Followers

Copyright

QRCode
Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Wednesday, May 4, 2011

வானம் – என் பார்வையில்


விண்ணை தாண்டி வருவாயா என்ற மொக்கை படத்திர்க்கு பிறகு சிம்பு நடித்து வெளிவரும் படம் ... ஹீரோவாக இருந்து நம்ம பேரரசு , சுரேஷ் கிரிஷ்ணா போன்றவர்களால் காமெடியானாக depromote செய்யபட்ட பரத்தும் நடித்திருக்கிறார் ... அனுஷ்கா வேற விபசாரியா நடிச்சிருக்காங்க, தெலுங்குல சூப்பர் டூப்பர் ஹிட் ஆன வேதம் படத்தோட ரீமேக் இப்படி முதல் இரண்டு மைனஸ்களோடும் அடுத்த இரண்டு பிளஸ்களோடும் வெளிவந்திருக்கும் படம் வானம்...


ஆயுத எழுத்து படம் போலவே இதிலும் ஐந்து வெவ்வேறு கதைகள் கடைசியில் ஒரு இடத்தில் வந்து சந்திக்கிறது ... சென்னையில் ஒரு சேரியில் வாழும் சிம்பு பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில்  ஒரு பணக்கார வீட்டு பெண்ணை பல பொய்களை சொல்லி ஏமாற்றி காதலிக்கிறார் , அந்த பெண்ணின் அம்மாவிடம் திருமணம் பற்றி பேச அந்த பெண் அவரை ஒரு ஹோட்டலில் நடக்கும் நியூ இயர் பார்ட்டிக்கு வர சொல்கிறார் , ஆனால் அந்த பார்ட்டிக்கு நுழைவு கட்டணமே நாப்பதாயிரம் ரூபாய்... சிம்பு அந்த பணதிர்க்காக அழைவது ஒரு கதை ...

இன்னொரு கதையில் தன் மகனின் பணதிர்க்காக சரண்யா மோகனும் அவர் அப்பாவும் கிட்னியை விற்று நாற்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்க சென்னை வருகிறார்கள் ...

பரத் தன் வாழ்கையின் லட்சியமாக நினைக்கும்  லைவ் ஸ்டேஜ் ஷோவில் கிதார் வாசிக்க தன் ட்ரூப் நண்பர்களோடு சென்னை வரும் வழியில் நடக்கும் சில விஷயங்கள் என்று ஒரு கதை ...


இன்னொருத்தியின் கம்பெனியில் விபசாரியாக பணிபுரியும் அனுஷ்கா சென்னை வந்து தானே சொந்தமாக கம்பெனி ஆரம்பிக்க படும் கஷ்டங்கள் என்று ஒரு கதை ...

  தன் மனைவியின் டெலிவரிக்காகவும் , தன் தம்பியை தேடியும் சென்னை வரும் பிரகாஷ்ராஜின் தனி கதை ஒன்று..இப்படி ஐந்து கதைகள் இருந்தும்  சரண்யா மோகன் வரும் கதையை தவிர மற்ற கதைகளில் ஒரு முழுமையோ ஈர்ப்போ இல்லாமல் போனதுதான் படத்தின் பெரிய மைனஸ் ...

சிம்புவிர்க்கு இந்த கதாபாத்திரத்தில் எப்படி நடிப்பது என்றே தெரியவில்லை ... அதற்க்கு காரணம் அந்த கதாபாத்திரத்தை அரைகுறையாக வடிவமைத்திருக்கும் இயக்குனர் ... அவர் நல்லவரா? கெட்டவரா? என்று கதை எழுதிய அவருக்கும் தெரியவில்லை , நடித்த சிம்புவிர்க்கும் தெரியவில்லை , படம் பார்க்கும் நமக்கும் கடைசி வரை தெரியவில்லை ... மேலும் பணக்கார பெண்கள் எல்லாருமே லூசாகத்தான் இருப்பார்கள் என்ற தமிழ் சினிமாவின் அரைவேக்காட்டுதனம் இந்த படத்திலும் உண்டு...


சரண்யா தன் கிட்னியை நாற்பதாயிரம் ரூபாய்க்கு பேரம் பேசி முடிக்கும் அடுத்த காட்சியிலேயே நியூ இயர் பார்ட்டிக்கு சிம்புவுக்கு நாற்பதாயிரம் தேவைபடுவதாய் காட்டும் போதே கடைசியில் என்ன நடக்க போகிறது என்பது இருபது வருடமாய் தமிழ் படங்கள் பார்த்து கொண்டிருக்கும் என்னால் கண்டுபிடிக்க முடியாதா  என்ன? அதனால் அந்த இரண்டு கதைகளிலும் சுவாரஷ்யாமே இல்லாமல் போயி விட்டது... ஆனால் வட்டி பணதிர்க்காக  கிட்னியை விற்க்கும் சரண்யாவை பார்க்கும் போது எனக்கு பகீர் என்றது ... இவர் காட்சி வரும்போதெல்லாம் பின்னனியில் உதயசூரியன் சின்னத்தை காட்டி கொண்டே இருக்கிறார்கள் ...     

சரண்யாவின் மாமாவாக வரும் அந்த தாத்தா யார் என்று தெரியவில்லை , ஏழைகளின் வலியை அப்படியே வெளிபடுத்துகிறார் ... இடைதரகராக வருபவன் முதலில் அந்த பெரியவரிடம் பாதி காசை ஆட்டைய போட்டிருந்தாலும் கடைசியில் மேலும் மூன்றாயிரத்தை கேட்டு வாங்கும் காட்சியில் தியேட்டரில் இருக்கும் அனைவரும் இது படம் என்பதையும் மறந்து அவனை மனதிர்க்குல் காரி உமிழ்திருப்பார்கள் ...  அதற்க்கு காரணம் அந்த பெரியவரின் நடிப்பு ....

அதே போல பிரகாஷ்ராஜ் , சூழ்நிழைகளாலும் ஒரு போலீஸ் அதிகாரியாளும் தீவிரவாதியாக தவறாக சிறையில் அடிபடும் கதாபாத்திரம் ... பல இடங்களில் ஓவர் ஆக்டிங் சில இடங்களில் நச் நடிப்பு... கமலின் காற்று இவரிடமும் அடிக்க ஆரம்பித்திருக்கிறது என்று எண்ணுகிறேன்... கடைசியில் அந்த போலீஸ் அதிகாரியை முதுகில் சுமந்து உயிரை காப்பாற்றி அவருக்கு நன்னயம் செய்து விடுகிறார்... இந்த கருத்தை சொல்வதற்க்கு பிரகாஷ்ராஜ் , சோனியா அகர்வால் , ஒரு போலீஸ் அதிகாரி வேடம் , ஒரு தீவிரவாதி கதாபாத்திரம் என்று தயாரிப்பாளருக்கு பெரிய செலவு வைத்திருக்கிறார் இயக்குனர் .. போங்கையா இதைதான் வள்ளுவன் உங்களை விட அழகாய் இரண்டே வரிகளில் ஒரு ஓலை சுவடி செலவில் சொல்லிவிட்டானே...


அனுஷ்கா பாத்திரம் எதற்க்கு என்றே தெரியவில்லை? அவருக்கு ஒரு அக்கா(அண்ணன்)  வேறு இந்த படத்தில்... வேசித்தனம் பண்ணும் அவர் கடைசியில் ஒரு சாவை பார்த்து திருந்தி விடுகிறாராம்... இப்படிபட்ட நம்பமுடியாத மனமாற்றங்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் மட்டுமே சாத்தியம்... பட விளம்பரங்களில் அரைகுறையாய் சூடேற்றும் வகையில் போஸ் கொடுத்து இளைங்கர்களை படத்திர்க்கு வர வைத்ததை தவிர வேறு ஒன்றும் இவர் படத்தில் பெரியதாய் செய்யவில்லை...


 படத்தின் ஒரே ஆறுதல் யுவனின் பாடல்கலும் அதற்க்கு சிம்புவின் நடனமும்தான்... ஆனால் எவண்டி உன்னை பெத்தான் கையில கெடச்சான் செத்தான் போன்ற வரிகள் தேவையா யுவன்? "நோ மணி நோ மணி நோ ஹனி நோ ஹனிடா" பாடல் செம்ம டப்பாங்குத்து....


பரத் என்ன சொல்ல? நீங்க இந்த படத்திர்க்கு தேவையா என்பதை படம் பார்த்த பொழுது நீங்களே நினைத்திருப்பீர்கள்... தேவையே இல்லாத கதாபாத்திரம் , அதற்க்கு இரண்டு பாடல்கள் , ஒரு சண்டை வேறு  .... இது இயக்குனர் தவறா? இல்லை வேறொருவரின் உள்குத்தா தெரியவில்லை?

தீவிரவாதிகள் என்றாலே அவர்கள் முஸ்லிம்களாய்த்தான் இருக்க வேண்டுமா? வேறு யாருமே தீவிரவாதம் செய்ததில்லையா? இன்னும் எததனை காலத்திற்க்குதான் இப்படியே காட்டுவீர்கள்?பார்த்து பார்த்து போர் அடித்து விட்டது.. வித்தியாசமா யோசிங்கப்பா?

வானம் மப்பும் மந்தாரமுமாய் கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்திருக்க வேண்டியது , ஆனால் அக்னி நட்சத்திரமாய் சுடுகிறது...

Monday, November 22, 2010

Frozen (2010) - பனிமலை பயங்கரம்


இங்கிலீஷ் படங்கள் பற்றி எழுதி நிறைய நாள் ஆகிவிட்டது ...  இப்பலாம் இங்கிலீஷ் படங்களை பற்றி நல்லா எழுதிட்டு தமிழ் படங்களை திட்டினால் நம்மை ஏதோ செவ்வாய் கிரகவாசிகள் ரேஞ்சுக்கு பார்க்கிறார்கள் ... உனக்கு மொழி பாசமே இல்லையா என்று திட்டி பதிவிடுகிறார்கள் .... நண்பர் பாலா ஒருபடி மேலே போயி அப்படி பதிவு எழுதுகிறவர்களுக்கெல்லாம் ஏதோ நோய் வந்து விட்டது என்று பீதியை கிளப்பி விட்டார்... அதனாலே எனக்கு பயமாக உள்ளது நல்ல படங்களை பற்றி எழுதவே... இருந்தாலும் அந்த பயத்தை எல்லாம் மீறி சென்ற வாரம் நான் பார்த்த ஒரு உலக படம் (நம்ம ஊர் படமெல்லாம் உலக படம் இல்லையா?என்பவர்களுக்கு ... உலக படம் என்பதேர்க்கு நான் புரிந்து கொண்ட விளக்கம் மொழி கலாச்சாரம் இப்படி எல்லாவகையிலும் வேறு பட்டு இருக்கும் மனிதர்களை கூட ரசிக்க வைக்கும் படங்கள்தான் உலக படங்கள் என்று சொல்லபடுகின்றன ...அப்படிப்பட்ட படங்கள் நம்ம ஊரிலும் இருக்கு) என்னை அந்த படத்தை பற்றி கண்டிப்பாக எழுதியே ஆக வேண்டும் என்னும் அளவுக்கு என்னை கவர்ந்து விட்டது... அந்த படம் Frozen (2010)


நம்ம ஊருள ஒரு மசாலா படம் எடுக்கிறாங்கன்னா அதுல இப்படி ஒரு சீன் கண்டிப்பா வரும் (குறிப்பா நம்ம டாக்டர் படங்களில் இது கண்டிப்பாக இருக்கும்)... ஹீரோவ வில்லனோ இல்லை போலிஷோ துரத்தி வருவார்கள் அவர்களிடம் இருந்து தப்பிக்க நம்ம ஹீரோ அறுபது அடி உயரத்தில் மொட்டை மாடியில் இருந்தோ இல்லை மலை உச்சியில் இருந்தோ கேமராவை பார்த்து flying kiss கொடுத்து விட்டு (பார்க்க குருவி ) கீழே குதிப்பார்... அரை நொடியில் தரையை அடைந்து எந்த விதமான காயங்களும் இல்லாமல் தப்பித்து விடுவார்... இப்படி நம் ஊர் படங்களில் அரை நொடியில் வந்து போகும் இந்த காட்சியை வைத்தே ஒன்றை மணி நேர த்ரில்லிங் படம் எடுத்துள்ளார் .... frozen படத்தின் இயக்குனர் Adam Green...


