Followers

Copyright

QRCode

Wednesday, September 1, 2010

இந்த உலகம் கதவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திறக்கும்...

சில பாடல்களை கேட்கும் பொழுது நமக்கு உற்சாகம் தானாக பல மடங்கு பெருகும் , நான் பல நேரங்களில் சோர்ந்து போய் இருக்கும் பொழுது பாடல்கள்தான் எனக்கு உற்சாக டானிக்  , அந்த பாடல்களின் பீட் மற்றும் அதனுடைய பாடல் வரிகள் என்னுள் அந்த நொடியில் ஒரு உற்சாகத்தை கொடுக்கும் , அதை அப்படியே பிக் அப் பண்ணி என் மனநிலையை மாற்றி கொள்ளுவேன் ... அந்த வகையில் என்னை உற்சாகபடுத்தும் சில டானிக் பாடல்களை பற்றிதான் இந்த பதிவு ...

இந்த வகையான தன்னம்பிக்கை பாடல்கள் என்றாலே எனக்கு உடனே ஞாபகம் வருவது எம்.ஜி.ஆர் அவர்களின் பாடல்கள்தான் , அவரின் பாடல்களில் எப்பொழுதும் தன்னம்பிக்கை தெறிக்கும் வரிகள் அதிகம் உண்டு , கேட்கும் பொழுது நமக்கும் அந்த தன்னம்பிக்கை தோற்றி கொள்ளும் , அது மட்டும் இல்லை அவர் தன படத்தில் மட்டும் இந்த மாதிரியான பாடல்கள் பாடி நிஜத்தில் நேர் எதிராய் இல்லாமல் , நிஜ வாழ்விலும் ஜெய்த்தவர் என்பதால் அவரின் பாடல்களை கேட்கும் பொழுது தன்னம்பிக்கை ஒரு படி அதிகமாகவே நமக்குள் எழும் ...


"மாபெரும் சபைகளில் நீ நடந்தால் 
உனக்கு மாலைகள் விழ வேண்டும்"

எவ்வளவு அருமையான வரிகள் , கண்ணதாசனின்  எழுத்தும் எம்.ஜி.ஆரின் மாஸும் இந்த பாடலை கேக்கும் பொழுதெல்லாம் எனக்கு ஒரு வியப்பை உண்டு பண்ணும்....இதை இசையோடும் ராகத்தொடும் கேட்கும் பொது நம் ரத்தம் மூளைக்குள் வேகமாக பாயும் பரவசத்தை ஒவ்வொரு முறையும் நான் அனுபவிப்பேன்....நான் ஏதேனும் ஒரு விசயத்தில் தோல்வி அடையும் பொழுது இந்த பாடலை கேட்டால் மீண்டும் என்னுள் ஒரு வெறி கிளம்பும் , சோர்வு எல்லாம் நொடியில் காணாமல் போய் விடும் ...இந்த பாடல் வேட்டைக்காரன் படத்தில் வரும் "உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் " பாடல் ... நீங்களும் எப்பொழுதாவது சோர்ந்து போய் இருக்கும் பொழுது இந்த பாடலை கேட்டு பாருங்கள் , நான் சொல்லுவது உங்களுக்கு புரியும் ....

எம்.ஜி.ஆர் பாடல்களுக்கு அடுத்து தன்னம்பிக்கை பாடல்கள் என்றால் அது நம்ம சூப்பர் ஸ்டார் பாடல்கள்தான் ...எம்.ஜி.ஆருக்கு ஒரு கண்ணதாசன் என்றால் இவருக்கு வைரமுத்துவும் வாலியும் ... 


"காத்து இருப்போர் எத்தனை பேரோ 
உன்னிடம் தோற்பதற்கு"

"படைத்தவனின் துணை இருக்க 
அடுத்தவனின் துணை எதற்கு"

பணக்காரன் பட பாடல் அந்த காலகட்டத்தில் ரஜினிக்காகவே எழுதபட்ட பாடல் , கெத்து பாட்டு என்று சொல்லுவார்களே அதற்க்கு சரியான உதாரணம் இது , அந்த பாடலில் வரும் வரிகள் அனைத்தும் பின்னால் உண்மையிலேயே நடந்தது .. அதனாலேயே இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ... இது தனிமனித துதியாக எழுதப்பட்டு இருக்காது , தன்னம்பிக்கை ஊட்டும் வரிகளாகவே இந்த பாடல் முழுவதும் படைத்திருப்பார் வாலி ....வாழ்கையில் வெற்றி பெற யார் துணையும் வேண்டாம் , கடவுள் துணை இருந்தால் போதும் என்று அர்த்தம் தரும் இந்த வரிகள் , வாழ்க்கையில் உதவி செய்ய யாரும் இல்லாமல் தனியாளாய் முன்னேற துடிக்கும் எந்த இளைங்கனுக்கும் பிடிக்கும் .

