Followers

Copyright

QRCode

Friday, November 5, 2010

தீபாவளி .... காதல் தீபாவளி ... தல தீபாவளி .. சமத்துவ தீபாவளி

பண்டிகை என்பதே அனைவரும் குடும்பத்தோடு சந்தோஷமாக கொண்டாடத்தான் .... அதுவும் தீபாவளி என்றால் தனி குஷி .... நம்ம மனசுல எவ்வளவுதான் வருத்தங்கள் இருந்தாலும் அது எல்லாம் மறந்து விட்டு ஒரு நாள் முழுவதும் சந்தோஷமாக கொண்டாட இதை விட்டால் நம் நாட்டில்  வேறு பண்டிகையே கிடையாது ....

நம்மை போன்ற இளைங்கர்களுக்கெல்லாம் தீபாவளி ரொம்ப ஜாலியான பண்டிகை ... தீபாவளி புது டிரஸ் போட்டுகிட்டு அத நம்ம பிகர்கிட்ட காட்ட அவ வீட்டு தெருவிலேயே நாயா கிடந்த காலங்கள் எல்லாம் இனிமையான நினைவுகள் .. அதே போல நமக்கு பிடிச்ச பிகர் நமக்கு அவ வீட்டு இனிப்புகளை கொண்டு வந்து கொடுத்து அத நாம சாப்பிடிர சந்தோஷம் இந்த வயசுல வேற எதிலையுமே கெடைக்காது ... அவ முன்னாடி வெடி வெடிக்கிறது அதுவும் அணுகுண்டவே கையில் வைத்து வெடிக்கிறது எல்லாம் நம்மை நாமே ஹீரோவா உணர வைக்கிற நாட்கள் .. அந்த வயசுல தீபாவளி எல்லாருக்கும் ஒரு “காதல் பண்டிகை.... அந்த நாட்களை எல்லாம் கடந்து வந்த பின்னர்தான் அது எவ்வளவு பெரிய சந்தோஷம்... கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் அந்த சந்தோசங்கள் எல்லாம் திரும்பி கெடைக்காதுண்ணு நமக்கு புரியிது ...

அதேபோல தீபாவளி அன்றுதான் நம் சொந்த பந்தங்கள் எல்லாம் ஒரே இடத்தில் ஒன்று கூடுவார்கள் .... ஒவ்வொருவரும் கொண்டு வரும் இனிப்புகளை சாப்பிடிவதும் , பட்டாசுகளை வெடிப்பதுமாக குடும்பமே ஒன்று கூடி குதூகலமாக கொண்டாட தீபாவளியை விட்டால் வேறு பண்டிகை ஏது? எனக்கு தெரிந்து தீபாவளி இந்துக்கள் பண்டிகை கிடையாது .. அது ஒரு “குடும்ப பண்டிகை ....

இப்படி காலையில இருந்து அத்தை மாமா சித்தப்பா சித்தி அண்ணன் அண்ணி தம்பி பங்காளி என்று எல்லாருடனும் சேர்ந்து “குடும்ப தீபாவளி கொண்டாடிவிட்டு சாயங்காலம் ஆறு மணி ஷோவுக்கு அன்னைக்கு ரிலீஸ் ஆன நமக்கு பிடிச்ச ஹீரோ படம் பாக்கவில்லை என்றால் தீபாவளி கொண்டாடிய திருப்தியே இருக்காது ...  தியேட்டர்குள்ள ஒரு மினி “ரசிகர்கள் தீபாவளியே நடக்கும் .... வில்லன் வரலாறு இந்த ரெண்டு படங்களும் தீபாவளி அன்னைக்குதான் ரிலீஸ்... தியேட்டர் முழுவதும் தல ரசிகர்கள் .... ரெண்டு படமும் நான் சீட்டுல உக்காந்தே பாக்கல.... தியேட்டர்க்குள்ளயே வெடி வெடிச்சி ராக்கெட் விட்டு சும்மா அதிரும்.... எல்லாருக்கும் தல தீபாவளி ஒரே ஒரு தடவ மட்டும்தான் வரும் ஆனா எங்களுக்கு வருசா வருஷம் வரும் .... நாங்க தியேட்டர்ல தல படத்த பாத்து கொண்டாடுர அந்த மினி தீபாவளிதான் எங்களுக்கு தல தீபாவளி....  

தல தீபாவளி பத்தி சொன்ன பின்னாடிதான் ஞாபகம் வருது ..புதுசா கல்யாணம் ஆன பசங்களுக்கு தீபாவளி வந்தா ராஜமரியாதைதான் ... மாமனார் கொடுக்கிற சீர் வரிசை , மச்சான் கொடுக்கிற மோதிர கிஃப்ட் , மாமனார் வீட்டுல தடபுடலா விருந்து, கூடவே மச்சினிச்சி கூட ரெண்டு நாள் அனுமதிக்கப்பட்ட கடலை இப்படி பயங்கர மஜாவா போகும் தீபாவளி.... அவனுகளுக்கெல்லாம் தீபாவளி ஒரு “மன்மத பண்டிகை... அவனுகளை மன்மதனாய் உணர வைக்கிற ஒரே ஒரு நாள் இந்த தல தீபாவளிதான்...  

