Followers

Copyright

QRCode

Saturday, August 14, 2010

பதிவுலகமும் பதிவர்களும்

இந்த பதிவுல எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இன்றைய பதிவுலகம் எப்படி இயங்குகிறது , பதிவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை பற்றி யாருக்கும் ஜால்ரா அடிக்காமல் எழுத போறேன் 

நன் இந்த பதிவுலகத்த பத்தி தெரிஞ்ச்சிகிட்டதே ஒரு பன்னிரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் .. எனக்கு பதிவு எழுதும் நண்பனோ , இல்லை அதை  படித்தி விட்டு கமெண்ட் போடும் நண்பனோ கிடையாது ... அதனால் இப்படி ஒரு மேட்டர் இருக்குதுன்னே எனக்கு பல வருசமா தெரியாம போச்சி ... நான் இத பத்தி தெரிஞ்சிகிட்டதே ரொம்ப தற்செயலான சம்பவம்தான்... எனக்கு ஒரு மெயில் வந்தது , தமிழில் டைப் செய்வது எப்படின்னு .. நம்ம கூகிள் transliteration அந்த மெயில் மூலமாத்தான் எனக்கு அறிமுகமே... நான் அத யூஸ் பண்ணி டைப் பண்ண முதல் வார்த்தையை இங்கே எழுத முடியாது , அது ரொம்ப பர்சனல் ... அடுத்து நான் டைப் பண்ணுன வார்த்தை "தல அஜித்" , அந்த வார்த்தைய அப்படியே நம்ம கூகிள் ஆண்டவர்கிட கொடுத்து தேட சொன்னேன் ... அவரும் நெறைய வழிகளை(அதாங்க லிங்க்)  காட்டினார் .. அதுல முதல் வழிதான் என்ன இந்த பதிவுளகத்திர்க்குள் அடி எடுத்து வைக்க காரணமான வழி... 

நான் ஆரமபத்துல பதிவுலகத்த பத்தி எதுவும் தெரியாமத்தான் வந்தேன் ... இங்க இருக்கிறவனெல்லாம் பெரிய பெரிய எளுத்தாளனுகன்னு உண்மையிலேயே நம்புனேன் ... ஆனா போக போகத்தான் தெரிஞ்சது இங்க பாதிக்கு மேல எல்லாம் டுபாக்கூர் எழுத்தாளர்கள் என்பதே .. 

முதல் வகையான பதிவர்கள் பிரபல பதிவர்கள் என்று தங்களை தாங்களே அடை மொழி இட்டு அழைத்து கொள்ளுபவர்கள் .... பிரபலம் அப்டிங்கிற  வார்த்தைக்கு இங்க வரைமுறையே கிடையாது ... இவனுங்க வேலை என்ன தெரியுமா தனக்குன்னு நாலு ஜால்ராக்களை உருவாக்கி கொள்ளுவது .... அந்த ஜால்ராக்கள் இவரு என்ன பதிவு போட்டாலும் கலக்கிடீங்க , எப்படி உங்களால மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடியுது , நான் படித்த சிறந்த பதிவு இதுதான் , நீங்க மட்டும் தமிழ் சினிமால இயக்குனரா ஆனீங்க ஒவ்வொரு படமும் சில்வர் சூப்பிளிதான் என்று இஸ்டத்துக்கு சொம்பு அடிப்பார்கள் ..... அந்த பிரபலமும் இவர்களின் சொம்பில் மயங்கி தொடர்ந்து மொக்கை பதிவுகளாய் எழுதி படிக்கிறவனை சாவடிப்பார்.... இவர்களுக்கு எல்லாம் சினிமாவில் ரஜினி போல பதிவுலகத்திற்கு நாமதான் சூப்பர்  ஸ்டார் என்று நினைப்பு ... ஆனால் இவர்களை பார்க்கும் பொழுது எனக்கு J.K.ரித்தீஷ்தான் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறார்... மேலும் இந்த பிரபலங்களுக்குள் அப்ப அப்ப நாற்காலி சண்டை வேறு நடக்கும் .. அதுதான் உச்சகட்ட காமெடியே... 

