Followers

Copyright

QRCode

Monday, January 31, 2011

மச்சி படம் ஓட ஒரு ஐடியா சொல்லேன் : சந்தானம் ஸ்பெஷல்

எத்தன நாளைக்குதான் இவனுங்களை ஒட்டுறதுக்கு கவுண்டர  துணைக்கு கூப்பிட்டுகிட்டு இருக்கிறது .. அதான் ஒரு மாறுதலுக்கு இந்த தடவை நம்ம சந்தானம் நம்ம கதாநாயகர்களை கலாய்க்க போராறு ...
முதலில் நம்ம அடுத்த சூப்பர் ஸ்டார் , தொடர்ந்து படங்களில் அடிமேல் அடி வாங்கிக்கிட்டு இருக்கும் வி வருகிறார்...


வி : மச்சி , ஊருக்குள்ள யாருமே மதிக்க மாட்டேங்கிராணுகடா?

சந்தானம் : நான் அப்பவே சொன்னேன் படத்துல பொம்பளை வேஷம் போடாதடாண்ணு.. கேட்டயா? உன் மூஞ்ச சும்மா பாத்தாலே எவனும் மதிக்க மாட்டான்... இதுல பொம்பளை வேஷம் போட்டு வந்தா எவன் மதிப்பான்..

வி : அது இல்லடா மச்சி ... வீட்ட விட்டு என் பொண்டாட்டி தொரத்தி விட்டுடா? ஏதாவது ஒரு படம் ஹிட் கொடுத்தாத்தான் வீட்டுல சேத்துக்குவாளாம்? படம் ஹிட் ஆக ஏதாவது ஐடியா கொடென்...

சந்தானம் : சரி , பீர் வாங்கி கொடுத்திட்டு ஐடியா கேக்குற , உனக்காக இல்லைனாலும் இந்த பீருக்காகவாது ஐடியா தரேன்..

வி : சொல்லுடா நண்பா ..

சந்தானம் : படம் எதுவும் ஓட மாட்டேங்கிது .. ஒரு ஹிட் கொடுக்கணும் இதான உன் பிரச்சனை ... சரி நீ ஏன் டைரக்டர் பாலா படத்துல நடிக்க கூடாது? ஒரே படத்துல ஓஹோண்ணு வந்திரளாம்பா..

வி : போ  மச்சி .. அந்தாளு பப்ளிக்கா ஜட்டியோட நிக்க விட்டிடுவாறு... எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு மச்சி ...

சந்தானம் : ஆமா ஹீரோயின் கூட நீச்சல் குளத்துல குளிக்கிரமாதிரி சீன்ல எல்லாம் நீ இதுவரைக்கும் கோட் சூட் போட்டுதான் நடிச்சியோ ?

வி : அது எப்படி மச்சி? குளிக்கிற சீன்ல எல்லாம் ஜட்டியோடத்தான் நடிக்கணும் ...

சந்தானம் : அந்த வேலைக்கு மட்டும் ஜட்டியோட நில்லு..

வி : சீ .. அசிங்கமா பேசாத மச்சி

சந்தானம் : சரி வீடு , மணிரத்னம் படத்துல நடிக்கிறையா?

வி :  அந்தாளு இங்கிலீஷ் நெறையா பேச சொல்லுவாறு மச்சி ... நமக்கு அதெல்லாம் சரிபட்டு வராது .. நான் படிப்ப விட்டு பல வருஷம் ஆச்சி ...

சந்தானம் : அதுவும் வாஸ்தவம்தான் ... உனக்கு இங்கிலீஷ் வராது .. சரி நம்ம உலக நாயகன் மாதிரி பல கெட்டப் போட்டு நடிக்கிறையா? கண்டிப்பா படம் பிச்சிக்கிட்டு ஓடும்

வி : இல்ல மச்சி , கெட் அப் போடணும்னா நெறையா மேக் அப் போடனும் ... எல்லாம் கெமிக்கல் மச்சி .. ஸ்கின் அலர்ஜி .. நாம பண்ணுற தப்புக்கு நம்ம புள்ள குட்டிக எல்லாம் கஷ்டபடணுமா?