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை .. அப்படியே ஆனாலும் தல தீபாவளி எல்லாம் கொண்டாட முடியாது .. தல கிறிஷ்துமஷ்தான் கொண்டாட முடியும் .... (நான் ஒரு கிருஷ்தவன்....)அது இந்த அளவுக்கு ரொம்ப மஜாவா எல்லாம் இருக்காது ரெண்டு கிலோ கேக் வாங்கி கொடுத்து அனுப்பிடுவாங்க ... இருந்தாலும் எங்க அம்மாவோட சொந்தக்காரங்க எல்லாம் இந்துக்கள்தான் ... அதனால சின்ன வயசுல இருந்தே தீபாவளி அன்னைக்கு சாமி கும்பிடுவதை தவிர  மற்ற எல்லா விசயங்களையும் நான் செய்து விடுவேன் ... மாமாக்கள் எடுத்து தர புது டிரஸ், வாங்கிட்டு வர்ற ஸ்வீட் , பட்டாசு, பாட்டி வீட்டில் மதிய விருந்து, கடலை போட மாமா பொண்ணுங்க , ரிலீஸ் ஆன தல படம் பாக்க பங்காளி பசங்க என்று   இப்படி எல்லாமும் எனக்கு கிடைக்கும் ... அதனால நான் கிருத்துவன் என்பதால் தீபாவளி எனக்கு எப்பொழுதும் அந்நியபட்டு போனதில்லை ... இப்படி எல்லா மதத்தவர்களும் ஏதாவது ஒரு வகையில் கொண்டாடிவிடுவதால் (at least ஒரு நாலு நாள் விடுமுறையாவது கிடைப்பதால்) கண்டிப்பாக தீபாவளி ஒரு “சமத்துவ பண்டிகைதான்அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்துக்கள்.....   


அப்புறம் மக்கா .. நாம எல்லாம்  ஒரு வேலையும் பாக்காம உக்காந்த எடத்துல இருந்தே கம்ப்யூட்டர் பொட்டிய தட்டிக்கிட்டே பொழுத போக்குனதால ஏற்கனவே தொந்தி கண்ணா பின்னாண்ணு வளந்து நிக்கும் .. அதனால வாய்க்கு ருஷியா கெடைக்குதேண்ணு அளவுக்கு அதிகமா சாப்பிட்டு இன்னும் கொஞ்சம் பெருத்திராதீங்க .... அளவா சாப்பிட்டு சந்தோஷமா கொண்டாடுங்க ... பட்டாஸ் வெடிக்கும் போதெல்லாம் பாத்து சூதானமா வெடிங்க ... நமக்கு பாதுகாப்புதான் முக்கியம் ...

மாமானார் வீட்டுல தல தீபாவளி கொண்டாடுரவங்க எல்லாம் நாளைக்கு நமக்கும் பெண் கொழந்தை பிறக்கலாம் அதுக்கும் கல்யாணம் பண்ணி மாப்பிளைய தல தீபாவளிக்கு நம்ம வீட்டுக்கு கூப்பிட வேண்டி வரலாம்கிரத மனசுல வச்சிக்கிட்டு கொண்டாடுங்க...

கடைசியா வழக்கம் போல தல ரசிகர்களுக்கு ... இன்னைக்கு தல படம் வரல ... நமக்கு இந்த தீபாவளி கொஞ்சம் சுதி இறங்கிதான் இருக்கும் ... தல படம் வரலென்னா என்ன? இந்திய பத்திரிக்கை வரலாற்றில் முதல் முறையாக இன்று எல்லா பேப்பர்லயும் மாங்காத்தா ஸ்டில் வர போவுதாம்... ஸோ இந்த தீபாவளி நமக்கு அடுத்து வற போற  ஒரு பெரிய தீபாவளிக்கான முன்னோட்டம்... ஸோ "பேப்பர் எடு கொண்டாடு     

இன்னொரு தடவ அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்துக்கள்

4 comments:

எஸ்.கே said...

தங்களுக்கு தங்கள் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

ரஹீம் கஸாலி said...

தீபாவளி நல வாழ்த்துக்கள் நண்பரே...

philosophy prabhakaran said...

தாமதப்படுத்தப்பட்ட தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

Yoganathan.N said...

தாமதமான தீபாவளி நல்வாழ்த்துகள். :)

LinkWithin

Related Posts with Thumbnails