நேற்று நண்பர் பாலா அவர்கள் ஒரு தொடர் பதிவிற்கு என்னை அழைத்திருந்தார் .... அது என்னனா நிறைய கேள்விகளா இருக்கும்மாம் அதுக்கு நாம பதில் சொல்லணுமாம்... நானும் கேள்வியெல்லாம் பாத்தேன் எல்லாம் நம்மள மாட்டி விட்டு அடி வாங்க வைக்கிற கேள்விகளா இருந்தது ...... என்னையும் ஒரு பதிவரா மதிச்சி அந்த தொடருக்கு கூப்பிட்ட அவருக்கு நன்றி சொல்லியே ஆகணும் .... நான் பரிட்சையில பதில் எழுதுனாகூட நக்கல் கலந்து எழுதிதான் பழக்கம் .... இது பதிவுலகம் வேற இங்க நக்கலாத்தான் எழுதணும் ... அதனால நண்பர் பாலா கோவித்துகொள்ள மாட்டார் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன் ,...
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
ஆரம்ப கால கட்டத்துல "புலியூரான் ராஜா" அப்படின்னு வச்சிருந்தேன் ... ஒருதடவ நம்ம இளையதளபதியோட பாசக்கார அடியாள் பயபுள்ள ஒண்ணு அவர கிண்டல் பண்ணி நான் எழுதுன பதிவுல கௌண்டமணி பாணில ஒரு கேள்வி கேட்டுபுடுச்சி (அந்த கொ..... கேள்விதாங்கோ) அன்னைக்கு முடிவு பண்ணினேன் , நமக்கு ஊர் பாசத்த விட தன்மானம்தான் பெருசுன்னு ... அன்னைல இருந்து வெறும் ராஜாவா மாறிட்டேன்...
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
அது நம்ம பாதி பெருதாங்கோ... எங்க அப்பா இவனுக்கு ராஜான்னு மட்டும் பேரு வச்சா பயபுள்ள பேருல இருக்கிற கெத்துல திமிரு பிடிச்சி ஆடிடும் ... இவன் கடைசி வரைக்கும் நம்ம சொல்றத கேட்டுகிட்டு நமக்கு அடிமையா பழமா இருக்கணும் அப்படிங்கிற ஆசையில கூட கனிய சேத்து ராஜாகனின்னு வச்சாரு... ஆனா பாருங்க அவர் நெனச்சதுக்கு நேர்மாறா நடந்திடுச்சி...
ஆனா பதிவுல நம்ம முழு பேரையும் போட்டா நம்ம எதிரிகள் அண்ணேன் நீங்க பழமா? என்று நம் பேரை வைத்தே நம்மை வாரகூடும் என்பதால் அந்த வார்த்தையை நீக்கி விட்டு வெறும் ராஜாவாகி விட்டேன்...
3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....
அது வேற ஒன்னும் இல்லைங்க ... நம்ம தானை தலைவர் தமிழ் இன காவலர் ஒரு எழுத்தாளரா இருந்துதான் இன்னைக்கு முதலமைச்சரா ஆனாராம்... எனக்கு சின்ன வயசுல ஜாதகம் பாத்தப்ப இது மாதிரி ஜாதகம் கோடியில ஒருத்தனுக்குதான் அமையும் ... இவன் குறைந்தபட்சம் ஒரு மாநிலத்துக்கு முதல் அமைச்சராவவது ஆவான் என்று என்னை உசுப்பேத்தி விட்டார்... முதலமைச்சரா ஆகணும்னா ஒண்ணு சினிமால பெரிய ஆளா வரணும் .. நம்ம அழகுக்கு அது கொஞ்சம் கஷ்டம்தான் .. அதனாலத்தான் இரண்டாவது வழியான எழுத்தாளனா ஆகிவிடுவது என்று முடிவு செய்து அதே ஜோசியகாரனிடம் நல்ல நேரம் கேட்டு ஒரு சுபயோக சுப தினத்தில் இந்த பதிவுலகத்தில் காலடி எடுத்து வைத்தேன்...
(நான் மட்டும் முதல் அமைச்சராக வந்து விட்டால் என்னை வளர்த்த இந்த பதிவுலகத்திற்கு என்று தனியாக ஒரு அமைச்சரவை ஒன்று உருவாக்கி , இங்கு இருக்கும் சில பிரபல பதிவர்களுக்கு அதில் முக்கியமான பணம் விளையாடும் பதிவிகளையும் கொடுத்து கொஞ்ச நாளிலேயே ஏதேனும் ஊழல் கேசுல அவர்களை மாட்டி விட்டு உள்ள தள்ளி ஆயிசுக்கும் கலி தின்ன வச்சிடுவேன் .. பின்ன நம்ம வழிய பாலோவ் பண்ணி அவனுகளும் வளர்ந்து நமக்கு போட்டியா வந்திட்டானுகண்ணா)
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
நம்ம அண்ணன் இளைய தளபதி இருக்கும் பொது நமக்கு வேற என்ன வேணும்... அரசியலுல சம்பாதிக்கணும்னா தலைமைக்கு சொம்பு அடிக்கணும்.. சினிமால சம்பாதிக்கணும்னா ரசிகனுக்கு மொட்ட அடிக்கணும் .. இது மாதிரி பதிவுலகுல பிரபலம் ஆகணும்னா ஒரே வழி நம்ம இளைய தளபதிய நாரடிக்கணும் .... ஏன்னா தமிழ்நாட்டுல அவருக்கு அம்புட்டு மவுசு... நானும் இதத்தான் பாலோவ் பண்ணுனேன் இன்னைக்கு உங்கள் முன்னாள் ஒரு பிரபலமாக எழுதி கொண்டு இருக்கிறேன்.....
