Followers

Copyright

QRCode

Friday, May 4, 2012

“முதல் அடியில் நடுங்க வேண்டும் ... மறு அடியில் அடங்க வேண்டும் “ – பில்லா 2



நீண்ட நாட்களாகவே எதிர்பார்த்து கொண்டிருந்த பில்லா 2 படத்தின் பாடல்கள் மே 1  வெளியாகிவிட்டது.(நேரமின்மையால் கொஞ்சம் தமாதாமாக எழுதுகிறேன் ) இந்த வருடத்தின் மிக பெரிய எதிர்பார்ப்புக்குரிய முதல் படம் பில்லா 2  .. காரணம் இது அஜீத் படம் என்பதையும் தாண்டி மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற பில்லா genre படம் இது என்பதுதான்... அதேபோல பாடல்கள் மிக பெரிய எதிர்பார்ப்பை பெற காரணம் அஜீத் யுவன் கூட்டணி...இதுவரைக்கும் இவர்கள் இணைந்து பணியாற்றிய நான்கு திரைபடங்களிலும் பாடல்கள் பெரிய ஹிட்... இவர்களின் கூட்டணியில் கடைசியாக வந்த மங்காத்தா சென்ற வருடத்தின் ஒரே   பிளாக்பஸ்டர்(சிங்கம் சிங்கிளாத்தான் வரும்)... சரி இந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் பில்லா 2 பாடல்கள் பூர்த்தி செய்ததா என்றாள் தாராளமாக சொல்லலாம் யுவன் அஜீத் கூட்டணியின் மிக சிறந்த ஆல்பம் இதுதான் என்று , 


யுவனின் பாடல்கள் என்றாலே இளமை துள்ளும் , இதில் அவர் செய்திருக்கும் சில வித்தியாசமான முயற்சிகள் அவரை உச்சத்தில் ஏற்றும் என்பதில் சந்தேகமே இல்லை... படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் , அதில் நான்கு அதிரடி சரவெடி என்றாள் இரண்டு அடை தேனடை”… . விஷுவல் நன்றாக இருக்கும்பட்சத்தில் பாடல்கள் படத்திற்க்கு பெரிய பலமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை... அஜீத் ரசிகர்களுக்கு வெறியேற்றும்படியான வரிகளை  ஆங்காங்கே போகிற போக்கில் அள்ளித்தெளித்திருக்கிறார்கள்.. குறிப்பாக இந்த வரிகளை இனி அஜீத் சம்பந்தமான பேனர் , போஸ்டர்களில் அடிக்கடி காணலாம்... முதல் அடியில் நடுங்க வேண்டும் , மறு அடியில் அடங்க வேண்டும்.. மீண்டு வந்தால் மீண்டும் அடி , அது மரண அடி... ஆனால் சில வரிகள் மிக பழசாக இப்பொழுது கேக்க கொஞ்சம் மொக்கையாக இருக்கிறது என்பதும் உண்மைதான்... முகவரி , சிட்டிசன் , வில்லன் என்று அஜித்துக்கு மாஸ் பாடல்களை எழுதிய வைரமுத்துவின் அருமையை  அந்த வரிகளை கேக்கும்போது உணர முடிகிறது.. நா. முத்துக்குமாருக்கு பதிலாக வைரமுத்து எழுதியிருந்தால் பாடல்களின் வீச்சு இன்னும் கூடியிருக்கும்..

இந்த ஆல்பத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஏதோ மயக்கம் ... யுவனின் நாதஸ்வர இசையோடு ஆரம்பிக்கும் பாடல் மெல்ல மெல்ல வெஸ்டர்ன் பக்கம் சாய்ந்து நடு நடுவே நாதஸ்வரம் மேளம் என்று கலந்து கட்டி கலக்கல் காக்டெயிலாக தந்திருக்கிறார் யுவன்.. ஆல்பத்தின் இன்னொரு சுயர் ஷாட் மதுரை பொண்ணு... உன் காதல் இங்கே பேசாது , உன் காசு மட்டும் பேசும் என்ற ஒரு வரி போதும் பாடல் எப்படி இருக்கும் என்று சொல்ல.. முதல் தடவை கேட்டு பிடிக்காதவர்கள் மறுமுறை கேளுங்கள் அசந்து விடுவீர்கள்... yuvan on his best….

