நேற்று ajithfans.com தளத்தில் தீபாவளி அன்று தலயின் மங்காத்தா படத்தின் ஸ்டில் பேப்பரில் போட போகிறார்கள் என்று ஒரு நியூஸ் கொடுத்திருந்தார்கள்... அதை படித்தவுடன் எனக்கு ஒரு சின்ன எதிர்பார்ப்பு .... இன்று காலை எங்கள் கிராமத்தில் தினத்தந்தி பேப்பர் கிடைக்கும் ஒரே ஒரு இடமான டீ கடைக்கு ரொம்ப நாட்கள் இல்லை ரொம்ப வருசங்கள் கழித்து சென்றிந்தேன் , பேப்பர் பார்க்க ... அப்படி என்னதான் ஸ்டில் போட போகிறார்கள் என்று அறிந்து கொள்ளும் ஒரு அஜித் ரசிகனின் ஆர்வத்துடன்... ரஜினி படம் பாக்க தியேட்டருக்கு போனா அங்க ரஜினியே நேரில் வந்து நின்றாள் எப்படி இருக்கும்? அப்படி ஒரு இன்ப அதிர்ச்சி இன்று பேப்பரை பார்க்கும் பொழுது ... ஆம் தங்கத்த தேடி போன எனக்கு வைரமே கிடைத்தது ( இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று நினைத்தால் இப்படியே குளோஸ் பண்ணிட்டு வேறு வேலை பார்க்க சென்று விடுங்கள் ... இதுக்கு பிறகு இதைவிட ஒவறான(உங்களுக்கு) விசயங்கள் எல்லாம் வர போகிறது) ஆம் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் என்ற வாசகத்துடன் பில்லா 2 விளம்பரம் இருந்தது தினதந்தியில் .... பெரும்பாலும் அனைவரும் அதை பார்த்து இருப்பீர்கள் என்றாலும் என்னுடய பிளாக்கில் அதை போட்டே ஆக வேண்டும் என்ற காரணத்தினால் இதோ அந்த விளம்பரம் ....
இன்று காலையில் இருந்து என்னுடய நண்பர்கள் நிறைய பேர் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்ல கால் பண்ணி பேசினார்கள் .. எல்லோரும் கடைசியாக என்னிடம் சொன்ன விஷயம் என்னடா உங்க தல (சிலர் நம்ம தல) மறுபடியும் பில்லா எடுக்க போறாரா? என்பதுதான் ...
என்னிடம் பேசிய எல்லாரும் இருவகையான கருத்துகளைதான் மாறி மாறி கூறினார்கள் ... முதல் கருத்து பில்லாவே ஓடல... இதுல ரெண்டாவது பார்ட் வேறையா? உங்க ஆளுக்கு நேரம் சரி இல்லடா? ரெண்டாவது கருத்து உங்க ஆளு பில்லாவுக்கு பிறகு இப்பதாண்டா சரியான படம் எடுக்க போராறு... மறுபடியும் அதே மாதிரி ஸ்டைலிஷா எடுத்தா படம் கண்டிப்பா பெரிய ஹிட் ஆகும்டா?
முதல் விசயத்துக்கு முதலில் வருவோம் ... என்னிடம் நிறைய பேர் இதை சொல்லி இருக்கிறார்கள் .. பில்லா உண்மையிலேயே ஹிட் இல்லை ... அப்படி ஹிட் ஆனது மாதிரி காட்டிருக்காணுக என்று ... பில்லா 2 என்று ஒரு படம் எடுக்கபடுவதே பில்லா பிலாப் என்று இவர்கள் சொல்லுவது உண்மையில்லை என்பதர்க்கு பெரிய சாட்சிதானே ...யாராவது தோல்வி அடைந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முன் வருவார்களா? அதுவும் பில்லா எடுத்த அதே தாயாரிப்பாளர் மறுபடியும் பில்லா 2 எடுக்க போகிறார்... தோக்கிற குதிரை மேல யாரும் திரும்ப திரும்ப காசு கட்ட மாட்டார்கள் ... அப்படி ஒரு குதிரை மேல திரும்ப திரும்ப காசு கட்டுகிறார்கள் என்றால் அது கண்டிப்பாக ஜெயிக்கிற குதிரையாகத்தான் இருக்கும் .... இதை விட வேற என்ன வேண்டும் பில்லா மிக பெரிய வெற்றி பெற்று தயாரிப்பாளருக்கு பெரிய லாபம் பெற்று தந்த படம் என்பதர்க்கு... ஸோ பில்லா கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றி படம்தான்....