இரண்டாவது வகை பதிவர்கள் பிராப்ள பதிவர்கள் என்று மற்றவர்களால் அழைக்கபடுபவர்கள் ... கம்யூனிசம் , கடவுள் மறுப்பு என்று ஏதாவது ஒரு சித்தாந்தத்தை கையில் எடுத்து கொண்டு எதற்கெடுத்தாலும் சண்டை போடுபவர்கள் .... .. விவசாயம் அழிகிறது என்று பதிவில் கூப்பாடு போடுவார்கள் ஆனால் ஊரில் இருக்கும் தங்கள் விவசாய நிலத்தை விற்று விட்டுதான் ஒரு பன்னாட்டு நிறுவன முதலாளி விற்கும் விலையுயர்ந்த பைக் வாங்குவார்கள்.... முதலாளித்துவம் ஒழிக என்று தன முதலாளி கொடுத்த லேப்டாப்பில் டைப் அடித்து கொண்டு இருப்பார்கள்...  இவர்களின் பதிவுகளை நான் ஆரம்பத்தில் படிக்கும் பொழுது உண்மையிலேயே வியந்தேன் , எப்படி இவர்களால் மட்டும் எந்த ஒரு விசயத்தையும் மாற்று கண் கொண்டு பார்த்து எழுத முடிகிறது என்று  , ஆனால் ரொம்ப நாள் கழித்துதான் எனக்கு தெரிய வந்தது இவர்கள் தங்கள் இயக்கங்கள் நடத்தும் பத்திரிக்கையை தினமும் படித்து அதில் எழுதபட்டிருக்கும் கட்டுரைகளை அப்படியே காப்பி அடிக்கும் காப்பி பதிவர்கள் என்பது....

மூன்றாவது வகை பிரபலங்களுக்கு சொம்பு அடிக்கும் பதிவர்கள் ... இவர்கள் சினிமா , விளையாட்டு , இசை என்று  ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு பிரபலத்தை தங்கள் மானசீக குருவாக ஏற்று கொண்டவர்கள் .... அவர்களை பற்றி உயர்வாக எழுதியே காலத்தை ஓட்டுபவர்கள்... இவர்களின் தலைவனை பற்றி வேறு ஏதாவது ஒரு பதிவர் தவறாக எழுதி விட்டால் போதும் உடனே அவர்களை சொறி பிடித்த தெரு நாய் , சாக்கடையை குடிக்கும் பண்ணி என்று திட்டி ஒரு எதிர் பதிவு போடுவார்கள் ... எனக்கு தெரிந்து இதை போன்று எதிர் பதிவு எழுதுவதையே தன முழுநேர தொழிலாக வைத்திருக்கும் பதிவர்கள் நிறைய உண்டு இங்கே.... இந்த வகை பதிவர்கள் சீக்கிரமே பிரபல பதிவராக ஆக வாய்ப்பு அதிகம் ... ஏதேனும் ஒரு தலைவனை பற்றி எழுதும் இவர்களுக்கு அந்த தலைவனின் தொண்டர்கள் பலர் ஜால்ராக்களாக மாற வாய்ப்பு உண்டு .... 

 
நான்காவது வகை ஜொள்ளர் பதிவர்கள் ... இவர்களின் வேலையே பெண் பதிவர்கள் எழுதும் பதிவுகளை தேடி போய் படித்து பின்னூட்டத்தில் ஜொள் வடிப்பதே ....ஆனால் இவர்களின் திறமை நம்மை வியப்படைய செய்யும் , அன்றுதான் அந்த பெண்பதிவர் வலைபூவையே தொடங்கி தன முதல் பதிவை எழுதி இருப்பார் ... இவர்கள் எப்படிதான் கண்டு பிடிப்பார்களோ தெரியாது , பின்னூட்டத்தில் பலாபழத்தில்  மொய்க்கும் ஈ போல மொய்த்து விடுவார்கள் .... இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் அவர்களுக்கு டிப்ஸ் வழங்க ஆரம்பித்து விடுவார்கள் ... உங்க ப்ளாக் கலர் சரி இல்ல இந்த கலர் வையுங்க , டெம்பிளேட் கொஞ்சம் சரி இல்ல இந்த டெம்பிளேட் நல்லா இருக்கும் என்று கடலை போட ஆரம்பித்து விடுவார்கள் .... எனக்கு தெரிந்து ஆரம்பித்த முதல்நாளே இருபது followers பெற்ற பெண் பதிவர்கள் இருக்கிறார்கள் .... அந்த இருபது followers எல்லா பெண்பதிவர்களுக்கும் இருப்பார்கள் .... பின்னர் இப்படியே சொம்படித்து அடித்து அந்த பெண்பதிவரை தன்னுடைய follower ஆக ஆக்கி கொள்ளுவார்கள் ... அப்புறம் என்ன பின்னூட்டத்தில் ஒரே கருகல் வாசனைதான் ... நாம் அந்த பக்கம் போனால் நமக்கு மூச்சு முட்டும்...

