Followers

Copyright

QRCode

Saturday, November 6, 2010

வா குவாட்டர் கட்டிங்- “கல்யாணி ஸ்ட்ராங்க் பீர்”



காந்தி ஜெயந்தி அன்னைக்கு சரக்கு அடிக்க ஆசைபட்டு சரக்கு கெடைக்காம ஊருள தெரு தெருவா அலஞ்ச  அனுபவம் இருக்கா உங்களுக்கு? ரொம்ப நேர நீண்ட போராட்டதிர்க்கு பின்னாடி எப்படியாவது ஒரு குவாட்டர தேத்தி பரபரப்பா அத அடிச்சி முடிச்சிருக்கீங்களா? அப்படி நீங்க குடிச்சி முடிச்சி போதையில மல்லாக்க படுத்திருக்கும் போது குவாட்டர தேத்த நீங்க பட்ட கஷ்டத்தையே  ஒரு படமா எடுக்கலாமேண்ணு எப்பவாவது உங்களுக்கு தோனி  இருக்கா? ஆனா புஷ்கர் காயத்திரி ஜோடிக்கு இது மனசுல தோனி இருக்கு நான் மேல சொன்ன குவாட்டர் மேட்டர்தான் இவங்க எடுத்திருக்கிற படத்தோட கதையே...

 .... இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் எத்தனையோ உறவுகளை பற்றி படம் எடுத்து விட்டார்கள் .... ஆனால்  வேலை வெட்டி இல்லாத ஒரு தமிழக இளைங்கனுக்கும் குவாட்டருக்கும் இடையே இருக்கும் ஒரு பாசபிணைப்பை முதன் முறையாக படமாக எடுத்ததுக்காக படத்தோட இயக்குனர்களுக்கு பெரிய நன்றி சொல்லியே ஆகனும்...

ஒரே ஒரு இரவில் நடக்கும் கதையை காமெடியாகவும் , கொஞ்சம் லாஜிக் கலந்தும் கொஞ்சம் சுஸ்பென்ஷாகவும் அதே சமயம் விறுவிறுப்புமாகவும் சொல்ல முடியுமா? .... முடியும் வா குவாட்டர் கட்டிங் பாருங்கள்... நீங்களே இதை வழிமொழிவீர்கள்  ....

படம் ஆரம்பத்தில் இருந்து காமெடி சரவெடிதான் ... சிவாவும் சரனும் படம் முழுக்க காமெடி பட்டாசுகளை கொழுத்தி போட்டுக்கொண்டே இருக்கிறார்கள் ... நமக்குதான் சிரிக்க நேரமில்லை ... ஒரு காமடிக்கு சிரித்து  முடிப்பதற்க்குள்  அடுத்த காமெடி என்று காமெடி சரம் பின்னி இருக்கிறார்கள்  .... வசனம் யாரென்று நான் கவனிக்கவில்லை ... அசால்ட்டா டைமிங் கைகூடி இருக்கு வசனகர்த்தாவுக்கு ....இவரின் திறமைக்கு  செத்தவன் ஆவியா வந்து பேசுர அந்த  வசனம் (தீஞ்சி போறதுக்கு முன்ன தோசைய திருப்பு ஓஞ்சி போறதுக்கு முன்ன ஆசைய நெரப்பு) ஒரு சோறு ...

குவாட்டரை கட்டிங் கட்டிங்காக அடிக்கும் போது .. முதல் ரவுண்ட் அடித்து முடித்ததும் சுத்தமாக நமக்கு சுதி ஏறவில்லை என்றால்  சரக்கு டூப்ளிகேட் சரக்கோ என்று ஒரு சந்தேகம் வரும் ... ஆனால் ரெண்டாவது ரவுண்ட் அடித்து முடித்ததும் முதல் ரவுண்டுக்கும் சேர்த்து போதை தலைக்கு ஏறும் ... இந்த படமும் அப்படிதான் முதல் பாதியின் கடைசி அரைமணி நேரம் படம் கொஞ்சம் மொக்கையாக போகும் போது இந்த குவாட்டர் கட்டிங் மீதும்  நமக்கு சந்தேகம் எழும் .. ஆனால் ரெண்டாம் பாதி ஒரு ஒரிஜினல் மிலிட்டரி ரம் அடித்த உணர்வை பார்க்கும் நமக்கு தரும் ...