"இந்த உலகம் கதவடைத்தால் 
எட்டி உதைப்பேன் 
அது திறக்கும்"

வைரமுத்துவின் வார்த்தை ஜாலம் , எம்.ஜி.ஆர். அவர்களை மனதில் வைத்து எழுதப்பட்ட பாடல் , இருவர் படத்தில் வரும் ஆயிரத்தில் நான் ஒருவன் பாடல்... இசைப்புயலின் இசையும் அதை படமாக்கிய விதமும் மிகவும் அருமையாய் இருக்கும்... இது  நான் என்னுடைய Gchat message winowஇல் வைத்திருக்கும் வரி .. பல பேர் திமிர்தனமாக இருக்கு என்று சொல்லி இருக்கிறார்கள் , எனக்கு இதில் திமிர்த்தனம் எதுவும் தெரியவில்லை...  

எத்தனை தடைகள் வந்தாலும் உடைத்தெறிந்து இலச்சியத்தை அடைய துடிக்கும் ஒரு இளைஞன் பாடும் பாடலாக அமைந்திருக்கும் பாடல் இது , ஒவ்வொரு வரியிலும் வைர முத்து வைரமாய் மின்னுகிறார்...

இந்த மூன்று பாடல்களும்தான் நான் எப்பொழுதும் விரும்பி கேட்கும் பாடல்கள்... இதை தவிர உங்களுக்கு பிடித்த இந்த வகையான பாடல்கள்  இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள் , அதையும் என் லிஸ்டில் சேர்த்து கொள்கிறேன். 

8 comments:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

"காத்து இருப்போர் எத்தனை பேரோ
உன்னிடம் தோற்பதற்கு"

exellent.............

"ராஜா" said...

// ur foolower also..

நன்றி நண்பரே ...

வினோ said...

நல்ல தேர்வு.. அருமையான பாடல்கள்

Jeyamaran said...

Super..............

Sathish said...

nice post ya.
actually this is my fav movie...
good one...

http://eyesnotlies.blogspot.com

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அசத்தல் நண்பரே..,

Yoganathan.N said...

எத்தனையோ இருக்கு. எதைச் சொல்ல, எதை விட?
நீங்கள் குறிப்பிட்ட அந்த எம்.ஜி.ஆர் பாடல் வரியை அடிக்கடி என் முகப்புத்தகத்தில் இட்டுக் கொள்வேன். :)

தத்துவப் பாடல்கள் எனக்கு பிடிக்கும். அதை விட கீழுள்ள பாடல்கள் இன்னும் பிடிக்கும். அவையும் தத்துவப் பாடல்களில் வருகின்றனவா என்று தெரியவில்லை. ஆனால், இது போன்ற பாடல்களை 'pathos songs' என்று ஆங்கிலத்தில் அழைப்போம்.

1. 'உனக்கு கீழே உள்ளவர் கோடி... நினைத்து பார்த்து நிம்மதி நாடு... மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா... வாழ்க்கையில் நடுக்கமா...'

2. 'ஆசையே அலை போலே... நாமெல்லாம் அதன் மேலே... ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே...'

3. 'பிறக்கும் போதும் அழுகின்றாய்... இறக்கும் போதும் அழுகிறாய்... ஒரு நாளின் கவலையெல்லாம் சிரிக்க மறந்தாய் மானிடனே...'

4. 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், தெய்வம் ஏதுமில்லை... நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை...'

5. 'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா... வருவதை எதிர் கொள்ளடா...'

6. 'சட்டி சுட்டதடா கை விட்டதடா... புத்தி கெட்டதடா நெஞ்சை தொட்டதடா...'

ஆயிரம்தான் இருந்தாலும், எம்.எஸ்.வி போல வராது... MSV Rocks... :)

DHANS said...

namakku attagasam padathula unekkenna paatu rompa pudikkum.

sornthu irukum pothu ketta konjam gethu thana aeridum.

appuram vettri kodi kattu padayappa la....

LinkWithin

Related Posts with Thumbnails