Followers

Copyright

QRCode

Wednesday, April 18, 2012

பில்லா 2 - ஐ‌பி‌எல் -உதயநிதி


முற்பகல் செய்யின்


இன்று திமுக எதிர்கால தலைவரும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் நாயகனுமாகிய உதயநிதி பத்திரிக்கைக்காரர்களை கூப்பிட்டு ஒப்பாரி வைத்திருக்கிறார் , அரசாங்கம் என்னுடைய படத்துக்கு வரிசலுகை தர ஒப்புக்கொள்ளவில்லை , வரிசலுகை பெருவதற்க்கு எல்லா தகுதியும் என்னுடைய படத்தில் இருக்கிறது , என்னுடைய அப்பாவின் மேல் இருக்கும் காழ்புணர்ச்சியால் என்னை பழிவாங்குகிறார்கள் என்றெல்லாம் புலம்பி தள்ளியிருக்கிறார்.. இதை பார்க்கும் போது தமிழ் படங்களில் ஊரையே அடித்து உலையில் போட்ட வில்லன் படத்தின் இறுதிக்காட்சியில் மரண அடிவாங்கும் போது இன்னும் அடிடா அவனை விடாதடா என்று விசிலடித்து கொண்டே ரசிப்போம் பாருங்கள் அதை போலத்தான் சந்தோஷமாக இருக்கிறது  மனசு ...என்னா ஆட்டம் போட்டீங்க மக்கா? உங்க படத்துக்கு வரிசலுகை கொடுக்காதது அடாவடி என்றாள் கோடிக்கணக்கில் பணம் போட்டு படம் எடுத்து ரிலீசுக்கு காத்திருக்கும்போது உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அதை ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்து அடிமாட்டு விலைக்கு வாங்கி நீங்கள் வெளியிட்டீர்களே அதற்க்கு பெயர் என்ன? ஊரில் இருக்கும் அத்துணை திரையரங்கிலும் உங்கள் குடும்ப படங்களை மட்டுமே ஓட வைத்து சிறு தயாரிப்பாளர்களையும் அவர்களின் படங்களையும் முடக்கி வைத்தீர்களே அதற்க்கு பேர் என்ன? உங்கள் குடும்பத்துக்கு வளைந்து கொடுக்காத பெரிய பெரிய நடிகர்களின் படங்களுக்கு   எப்படியெல்லாம் தொல்லை கொடுத்தீர்கள் , அப்பொழுதெல்லாம் தெரியவில்லையா நீங்கள் செய்வது அராஜகம் என்று , ஆனால் உங்கள் படத்துக்கு வரி சலுகை கொடுக்கமாட்டோம் என்று சொன்னவுடன் “ஐய்யோ கொல்றாங்களே , கொல்றாங்களே என்று உங்கள் தாத்தா கூச்சல் போட்டதை போல “ஐய்யோ பழிவாங்குராங்களே பழிவாங்குராங்களே என்று கூச்சல் போடுகிறீர்களே உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமே கிடையாதா?


தல நடந்தால் நடைக்கே அழகு


பில்லா 2 டிரைலர்(டீஸர்) பட்டைய கிளப்புது , தலையோட ஸ்டைல் ,ஒளிப்பதிவு , ஆக்ஷன் சீன்ஸ் , பின்னணி இசை என்று எல்லாவிதத்திலும் கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள் , அதிலும் தலையோட அந்த டிரேட் மார்க் நடை கலக்கல். அந்த காட்சிகளில் எல்லாம் அரங்கம் அதிரபோவது உறுதி. இப்பொழுதே படம் எப்பொழுது வெளிவரும் என்ற ஆவலை தூண்டிவிட்டிருக்கிறது இந்த டீஸர் , விஷ்ணுவரதன் கையிலிருந்து படம் சக்ரி கைக்கு மாறியபோது என் நம்பிக்கையும் தலைகீழாக மாறி போயிருந்தது  , ஆனால் இந்த டிரைலர் பார்த்தவுடன் அது தவறு என்று உணர்ந்து கொண்டேன் காரணம் பில்லா படத்தில் தல ஏற்கனவே பேசிய ஒரு வசனத்தை இதில் இவர் பேச வைத்திருக்கும் விதம் simply like a lion roaring … hats off chakri , படத்தை பார்த்துவிட்டு நான் எழுதபோகும் பதிவின்  கடைசியிலும்  இதே வார்த்தையை எழுத வைப்பீர்கள் என்ற நம்பிக்கையை இந்த டீசர் எனக்கு உருவாக்கிவிட்டது..., we are once again Impressed thala…  give us more…

ஐ‌பி‌எல் 2012

வழக்கம் போல இந்த முறையும் சென்னை ஆரம்பத்தில் அடி மேல் அடி வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் ரொம்ப சந்தோஷம் , ஆனால்  வழக்கம் போல இல்லாமல் இந்த அடி கடைசி வரைக்கும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல பெட்டிங்க் புக்கிகளை கேட்டுக்கொள்கிறேன்... இந்த ஐ‌பி‌எல்ளில் பெட்டிங்க் எந்த அளவுக்கு புகுந்து விளையாடுகிறது என்பதற்க்கு சென்னை பெங்களூர் ஆட்டம் ஒரு சிறந்த உதாரணம். ஆட்டத்தின் கடைசிக்கு முந்திய ஓவரில் கொஹ்லி பந்து வீசியதை பார்த்தால் சின்ன குழந்தைகூட இதை கண்டுபிடித்து விடும் , இவரு ஒரு ஃபுல் டாஸ்  பால் போடுவாராம் அவரு சிக்சர் அடிப்பாராம் , அடுத்து ஒரு ஷாட் பால் அதுவும் மெதுவா பேட்டுக்கே வருவது போல போடுவாராம் அவரு ஃபோர் அடிப்பாராம் இப்படியே அந்த ஓவர் முழுக்க ரெண்டு பெரும் போட்டு கொடுத்து போட்டு  கொடுத்து விளையாடுவாங்களாம் ,அட அட அட டேய் எங்களையெல்லாம் பாத்தா உங்களுக்கு லூசு மாதிரி தெரியுதாடா...