ஐந்தாவது வகை நம்ம கௌண்டமணி பாணி பதிவர்கள் ... பதிவுலகை ரொம்ப சீரியஸாக எடுத்து கொண்டு அதில் தனக்கு பெண் தேடுவது , தன்னை பிரபலமாக காட்டி கொள்ளுவது என்பதை போன்று காமடிகள் எதுவும் பண்ணாமல் பதிவுலகையே காமெடி ஆக்குபவர்கள்... பதிவுலகில் எனக்கு மிகவும் பிடித்த நான் விரும்பி படிக்கும் பதிவர்கள் இவர்களே .... இவர்கள் எதையுமே சீரியஸாக எழுத மாட்டார்கள் ... இவர்கள் எழுதும் பதிவுகள் எல்லாமே சும்மா டிரைலர்தான் , மெயின் பிச்சர் பின்னூட்டத்தில்தான் காட்டுவார்கள் ... இவர்களின் பின்னூட்டங்களை படித்தால் மூச்சு திணற திணற சிரிக்கலாம்..... அதுவும் பிரபல பதிவர் யாரவது இவரின் பின்னூட்டங்களை படிக்க நேர்ந்தால் கண்டிப்பா உங்க பதிவுலகமும்  வேணாம் பொங்க சோறும் வேணாம் என்று வெறுத்து போய் பதிவுலகை விட்டே ஓடி போய் விடுவார்(வெக்கம், மானம் , ரோசம் உள்ளவராய் இருந்தால்)  ...    

இதை எல்லாம் தாண்டி உண்மையிலேயே தங்கள் எழுத்து  திறமையின் மூலம் தங்கள் பதிவுகளை பல வாசகர்களை படிக்க வைக்கும் திறமை வாய்ந்த பதிவர்களும் ஒரு சிலர் உண்டு நம் பதிவுலகில்.... இந்த ஒரு சிலர் மட்டுமே பதிவுலகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லுகிறவர்கள், இவர்களை போல இன்னும் பல பதிவர்கள் கிடைத்தால் நம் பதிவுலகத்திற்கு சிறப்பான எதிர்காலம் உண்டு.... 

 

32 comments:

tamildigitalcinema said...

உங்களது பதிவுகள் இன்னும் ஏராளமான வாசர்களை சென்றடைய http://writzy.com/tamil/ ல் உங்கள் பதிவுகளை இணையுங்கள்...

ஸ்ரீ.... said...

ராஜா,

யார்மீது இவ்வளவு கோபம்? இருந்தாலும், கோபத்தில்கூட பதிவுலகத்தைப் பற்றிய சரியான இடுகை.

ஸ்ரீ....

"ராஜா" said...

@ ஸ்ரீ
கோபம் இல்லை .... நான் கடுப்பாக உணர்ந்த விஷயங்கள் பல பதிவுகளை படிக்கும் பொழுது ..... நன்றி sir உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

ஜிஎஸ்ஆர் said...

என்ன நண்பா ரொம்ப சரியாக எழுதியிருக்கிங்க , மிகவும் சரியான எதார்த்தமான உண்மை

ILLUMINATI said...

சரியான உண்மை.அப்புறம்,அந்த அஞ்சாவது ரக பதிவர்கள் தான் எனக்கும் பிடிக்கும்.அதுல சிலர் எனக்கு நண்பர்கள்.நெட் ல நண்பர் ஆனவங்க தான்.ஈமெயில் பழக்கம் தான்.ஆனா,அந்த நட்பு மிக அழகு.கும்மி ஆரம்பம் ஆகும் போது முதவரிசைல நின்னு கும்மி அடிக்குற பயலுகள்ள நானும் ஒருத்தன். :)

அப்புறம்,இந்த மொக்கைப் பதிவரின் சார்பாக நன்றிகள். :)

தேவன் மாயம் said...

யோசித்து,யோசித்து எழுதி இருக்கீங்க!

Robin said...

அப்பட்டமான உண்மை.
//இதை எல்லாம் தாண்டி உண்மையிலேயே தங்கள் எழுத்து திறமையின் மூலம் தங்கள் பதிவுகளை பல வாசகர்களை படிக்க வைக்கும் திறமை வாய்ந்த பதிவர்களும் ஒரு சிலர் உண்டு நம் பதிவுலகில்.... இந்த ஒரு சிலர் மட்டுமே பதிவுலகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லுகிறவர்கள், // இவர்களுக்கு தமிழ் பதிவுலகம் தரமாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் ஊக்கமளிக்கவேண்டும்.

DrPKandaswamyPhD said...