பொதுவாக ஹாலிவுட் படங்களில் complex situation ஒன்றை உருவாக்கி இதில் இருந்து அவர்கள் எப்படி விடுபடுகிறார்கள் என்பதை காட்டும் do or die வகை படங்கள் நிறைய வரும் .... பெரும்பாலும் அப்படி வரும் படங்கள் பார்க்கும் போது நமக்கு இந்த மாதிரியான complex situations வாழ்க்கையில் நடக்க வாய்ப்பு மிகவும் கம்மியாகவே இருக்கும் ... உதாரணம் prey , 2012 போன்ற படங்கள் ... ஆனால் வெகு சில படங்களே நம் வாழ்க்கையில் எதார்த்தமாக நாம் அடிக்கடி சந்திக்கும் விஷயத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் .. அதர்க்கு மிக சிறந்த உதாரணம் speed (bomb on bus)... 


frozen படமும் இந்த வகையில் அடங்கும் ...நடுங்கும் குளிரில் தரையில் இருந்து பத்து அடி உயரத்தில் இரண்டு பேர் மட்டுமே அமரும் ஒரு chairliftல் மூன்று பேர் ஒரு வாரம் முழுவதும் அமர்ந்து இருக்க வேண்டும் ... ஒரு வாரத்திர்க்கு அவர்களால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாது... மேலும் அது ஒரு உயரமான பனி மலை... கீழே மலை முழுவதும் நரிகள் ... மேழே இருந்தாலும் சாவு கீழே வந்தாலும் சாவு ... இதுதான் இந்த படத்தில் இயக்குனர் படைத்திருக்கும் complex situation... இந்த நிலையில் அவர்கள் முன்னால் இருக்கும் இரண்டே ஸாயிஸ் அங்கு இருந்து எப்படியாவது தப்பிப்பது அல்லது பணியில் உறைந்தோ இல்லை நரியிடம் மாட்டியோ இறப்பது... இந்த இரண்டில் எது நடந்தது என்பதே படத்தின் கதை ...


படத்தின் ஹீரோ dan ... அவனும் அவன் நண்பனும்(joe) வீக் எண்டை ஜாலியாக கழிக்க ஹில் ஸ்டேஷன் செல்கிறார்கள்.... உடன் ஹீரோவின் காதலி (parker) இருக்கிறாள்... அது ஒரு அடர்ந்த பணிமலை... அங்கு இருக்கும் பெரிய பொழுது போக்கே பணிசருக்குதான் ... ஹீரோயினுக்கு ஒழுங்காக பனி சறுக்கு செய்ய தெரியவில்லை .... அதனால் அவளுக்கு கற்று தருவதிலேயே பகல் நேரம் முழுவதும் கழிந்து விடுகிறது ... எனவே மலையை முழுவதும் அவர்களால் சுற்றி பார்க்க முடியவில்லை ... அவர்கள் இரவு chairliftல் சென்று மலையை சுற்றி பார்க்க விரும்புகிறார்கள்... ஆனால் போதுமான அளவுக்கு காசு இல்லை ... அந்த chairlift ஆபரேட்டரிடம் லஞ்சம் கொடுத்து பயணப்படுகிறார்கள்... அது ஞாயிறு இரவு ... அந்த சுற்றுலா தளம் முழுவதுமாக மூடப்படும் நேரம் அது .... மலைக்குள் சுற்றுலா பயணிகள் யாரும் இல்லை... அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் கூட யாரும் கிடையாது அனைவரும் கிளம்பி விடுகின்றனர் .... ஆபரேட்டர் அவர்களிடம் நீங்கள் வரும் வரை தான் காத்திருப்பதாக தெரிவிக்கிறான் .. அவர்களும் கிளம்புகின்றனர்.... 


அவர்கள் ஜாலியாக அரட்டை அடித்து கொண்டே பனியை ரசித்து கொண்டு பயணிக்கிறார்கள்... திடீரென்று விஞ்ச் நின்று விடுகிறது ... அவர்களும் ஏதோ பவர் கோளாறு , சிறிது நேரத்தில் கிளம்பி விடும் என்று எண்ணுகிறார்கள் ... ஆனால் கொஞ்ச நேரத்தில் அந்த மலை முழுவதும் லைட்டுகள் வரிசையாக அணைந்து கொண்டே வருகிறது .. அப்பொழுதுதான் நிலமையின் விபரீதம் அவர்களுக்கு புரிகிறது ... நாம் இங்கு மாட்டி கொண்டு இருக்கிறோம் என்பதே யாருக்கும் தெரியவில்லை என்பது அவர்களுக்கு புரிகிறது .... chairlift சிஸ்டம் shut down செய்யபட்டு விட்டது ... இனி மீண்டும் அடுத்த வெள்ளிக்கிழமைதான் இயங்கும் ... அதுவரை இந்த பனியில் அந்தரத்தில் தொங்க வேண்டும் ... 


இதே நிலையில் நம்ம ஊர் ஹீரோக்கள் இருந்தால் என்ன செய்வார்கள் .. அடுத்த நொடியே ஹீரோயினுடன் கீழே குதித்து சின்ன காயம் கூட இல்லாமல் தப்பி விடுவார்கள் அடுத்த சீன் அதே மலையில் ஒரு டூயட்... அதே போல ஜாக்கி சான் அந்த இடத்தில் இருந்தால் ஒவ்வொரு விஞ்சாக தாவி தாவி power stationஐ அடைந்து chairliftஐ இயக்கி தன் நண்பனையும் காதலியையும் காப்பாற்றி இருப்பார் ... ஆனால் இந்த படத்தில் காட்டபட்டிருப்பது உங்களை போல என்னை போல மூன்று சாதாரண அப்பாவி மக்கள்...


தப்பிக்க வேண்டும் என்றால் அவர்கள் முன்னால் இருக்கும் இரண்டு சவால்கள் ...ஒன்று உயரம் .... அந்த உயரத்தில் இருந்து தரையை அடைய வேண்டும் என்றால் குதிப்பதை தவிர வேறு வழி இல்லை ... ஆனால் அவ்வாறு குதிதால் என்ன ஆகும் என்ற பயம் அவர்களை குதிக்கவிடாமல் தடுக்கிறது... இன்னொன்று கடுங்குளிர் ....


ஒருகட்டதில் ஹீரோயின் வரப்போகும் சாவை கண்டு பயந்து புலம்ப ஆரம்பிக்கிறாள்... ஹீரோ உன்னை எப்படியாவது நான் காப்பாற்றுகிறேன் ... நீ கண்டிப்பாக இந்த இடத்தில் இருந்து தப்பித்து விடுவாய் என்று அவளுக்கு ஆறுதல் கூறுகிறான் ...அவளை காப்பாற்ற வேறு வழியே தெரியாமல் விஞ்சில் இருந்து கீழே குதிக்கிறான்...குதித்த நொடியில் அவன் கால் எழும்புகள் உடைந்து நொறுங்குகின்றன... (அந்த காட்சியில் அவன் கால் தரையை தொட்டவுடன் அவன் எழும்புகள் முறிவதை பின்னணி இசையில் அருமையாக கொண்டு வந்திருப்பார் இசை அமைப்பாளர்).. அவன் மூட்டுக்கு கீழே எழும்புகள் அவன் தோலை துளைத்து வெளியே வந்து விடுகிறது… அவனால் ஒரு இஞ்ச் கூட நகர முடியவில்லை... வலி எல்லாம் குறைந்தவுடன் இப்படியே ஊர்ந்து ஊர்ந்து சென்று யாரையாவது உதவிக்கு அழைத்து வந்து விடலாம் என்று அவன் மேலே இருக்கும் காதலியிடம் சொல்லுகிறான் ... ஆனால் அவன் காதலி அப்படியே உறைந்து போய் அவனை பார்க்கிறாள் .. காரணம் கீழே இருக்கும் அவனை சுற்றி நரிகள் சூழ்ந்து விடுகின்றன.... அவ்வளவுதான் அவன் நரிகளுக்கு இரையாகி விடுகிறான் ... அப்பொழுதுதான் மேலே இருப்பவர்களுக்கு தெரிகிறது இந்த உயரம் , குளிர் இது எல்லாவற்றையும் விட பேராபத்து ஒன்று கீழே இருக்கிறது என்று ....


இந்த மூன்று ஆபத்துளையும் தாண்டி மேலே இருக்கும் இருவரும் தப்பினார்களா ... ஹீரோ சொல்லியபடி ஹீரோயின் தப்பி பிழைத்தாளா ?இல்லையா? என்பதே மீதி கதை... படம் முழுவதும் கேமரா தொங்கிக்கொண்டேதான் இருக்கிறது ... படத்தை பார்த்தால் கேமராமேன் எவ்வளவு உழைப்பை கொட்டி இருக்கிறார் என்பது புரியும்... 

ஹீரோயின் கை பனிபொழிவாள் விஞ்சில் இருக்கும் கைபிடியோடு ஒட்டி விடுவது , ரெண்டு விஞ்ச் தள்ளி இருக்கும் ஏணியை அடைய விஞ்ச் இயங்கும் கயிரை கையால் பிடித்து கொண்டே ஹீரோவின் நண்பன் செல்ல முயன்று இரண்டு அடி எடுத்து வைத்தவுடன் அந்த கேபிள் பனியில் உறைந்து போய் இருக்கும் இவன் கையை அறுத்து விடுவது என்று பனியின் பயங்கரத்தை காட்சியிலேயே புரிய வைத்திருப்பார் இயக்குனர்... 


