப நல்லவரு அவ்ளோதான்,
வில்லுக்கு அப்புறம் அதவிட மோசமான ஒரு படம் இது....
1 comment:
//வில்லுக்கு அப்புறம் அதவிட மோசமான ஒரு படம் இது....
//
:)
Post a Comment