பரவாயில்லீங்க தம்பி, ஒரு வருசத்திலேயே பதிவுலகத்தை நன்றாகப் புரிந்து கொண்டீங்க.

tamilfa said...

கலக்கிடீங்க , எப்படி உங்களால மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடியுது , நான் படித்த சிறந்த பதிவு இதுதான்

tamilfa said...

தைரியமாக பதிவு இட்டதற்கு வாழ்த்துக்கள்.

கிரி said...

neenga enna ragam?

(for this question...u r not suppose to peep into my site and write about me.... no frustration pls...genuine answer required)

ஆயிரத்தில் ஒருவன் said...

அருமையான பதிவு வாழ்த்துக்கள்

நிலாமதி said...

பதிவுலகை நன்றாக் கவனித்து எழுதியிருகிறீர்கள். . மேலும் தொடர வாழ்த்துக்கள்

Umapathy said...

பதிவுலகினை ஒரு பிரதி பதித்து இருக்கீறீர்கள்

ந.ர.செ. ராஜ்குமார் said...

//ஒரு வருசத்திலேயே பதிவுலகத்தை நன்றாகப் புரிந்து கொண்டீங்க.

ஒரு சில பதிவுகளை(பொது) படித்தபோதே தெரிந்து விட்டது. நேரில்கூட அவ்வளவு கெட்ட வார்த்தைகளைக் கேட்டதில்லை. எழுதுபவர்கள் சகட்டு மேனிக்கு எழுதினாலும் நமக்குத் தேவையானதை வடிகட்டி படித்துக் கொள்ள வேண்டியதுதான்.

"ராஜா" said...

@ GSR
நன்றி நண்பரே .. வருகைக்கு

@ ILLUMINATTI
அந்த கும்மிகளில் நான் பங்கு பெறுவதில்லை என்றாலும் எல்லா கும்மிகளையும் தவறாமல் படித்து சிரிப்பேன் ...அப்பறம் .உங்க தன்னடக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மொக்கை பதிவரே ...

@ தேவன் மாயம்

நன்றி நண்பரே வருகைக்கும் கருத்துக்கும்

@ Robin
கண்டிப்பாக அவர்களுக்கு ஊக்கம் தர வேண்டும் ....

@Dr.Kandaswamy PhD

sir இவனுகளை பத்தி எனக்கு வந்த புதுசுலே புரிஞ்சிருச்சி.. ஆனா அத எழுத எனக்கு இப்பதான் தைரியம் வந்தது... பெரிய மனுசங்க எல்லாம் என்னுடைய பதிவிற்கு வந்திருக்கீங்க ரொம்ப சந்தோசம் sir....

@ tamilfa
அடுத்த விஜய் படத்திற்கு வசனம் எழுதுவதற்கான அத்துணை தகுதியும் உங்களுக்கு இருக்கு ...try பண்ணி பாருங்க

@ கிரி
நான் ஐந்தாவது வைகையாக இருக்கவே ஆசைபடுகிறேன் ... சில சமயங்களில் தல மேல் இருக்கும் ஒரு அளவுகடந்த பாசத்தினால் மூன்றாவது வகை பதிவராக மாறிவிடுவேன் ...

@ ஆயிரத்தில் ஒருவன்
நன்றி நண்பரே ...

@ நிலாமதி
மேலுமா? இருந்தாலும் தங்கள் வாழ்த்துக்கு நன்றி....

@umapathy
நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

@ ந.ர.செ. ராஜ்குமார்
க.க.க.போ

Mohamed Faaique said...

ஆஹா... பதிவுலகின் "தமிழ்படம்"

"ராஜா" said...

@ Mohamed Faaique

ஹி ஹி ஹி... நன்றி நண்பரே

மதார் said...

//இவர்களை பார்க்கும் பொழுது எனக்கு J.K.ரித்தீஷ்தான் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறார்... மேலும் இந்த பிரபலங்களுக்குள் அப்ப அப்ப நாற்காலி சண்டை வேறு நடக்கும் .. அதுதான் உச்சகட்ட காமெடியே... //


இல்லாத ஒன்றை நினைத்து போடும் வெட்டிச்சண்டை.


//பிரபல பதிவர் யாரவது இவரின் பின்னூட்டங்களை படிக்க நேர்ந்தால் கண்டிப்பா உங்க பதிவுலகமும் வேணாம் பொங்க சோறும் வேணாம் என்று வெறுத்து போய் பதிவுலகை விட்டே ஓடி போய் விடுவார்(வெக்கம், மானம் , ரோசம் உள்ளவராய் இருந்தால்)//இதெல்லாம் இருந்தால் எப்படி பிரபலம் ஆவது?