அதே போல் படத்தின் பெரிய பலம் பின்னணி இசை... அந்த விஞ்சில் இருந்து எழும் கிரீச் முரிச் சத்தமே நம்மை அநியாயத்துக்கு பயமுறுத்துகிறது.... 


இன்னொரு பெரிய பலம் நடிகர்களின் நடிப்பு ... படம் முழுவதும் மூன்று கதாபாத்திரங்கள்தான்.... சாக போகும் தருவாயில் தைரியசாலி எப்படி அதை எதிர்கொள்ளுவான் , பயந்த சுபாவம் உடையவர்கள் அதை எப்படி எதிர்கொள்ளுவார்கள் என்பதை ஹீரோ மற்றும் ஹெரோயினை வைத்தே நமக்கு காட்டி இருப்பார் இயக்குனர்... மரணபயத்தின் முன்னால் வேறு எதுவுமே பெரிய விசயமில்லை என்பதை யதார்த்தமாக சொல்லி இருக்கிறார்.... இந்த மூன்று நடிகர்களில் என்னை பொறுத்தவரை முதல் மதிப்பெண் அந்த பெண்ணுக்குதான்... படத்தில் இவருக்குதான் ஸ்கோப் அதிகம் ... அதே போல் அதை சரியாக பயன்படுத்தவும் செய்திருக்கிறார்... 



இதை போல மிகைபடுத்தபடாத எதார்த்தமான த்ரில்லிங் படங்கள் நம் ஊரில் எப்பொழுது வருமோ தெரியவில்லை...


Frozen(2010) - ஒன்றை மணிநேரம் மரண பீதியில் உறைய ஆசைபடுபவர்கள் இந்த படத்தை பார்க்கலாம்...

Saturday, November 6, 2010

வா குவாட்டர் கட்டிங்- “கல்யாணி ஸ்ட்ராங்க் பீர்”



காந்தி ஜெயந்தி அன்னைக்கு சரக்கு அடிக்க ஆசைபட்டு சரக்கு கெடைக்காம ஊருள தெரு தெருவா அலஞ்ச  அனுபவம் இருக்கா உங்களுக்கு? ரொம்ப நேர நீண்ட போராட்டதிர்க்கு பின்னாடி எப்படியாவது ஒரு குவாட்டர தேத்தி பரபரப்பா அத அடிச்சி முடிச்சிருக்கீங்களா? அப்படி நீங்க குடிச்சி முடிச்சி போதையில மல்லாக்க படுத்திருக்கும் போது குவாட்டர தேத்த நீங்க பட்ட கஷ்டத்தையே  ஒரு படமா எடுக்கலாமேண்ணு எப்பவாவது உங்களுக்கு தோனி  இருக்கா? ஆனா புஷ்கர் காயத்திரி ஜோடிக்கு இது மனசுல தோனி இருக்கு நான் மேல சொன்ன குவாட்டர் மேட்டர்தான் இவங்க எடுத்திருக்கிற படத்தோட கதையே...

 .... இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் எத்தனையோ உறவுகளை பற்றி படம் எடுத்து விட்டார்கள் .... ஆனால்  வேலை வெட்டி இல்லாத ஒரு தமிழக இளைங்கனுக்கும் குவாட்டருக்கும் இடையே இருக்கும் ஒரு பாசபிணைப்பை முதன் முறையாக படமாக எடுத்ததுக்காக படத்தோட இயக்குனர்களுக்கு பெரிய நன்றி சொல்லியே ஆகனும்...

ஒரே ஒரு இரவில் நடக்கும் கதையை காமெடியாகவும் , கொஞ்சம் லாஜிக் கலந்தும் கொஞ்சம் சுஸ்பென்ஷாகவும் அதே சமயம் விறுவிறுப்புமாகவும் சொல்ல முடியுமா? .... முடியும் வா குவாட்டர் கட்டிங் பாருங்கள்... நீங்களே இதை வழிமொழிவீர்கள்  ....

படம் ஆரம்பத்தில் இருந்து காமெடி சரவெடிதான் ... சிவாவும் சரனும் படம் முழுக்க காமெடி பட்டாசுகளை கொழுத்தி போட்டுக்கொண்டே இருக்கிறார்கள் ... நமக்குதான் சிரிக்க நேரமில்லை ... ஒரு காமடிக்கு சிரித்து  முடிப்பதற்க்குள்  அடுத்த காமெடி என்று காமெடி சரம் பின்னி இருக்கிறார்கள்  .... வசனம் யாரென்று நான் கவனிக்கவில்லை ... அசால்ட்டா டைமிங் கைகூடி இருக்கு வசனகர்த்தாவுக்கு ....இவரின் திறமைக்கு  செத்தவன் ஆவியா வந்து பேசுர அந்த  வசனம் (தீஞ்சி போறதுக்கு முன்ன தோசைய திருப்பு ஓஞ்சி போறதுக்கு முன்ன ஆசைய நெரப்பு) ஒரு சோறு ...

குவாட்டரை கட்டிங் கட்டிங்காக அடிக்கும் போது .. முதல் ரவுண்ட் அடித்து முடித்ததும் சுத்தமாக நமக்கு சுதி ஏறவில்லை என்றால்  சரக்கு டூப்ளிகேட் சரக்கோ என்று ஒரு சந்தேகம் வரும் ... ஆனால் ரெண்டாவது ரவுண்ட் அடித்து முடித்ததும் முதல் ரவுண்டுக்கும் சேர்த்து போதை தலைக்கு ஏறும் ... இந்த படமும் அப்படிதான் முதல் பாதியின் கடைசி அரைமணி நேரம் படம் கொஞ்சம் மொக்கையாக போகும் போது இந்த குவாட்டர் கட்டிங் மீதும்  நமக்கு சந்தேகம் எழும் .. ஆனால் ரெண்டாம் பாதி ஒரு ஒரிஜினல் மிலிட்டரி ரம் அடித்த உணர்வை பார்க்கும் நமக்கு தரும் ...

சிவா தமிழ் படத்தில் என்ன செய்தாரோ அதேதான் இங்கும் ... additionalலா கோவை தமிழ் பேசி நடித்திருக்கிறார் .... அவரின் கோவை ஸிலாங்க் சில இடங்களில் காண்ட்ராவியாக .இருந்தாலும் ஏற்று கொள்ள முடிகிறது ... படத்தில் இவரை விட அதிகம் ஸ்கோர் பண்ணுகிறவர் இவரது வருங்கால மாமாவாக வருகிற சரண்தான்.... அரசியல்வாதியிடம்  சைவ பிரியாணி கேட்கும் காட்சி , விலைமாந்தர்களிடம் மாட்டி கொண்டு ஐட்டம் சாங்கில் ஐட்டமாக நடனம் ஆடும் இடம் என்று கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சிக்சர் அடித்திருக்கிறார் ... இவரை சுற்றி வரும் சஸ்பென்ஷ் முடிச்சி அவிழும் இடம் வெடிசிரிப்பு...

லேகா மக்கு மாணவியாக வந்து , இடைவேளைக்கு பின்னர் தற்கொலைக்கு முயன்று சிவா சரணால் காப்பாற்றபட்டு குவாட்டர் சேசிங்கில் அவர்களுடன் இணைந்து கொள்கிறார் .... இவரை வைத்தும் இயக்குனர் டைமிங்கில் காமெடி பண்ணி இருக்கிறார்... இவர் ஹீரோயின்தான் என்றாலும் படத்தில் காதல் காட்சிகளில்லை...

இவ்ர்களை தவிர்த்து அந்த சுயேட்சை அரசியல்வாதி , ஸ்கூட்டர் கார் என்று பார்க்கும் எல்லா வண்டிக்கும்  தீ வைக்கும் சேகர் (அதர்க்கு இவர் சொல்லும் காரணம் அக்மார்க் “தமிழ்படம் எஃபக்ட் ),சின்ன அண்ணன் , பெரிய தம்பி , பெண் எஸ்.ஐ., அப்பா மகன் என்று இரட்டை வேடத்தில் வரும் வில்லன் என்று படத்தில் வரும் பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் அருமையாக டெவளப் செய்யபட்டுள்ளன.... படத்தில் ஆர்யாவும் ஒரு காட்சியில் வந்து போகிறார் ...       

இசை G.V.பிரகாஷ் ... பாடல்களில் ஓரம்போ வாசனை ..பின்னணி இசை சில இடங்களில் காதுக்கு இனிமை சில இடங்களில் அதே காதில் ரத்தம் ... கிளைமாக்ஸில் வில்லன் குரூப் ஹீரோவை துரத்தும் சேஷிங்க் ஸீனில்  ஐட்டம் சாங்கை நுழைத்திருப்பது இயக்குனரின் புத்திசாலிதானம் ...

 வெகு சில இடங்களில் மொக்கையாக வரும் வசனங்கள், எஸ் எஸ் ம்யூசிக் கிரெக் வரும் காட்சிகள் , சில கார் சேஷிங் காட்சிகள் என்று ஒரு சில பொறுமை சோதிப்புகளும் அப்பப்ப படத்தில் வந்து செல்லும் ... அதை மட்டும் பொறுத்து கொண்டால் இந்த குவாட்டர் கட்டிங் ,, கொடுத்த காசுக்கு கட்டிங் அளவுக்கு இல்லைனாலும் புல் பீர் அளவுக்குனாலும் கிக் கொடுக்கும் ...

 உங்களுக்கு தமிழ்படம் ஓரம்போ போன்ற படங்கள் பிடிக்கும் என்றால் இதை ஒருமுறை தாராளமாக பார்க்கலாம் ... குழந்தைகளுடனோ இல்லை பெண்களுடனோ இந்த படத்திர்க்கு போய் விடாதீர்கள் அவர்களுக்கு என்று இந்த படத்தில் எதுவுமே இல்லை டாஸ்மாக் பார் மாதிரியே ....