சிவா தமிழ் படத்தில் என்ன செய்தாரோ அதேதான் இங்கும் ... additionalலா கோவை தமிழ் பேசி நடித்திருக்கிறார் .... அவரின் கோவை ஸிலாங்க் சில இடங்களில் காண்ட்ராவியாக .இருந்தாலும் ஏற்று கொள்ள முடிகிறது ... படத்தில் இவரை விட அதிகம் ஸ்கோர் பண்ணுகிறவர் இவரது வருங்கால மாமாவாக வருகிற சரண்தான்.... அரசியல்வாதியிடம்  சைவ பிரியாணி கேட்கும் காட்சி , விலைமாந்தர்களிடம் மாட்டி கொண்டு ஐட்டம் சாங்கில் ஐட்டமாக நடனம் ஆடும் இடம் என்று கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சிக்சர் அடித்திருக்கிறார் ... இவரை சுற்றி வரும் சஸ்பென்ஷ் முடிச்சி அவிழும் இடம் வெடிசிரிப்பு...

லேகா மக்கு மாணவியாக வந்து , இடைவேளைக்கு பின்னர் தற்கொலைக்கு முயன்று சிவா சரணால் காப்பாற்றபட்டு குவாட்டர் சேசிங்கில் அவர்களுடன் இணைந்து கொள்கிறார் .... இவரை வைத்தும் இயக்குனர் டைமிங்கில் காமெடி பண்ணி இருக்கிறார்... இவர் ஹீரோயின்தான் என்றாலும் படத்தில் காதல் காட்சிகளில்லை...

இவ்ர்களை தவிர்த்து அந்த சுயேட்சை அரசியல்வாதி , ஸ்கூட்டர் கார் என்று பார்க்கும் எல்லா வண்டிக்கும்  தீ வைக்கும் சேகர் (அதர்க்கு இவர் சொல்லும் காரணம் அக்மார்க் “தமிழ்படம் எஃபக்ட் ),சின்ன அண்ணன் , பெரிய தம்பி , பெண் எஸ்.ஐ., அப்பா மகன் என்று இரட்டை வேடத்தில் வரும் வில்லன் என்று படத்தில் வரும் பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் அருமையாக டெவளப் செய்யபட்டுள்ளன.... படத்தில் ஆர்யாவும் ஒரு காட்சியில் வந்து போகிறார் ...       

இசை G.V.பிரகாஷ் ... பாடல்களில் ஓரம்போ வாசனை ..பின்னணி இசை சில இடங்களில் காதுக்கு இனிமை சில இடங்களில் அதே காதில் ரத்தம் ... கிளைமாக்ஸில் வில்லன் குரூப் ஹீரோவை துரத்தும் சேஷிங்க் ஸீனில்  ஐட்டம் சாங்கை நுழைத்திருப்பது இயக்குனரின் புத்திசாலிதானம் ...

 வெகு சில இடங்களில் மொக்கையாக வரும் வசனங்கள், எஸ் எஸ் ம்யூசிக் கிரெக் வரும் காட்சிகள் , சில கார் சேஷிங் காட்சிகள் என்று ஒரு சில பொறுமை சோதிப்புகளும் அப்பப்ப படத்தில் வந்து செல்லும் ... அதை மட்டும் பொறுத்து கொண்டால் இந்த குவாட்டர் கட்டிங் ,, கொடுத்த காசுக்கு கட்டிங் அளவுக்கு இல்லைனாலும் புல் பீர் அளவுக்குனாலும் கிக் கொடுக்கும் ...