சந்தானம் : அதுவும் சரிதான் , அடுத்தவன் படத்துலதான் நடிக்க மாட்டேங்கிர , சரி நீயே டைரக்ட் பண்ணி நீயே நடியேன்

வி : போ மச்சி , எனக்கு நடிக்கவே தெரியாது இதுல டைரக்ஷன் வேரையா?

சந்தானம் : தெலுங்குள நமக்கு தெரிஞ்ச டைரக்டர் ஒருத்தர் இருக்காரு அவர்கீட்ட கொஞ்ச நாளைக்கு அசிஸ்டண்ட் டைரக்டர் வேலை பாத்து டைரக்ஷன் கத்துக்கோ ,,, ஒரு வருஷம் கழிச்சி நீயே டைரக்ட் பண்ணி நீயே நடி

வி : அசிஸ்டண்ட் டைரக்டர் வேலையா? நாய்  பொழப்பு மச்சி ...

சந்தானம் : இப்படி அட்டு படமா எடுத்து ப்ரொடியூசர் பொழப்ப கெடுக்குறதுக்கு நாய் பொழப்பு எவ்வளவோ பரவாயில்லை..

வி : வேற ஏதாவது நல்ல ஐடியா கொடு மச்சி

சந்தானம் : சரி கொஞ்ச நாளைக்கு சினிமால நடிக்கிறத விட்டுட்டு , மங்கை நங்கைண்ணு ஏதாவது சீரியல்ல நடிச்சி நடிப்ப கத்துக்கோ .. அப்பறம் சினிமாவில பட்டைய கெளப்பலாம்

வி : நான் சீரியல்ல நடிக்கணுமா? எனக்குன்னு ஒரு தகுதி இருக்கு மச்சி ...

சந்தானம் : ஓ.. உங்க தகுதிக்கு வேணும்னா ஹிந்தி சினிமாவுல ஹீரோ ஆகிடுறீங்களா?

வி : ஷாருக் கான் - அமீர் கான் , சல்மான்  அபிஷேக்  , ஹிரிதிக் சாய்ப் அலிகான் , ஹெவி காம்படிசன் மச்சி ...

சந்தானம் : நீ நடிக்க போனா எல்லாம் சூசைட் பண்ணிக்குவாணுக... சரி வீடு இந்த ஷகீலா , ஷர்மிளா இவங்களை வச்சி ஏதாவது பிட்டு படம் எடுத்து ஓட்டலாமே ..

வி : சீ சீ எய்ட்ஸ் வந்திருமொண்ணு பயமா இருக்கு மச்சி ..

சந்தானம் : சரி என்னை  மாதிரி காமெடி ரோல் ட்ரை பண்ணுரையா?

வி : நான் எப்படி மச்சான் உன் பொழப்ப கெடுப்பேன் ..

சந்தானம் : இப்பனாப்புல என்ன பண்ணிக்கிட்டு இருக்க ... நீ ஒவ்வொரு படமும் எடுத்து விடும் போது எங்களுக்குதாண்டா பக்குபக்குன்னு இருக்கு ... இதுல ஏதாவது பெரிய காமெடி பண்ணி எங்களை விட பெரிய காமெடியானா ஆயிடுவையொண்ணு?

ஆனா வயிறு எறிஞ்சி சொல்றேன்டா..  நீ சாத்தியமா ஹிட் கொடுக்க மாட்ட .. ஹிட் கொடுக்கவே மாட்ட ...  


( இங்கு வி என்று குறிப்பிடபட்டு இருக்கும் நடிகர் சத்தியமாக விக்ரம்தான் .. யாராவது விஜய் என்று படித்திருந்தாள் அதர்க்கு நான் பொறுப்பு கிடையாது)


அடுத்து நம்ம நாலடியார் அவர்கள்

நாலடியார் : (ஒன்பதாம்  அறிவு பட கேசட் வெளியீட்டு விழாவில்)இங்க  எல்லாரும் என்ன புழந்து பேசுரத கேட்கும் போது எனக்கு கூச்சமா இருக்கு .. நான்தான் அடுத்த கமல் அப்படின்னு சொல்லுற அளவுக்கு நான் என்ன பெருசா பண்ணிட்டேன் .. நான் என் கடமையைத்தான செஞ்சென்... தமிழ் சினிமாவ அடுத்த கட்டதுக்கு கொண்டு போறதுதான் அந்த கடமை .. அதத்தான நான் செஞ்சென் .. அதுக்கு எதுக்கு இந்த பாராட்டுண்ணு கேக்குறேன் ... இந்த தமிழ் மாநிலத்துல என்ன பிடிக்காதவங்க யாராவது இருக்காங்களா? அப்படி யாராவது இருந்தா இந்த மேடைக்கே வந்து எங்கிட்ட இருக்க குறையை சொல்லலாம்...