சரி நாம் பில்லா 2வுக்கு வருவோம் .. பில்லாவை சிலரால் ரசிக்க முடியாமல் போனதார்க்கு காரணம் அந்த படத்தின் கதை அவர்களுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனதினால்தான் ... அந்த படத்தை முதல் முறை பார்ப்பதே ரெண்டாவது தடவை பார்ப்பதை போன்றதுதான் ... இதில் சன் டீவீகாரன் செய்த சதி வயிற்றெரிச்சல் பிடித்த கேவலமான செயல் ... பில்லா படம் வெளிவரும் அன்று காலையில் ஏழு மணிக்கு பழைய ரஜினியின் பில்லாவை ஒளிபரப்பினார்கள் ... அது மட்டும் இல்லை பில்லா படம் வந்து அடுத்த அம்பது நாட்களுக்கு வாரம் ஒருமுறை ரஜினியின் பில்லா ஒளிபரப்பபட்டு கொண்டே இருந்தது ... ஆனால் அதையும் மீறி கதை தெரிந்தும் பார்த்த மக்களும் ரசிக்கும்படி படத்தை அனைத்து விதத்திலும் தரமாக எடுத்திருப்பார் விஷ்ணுவரதன் ...
யோசித்து பாருங்கள் தெரிந்த கதையவே எல்லோரும் ரசிக்கும் படி தரமாக தர முடியும் என்றால் , புதுவிதமான கதையை அதே தரத்தில் கொடுத்தால் எப்படி இருக்கும் ... அதுதான் பில்லா 2...
if (known story + quality making = super hit) then
unknown story + the same quality making = ?
the answer will be the success level of billa 2... (but it also strongly depending upon the quality of story that going to be used in the film.. but as a fan of thala i hope vishnu will do his best)
எனக்கு தெரிந்து படத்தின் மைனஸ் என்று சொல்ல வேண்டும் என்றால் ஒரு விஷயம் சொல்லலாம் .... இது மற்ற படங்களை போல முதல் பாகத்தின் தொடர்ச்சி இல்லையாம் .... பில்லா எப்படி ஒரு international smuggler ஆக மாறினான் என்பதைத்தான் இந்த படத்தில் காட்ட போகிறார்களாம் ... ஆகவே இதுதான் முதல் பாகம் .. ஏற்கனவே வந்தது ரெண்டாம் பாகம் .. எனக்கு தெரிந்து இந்திய திரைப்பட வரலாற்றிலேயே இப்படி பின்னோக்கி படம் எடுப்பது இதுதான் முதல் முறை என்று எண்ணுகிறேன் .... அதாவது ஒரு பிளாஷ்பேக்கை தனி படமாக எடுப்பது போன்ற முயற்ச்சி இது ....எனவே இது எப்படி work out ஆக போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் ... எப்படி இருந்தாலும் தல ரசிகர்களுக்கு இது பெரிய விருந்தாக அமைய போவது உறுதி ....
ALL THE BEST THALA...
12 comments:
பேப்பரை பிரித்தபோது உங்களுக்கு ஏற்பட்ட அதே பரவசம் அதே சிலிர்ப்பு எனக்கும் ஏற்பட்டது...
