இன்னைக்கு பலபேர் திரை அரங்குகளில் சென்று படம் பக்க முடியாமல் போவதிற்கு மிக பெரிய காரணாமாக இருப்பது அங்கு விற்கப்படும் டிக்கெட்டுகளின் அனாவசியமான விலைதான் .... ஒரு காலத்தில் இருபது முப்பது ரூபாய்களுக்கு விற்று கொண்டு இருந்த டிக்கெட் இப்பொழுது இருநூறு முன்னூறுக்கு குறைந்து கிடைப்பதில்லை ... திரை அரங்கு உரிமையாளர்களை சொல்லி குற்றமில்லை , வாங்குபவர்கள் இருக்கும் வரை அவர்கள் விற்று கொண்டுதான் இருப்பார்கள் ....
இப்படி அந்த டிக்கெட்டோட டிமான்ட் கூட காரணம் அந்த நடிகர்களோட ரசிக கண்மணிகள் ... அவனுக எவ்வளவு விலை கொடுத்தாவது என்னோட தலைவன் படத்த பாப்பேன் அப்படின்னு சொல்லுரதுனாலத்தான் சினிமாவை ரசிக்க செல்லும் ரசிகனும் தேவை இல்லாமல் அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கு ...
இந்த காரணத்துக்காகவே இந்த ஆடு புடிக்கிற வேலைய நான் ஸ்டார்ட் பண்ணுனேன் ..... நான் பெரிய நடிகர்களோட படங்களை எல்லாம் முதல் நாளே பார்த்து விடுவேன் , அதுவும் பைசா செலவே இல்லாமல் ... நம்ம ரசிக கண்மணிகள் இருக்கும்போது நாம் ஏன் காசு கொடுத்து படம் பாக்கணும் ....
ஒவ்வொரு நடிகர்களோட ஆட்டையும் ஒவ்வொரு மாதிரி டீல் பண்ணனும் ... முதல ரஜினி .... இவரு ரசிகர்கள் கொஞ்சம் இல்லை நிறையவே sensitive... இவங்களை பிடிக்கணும்னா கொஞ்சம் சூடேத்தி விடனும் இவர்களை ... என்னோட நண்பர்கள் வட்டத்தில் ஒரு ஆடு உண்டு இந்த வகையில் ... ஒவ்வொரு ரஜினி படம் வெளி வரும் போதும் நான் அவனை உசுப்பேத்தி விடுவேன் .. என்னடா உங்க ஆளுக்கு முன்னாடி மாதிரி மாஸ் இல்லை போல , படத்துக்கு கூட்டம் வராது போலயே... உங்க ஆளு குரல் முன்னாடி மாதிரி இல்லையே... வில்லன்கிட்ட கத்தி சவால் விட்டா ஏதோ அவன்கிட்ட கெஞ்சுற மாதிரி தெரியுதே .... என்று ஏகத்துக்கும் ஏத்தி விடுவேன் ... பயபுள்ள படம் வர்ற வரைக்கும் தூங்காது ... படம் ரிலீஸ் ஆகிற அன்னைக்கி சரியா வந்திடுவான் .. டேய் ரொம்ப ஓவரா பேசுற வாடா இன்னைக்கி படத்துக்கு என் தலைவனோட மாஸ் என்னனு காட்டுறேன் அப்படிம்பான்... மச்சி காசு இல்லையேடா நான் வேற நாள் பாத்துகிறேண்டா என்று ஜகா வாங்கினால் டேய் பயபடாத நான் கூட்டுட்டு போறேன் நீ வந்து தலைவர் மாச மட்டும் பாத்து சொல்லு என்று வசமாக நம் வலைக்குள் விழுவான் ... நாமளும் போய் படம் நல்ல இருந்தா மச்சி தலைவர் கலக்கிட்டாருடா அப்படின்னு அவன ஏத்தி விட்டு அன்னைக்கு நைட் அவன நிம்மதியா தூங்க வைக்கலாம் ... இல்லைனா மறுபடியும் ஏடாகூடமா பேசி அவன் தூக்கத்த நிரந்தரமா போக்கிடலாம்.... பின்ன அவரோட அடுத்த படம் வர இன்னும் ரெண்டு மூணு வருஷம் ஆகும் பயபுள்ள அது வர நிம்மதியா தூங்காது ....