சந்தானம் : எக்ஸ்க்யூஸ் மி .. ஒன் மினிட் ...

நாலடியார் : யெஸ் .. சொல்லுங்க ..

சந்தானம் : நான் கொஞ்சம் பேசனும் ..

நாலடியார் : ஓ .. தாராளமா? சொல்லுங்க தம்பி உங்களுக்கு என்ன பிரச்சனை ..சந்தானம் : இந்த மேடையில் வீற்றிக்கும் பெரியோர்களே ... விழா நாயகன் நாலடியார் அவர்களே ... உனக்கு பாராட்டு பிடிக்காதுன்னா , அப்பறம் என்ன மயித்துக்கு அவங்க பாராட்டி பேசும் போது பல்ல காட்டிக்கிட்டு இருந்த ... என்ன மயிதுக்குன்னு கேக்குறேன் ...

சரி என் நண்பன் , தனுஷ் அவனோட ஆடுகளம் பட பாடல் வெளியீட்டு விழாவுக்கு உன்ன கூப்பிட்டா நீ என்ன சொல்லி இருக்கணும் ... என்ன சொல்லி இருக்கணும் ராசா? வர இஷ்டம் இல்லைனா ஜோதிகா திட்டுவா , என்னால வர முடியாதுண்ணு சொல்லி இருக்கணும் அப்படி மீறி வந்தா என்ன பேசி இருக்கணும் பாட்டெல்லாம் கேட்டேன் நல்லா இருக்கு படம் கண்டிப்பா ஹிட் ஆகும் அப்படின்னு பேசிட்டு போய்கிட்டே இருந்திருக்கணும் .. அத விட்டுட்டு நானும் தனுஷ் ரசிகன்தான் , இதை நினைத்து தனுஷ் ரசிகர்கள் எல்லாம் பெருமைபட்டுக்கலாம் அப்படின்னு ஏன் சொன்ன? நீ ரசிகனா இருந்தா அவணுக பெருமைபடுற அளவுக்கு நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? இல்ல அவ்வளவு பெரிய அப்பாடக்கராண்ணு  கேக்குறேன்... செருப்புக்கு அடியில ஹீல்ஸ் போட்டு நடந்தும் நாலு அடி மட்டும் இருக்குற உனக்கே இவ்வளவு அடப்பு இருந்ததுனா, செறுப்பே போடாமலே அஞ்சறை அடி இருக்குற இந்த தல தளபதிக்கு எவ்வளவு அடப்பு இருக்கும் ... ஏழு கழுத வயசாகிடுச்சி இன்னமும் மண்டைக்கு கலரிங் கொடுத்துகிட்டு ... ஒழுங்கா போய் என் நண்பங்கிட்ட மன்னிப்பு கேக்குற , இல்லைனா தேன எடுத்து மண்டையில அப்பி மண்டையில வெள்ளை அடிச்சி விட்டுடுவேன்...

(சந்தானம் நக்கல்ஸ் நல்லா இருந்தா பின்னூட்டதுல சொல்லுங்க ... அடுத்து யாரையாவது ஓட்டணும்னா கவுண்டருக்கு கொஞ்ச நாளைக்கு ரெஸ்ட் கொடுத்திட்டு சந்தானத்த யூஸ் பண்ணிக்கிறேன் ..)


21 comments:

பாலா said...

செம நக்கல். வி அப்படின்னா விக்ரமா நான் கூட விஜயகாந்துனு தப்பா நினைச்சுட்டேன்.

அது சரி நாலடியார்ணா யாரு.

ராஜகோபால் said...

கலக்கல்.,
நம்ம தமிழ்நாட்டு தாடி மாமா டிஆர், நாளைய கருகொரங்கு முதல்வர் விஜயகாந்த்,தமிழ் நாட்டின் பசு நேசன் ராமஜராஜன்,முருங்கக்கா கண்ட மன்மதன் நடனபுயல் பாக்யராஜ் - இவர்களை பற்றி எதிர் பார்கிரேன்.