மொத்தத்தில் வா குவாட்டர் கட்டிங்- “கல்யாணி ஸ்ட்ராங்க் பீர்


Sunday, October 17, 2010

அழகிய தீயே -- அனுபவித்தே தீர வேண்டிய படம்

ஒரு இயக்குனரின் வெற்றி எவ்வளவு பிரமாணடமாக தன் கற்பனையை ரசிகனுக்கு திரையில் வெளிபடுத்துகிறார் என்பதில் இல்லை , எவ்வளவு சரியாக தான் சொல்ல வந்த விஷயத்தை... தான் உருவாக்க நினைத்த உணர்ச்சிகளை... ரசிகனின் மனதில் பதிய வைக்கிறார் என்பதில்தான் இருக்கிறது... எந்த ஒரு திரைப்படத்திற்கும் லாஜிக் பார்ப்பது என்னை பொருத்தவரைக்கும் தேவை இல்லாத ஒன்று ... திரைப்படம் என்பது ஏதோ ஒரு இயக்குனரின் கற்பனைதான்.... நம் கனவுகளை போல.... நாம் தினந்தோறும் பல கனவுகளை கடந்துதான் வருகிறோம் , ஆனால் ஒரு சில கனவுகள் மட்டுமே ரசனையாக நம்மை சந்தோசபடுத்தும் விதமாக அமையும் ... அந்த கனவுகளின் நீட்சியாக அன்று முழுவதும் நம் மனதில் ஒரு இனம் புரியா சந்தோசம் இருந்துகொண்டே இருக்கும் .. அப்படிப்பட்ட ஒரு கனவுதான் இந்த அழகிய தீயே திரைப்படமும் ...
சினிமாவில் ஜெய்க்க வேண்டும் என்று ஒரு லச்சியத்துடன் வாழும் ஒரு இளைஞன் , பணக்கார குடும்பத்தில் பிறந்து அங்கு இருக்கும் மனிதர்களை பிடிக்காமல் தன சொந்த காலில் நிற்க ஆசைப்படும் ஒரு பெண் , இந்த இருவருக்கும் இடையே எப்படி காதல் முளைக்கிறது என்பதே இந்த படம் ... இந்த படம் என்னை ரசிக்க வைத்ததிற்கு மிக முக்கிய காரணம் இந்த இரண்டு கதாபாத்திரங்களின் உருவாக்கமும் அதை கொஞ்சம் கூட தடுமாறாமல் திரையில் அப்படியே கொண்டுவந்த விதமும்தான்...   படம் முழுவதும் இந்த கதையில் வரும் ஒரு கதாபாத்திரம் கதையில் வராத ஒரு பெண்ணிடம் கதை கூறுவதை போலதான் (flash back) திரைகதை இருக்கும் ... 

கதையில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை படத்தை பார்க்கும் நமக்கு முன்கூட்டியே சொல்லிவிட்டு நம்மை அந்த மனநிலைக்கு தயார்படுத்துவதற்கு இந்த திரைகதை அமைப்பு உதவியிருக்கிறது... உதாரணமாக இனிமேல்தான் இருவரும் முதன்முறையாக சந்திக்க போகிறார்கள் , இனிமேல்தான் கதையில் ஏதோ ஒரு முக்கியமான திருப்பம் நடக்கபோகிறது , எலியும் பூனையுமாக இருக்கும் இருவருக்கும் நடுவே இனிமேல்தான் ஒரு புரிதல் ஆரம்பம் ஆக போகிறது என்று ஒவ்வொரு கட்டத்திலும் இயக்குனர் நமக்கு முன்கூட்டியே சொல்லிவிடுவார் அந்த கதை சொல்லும் கதாபாத்திரத்தின் மூலம் ... சுற்றுலா செல்லும்போது அடுத்து நாம் இந்த இடத்திற்கு செல்ல போகிறோம் என்று கைடு சொல்லியதும் நமக்குள் அந்த இடத்தை பற்றிய ஒரு எதிர்பார்ப்பு உருவாவதை போல நமக்கும் இந்த யுக்தி கதையின் மேல் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி விடுகிறது... கடைசி வரை அந்த எதிர்பார்ப்பை  ஏமாற்றாமல் நிறைவேற்றி இருப்பதில்தான் இயக்குனர் ஜெய்த்திருப்பார்...


படத்தின் டைட்டில் கார்டில் சில கிராபிக்ஸ் செய்யப்பட்ட புகைப்படங்களை காட்டுவார்கள் அதில் ஒன்றில்  ஒரு பால் பூத்தில் மனிதர்களோடு கன்றுகுட்டி ஒன்றும் வரிசையில் நின்று கொண்டு இருக்கும், இப்படி அந்த டைட்டில் கார்டிலேயே இயக்குனர்  அடுத்த இரண்டு மணிநேரம் நாம் எப்படிப்பட்ட ஒரு படத்தினை பார்க்க போகிறோம்  என்று நம் மனதை டியூன்   செய்து விடுகிறார்... படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதே அலைவரிசையில் இருப்பதால் நம்மால் எளிதில் அதை உள்வாங்கி கொள்ள முடிகிறது .... படத்தில் மூன்று முக்கிய கதாபத்திரங்களில் பிரசன்னா , பிரகாஷ்ராஜ் மற்றும் நவ்யா நாயர் நடித்திருப்பார்கள் ... இதில் பிரகாஷ் ராஜ் கொஞ்சநேரமே வருவார் ... ஆனால் அவர் கதாபத்திர உருவாக்கத்தில் இயக்குனரின் திறமை பளிச்சிடும் ... ஆரம்பத்தில் ஒரு கேனை கிறுக்கனாக நமக்கு தெரியும் அந்த கதாபத்திரத்தின் மேல் போக போக நமக்கு ஒரு மரியாதை உருவாகி விடும் ... அந்த மரியாதையும் ஏதோ ஒன்றிரண்டு காட்சிகளில் அவரை நல்லவர் போல காட்டி  உருவாக்காமல்,, வலிந்து திணிக்கபடாமல்,,  கதையின் ஓட்டத்திலேயே நமக்கு இயல்பாக உருவாகி விடும்...இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பார்த்து பார்த்து உருவாக்கி இருப்பார் இயக்குனர் ...

இந்த படத்தில் இயக்குனர் ராதாமோகனுக்கு பெரிய துணையாக இருந்தவர் வசனம் எழுதிய விஜி அவர்கள் ... வசனம் எழுதுகிறேன் என்று தன்னுடைய மேதாவித்தனத்தை காட்டாமல் , படம் பார்க்கும் நாம் என்ன நினைக்கிறோமோ  அது அப்படியே வசனமாக வரும் வகையில்,,  என்ன தேவையோ அதை மட்டுமே எழுதி இருப்பார் ... உதாரணமாக பிரகாஷ் வரும் இரண்டு மூன்று காட்சிகளிலேயே முன்ன பின்ன தெரியாதவனுக்கு இவ்வளவு உதவி செய்கிறானே இவ்வளவு நல்லவனா இவன் என்று நமக்கு தோன்றும்....   அந்த வசனம் அடுத்த காட்சியில் வந்து விடும்... அதே சமயம் "ஒருத்தனோட கனவை குறை சொல்லுற உரிமை யாருக்கும் கிடையாது" , "நம்மை சுத்தி நாலு நல்லவங்க இருந்தா போதும் அதை விட பெரிய ஆசிர்வாதம் எதுவும் கிடையாது" ,"கறந்த பால், அதிகாலை பனித்துளி , குழந்தையின் சிரிப்பை போல காதலும் புனிதமானது"   என்பதை போன்ற ரசிக்க வைக்கிற வசனங்களும் படம் முழுவதும் வந்து கொண்டே இருக்கும் ... அதே போல நகைசுவை காட்சிகளில் இவரின் வசனம் புகுந்து விளையாடி இருக்கும் ... குறிப்பாக நாய்க்குட்டி வாங்க அந்த மாதிரியான வீட்டுக்குள் பிரசன்னாவும் அவர் நண்பரும் நுழையும் காட்சியில் குட்டி சம்பந்தமாக கொஞ்சம் இரட்டை அர்த்தம் வரும் மாதிரியான வசன  அமைப்புகள் இருந்தாலும் அந்த காட்சியின் இறுதியில் நாம் இவ்வளவு நேரம் பேசிய குட்டி நாய் குட்டி பற்றி இல்லை என்று தெரிந்தவுடன் அந்த நண்பர் "தேவை இல்லாம எங்க அப்பனை வேற அசிங்கபடுத்திடேனே" என்று புலம்பும் போது நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது... அதே போல பாஸ்கர் வரும் காட்சிகளில் சில சினிமாக்களை நாசூக்காக காலை வாரி இருப்பார் ...அடித்து சொல்லலாம் இந்த படத்தின் வெற்றிக்கு விஜிக்கும் பெரிய பங்கு இருக்கிறது என்று...

இன்னொரு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய நபர் இசை அமைப்பாளர் வித்யாசாகர் ... கண்டிப்பாக இப்படி ரொம்ப எளிமையான இரைச்சல் இல்லாத  ஆனால் ரசிக்க வைக்ககூடிய  பாடல்களை இவரை தவிர வேறு யாராலும் தர முடியாது ... "விழிகளின் அருகிலே வானம்" பாடல் படம் வந்த பொழுது பெரிய ஹிட் .. இப்பொழுதும் கேட்கும் பொழுது அதே பிரெஷ்நெஸ் அப்படியே... பின்னணி இசையிலும் ஆர்பாட்டம் இல்லாத அதே எளிமை .. குறிப்பாக  ஊட்டியில் பனிமூட்டம்  விலகி வெள்ளை சுடிதாரில் நவ்யா தோன்றும் காட்சியிலும் அதே போல் கிளைமாக்சில் கொசுமருந்து புகை விலகி அதே வெள்ளை சுடிதாரில் நவ்யா தோன்றும் காட்சியிலும் ஒரே இசையை இரு வேறு பீட்டில் கொடுத்து அந்த காட்சிக்கே புது பரிமாணத்தை உருவாக்கி இருப்பார்... அவர் இப்பொழுது மார்கெட்டில் இல்லாததற்கு  அவர் காரணம் இல்லை அவரை சரியாக பயன்படுத்த யாரும் இங்கே இல்லை என்பதே காரணம் என்பது இந்த படத்தை பார்த்தால் புரியும் ...     

படம் முழுவதும் ஒரு கவிதை தொகுப்பை போல கோர்வையாக கொண்டு போய் இருப்பார் இயக்குனர் ... சைக்கிள் டியுப் பஞ்சர் ஓட்ட போகும் ஹீரோவுக்கு நவ்யா நாயருடன் திருமணம் நடப்பது, இருவரும் முதன் முதலில் எங்கே சந்தித்தோம் என்பதை பிரசன்னா கற்பனையாக  பிரகாஷ் ராஜிடம் கூறும் இடம் , நவ்யாவின் செருப்பு வீட்டிற்கு வெளியே எந்த பொசிசனில் இருக்கிறது என்பதை கொண்டு பிரசன்னா அவரின் மூடை(mood) கணிப்பது,,, அந்த "ப்பூம்" ஸீன், அதன்  நீட்சியாய் கிளைமாக்சில் நவ்யாவிற்கு ஒரே நொடியில் அதுவரை அவருக்கே தெரியாமல் அவர் மனதில் பிரசன்னாவின் மேல் இருந்த காதல் வெளிவரும் ஸீன் என்று கவிதைநயமான காட்சிகள் ஏராளம் ...  

