Followers

Copyright

QRCode

Friday, November 12, 2010

இளை(சை)யராஜா... மைனா ... என்கவுன்ட்டர்

.

நான் இந்த பிளாக் ஆரம்பித்த நாளில் இருந்து எனக்கு மிகவும் பிடித்த ஒருவரை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டே இருந்தேன் ... ஆனால் அவரை பற்றி நான் எழுதுவது த்ரீ இடியட்ஸ் படத்தை நம்ம பேரரசு விமர்சனம் செய்வது போல காமெடியாக இருக்கும் என்பதால் எழுத தயக்கமாக இருந்தது ... அவர் தமிழ் சினிமாவின் “இசை ராஜா “ இளையராஜா அவர்களை பற்றிதான் ...எனக்கு இசையை பற்றி எதுவுமே தெரியாது இசையை ரசிக்க தெரியும் என்பதை தவிர ...இந்த பதிவில் நான் அவரை பற்றி எதுவும் எழுதவில்லை .... இனி அப்பப்ப பதிவுகளில்  எனக்கு பிடித்த அவரின் சில பாடல்களை பற்றி அவை என்னை எப்படி எல்லாம் ரசிக்க வைத்து , உருக வைத்து இன்னும் என்னவெல்லாம் சொல்ல முடியாத வேறு எதுவும் தரமுடியாத பல நுண்ணிய உணர்வுகளை சொல்லால் விளக்க முடியாத அனுபவங்களை எனக்குள் தந்து கொண்டு இருக்கின்றன என்பதை பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன் அந்த இசை ராஜாவுக்கு பெயரில் மட்டுமே ராஜாவாக இருக்கும் நான் செய்யும் சின்ன மரியாதை ....

பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்கும்

இந்த பாடல் இடம் பெற்ற படம் எது என்று தெரியவில்லை ... ஆனால் அது மோகனும் நதியாவும் நடித்த ஒரு அட்டு  படம் என்பது மட்டும் தெரியும் ... கிராமபுரங்களில் பொழுது சாயும் நேரங்களில் சாரல் மழை பொழியும் வேளையில் தனியாக மரங்கள் நிறைந்த நந்தவனத்தில் நடக்கும் உணர்வை இந்த பாடல் ஆரம்பிக்கும்  போதே கேட்கும் நம் மனதில் பதியவைத்து விடும்... பாடலின் ஆரம்பத்தில் வரும் புல்லாங்குழல் இசை மழைக்கு முன்னர் வீசும் குளிர் காற்று நம் உடலில் முதன் முதலில் படும் பொழுது நம் உடம்பில் ஆதி முதல் அந்தம் வரை ஒரு சிலிர்ப்பு உருவாகுமே அதே சிலிர்ப்பை கேட்கும் ஒவ்வொரு முறையும் உருவாக்கி கொண்டே இருக்கும்....அந்த புல்லாங்குழல் பீட் முடிந்தவுடன் ராஜாவின் இசை மழை ஆரம்பம் ஆகி விடும் ... மழை வந்தால் கூடவே வரும் மண்வாசனை நம் சுவாசத்தை சிறை பிடிப்பதை போல இந்த பாடலில் ராஜாவின் ராகத்தை துளிக்கூட பிசிராமல் பாடி இருக்கும் சித்ராவின் குரல் பாடல் ஓடும் ஏழு  நிமிடங்களும் நம் மனதை வேறு எங்கும் சென்று விடாமல் ஒரே இடத்தில் குவிய வைத்து சிறை பிடித்து விடும் ....எப்பொழுதாவது நாம் ஐடிலாக இருக்கும் பொழுதோ இல்லை பேருந்து பயணங்களின் பொழுதோ திடீரென்று நம் மனதில் தோன்றும் நம் சிறுவயது ஞாபகங்களில் நாம் மூழ்கி போனால் எப்படி ஒரு ஐந்து நிமிடங்கலாவது நாம் இந்த உலகத்தை மறந்து நம்மை சுற்றி இருக்கும் விசயங்களை மறந்து மெய்மறந்து அந்த நினைவுகளில் மட்டுமே லயித்து இருப்போமோ அப்படி ஒரு அனுபவத்தை , சூழலை இந்த பாடல் உருவாக்கி விடும் ....    