அடுத்து நம்ம தலயோட ஆடுகள் .... இவங்கள டீல் பண்ணுறது கொஞ்சம் கஷ்டம் .. ஏன்னா தல இவனுகள அப்படி ட்ரைன் பண்ணி வச்சிருக்காரு... டேய் உங்க படம் ஓடாது போல இருக்கே .. பாட்டு எல்லாம் பயங்கர மொக்கையா இருக்கு அப்படின்னு உசுப்பேத்தி விட்டா இவனுக சண்டைக்கே வர மாட்டானுக ... அப்படியாடா சரி விடு தல அடுத்த படத்துல கலக்கிடுவாறு என்று சொல்லி விட்டு தன வேலையை பாக்க போய் விடுவான் ... ஏன்னா இவனுக நூறு முறை வென்றவர்கள் இல்லை லட்சம் முறை தோற்றவர்கள்(பல வருசமா இந்த ஒத்த டையலாக்க வச்சே ஒப்பேத்துவாணுக) ... இவனுக நம்மள காசு போட்டு படத்துக்கு கூட்டிட்டு போகணும்னா ஒரே வழி , பிடிக்கிறதோ பிடிக்கலையோ தலைக்கு ஜால்ரா அடிக்கணும் ... டேய் உங்க தலை உண்மையிலேயே வித்தியாசமனவர்தாண்டா , நிஜ வாழ்கையில நடிக்க தெரியாதவர்டா, டபுள் ஆக்சன்ல தல பட்டைய கேளப்புவாருடான்னு அள்ளி விட்டா போதும் பயபுள்ள உச்சி குளிர்ந்து விடும் ... அடுத்து தல படம் எப்ப வந்தாலும் மறக்காம நம்மள கூப்டுட்டு போய்டும்... என்ன படம் மொக்கையா இருந்தாலும் நாம விடாம படம் முடியிற வரைக்கும் ஜால்ரா அடிச்சிகிட்டே இருக்கணும் ... இல்லை என்றால் வீட்டுக்கு நடந்தேதான் செல்ல வேண்டி வரும் .. இப்படி ஜால்ரா அடிக்க பயந்துதான் நெறைய பேரு தல படத்துக்கு முதல் நாள் போறதில்லை , தியேட்டர் புல்லா ரசிகர்கள் மற்றும் வெறியர்கள் மட்டுமே இருப்பார்கள் , அதனால படம் எவ்வளவு மொக்கையா இருந்தாலும் நெகடிவ் கமெண்ட் தியேட்டரில் வருவதில்லை இவர் படங்களுக்கு
இளைய தளபதியின் ஆடுகள் ... இவற்றை நாம் பிடிக்க தேவை இல்லை , அதுதான் நம்மை பிடிக்கும் ஒவ்வொரு விஜய் படம் ரிலீஸ் ஆகும் பொழுதும் காலையில் உங்கள் தொலைபேசிக்கு ஒரு கால் வரும் அதை நீங்கள் எடுக்க வில்லை என்றால் அன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும் இல்லை என்றால் அன்று நீங்கள் ஒரு மூன்று மணி நேர எமகண்டத்தை கடந்து வர வேண்டி இருக்கும்.... எனக்கும் கால் வரும் நான் எவ்வளவோ சமாளித்து பார்ப்பேன் , முடியாது கடைசியில் விஜயின் குஷி கில்லி போன்ற படங்கள் என் ஞாபகத்தில் வந்து இந்த படம் ஒரு வேளை அது மாதிரி இருக்கலாமே என்று தப்பு கணக்கு போட்டு அவர்கள் வீசும் வலையில் மாட்டி கொள்ளுவேன்.... ஓசியில் பார்த்தாலுமே சில நேரங்களில் நீங்கள் நரக வேதனை அனுபவிக்க வேண்டி வரும்.... இவர்களிடம் இருக்கும் ஒரே ஒரு நல்ல பழக்கம் மற்ற இரண்டு ஆடுகளை போல கோபப்படமாட்டார்கள் திரை அரங்கிற்குள் எவ்வளவு ஓட்டினாலும் தாங்கி கொள்ளுவார்கள்
நான் மேலே சொன்னா ஆடுகள் அவர்களின் ரசிகர்களை மனதில் வைத்து சொல்லவில்லை , நான் சொன்ன ஆடுகள் அவர்களை கடவுளாக பாவிக்கும் வெறியர்கள்... எனவே அந்த நடிகர்களின் ரசிகர்கள் யாராவது இதை படித்தால் கோபம் கொள்ள வேண்டாம் என்மேல்.
நீங்கள் அதை போன்ற வெறியர்கள்தான் என்றால்....
common start music
இம்புட்டு வியாக்கியானம் பேசுறே நீயும் ஒரு நடிகனுக்கு ஜால்ரா அடிக்கிரவந்தானன்னு கேக்குறீங்களா? பாஸ் தம் அடிச்சா உடம்புக்கு கெடுதல்ன்னு தெரிஞ்சும் தம் அடிக்கிறதில்லையா... அது மாதிரிதான் இதுவும்
5 comments:
ஆடுகளை புடிக்க கொடுத்த ஐடியால்லாம் அசத்தல்.டிரை பண்ணி பாத்துடலாம்:)
என்ன நண்பரே... 'நம்ம' படங்களைப் பற்றி கொஞ்சம் ஓவரா எழுதிருக்கீங்களே... :(
@ Yoganathan
ஹீ ஹீ தல லூஸ்ல விடுங்க .... எதிரிய நாம ரெண்டு அடி அடிக்கும்போது ஒரு அடி நம்ம மேல விழத்தான் செய்யும் ...
t .r , j .k ரித்தீஸ் போன்றோரது படங்களுக்கு என்ன செய்றது....
ஆடுகளை புடிக்க கொடுத்த ஐடியால்லாம் அசத்தல்.டிரை பண்ணி பாத்துடலாம்:)
Post a Comment