ரஜினி இந்த ஒற்றை சொல்லுக்கு இருக்கும் பவர் தமிழகம் அறிந்தது .... எதையும் துணிந்து செய்யும் போர்குணம் கொண்டவர்... எதிரி மன்னிக்கவும் தோற்க பிறந்தவன் யாராக இருந்தாலும் தைரியமாய் எதிர்த்து நிர்ப்பார்.... அவரின் படங்கள் ஒவ்வொரு முறையும் படைக்கும் சரித்திரங்கள் ஆயிரம்... இந்தியாவின் இருக்கும் இருந்த சொற்ப சூப்பர் ஸ்டார்களில் இவர் முதன்மையானவர்.... இவருடன் சேர்ந்து தங்கள் கலை பயணத்தை ஆரம்பித்த எத்தனையோ நடிகர்கள் இன்று திரை உலகை மட்டும் இல்லை இந்த மண்ணுலகையே விட்டு போய் விட்டார்கள்... ஆனால் அவர் இன்னமும் தமிழ்நாட்டின் உச்ச நச்சத்திரம்.... படம் வெளியானால் கோடிகள் குவியும் திரை அரங்கில் , சில நேரம் கொடிகள் கூட நிறம் மாறும் அரசியல் உலகில் ....
இவருக்கு இருக்கும் பெரிய பலமே இவரின் ரசிக படைதான்.... சினிமா என்றால் என்னவென்று தெரிய ஆரம்பிக்கும் பருவத்திலேயே பலர் இவரின் ரசிகன் ஆகி விடுவார்கள் .. காரணம் ரொம்ப சிம்பிள் , தமிழ் சினிமாவில் இவர்தான் சிங்கம் , சிறு வயதில் பலருக்கு அறிமுகபடுத்தபடும் படங்கள் இவர் படங்களாகவே இருக்கும் ... இவரின் பாட்ஷா படம் பார்க்கும் எந்த சிறுவனும் இவரின் ரசிகர் படையில் இணையாமல் இருக்க முடியாது... நானும் அப்படித்தான் இவரின் ரசிகன் ஆனேன்... ஆறாவது படிக்கும் போதே பல முறை அந்த படத்தை திரை அரங்கில் பார்க்க வீட்டில் காசை திருடி அப்பாவிடம் அடிவாங்கி , பள்ளிக்கு மட்டம் போட்டு ஆசிரியரிடம் அடி வாங்கி பல கிலோமீட்டர் தூரம் நடந்தும் ஓடியும் இப்படி பல கஷ்டங்களை தாண்டி போவோம்.. ஆனால் எல்லாம் அவர் நான் ஒருதடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி என்று வசனம் பேசும் பொழுது மறந்து விடும் ... அடித்து சொல்லலாம் இந்தியாவின் தலை சிறந்த entertainer ரஜினிதான் இன்று வரை ....
நடிகன் என்றாலே எப்பொழுதும் இளைமையாக தெரிய வேண்டும் அப்பொழுதுதான் மக்கள் அவனை விரும்புவார்கள் என்ற மாய தோற்றத்தை சினிமாவில் உடைத்தெறிந்தவர் அவர்தான் .... தான் சூப்பர் ஸ்டாராக வளர்ந்து கொண்டு இருந்த கால கட்டத்திலேயே தன வழுக்கை தலையை மறைக்காமல் , நரை முடியை டை அடிக்காமல் பொது இடங்களில் பவனி வந்தவர்... பெண்கள் மற்றும் கஞ்சா இல்லாமல் என்னால் ஒரு இரவைகூட கடத்த முடியாது என்று வெளிப்படையாய் தன்னை பற்றி கூறியவர் அவர்... இப்படி ஒரு பொறுக்கியாக இருந்தவர் பின்னாளில் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகமாகி தன்னை ஒழுங்குபடுத்தி கொண்டார்.... இன்று தமிழ்நாட்டில் யோகாசனம் பற்றி அனைவரும் அறிந்து கொண்டு இருப்பதன் மிக பெரிய காரணம் ரஜினிதான்... அவரின் ஆன்மீக ஈடுபாடு மக்கள் மத்தியில் ஆன்மீகத்தை பற்றிய ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது... காரணம் அவரின் மாஸ் .. சிலர்தான் என்ன பண்ணினாலும் மக்கள் மத்தியில் பிரபலமாகவே எப்பொழுதும் இருப்பார்கள் ... இன்று நம் தமிழகத்தில் அதற்க்கு வாழும் உதாரணம் ரஜினிதான் ...