இதயம் பாடல் மூலம் நீண்ட நாளுக்கு பிறகு யுவன் ஒரு அருமையான மெலடியோடு வந்திருக்கிறார்.. மழை பொழுதில்  சசூடான  காஃபியோடு ஜன்னல் வழியே நுழையும் சாரலில் நனைந்துகொண்டே மழையை ரசிக்கும் மனநிலையை கொடுக்கும் பாடல் ... என்னை பொறுத்த வரை சிறந்த மெலடி என்பது அமைதியான சூழலில் அதை கேட்டுக்கொண்டிருக்கும் போது நம்மையும் மறந்து நம்மை தூங்க வைக்கவேண்டும்... நான் வீட்டில் என்னுடைய அறையில் இந்த பாடலை எப்பொழுது கேட்டாலும் தூங்கிவிடுகிறேன்... ஆனால் மங்காத்தா போல அதிரடி பாடல்களை எதிர்பார்க்கும் பக்கா அஜீத் ரசிகர்களுக்கு இது பிடிக்குமா என்று தெரியவில்லை.. 


கேங் கேங் கேங்க்ஸ்டர் , உனக்குள்ளே மிருகம் பாடல்கள் முழுக்க முழுக்க அஜீத் ரசிகர்களுக்காக மட்டுமே.. இந்த இரண்டு பாடல்களிலும் பில்லா தீம் ம்யூசிக்கை நுழைத்த விதம் அருமை... வெவ்வேறு இசை கருவிகளில் அந்த தீம் ம்யூசிக் வாசிக்கபடுவது பக்கா... இந்த இரண்டு பாடல்கள் போதாதென்று தனியாக தீம் ம்யூசிக் வேறு ... அதே பில்லா தீம்தான் ,ஆனால் அதை வித்தியாசமாக தந்த விதத்தில் ஜெயித்திருக்கிறார்... தீம் ம்யூசிக் படத்தின் ட்ரீட்மெண்ட் எப்படி இருக்கும் என்பதை சரியாக பிரதிபலிக்கிறது... சோகமாக ஆரம்பிக்கும் ம்யூசிக் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடித்து கடைசியில் உச்சம் தொடுகிறது.. யுவனுக்கு king of theme music என்று பட்டமே கொடுக்கலாம்...

மொத்தத்தில் இன்றைய காலகட்டத்தில் ஒரு பக்கா ஆக்ஷன் படத்துக்கு எந்த மாதிரியான இசையை கொடுக்க வேண்டுமோ அதை மிக சரியாக கொடுத்திருக்கிறார் யுவன்...

                “யுவன் மிரட்டிட்டீங்க போங்க





12 comments:

Prem S said...

நல்ல விமர்சனம் அனபரே எனக்கு இதயம் பாடல் பிடித்தது

அருண் said...

அஜித் ரசிகர் என்பதை அடிக்கொரு முறை நிரூபித்து கொண்டிருக்கிறீர்.
அருமையான விமர்சனம்,"உனக்குள்ளே மிருகம்" கேட்டவுடன் பிடித்தது...
அஜித் + யுவன் கூட்டணி சூப்பர்.

VimalKumar said...

Nice Review. Being a ajith fan, I was expecting this review the first day of the audio release... Anyways, thanks

vivek kayamozhi said...