 உங்களுக்கு தமிழ்படம் ஓரம்போ போன்ற படங்கள் பிடிக்கும் என்றால் இதை ஒருமுறை தாராளமாக பார்க்கலாம் ... குழந்தைகளுடனோ இல்லை பெண்களுடனோ இந்த படத்திர்க்கு போய் விடாதீர்கள் அவர்களுக்கு என்று இந்த படத்தில் எதுவுமே இல்லை டாஸ்மாக் பார் மாதிரியே ....

மொத்தத்தில் வா குவாட்டர் கட்டிங்- “கல்யாணி ஸ்ட்ராங்க் பீர்


9 comments:

Philosophy Prabhakaran said...

பதிவுலகத்திலேயே இந்த படத்துக்கு பாசிடிவ் விமர்சனம் எழுதிய ஒரே ஆள் நீங்கதான்... என் விமர்சனத்தை படியுங்கள்...

http://philosophyprabhakaran.blogspot.com/

Prasanna Rajan said...

இருக்கறதுலயே மட்டமான பீர் ‘கல்யாணி’ தான் பாஸ். இந்த படத்தை அதோட கம்பேர் பண்ணி இருக்கீங்களே?/

எஸ்.கே said...

குழப்புறீங்க! சிலர் நல்லா இல்லங்றாங்க! சிலர் நல்லா இருக்குங்கிறாங்க! ஒன்னும் புரியலை!

NKS.ஹாஜா மைதீன் said...

nalla comedy movie..is it?

பாலா said...

நான் பார்த்ததிலேயே மகா மட்டமான ஒரு படம் இதுதான். ஒரு வேலை மப்புல போயி பாத்தீங்களோ?

"ராஜா" said...

@ philosophy prabakaran
தல எனக்கு பாசிட்டாவாக தெரிந்ததால் அப்படியே எழுதினேன்

@prasanna rajan
அப்படியா ஹி ஹி எனக்கு பீர பத்தி எல்லாம் ஏதும் தெரியாது தல

@SK
தல உங்களுக்கு அவங்க போடுற டிரைலர் பிடித்திருந்தால் போங்க .. படமும் அது மாதிரிதான்

@NKS Kajamydeen
அதே அதேதான்

@பாலா
மொக்கையை மொக்கை என்று சொல்லியே மொக்கை போட்ட விதம் எனக்கு பிடித்திருந்தது ... இந்த படத்துல போய் கதையவோ இல்லை யதார்த்தத்தையோ , லாஜிக்கையோ தேடினால் எதுவும் கிடைக்காது... படம் முழுவதும் மொக்கை மொக்கை மொக்கை காமெடிகள் மட்டுமே ... நான் இதை எதிர்பார்த்து அதே மன நிலையோடு சென்றதால் ரசிக்க முடிந்தது....
குறிப்பாக second half

Yoganathan.N said...

படத்திற்கு negative reviews அதிகம் போல. நான் இன்னும் பார்க்கவில்லை.
எனக்கு ஓரம் போ பிடித்திருந்தது. :)

"ராஜா" said...

//படத்திற்கு negative reviews அதிகம் போல.

வித்தியாசமா மேக்கிங்கில் படங்கள் வரும் போது இப்படி எல்லாம் வருவது இயல்புதானே .... இன்னும் ஆறு மாதம் கழித்து ஒத்து கொள்ளுவார்கள் படம் நன்றாக இருக்கும் என்று ... ஓரம் போவும் இப்படிதானே ....

ALHABSHIEST said...

பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்கும்
film name is "aayiram pookal malaraddum.Music director are Laxmikanth -Piyarilal.Not Ilaiyaraja
Ilaiyararaja has composed a music for other film named "aayiram pookal malaraddum".But that film yet not released.Later this film (which one has the song"பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்கும்")released on name Aayiram pookal malaraddum.

LinkWithin

Related Posts with Thumbnails