Followers

Copyright

QRCode

Wednesday, March 24, 2010

வெறி தனமா பாராட்டுவோர் சங்கம் ....தீராட விளையாட்டு பிள்ளை வெற்றி விழா கொண்டாட்டம் அப்படின்னு இன்னும் ஒரு ரெண்டு மாசத்துல ஒரு நியூஸ் வந்துச்சினா நீங்க சிரிப்பீங்களா மாட்டீங்களா , அப்படி ஒரு காமெடி ஒன்னு இப்ப நடந்துகிட்டு இருக்கு ....


சென்ற வருடம் தீபாவளிக்கு வெளி வந்து வசூலில் சக்கை போடு போட்டு விஜயின் வேட்டைக்காரனையே மிஞ்சி விட்ட(மொக்கையில பாஸ்) ஆதவன் என்ற மொக்க படத்துக்கு வெள்ளி விழா கொண்டாடபோராங்கலாம்..


என்னடா இது போன வருசம்தான் மக்களா பாத்து ஓட வச்ச நெறைய படங்கள் இருக்கே, அதுக்கெல்லாம் விழா எடுக்காம நடிச்சவனும் எடுத்தவனும் காச போட்டு ஓட வைக்கிற இந்த மாதிரி படத்துக்கு ஏன் விழா எடுக்குரானுகன்னு யோசிச்சி பாத்தா இந்த படத்த எடுத்தவர் நம்ம உதயநிதி ஸ்டாலின் ,


அவர் யாரு? எந்த பரம்பர? மத்தவங்கள பாராட்டுனதுக்காக தனக்கு ஒரு பாராட்டு விழா வச்சி அதுல நமிதா தொடையையும் ஸ்ரேயா இடுப்பையும் நயன்தாரா கழுத்தையும் ரசிச்சி ரசிச்சி ஜொள்ளு விட்ட நம்ம தன்மான தமிழ் இன தலைவரின் பேரனல அவரு ...


இவ்வளவு காசு போட்டு ஒரு படம் எடுத்துருக்காரு மக்கள்தான் படத்த பாராட்டல அட்லீஸ்ட் நம்மள நாமளே பாராட்டிகுவோம்மே நம்ம தாத்தா மாதிரி ... இவருக்கு இதெல்லாம் புதுசா என்ன? ஏற்கனவே குருவின்னு ஒரு படம் .... அதுவா ஓடி இருந்தா பத்து நாள் கூட ஓடிருக்காது ,இவனுக காசு கொடுத்து ஓட்டியும் நாப்பது நாளுக்கு மேல இழுக்கல படம் , அப்படி பட்ட ஒரு பெரிய காவிய படைப்புக்கு இருநூறாவது நாள் விழா எடுத்து அதுல தன்ன எல்லாரும் புகழ்ந்து பேசுறத அவர் தாத்தா மாதிரியே கேட்டு பரவச நிலை அடைந்து கொண்டு இருந்தாரு ... அதுல நம்ம தளபதி அண்ணன் விஜய் அவர்களும் அவரின் பிரச்சார பீரங்கி சந்திர சேகர் அவர்களும் பண்ணிய காமெடி உலகறிந்தது ....

ஆனா ஒன்னு இவனுக இப்படி தனக்கு தானே பாராட்டு விழா எடுத்துகிட்டு இருக்கிறதுla நமக்கு ஒரு நன்மை உண்டு அப்பப்ப நடிகைகளின் அரைகுறை தரிசனம் நமக்கு கெடைக்கும் ....


இதுல எனக்கு ஒரு வருத்தம் என்னனா இதே பாராட்டு பரம்பரையில வந்தவருதான் கலாநிதி மாறன் அவரு மாசத்துக்கு ஒரு படம் ரீலீஸ் பண்ணிக்கிட்டு இருக்காரு ஆனா எதுவும் ஓடாது ... அவரு ஏன் அவர் எடுக்குற படங்களுக்கு விழா எடுக்க மாட்டேங்கிறாரு?