படத்தில் குறையே இல்லையா என்றால் இருக்கிறது ... படத்தின் இரண்டாம் பாதியில் சினிமாத்தனமான காட்சிகள் ஏராளம் .. குறிப்பாய் விபத்தில் அடிபட்டு சாகும் தருவாயில் இருக்கும் ஹீரோவின் நண்பன் இறக்கும் தருவாயில் நவ்யாவிடம் பிரசன்னாவின் காதலை சொல்ல முயற்சி செய்வது (ஆனால் கிளைமாக்சில் நவ்யா அவன் சாகும் தருவாயில் அவனின் கடைசி நிமிடங்களில் கூட இருந்த அனுபவத்தை பதைபதைப்புடன்   சொல்லும் பொழுது நம் நெஞ்சம் கணக்கும் விதத்தில் அவரின் நடிப்பு இருக்கும்) , அதே காட்சியில் பாஸ்கர் எவ்வளவு செலவானாலும் பரவாய் இல்லைடா நீங்க எல்லாம் என் புள்ளைக மாதிரி அவன் பொளைக்கனும்டா என்று பீலிங்க்ஸ் விடுவது  (அவர் அவர்கள் தங்கி இருக்கும் வீட்டு) , பிரசன்னாவின் அம்மா வரும் காட்சி என்று அக்மார்க் தமிழ் சினிமா செண்டிமெண்ட் காட்சிகள் இரண்டாம் பாதியில் அதிகம் ... 

இது ரொம்ப எளிதான ஒரு படம் ஆனால் கோடி கோடியாக பணத்தை கொட்டி எடுத்தாலும் கொடுக்க முடியாத பல மெல்லிய உணர்வுகளை படம் முழுவதும் நமக்கு தந்துகொண்டே இருக்கும் ... கண்டிப்பாக ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டிய படம் இது ... இதுவரை பார்க்காதவர்கள் நம்பி ஒருமுறை இந்த படத்தை பார்க்கலாம்...  

(ரொம்ப  நாளாக இந்த படத்தை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன் ... நேற்று மீண்டும் இந்த படத்தை பார்க்க வாய்ப்பு அமைந்தது ... எத்தனை முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும்   எனக்கு பிரெஷாகவே படம் தெரிந்தது (my sassy girl போலவே) ... அதனால் அடக்க முடியாமல் இந்த படத்தை பற்றி இன்று எழுதி விட்டேன்...  )          

Saturday, October 2, 2010

எந்திரன் - ரசிகனல்லாதவனின் பார்வை

மக்கா இந்த படத்துல கடைசி இருபது நிமிஷம் சும்மா ரஜினி பட்டைய கெளப்பி இருப்பாரு அப்படின்னு சொன்னா அது ரொம்ப சாதாரண வார்த்தை ... ஒரு சீன ரோபோவோட ரோபோவா கலந்துட்ட வசீகரன ரோபோ ரஜினி கண்டுபிடிக்க ஒவ்வொரு ரோபோவா கத்திய வச்சி தட்டிகிட்டே வருவார் ...ஒரு ரோபோ மேல சந்தேகப்பட்டு அது தலைய வெட்டும்போது  அதோட டாப் கழண்டு  உள்ள இருக்கிற circuit தெரியும் .. அப்ப ஐஸ்வர்யாராய பாத்து சும்மா ஸ்டைலா ரோபோ அப்படின்னு சொல்லுவாரு பாருங்க (அதேதான் டிரைலர்ல  வருமே அந்த வசனம்தான் ) சும்மா தியேட்டர் அதிருச்சி... இப்படி கிளைமாக்ஸ் முழுசா ரஜினி ரஜினி ரஜினி மட்டும்தான் ... மூன்று முகம் நடை ,அதே ஸ்டைல் என்று அசத்தி இருப்பார் ரஜினி ... 

அதே போல் முதல் பாதியில் நல்ல புள்ளையாக அதே ரோபோவில் காமெடியில் பின்னி பெடல் எடுத்திருப்பார்... ஐஸ் பிட் அடிக்க உதவி செய்து பின்னர் அவர் ஆசிரியர்களிடம் அப்பாவியாக அவரை  மாட்டி விடும் சீன  , முதன் முதலில் கோயில் திருவிழாவில் அடிக்க வரும் ரவுடிகள் கையில் இருக்கும் ஆயுதங்கள்  அனைத்தையும் மேக்னட் சக்தி மூலம் தன பக்கம் கவர்ந்து இழுக்கும் காட்சி என்று வெடி சிரிப்பு வர வைக்கும் காட்சிகள் ஏராளம் ... சில காட்சிகளில் டைமிங் காமெடியிலும் அசத்துகிறார்.... படத்தின் ஹீரோ இந்த ரோபோ ரஜினிதான் ... படத்தில் வரும் ஒரே ஒரு பஞ்ச வசனமும் இந்த ரோபோ ரஜினிக்குதான் 

இன்னொரு ரஜினி அடக்கி வாசிக்கிறார் .. படத்தில் அவருக்கு அறிமுக பாடளும் இல்லை சண்டைகாட்சிகளும் இல்லை பஞ்ச வசனமும் இல்லை .. தீவிர ரஜினி ரசிகர்களை இது சற்று ஏமாற்றம் அடைய செய்திருக்கும்... கடைசி சண்டையில்கூட ரோபோவை கணினி தொழில்நுட்பம் கொண்டே வீழ்த்துகிறார் ...     
 படம் முழுவதும் இளமையாக தெரிகிறார் ... சில காட்சிகளில் கமலுடன் போட்டி போடும் இளமை அவர் முகத்தில் ... எல்லா புகழும் சங்கருக்கே...

ஐஸ் அழகு பதுமையாக வந்து போகிறார் ... சில காட்சிகளில் கொள்ளை அழகு சில காட்சிகளில் கிழடு தட்டிய முகம் என்று கலவையாக இருக்கிறார் ... இரும்பிலே ஒரு இருதயம் பாடலில் வரும் இரண்டாவது கெட்டப்பில் அள்ளுகிறார்   ... அதேபோல் பிறந்தநாள் பார்ட்டி காஸ்டியும் அவர் அழகை எடுப்பாக காட்டுகிறது ... ஆனால் படத்தில் இவர் நடிக்க பெரியதாய் ஸ்கோப் இல்லை  .. சிவாஜியில் ஸ்ரேயா பண்ணிய ரோல் அளவுக்குகூட இவர் ரோலில் நடிப்பிற்கான வாய்ப்பு இல்லை.... ஒரு வேளை ரோபோவிற்கு இவர் மேல் காதல் வந்தால் மட்டுமே  கதையின் நம்பகத்தன்மை கூடும் என்ற காரணத்திற்க்காக ஷங்கர் இவரை தேர்வு செய்திருப்பாரோ?

ஹீரோ ரோபோவை ஆண்டி ஹீரோ ரோபோவாக மாற்றுவதோடு முடிந்து விடுகிறது வில்லனின் வேலை... நம் ஊர் வில்லன்கள் யாரும் கண்டிப்பாக இந்த கதாபாத்திரத்தில் நடிக்கம் சம்பாதித்து இருக்க மாட்டார்கள் ... அவ்வளவு வீக்கான வில்லன் ... 

ரகுமான் , சாபு சிறில் , ரத்தினவேலு  இவர்களின் பங்களிப்பு நீங்கள் இந்த படத்தை பார்த்தால்தான் தெரியும் ...கடைசி பதினைந்து நிமிட பிரமாண்டத்திற்கு ரத்தினவேளுவும் ஒரு காரணம் ... மனிதர் மிரட்டி இருப்பார்...

படத்தின் இரண்டாம்பாதியின்   முதல் முக்கால்மணிநேரம் படத்தின் பெரிய மைனஸ்... ஷங்கர் தன hi-tech  செண்டிமெண்ட் காட்சிகளால்  நம் நெஞ்சை ஈரமாக்கி கொண்டே இருப்பார் ... முதல் பாதியில் வரும் பிரசவம் பார்க்கும் ஸீன்., தீபிடிக்கும் கட்டிடத்தில் spider  man போல ரோபோ ரஜினி பறந்து பறந்து மக்களை காப்பாற்றும் காட்சி இரண்டாம் பாதியில் . அந்த கொசு காட்சி ... கலாபவன் மணி வரும் காட்சி என்று நம் பொறுமையை சோதிக்கும் காட்சிகளும் நிறைய உண்டு படத்தில் ...  படத்தின் இறுதியில் ரோபோ ரஜினி திருந்துவது , பின்னர் அதை எல்லார் முன்னிலையிலும் dis assemble செய்வது(மற்ற இரட்டை வேட படங்களில்  ஒரு ஹீரோ சாவதை போல ) என்று புளித்த மாவு காட்சிகளை தவிர்த்திருக்கலாம் ..       

கடைசி இருபது  நிமிடம்  கலக்கல் ...  மொத்த படத்தையும் விட இந்த இருபது நிமிடம் படமாக்கவே அதிகம் நேரம் செலவாகி இருக்கும் என்று எண்ணுகிறேன் ...

படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் .. ரோபோவிற்கு மனித உணர்ச்சிகள் எப்படி வந்தது என்பதை பற்றி சரியாக சொல்லவில்லை என்பதால் அதற்க்கு ஐஸ் மேல் வரும் காதலை முழுவதுமாக ஏற்று கொள்ள முடியவில்லை ... ஆனால் இவை எல்லாம் ரஜினி பண்ணும் வில்லதனத்திற்கு முன்னால் காணாமல் போய் விடுகிறது ...

கதாநாயகி மேல் காதல் கொள்ளும் வில்லன் அவளை கடத்துகிறான் அவளை ஹீரோ எவ்வாறு காப்பாற்றுகிறான் என்ற பழைய கதையை ரோபோடிக்ஸ் என்னும் புது தொழில்நுட்பத்தில் தந்திருக்கிறார் சங்கர் ... அவர் தன முயற்ச்சியில் கொஞ்சம் சறுக்கி இருந்தாலும் ரஜினி தன நடிப்பால் அவரையும் தன்னோடு சேர்த்து சிகரத்தில் ஏற்றி இருக்கிறார் ..

இந்த படம் குழந்தைகளை கண்டிப்பாக குஷிபடுத்தும்  .. குடும்பம் குடும்பமாக மக்கள் தியேட்டருக்கு படையெடுக்க போவது உறுதி .. கலாநிதி காட்டில் அடைமழைதான் ...
எந்திரன் - தமிழ் சினிமாவின் புது முயற்சி ... இன்னும் கொஞ்சம் ஷங்கர் தன் செண்டிமெண்ட் தனத்தை விட்டு கொடுத்திருந்தால் மனதார பாராட்டலாம்   


Monday, September 13, 2010

My Sassy Girl(2001) - கண்டிப்பாய் அனுபவிக்க வேண்டிய காதல் கதை



DISC: இது முழுக்க முழுக்க காதலை ரசிப்பவர்கள் இல்லை காதல் செய்து கொண்டு இருப்பவர்களுக்கான பதிவு ... உங்களுக்கு காதல் மேல் பெரிதாய் மரியாதையோ ஈடுபாடோ இல்லை என்றால் இப்படியே கிளம்பி விடுங்கள் ... 
உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்....


