Followers

Copyright

QRCode

Friday, July 10, 2009

வேட்டைக்காரன் படத்தின் கதை

தமிழ் நாடே ரொம்ப ஆவலா எதிர் பாத்துடு இருக்குற நம்ம "தமிழகதின் ஒபாமா" , "இளைய தளபதி" விஜய் வேட்டைக்காரனின் கதை:
படத்தில் விஜய் ஒரு போலீஸ் அதிகாரியாய் ஆகும் ஆசையுடன் தான் நண்பன் நடத்தும் பரோட்டா கடையில் வேலை செய்கிறார். . விஜய்யின் அப்பாவும் ஒரு பரோட்டா மாஸ்டர் தான்.. குஜராத் மாநிலம் உடப்பாவில் பரோட்டா master வேலைகு ஆள் எடுப்பதாய் தன் நண்பனான இன்னொரு போலீஸ் அதிகாரி குமன் சொன்னதை கேள்விப்பட்டு தன் படையுடன் அங்கே செல்கிறார். ஆனால் குமன் அவர்களை ஏமாற்றி தான் அங்கே நடத்தும் மிலிடரி ஹோடேலில் பரோட்டா பிசையும் அடிமைகளாய் நடத்துகிறார்.


இங்கே விஜய்யின் அம்மா இனிமேல் அவரின் அழுக்கு ஜட்டியை துவைக்க தேவை இல்லை என்று நினைத்து விஜயிடம் அவர் அப்பா தான் செய்த பரோட்டாவை தின்று ஜீரணம் ஆகாமல் வீட்டை விட்டு ஓடி விட்டார் என்று பொய் சொல்லுகிறார். இந்நிலையில் விஜய்க்கு சரவணபவன் ஹோட்டேளில் இருந்து அவரின் தந்தை அந்த ஹோடேலில் இட்லி சாப்டுவிட்டு காசு தராமல் சென்றதால் அவரின் மகன் விஜய் உடனே இட்லிகாண காசை தர வேண்டும் இல்லைஎன்றால் அவரின் வீட்டில் உள்ள இட்லி மாவு அரைக்கும் க்ரிண்டேரை ஜப்தி செய்து விடுவோம் என்று கடிதம் வருகிறது. விஜய்யின் குடும்பமே அந்த கிரைண்டேரில் மாவு அரிது விற்று அதில் வரும் வருமானத்தில்தான் வாழ்கின்றனர். எனவே எப்டியது அந்த இட்லிகாண காசை திருப்பி தர வேண்டுமே என்று அப்பாவின் டைரி புரட்டுகிறார் அப்போது கிண்டியில் உள்ள ஒரு தள்ளுவண்டிகாரன் தன் அப்பாவுக்கு 10 புரோட்டாவுக்கு காசு தர வேண்டும் என்பதை அறிந்து அங்கே செல்ல வேளச்சேரியில் இருக்கும் தன் வீட்டு மாடியில் இருந்து தாவி குதித்து கிண்டி மேம்பாலத்தை பிடித்து லேண்ட் ஆவுராறு. இவரு இப்டி லேண்ட் அவுரத பாக்குற திரிஷாவுக்கு விஜய் மேல லவ் வந்துருது.விஜய் அந்த தள்ளுவண்டிகாரன்கிட்ட டைரிய காட்டி காசு கேக்குறாரு... ஆனா அவன் திர்ஷாவ சைட் அடிச்சிகிட்டே அந்த டைரிய கிளிச்சி போடுறான். எப்டியாது அவன்ட அந்த காச வாங்கனும்னு விஜய் அவனோட கடைல இருந்த பழைய கிழிஞ்ச ஜட்டிய தூக்கிட்டு பஸ் ஏறி வீட்டுக்கு வராரு. அதே பஸ்ல திரிஷாவும் அவரோட வராங்க. அந்த ஜட்டியோட நாத்தம் தாங்காம விஜய் அத த்ரிஷா பேக்ல போட்டுராறு.அந்த ஜட்டி வேற யரோடதும் இல்ல அவங்க அப்பாவ கடத்துன குமனோடது. அந்த கட அவனோட பினாமி கடை. குமன் கடைக்கு வந்து ஜட்டிய தேடுறாரு அப்பதான் கடகாரன் விஜய் வந்துடு போனத சொல்லுரான். அங்க ஒரு பிளாஷ்பேக். உடப்பவுல குமன் ஒருநாள் பாத்ரூம்ல குளிக்கும் போது அவன் ஜட்டி கிளிஞ்சிறது, உடனே அவன் விஜய் அப்பா போட்டுருந்த ஜட்டிய உருவி போட்டுகிறான், அப்ப அவரு கோபமா சொல்லுராரு என் மவன் வருவாண்டா, என் ஜட்டிய உன்கிட்ட இருந்து எடுத்துட்டு போவண்டா, அப்ப பாரு நீ போட்டுக்க ஜட்டி இல்லாம அலைவனு..... உடனே குமன் விஜய்ய தேடி வேளச்சேரி போறாரு..
climax படிக்க கீழ இருக்குற பத்தியselectபண்ணுங்க
இதுக்கு மேலயும் இந்த கதைய படிக்கணுமா? இப்டி ஒரு படம் எடுத்தா இந்த sceneவந்ததும் எழுந்து ஓடிற மாட்டேங்க? அப்டி நெனச்சி இந்த பதிவ க்ளோஸ் பண்ணிடு போய் உருப்படியா எதாவது வேலைய பாருங்க சார்....

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails