சினிமாவுக்கு தல அல்டிமேட் ஸ்டாரு
கிரிக்கெட்டுக்கு தல அல்டர்னேட் இல்லாத நீதான் வீரு...
இருநூறை தாண்டியும் ஹவுஸ்புல்லா ஓடுனா அது
சூப்பர்ஸ்டார்தான் பாரு
இருநூறை தாண்டியும் அசராம ஆடுனா அது
சூப்பர்மேன் நீதான் வீரு...
நேத்து ரிலீஸ் ஆச்சு ஒஸ்தி ... அதுதான் உலகமகா நாஸ்தி ...
நேத்து நீ போட்ட குஸ்தி... அதுதான் கிரிக்கெட்டுக்கே ஒஸ்தி...
உன்னோட குருதான் சச்சின்னு
நீ அவரையே மிஞ்சின சிஷ்யனு...
குங்க்ஃபூனா அதுக்கு போதி தருமரு...
கிரிக்கெட்டுனா அதுக்கு இனி நீதான் தலைவரு...
அதிரடி பேட்டிங்க்ல நீதான் தல கிங்கு ..
மத்தவனெல்லாம் ஊறிபோன
மெரினா பீச்சு சங்கு...
கடைசி மூணு மேச்ல நீ போட்ட டக்குள , உன் ரசிகன் என் நெஞ்சு ஆக்கிபோச்சு டொக்கு... நேத்துதான் புரிஞ்சது உன் டிஎன்ஏவ
தூண்டிவிட இவ்வளவு நாளா உன்னை ஊரவச்சிருக்கானுக... போதிதருமர்கிட்ட மாட்டுன டோங்க் லி கணக்கா நீ அவனுங்களை தொவச்சி தொங்கவிட்டுட தல... யப்பா
ஆராய்ச்சியாளர்களே அந்த குங்க்ஃபூ மாஸ்டரதான் கோட்டவிட்டுட்டீங்க , இந்த கிரிக்கெட் மாஸ்டரையாவது
கப்புன்னு பிடிச்சிக்கோங்கப்பா... இனிமே இன்னொரு சேவாக்கை கடவுளாலையே படைக்க முடியாது
... என்ன இன்னும் இருநூறு வருசத்துக்கு அப்புறம் முருகதாசின் கொள்ளுபேரன் ஷேவாக்கின் டிஎன்ஏவை
ஹீரோவுக்கு தூண்டிவிட்டு ஆஸ்ட்ரேலியாவிலிருந்து வரும் வில்லனை பேட்டாலயே அடிச்சி கொல்றது
மாதிரி படம் எடுக்காமல் இருக்கணும்...
(பேட் மட்டும் இல்ல.. நானும் ஹீரோதாம்பா )
தல சேவாக் இன்னும் படைக்க வேண்டிய சாதனைகள் ஏராளம்... வெஸ்ட் இண்டீஸை தொங்க விட்டதை போல , இந்த இலங்கையையும் , ஆஸ்ட்ரேலியாவையும் ஒருமுறை உரித்து தொங்க விட்டால் என்னை போன்ற கோடானுகோடி கிரிக்கெட் ரசிகனின்
ஆத்மா இறப்பதற்க்கு முன்னரே சாந்தி அடையும்...
டெஸ்ட்ல ஷேவாக்கின் அதிகபட்சம் 319 .. இதுதான் சர்வதேச அரங்கில் ஒரு
இந்திய வீரரின் அதிகபட்ச
ஸ்கோர் ...
ஒன்டேல ஷேவாக்கின் அதிகபட்சம் 219.. இதுதான் சர்வதேச ஆட்டங்களில் உலக அளவில் ஒரு கிரிக்கெட் வீரரின் அதிகபட்ச ஸ்கோர் ...
உச்சத்தில் உச்சம் தொடுவது என்பது இதுதானோ?
3 comments:
http://tasmacdreams.blogspot.com/2011/12/12122001.html
நாய்சேகரின் பிராந்திக்கடை 12122001
என்ன விருவ வச்சு எட்டாம் அறிவு கதை ரெடியா ..? கலக்குங்க ...
Me the 150 !!
Post a Comment