கொரிய படங்களின் தீவிரமான ரசிகனாக மாறி விட்டேன் ... அந்த படங்களில் காட்டப்படும் மிக மென்மையான காதல் என்னை மிகவும் கவர்ந்து விட்டது... பொதுவாக நம் ஊர் காதல் படங்கள் எல்லாமே ஒரே templateதான் .. ஹீரோ பொறுக்கி ஹீரோயின் நன்றாக படிக்கும் மாணவி ... அவர் ஏழை இவள் பணக்காரி , அவர் கீழ் சாதி இவள் மேல்சாதி .. இப்படி வெவ்வேறு தளங்களில் இருக்கும் இருவருக்குள் காதல் வரும் ... அதுவும் ஹீரோவின் பொறுக்கித்தனத்தை பார்த்துதான் அவள் காதலிப்பாள் ... பின்னர் இந்த காதலுக்கு ஹீரோயினின் அப்பாவோ அண்ணனோ இடைஞ்சலாய் வர ஹீரோ தன முழு பலத்தையும் காட்டி அவர்களை தாக்கி அழித்து விட்டு அனாதையாய் ஆனால் சந்தோசமாய் நிக்கும் ஹீரோயினை கைபிடிக்க படம் முடியும் .. இடையில் ஹீரோயினின் அழகை பார்த்தவுடன் ஹீரோ கனவில் அமேரிக்கா சென்று விட அங்கு ஒரு குத்து பாட்டு ....   இப்படி எந்த ஒரு பிரேமிலும் காதலே இல்லாமல் ஒரு முழு "நீல"  படம் எடுத்து விட்டு காதலை யாரும் காட்டாத வித்தியாசமான கோணத்தில் காட்டி இருக்கிறேன் என்று வெக்கமே இல்லாமல் டிவியிலும் பத்திரிக்கையிலும் பேட்டி கொடுக்கும் அரைவேக்காட்டு இயக்குனர்கள் எல்லாம் பார்க்க வேண்டிய படம் "MY SASSY GIRL" 


இந்த  படத்தில் ஒரு காட்சி வரும் ... ஒரு ராணுவ வீரன் தற்கொலை செய்ய முயலுவான் ... அதற்க்கு அவன் சொல்லும் காரணம் தன்னுடைய காதலி வேறு ஒருவனுடன் ஓடி போய் விட்டாள் , நான் இறந்து விட்டாளவது அவள் தன்னுடைய தவறை நினைத்து வருந்துவாள் அவளுக்கு இததான் சரியான தண்டனை என்பான் ...  அவன் தற்கொலை பண்ணுவதை பார்க்க  அவன்  காதலியை கூட்டி கொண்டு வர வேண்டும் என்பதற்காய் ஹீரோவை பிடித்து வைத்து கொண்டு இவனையும் சேர்த்து கொன்று விடுவேன் என்று மிரட்டுவான்  ..  அந்த கட்டத்தில் ஹீரோயின் பேசும் வசனம் படு ஷார்ப் "நீ அவளை உண்மையிலேயே காதலித்திருந்தால் அவள் வேறு ஒருவனுடன் சந்தோசமாய் இருப்பதை நினைத்து நீ சந்தோசப்பட வேண்டும் , இப்படி அவளை பழி வாங்க வேண்டும் என்று நீ நினைத்தால் அவளை நீ உண்மையிலேயே காதலிக்கவில்லை என்று அர்த்தம் , நீ காதலிக்காத ஒருத்தி யாருடன் வாழ்ந்தால் உனக்கு என்ன?..."  இதை அப்படியே கொஞ்சம் மாற்றி jab we metடில்  பயன்படுத்தி இருப்பார்கள் ... ஹீரோ அவனுடைய அம்மாவை புரிந்து கொள்ள ஹீரோயின் பேசும் வசனமாக...

ஹீரோயினின் பெற்றோர் அவளுக்கு ஒரு மாப்பிளை பார்த்து இருப்பார்கள் ... அவள் ஹீரோவை கூட்டி கொண்டு அவனை சந்திக்க செல்லுவாள் ... அப்பொழுது ஹீரோ அவளுக்கு எதுவெல்லாம் பிடிக்கும் எதுவெல்லாம் பிடிக்காது .. அவள் அவனிடம் இருந்து எதை எல்லாம் எதிர் பார்ப்பாள் என்பதை பற்றி அந்த மாப்பிள்ளையிடம் தன காதலை மறைத்து விட்டு அழுகையை அடக்கிய சோகமான முகத்துடன்  கூறுவான் .... அதை கேட்கும் ஹீரோயின் அவன் தன்னை பற்றி முழுமையாய் புரிந்து வைத்துள்ளான் என்பதை உணர்ந்து , அந்த இடத்தை விட்டு உடனே கிளம்பி ஹீரோவை தேடி ஓடுவாள் ... இந்த காட்சி அப்படியே சிவா மனசுல சக்தி படத்தில் வரும்... 

ஹீரோயின் தன்னை விட்டு பிரிந்தாலும் அவளை மறக்க முடியாமல் தன்னுடைய காதல் கதையை திரைக்கதையாக்கி ஹீரோ ஒரு படமாக எடுப்பான் ...இது எந்த தமிழ் படத்தில் சுடப்பட்டுள்ளது  என்று நான் சொல்ல தேவை இல்லை ...இப்படி இங்கே நீங்கள் ரசித்து பார்த்த பல காதல் காட்சிகள் இந்த படத்தில் பார்க்கலாம் ... காதல் படம் எடுக்கும் நம் எல்லா இயக்குனர்களையும் பெரிதும் பாத்தித்த படம் இது என்று நினைக்கிறேன் .... 



கதை இதுதான் , தன காதலன் இறந்து விட்ட துக்கத்தில் தினமும் தண்ணி அடிக்கும் ஹீரோயின்.... அவளுடன்   விதி வசத்தால்  இரண்டு முறை ஹோட்டல் ரூமில் தங்க நேரிடும் ஹீரோ ... தன பழைய காதலன்தான் இவனை தனக்கு காட்டி உள்ளான் என்று நினைத்து அவனை போலவே இவனிடம் பழகுகிறாள் ... ஆனால் இவளின் அடாவடித்தனத்தை நினைத்து பயந்து ஹீரோ இவளை விட்டு விலக பார்கிறான் , ஆனால் முடியவில்லை .... கடைசியில் வேறு வழி இல்லாமல் அவளுடன் பழக ஆரம்பிக்கிறான் ... போக போக ஹீரோ அவள் மேல் காதலில்  விழுகிறான் ஒரு கட்டத்தில் அதை அவளிடம் சொல்கிறான் .. அவளுக்கோ ஒரு விதமான குழப்பம் ... தனக்குள் இருக்கும் காதல் உண்மையிலேயே இவன் மேல் உள்ளதுதானா இல்லை தன பழைய காதலனை போல எண்ணி இவனிடம் பழகினதால் அவன் மேல் இருக்கும் காதலை இவன் மேல் இருக்கும் காதல் என்று தவறாக எண்ணுகிறோமா? என்று... அவள் ஒரு முடிவு செய்கிறாள் இருவரின் மனதில் இருப்பதையும் ஒரு லெட்டரில் எழுதி மலை உச்சியில் இருக்கும் ஒரு மரத்தின் அடியில் புதைத்து வைத்து விட்டு , இரண்டு வருடம் எந்த தொடர்பும் இல்லாமல் வாழ வேண்டும் ... இரண்டு வருடம் கழித்தும் இந்த காதல் அப்படியே இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ... அதன் படியே செய்கிறார்கள் ... இரண்டு வருடம் கழித்து ஹீரோ அங்கு வருகிறான் .. ஹீரோயினை வரவே இல்லை .. அவள் என்ன ஆனால் , இருவரும் இணைந்தார்களா  இல்லையா என்பதே  இந்த படத்தின் கதை ...

படம்  முழுவதும் விதியையும் ஒரு கதாபாத்திரமாய் உலவ விட்டிருப்பார்கள் ... ஹீரோ ஹீரோயினை முதலில் பார்ப்பது ... அவனுக்கு அவள் மேல் காதல் வருவது .. ஒரு கட்டத்தில் இருவரும் பிரிவது ... இறுதியில் இருவரும் இணைவது இப்படி எல்லாமே விதியால்தான் நடப்பது போல திரைகதை அமைத்திருப்பார்கள் ...



ராணுவ வீரனுக்கு காதல் என்றால் என்னவெண்டு புரிய வைக்கும் காட்சி ... ஹீரோவை மலை உச்சியில் நிற்க வைத்து அவனிடம் ஹீரோயின் தன குழப்பத்தை அழுது கொண்டே சொல்லும் காட்சி , பிரிய முடிவு செய்ததும் railway stationலேயே பிரிந்து விட எண்ணி ஹீரோவை முதலில் வரும் ட்ரெயினில் ஏற்றி விட்டு தான் அடுத்த ட்ரெயினில் சென்று விடுகிறேன் என்று கூறிவிட்டு ஹீரோ ஏறிய ட்ரைன் கிளம்பியதும் அவனை பிரிய முடியாமல் ஓடி சென்று அந்த ட்ரெயினில் ஹீரோயின் ஏற , அதே நேரத்தில் ஹீரோ ஹீரோயினை பிரிய முடியாமல் அவளுடனே வந்துவிட எண்ணி ட்ரைனை விட்டு விழுந்து பிளாட்பார்மில் இருந்து கொண்டே ட்ரெயினில் ஏறிய ஹீரோயினை பார்த்து அழும் காட்சி என்று படத்தில் நெகிழ்ச்சியான காட்சிகள் நிறைய உண்டு ...

அதே  போல வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சிகளும் அதிகம் உண்டு ... ட்ரெயினில் ஒரு சிறுவன் தன அம்மாவின் லிப்ஸ்டிக் கொண்டு கிழித்த கோட்டை வைத்து இருவரும் விளையாடும் காட்சி பயங்கர குறும்பு ... ஹீரோவின் ஆசிரியரிடம் தான் கர்பமாக இருப்பதாக கூறி ஹீரோவை கிளாசில் இருந்து கூட்டி போய் அவனுடன் ஊர் சுற்றும் காட்சி செம யூத் புல் சீன...   
படம் முழுக்க பெரும்பாலும் இருவர் மட்டுமே .. சிறு வயதுதான் என்றாலும் உணர்ந்து செய்துள்ளார்கள். மொத்தத்தில்   நீங்கள் காதல் கதைகளை  விரும்பி  பார்க்கும் ரசிகர்  என்றால் நீங்கள் இதுவரை  அனுபவித்திராத  ஒரு புது உணர்வை இந்த படம் உங்களுக்கு கண்டிப்பாக கொடுக்கும்... 

My Sassy Girl - surely you feel good after watch this

Monday, September 6, 2010

சிந்து சமவெளி - பக்குவம் அடைந்தவர்களுக்கு மட்டும்...