ஓடுற படங்களுக்குதான் பாராட்டு விழா எடுக்கணுமா என்ன? இது தமிழ் நாடுப்பா ... நீங்க என்ன சொன்னாலும் நம்புறதுக்கு ஆளு இருக்கு இங்க ... நீங்களும் உங்க படத்துக்கு எல்லாம் பாராட்டு விழா எடுத்தீங்கன்னா , நாங்க கண்ணுக்கு குளிர்ச்சியா மாச மாசம் ரெகார்ட் டான்ஸ் பாத்துகிடுவோம் ....


அப்படியே அதுல உங்க தாத்தாவையும் விழா நாயகனா உக்கார இடம் கொடுத்தா அவரும் கண்ணுக்கு குளிர்ச்சியா பாத்துகிடுவாரு.... உங்களுக்கும் அவர சந்தோஷ படுத்துன புண்ணியம் கெடைக்கும் ... பாவம் அவரு எந்த விழாவும் எடுக்காம ரெகார்ட் டான்ஸ் பாக்க முடியாமா ரொம்ப கஷ்டப்பட்டு போய் கடைசியில சியர் லீதேர்சொட இடுப்ப பாக்க சேப்பாக்கம் போக வேண்டிய நிலைமை அவருக்கு...

சீக்கிரம் உங்க அந்தபுற அழகிகளைஎல்லாம் ஒன்னு திரட்டி பாராட்டு விழா, இல்ல வெற்றி விழான்கிற பேருல ஒரு களியாட்டத போடுங்கப்பா ... நாங்களும் பாத்துகிடுவோம்ல ... எதோ உங்களுக்கு ஓட்டு போட்டதுக்கு எங்களுக்கு இந்த சந்தொசமாவது கெடைக்கும்ல....சரி இப்படி குருவி ஆதவனுக்கு எல்லாம் வெற்றி விழா கொண்டாடுறீங்களே நாளைக்கு உங்களுக்கு நெஜமாவே ஒரு படம் பெரிய ஹிட் ஆகி அதுக்கு நீங்க விழா எடுத்தால் மக்கள் அதை நம்புவாங்களா?

(புடிச்சிருந்தா வோட்டு போடுங்க....பிடிச்சிருந்தாலும் பிடிக்கலைனாலும் கமெண்ட் போடுங்க)

5 comments:

SShathiesh said...

கோபம் நியாயமானது. வேட்டைக்காரன் வசூல் மோசமில்லை. அது உண்மை. ஆதவனுக்கே வெற்றி விழா என்றால் வேட்டைக்காரனுக்கு இல்லாமலா போகும் அதுவுன் சண் டி.தானே விடுவாங்களா என்ன.

கவிதை காதலன் said...

நியாயமான கேள்விதான். ஆனா இவங்களால பதில் சொல்லத்தான் முடியாது

Yoganathan.N said...

//ஓடுற படங்களுக்குதான் பாராட்டு விழா எடுக்கணுமா என்ன? இது தமிழ் நாடுப்பா ... நீங்க என்ன சொன்னாலும் நம்புறதுக்கு ஆளு இருக்கு இங்க ... நீங்களும் உங்க படத்துக்கு எல்லாம் பாராட்டு விழா எடுத்தீங்கன்னா , நாங்க கண்ணுக்கு குளிர்ச்சியா மாச மாசம் ரெகார்ட் டான்ஸ் பாத்துகிடுவோம் ....//

அவரவர் பிரச்சனை அவரவருக்கு... ஹிஹிஹி

Yoganathan.N said...

@SShathiesh

வேட்டைக்காரன் வசூல் மோசமில்லை என்பது உண்மை. ஆதே வேளையில் நான் அறிந்தவரை, வசூலில், ஆதவன் > வேட்டைக்காரன்.

Correct me if I'm wrong. :)

"ராஜா" said...

நன்றி சதீஷ் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்... ரொம்ப ஆவலா இருக்கீங்க போல வேட்டைக்காரன் வெற்றி விழாவ பாக்க

நன்றி கவிதை காதலன் ரொம்ப நாளுக்கு அப்புறம் இப்பதான் வந்துருக்கீங்க ...

யோகநாதன் இப்படி உண்மைய அப்பட்டமா சொல்ல படாது....

LinkWithin

Related Posts with Thumbnails