இது ரஜினியை பற்றி அவரின் ரசிகனாக நான் யோசித்த பொழுது எனக்கு தோன்றியவை .. ஆனால் இன்னொரு வகையில் ஒரு சாதாரணமான ரசிகனாக இல்லை தமிழ் நாட்டின் ஒரு கடைநிலை குடிமகனாக அவரை பற்றி சொல்ல வேண்டுமானால் ரஜினி ஒரு முரண்பாட்டு மூட்டை என்றுதான் சொல்ல வேண்டும் .... தான் காசு சம்பாத்திக்க தன ரசிகனின் உணர்ச்சிகளை பயன்படுத்தி கொண்டவர் அவர் என்று சொன்னால் அவரின் ரசிகனை தவிர எல்லாரும் கண்டிப்பாய் ஒத்து கொள்ளுவார்கள் ... பாட்ஷாவிற்கு பின்னர் அவர் படங்களில் எப்பொழுதும் ஒரு அரசியல் நெடி இருந்துகொண்டே இருக்கும் ....அது அவர் ரசிகனை உசுப்பேத்தி விட்டு பல முறை தன படங்களை பார்க்க வைக்க மற்றும் தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கு ஒரு hype உருவாக்க மட்டுமே அவர் பயன்படுத்துகிறார் , தன்னுடைய ரசிகன் நம்புவதை போல தலைவர் அரசியலுக்கு வருவார் , தமிழகத்தில் நல்ல ஆட்சி நடத்துவார் , நாமெல்லாம் சந்தோசமாக வாழலாம் என்பதற்காக இல்லை என்று கொஞ்சம் காலம் கழித்தே பலருக்கு புரிந்தது ... இவர் படத்தில் மட்டுமே அப்படி வசனம் பேசி கொண்டு இருந்திருந்தால் இன்னமும் பலருக்கு புரிந்திருக்காது ... ஆனால் நிஜ வாழ்கையில் அவர் அடித்த பல பல்டிகள் உலகம் அறிந்தவை .... அவைதான் அவருக்கு பல வழிகளில் மக்களிடம் ஒரு சறுக்கலை உண்டு பண்ணின...
அவர் முதலில் ஜெயலலிதாவை எதிர்த்தார் ... காரணம் தமிழ் நாட்டில் வன்முறை அதிகரித்து விட்டது மக்கள் பயமில்லாமல் வாழ முடியவில்லை என்பதே ... ஆனால் அவர் பண்ணிய மிக பெரிய முட்டாள்தனம் அவரை எதிர்த்து தானே இறங்காமல் கருணாநிதியை வளர்த்து விட்டது ... இவர் வந்தால் நாடு சுபிட்சம் அடைந்து விடும் தேனாறும் பாலாரும் ஓடும் என்று நினைத்தாரோ என்னவோ? இவரை நோக்கி கையை காட்டினார் ... ரசிகர் எல்லாம் ஓட்டு மழை பொழிய திமுக காசு கொடுக்காமலே, கள்ள ஓட்டு போடாமலேயே முதல் முறை தமிழகத்தில் அசுர வெற்றி பெற்றது...