KK said...

Paavam Suriya.. Idhu avarukku thevaiyaa..

FARHAN said...

ஏன் பாஸ் இந்த மேர்டர் வெறி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sema comedy

Rizi said...

ha ha ha...

Philosophy Prabhakaran said...

//
எத்தன நாளைக்குதான் இவனுங்களை ஒட்டுறதுக்கு கவுண்டர துணைக்கு கூப்பிட்டுகிட்டு இருக்கிறது .. அதான் ஒரு மாறுதலுக்கு இந்த தடவை நம்ம சந்தானம் நம்ம கதாநாயகர்களை கலாய்க்க போராறு ... //

இதையே நானும் ஆமோதிக்கிறேன்...

"ராஜா" said...

@ பாலா

நாலடிக்கு ஹீல்ஸ் போட்டும் அஞ்சற அடிதான் இருப்பாறு .. அவறுதான் அந்த நாலடியார் ... ஒரு படத்துல ஹீல்ஸ் போடாமலே அனுஷ்கா அவர விட ஒன்ற அடி ஹைட் இருப்பாங்க ...

"ராஜா" said...

@ ராஜகோபால்

பண்ணிடுவோம் தல

@ kk

தன்னடக்கம் இருக்கலாம் தாந்தாங்கிர திமிரு இருக்க கூடாது

"ராஜா" said...

@ FARHAN

எல்லாம் ஒரு டைம் பாஸ்தான்

"ராஜா" said...

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

சந்தானம் வந்தாலே காமெடி எப்பவும் கலக்கல்தான ...

"ராஜா" said...

@ Rizi

ஹி ஹி

"ராஜா" said...

@ Philosophy Prabhakaran

சந்தானம் ரசிகரோ நீங்க?

"ராஜா" said...

இந்த பதிவ்ர்க்கு நாலடியாரோட ரசிகர்னு சொல்லிகிட்டு ஒரு செனபண்ணி (பேரு ரிச்சர்ட்) , பஸ் ஸ்டாண்ட் கக்கூஸ்ல தின்னதெல்லாம் செரிக்காம இங்க வந்து வாந்தி எடுத்து வச்சிருந்தது ... அந்த பண்ணிக்கு ஒரு வார்னிங்.. இன்னொரு தடவ இந்த பக்கம் வந்த பண்ணி புடிக்கிற கம்பி இருக்குள அத வச்சி கிழிச்சிறுவேன் கிழிச்சி .. எதைண்ணு கேக்குறையா உன் பின்னூட்டத்துல எப்படி எழுதி இருந்தையோ அது சம்பந்தப்பட்ட மேட்டரத்தான் ..

RK_KK said...

Good pls create one article Kounder and Sandanam both with TR,And Vijayakandth

"ராஜா" said...

@ RK_KK

பண்ணிடுவோம் .. வருகைக்கு நன்றி ..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

sUppar sema kalakkal

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நல்ல நகைச்சுவை

கலையன்பன் said...

நல்லாவே ஓட்டுனீங்க...
ஓட்டுறதுன்னு முடிவு பண்ணீட்டீங்க,
அதை கவுண்டரை வச்சி செஞ்சா என்ன,
சந்தானத்தை வச்சி செஞ்சா என்ன?
ரெண்டுமே ஒன்னுதானே?

அடுத்து யாரை வச்சி, யாரை, எப்போ
ஓட்டப் போறீங்க?

சரவணன் said...

//ஆமா ஹீரோயின் கூட நீச்சல் குளத்துல குளிக்கிரமாதிரி சீன்ல எல்லாம் நீ இதுவரைக்கும் கோட் சூட் போட்டுதான் நடிச்சியோ ?
//

செம! சத்தமா சிரிச்சிட்டேன்...சூப்பர்!

"ராஜா" said...

@ ஆர்.கே.சதீஷ் குமார்
நன்றி நண்பரே

@ கலையன்பன்

ரெண்டுக்கும் வார்தையில வித்தியாசம் இருக்கும் நண்பா

@ சரவணன்

நன்றி தல ... ரொம்ப மகிழ்ச்சி உங்கள் பாராட்டினால்

LinkWithin

Related Posts with Thumbnails