இளைய தளபதியை நம்பினோர் கைவிடபடார்....
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
இல்லைங்க நமக்கு அமெரிக்கா அதிபர் ஒபமால இருந்து எங்க ஊரு கவுன்சிலர் மங்கம்மா வரைக்கும் அரசியல் டீலிங் இருக்கு ... அதனால நான் எது சொன்னாலும் அது உலக அரசியலில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணி விடும், உலக பொருளாதாரம் அதலபாதாளத்தில் வீழ்ந்து விடும் என்பதால் பப்ளிக்கா ஏதும் சொல்றதில்லை .. ஒரு தடவ மப்பு அதிகமாகி நம்ம கிளிண்டன் மோனிகாவ வச்சிக்கிட்டு இருந்த மேட்டர ஒளரிகொட்டிடேன்.... நம்ம எப்பவும் கண்காணிச்சிகிட்டு இருக்கிற FBI ஆளுக அத கேட்டுட்டாணுக... அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு உங்களுக்கே தெரியும் ... அதனால நான் எதையும் இங்க எழுதுறது இல்லை...
(நம்ம காதல் கதையை மட்டும் ஒரு தொடரா எழுதிகிட்டு வரேன்.....)
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
மூன்றாவது கேள்விக்கான பதில்தான் இதுக்கும்... முதலமைச்சர் ஆவுரதுதான் என்னோட எய்மு...
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
என்னோட சொந்த பேருல இது ஒண்ணுதான் ஆனா பினாமி பேருல நெறைய இருக்கு ... உங்களுக்கு ஆனந்தி , ப்ரீத்தி , கண்மணி இது மாதிரி ஏதாவது பொண்ணுங்க பேருல பின்னூட்டம் வந்தால் ஜொள்ளு விடுறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சி விடுங்க .. ஏன்னா அந்த கமெண்ட் போட்டது நானா கூட இருக்கலாம்...
(அப்புறம் நானும் நண்பர் பாலாவும் சேர்ந்து பதிவுலகில் ஒரு "ரமணா வேலை" பார்த்து கொண்டு இருக்கிறோம் , கூடிய விரைவில் பல பெருந்தலைகள் அதில் மாட்டும், பல அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் உங்களுக்கு கிடைக்கும்.. wai and see...)
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
அமிர்கான் அப்படின்னு ஒரு பதிவர் இருக்காராம் ... அவர் எழுதிற பதிவுக்கெல்லாம் ஆயிரம் கமெண்ட் குறையாம வருமாம் ..
நானும் போய் படிச்சி பாத்தேன் பயபுள்ள என்னதான் எழுதுதுன்னு ...சும்மா "hai buddies how are you? little bit busy... blog you later..." அப்படின்னு நாலு வார்த்தை எழுதுது.. அதுக்கு ஆயிர கணக்குல கமெண்ட் வருது ... நானும் நிறைய தடவை அவர் பதிவுக்கு பொய் கமெண்ட் போட்டுட்டு வரேன் , பயபுள்ள ஒரு தடவ கூட ஏன் ப்ளோக்குக்கு வந்து பின்னூட்டம் போட மாட்டேங்கிது ... அவர பாத்துதான் எனக்கு பொறாமை, கோபம் எல்லாமே....
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
வேற யாரு நம்ம இளையதளபதிதான்.. அடியாள் வச்சி என்ன அசிங்க அசிங்கமா திட்டி கமெண்ட் போட்டாரு...
அப்பறம் நம்ம சுஜாதா ஒரு நாள் கனவுல வந்து அழிஞ்சிகிட்டு இருக்கிற தமிழ் எழுத்துலக காப்பாத்த வந்த ஹீரோ நீதான் அப்படின்னு பாராட்டிட்டு போனாரு... எனக்கு பெரும பீத்திகிறது பிடிக்காதுங்கிரதுனால வெளியில சொல்லல .... (இந்த மாதிரி புகழ்ச்சி பிடிக்காத முதல் அமைச்சர் உங்களுக்கு வேணும்னா என்ன சீக்கிரம் பிரபலமாக்கிருங்க)
இந்த ஒரு கேள்விக்காவது சீரியஸா பதில் சொல்லுறேன் ... என்னை முதன் முதல் பாராட்டிய நபர் நம்ம தல "யோகநாதன்" மற்றும் நண்பர் "பாலா"வும்தான் .. இன்று வரை அவர்கள் என்னை ஊக்கபடுத்தி கொண்டு இருக்கிறார்கள்...