இயக்குனர் சாமிக்கு ஒரு வேண்டுகோள் ,  உங்களுக்குள் ஒரு நல்ல இயக்குனர் இருக்கிறார் ... யார் என்ன சொன்னாலும் சரி உங்களின் இந்த படத்தை பார்க்கும் பொழுது எனக்கு தோன்றிய விஷயம் இது.. ஆனால் நீங்கள் எடுக்கும் கதை களம்தான் உங்கள் ஒட்டு மொத்த திறமைக்கும் பெரிய வில்லனாக இருக்கிறது... யாரும் சொல்ல துணியாத ஒரு கதையை சொல்லி இருக்கிறார்... அந்த கதையே ஒரு மாதிரியான வில்லங்கமான கதை என்பதால் குடும்பத்துடன் இந்த படத்தை யாரும் பார்க்க முடியாது... நான் பார்த்த திரை அரங்கில் இந்த படத்தை பற்றி தெரியாமல் மூன்று குடும்பங்கள் தங்கள் குழைந்தைகளுடன்  படம் பார்க்க வந்திருந்தார்கள் ... ஆனால் இடைவேளை முடிந்து வந்து பார்த்தால் மூன்று குடும்பங்களுமே எஸ்கேப்... பிறகு மருமகளுடன் உடலுறவு கொள்ளும் மாமனார் கதையை யார்தான் பார்க்க முடியும் குடும்பத்துடன் ... இயக்குனர் சாமியே இந்த படத்தை தன குடும்பத்தாருடன் அமர்ந்து பார்க்க முடியாது... அவரின் மனசாட்சிக்கே தெரியும் இந்த படத்தை தன மனைவி மற்றும் தன தகப்பனாருடன் பார்க்க முடியுமா என்பது...


நான் நாட்டில் நடக்கும் விசயங்களையே படத்தில் காட்டுகிறேன் , மக்களிடம் ஒரு விழிப்புணர்வை உருவாக்கவே இந்த படம் எடுத்தேன் என்று வாய் கிழிய பேசும் அவர் ஒரு முறை தன மகன் மற்றும் மருமகளுடன் இந்த படத்தை திரை அரங்கில் பார்க்கட்டும் , இந்த படத்தை குடும்பத்துடன் பார்க்க வந்தவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பது அப்பொழுதாவது அவருக்கு புரியும்...

படத்தில் மிகவும் ஆபாசமான காட்சிகள் எதுவும் இல்லை , ஆனால் படத்தின் கதையே ஆபாசமானதுதான் என்பதால் ஒரு பிட்டு படம் பார்க்கும் உணர்வே படம் முழுவதும் இருந்தது ... தனியாக படம் பார்க்க போன எனக்கே இப்படி என்றால் குடும்பத்துடன் வந்திருந்தவர்கள் நிலைமை ... கண்டிப்பாய் படத்துக்கு கூப்பிட்டு வந்த அந்த குடும்பத்தலைவனுக்கு அன்னைக்கு ராத்திரி பட்டினிதான்...   ஐய்யா விழிப்புணர்வு படம் எடுக்கும் புண்ணியவான்களே  உங்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள் நீங்க எப்படி வேணும்னாலும் படம் எடுங்க , ஆனால் தயவு செய்து இந்த மாதிரி படத்துக்கு படத்தை பற்றி தெரியாமல் குடும்பத்துடன் வருபவர்களை அனுமதிக்காதீர்கள்... பாவம் அவர்கள் .....


கதாசிரியராக சாமி பல படிகள் சறுக்கி சாக்கடையில் விழுந்திருந்தாலும்  இயக்குனராக ஒரு படி முன்னேறி இருக்கிறார் ...எனக்கு படத்தில் பிடித்தது முதல் நான்கு ரீலில் வரும் காதல் காட்சிகளும் , கடைசி இரண்டு ரீலில் வரும் கிளைமாக்ஸ் காட்சியும் தான்.... அதே போல் படம் முழுவது வரும் அனைத்து கதாபத்திரங்களின் மிகையற்ற நடிப்பும் அருமை .. குறிப்பாக  ஹீரோயின் முதல் படமாம் நம்ப முடியவில்லை , காதல் காட்சியில் குரும்புதனத்தையும் , கல்யாணத்திற்கு பின்னர் தன கணவனுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளில் காதலையும் , பின்னர் காமத்தையும் தன கண்களிலே கொண்டு வந்திருக்கிறார்... அதுவும் தன மாமனாருடன் நெருங்கி வந்த பின்னர், காம ருசி கண்ட பெண்ணின் உடல் அசைவை  தன் உடலில் யதார்த்தமாய்  காட்டி இருப்பார் அதிகம் ஆபாசம் இல்லாமல் ... நடிகர்களிடம் நடிப்பை வெளிக்கொண்டு வந்த விசயத்தில் இயக்குனர் ஜெயித்திருக்கிறார்.... சில காட்சிகளில் ஒளிப்பதிவு நம்மை ரசிக்க வைக்கிறது ... சுந்தர் c.பாபுவின் இசையில் கடைசியில் வரும் "தப்பு பண்ணாதவன் இருந்தால் என்ன செத்தா என்ன" என்ற குத்து பாட்டு தாளம் போட வைக்கிறது... இயக்குனர் ஒரு நல்ல கதையை கையில் எடுத்து இதே போன்ற ஒரு கூட்டணியுடன் அடுத்து படம் எடுத்தால் கண்டிப்பாக வெற்றி படம் கொடுக்கலாம்... 


நீங்க பிட்டு எதிர்பார்த்து போனா ஏமாந்து போய்டுவீங்க... நீங்க ரொம்ப நல்லவர் , கலாச்சார  காவலர் என்றால் படம் உங்களுக்கு கோபத்தை உண்டாக்கும்.... இந்த படம் முழுக்க முழுக்க முதிர்ச்சி அடைந்த மன நிலை உள்ளவர்களுக்கு மட்டுமே ... நீங்கள் அப்படி பட்டவர் என்றால் தாரளமாக இந்த படத்தை பார்க்கலாம்...

பி.கு: இந்த படம் பார்க்கும் பொழுது என் முன்னாள் ஒரு ஐம்பது வயது பெருசு ஒன்று அமர்ந்து படம் பாத்துகொண்டு இருந்தது .. படத்தில் அந்த மாதிரி காட்சிகள் வரும் பொழுதெல்லாம் தன்னுடைய செல்போனில் அதை ரெகார்ட் பண்ணி கொண்டு இருந்தது ...  படம் முடிந்ததும் அவரிடம்  படம் எப்படி இருந்தது என்று கேட்டேன் ... இந்த படத்தை நம்பி ஏற்கனவே நான் பதிஞ்சி வச்சிருந்த நெறைய பிட்டு படத்த அழிச்சிட்டேன்... ஹூம் அநியாமா ஏமாத்திட்டாணுக தே... பசங்க   என்று தியேட்டர்காரனின் அம்மாவையும் சேர்த்து திட்டி விட்டு போனார்...

Friday, July 9, 2010

உலக படம் - 13 going on 30

13 going on 30 , 2004 ஆம் வருடம் அமெரிக்காவில் வெளிவந்த romaantic comedy fantasy வகை படம் ... ஒரு பெண்ணின் ஆவி இரு வேறு உடலில் வாழும் கதைதான் இது ... இயக்கியவர்கள் Josh கோல்ட்ஸ்மித் & Cathy Yuspa . இதற்க்கு
 முன்னர் same plotல் சில படங்கள் வந்து இருக்கின்றன (wish upon a star, freaky
friday)... 1988இல் வெளிவந்த 14 Going on 30படமும் இதே கதைதான் ...



ஜென்னா ரிக் பதிமூன்று வயது பெண் ... பள்ளியில் அவளுக்கு இருக்கிற ஒரே ஒரு   friend matt மட்டுமே ... ஷ்கூல்லுல எல்லாரும் ஜோடியா சுத்திகிட்டு இருக்கிறப்ப அவ மட்டும் காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி தனியா இருப்பா ,.. அவ ஸ்கூல்ல ஒரு ரவுடி கும்பல் ஒன்னு இருக்கு .. பேரு six chicks , அதுல ஏழாவது chick கா சேர இவளுக்கு ஆசை ... காரணம் அவங்களுக்கு நெறைய பாய் பிரண்ட்ஸ் ... அதுல ஒருத்தன்தான் dyan , அவன்மேல் இவளுக்கு ஒருதலை காதல் ... அப்பத்தான் அவளுக்கு பிறந்தநாள் வருது ... அத கொண்டாட six chick கோஷ்டியையும் , dyan னையும் வீட்டுக்கு கூப்ட்டிட்டு போறா.. அங்க அவ பிரண்ட் matt அவளுக்கு தானே செய்த அவளோட கனவு வீட்டு மாடல் ஒன்றை பரிசாக தருகிறான் ... அதை ஒரு அறைக்குள் சென்று வைக்கிறாள் ... இதற்குள் பார்ட்டிக்கு வந்திருந்த six chixks குழுவை சேர்ந்த ஒருத்தி அவளுக்கு ஒரு விளையாட்டை அறிமுகம் செய்கிறாள் ... அவளை ஒரு அறைக்குள் வைத்து பூட்டி விட்டு , அங்கு இருக்கும் உணவு பொருட்களை எல்லாம்
எடுத்து சென்று விடுகிறார்கள் .. சிறிது நேரம் கழித்து அங்கு வரும் matt பூட்டியிருக்கும் கதவை திறந்து அவளை விடுவிக்கிறான் ... யாரும் பார்ட்டியில் இல்லாததை கண்டு கோபப்படும் அவள் , எல்லாத்துக்கும் காரணம் நீதான், அவர்களை ஏதாவது சொல்லி நீதான் விரட்டி இருப்பாய்  என்று சொல்லி அவனை திட்டி வெளியே அனுப்பி விடுகிறாள் ... பின்னர் அந்த அறைக்குள் சென்று நான் சிறு பெண்ணாக இருப்பதால்தான் யாரையும் என்னால் கவர முடியவில்லை  எனக்கு மார்பகங்கள் சிறிதாய் இருக்கு , எடுப்பான உடல் அமைப்பு இல்லை , dyan என்னை விரும்பாததற்கு காரணம் இதுதான் .. நான் உடனே முப்பது வயது பெண்ணாக மாற வேண்டும் என்று அழுது கொண்டே தூங்கி விடுகிறாள் ...




மறு நாள் காலை எழுந்து பார்த்தால் முப்பது வயது பெண்ணாக இருக்கிறாள் .. வீடு புதிதாக இருக்கிறது ... அவளுடன் வேறு ஒரு ஆண் தங்கி இருக்கிறான் ... அவளின் பெற்றோர்கள் அவளுடன் இல்லை .. அவளுக்கு என்ன நடந்தது என்றே ஞாபகம் இல்லை ... அவளுக்கு ஞாபகம் இருப்பதெல்லாம் அவள் கொண்டாடிய பிறந்த நாள் விழாவில் நடந்த நிகழ்ச்சிகள் மட்டுமே ... 
 