@ philosophy prabhakaran
நமக்கு மட்டும் இல்லை ....எல்லா தல ரசிகர்களுக்கும் இந்த விஷயம் பார்த்தவுடனே ஒரு பரவசத்தை உண்டு பண்ண இருக்கும் தல...
ஒரு விஷயம் அடித்து சொல்லலாம் ... பில்லாவை ரீமேக் செய்து ஹிட் ஆக்கியது தல மட்டுமே ...
ஷாருக் “டான்” பிலாப்
தெலுங்கு “பில்லா” பிலாப் ... அனுஷ்கா கிளாமர் கூட படத்தை காப்பாற்ற முடியவில்லை....
தல மாஸ் தெரியும் இதில் இருந்து...
பில்லா போல படம் வந்து ரொம்ப காலம் .. ஷன்கேருக்கு ஆயிரம் கோடி குடுத்தாலும் பில்லா மாதிரி ரசனையான ஸ்டாயிளிஷ் எடுக்க மாட்டார் .. நிச்சயம் விஷ்ணுவர்த்தன் கலக்குவார் . :)
அறிவிப்பு வந்தாச்சா! காத்திருப்போம் நன்றாக வரும் என!
பில்லா படத்தில் "பில்லா" கேரக்டரில் அஜித்தின் நடிப்பு நன்றாக இருந்தது.
அந்த கதாபாத்திரத்தை வைத்தே முழுப் படமும் என்றால்.. :)
ஆனால்,பில்லா கதையை பற்றி சொல்ல வேண்டுமானால்,"nothing was new." விஷ்ணுவர்த்தன் இதிலாவது கதையில் மெனக்கெடுவார் என்று எதிர்பார்கிறேன்.
[im]http://www.loogix.com/img/res/1/2/8/9/0/7/128907609067821.gif[/im]நிச்சயம் பில்லா வெற்றிப்படம்தான்
@ sudharsan
உண்மைதான் .... ஆனால் விஷ்ணுவை விட ஷங்கர் ஒரு சிறந்த வியாபாரி .. எந்த சரக்கு இங்கு நன்றாக விலை போகும் என்று தெரிந்து வைத்திருக்கிறார் அவ்வளவே ,,,
@ SK
நன்றி நண்பரே
@ ILLUMINATTI
பில்லா பழைய ரஜினி படத்தின் ரீமேக் என்பதால் ரிஸ்க் எடுக்க பயந்து கதையில் எந்த மாற்றமும் பண்ணவில்லை என்று நினைக்கிறேன் ... மற்றபடி அவர் ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்பதை அவரின் அனைத்து படங்களிலும் காட்டி இருப்பார் (சர்வம் மட்டும் விதிவிளக்கு)... பில்லா 2 விலும் தான் திறமையை வெளிபடுத்துவார் என்று நம்புகிறேன் ....
@ ரஹீம் கஸாலி
ஆமாம் அந்த வருடம் வந்த படங்களில் சிவாஜிக்கு அடுத்து அதிக வசூலை குவித்த படம் அது ....
மிகவும் பயமாக உள்ளது. இப்போதே படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. Hopefully Vishnu will re-create the same magic and live upto the hype and expectations. :)
@ yoga
தல பயப்பட தேவை இல்லை என்றே நினைக்கிறேன் ..... விஷ்ணு கலக்குவார் .. ரொம்ப நாள் ஆச்சி நம்ம ஏரியா பக்கம் வந்து ரொம்ப பிஸியா தல?
ஆம் நண்பரே, கொஞ்சம் பிஸி தான். அடுத்த வாரத்திலிருந்து மீண்டும் 'active' ஆகிவிடுவேன்.
உங்களையும் நம்ம 'forum' பக்கம் ஆளையே காணோம்...
தல உங்க forumல chat அப்படின்னு address barல வருது இங்க அத பிளாக் பண்ணிட்டானுக என்னால open பண்ணவே முடில தல அத கொஞ்சம் மாத்தினால் இங்க என்னாலopen பண்ண முடியும் .. tats why am absent for a while in forum...
Post a Comment