அடக்கம் பண்ண வேண்டிய திமுகாவையும் அதன் தலைவரையும் பிழைக்க வைத்தார் அன்று ஆனால் இன்று இவரே அவர்களின் அடிமையை போல இருக்க வேண்டியாதாய் போய் விட்டது... ஏன் இன்றைக்கு தமிழகம் அமைதி பூங்காவை போலதான் உள்ளதா? வன்முறை இல்லையா? ஊழல் இல்லையா? அன்றை விட இன்று எல்லாம் அதிகமாகவே உள்ளது... அன்று மக்கள் நலனில் அதிக அக்கறை உள்ளது போல அறிக்கை விட்டவர் இன்றும் விட வேண்டியதுதானே? கண்டிப்பாய் மாட்டார் காரணம் அதுதான் ரஜினி.... கருணாநிதி மற்றும் அவர் குடும்பத்தின் தயவு இல்லாமல் இன்று தமிழ்நாட்டில் எந்த பிரபலத்தாலும் வாழ முடியாது .. அப்படி ஒரு நிலைமை இன்று உருவாக்கி விட்டது... அவர்களோடு இயைந்து போனால் நிறைய லாபம் வரும் ... சண்டை போட்டால் என்னவாகும் என்பது உலகம் அறிந்ததே ... அந்த வலைக்குள் இன்று ரஜினியும் மாட்டி கொண்டு விட்டார் ... அவரின் மனசாச்சிக்கு நன்றாக தெரியும் இன்று நடப்பது மக்கள் விரோத ஆட்சி அதன் தலைவர் கருணாநிதி என்பது ... ஆனால் ஜெயலலிதாவை எதிர்த்ததை போல இன்று இவரை எதிர்க்க மாட்டார் ... தன் ரசிகன் என்பவன் தனக்கு காசு சம்பாதிக்க பயன்படும் ஒரு கருவி என்பதை போலத்தான் அவர் எப்பொழுதும் எண்ணி கொண்டு இருந்திருக்கிறார்.. என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தவன் தமிழன் , என் உடல் பொருள் ஆவியை அவனுக்கே கொடுப்பேன் என்று படத்தில் மட்டுமே பாடுவார் .. காரணம் அதை கேட்டால் ரசிகன் ரத்தம் சூடேறும் ... தன் படம் ஓடும் அவ்வளவே .. ஏன் அதையே ஏதுனும் மேடையில் இதுநாள் வரை எப்பொழுதாவது சொல்லி இருக்கிறாரா? ஒரே ஒரு மேடையில் தமிழனுக்காக கோபமாக பேசினார் பின்னர் உன் படம் ஓடாது , காசு கிடைக்காது என்றவுடன் நான் சொன்னது தவறுதான் என்று மன்னிப்பு கேட்டார் , அவர் கேட்டது மன்னிப்பு இல்லை ஒவ்வொரு தமிழனுக்கும் கிடைத்த சாட்டை அடி...
கேட்டால் அரசியல் ஒரு சாக்கடை அது எனக்கும் என் ரசிகனுக்கும் வேண்டாம் என்கிறார் ... ஏன் அது சினிமாவில் வசனம் பேசி ரசிகனை உசுப்பி விடும் பொது தெரியவில்லையா? எல்லா நடிகனும் இன்று இதைத்தானே பண்ணுகிறான்... ஆனால் ரஜினி செய்தால் மட்டும் ஏன் தவறு சொல்லுகிறீர்கள் என்றும் சிலர் கூறுவர்.. காரணம் அவர்தானே இப்படி எல்லாம் வசனம் பேசி சம்பாதித்தவர்... மற்றவர்கள் பேசினால் ஏதோ காமெடி பீசு காமெடி பண்ணுது என்று ஒதுக்கி விடும் தமிழன் இவரின் பேச்சை மட்டும்தானே உண்மை என்று நம்பி விசில் அடித்து மகிழ்ந்தான்... ஆனால் அவனுக்கு கடைசியில் கிடைத்தது ஏமாற்றமே...
ரசிகன் நம்பினது வரை அரசியல் பேசி காலம் கழித்தவர் , அவன் இனிமேல் வசனம் பேசினால் நம்மை நம்பமாட்டான் என்று தெரிந்ததும் நான் பேசுனது படத்துல ... அதை உண்மைன்னு நம்பினது உங்க தப்பு என்று பல்டி அடித்தார் ... நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் ரசிகன் இதை உண்மை என்று எடுத்து கொள்ளமாட்டான் என்று நம்பியா அவர் இந்த வசனங்களை எல்லாம் பேசினார் ... இப்படி முழு பூசணிகாயை சோற்றில் மறைக்கும் வேலை இது ...