Riyas said...

ஆஹா பதிவுலகத்த பற்றி புட்டு புட்டு வைககிறிங்க..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

பாட்டெழுதி பெயர் வாங்கும் புலவர்களும் உண்டு குற்றம் கண்டு பிடித்து பெயர் வாங்கும் புலவர்களும் உண்டு...

டம்பி மேவீ said...

ம்ம்ம் ..... தல என்னை மாதிரி டம்மி பீஸ் பற்றியெல்லாம் நீங்க சொல்லவே இல்லையே ????

பாஸ்கரன் சுப்ரமணியன் said...

Excellent One, Really Appreciable..

Bash

Jey said...

பதிவு சூப்பர்!!! எழுத்துனடை சூப்பர்!!!! உள்ளடக்கம் குவாலிட்ட்ய் சூப்பர்!!!, எங்கயோ போய்ருவீங்க...:)

Yoganathan.N said...

இதுல் எந்த பிரிவிலும் நான் வரலையே... ஹிஹி

பதிவுலக பத்தி நல்லா புரிஞ்சு, தெரிஞ்சு வச்சுரிக்கீங்க... இதனால், உங்க வீட்டுக்கு ஆட்டோ வராம இருந்தா சரி... :)

பாலா said...

தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறேன், மறுக்காமல் எழுதுங்கள்...
நன்றி..
http://balapakkangal.blogspot.com/2010/08/blog-post_16.html

பட்டாபட்டி.. said...

ஹா..ஹா..

அடிச்சு ஆடுங்க...

( யாராவது பிரபல பதிவர் வந்து கேள்வி கேட்டா மட்டும், பட்டாபட்டி கிரவுண்டுக்கு அனுப்பி வையுங்க பாஸ்....புண்ணியமா போகும்...ஹி..ஹி)

கார்க்கி said...

ஹிஹிஹி.. நான் எதுல இருக்கேன் சகா?

"ராஜா" said...

@ பட்டாபட்டி..

நீங்க இந்த ஏரியாவுக்கு வந்திட்டு போன பின்னாடி இங்க வந்து சவுண்ட் விட யாருக்கு தைரியம் இருக்கு....

"இப்படிக்கு ஏத்தி விட்டு வம்பில் மாட்டி விடுவோர் கழகம்"


@ கார்க்கி

அது உங்களுக்கே தெரியும் சகா...

"ராஜா" said...

@ மதார்

//இதெல்லாம் இருந்தால் எப்படி பிரபலம் ஆவது?

total damage போங்க....

@ மணி (ஆயிரத்தில் ஒருவன்)

//பாட்டெழுதி பெயர் வாங்கும் புலவர்களும் உண்டு குற்றம் கண்டு பிடித்து பெயர் வாங்கும் புலவர்களும் உண்டு..

அப்படியே குற்றம் சொல்லுவதை குற்றமாக சொல்லி பெயர் வாங்குபவர்கள் பற்றியும் எழுதி இருக்கலாம்...

@ டம்பி மேவீ

//ம்ம்ம் ..... தல என்னை மாதிரி டம்மி பீஸ் பற்றியெல்லாம் நீங்க சொல்லவே இல்லையே ????

என்ன ஒரு தன்னடக்கம் உங்களுக்கு

@ பாஸ்கரன் சுப்ரமணியன்

//Excellent One, Really Appreciable..

நன்றி தங்கள் முதல் வருகைக்கு

@ Jey

//பதிவு சூப்பர்!!! எழுத்துனடை சூப்பர்!!!! உள்ளடக்கம் குவாலிட்ட்ய் சூப்பர்!!!, எங்கயோ போய்ருவீங்க...:)

டோட்டடோயங்.....................

@ Yoganathan.N

//இதுல் எந்த பிரிவிலும் நான் வரலையே... ஹிஹி

பதிவுலக பத்தி நல்லா புரிஞ்சு, தெரிஞ்சு வச்சுரிக்கீங்க... இதனால், உங்க வீட்டுக்கு ஆட்டோ வராம இருந்தா சரி... :

தல நாம எல்லாம் எந்த வரைமுரைக்குள்ளும் சிக்காதவர்கள் ... எந்த பிரிவிலும் அடங்கமாட்டோம் ...

Meerapriyan said...

rajakani thambi/annan? ippadi poddu thakkuna eppudi? vimarsanam arumai-meerapriyan

தனி காட்டு ராஜா said...

தமிழ் பதிவு

LinkWithin

Related Posts with Thumbnails