நண்பா... முதலில் கேட்க்கும் போது தீம் மியுசிக் தவிர எதுவும் எதிர்பார்த்தபடி இல்லை, பிறகு இதயம் பாடல் பிடித்தது, பிறகு ஏதோ மயக்கம் பிடித்தது, gangster பாடல் சொல்லவே வேணாம், இன்னும் உனக்குள்ளே மிருகம் பாடல் தான் பாக்கி. பார்ப்போம் விஷுவல் எப்படி இருக்கும் என்று? ஆனால் ஒன்று ,தீம் மியுசிக் சான்சே இல்லை. பலவித உணர்வுகளை உருவாக்குகிறது.உங்கள் கூற்று உண்மைதான், யுவன் கிங் ஆப் தீம் மியுசிக் தான். சும்மாவா" ராஜா" வீட்டு கண்ணுக்குட்டியாச்சே... படம் ஆரம்பிக்கும் போது எதிர்பார்ப்பே இல்லை, டீசர் பார்த்ததிலிருந்து எகிறி இருக்கிறது, பார்ப்போம்,சக்ரி என்ன பண்ணியிருக்காரோ??? பிரசவ வேதனை ஆரம்பித்துவிட்டது...!!!

N.H. Narasimma Prasad said...

நான் பில்லா 2 பாடல்களை ஒருமுறை கேட்டேன். முந்தைய படமான 'மங்காத்தா' போல பெரிதாக ஒன்றும் என்னை கவரவில்லை. ஆனால் கேட்க, கேட்க பாடல்கள் பிடித்து விடும். Because, இது தல படம். பகிர்வுக்கு நன்றி ராஜா.

JZ said...

"ஏதோ மயக்கம்" பாட்டுத்தான் சான்ஸே இல்லை! செம கெத்து...

Yuvan on Live ஆல்பத்தின் ட்யூன்கள் அங்கங்கு வந்து எட்டிப்பார்க்கும்.. இருந்தாலும் completely new feel ஒண்ணு கிடைக்கும்!!

* பாடல் வரும் சிச்சுவேஷன் என்னவா இருக்கும்ணுதான் தெரிஞ்சுக்க ஆசைப்படுறேன்..

Yoganathan.N said...

அது என்னமோ தெரியவில்லை... இதுவரை வந்த அஜித்‍‍‍-யுவன் கூட்டணி ஆல்பங்களைப் போல இந்த ஆல்பத்தில் என்னால் ஒன்ற முடியவில்லை...

தீம் மூசிக் அச‌த்த‌ல் தான். ஆனால், இதை பில்லா 1-இல் பிண்ண‌னி இசையாக‌ ப‌ல‌ இட‌ங்க‌ளில் கேட்டாகி விட்ட‌து. யுவ‌ன் புதிதாக‌ ஏதாவ‌து செய்திருக்க‌லாம்.

ம‌ற்ற‌ப‌டி, பாட‌ல்க‌ள் ப‌ட‌மாக்கிய‌ வித‌த்தைப் பார்த்த‌ பின்பு, நான் என் எண்ண‌ங்க‌ளை மாற்றிக்கொள்ளாலாம்... :)

Yoganathan.N said...

தங்களது விமர்சனத்தை நமது forum-இல் இணைத்துள்ளேன்.

http://ajith.freeforums.org/post5841.html#p5841

நன்றிகள் பல :D

rajamelaiyur said...

பாடல்கள் அருமை .. தல rocks

rajamelaiyur said...

இதையும் படித்து பாருங்கள்
அஜித் : தல போல வருமா ?

nellai vasanth said...

யுவன் தான் ஒரு ராஜா என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்துவிட்டார்
நெல்லை சீமையிலிருந்து வசந்த்

முன்பனிக்காலம் said...

'நரகமத்தில் நீயும் வாழ்ந்தால் மிருகமென மாற வேண்டும்..' பிடித்த வரிகள். அப்புறம் ஏதோ மயக்கம் பாடலில் என்ன அது உடுக்கை சத்தம் மாதிரி? உடம்புக்குள் புகுந்து வெறியூட்டுகிற ஒரு போதை தரும் சத்தம். இதயம்....சான்சே இல்லை.. முதல் தரம் கேக்கும் போது ஜஸ்ட் ஓகே..! ஆனால் இப்போது..சந்தேகமே இல்லாமல் யுவனின் அடிமையாகி விட்டேன்! (அப்புறம் விமர்சனமும் சுவாரசியம்! )

LinkWithin

Related Posts with Thumbnails