சன் டிவியின் எந்திரன் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி பார்த்தவர்களுக்கு ஒன்று தெளிவாய் புரிந்திருக்கும் .. அந்த நிகழ்ச்சியின் கதாநாயகன் ரஜினி இல்லை கலாநிதி மாறன் என்பது... ஒரு காலம் இருந்தது ரஜினி ஒரு மேடையில் இருந்தால் அது அவர் சம்பந்தம் இல்லாத நிகழ்ச்சி என்றாலும் அவர்தான் மைய நாயகனாக இருப்பார்.. இன்று அவரின் பட வெளியீட்டு விழா... அவர் ஒரு டம்மியை போல இரண்டாம் இடத்தில் ... காரணம் வேறு யாரும் இல்லை அவரேதான் .... கலாநிதி மாறன் குழுமம் தமிழ் சினிமாவுக்கும் தமிழக மக்களுக்கும் எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும் .... இன்று மக்களை மூளை இல்லாமல் மழுங்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு வேலை பார்க்கும் கூட்டம் அவர்கள் ... தன்னுடைய படம் ஓட வேண்டும் என்றால் சண்டீவியின் ஆதரவு வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அவர்களுடன் இணைந்து வேலை பார்கிறார்.... நாளை ஜெயாடீவியின் ஆதரவு வேண்டும் என்றால் அவர்கள் பேனரில் படம் நடிப்பார்... தன் படம் ஓடினால் சரி .. ரசிகனை எப்படி சமாளிக்க வேண்டும் என்று அவருக்கு தெரியும் .... ராகவேந்திரா மண்டபத்தில் ஒரு மீட்டிங் போதும் வழக்கம் போல பொறுமையா இருங்க கூடிய சீக்கிரம் நல்ல செய்தி வரும் என்று ஒரு வார்த்தை பேசி விட்டு போனால் போதும்... அவன் அடங்கி விடுவான்.... இதுதான் நான் புரிந்து கொண்ட ரஜினி ....
அவரை மக்களை காக்க வந்த கடவுளாக பேசும் ரசிகர்களுக்கு மட்டுமே நான் மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் , மற்றபடி நான் அவரின் ஷ்டைளுக்கும் அவரின் படங்களுக்கும் மட்டுமே ரசிகன் என்று சொல்லும் நபரா நீங்க? பாஸ் எந்திரன் படம் எப்ப ரிலீஸ் ஆக போகுதாம்?... மொத ஷோவே போய் பாக்கணும் பாஸ்.. எத்தனை வருஷம் ஆச்சி அவர் ஸ்டைல பாத்து.... ரியல் வாழ்க்கையில் அவரின் பல நடவடிக்கைகள் பிடிக்கவில்லை என்றாலும் திரையில் அவரை பாத்து ரசிக்கும் பல கோடி தமிழனில் நானும் ஒருவன்... அதுதானே அவருக்கும் வேணும்.
21 comments:
ஊடகத்துறை அச்சில் இருக்கும்போது மக்களை MGR , சிவாஜி மற்றும் அதற்க்கு முன்பு உள்ள நடிகர்கள் ஏமாற்றிக் கொண்டிருந்தனர்..
ரஜினி என்பவன் ஒரு நடிகன்..தான் கஞ்சாவும் பெண்ணும் இல்லாமல் இரவைக் கழிக்க முடியாது என்று சொல்லிவிட்டதால் அவன் உத்தமன் கிடையாது..சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடித்து காட்டி பிரபலமாகி விட்டான்..அதை தனது ஓட்டுக்காக அரசியல்வாதி பயன்படுத்திக் கொண்டான்..
இப்போது ஊடகத்துறை எவ்வளவோ வளர்ந்த பிறகும் ரஜினி போன்ற நடிகர்களை கொண்டாடும் முட்டாள்களை..என்ன சொல்வது..?
அவனால் நல்லாட்சி..முதலில் ஒரு ஆட்சி தருவான் என்றும் நம்பும் மூடர்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம்..
www.marmayogie.blogspot.com
Good post!
Good Analysis.
படத்தை ரசிப்பதை மட்டும் செய்தால் போதும்!!! நாம் செய்யும் வேலைதான் நமக்கு சோறு போடும் என்பதை உணர வேண்டும்!!!
good post friend.whatever you have written here are true. i like rajini as an actor.also,he is a simple guy.but,he is not a worthy leader.
AJITHAYUM VIMARSANAM PANNA VENDI IRUKKUM.. MATRUMORU KAALATHIL NEENGAL..
KAARANAM DHIDEERENDRU NEENGAL SIMBUVUKKU RASIGANAAGI VITTAAL..