       (இந்த பாடலை சின்ன வயசில் கேட்ட பொழுதில் இருந்தே எனக்கு மிகவும் பிடிக்கும் ... என் குடும்பத்தில் இருக்கும் அனைவரிடமும் சிறுவயதில் இருந்தே விசாரித்து வருகிறேன்... யாருக்கும் இந்த பாடலை பற்றிய விபரம் தெரியவில்லை ... ஒரு முறை இளையராஜா ஹிட்ஸ் என்னும் சிடி வாங்கிய போது அதில் இந்த பாடல் இருந்தது அதனாலேயே நான் இளையராஜாவின் பாடல் என்று நினைத்திருந்தேன் .. தவறை சுட்டி காட்டிய கவிதைகாதலன் , சிவா மற்றும் அண்ணன் கேபிள் சங்கர் அவர்களுக்கும் நன்றி ...)

கோடம்பாக்க தீபாவளி...


இந்த வருடம் கோடம்பாக்கத்தை பொறுத்தவரை தீபாவளி கொஞ்சம் டல்தான் ... மொத்தமே நான்கு படங்கள்தான் ரிலீஸ்.  அதுவும் பெரிய இயக்குனர்களின் படமோ இல்லை நடிகர்களின் படமோ இல்லை ... குவாட்டர் கட்டிங் கொஞ்சம் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது .. மைனாவை வழக்கம் போல சில பெரிய தலைகள் ஏகத்துக்கும் பாராட்டி செயற்கையாக ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தனர்... உத்தமபுத்திரன்  தனுஷ் நடித்த படம் என்ற வகையில் மட்டுமே மக்களால் பார்க்கபட்டது ... இன்னொன்று எல்லா தீபாவளிக்கும் ஒரு படம் கொடுத்தே ஆகும் ஆக்சன் கிங் அர்ஜூனின் படம் ... இப்படி ஓலை வெடிகள் மட்டுமே இந்த வருடம் திரையில் வெடிக்க தயாராக இருந்தன ... இதில் மைனாவிர்க்கு ஏகத்துக்கும் பாராட்டு பாத்திரங்கள் வாசிக்கபட்டாலும் கலெக்ஷன் இன்னும் எகிறவில்லையாம் .... சில இடங்களில் ட்ராப் ஆகிக்கொண்டு இருக்கிறதாம் .... இன்னமும் பல எதிர்மறையான விமர்சனங்களை தாண்டி டீஸெண்டான வசூலை கொடுத்து கொண்டிருக்கிறதாம்... வல்லக்கோட்டை வசூல்கொட்டையாக இல்லையென்றாலும் போட்ட காசை எடுத்து விடலாம் என்ற அளவில் ஓடிக்கொண்டீருக்கிறதாம்... இந்த தவளைகள் ரேசில் முன்னாடி போய் கொண்டிருப்பது உத்தமபுத்திரன்தானாம்...  மொக்கை என்று அனைவராலும் சொல்லபட்டாலும் பல நாட்களுக்கு பிறகு சிரிக்க வைத்திருக்கும் விவேக் காமெடியால் படம் பிழைத்து விட்டது... ஆக மொத்தம் வெடிக்க வந்த ஓலை வெடிகளில் எதுவும் புஷ்ஷாக போகவில்லை... அணுகுண்டுகளாய் வந்து எல்லாம் வெடிக்காமல் போவதார்க்கு இந்த ஓலைவெடிகளே பரவா இல்லை என்றே தோன்றுகிறது ...