10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
ஹீ ஹீ என்ன பத்தி எனக்கே முழுசா தெரியாதுங்க... தெரிஞ்சிகிட்டு சொல்லுறேன்....
அப்புறம் நான் இந்த பதிவை தொடர அழைப்பது இதுவரை எழுதாத அனைவரையும்
(நானும் தேடி தேடி பாக்குறேன் எழுதாதத ஒரு பய சிக்கமாட்டேன்றான்...
எல்லாரும் எழுதிட்டாங்க.. நான்தான் கடைசி போல,,, அதான் ஒரு பில்ட் அப்புக்கு )
9 comments:
இந்த பதிவுல இருக்கிற சொற்சித்திரத்தை கண்டுபிடிக்கவே முடியவில்லை ....அத்தனை இலக்கிய தரமாக உள்ளது
நானும் உங்க பதிவுலையும் பின்னோட்டம் போட்டேன் ..இந்த பதிவுக்கும் பின்னோட்டம் போடுறேன் ..நீங்க நம்ம பக்கம் வரவே இல்லையே .... இந்த பிரிபால பதிவாளர்களே இப்படி தான்
"தெரிஞ்சிகிட்டு சொல்லுறேன்.... "
அதான் உங்களுக்கே தெரியாதுன்னு தெரிந்ததை சொல்லிவிட்டீங்களே
ஆமாங்க அமீர் கான் ஒரு ஆணாதிக்கவாதியாக தான் இருக்க வேண்டும் .....
"மூன்றாவது கேள்விக்கான பதில்தான் இதுக்கும்... முதலமைச்சர் ஆவுரதுதான் என்னோட எய்மு"
வாவ் ..... தஞ்சாவூர் கல்வெட்டு ல செதுக்கி வைச்சுட்டு ...பக்கத்துல உட்கார்ந்துகொங்க
:))
அந்த புலியூரான்... அது நானா சகா?
@ டம்பி மேவீ
//இந்த பதிவுல இருக்கிற சொற்சித்திரத்தை கண்டுபிடிக்கவே முடியவில்லை ....அத்தனை இலக்கிய தரமாக உள்ளது
ஆகா இது பாராட்டா இல்ல ஆப்பா? நமக்குள்ள பிரச்சனைய பேசி தீத்துக்கிடுவோம் .. இப்படி உள்குத்து வேலையெல்லாம் வேணாம் .. ரொம்ப வலிக்கிது...
//நானும் உங்க பதிவுலையும் பின்னோட்டம் போட்டேன் ..இந்த பதிவுக்கும் பின்னோட்டம் போடுறேன் ..நீங்க நம்ம பக்கம் வரவே இல்லையே .... இந்த பிரிபால பதிவாளர்களே இப்படி தான்
ஐ... என்னையும் ஒரு ஜீவன் பிரபல பதிவர்னு ஒத்துகிடுச்சி... உமக்கு நான் முதலமைச்சர் ஆனவுடனே உள்துறையோ இல்ல மகளிர் அணி நிர்வாக பொறுப்போ கொடுக்கிறேன்...
//ஆமாங்க அமீர் கான் ஒரு ஆணாதிக்கவாதியாக தான் இருக்க வேண்டும் ....
ஆமா பாஸ் பல் இருக்குறவன் பக்கோடா சாப்டுறான்...
//வாவ் ..... தஞ்சாவூர் கல்வெட்டு ல செதுக்கி வைச்சுட்டு ...பக்கத்துல உட்கார்ந்துகொங்க
நிறைய பதிவர்கள் இதுக்காக தஞ்சாவூருக்கு போய் அங்க இப்ப குத்த வச்சி உக்கார எடமே இல்லையாம் வேற ஏதாவது ஒரு நல்ல ஊரு பிகரு நெறைய இருக்குற ஊரா பாத்து சொல்லுங்க ...
@ கார்க்கி
// அந்த புலியூரான்... அது நானா சகா?
உங்க பேருல அந்த கமெண்ட் வரலே சகா? ஆனா எனக்கு இப்பதான் மைல்டா ஒரு டவுட் வருது?ஹீ ஹீ ஹீ ...
//இந்த ஒரு கேள்விக்காவது சீரியஸா பதில் சொல்லுறேன் ... என்னை முதன் முதல் பாராட்டிய நபர் நம்ம தல "யோகநாதன்" மற்றும் நண்பர் "பாலா"வும்தான் .. இன்று வரை அவர்கள் என்னை ஊக்கபடுத்தி கொண்டு இருக்கிறார்கள்...//
நானா? சரியாக ஞாபகம் இல்லை. உங்கள் எழுத்தில் உங்களுக்கே உரிய ஒரு 'ஸ்டைல்' உள்ளது, தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள் :)
By the by, முதலமைச்சர் ஆக எனது மனமார்ந்த வாழ்த்துகள். :)
.
உங்கள மாதிரி ஒரு தலைவர் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்.
தலைவரே கண்டிப்பா நீங்க அரசியலுக்கு வரணும்...
ஆமா நீங்க காமடி பண்ணலியே?
Post a Comment