@ பஹ்ரைன் பாபா
ஆம் கண்டிப்பாக விமர்சனம் செய்வேன் அவரும் இதை போல தவறுகள் செய்தால் .... சிம்புவா போங்க பாஸ் காமெடி பண்ணாதீங்க ,,, இப்பவே இந்த ஆட்டம் ரஜினி மாதிரி வேணாம் அஜித் மாதிரி ஒரு நல்ல நெலமைக்கு வந்தா என்ன ஆட்டம் ஆடுவார் ...ஆனால் வாய்ப்பு இல்லை இப்ப இருக்கும் சந்ததி உங்களை போலவோ என்னை போலவோ இல்லை தெளிவாகத்தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் அப்புறம் ரஜினி அஜித் போதும் இதுக்கு மேலையும் என்னால ஒருத்தனுக்கு ரசிகனா இருக்க முடியாது
@ ILLUMINATI
நன்றி தல .... நீங்களாவது நான் சொல்ல வந்தத புரிஞ்சி கமெண்ட் போட்டீங்களே...
@ சேலம் தேவா
நன்றி தேவா .... நீங்க தெளிவாகத்தான் இருக்கீங்க ....
@ வரதராஜலு .பூ
நன்றி தல
@ ராபின்
நன்றி தல
@ மர்மயோகி
உங்களின் ஒரு சில கருத்துகளோடு உடன்படுகிறேன் .. ஆனால் ரஜினி படங்களை ரசிப்பது தவறு என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியாது
bahrain baba
இப்படி என்ன சிம்புவுக்கு ரசிகனாக சொல்லி டோட்டல் டேமேஜ் பண்ணிடீங்களே... இதுக்கு என்ன செருப்ப கழட்டி அடிச்சிருக்கலாம் சந்தோசமா வாங்கி இருந்திருப்பேன்
//பின்னர் உன் படம் ஓடாது , காசு கிடைக்காது என்றவுடன்
நண்பரே படத்தின் தயாரிப்பாளர் நஷ்டப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணம் இருப்பதில் என்ன தவறு இருக்கிறது?
//அந்த நிகழ்ச்சியின் கதாநாயகன் ரஜினி இல்லை கலாநிதி மாறன் என்பது...
அவர் ஒரு டம்மியை போல இரண்டாம் இடத்தில் ...
அது சன் குழுமத்தின் ஜால்ராக்கள் காட்டிய வேடிக்கை. அதை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆனால் கலாநிதி மாறனுக்கே தெரியும், ஒட்டு மொத்த தமிழர்களும் தன் வேலை வெட்டியை விட்டுவிட்டு அந்த நிகழ்ச்சியை பார்க்க யார் காரணம் என்று. இதற்கு முன் சுறா பட இசை வெளியீடு கூட நடந்தது. அதிலும் இதே மாதிரி ஜால்ரா கூட்டம் சன் டிவி சன் டிவி என்று கத்தியது. யாரும் கண்டு கொள்ள வில்லையே. பக்கத்துக்கு இலைக்கு பாயாசம் போல, ரஜினியின் மாசை பயன்படுத்தி தன் புகழை பரப்ப முயன்றிருக்கிறார். அவ்வளவுதான்.
ரஜினி என்ற ஒரு சகாப்தத்தின் ஒரு சில சறுக்கல்களை மட்டுமே பட்டியல் இட்டிருக்கும் நீங்கள் இந்த பதிவுக்கு "என் பார்வையில்" என்று தலைப்பில் சேர்த்திருக்கலாம்.
ஹாஹாஹா..
நச் சகா
அப்படியே என் ரசிகர்கள் இனிமேல படம் ரிலிசான மரம் தான் நடணும். கட் அவுட் வைக்க கூடாதுன்னு சொன்ன ஒருத்தர பத்தியும் சொல்லுங்க. அவர் சொன்னபடி இன்று வரை பாலபிஷேகம் செய்யாம கட்டுக்கோப்ப இருக்கிற ரசிகர் படை பத்தியும் சொல்லுங்க. :)))
வாங்க சகா... இந்த மாசம் கடைசியில்தான் வருவேன்னு சொன்னீங்க.... நீங்க வாய் விட்டீங்க, எங்க ஆட்டம் ஆர்பாட்டமா ஆரம்பம் ஆகிடுச்சி . அடிக்கடி வந்து இப்படி ஏதாவது சொல்லிட்டு போங்க உங்க ராசி நல்லா work out ஆகுது. போட்டோவெல்லாம் பாத்தீங்களா இல்ல mailல அனுப்பனுமா?
