Followers

Copyright

QRCode

Friday, March 16, 2012

"தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" - தமிழா தமிழா
நான் இன்னும் அந்த வீடியோவை பார்க்கவில்லை , பார்க்கும் தைரியமும் இல்லை , அந்த காணொளியை பற்றி பல தளங்களிலும் வந்த பல செய்திகளை படித்த பொழுதே கண்ணில் கண்ணீர் வருகிறது , என்னடா கொடுமை செய்தார்கள் எம்தமிழ் மக்கள் உனக்கு , தமிழ் இனம் என்று இல்லை உன்னுடைய சிங்கள இனம் துன்பபட்டாலும் அதை கண்டு மனம் துடிப்பவன்தான் தமிழன் , தமிழன் வீரத்துக்கு மட்டும் இல்லை இரக்கத்துக்கும் பெயர் போனவன் , ஒரு எறும்பு கூட தன் காலில் மிதிபட்டு இறந்துவிட   கூடாது என்று எண்ணிய புத்தனை தங்கள் கடவுளாக ஏற்றுகொண்ட உங்களின் லட்சணம் இதுதானா? கூப்பிடும் தூரத்தில் நம் சொந்த இனம் அழிக்கப்பட்டு கொண்டிருந்த பொழுது இங்கே வட இந்தியன் ஒருவன் நன்றாக கிரிக்கெட் ஆடியதை சந்தோசமாக பார்த்து கொண்டு எதுவும் செய்யாமல் குறைந்த பட்சம் உங்களின் துன்பங்களை கூட அறிந்து கொள்ள ஆர்வமில்லாமல் சுயநலமாய் இருந்த எங்களை   வரலாறு  என்றும்  மன்னிக்காது.

இலங்கையில் கிரிக்கெட் மேட்ச் நடந்தால் அதை முதல் பக்கத்தில் வண்ண படங்களோடு செய்தியாக வெளியிட்ட ஊடகங்கள் இவ்வளவு பெரிய இனபடுகொலை நடந்த பொழுது கைகட்டி மௌனமாக வேடிக்கை பார்த்திருப்பது எவ்வளவு பெரிய துரோகம் , அங்கெ பச்சிளம் குழந்தைகள் கொத்து கொத்தாக சுட்டு வீழ்த்தப்பட்ட பொழுது இங்கே சிம்ரனுக்கு இடுப்பு வலி வந்ததையும் , சிம்ரனுக்கு ஆண் குழந்தை பிறந்ததையும் நமக்கு தலைப்பு செய்தியாக திணித்த அவர்களின் துரோகத்தை என்னவென்று சொல்லுவது , அங்கே வாழும் தமிழனும் ஒருவகையில் இந்தியன்தான் , எந்த நாடாவது தன் சொந்த நாட்டுகாரனை கொத்து கொத்தாக கொன்றுகுவிக்க துணை போகுமா?  ஆனால் என் இந்திய திருநாடு அந்த வேலையை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறது. அதற்க்கு பதவி வெறி பிடித்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் உடந்தை , தன்னுடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் , தன்னுடைய வாரிசுகள் மற்றும் அவர்களின் வாரிசுகள் என்று ஏழு தலைமுறையும் சந்தோசமாக வாழ வேண்டும் என்று பதவி வெறியில் மத்திய அரசு தூக்கி போடும் எழும்பு துண்டை கவ்வி கொண்டு தன் சொந்த இனத்தையே பலிகொடுத்து இன்று அந்த பிணத்தின் மீது நின்று அரசியல் வியாபாரம் செய்யும் இவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்க போகிறது? கொலை செய்பவன் மட்டும்தான் குற்றவாளியா? தன் சகோதரனை ஒருவன் துன்புறுத்தும் பொழுது அதை தடுத்து நிறுத்தும் அதிகாரம் இருந்தும் தன்னுடைய சுய நலத்துக்காக தடுக்காமல் அதை வேடிக்கை பார்ப்பவனும் குற்றவாளியே.  அந்த வகையில் ஆயிரக்கணக்கில் மக்களை கொன்று குவிக்க துணை போன இவர்களுக்கு நாம் என்ன தண்டனை கொடுக்க போகிறோம்..

அமேரிக்கா இன்று ஐ நா சபையில் அந்த அரக்கர்களுக்கு (அமெரிக்காவே ஒரு அரக்கன்தான் என்பது வேறு விஷயம், ஆனால் இன்று அவர்கள் நமக்கு ஆத்மபாந்தனாக தெரிவது கால கொடுமை), எதிராக தீர்மானம் கொண்டு வரும்பொழுது நம் இந்தியா அதை எதிர்க்க போகிறதாம் , கேட்டால் இலங்கை நம் பாரம்பரிய நட்பு நாடு வராலாற்று ரீதியாக நம்முடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் , அவர்கள் மனம் நோகும்படியாக இந்தியா எதுவும் செய்யாது என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் நம் பிரதமர் , அப்படி என்றால் தமிழன் யார்? அன்று தமிழன் படுகொலை செய்யப்பட்ட பொழுது இந்த கரிசனம் ஏன் வரவில்லை? சிங்களவனின் மீது சிறு நகம் கூட பட்டுவிடக்கூடாது என்று துடிக்கும் நீங்கள் தமிழனின் கண்ணை குத்தி கிழிக்க துணை போனது ஏன்? 

அவர்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்ட பொழுதுதான் அமைதியாக இருந்தோம் , இன்று அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைப்பதர்காகவாவது போராடுவோம்... பதிவுலகம் சார்பில் இதுவரை ஈழ மக்களுக்கு கண்ணீர் அஞ்சலிதான் செலுத்தியிருக்கிறோம் , இதோ அவர்களுக்காக நாம் போராட , நாம் செய்த பாவத்தை கொஞ்சம் துடைத்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது , ஐ நா சபையில் அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று நாம் ஏன் பதிவுலகம் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க கூடாது. நம் மனதில் கொழுந்து விட்டு எரியும் தீயை சிறு பொறியாக இந்த சமூகத்தில் இறக்கி வைப்போம் அது ஒரு நாள் காட்டு தீயாக மாறி குற்றம் செய்தவர்களை சாம்பலாக்கும் என்ற நம்பிக்கையோடு...   

நான் என் மனதில் தோன்றியதை எழுதி இருக்கிறேன் , இது சாத்தியமா இல்லையா என்று தெரியவில்லை , ஆனால் அனைத்து பதிவர்களும்  மனது வைத்தால் இது கண்டிப்பாக நடக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது 


2 comments:

Karthikeyan said...

// புத்தனை தங்கள் கடவுளாக ஏற்றுகொண்ட உங்களின் லட்சணம் இதுதானா? //

நிஜமான ஆதங்கம் புரிகிறது. நாம் இந்தியாவின் ஒரு அங்கமாகத்தான் இருக்கிறோமா என்கிற சந்தேகமே என்னுள் பல நாள் உண்டு. குஜராத்திலேயோ, கேரளத்திலேயோ ஒரு மீனவனை கொன்று பார்க்கட்டும் என்ன நடக்கிறது என்று. இளிச்சவாயன் தானே நாம்? இணையத்தின் மூலம் ஒரு போராட்டம் சாத்தியம் எனில் பங்கெடுக்க நானும் தயார்.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

அருமையானப் பதிவு .... உரிமையோடு என் முக நூலில் பகிந்துக் கொள்ளுகிறேன் நண்பா...

LinkWithin

Related Posts with Thumbnails