தீபாவளி ஸ்பெஷல் – என்கவுன்ட்டர்


வெடிச்ச வெடியில சும்மா தமிழ்நாட்டையே அதிர வச்ச வெடி , நம்ம  போலீஸ் வெடிச்ச என்கவுன்ட்டர் வெடிதான்... பத்து வயசு  சிறுமியை  மானபங்கபடுத்தின(கேவலபட்ட ஜென்மமா இருப்பான் போல , அதான் காசு கொடுத்தா எத்தன கெடைக்கும் , அங்க போயி வேலைய பாத்திருக்க வேண்டியதுதான ) வழக்கில் குற்றவாளியை போலீஸ் என்கவுன்ட்டர் செய்திருக்கிறார்கள் .. பாராட்டபட வேண்டியதுதான்... ஆனால் எனக்கு இதில் சில சந்தேகங்கள் உண்டு ... ஊருள பத்து பதினஞ்சி கொலை பண்ணுணவனேல்லாம் ஜாலியா சசுத்திட்டு  இருக்க ஒரே ஒரு கொலை  பண்ணுண இவனை போலீஸ் போட்டு தள்ள காரணம் என்னவாக இருக்கும் என்பதில்தான் என் சந்தேகமே ... உண்மையிலேயே அவர்கள் இவனின் இந்த கீழ்தரமான விசயத்திர்க்காக போட்டு தள்ளி இருந்தால் சந்தோசம்தான் .... ஆனால் மண்டையை உடைத்த கல்லை வைத்து அந்த கல்லை  எரிந்தவனை பிடித்து விடலாம் என்ற சூழலில் எரிந்தவனை காப்பாற்ற அந்த கல்லை உடைத்திருக்கிறார்களா? ஏன்  என்றாள் இது இந்தியா  இங்கு எதுவேண்டுமானாலும் நடக்கலாம் ... போபாலில் லட்சக்கணக்கான மக்கள் உயிர் விட்ட போது அதர்க்கு காரணமானவனை மக்கள் முன்னாள் நிறுத்தி தண்டிக்காமல் அவன் தப்பி செல்ல உதவி  செய்த மகா உன்னதமான தேசம் அல்லவா இது.. அதற்காக இவனை என்கவுன்ட்டர் பண்ணியது தவறு என்று சொல்லவில்லை .. நம்  நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகளின் பழைய வரலாறுகளை எல்லாம் பார்க்கும் போது எனக்கு இப்படி எல்லாம் சந்தேகம் வந்து விட்டது ...

சிலர் இந்த என்கவுன்ட்டர் விஷயத்தில் மனித உரிமைகளை பற்றி எல்லாம் பேசுகிறார்கள் ... பத்து வயசு சிறுமியை கற்பழிப்பதுதான் மனித உரிமையா? அந்த உரிமையை அவன் செய்ததர்க்கு அவனுக்கு தண்டனை கொடுக்க கூடாதா? மீறி கொடுத்தால்  அது மனித உரிமை மீறலா? எனக்கு தெரிந்து இந்த என்கவுன்ட்டர் என்னும் ஆயுதத்தில் இருக்கும் ஒரே ஒரு ஆபத்து அதை தவறாகவும்  பயன்படுத்தி விடலாம் என்பதில்தான்... யோசித்து பாருங்கள் ஏதோ ஒரு பெரிய அரசியல்வாதியின் துணையோடு ஒரு ரவுடி ஒரு கொலை செய்து விடுகிறான் என்று வைத்து கொள்வோம்.. அந்த கொலை பெரிய பிரச்சனையை உண்டு பண்ணி விடுகிறது , போலீஸுக்கு வேறு வழியே இல்லை சீக்கிரம் கொலைக்காரனை பிடிக்க வேண்டும் .. அவர்கள் அந்த ரவுடியை பிடிக்க முடியாது , ரவுடியின் வேட்டி  கிழிந்தால் அந்த பெரிய மனுசனின் டவுசர் கிழிந்து தொங்கி விடும் .. இந்த நேரத்தில் போலீஸ் உங்களையோ இல்லை என்னையோ இல்லை நம்மை போல ஒரு அப்பாவியையோ சந்தேகத்தின் பேரில் கைது செய்து , இரண்டு மூன்று போலி சாட்சிகளை உருவாக்கி , பத்திரிக்கை துறையின் துணையோடு அவன்  குற்றவாளிதான்  என்னும் மாயையை மக்கள் மத்தியில் உருவாக்கி , நீதிமன்றத்திர்க்கு கொண்டு செல்லாமல் , போகும் வழியிலேயே என்கவுன்ட்டர் செய்து விடலாம் ... மக்களும் அந்த அப்பாவிதான் குற்றவாளி , நரகாசுரன் ஒழிந்தான் என்று நம்பி விடுவார்கள் ....
வீரப்பன் என்கவுன்ட்டர் செய்யபட்டான் ஆனால் அப்துல் கஜாப் இன்னமும் சிறையில் பிரியாணி தின்று கொண்டிருக்கிறான் .. காரணம் வீரப்பன் முதுகில் பல அரசியல்வாதிகள் ஒளிந்து இருந்தனர் , கஸாப் முதுகில் தீவிரவாதம் மட்டும்தான் இருக்கிறது... அதனால் அவன் என்கவுன்ட்டர் செய்ய படும் அளவுக்கு பயங்கரமான சமூக விரோதி கிடையாது... இதுதான் நம்நாடு..