தல நான் முட்டாள்தனமான ரசிகர்களை பத்தி சொல்லலலேயே ... அப்புறம் நீங்க எந்த ரசிகர்களை பத்தி சொல்லுறீங்க ... ஒருத்தர் ஏன் ரசிகர் மன்றங்கள் எல்லாம் மக்கள் இயக்கமாய் மாறி சமூக சேவையில் ஈடுப்படும்னு சொல்லி உண்ணாவிரத காமெடி எல்லாம் பன்னுனாரே அவரோட ரசிகர்களை பத்திதான
//நண்பரே படத்தின் தயாரிப்பாளர் நஷ்டப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணம் இருப்பதில் என்ன தவறு இருக்கிறது?
அதுக்கு மன்னிப்புதான் கேக்கனும்னு அவசியம் இல்லையே வாங்குன சம்பளத்துல பாதிய குடுக்கலாம் (உடனே ரஜினி மட்டும் கோடி கோடியா சம்பாதிக்கிறார் அப்படின்னு கடுப்புல எழுதிரான்னு யாரும் கெளம்பி வந்திறாதீங்கப்பா... )
//ரஜினியின் மாசை பயன்படுத்தி தன் புகழை பரப்ப முயன்றிருக்கிறார். அவ்வளவுதான்
எனக்கு என்னமோ கலாநிதியை இப்பொழுது ரஜினிதான் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறாரோ என்று தோன்றுகிறது .... அந்த நிகழ்ச்சியை விட மக்கள் அதிகம் பாக்கும் எத்தனையோ நிகழ்சிகளை சன் டீவியில் ஒளிபரப்பு ஆகிருக்கிறது அப்பொழுதெல்லாம் அவர் முகம் டிவியில் தெரிந்ததில்லையே ...
//ரஜினி என்ற ஒரு சகாப்தத்தின் ஒரு சில சறுக்கல்களை மட்டுமே பட்டியல் இட்டிருக்கும் நீங்கள்
என்ன தல நீங்களே இப்படி செம் சைடு கோல் போட்டீங்களே ஒரு சில சறுக்கல்களை மட்டுமே அப்படின்னு சொல்லி ....
/வாங்குன சம்பளத்துல பாதிய குடுக்கலாம்
என்ன சின்ன புள்ளதனமா இருக்கு?
//எனக்கு என்னமோ கலாநிதியை இப்பொழுது ரஜினிதான் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறாரோ என்று தோன்றுகிறது
அது உங்கள் எண்ணம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
//இப்படி செம் சைடு கோல் போட்டீங்களே
நெனச்சேன் இப்படி கேப்பிங்கன்னு. சறுக்கல்களை மட்டும் அப்படின்னு வந்திருக்கணும்.
எது சிறுபிள்ளைத்தனம் கொஞ்சம் விளக்கினால் புரியும் எனக்கு.... தல நீங்க சொல்லுறபடியே தயாரிப்பாளர் நச்ட்டபடகூடாதுன்னு மன்னிப்பு கேட்டாருன்னே வச்சிகிவோம் .... ஒரு பேச்சுக்கு சொல்லுறேன் ரஜினியோட மொத்த சம்பளம் ஒரு இரபது கோடின்னு வச்சிகோங்க , பத்து கோடி அவருக்கு தமிழ் நாட்டு மார்கெட் மூணு கோடி ஆந்திரா ரெண்டு கோடி கேரளா 2 கோடி கர்நாடகான்னு வச்சிகிவோம் .... தயாரிப்பாளர் மிஞ்சி போன மூணு கோடிக்கு கர்நாடகா உரிமைய கொடுத்திருப்பாரு , இப்ப பிரச்சனை ரஜினி மூலமா ரஜினி தன ரசிகனின் மானம்தான் பெருசுன்னு நெனச்சிருந்தா அந்த ரெண்டு கொடிய தயாரிப்பாளருக்கு கொடுத்து படத்த கர்நாடகாவுல ரிலீஸ் பண்ணாமலேயே மத்த மாநிலங்கள் மூலம் பெரிய லாபத்த கொடுத்திருக்க முடியும் .... பண்ண மாட்டார் காரணம் அவர் அடுத்து நடிக்கிற எல்லா படத்துக்கும் அந்த ரெண்டு கோடி மார்கெட் போய்டும் ... தவிர கர்நாடகாவுல படம் ஓடலைனா தயாரிப்பாளர் நஷ்டபட்டுருவாரா?? அப்ப தமிழ் நாட்டுல அவர் படம் லாபம் கொடுக்காதா? பொன்முட்டையிடுற வாத்து தமிழ்நாடு ... அது வாத்துதான என்ன பண்ணுனாலும் யோசிக்க தெரியாம நாம சொன்னா பொன் முட்டை இடும் , கர்நாடக வெள்ளி முட்டை இடுற கோழி , ஆனா கோபகார கோழி பகச்சிகிட்டா வெள்ளி முட்ட கெடைக்காது .... இதுதான் ரஜினியின் கணக்கு...