ஆனாலும் இந்த ஐ‌பி‌எல்லால் எனக்கு விளையும் ஒரே நன்மை அப்பப்ப இந்த மாதிரி போட்டோ கமெண்ட் போட்டு ஒரு பதிவு தேத்தலாம்...




































     

5 comments:

Karthikeyan said...

எத்தனை பேர் வயித்தெரிச்சல் உதயநிதியை இப்ப குடைகிறது. இன்னும் 4 வருசத்துக்கு புலம்பிகிட்டேதான் இருக்கனும்.

அப்புறம் தல மேட்டர். உங்காளுக்கு உண்மையிலேயே ஸ்டைல் பக்காவா மேட்ச் ஆகுது. ஆனால் சரியான இயக்குனர்கள் செட் ஆவதில்லையோன்னு தோணுது. எனக்கு அஜீத் படத்தில கிரீடம் ரொம்ப பிடிக்கும்.

கிரிக்கெட் கமெண்ட்ஸ் அருமை. மகிழ்ந்து சிரித்தேன். இந்த இம்சைக்குதான் நான் ஐபில் பார்ப்பது இல்லை.

Selvakumar said...

ராஜா, தலயோட பில்லா 2 டிரெயிலர் 10 லட்சம் ஹிட்ஸை யூடியூப்ல வாரி குவிச்சிருக்கு.. படம் நல்லா வரணும். நமக்கு தொடர்ச்சியா ஹிட் வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு..

"ராஜா" said...

//எத்தனை பேர் வயித்தெரிச்சல் உதயநிதியை இப்ப குடைகிறது. இன்னும் 4 வருசத்துக்கு புலம்பிகிட்டேதான் இருக்கனும்.

கண்டிப்பா

//னக்கு அஜீத் படத்தில கிரீடம் ரொம்ப பிடிக்கும்.

எனக்கும் அந்த படம் பிடிக்கும் ,

//சரியான இயக்குனர்கள் செட் ஆவதில்லையோன்னு தோணுது.

இவர் யாரையும் தேடி போவதில்லை , ஆனால் எல்லா இயக்குனர்களும் இவரை வைத்து படம் இயக்கவேண்டும் என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்து விடுவார்கள் , கௌதம் மேனனில் இருந்து லேட்டெஸ்ட் சுசீந்தரன் வரைக்கும் இதில் அடங்கும்...

"ராஜா" said...

//ராஜா, தலயோட பில்லா 2 டிரெயிலர் 10 லட்சம் ஹிட்ஸை யூடியூப்ல வாரி குவிச்சிருக்கு.

படித்தேன் நண்பரே... தலனா சும்மாவா?

//படம் நல்லா வரணும். நமக்கு தொடர்ச்சியா ஹிட் வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு..

நந்தனம் வருடம் நல்லவர்களுக்கு நல்லதே பண்ணும் என்று நம்புவோம்...

vasan said...

ச‌ந்தான‌த்தின் தய‌வால் தான் ப‌ட‌ம் பாட‌வ‌தி ரேஞ்சிலிருந்து தப்பித்தது என்ப‌து உத‌ய‌நிதிக்கு தெரியுமா? அத‌ற்குள் உத‌ய‌நிதி தலைமை ர‌சிக‌ர்ம‌ன்ற‌மெல்லாம் துவ‌க்கி அப்பாவுக்கு ஆத‌ரவு திர‌ட்டும் திட்ட‌மெல்லாம், ரெடியாய் இருக்கிற‌தாம். இவ‌ர் வ‌ர்றப்போ க‌ழக‌ம் இருக்குமா? இப்ப‌வே ப‌ங்காளி ச‌ண்டையில‌ மதுர‌, சேல‌ம், சென்னையின்னு ரூட்ப‌ஸ் தின‌மும் ஓடுது. பெரிய‌ப்பா நடிக்க‌ வ‌ந்து தான் எம்ஜியார் எஸ்கேப் ஆகி அதிமுக வ‌ந்த‌து. அப்பா குறுஞ்சி டிவி சீரியல்ல‌ வ‌ந்து தான் மேய‌ராகி, துணை முத‌ல்வ‌ர், மாபிஸ்வ‌ரை வ‌ந்திருக்கார். நீங்க‌ த‌யாரிப்பில‌ இருந்து திரைக்கு நாய‌க‌ன் ஆகி குடும்ப‌ டீவில‌ குறை சொல்லிட்டிருக்கிங்க‌. ச‌ந்தோச‌ம்.
ராஜா ந‌ல்லா இருக்கு இந்த‌ ஐபிஎல் 4 குறும்(பு) ப‌ட‌ங்க‌ள்.

LinkWithin

Related Posts with Thumbnails