ஒருவழியாக அவளுடன் இருக்கும் ஆண் dyan என்றும் .. அவள் அவளுக்கு மிகவும் பிடித்த poise magazine அலுவலகத்தில் chief editorஆக வேலை செய்கிறாள் , அங்கே அவளின் நெருங்கிய தோழி six chicks குழுவின் தலைவி lizy என்றும் தெரிந்து கொள்கிறாள் ... ஆனால் அலுவலகத்தில் அவளை யாரும் மதிக்கவில்லை ... காரணம் அவளுக்கும் lizy யின் கணவருக்கும் கள்ள தொடர்பு இருந்திருக்கிறது ... மேலும் அவள் போட்டி பத்திரிகை sparkle உடன் கள்ள தனமாக தொடர்பு வைத்து இங்கு இருக்கும் செய்திகளை அங்கே சொல்லி பணம் சம்பாதித்து கொண்டு இருந்திருக்கிறாள் ... அதனால் சில முறை வேலையை விட்டு தற்காலிகமாக நீக்கவும்பட்டிருக்கிறாள்.... மேலும் தன பெற்றோர் சம்மதம்

இல்லாம் dyan உடன் கல்யாணம் ஆகாமல் வாழ்வதால் அவர்களும் இவளுடன் பேசுவதில்லை ... இப்படி அவள் ஆசைப்பட்ட ஆண் , தோழிகள் , வேலை என்று எல்லாம் இருந்தும் தான் யாரிடமும் நல்ல பேர் வாங்கவில்லை என்று வருத்தபடுகிறாள் ...
 
 


தன் நண்பன் matt எங்கு இருக்கிறான் என்றும் தெரியவில்லை .. அவனை தேடி கண்டுபிடிக்கிறாள் .. நம் நட்பு இன்னமும் தொடர்கிறதா என்று அவனிடம் கேட்கிறாள் ... அவன் அந்த பிறந்த நாள் பார்ட்டிக்கு பிறகு நீ என்னுடன் பேசவே இல்லை .. நானும் வேறு பள்ளிக்கு மாறி சென்று விட்டேன் .. அதன் பிறகு இப்பொழுதுதான் உன்னை சந்திக்கிறேன் என்று சொல்கிறான் ... இனிமேல் உன்னை விட்டு செல்ல மாட்டேன் என்று மீண்டும் அவனின் நட்பு வட்டத்திற்குள் வருகிறாள் ...


 இந்நிலையில் அவள் அலுவலகத்தில் ஒரு பிரட்சனை... magazine circulation குறைந்து விடுகிறது ...  magazine parkle இவர்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்கிறது ... இதனால் magazine circulationஐ பெருக்க வேண்டி redesign செய்ய சொல்கிறார் முதலாளி .. அந்த பொறுப்பு இவளுக்கும் , அவளின் தோழி lizyக்கும் கொடுக்க படுகிறது ... matt ஒரு புகைப்பட கலைஞன்.. அவனுடன் சேர்ந்து ஒரு நல்ல டிசைன் ஒன்றை ரெடி பண்ணுகிறாள் ... lizy கொண்டு வரும் டிசைன் நிராகரிக்கப்பட்டு இவளின் டிசைன்ஐ ஓகே செய்கிறார் முதலாளி ... இதனால் கோபம் கொண்ட lizy அந்த டிசைன்ஐ sparkle கம்பனிக்கு திருடி விற்று விடுகிறாள் ... ஜென்னாவிருக்கும் sparkle கம்பனிக்கும் ஏற்கனவே இருக்கும் தொடர்பை வைத்து   lizy திருட்டு பட்டத்தை இவள் மேல் கட்டி விடுகிறாள் ... மேலும் இவளை பற்றி mattடிடம் தவறாக போட்டு கொடுக்கிறாள் .. matt இவளை விட்டு பிரிகிறான் ... வேலையை விட்டு தூக்க படுகிறாள் ... dyan வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு போய் விடுகிறான்... யாரும் இல்லாமல் அனாதையாக நிற்கிறாள் ... இந்நிலையில் matt திருமணம் செய்து கொள்ள போகிறான் என்பதை தெரிந்து கொண்டு அவன் வீட்டிற்கு செல்கிறாள் .. அங்கே matt டின் திருமணம் நடந்து கொண்டு இருக்கிறது அவனிடம் நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லி அழுகிறாள் ... அவன் இவளை நம்பவில்லை ... அவளை நிராகரித்து விட்டு திருமணம் செய்து கொள்கிறான் ... இவள் அந்த வீட்டின் ஒரு அறைக்குள் சென்று அழுகிறாள் .. அங்கே matt அவளுடைய பதிமூன்றாவது பிறந்தநாளில் பரிசாக தந்த அந்த வீடு இருக்கிறது .. அதை பார்த்தவுடன் அவளுக்கு அழுகை பீறிடுகிறது ... நான் மீண்டும் பதிமூன்று வயது பெண்ணாகவே மாற வேண்டும் என்று சொல்லி அழுகிறாள் ...அடுத்த காட்சியில் அவள் கதவை திறந்து கொண்டு வெளியே வருகிறாள் .. அங்கே பதிமூன்று வயது matt நான் எந்த தவறும் செய்யவில்லை , அவர்கள்தான் பார்ட்டி முடியும் முன்னரே சென்று விட்டார்கள் என்று அவளிடம் மன்னிப்பு கேட்கிறான் ... அவள் எதுவும் சொல்லாமல் அவனை கட்டி பிடித்து கொள்கிறாள் ... படமும் அத்துடன் முடிந்து விடும் ...

படத்தோட ரெண்டாவது சீன்ல ஹீரோயின் அவ வீட்டுக்கு வருவா... உடனே அவங்க அம்மா , அந்த பேப்பேர எல்லாம் எடுத்து வெளிய போடுன்னு சொல்லுவாங்க ... நான்கூட வீட்ட கூட்டி சுத்தம் பண்ண சொல்லுறாங்க போல இருக்குன்னு நெனச்சா , அந்த பொண்ணு சட்டுன்னு அவ போட்டிருக்குற பணியன்குள்ள கையவுட்டு பேப்பெரா எடுத்து வெளிய போடும் .. நான் அதுக்கு முந்தின சீன்லதான் ஆகா எவ்வளவு பெருசா இருக்குன்னு ரசிசிக்கிட்டு இருந்தேன் ... அப்புறம்தான் தெரிஞ்சது நாம இவ்வளவு நேரம் பேப்பர பாத்து ஜொள்ளு விட்டிருக்கோம் அப்படின்னு... நம்ம ஊருலயும் பெருசா காட்டுறது எல்லாம் இப்படிதான் இருக்குமோ? எத்தன தடவ பேப்பர பாத்து ஜொள்ளு விட்டேனோ?,  நம்ம குஷ் , நமீ, சிம்ரன் ஆண்டிகளுக்குதான் வெளிச்சம் ....


திடீர்னு பெரிய மனுசியா மாறுன ஹீரோயின் கண்ணாடில தன்னோட முகத்த பாத்து பீதி ஆகி குப்புற விழுந்துடுவா .. விழுந்திட்டு அவளோட மார்பகங்களை பாப்பா , ரெண்டும் பெருசா இருக்கும் ... உடனே சந்தோசத்துல ரெண்டையும் கையாள பிடிச்சி அளந்து பாத்து சந்தோசபடுவா.... இப்படி படம் முழுவதும் அப்பப்ப மனசு விட்டு சிரிக்கிற மாதிரி ஜாலியா கொண்டு பொய் இருப்பாரு இயக்குனர் ...

படத்தோட கதைய படிச்சிட்டு இதுல நெறைய ஷகீலா மேட்டர் இருக்கும்னு தப்பு கணக்கு போட்டுறாதீங்க... படத்துல அந்த மாதிரி சீனே கெடையாது .. ரெண்டே ரெண்டு லிப் டு லிப் கிஸ் அவ்வளவுதான் (ஒரு இங்கிலீஷ் படத்துல இது கூட இல்லைனா எப்படிங்க?) ...

படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் நகைசுவையாகவே எழுதி இருப்பார் இயக்குனர் ... கதாநாயகி லிப்டுக்குள் சந்திக்கும் சிறுமி , அவளுடன் கள்ள தொடர்பு வைத்திருக்கும் தோழியின் கணவன் இப்படி ஒரே ஒரு சீன் வரும் நடிகர்கள் கூட நம்மை சிரிக்க வைக்கிறார்கள் ... அதே போல் படம் கிளைமாக்ஸ் சீன் வரும் வரை நமக்கு குழப்பமாகவே இருக்கும் , இவள் ஏன் பெரிய மனுசியாக மாறினால் , இடையில் என்ன நடந்தது , இவளுக்கு ஏன் எல்லாம் மறந்தது என்று ... ஆனால் இயக்குனர் ரொம்ப கூலா இதெல்லாம் கனவு மச்சி , கனவு அப்படின்னு கிளைமாக்சுல நமக்கு அல்வா குடுத்திருப்பாரு... ஆனா அந்த அல்வாவும் டேஸ்ட்டாத்தான் இருக்கு...

படத்தோட மைய கரு இவ்ளோதான் ... நாம எடுக்கிற முடிவுகள் .. நம்மளோட ஆசைகள் எப்பவுமே சரியா இருக்காது... நாமதான் எது உண்மை .. எது சரி அப்டிங்கிறத சரியா புரிஞ்சிகிட்டு சரியான முடிவு எடுக்க வேண்டும் .. ஒரு தடவை தப்பு பண்ணிட்டா அத சரி பண்ண வாழ்க்கை நம்ம அனுமதிக்காது... இத சீரியஸா சொல்லாம ரொம்ப காமெடியா சொல்லி இருக்கிறாரு இயக்குனர் ...



மெசேஜ் சொல்லுறேன்னு பயங்கர சீரியஸா படம் எடுக்குற இல்லைனா காமெடி படத்துல மெசேஜ் சொல்ல முடியாதுன்னு லாஜிக்கே இல்லாம படம் எடுக்கிற நம்ம ஊரு இயக்குனர்களே .. ஒரு நல்ல மெசேஜ்ஜ எப்படி காமெடியா சொல்லுறதுன்னு இந்த படத்த பாத்து தெரிஞ்சிக்கோங்க....


இந்த படமும் நம் இயக்குனர்களால் சுடப்பட்டுள்ளது ... நியூ படம் பாத்தவங்களுக்கு புரியும்...


இந்த மாதிரி ஒரு ஹீரோயின் oriented subject நம்ம ஊருல வருமா? வந்தாலும் நம்ம மக்கள் ரசிப்பாங்களா?

LinkWithin

Related Posts with Thumbnails