//அது உங்கள் எண்ணம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
அதுபோலதான் கலாநிதி மாறன் ரஜினியை பயன்படுத்துகிறார் என்பது உங்கள் பார்வை மட்டுமே ..
சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்பதன் காரணம், குற்றம் கண்டு பிடிப்பதற்காகவே எழுதப்பட்ட பதிவில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இந்த பொன் முட்டை இடுற முட்டாள் வாத்துகள் ரஜினிக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை. மூணு கோடி என்பது மிக சொற்பமான பணம். பத்து கோடிக்கு குறைவாகவே விற்பனை ஆவதே கிடையாது. அதே போல அவர் மன்னிப்பு கேட்ட அந்த படத்தில் அவ்வளவு சம்பளம் பெற்றிருப்பாரா என்பதும் சந்தேகமே. கலாநிதி மாறன் ரஜினியை பயன்படுத்துகிறார் என்பது உண்மை. அதற்கு என்னிடம் ஆதாரம் கிடையாது. மறுபடியும் சொல்கிறேன் குற்றம் சொல்வதற்காகவே எழுதிய பதிவில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
தல நன்றி .... மாற்று கருத்தை சொன்னால் உடனே குற்றம் கண்டுபிடிக்க மட்டுமே எழுதப்பட்ட பதிவு என்று எல்லாரையும் போல நீங்களும் ஒரே வார்த்தையில் முடித்து விட்டீர்களே .... சரித்திரங்களை மாற்றி அமைக்க போகும் எந்திரனுக்கு வாழ்த்துக்கள்
//ஒருத்தர் ஏன் ரசிகர் மன்றங்கள் எல்லாம் மக்கள் இயக்கமாய் மாறி சமூக சேவையில் ஈடுப்படும்னு சொல்லி உண்ணாவிரத காமெடி எல்லாம் பன்னுனாரே அவரோட ரசிகர்களை பத்திதான//
அவர் உலக மகா காமிடி பீசு இல்ல...
பார்த்தேன் பாஸ்> மங்காத்தா என்ற தமிழ் படத்திற்கு எவனொ ஒரு நியுமராலஜிகாரன் சொனனன்னு mankathaaபேரு மாத்தின விஷயத்தையும் படிச்சேன்... ஹிஹிஹி.. ஆரம்பமே அம்ர்க்களம்..
அடுத்து, இனும் ஒரு நாள் ஷூட்டிங் கூட முழுமையா நடக்கலையாம்.. தெரியுமா? பூஜை போட்டு தல கிள்மபிடுச்சாம் குடும்பத்தோட..ஹிஹிஹி
அதை விட முக்கியமா, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம எஸ் ஆன விதம் புடிச்சிருந்தது. வாழ்த்துகள்
//இனும் ஒரு நாள் ஷூட்டிங் கூட முழுமையா நடக்கலையாம்..
அப்பாடா நீங்க சொல்லிடீங்க .. அப்ப கூடிய சீக்கிரமே தொடங்கிரும் ....
//அதை விட முக்கியமா, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம எஸ் ஆன விதம் புடிச்சிருந்தது
உங்க கேள்விக்கு பதிலா ஒரு பதிவு போட்டிருப்பேனே சகா .. பாருங்க
Post a Comment