எது எப்படியோ உண்மையிலேயே அவனை தண்டிக்க வேண்டும் என்பதர்க்காக மட்டும்தான் காவல்துறை இந்த என்கவுன்ட்டர் செய்து இருக்கும் என்றாள் “hats off tamil nadu police”

15 comments:

எஸ்.கே said...

கடத்தலுக்கு பின்னாலும் என்கவுண்டருக்கு பின்னாலும் பல விசயங்கள் ஒளிந்திருக்கலாம்!
பல சமயங்களில் இதுபோன்ற விசயங்கள் மூடி மறைக்கப்படுகின்றன ஏதோ சில காரணங்களால்!

ஆர்வா said...

மைனா எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.. 3 விதமான அலசல்கள். அருமை நண்பா

ஆர்வா said...

மைனா எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.. 3 விதமான அலசல்கள். அருமை நண்பா

THOPPITHOPPI said...

உண்மை ஒருநாள் வெளிவரும் பொறுத்திருந்து பார்ப்போம்

ஆர்வா said...

நண்பருக்கு ஒரு சின்ன திருத்தம்.

"பன்னீரில் நனைந்த பூக்கள்" என்ற இந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் உயிரே உனக்காக.. இந்தப்பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜா இல்லை.. லஷ்மிகாந்த் பியாரிலால். அப்புறம் இந்தப்பாடலை பாடியிருப்பது சித்ரா இல்லை.. S.ஜானகி அவர்கள்..

"ராஜா" said...

@ கவிதை காதலன்

நன்றி நண்பரே படம் பெயர் எது என்று தெரியாததால் நேர்ந்த தவறு இது ... சுட்டி காட்டியமைக்கு நன்றி ...

"ராஜா" said...

@ எஸ்.கே

//பல சமயங்களில் இதுபோன்ற விசயங்கள் மூடி மறைக்கப்படுகின்றன ஏதோ சில காரணங்களால்

ஆம் நண்பரே நாம்தான் கடைசியில் ஏமாளிகலாகிறோம்

"ராஜா" said...

@ THOPPITHOPPI

எனக்கு தெரிந்து வெளிவருவதற்கு வாய்ப்பே இல்லை ... தகவல் அறியும் உரிமை சட்டத்தில் நாம் இதை தெரிந்து கொள்ள முடியுமா?

மாணவன் said...

மூன்று விதமான பிரிவுகளில் அருமையாக எழுதியுள்ளீர்கள்

பகிர்ந்தமைக்கு நன்றி

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...

NaSo said...

நண்பரே ஒரு பாடலைக் கேட்கும் பொது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சூழல் நினைவு வரும். பன்னீரில் நனைந்த பூக்களை நீங்கள் விவரித்த விதம் அருமை.

NaSo said...

//கஸாப் முதுகில் தீவிரவாதம் மட்டும்தான் இருக்கிறது... அதனால் அவன் என்கவுன்ட்டர் செய்ய படும் அளவுக்கு பயங்கரமான சமூக விரோதி கிடையாது... இதுதான் நம்நாடு..//


சரியா சொன்னீங்க!

Cable சங்கர் said...

panneeril ninaintha pookal pattu patri sollalam endru ninaitheen.. athaRkul kavithaiyin kathalan sollivittar

"ராஜா" said...

@ cable sankar

tanx sir for your first comment on my blog....

sorry for the mistake i will change it in my post

"ராஜா" said...

நாகராஜசோழன் MA said...
//கஸாப் முதுகில் தீவிரவாதம் மட்டும்தான் இருக்கிறது... அதனால் அவன் என்கவுன்ட்டர் செய்ய படும் அளவுக்கு பயங்கரமான சமூக விரோதி கிடையாது... இதுதான் நம்நாடு..//



ஆவன மாதிரி ஆளுகளையும் இந்த மாதிரி என்கவுன்ட்டர்ல போட்டா நல்லா இருக்கும்

"ராஜா" said...

மாணவன் said...
மூன்று விதமான பிரிவுகளில் அருமையாக எழுதியுள்ளீர்கள்

பகிர்ந்தமைக்கு நன்றி

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி..


நன்றி மாணவரே ....

LinkWithin

Related Posts with Thumbnails